சனி, 18 நவம்பர், 2017

எந்த சாமியை எப்படி பூஜிப்பது?

எந்த சாமியை எப்படி பூஜிப்பது?

எல்லா தினங்களுமே தெய்வத்தை வழிபடும் நாட்கள்தான். எளியவனான இறைவனை எப்படி வணங்கினாலும் பலன் கிடைக்கும்தான். ஆனால் ஒவ்வொரு பலனைப் பெறவும், கடவுளின் வெவ்வேறு வடிவங்களை கும்பிடுவதும், குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட தெய்வத்தை ஆராதிப்பதும் கூடுதல் பலன் கிட்ட வேண்டும் என்பதற்காக நம் முன்னோர்கள் வகுத்த வழிமுறைகள்.

கோயிலுக்குச் செல்ல ஏற்ற நாள் எது?
கோயிலுக்கு தினமும் போய்வருவது சிறந்தது.ஆனால் இன்றைய சூழ்நிலைகளில்  அது எல்லோராலும் முடிவது இல்லை. நமக்கு எப்பொழுதெல்லாம் முடியுமோ அப்பொழுது சென்று இறைவன் இறைவியை வணங்கலாம். பிரதோஷம், பௌர்ணமி, அமாவாசை, ஏகாதசி, சதுர்த்தி, கிருத்திகை, மாதப் பிறப்பு, வருடப்பிறப்பு, சூரிய கிரகணம், சந்திர கிரகணம், மாத சிவராத்திரி எல்லாமே சுவாமி தரிசனம் செய்யவும், விசேஷமாக  வழிபடவும் உகந்த நாட்கள்தான். இவைதவிர குடும்பத்தினர் பிறந்தநாள், திருமணநாள், பண்டிகை தினங்களிலும்  செல்லலாம். ஆனால், ஆடம்பரத்துக்காகவும், அவசியத்துக்காகவும் கோயிலுக்குப் போறதைவிட, ஆத்மார்த்தமாக  ஒரே ஒருநாள் சென்று வணங்கினாலும் போதும், பகவான்  நிச்சயம் அருள்புரிவார். ஆலயத்துக்குச் செல்லும்போது நம்மால்  இயன்ற பூ, பழம், தேங்காய், அபிஷேகத்துக்கு உரியவை, தீபத்துக்கு உரிய நெய் முதலானவைகளை  கொண்டு போறது அவசியம். நிஜமாகவே எதுவும் எடுத்துப்போக இயலாத சூழலில்  நீங்கள்   இருந்தால் , கவலைப்படாதீங்கள் . இறைவனை ஆத்மாத்தமாக வணங்கினால் போதும்.நாம் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவார்.

ஆலய தரிசனம் செய்வது எப்படி?
கோயிலுக்குப் போகும்போது தூரத்துல இருந்தே கோபுர தரிசனம் செய்யறது அவசியம். மனதாரவோ, இரு கைளையும் தலைக்கு மேலாக உயர்த்தியோ வணங்கறது சிறப்பானது. ஆகமங்கள், கோபுரம்தான் ஸ்தூல லிங்க வடிவம்னு சொல்லுது. கோபுரம் இல்லை என்றால்  விமானம் தெரிஞ்சாலும் வணங்கலாம்.

ஆலயத்துக்குள்ளே நுழையறதுக்கு முன்னால திருக்குளத்துலயோ அல்லது பிற நீர் நிலைகள், குழாய்னு என்ன வசதி இருக்கோ அதுல கால்களை அலம்பிவிட்டுச் செல்வது நல்லது. திருக்குளமாக இருநதால் காலை நனைக்கிறதுக்கு முன்னால மனதார கும்பிட்டுக்குங்க. சிறிது தீர்த்தத்தை தெளிச்சுக்கிறது அவரவர் இஷ்டம். சில பரிகாரக் கோயில்கள்ல தீர்த்தத்துல நீராட வேண்டிய விதிமுறை இருக்கும். செல்லும் கோயிலுக்கு உள்ள நடைமுறையை அவசியம் பின்பற்றுங்கள்.

கோபுர வாசலைத் தாண்டினதும், கொடிமரம் எனப்படும் துவஜஸ்தம்பம், பலி பீடம், வாகனம் (இது நந்தி மண்டபம் அல்லது கருடன் சன்னதியாக  இருக்கலாம். அம்மன் கோயில்னா, சிம்ம வாகனம். முருகன் கோயில்ல மயில் இப்படி...) இருக்கும். பலிபீடத்துக்கிட்டே தலை தாழ்த்தி அகங்காரம், பேராசை, தீய எண்ணங்கள் முதலான கெட்ட குணங்களையெல்லாம் பலியிட்டுட்டு மனதை தூய்மை செய்துகிட்டு  வணங்கத் தயாராகணும்.

நந்தி பகவான், கருடாழ்வார் முதலான தெய்வ வாகனங்கள் கிட்டே அனுமதி வாங்கிக்கிட்டு துவார கணபதி, துவார ஸ்கந்தனை வணங்கணும். அடுத்து துவாரபாலகர்கள் இருந்தால்  அவங்ககிட்டே மனதால அனுமதி கேட்டுட்டு, கருவறைக்குள் சென்று மூலவரை முழுமனதாக வணங்கணும். அங்கே உள்ள வழிமுறைகளை அவசியம் பின்பற்றுங்கள். மறந்தும் நந்திக்கு மூலவருக்கும் இடையே போகாதீர்கள்.

சில கோயில்களிலே  முதல்ல அம்பாளை தரிசிச்சுட்டு பிறகு சுவாமியை  தரிசிக்கிற முறை இருக்கும். அப்படி இருந்தால் அதைப் பின்பற்றுங்க. எக்காரணத்தை முன்னிட்டும் உங்க பழக்கம்னு எதையும் கோயில் நடைமுறைக்கு எதிராக  எதையும் செய்யாதீங்க!
பெருமாள் கோயில்கள்ல முதல்ல தாயாரை தரிசனம் செய்துட்டு பிறகு பெருமாளை தரிசிக்கறது வைணவ மரபு. தாயார்தான் மனமிரங்கி பெருமாள்கிட்டே நமக்காக பரிந்து பேசுவாளாம். அப்படிப்பட்ட மரபு உள்ள கோயில்கள்ல வழிபாட்டு முறை தெரிஞ்சு வணங்கறது நல்லது.
மூலவரைத் தரிசித்ததும் பக்கத்துலயே அம்பாள் சன்னதி இருந்தா, அருகே சென்று வணங்குங்க. அடுத்து பிராகார தெய்வங்களை வரிசையாக கோஷ்டத்தில் உள்ளபடி (மாடங்கள்) கும்பிட்டு கோயில் பிராகாரத்தைச் சுற்றி வாங்க. ஞாபகம் இருக்கட்டும். கோயிலுக்குள்ளே எந்த தெய்வத்தையும் தனித்தனியா வலம் வரவேண்டியதில்லை. பிராகாரத்து சுற்றி வரும்போதே வலம் வர்ற மாதிரி அமைஞ்சிக்கற சன்னதிகளை சுற்றிவந்தா போதும். அஷ்டாங்க நமஸ்காரம் க்கான பட முடிவு

கடைசியா கொடிமரத்துக்கிட்டே வந்து ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரரும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்யறது அவசியம். அஷ்டாங்க நமஸ்காரம்னா, தலை, கைகள், காதுகள், மார்பு, கால்கள் ஆகிய ட்டு உறுப்புகள் (அங்கங்கள்) தரையில படற மாதிரி விழுந்து வணங்கறது. பெண்கள் செய்ய வேண்டியது கைகள், கால்கள், தலை ஆகிய ஐந்து உறுப்புகள் பதியும்படியான நமஸ்காரம்.

அடுத்து, கீழே சில நிமிடங்களாவது, கோயிலுக்குள்ளேயே அமர்ந்து இறைவன் துதிகள், தெய்வத்தின் நாமாளிகள்னு தெரிஞ்சதை, சொல்லுங்க. ஒருபோதும் தேங்காய் முதலான பிரசாதங்களை சாப்பிட்டுவிட்டு குப்பை போடவோ, அவசியமற்ற விஷயங்களை, பேசவோ செய்யாதீங்க.

கோயில்ல தீபம் ஏற்றுணும்னு தீர்மானிச்சா, விளக்கு, எண்ணெய், திரி இவற்றோட தீப்பெட்டியையும் அவசியம் எடுத்துப்போங்க. பிறர் ஏற்றின தீபத்துல இருந்து உங்கள் விளக்கை ஏத்தறதையும், கோயிலுக்குள்ளே தீப்பெட்டியை இரவல் வாங்கறதையும் தவிர்ப்பதுதான் நல்லது.

குங்குமம், விபூதி முதலான பிரசாதங்களை வீணாக கண்ட இடங்கள்ல போடறதை தவிருங்க. பெருமாள் கோயிலானால் முதல்ல தீர்த்தம் தந்து, சபாரி சாத்தி, பிறகு துளசி தருவாங்க. தீர்த்தத்தை கீழே சிந்தாம் வாங்கி, சத்தமாக உறிஞ்சாம அருந்துங்க. சிறிதளவு தலையில தடவிக்குங்க. துளசியை வாங்கி காதுல செருகிக்கறதும் சிறிதளவு உட்கொள்வதும் பெரியவர்களோட பழக்கம். ஆனா, துளசியை தேவைக்கு அதிகமாக வாங்கி கீழே இறையும்படியோ வீட்டுல அநாவசியமாகக் கிடக்கும்படியோ போடாதீங்க. தாயார் சன்னதியிலதான் குங்குமம்  தருவாங்க. நரசிம்மர் சன்னதியில குறிப்பிட்ட தினங்கள்ல பிரத்யேக பூஜை செய்து தீவினைகள் நீங்க தீர்த்தத்தை முகத்துல தெளிச்சுவிடுவாங்க. இந்த மாதிரி ஒவ்வொரு கோயில்லயும் உள்ள பித்யேக பூஜை பிரார்த்தனையைப்பற்றி கேட்டுத் தெரிஞ்சுவைச்சுக்குங்க. 

கோயிலுக்குப் போயிட்டு வந்ததும் அல்லது வீட்டுலயே பூஜைகளை செய்ததும், உடனே பலன் கிடைக்கும்னு அவசரப்படாதீங்க. ஆண்டவனுக்கு உங்களுக்கு என்ன தேவை அதை எப்போ கொடுத்தா நல்லதுன்னு நிச்சயம் தெரியும். உங்க வேண்டுதலை சரியான சமயத்துல நிறைவேற்றி உங்கள் வாழ்க்கையை சந்தோஷம் நிறைஞ்சதா ஆக்குவார். நம்பிக்கையோட கும்பிடுங்க. நல்லதே நடக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக