ஹாய் பிரண்ட்ஸ் ,
அனைவருக்கும் காலை வணக்கம்.
கோவிலில் காமதேனுவை நாம் எல்லாரும் பாத்திருப்போம் .அதைப் பற்றி எனக்கு தெரிந்ததை
பகிர்ந்து கொள்ளலாம் என்று இருக்கேன்.
காமதேனு
தேவர்களும்,அசுரர்களும் பாற்கடலை கடந்த போது அதிலிருந்து பல பொருட்கள் தோன்றினர் .அதில் ஒன்றுதான் காமதேனு .
காமதேனு என்பது தேவலோகத்தில் வசிக்கின்ற பசு .யார் அதனிடம் என்ன கேட்டாலும்
அதை கொடுக்கும் சக்தி படைத்தது .இது பெண்ணின் தலை ,மார்பு ,பசுவின் உடல் ,மயில்
தொகை போன்றவற்றுடன் இருக்கும் .
கெளசிகன் என்ற மன்னன் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது . பசி பிணியை போக்கும் பொருட்டு,வசிஷ்டர் முனிவரிடம் இருக்கும் காமதேனுவின் தங்கை நந்தினி பசுவை கேட்கிறான். வசிஷ்டர் தர மறுக்கிறார் . முனிவரிடம் காமதேனுவின் தங்கை நந்தினி பசுவை கேட்கிறான். வசிஷ்டர் தர மறுக்கிறார் . முனிவரிடம் போர்தொடுத்து தோல்வி அடைந்தான் .பிரம்மரிஷிக்கு மட்டுமே காமதேனு ,நந்தினி கட்டுப்படும் என்பதால் தவம் இருக்கிறான் மன்னன் .சத்திரிய குலத்தில் பிறந்தவர்கள் பிரம்மரிஷி பட்டம் பெற முடியாது என்று வசிஷ்டர் கூறுகிறார்.நான் வாங்கி காட்டுகிறேன் என்று மன்னர் சவால் விடுகிறான்.
ஆட்சியை துறந்து கடுமையான தவம் இருந்து நம் அம்மை அப்பனான பார்வதி ,பரமேஸ்வரனிடம்
பிரம்மரிஷி பட்டத்தை பெறுகிறார் .அந்த மன்னன் தான் நமக்கு காயத்திரி மந்திரத்தை தந்த
விஸ்வாமித்திரர்.
கேட்டது கிடைக்க காமதேனு காயத்திரி மந்திரம்
மந்திரங்களை ஜெபம் செய்து உச்சரிக்கும் போது ஜெபம் முடிவில் எட்டு வகை முத்திரைகள் செய்யப்படுகின்றன. அவற்றில் சுரபி, ஞானம், வைராக்யம், யோநி, சங்கம் பங்கஜம், லிங்கம், நிர்வாணம் ஆகிய எட்டில் முதல் முத்திரையே சுரபி என்னும் பசு முத்திரை ஆகும். இதன் பொருள் பசு பால் தருவதைப் போல நாம் உச்சரிக்கும் மந்திரங்கள் நலம் பொங்க செய்யட்டும் என்பதாகும்.
ஓம் சுபகாமாயை வித்மஹே
காமதாத்ரை ச தீமஹி
தன்னோ தேனுஹ் ப்ரசோதயாத்
- இந்த காயத்திரி மந்திரத்தை தினமும் பக்தியுடன் சொல்லி வந்தால் கேட்டவை அனைத்தும் கிடைக்கும்.
பசு என்றால் தருமத்திற்கு கட்டுப்பட்டது. இந்துக்கள் காமதேனுவை தெய்வமாக கருதி,வழிபடுகிறார்கள் .காமதேனு அள்ள அள்ள தரக்கூடிய தெய்வம் .நான் கூட காமதேனுவை வழிபடுவதால் அதைப் பற்றி சொல்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
கடவுள் பெருமையை சொல்வதும்,எழுதுவதும் ஒரு விதமான பக்தி ஆகும் .அந்த பக்தி
என்றென்றும் எனக்கு கிடைக்க ஆண்டவனை வேண்டுகிறேன் .
கடவுள் பெருமையை சொல்வதும்,எழுதுவதும் ஒரு விதமான பக்தி ஆகும் .அந்த பக்தி
என்றென்றும் எனக்கு கிடைக்க ஆண்டவனை வேண்டுகிறேன் .
அடுத்த பதிவில் உங்கள் அன்பு தோழி ஈஸ்வரி சரவணன்
அருமை
பதிலளிநீக்கு