வியாழன், 16 ஜூன், 2016

சிவபெருமானின் 5 முகங்கள்

சிவபெருமானின் 5 முகங்கள்


சிவபெருமான் சைவர்களின் தலைவராக வழி படக்கூடிய மூம்மூர்த்திகளில்  ஒருவர்.சிவனை சிவன் என்றும்,சிவபெருமானை பரம்பொருள் என்றும் அழைக்கிறார்கள்.

சிவன் முப்பத்தாறு தத்துவங்களை கடந்து நின்று ஐந்தொழிலை செய்து,ஆன்மாக்களின் மூன்று மலங்களையும் போக்கி வீடுபேறு அருளுகிறார்.


மூவகைத் திருவடிவங்கள் யாவை?

அருவம்,அருவுருவம்,உருவம் என்பவையாகும்.

அருவம் = கண்ணிற்கு புலனாகாது சக்தி வடிவமாக இருந்தே, காரியங்களை செய்வது. இலயசிவன்(நிஷ்கள சிவன்,சத்தர்) என்று அழைக்கபடுவர். சிவபெருமான் ஞானசக்தியுடன் மட்டுமே பொருந்தியிருக்கும் தன்மையால் அருவ வடிவம் தாங்குகின்றார்.

அருவுருவம் = ஞானசக்தியையும் கிரியாசக்தியையும் சம அளவில் கொள்வதன் மூலம் பூணுகின்ற வடிவம். ஒருமுறை புலனாகியும், புலனாகாமலும் இருப்பது இவ்வடிவமாகும். புலனாகும்போது முகம்,கை,கால் போன்ற உறுப்புக்கள் ஏதுமின்றி காட்சியளிப்பது. ஒளி, இலிங்கம் ஆகியன அருவுருவத் திருவடிவங்களாகும்.

உருவம் = ஞானசக்தியைவிட கிரியாசக்தியை மிகுவித்து; அதன்மூலம் கண்களுக்கு புலனாகும்வகையில் முகம்,கை,கால் போன்ற உறுப்புகளுடன் தெளிவாகத் தோன்றுவது உருவத் திருவடிவமாகும். தென்முகக்கடவுள்,சோமஸ்கந்தர்,அர்த்தநாதீசுவரர்,நடராசர் போன்ற மகேசுவர மூர்த்தங்கள் இதற்குள் அடங்கும்.

சிவம் என்றால் செம்மை [பூரணத்துவம்]மங்களமானது என்று பொருள்.சிவதரிசனம் செய்யும் வேலைகளை கொண்டே பலன் கிடைக்கும்.

காலையில் சிவனை வழிபட்டால் நோய்கள் தீரும்.
நண்பகலில் தரிசிக்க தனம் பெருகும்.
மாலையில் தரிசிக்க பாவம் அகலும்.
அர்த்த சாமத்தில் தரிசிக்க வீடுபேறு கிடைக்கும்.

படைத்தல்,காத்தல் ,அழித்தல் ,அருளல் ,மறைத்தல் போன்றவை சிவனின் தொழில்களாகும்.

சிவனின் 5 முகங்களைப் பார்ப்போம்.

1.சத்யோஜாதம் 

பிரம்ம தேவன் சிவபெருமானை மேற்கு திசையினை நோக்கி சிவபெருமானைக் குறித்து தவம் செய்த போது இறைவன் அழகிய வடிவத்துடன்  வெண்மை நிறத்தில்,பிரம்மன் முன் தோன்றினார்.இந்த முகமே சத்யோஜாதம் ஆகும்.

2.வாமதேவம் 

மீண்டும் பிரம்ம தேவன் வடக்கு திசை நோக்கி சிவபெருமானை குறித்து தவம் செய்த போது இறைவன் சிவந்த நிறத்துடன் பாம்பை அணிந்தும் ,மானும்  மழுவும் கைகளில் ஏந்தி பிரம்மதேவனுக்கு காட்சி கொடுத்தா.இந்த முகமே பிரம்மதேவனுக்கு காட்சி கொடுத்தார்.இந்த முகமே வாமதேவம் ஆகும்.

3.தத்புருஷம் 

அதன் பிறகு பிரம்ம தேவன் கிழக்கு திசை நோக்கி சிவனை குறித்து  தவம் செய்தார். இறைவன் தங்க நிறத்துடன் பிறையை சென்னியில் சூடி காட்சி கொடுத்தார்.இறைவனின் இந்த முகமே தத்புருஷம் ஆகும்.பிரம்மனின் தவத்தால் மகிழ்ந்த இறைவன் உளம் மகிழ்ந்து தனது அழகிய உருவத்திலிருந்து காயத்ரீ தேவியை உண்டாக்கி பிரம்ம தேவனிடம் அளித்தார் .காயத்ரீயை வணங்கி வருபவருக்கு நரகம் கிடையாது எனவும் வரமளித்தார்.

 4.அகோரம் 

பிறகு பிரம்மா தெற்கு திசையினை நோக்கி சிவபெருமானை குறித்து தவம் செய்தார். இறைவன் முக்கண் கொண்டவராக நெருப்பினையும்,வாளினையும் கரத்தில் கொண்டவராய் கரிய நிறத்துடன் தோன்றினார். இறைவனின் இந்த முகம் அகோரம் என்று பெயர் பெற்றது.

5.ஈசானனம்  

கடைசியாக பிரம்ம தேவன் ஆகயத்தினை நோக்கி சிவபெருமானை குறித்து தவம் செய்தார்.இறைவன் சாம்பல் வண்ணத்தில் முக்கண் கொண்ட ,இளமதியை சென்னியில் சூ டியவாரும்,கோரைப்பற்கள் கொண்ட உருவமாய் இரண்டு பெண்களுடன் தோன்றினார்.இறைவனின் இந்த முகமே ஈசானனம் எனப்படும்.

அதில் ஒரு பெண் மாயன் முதல் தேவர்கள் வரை அனைவரையும் ஈன்ற அன்னை.

மற்றொரு பெண் தாமரையில் வீற்றிருக்கும் கலைமகள் ஆவாள்.

5முகங்களை நினைத்து தியானம் செய்தாலும் அல்லது வழிபாடு செய்தாலும் இப்பிறவியில் சகல சுகங்களும் கிட்டி மறுபிறவியில் முக்தி கிட்டும் என்பது  பிரம்ம தேவன் வாக்கு ஆகும்.














கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக