திங்கள், 2 நவம்பர், 2015

அஷ்டமி ,நவமி

ஹாய் பிரண்ட்ஸ் ,

என்னுடைய பதிவை தொடர்ந்து படித்து வரும் ஆன்மீக அன்பர்களுக்கு என் இனிய காலை வணக்கங்கள்.


இன்னிக்கு என்ன தலைப்பு எழுதலாம்  என நினைத்து கொண்டிருக்கையில் ,நாட்காட்டியில் நாளை அஷ்டமி என்று போட்டிருந்ததால் அதைப் பற்றி எழுதலாம் என நினைத்து எழுதுகிறேன் .

இந்துக்கள் வழிபாடுகளில் முக்கிய இடம் வகிப்பது நட்சத்திரங்களும் ,திதிகளும் தான் .


ஒவ்வொரு தமிழ் மாதங்களிலும் வரும் நட்சத்திரங்கள் ,திதிக்கு ஏற்ப விரதம் ,பண்டிகைகள் வருகின்றன.

சித்திரை மாதம் சித்ரா பெளர்ணமி ,ஆவணி மாதம் ஆவணி அவிட்டம் ,தை மாதம் தை அமாவாசை வருகின்றன .

இந்த வரிசையில் புரட்டாசி மாதம் அமாவாசைக்கு  பிறகு பூர்வ பட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி திதியில் முடியும் ஒன்பது இரவுகளே "நவராத்திரி "விழாவாகும்.

இது பராசக்திக்கு எடுக்கப்படும் விழா.
  

நவமி முடிந்தவுடன் அடுத்த நாள் வருவது தசமி .இந்த நாளை தேவி மகிசாசுரனுடன் போர் புரிந்து வெற்றி வாகை சூடியதால் விஜய தசமியாக நாம் கொண்டாடுகிறோம் .


தசம் என்றால் பத்து .பத்து நாட்கள் கொண்டாடப்படுவதால் 'தசரா 'என்று அழைக்கிறோம்.நவராத்திரியில் கடைசி மூன்று நாட்களான  அஷ்டமி ,நவமி ,தசமி மிகவும் விசேஷமானது .

சாதாரணமாக நம் இல்லங்களில் நடக்கும் நல்ல காரியங்கள் ,விசேஷங்கள் ,முக்கிய நிகழ்ச்சிகளை அஷ்டமி ,நவமியில்  செய்ய மாட்டோம் .

அஷ்டமி ,நவமி இந்த நாட்களில் மேற்கொள்ளும் காரியங்கள் விரைவில் முடிவுக்கு வராது.தொடர்ந்து கொண்டே இருக்கும்  என்பதால்  தான் .  


ராமர் பிறந்தது நவமி ,கிருஷ்ணன் பிறந்தது அஷ்டமி .நவராத்திரியில் வரும் அஷ்டமி ,நவமி இரு தினங்களும் ,ராமர்,கிருஷ்ணர் பிறந்த இரு தினங்களில் மட்டுமே கொண்டாடுகிறோம் .இதை தவிர வரும் அஷ்டமி ,நவமி நாட்களில் நாம் நல்ல காரியங்கள் செய்வது இல்லை .

அஷ்டமியில் பிறந்த  காரணத்தால் கிருஷ்ணன் பல துன்பங்களை அனுபவித்தார்.நவமியில் பிறந்த ராமன் நாட்டை இழந்து காட்டிற்கு சென்று ,சீதையை பிரிந்து பல துன்பங்களை அனுபவித்தார் .அதனால் தான் நம் முன்னோர்கள் இந்த திதிகளில் எந்த நல்ல காரியங்களையும் செய்யவில்லை .

அஷ்டமி ,நவமி திதிகளில் ஆலய வழிபாடுகள் அதிகம் .அஷ்டமி திதியில் சரபேஸ்வரர் ,பைரவர் ,வராகி போன்றவர்களுக்கு பூஜைகள் ,ஹோமங்கள் செய்யப்படுகின்றன .

காவல் தெய்வம்,எல்லை  தெய்வங்களுக்கு பூஜை செய்ய இந்த இரு திதிகளும் உகந்தது.


எனக்கு தெரிந்ததை உங்கள் அனைவருக்கும்  சொன்ன மகிழ்ச்சியில் என்  பதிவை முடிக்கிறேன் .


வாழ்க வளமுடன் 

நன்றி வணக்கம் .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக