வலம்புரி சங்கு
அன்பார்ந்த தோழிகளே !
எல்லோருக்கும் வணக்கம் .இன்னிக்கு ஆடி வெள்ளிகிழமை என்பதால் பூஜைகள் எல்லாம்
பண்ணி இருப்பீர்கள் ?என்று நினைக்கிறேன்.இன்னிக்கு வலம்புரி சங்கை பற்றி பார்க்கலாம்.
கடலில் வாழும் உயிரினங்களில் கிளிஞ்சல் வகை புழுக்கள் தனக்கு பாதுகாப்பிற்காக கட்டிக்
கொள்ளும் மேல் கவசம்தான் சங்கு. சிறியதாக குறுகியஅளவானவை பெண் சங்குகள்.
சற்று பருத்த திடசங்குகள் ஆண் சங்குகள். சங்குகளின்மேல் உள்ள வரிகளை (கோடுகள்)
வைத்து வலம்புரிச்சங்கு, இடம்புரிச்சங்கு என்று கூறுவார்கள். ஒருசங்கின் சுருள் பகுதி
அதனுடைய வாய் பகுதியில் ஆரம்பித்து சுருள் முனைக்கு வலது புறமாக சுற்றி வந்தால் அது
வலம்புரிச்சங்கு எனப்படும்.
ஒரு சங்கின் சுருள் பகுதி அதன் வாய் பகுதியில் இருந்து இடதுபுறம் வந்தால் அது இடம்புரிசங்கு. வலம்புரிச் சங்கு, இடம் புரிச்சங்கு அகியவற்றில் வலம்புரிச்சங்குதான் அபூர்வமானதும், சிறப்பானதும் ஆகும். இந்த வலம்புரிச்சங்கு பொங்கும் கடலில் இருந்து எடுக்கப்படுகிறது. எனவே இதற்கு அரிய தெய்வீக சக்திஉண்டு.
தூய்மையான வெண்ணிறத்துடன் நீண்டு மூன்றில் ஒரு பங்கு நீளத்தில் வாலும், தலைப்பாகத்தில்
ஏழு சுற்றும் அமைந்து சங்கின் சுற்றளவு அடிமுடி நீளத்திற்குசமமாக இருப்பது சிறப்பு நீளம்
அதிகமாக இருந்தால் மிகச் சிறப்பு. ஸ்ரீ மகாவிஷ்ணுவின் இடது கையில் உள்ளது வலம்புரிச்சங்கு.
இந்தச்சங்கை காதில் வைத்துக்கேட்டால் `ஓம்' என்ற சப்தம் கேட்கும். வலம்புரிச்சங்கை வீட்டில், வியாபார இடங்களில் சுத்தமாக வைத்து பூஜை செய்தால்செல்வம் பெருகும் மற்றும் பலவித
நன்மைகள் கிடைக்கும். மாமிசம் சாப்பிட்ட அன்றும், பெண்கள் மாதவிலக்கான நாட்களிலும்
வலம்புரிச் சங்கைத்தொடக்கூடாது.
இந்துக்களின் பூஜை அறையில் இருக்கவேண்டியதில் ஒன்று வலம்புரி சங்கு .சங்கு மகாலக்ஷ்மி யின் அம்சம் .பாற்கடலில் இருந்து தோன்றிய பொருள்களில் சங்கும் ஒன்று .சங்கையும் மகாலக்ஷ்மியையும் பெருமாள் எடுத்துக் கொண்டார் .சங்கை அரிசி பரப்பி அதன் மீது வைக்க வேண்டும் அல்லது பித்தாளை பலகையில் வைக்க வேண்டும் .வெறும் தரையில் வைக்க கூடாது.
இல்லத்தில் சங்கை வைத்து வழிபட்டால் ஐஸ்வரியம் பெருகும்.குடும்பத்தில் மன அமைதி ,
மகிழ்ச்சி நிலவும். வியாபார ஸ்தலங்களில் வழிபட்டால் மேன்மை அடையும். பணப்புழக்கம்
இருக்கும்.
ஒரு வலம்புரி சங்கு கோடி இடம்புரி சங்கிற்கு சமம் .சங்கில் வலம்புரி சங்கே சிறப்பு மிக்கது.
வலம்புரி சங்கால் அபிஷேகம் செய்தால் 10 மடங்கு பலன் கிடைக்கும் .
செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் சங்கில் பால் நிரப்பி ,செவ்வாய் கிரக பூஜை செய்தால்
தோஷம் நீங்கி திருமணம் நடக்கும்.கடன் பிரச்சனை இருப்பவர்கள் குங்கும அர்ச்சனை செய்தால்
கடன் விலகும் .பில்லி ,சூனியம் ,திருஷ்டி அண்டாது.
தீர்த்தம் நிரப்பி சங்கில் துளசி இலை போட்டு அதை வெள்ளி கிழமை வீ ட்டில் தெளித்தால்
வாஸ்து தோஷம் நீங்கும் .
சங்கு வடக்கு ,தெற்கு பார்த்து இருக்கணும்.சங்கில் தண்ணீரோ ,அரிசியோ போட்டு வையுங்கள்.
கடன் தொல்லையிலிருந்து மீண்டு வர 16 சங்கு கோலம் போட்டு பவுர்ணமி இரவு குங்குமத்தால் அர்ச்சனை செய்து ,குளிகை காலத்தில் கடன் கொடுத்தவரை சந்தித்து சிறிதளவு பணத்தை திருப்பி கொடுத்தால் விரைவிலேயே முழு கடன் அடையும்.
கிராமங்களில் பெரும்பான்மையான வீடு வாசலில் சங்கை பூமிக்கு அடியிலும் மீதி மேலேயும்
தெரியும் படி பதிப்பர்.நான் கூட இதை பாத்திருக்கிறேன் . அது எதுக்கு தெரியுமா ? .
வெளியில் இருந்து வரும் காற்று சங்கின் ஊது துவாரம் வழியாக சென்று சங்கின் உள்ளே
கிருமிகள் அழிக்கப்பட்டு ,சுத்தமான காற்றாக வீட்டுக்குள்ளே வருகிறது .இதனால்தான் ,
சங்கை வீட்டு வாசலில் கட்டி தொங்க விடுகின்றன .
குழந்தைகளுக்கு சங்கில் பாலை ஊற்றி கொடுக்கும் பழக்கம் பழங்காலத்தில் இருந்தது.குழந்தைகளுக்கு இதில் பசும் பால் ஊற்றி வைத்துப் பாலாடையாகப் புகட்ட நல்ல
ஆரோக்கியம் கிடைக்கும். வலம்புரிசங்கு இருக்கும் வீட்டில் துர்தேவதைகள்நெருங்காது. இச்சங்கில் தண்ணீர் விட்டு பூஜை செய்து அதை அருந்தினால் வியாதிகள் குணமடையும்.
குழந்தை இல்லாதவர்கள் சங்கில் பால்,குங்குமப் பூ இட்டு சந்தான கணபதியை நினைத்து
பூஜை செய்து 48 நாள் கணவருடன் சேர்ந்து அருந்தி வந்தால் பலன் கிடைக்கும்.
போருக்கு போகும் காலங்களிலும்,விழாக்களிலும் சங்கில் ஒளி எழுப்பி செல்வது வழக்கமாக கொண்டிருந்தது .சங்கின் ஒலி மங்களத்தை கொடுக்கவல்லது .
போருக்கு செல்வதை வலியுறுத்தும் படி,அர்சுனனும் ,கிருஷ்ணனும் சங்கொலி எழுப்பி சென்றன.
சங்கு மந்திரம்
பாஞ்ச ஜன்யாய வித்மஹே
சங்க ராஜாய தீமஹி
தந்நோ சங்க பிரசோதயாத்
இந்த மந்திரத்தை சொல்லி சங்கை வழிபட குபேரனது அருளும் ,லக்ஷ்மியின் ஆசீர்வாதமும்
கிடைக்கும் .
சங்கு இருக்கும் வீட்டில் தீய சக்திகள் வராமல் நல்லவைகள் நம்மை வந்து சேரும் .
என் பதிவை அதிகம் பேர் பார்த்திருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது .என் பணி மேலும் மேலும் தொடர ,பதிவைப் பார்க்கும் என் இனிய நண்பர்கள் எனக்கு கமெண்ட்ஸ் கொடுத்தால் பல புதிய தலைப்புடன் ஆன்மீகத்தைப் பற்றி எழுத ஊக்கமளிப்பதாக இருக்கும்.
மீண்டும் அடுத்த பதிவில்
உங்கள் அன்பு தோழி
ஈஸ்வரி