ஸ்ரீசாய் சத்சரித்திரம் பாராயணம்
நீங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உங்கள் வீட்டில் இருந்தபடியே ஏதேனும் வியாழன் அன்று தொடங்குங்கள். 7 நாள் பாராயணமும் உங்கள் வீட்டிலோ அல்லது கோவிலிலோ செய்யவும்.
சாய் பக்தர்களே, சக்தி வாய்ந்த இந்த ஸ்ரீ சாய் சத்சரித்திரம் எல்லா கோரிக்கைகளை தீர்த்து வைக்கும். இதனைப் படிப்பவர்களின் தன்மையைப் பொறுத்து அவர்களுக்குப் பலன் வரும். ஆகையால் பக்தி சிரத்தையுடன் படித்தால் நீங்கள் வேண்டியது நிறைவேறும்.
பல ஜென்ம புண்ணியத்தினால் மட்டுமே ஸ்ரீ சாய் சத்சரிதத்தை படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். நம்பிக்கை என்பது ஒரு இடத்தில் மட்டுமே வைக்கும்போது மிகுதியான பலன் கிடைக்கும். அந்த நம்பிக்கையை பாபாவின் மீது வைத்து, அவரின் பாதகமலங்களைப் பூஜித்துக்கொண்டு பாபாவையே தியானித்துக்கொண்டு இருங்கள்.
ஸ்ரீ சாய் சத்சரித்திரம் என்ற புத்தகம் உண்மையில் கடவுளின் அவதாரமேயாகும். பாபாவின் சக்தி சத்சரிதத்தின் ஒவ்வொரு எழுத்தின் உள்ளேயும் பொதிந்து கிடக்கின்றன. சத்சரிதத்தை வாய்விட்டு உரக்கவோ, மனதிற்குள்ளாகவோ, மனமும் குரலும் சேர்ந்து உபன்யாசமாகவோ பக்தியுடன் பாராயணம் செய்யும் பொழுது ஸ்ரீ சாய்நாதரின் தெய்வீக சைதன்யம் அந்த திசையை நோக்கி ஈர்க்கப்படும். ஒரு பக்தனின் அனைத்து உடல் சார்ந்த, உயிர் சார்ந்த, மானசீக நோய் சம்பந்தமான, தொந்தரவுகள், கஷ்டங்கள் அனைத்து அதிர்வுகளும் ஸ்ரீ சாய் சரித்திரத்தை பாராயணம் செய்யும் பொழுது அவை ஸ்ரீ சாய்நாதரின் தெய்வீக சைதன்யத்தை சென்றடைகின்றன. அவை அங்கு சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் பாராயணம் செய்யும் பக்தரை ஸ்ரீ சாய்நாதரின் அருள் நிரம்பிய அலைகளாக திரும்ப வந்து சேருகின்றன. இது போன்ற சூழ்நிலைகளில் பக்தன் இகலோக சுகங்களையும் பரலோக சுகங்களையும் பெறுவான்.
பெரும்பான்மையான சாய் பக்தர்கள் ஸ்ரீ சாய் சத்சரிதத்ததை முழுமையாக படித்ததில்லை. சிலர் ஓரிரு முறை பாராயணம் செய்ததோடு நிறுத்திவிடுகின்றனர்.
உண்மையில் பாபாவை விரும்பும் பக்தர் தினமும் ஒரு அத்தியாயத்தையாவது படிக்கவேண்டும். உங்களின் சத்சரித்திர பாராயணத்தின் போது பாபா உங்கள் அருகிலேயே அமர்ந்து, மிகவும் மகிழ்ச்சியுடன் கேட்டுக் கொண்டிருப்பார். இதுவரை ஸ்ரீ சாய் சத்சரிதத்தை படிக்காதவர்கள், அல்லது சத் சரிதத்தை ஏழு நாட்களுக்குள் ( சப்த பாராயணம் ) செய்ய நினைப்பவர்கள், நீங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உங்கள் வீட்டில் இருந்தபடியே வரும் வியாழன் அன்று தொடங்குங்கள்.
சப்தாக ( ஏழு நாட்கள் ) பாராயண முறை
காலையில் எழுந்து நீராடி பாராயணம் செய்யும் இடத்தை சுத்தம் செய்து தீபத்தை ஏற்றி பூக்களுடன் அலங்கரித்து நூலினை சாயியின் ஸ்வரூபமாகவே பாவித்து சாய் அஷ்டோத்திரத்தை படித்து பாராயணம் ஆரம்பிக்க வேண்டும். பாபாவிற்கு கல்கண்டு,பேரீச்சம் பழம் ,கிஸ்மிஸ் பழம்,பழங்கள் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை நெய்வேத்தியமாக வைக்கலாம்.அன்றைய பாராயணம் முடிந்தவுடன் ஆரத்தி எடுத்து வணங்க வேண்டும். ஏழு நாட்கள் பாராயணம் முடிந்தவுடன் அவரவர் சக்திக்கு ஏற்ப அன்ன தானம் செய்ய வேண்டும். ஏழாவது நாள் கோவிலுக்கு சென்று பாபாவை வணங்கி விட்டு பிரசாதத்தை அங்கு வரும் பக்தர்களுக்கு கொடுக்கலாம்.கோவிலுக்கு செல்ல இயலாத பட்சத்தில் நம் நண்பர்கள் ,உறவினர்களை வீட்டிற்கு அழைத்து கொடுக்கலாம். இப்படி சிரத்தையுடன் பாராயணம் செய்தால் தாங்கள் வேண்டியது நிறைவேறும். பாபாவின் அருளும் ஆசியும் கிடைக்கும்.
ஏழு நாட்கள் பாராயணம் செய்ய வேண்டிய அத்தியாங்களின் விவரங்கள்
வியாழன் --- அத்தியாயம் 1 முதல் அத்தியாயம் 7 வரை.
வெள்ளி --- அத்தியாயம் 8 முதல் அத்தியாயம் 15
சனி --- அத்தியாயம் 16 முதல் அத்தியாயம் 22
ஞாயிறு --- அத்தியாயம் 23 முதல் அத்தியாயம் 30
திங்கள் --- அத்தியாயம் 31 முதல் அத்தியாயம் 37
செவ்வாய் -- அத்தியாயம் 38 முதல் அத்தியாயம் 44

புதன் -- அத்தியாயம் 44 முதல் முடிவுரை வரை.
சாய்பாபாவின் இந்த எளிமையான பூஜையை செய்து நம் விருப்பங்களை பாபாவிடம் கூறி பலன் பெறுவோமாக
ஓம் சாய் ராம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக