புதன் பகவான்
ஹாய் பிரண்ட்ஸ்,
வணக்கம்.கர்ம வினையினால் நமக்கு நல்லது ,கேட்டது நடக்கிறது.அதன்படி ,நவகிரகங்கள்
நமக்கு நல்லதையும் ,கஷ்டத்தையும் கொடுத்து அருள்கின்றன .9 கிரகங்களும் அவரவர்
வேலைகளை செய்து வருகின்றன .நமக்கு வரும் நல்லவைகளுக்கு கடவுளுக்கு நன்றி சொல்வோம் .கஷ்டங்களில் இருந்து விடுபட ,அந்தந்த நவகிரகங்களுக்கு விரதம் இருப்போம் .
ஒவ்வொரு நாளுக்குரிய நவக்கிரகங்களை வேண்டி ,நமக்கு நன்மை பெறுவோம் .
இன்னிக்கு புதன் கிழமை .ஆதலால் , புதன் பகவானை நாம் சேர்ந்து வழிபடலாம் .வாருங்கள் !
கல்வி தரும் புதன் பகவான்
புதன் பகவான் விரதம் இருந்தால் கல்வி ,ஞானம் ,தனம் போன்றவை பெருகும் என்பதால்
சிறுவர் ,பெண்கள் ,ஆண்கள் யார் வேண்டுமானாலும் இதை அனுசரிக்கலாம்.
புதன் பகவானுக்கு "சவும்யன்" என்ற பெயர் உண்டு .புதனை வழிபட்டால் அகங்காரம் அழியும்.
அமைதி கிடைக்கும் .
புதனின் அம்சம்
நிறம் ----பச்சை
தானியம் ---பச்சை பயறு
நவரத்தினம் ----மரகதம்
உலோகம் ----பித்தளை
பருவம்---இலையுதிர் காலம்
பஞ்ச பூதம் ----நிலம்
புதன் கிழமை அன்று நாராயணை வழிபட்டு பின்னர் நவக்கிரங்களை வணங்கி ,பின் புதன் பகவான்
முன் நின்று வழிபட வேண்டும் .இப்படி செய்தால் சகல சிறப்புகளையும் அடையலாம் .
பூஜையறையில் 5 அகல் தீபம் ஏற்றி ,இஷ்ட தெய்வத்தை வணங்க ,பெருமாளை வழிபடவும் .
புதன் கிழமை பச்சை பயறு வேக வைத்து பசு மாட்டுக்கு கொடுக்கலாம் .
புதன் பகவான் ஸ்லோகம்
இதமுற வாழ இன்னல்கள் நீக்குபுத பகவானே பொன்னடி போற்றிபதந் தத்தாள்வாய் பன்னொலியானேஉதவியே யருளும் உத்தமா போற்றி
புதன் காயத்ரி மந்திரம்
ஓம் கஜத்துவ ஜாய வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி
தன்னோ புத : பிரசோதயாத்
இந்த பாடலை பாடி புதன் அருளை பெற உங்க எல்லோருக்காகவும் பிராத்திக்கிறேன்.
நாளை இன்னுமொரு பதிவில்
உங்கள் ஈஸ்வரி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக