வியாழன், 13 ஆகஸ்ட், 2015

பைரவர்

பைரவர்


சிவபெருமானின் அறுபத்தி நான்கு திருமேனிகளுள் ஒருவராவார்.பைரவர் வாகனம் நாய் .
சொர்ணாகர்ஷண பைரவர் ,ஆதி பைரவர்,கால பைரவர் ,உக்ர பைரவர் என அழைக்கப்படுகிறார் .


கால பைரவர்,சிவ பெருமானின் ருத்திர ரூபமாக சிவன் கோவிலின் வடகிழக்குப் பகுதியில் நின்ற
கோலத்தில் இருப்பார்.ஆடைகள்  எதுவுமில்லாமல்,பன்னிரு கைகளுடன் நாகத்தை  பூனூலாகவும் ,
சந்திரனைத் தலையில் வைத்தும்,சூலாயுதம் ,பாசக்கயிறு ,அங்குசம் ஆகிய ஆயுதங்களைத் தாங்கியும் நிர்வாண ரூபமாய்க் காட்சி தருபவர்.


கால பைரவர் சனியின் குருவாகவும் ,18 ராசிகள்,8திசைகள்,பஞ்ச பூதங்கள் ,நவக்கிரகங்களையும்,
காலத்தையும் கட்டுப்படுத்துபவராக கூறப்படுகிறார்.

உலகையும்,உயிர்களையும் காக்கும் தன்மை சிவ பெருமானுக்கே உரியது என்பதால்,ஒரு
கூறே பைரவ மூர்த்தியாக எழுந்தருளி,பக்தர்களுக்கு அருள்கிறது என்று ஞான நூல்கள் கூறு கின்றன .

பிரமன் நான்கு முகம்



மூம்முர்த்திகளில் ஒருவரான பிரம்மன்,ஆதிகாலத்தில் சிவனாரைப் போன்றே 5தலைகளுடன் திகழ்ந்தார் .ஒருமுறை,அவர் அகந்தையால் அறிவு மயங்கி சிவ  பெருமானை மதிக்காமல்
இருந்தார் .சிவபெருமான் பைரவரை தோற்றுவித்தார்.பைரவர்,பிரம்மனின் 5வது தலையை கொய்து எடுத்து கபலமாக்கிக் கொண்டார் .


அடி முடி தேடியபோது திருமுடி கண்டேன் எனப் பொய்யுரைத்ததால் பிரம்மனின் ஐந்தாவது தலை
பைரவர் மூலம் கொய்ததாக ஒரு புராண தகவல் உண்டு.பிரம்மனின் சிரம் கொய்யப்பட்ட
இடம் திருக்கண்டியூர்  ஆகும்.


அந்தகாசுரன் என்பவன் தேவர்களைத் துன்புறுத்தியதுடன்,அவர்களைப் பெண் வேடத்துடன்
திரியும்படி செய்து அவமானப்படுத்தினான்.தேவர்கள்,சிவபெருமானை சரணடைந்தனர்.
அவர் ஸ்ரீ மகா பைரவரைத் தோற்றுவித்து அந்தகனை அழிக்கும்படி ஆணையிட்டார் .அதி உக்கிரத்துடன் அந்தகன் மீது போர்தொடுத்த பைரவர் ,அவனைத் தபத் சூலத்தில் குத்தி அவனுடைய உடலிலிருந்து வழிந்த ரத்தத்தை குடித்தார்.அஞ்சி நடுங்கிய அந்தகாசுரன் பைரவரை
துதித்தான்.அதனால் மகிழ்ந்த ஸ்ரீ பைரவர்,அவனைச் சூலத்தில் இருந்து விடுவித்தாராம்.அதே போல்,முண்டகன் போன்ற அசுரர்களையும் அழித்து,ஸ்ரீ பைரவர் தேவர்களை  காத்து பரிபாவித்த
கதைகளும் உண்டு.

குழந்தை இல்லாமல்
வருந்தும் தம்பதியர், தொடர்ந்து 6 தேய்பிறை அஷ்டமி திரு நாட்களில்
செவ்வரளி மலர்கள் மற்றும் வில்வத்தால் பைரவரை அர்ச்சித்து ,நெய் தீபம் ஏற்றி வழிபட ,விரைவில்
குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பர்.

வெள்ளை வஸ்திரம் சாற்றி,தயிர்  அன்னம் ,தேன் ,தேங்காய்  சமர்பித்து வழிபடுவதால் பில்லி சூனியம் போன்ற தீவினை நீங்கும்.

பைரவர் 108 போற்றி



ஓம் பைரவனே போற்றி
ஓம் பயநாசகனே போற்றி
ஓம் அஷ்டரூபனே போற்றி
ஓம் அஷ்டமித் தோன்றலே போற்றி
ஓம் அயன் குருவே போற்றி
ஓம் அறக்காவலனே போற்றி
ஓம் அகந்தையழிப்பவனே போற்றி
ஓம் அடங்காரின் அழிவே போற்றி
ஓம் அற்புதனே போற்றி
ஓம் அசிதாங்க பைரவனே போற்றி
ஓம் ஆனந்த பைரவனே போற்றி
ஓம் ஆலயக் காவலனே போற்றி
ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி
ஓம் இடுகாட்டுமிருப்பவனே போற்றி
ஓம் உக்ரபைரவனே போற்றி
ஓம் உடுக்கையேந்தியவனே போற்றி
ஓம் உதிரங்குடித்தவனே போற்றி
ஓம் உன்மத்த பைரவனே போற்றி
ஓம் உறங்கையில் காப்பவனே போற்றி
ஓம் ஊழத்தருள்வோனே போற்றி
ஓம் எல்லைத்தேவனே போற்றி
ஓம் எளிதில் இரங்குபவனே போற்றி
ஓம் கபாலதாரியே போற்றி
ஓம் கங்காளமூர்த்தியே போற்றி
ஓம் கர்வபங்கனே போற்றி
ஓம் கல்பாந்த பைரவனே போற்றி
ஓம் கதாயுதனே போற்றி
ஓம் கனல்வீசுங்கண்ணனே போற்றி
ஓம் கருமேக நிறத்தனே போற்றி
ஓம் கட்வாங்கதாரியே போற்றி
ஓம் கனவைக்குலைப்போனே போற்றி
ஓம் கருணாமூர்த்தியே போற்றி
ஓம் கால பைரவனே போற்றி
ஓம் காபாலிகர்தேவனே போற்றி
ஓம் கார்த்திகையில் பிறந்தவனே போற்றி
ஓம் காளாஷ்டமி நாதனே போற்றி
ஓம் காசிநாதனே போற்றி
ஓம் காவல் தெய்வமே போற்றி
ஓம் குரோத பைரவனே போற்றி
ஓம் கொன்றைப்பிரியனே போற்றி
ஓம் சண்டபைரவனே போற்றி
ஓம் சட்டைநாதனே போற்றி
ஓம் சம்ஹார பைரவனே போற்றி
ஓம் சம்ஹாரகால பைரவனே போற்றி
ஓம் சிவத்தோன்றலே போற்றி
ஓம் சிவாலயத்திருப்போனே போற்றி
ஓம் சிக்ஷகனே போற்றி
ஓம் சீகாழித்தேவனே போற்றி
ஓம் சுடர்சடையனே போற்றி
ஓம் சுதந்திர பைரவனே போற்றி
ஓம் சிவ அம்சனே போற்றி
ஓம் சுவேச்சா பைரவனே போற்றி
ஓம் சூலதாரியே போற்றி
ஓம் சூழ்வினையறுப்பவனே போற்றி
ஓம் செம்மேனியனே போற்றி
ஓம் க்ஷேத்ரபாலனே போற்றி
ஓம் தனிச்சந்நிதியுளானே போற்றி
ஓம் தலங்களின் காவலனே போற்றி
ஓம் தீதழிப்பவனே போற்றி
ஓம் துஸ்வப்னநாசகனே போற்றி
ஓம் தெற்கு நோக்கனே போற்றி
ஓம் தைரியமளிப்பவனே போற்றி
ஓம் நவரஸரூபனே போற்றி
ஓம் நரசிம்மசாந்தனே போற்றி
ஓம் நள்ளிரவு நாயகனே போற்றி
ஓம் நரகம் நீக்குபவனே போற்றி
ஓம் நாய் வாகனனே போற்றி
ஓம் நாடியருள்வோனே போற்றி
ஓம் நிமலனே போற்றி
ஓம் நிர்வாணனே போற்றி
ஓம் நிறைவளிப்பவனே போற்றி
ஓம் நின்றருள்வோனே போற்றி
ஓம் பயங்கர ஆயுதனே போற்றி
ஓம் பகையழிப்பவனே போற்றி
ஓம் பரசு ஏந்தியவனே போற்றி
ஓம் பலிபீடத்துறைவோனே போற்றி
ஓம் பாபசக்ஷ்யனே போற்றி
ஓம் பாசக்குலைப்போனே போற்றி
ஓம் பால பைரவனே போற்றி
ஓம் பாம்பணியனே போற்றி
ஓம் பிரளயகாலனே போற்றி
ஓம் பிரம்மசிரச்சேதனே போற்றி
ஓம் பூஷண பைரவனே போற்றி
ஓம் பூதப்ரேத நாதனே போற்றி
ஓம் பெரியவனே போற்றி
ஓம் பைராகியர் நாதனே போற்றி
ஓம் மல நாசகனே போற்றி
ஓம் மஹா பைரவனே போற்றி
ஓம் மணி ஞானனே போற்றி
ஓம் மகர குண்டலனே போற்றி
ஓம் மகோதரனே போற்றி
ஓம் மார்த்தாண்ட பைரவனே போற்றி
ஓம் முக்கண்ணனே போற்றி
ஓம் முக்தியருள்வோனே போற்றி
ஓம் முனீஸ்வரனே போற்றி
ஓம் மூலமூர்த்தியே போற்றி
ஓம் யமவாதனை நீக்குபவனே போற்றி
ஓம் யாவர்க்கும் எளியவனே போற்றி
ஓம் ருத்ரனே போற்றி
ஓம் ருத்ராக்ஷதாரியே போற்றி
ஓம் வடுக பைரவனே போற்றி
ஓம் வடுகூர் நாதனே போற்றி
ஓம் வடகிழக்கருள்வோனே போற்றி
ஓம் வடைமாலைப்பிரியனே போற்றி
ஓம் வாரணாசி வேந்தே போற்றி
ஓம் வாமனர்க்கருளியவனே போற்றி
ஓம் விபீஷண பைரவனே போற்றி
ஓம் வீழாமல் காப்பவனே போற்றி




இதை சொல்லி பயன் பெருக ! வாழ்க வளமுடன்!
















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக