ஆரோக்கியம் தரும் சூரியன் 108 போற்றி
என் அன்பு தோழிகளுக்கு என்னுடைய நமஸ்காரம்.
உலகிற்கு ஒளி தரும் சூரிய பகவானுக்கு உரிய விரதங்களில் மிக முக்கியதானது ரத சப்தமி . ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் வளர்பிறை ஏழாம் நாள் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது . தெற்குப் பாதையில் பயணிக்கும் சூரியன், ரத சப்தமி தினத்தன்று வடக்கு வழியில் திசை திரும்பிப் பயணிக்கிறது . அதாவது தட்சிணாயன காலம் முடிந்து உத்தராயண காலம் ஆரம்பமாகிறது. ரதசப்தமி நாளில் சூரியன் பிறந்ததாகக் கருதப்படுவதாலும், அந்த நாளில் சூரியனுக்கு விசேஷமான ஒளிபிறப்பதாலும், அன்றைய தினத்தில் விரதம் கடைப்பிடித்து சூரிய பகவானை வழிபட வேண்டும். சூரியன் உதயமாகும் சமயத்தில், யாரொருவர் குளித்து, பணிகளுக்கு தயாராகி விடுகிறாரோ, அவர் ஏழையாக இருக்க மாட்டார் என்கிறது சாஸ்திரம் .
வரும் சூரியபகவாரதசப்தமி நாளாக கொண்டாடி வருகிறோம்.அதன் பொருட்டு சூரியனை வழிபாடு செய்தல் சிறந்த பலனை கொடுக்கும்.
பொங்கலன்றும், தை மாத ரதசப்தமி மற்றும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் சூரிய உதயமானதும், இந்த சூரிய போற்றியை வழிபட்டால், ஆரோக்கியமான உடல்நிலை கிடைக்கும்.
சூரியன் 108 போற்றி
ஓம் அதிதி புத்ரனே போற்றி
ஓம் அளத்தற்கரியனே போற்றி
ஓம் அறுகுப்பிரியனே போற்றி
ஓம் அருணன் சோதரனே போற்றி
ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி
ஓம் அக்கினி அதிதேவதையே போற்றி
ஓம் ஆண் கிரகமே போற்றி
ஓம் ஆதிவார நாதனே போற்றி
ஓம் ஆய்வின் இலக்கே போற்றி
ஓம் ஆறாண்டு ஆள்பவனே போற்றி
ஓம் ஆன்மாவே போற்றி
ஓம் ஆதித்யஹ்ருதய ப்ரியனே போற்றி
ஓம் இருள் நீக்கியே போற்றி
ஓம் இயக்க சக்தியே போற்றி
ஓம் ஈசன் வலக்கண்ணே போற்றி
ஓம் உக்கிரனே போற்றி
ஓம் உஷா நாதனே போற்றி
ஓம் உவமைப் பொருளே போற்றி
ஓம் உயிர்களின் வாழ்வே போற்றி
ஒம் உத்திரநாதனே போற்றி
ஓம் உத்திரட்டாதிபதியே போற்றி
ஓம் என்பானவனே போற்றி
ஓம் எருக்கு சமித்தனே போற்றி
ஓம் எழுபரித் தேரனே போற்றி
ஓம் எண்ணெழுத்து மந்திரனே போற்றி
ஓம் எங்கும் நிறைந்தவனே போற்றி
ஓம் ஏற்றமளிப்பவனே போற்றி
ஓம் ஒளிப்பிழம்பே போற்றி
ஓம் ஓராழித்தேரனே போற்றி
ஓம் ஓய்விலானே போற்றி
ஓம் ஓங்காரம் துதித்தவனே போற்றி
ஓம் கதிரவனே போற்றி
ஓம் கண்கண்ட தெய்வமே போற்றி
ஓம் களங்கமிலானே போற்றி
ஓம் கமலம் விரிப்பவனே போற்றி
ஓம் கர்ணன் தந்தையே போற்றி
ஓம் கனலே போற்றி
ஓம் கண்ணின் காவலே போற்றி
ஓம் கற்பரசிச் சேவகனே போற்றி
ஓம் கண்டியூரில் அருள்பவனே போற்றி
ஓம் காஷ்யபர் மைந்தனே போற்றி
ஓம் காயத்ரி தேவனே போற்றி
ஓம் கார்ப்புச் சுவையனே போற்றி
ஓம் காலக் கணக்கே போற்றி
ஓம் காய்பவனே போற்றி
ஓம் காலை மாலை கனிவோனே போற்றி
ஓம் கிழக்கு நோக்கனே போற்றி
ஓம் கிருத்திகை அதிபதியே போற்றி
ஓம் கிரக நாயகனே போற்றி
ஓம் கிருபாகரனே போற்றி
ஓம் குந்திக்கருளியவனே போற்றி
ஓம் குறை தீர்ப்பவனே போற்றி
ஓம் கோதுமைப்பிரியனே போற்றி
ஓம் கோனார்க்கில் அருள்பவனே போற்றி
ஓம் ஞாயிறே போற்றி
ஓம் ஞாலக் காவலே போற்றி
ஓம் சனீஸ்வரன் தந்தையே போற்றி
ஓம் சங்கராந்தி நாயகனே போற்றி
ஓம் சாட்சித் தேவனே போற்றி
ஓம் சமரிலானே போற்றி
ஓம் சிங்கக் கொடியனே போற்றி
ஓம் சிம்மராசி அதிபதியே போற்றி
ஓம் சிரஞ்சீவியே போற்றி
ஓம் சிதம்பரத்தாலயமுளானே போற்றி
ஓம் சுயம்பிரகாசனே போற்றி
ஓம் சூர்ய நமஸ்காரப்பிரியனே போற்றி
ஓம் சூரியனார் கோயில் தேவனே போற்றி
ஓம் செம்மேனியனே போற்றி
ஓம் செம்மலர்ப்பிரியனே போற்றி
ஓம் செந்நிறக்குடையனே போற்றி
ஓம் செந்தாமரை ஏந்தியவனே போற்றி
ஓம் சூலாயுதனே போற்றி
ஓம் சோழர் மூதாதையனே போற்றி
ஓம் சவுர மதத் தலைவனே போற்றி
ஓம் தனிக்கோயிலுளானே போற்றி
ஓம் தாமிர உலோகனே போற்றி
ஓம் தூயவனே போற்றி
ஓம் திருமேய்ச்சூரில் அருள்பவனே போற்றி
ஓம் நடுவிருப்போனே போற்றி
ஓம் நன்னிலத்து அருள்பவனே போற்றி
ஓம் நலமே அளிப்பவனே போற்றி
ஓம் நளாயினிக்கு அருளியவனே போற்றி
ஓம் நல்லுலகத் தந்தையே போற்றி
ஓம் நாடப்படுபவனே போற்றி
ஓம் நீதிதேவனே போற்றி
ஓம் நோய் தீர்ப்பவனே போற்றி
ஓம் பகற்காரணனே போற்றி
ஓம் பனையபுரத்து அருள்பவனே போற்றி
ஓம் பரஞ்சோதியே போற்றி
ஓம் பரிட்சித்துக்கு அருளியவனே போற்றி
ஓம் பாலைநிலத்தேவனே போற்றி
ஓம் பிரபாகரனே போற்றி
ஓம் புகழ்வாய்த்தவனே போற்றி
ஓம் புத்தியளிப்பவனே போற்றி
ஓம் மல நாசகனே போற்றி
ஓம் மதி ஒளிரச் செய்பவனே போற்றி
ஓம் மயில்வாகனனே போற்றி
ஓம் மயூரகவிக்கு அருளியவனே போற்றி
ஓம் முதல் கிரகமே போற்றி
ஓம் முக்கோணக் கோலனே போற்றி
ஓம் முழுமுதற் பொருளே போற்றி
ஓம் மும்மூர்த்தி அம்சமே போற்றி
ஓம் ரவிக்குலத்தலைவனே போற்றி
ஓம் ருத்ரன் பிரத்யதி தேவதையே போற்றி
ஓம் விடியச் செய்பவனே போற்றி
ஓம் வலிவலத்து அருள்பவனே போற்றி
.ஓம் "ஹரீம்' பீஜ மந்திரனே போற்றி
ஓம் சூரியநாராயணனே போற்றி போற்றி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக