இடும்பன்
ஹலோ பிரண்ட்ஸ்,எப்பிடி இருக்கேங்க?அனைவரும் எல்லா நலமும் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன் .
என்னுடைய ஆன்மீக பயணத்தில் கூட வரும் அனைத்து அன்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் .
சாமி கும்பிட நாம் எல்லோரும் முருகன் கோவிலுக்கு செல்கிறோம்.அங்கே இடும்பன் சிலை
வைத்திருப்பார்கள்.அதையும் வணங்குகிறோம்.அந்த இடும்பன் யாரு?அவரை ஏன் கும்பிறோம்?என்று நிறைய பேருக்கு தெரியாமலேயே வணங்குவோம்.தெரிந்து வணங்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து .
பொதுவாக,எந்த காரியமானாலும் அதன் அர்த்தத்தை தெரிந்துகிட்டு செய்தால் நன்றாக இருக்கும்.
பழனி மலை தோன்ற காரணமான இடும்பன்
இவர்தாங்க இடும்பன்.இவர் மலையை தூக்கிட்டு இருக்கிறதை வைத்துதான் காவடி
தூக்கும் வழக்கம் வந்தது.
இடும்பன் நம் தமிழ் கடவுள் முருகனின் பக்தன்.அகத்திய முனிவர் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வரும்போது,அங்கிருந்த இரண்டு மலையான சக்தி கிரி,சிவ கிரியை எடுத்து வர எண்ணினார்.
அவருடைய சீடன் இடும்பன் என்ற அசுரனைப் பணிகிறார் .
அப்போது தேவலோகத்தில் பிள்ளையாருக்கும்,முருகனுக்கும் பழ விசயத்தில் சண்டை உண்டானது.முருகன் தன் குடும்பத்தினரிடம் கோபித்துக் கொண்டு தெற்கு நோக்கி வருகிறார்.
இடும்பன் மலைகளை சுமந்து வந்த களைப்பின் காரணமாக சிறிது நேரம் ஓய்வு எடுத்து போகலாம் என எண்ணி மலையை கீழே இறக்கி வைத்தான்.
ஓய்வு எடுத்த பின்,மீண்டும் மலையை எடுக்க முயற்சிக்கும் போது எடுக்க முடியவில்லை.இடும்பனுக்கோ ஒரே ஆச்சரியம் .மழையின் மீது ஒரு சிறுவன் இருப்பதை பார்த்தான்.
மலையை விட்டு கீழே இறங்குமாறு இடும்பன் சொல்லியும் கேட்கவில்லை .இடும்பன் கோபத்துடன்
சிறுவனை தாக்கினான்.அவர்களுக்குள் சண்டை மூண்டது.சண்டையில் சிறுவன் வெற்றி பெற்றான்.
இடும்பன் தன்னை வென்றது யார்?என சிந்தித்து பார்க்கையில் சிறுவனாக வந்தது முருகன் தான்
என்று அறிந்தான்.
முருகனிடம் மன்னிப்பு கேட்டு,2 வரங்கள் கேட்டான்.முதலில் இடும்பன் போல் யார் காவடி தூக்கி வந்தாலும் முருகன் அவர்களை காக்க வேண்டும் .இரண்டாவது,அந்த மலைக்கு, தானே காவலாளி
ஆக வேண்டும் என்பதுதான்.
இந்த இரு மலைதான் பழனி மலையாகவும்,இடும்பன் மலையாகயும் இருக்கிறது.
காவடி தூக்குவதும்,திருஆவினன் குடி என்ற பழனிமலை உருவானதும் இடும்பன்தான் காரணம்.
இதை பகிர்ந்து கொள்வதில் நான் ஒரு கருவியாக இருக்கிறேன். என்னை எழுத வைப்பது எல்லாம்
நான் வணங்கும் அனைத்து சாமிகளே காரணம் எனச் சொல்லி பதிவை முடிக்கிறேன்.
நன்று
பதிலளிநீக்குநன்று
பதிலளிநீக்குமிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி
பதிலளிநீக்கு