தீபாவளி
என் அன்பு ஆன்மீக தோழிகளுக்கு என் அன்பார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள் .
தீபாவளியை கொண்டாட உற்சாகத்துடன் எல்லோரும் ரெடி ஆகிட்டு இருப்பீங்க .இந்த சமயத்தில் தீபாவளியைப் பற்றி ஆன்மீகத்தில் என்ன உள்ளது? என தெரிந்து கொண்டாடால் அது அர்த்தமுள்ளதாக இருக்கும் என நான் எண்ணுகிறேன் .
தீபாவளி என்றாலே நமக்கு எல்லாம் புத்தாடை ,பட்டாசு ,பலகாரங்கள் தான் உடனே ஞாபகத்திற்கு வரும்.சிறு குழந்தைகளுக்கு கூட தீபாவளிக்கு பட்டாசு போடுவது என்றால் ஆனந்தம் தான்.
ஒவ்வொரு நாளையும் நாம் கடந்து சென்று கொண்டிருக்கிறோம் .காலையில் வேலை ,இரவில் ஓய்வு , அன்றாட கடமைகள் என நாட்கள் செல்கின்றன .அதற்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கவே ,நம் முன்னோர்கள் பண்டிகைகளையும் ,விழாக்களையும் வைத்து கொண்டாடி மகிழ்தனர்.
பண்டிகை காலத்தில் நம் உறவினர்களை சந்திப்பது ,ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவது ,விளையாடுவது போன்ற செயல்கள் நம் மனதிற்கு சந்தோசத்தையும் ,தெம்பையும் அளிக்கிறது.
அடுத்து வரும் பண்டிகைகளுக்காக மனம் ஏங்குகிறது .
தீபம் என்றால் விளக்கு .ஆவளி என்றால் வரிசை .வரிசையாய் விளக்கேற்றி ,இருள் நீக்கி ,ஒளிதரும் பண்டிகை தீபாவளி .

நம் மனத்தில் உள்ள இருட்டாகிய அகங்காரம் ,பொறாமை ,தலைக்கனம் போன்றவற்றை அகற்றி ,பிரகாசமான ஒளியை நாம் கொண்டு வரவேண்டும் என்பதே இதன் கருவாகும் .
தீபாவளியை கொண்டாடுவதற்கு பல காரணங்கள் உள்ளன .
ராமர் 14 வருடங்கள் வனவாசம் முடித்து ,நாடு திரும்பும் போது மக்கள் விளக்கேற்றி வரவேற்றனர் .
புராண கதைகளின் படி ,கிருஷ்ணனின் இரு மனைவிகளில் ஒருவரான பூமாதேவிக்கும் ,வராக (பன்றி) அவதாரம் எடுத்த கிருஷ்ணனுக்கும் பிறந்த மகன் நரகாசுரன்.
நரகாசுரன் பிரம்மாவிடம் தன் தாயால் மட்டுமே மரணம் உண்டாக வேண்டும் என்று வரம் வேண்டி னான்.பிரம்மாவும் வரம் அளித்தார் .தாய் தன் மகனை கொல்ல மாட்டாள் என்ற காரணத்தால் அவ்வரம் வாங்கினான்.தேவர்களை துன்புறுத்தி வந்ததால் ,துன்பத்திலிருந்து விடுபட கிருஷ்ண பகவானை தேவர்கள் நாடினர்.
அதர்மம் தோன்றும் போது ,கிருஷ்ணர் அவதாரம் எடுப்பார் .பூமாதேவி சத்ய பாமாவாக அவதரித்து ,கிருஷ்ணருக்கு துணையாக தேர் ஓட்டி சென்றாள் .கிருஷ்ணனுக்கும் ,நரகாசுரனுக்கும் போர் நடந்து கொண்டிருந்தது.கிருஷ்ணனின் எண்ணம், நரகாசுரனை பூமா தேவியால் மட்டுமே கொல்ல முடியும் என்பதால் கிருஷ்ணன் நரகாசுரனின் அம்பு வரும் போது வீழ்வது போல் நடித்தார்.தேவி மானிட பிறவி எடுத்ததால் ,தன் மகனை வீழ்த்துகிறோம் என்பதை மறந்து ,தன் கணவனை காப்பாற்ற நரகாசுரனை கொன்றாள் .
கணவனுக்கு மனைவி துன்பத்திலும் ,இன்பத்திலும் சேர்ந்து இருக்க வேண்டும் என்பதை உலக மக்களுக்கு கிருஷ்ணபகவான் உணர்த்துகிறார் .
தன் இறப்பை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என நரகாசுரன் பகவானிடம் வேண்டிக் கொண்டதால், நாம் எல்லோரும் தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம் .
தீபாவளி அன்று நாம் சூரியன் வருவதற்கு முன்பாக எண்ணெய் தேய்த்து நீராடல் வேண்டும் .அன்று தண்ணீரில் கங்கையும்,எண்ணெயில் லக்ஷ்மியும்,அரப்பில் சரஸ்வதியும்,சந்தனத்தில் பூமா தேவியும்,புத்தாடையில் மகாவிஷ்ணுவும் இருப்பதாக ஐதீகம் .
எல்லோரும் சிறப்பாக ,மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாடுங்க .என்றென்றும் ,உங்கள் குடும்பங்களில் மகிழ்ச்சியும் ,இன்பமும் நிலைத்திருக்க நான் ஆண்டவனை பிராத்திக்கிறேன் .
நம் வீட்டு பக்கத்தில் உள்ள ஏழை மக்களுக்கு ஆடை ,பலகாரம் வாங்கி கொடுங்க .ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் .நீங்களும் சந்தோஷமாக இருங்கள் .உங்களை சுற்றி இருப்பவரையும் சந்தோஷப்படுத்துங்கள் .
உங்கள் கருத்துகளை சொன்னால் ,எனக்கு பதிவினை எழுத தூண்டுகோலாக இருக்கும் .
அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் .
உங்கள் அன்பு தோழி ஈஸ்வரி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக