வெள்ளி, 4 மே, 2018

நாகதோஷம் போக்கும் அருகம்புல் வழிபாடு

நாகதோஷம் போக்கும் அருகம்புல் வழிபாடு தொடர்புடைய படம்

னத்துக்குள் சஞ்சலமாக இருந்தாலும் சரி, சந்தோஷமாக இருந்தாலும் சரி... அருகே உள்ள கோயிலுக்குச் சென்று வழிபட்டு வந்தால் ஒரு நிம்மதியும், திருப்தியும் கிடைக்கும். அங்கே, இறைவனுக்காக செய்யப்படும் வழிபாடுகளில் ஆனந்தித்துப் போவோம். அந்த வழிபாட்டைச் செய்ய நமக்கும் ஆசை இருக்கும். ஆனால், கோயிலில் நாமாக இறைவனை பூஜித்து வழிபட முடியாது அல்லவா? அதேநேரம், வீட்டிலேயே நமது இஷ்ட தெய்வத்துக்குச் செய்யக்கூடிய எளிய வழிபாடுகள் நிறைய உள்ளன. 

முதலாவதாக, முழுமுதற் கடவுள் விநாயகப்பெருமானை வணங்கி, அவரை அருகம்புல்லால் அர்ச்சித்து வழிபடும் முறையைப் பார்ப்போம். அதற்கு முன்பாக, அருகம்புல்லின் சிறப்பைப் பார்க்கலாமா?
ஒருமுறை கவுண்டின்ய மகரிஷியின் தர்ம பத்தினி அவரைப் பார்த்து, 'சதாசர்வ காலமும் அருகம்புல்லால் விநாயகரைப் பூஜை செய்து வருகிறீர்கள். ஆனாலும், நமது கஷ்டம் தீர்ந்த பாடில்லையே..?' என்று கேட்டாள். அதற்கு கவுண்டின்யர் ஓர் அருகம்புல்லை அவளிடம் தந்து, ''இதை தேவேந்திரனிடம் கொடுத்து, இதற்குச் சமமான பொன்னை வாங்கி வா!'' என்றார். அவளும் தேவேந்திரனிடம் சென்று, அருகம்புல்லுக்குச் சமமான பொன் கேட்டாள். தேவேந்திரன், அவளை குபேரனின் அளகாபுரிக்கு அனுப்பிவைத்தான். குபேரனிடம் வந்து, விஷயத்தைச் சொன்னாள். ''உங்களுக்குத் தேவைப்படும் பொன்னை நீங்களே எடுத்துச் செல்லலாம்!'' என்றார் குபேரன்.
ரிஷி பத்தினியோ, தான் கொண்டு வந்த அருகம்புல்லுக்குச் சமமான பொன் தந்தாலே போதும் என்றாள். உடனே, தராசின் ஒரு தட்டில் அருகம்புல்லை வைத்தார் குபேரன். மறு தட்டில் பொன் ஆபரணங்கள் நிறைய வைக்கப்பட்டன. ஆனாலும், தராசு சமமாகவில்லை. எல்லோரும் அருகம்புல்லின் அருமையைப் புரிந்து கொண்டார்கள். நாமும் அருகம்புல்லின் மகத்துவத்தை உணர்ந்து, அதைக்கொண்டு ஆனைமுகனை வழிபட்டால், நெருங்கும் வினைகள் யாவும் நில்லாது ஓடிவிடும்.
தொடர்புடைய படம்
அருகம்புல் வழிபாட்டுக்கு, மிகச் சுத்தமான இடத்தில் முளைத்திருக்கும் அருகம்புல்லையே பயன்படுத்த வேண்டும். அருகம்புல் மீது சிறிது மஞ்சள் நீரைத் தெளித்து, குறைந்தது மூன்று இன்ச் அளவுள்ள அருகம்புல்லைத் தேர்வு செய்து பறிக்க வேண்டும். வீட்டுக்கு வந்ததும், அதில் சிறிது பன்னீர் தெளித்து, சதுர வடிவ மணைப் பலகையில் விசிறி போல் அதைப் பரப்ப வேண்டும். நடுவில் சிறிய தலைவாழை இலை போட்டு, அதில் பச்சரிசி வைத்து, மோதிர விரலால் ஸ்வஸ்திக் சின்னம் வரைய வேண்டும். அடுத்ததாக, ஒரு பித்தளைச் சொம்பில் மஞ்சள்நிற நூலைச் சுற்றி, சொம்பினுள் பச்சைக்கற்பூரம், ஏலக்காய், ஜாதிக்காய், கிராம்பு பொடி கலந்த நீர் ஊற்ற வேண்டும். தொடர்ந்து, சொம்பு மீது மாவிலைக் கொத்து வைத்து, அதன்மேல் தேங்காய் வைக்க வேண்டும். அதன் பிறகு கதம்ப சரம், சந்தனம், குங்குமம் வைத்து அலங்கரிக்க வேண்டும்.
இரண்டு தீபங்களை ஏற்றி, பக்கத்தில் நிறுத்தி, கலசம் முன்பு விநாயகரை வைக்கவும். பூஜைக்குத் தேவையான 21 அருகம்புல்லைத் தனியாக வைத்திருக்கவும். மூன்று வகை மலர்களோடு கொழுக்கட்டை, தேங்காய், தாம்பூலம், கற்பூரம், ஊதுவத்தி, சாம்பிராணியையும் முடிந்த அளவு அதிகமான பழ வகைகளையும் பூஜையில் வைக்கலாம்.
முதலில் அன்றைய நாள், நட்சத்திரம் சொல்லி, மஞ்சள் விநாயகரை பூஜை செய்யுங்கள். கைகளில் மலர் எடுத்து கண்கள் மூடி மனமுருகி... 'விநாயகனே... இங்கே பிரசன்னமாக வேண்டும்’ என்று வேண்டுதல் செய்யுங்கள். பிறகு அர்ச்சனை செய்யவும்.
பிறகு, இரு பழங்கள், வெற்றிலைப் பாக்கை வைத்து தூப தீபம் காட்டி, மங்கல ஆரத்தி செய்ய வேண்டும்.
தொடர்ந்து, கை கூப்பியபடி...
'அருகில் மகிழும் ஆனந்த கணபதியே
உருகுவோர் மனதில் ஒளிதரும் வேந்தே
தொடரும் வினைகள் அறவே காப்பாய்
இடர் களைந்து இன்பம் ஈவாய் எம்மானே!
'
என மூன்று முறை சொல்லி, கையில் வைத்திருக்கும் மலர்களைக் கலசத்தின் மேல் போட்டு வணங்க வேண்டும்.  
பிறகு, ஒரு பஞ்ச பாத்திரத்தில் துளசி, மஞ்சள் தூள் சிறிது இட்டு, கை மூடியபடி ''கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதா, கோதாவரி, சிந்து, காவிரி ஆகிய நதிகள் இதனுள் வந்து இறங்குக'' என மூன்று முறை சொல்லி, அவற்றை கலசம், பூஜை திரவியங்களில் தெளிக்க வேண்டும். பிறகு, முக்கியமான அருகம்புல் அர்ச்சனையை அதன் நாமாவளியால் செய்ய வேண்டும். விசேஷமான அருகு பூஜைக்கான 21 நாமாவளிகள்:
1. ஓம் பாசாங்குச தராய நம: 2. ஓம் கணாத்யாய நம: 3. ஓம் ஆகு வாகனாய நம: 4. ஓம் விநாயகாய நம: 5. ஓம் ஈச புத்ராய நம: 6. ஓம் சர்வ ஸித்திப்ரதாய நம: 7. ஓம் ஏக தந்தாய நம: 8. ஓம் இலவக்த்ராய நம: 9. ஓம் மூஷிக வாகனாய நம: 10. ஓம் குமார குரவே நம: 11. ஓம் கபில வர்ணாய நம: 12. ஓம் ப்ரும்மசாரிணே நம: 13. ஓம் மோதக ஹஸ்தாய நம: 14. ஓம் சுர ஸ்ரேஷ்டாய நம: 15. ஓம் கஜ நாசிகாய நம: 16. ஓம் கபித்த பலப்ரியாய நம: 17. ஓம் கஜமுகாய நம: 18. ஓம் சுப்ரசன்னாய நம: 19. ஓம் சுராஸ்ரயாய நம: 20. ஓம் உமா புத்ராய நம: 21. ஓம் ஸ்கந்த ப்ரியாய நம:
இந்த 21 நாமாவளிகளைச் சொல்லி முடித்ததும், தேங்காய் உடைத்து, அதைக் கலசம் முன்பு வைக்கவும். பிறகு ஊதுவத்தி, தீபம் காட்டி, நிவேதனப் பொருட்களைப் படைக்கவும். கைகளில் மலர் எடுத்து, தன்னையே மும்முறை சுற்றி ஆத்ம பிரதட்சிணம் செய்துகொண்டு, சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யவும். தொடர்ந்து, பூஜைக்கு வந்திருக்கும் எல்லோருக்கும் நிவேதனப் பொருட்களைப் பிரசாதமாகக் கொடுத்துவிட்டு, நீங்களும் எடுத்துக் கொள்ளவும்.
பூஜையின் பலன்: ராகு-கேது தோஷம், காரியத்தடைகள்  நீங்கும்; குழந்தை பாக்கியம் கிட்டும். லட்சுமி கடாட்சம் உண்டாகும்.





வியாழன், 3 மே, 2018

கந்தசஷ்டி கவசம் விளக்கம்

கந்தசஷ்டி கவசம் விளக்கம் 
murugan image க்கான பட முடிவு

கவசம் என்றால் நம்மைக் காப்பாற்றக் கூடிய ஒன்று என்று பொருள். போரில் யுத்த வீரர்கள் தங்கள் உடலைக் காத்துக் கொள்ளக் கவசம் அணிந்து கொள்வார்கள். இங்கு கந்த சஷ்டி கவசம் நம்மைத் தீமைகளிலிருந்தும் கஷ்டத்திலிருந்தும் காப்பாற்றுகிறது. 

இதை அருளியவர் ஸ்ரீதேவராய சுவாமிகள் இவர் பெரிய முருக பக்தர்.ஒவ்வொரு மூச்சிலும் முருகனையே சுவாசித்தார். அவர் மிகவும் எளிய முறையாக நமக்கு கவசம் அளித்துள்ளார். இந்த சஷ்டி கவசத்தை தினம் காலையிலும் மாலையிலும் ஓத முருகனே காட்சி தந்துவிடுவான். ஆரம்பமே சஷ்டியை நோக்க என்று இருக்கிறது. 

சஷ்டி என்பது அமாவாசை அல்லது பூர்ணிமாவுக்கும் அடுத்து ஆறாம் நாள். ஜாதகத்தில் ஆறாம் இடம் ரோகம், கடன், விரோதம், சத்ரு, போன்றவைகளைக் குறிக்கும். செவ்வாய் ரோகக் காரகன். இந்த எல்லா தோஷத்தைப் போக்கும் பெருமான் திரு முருகப் பெருமான். அவருக்கு உகந்த நாள் சஷ்டி, சஷ்டி என்றால் ஆறு, முருகனுக்கோ ஆறு முகங்கள், சரவணபவ என்று ஆறு அட்சரம், ஆறு படை வீடுகள், ஆறு கார்த்திகைப் பெண்ணால் வளர்க்கப்பட்டவர். 

நாம் முருகனது  திருவடியை விடாது பிடித்தால் மேலே சொன்ன ஒரு கெடுதலும் அண்டாது. வீட்டில் கடன், வியாதி, சத்ரு பயம் இல்லை என்ற நிலை ஏற்படும். கந்த  சஷ்டி கவசத்தில் முருகனை  வருணிக்கின்றன .கந்தன் வரும் அழகே அழகு, பாதம் இரண்டில் பண்மணிச் சலங்கை கீதம் பாட கிண்கிணியாட, மயில் மேல் அமர்ந்து ஆடி ஆடி வரும் அழகை என்னவென்பது? இந்திரன் மற்ற எட்டு திசைகளிலிருந்தும் பலர் போற்றுகிறரர்கள். 

முருகன் வந்து விட்டான், இப்போது என்னைக் காக்க வேண்டும், பன்னிரண்டு விழிகளும் பன்னிரெண்டு ஆயுதத்துடன் வந்து என்னைக் காக்க வேண்டும். 

அவர் அழகை வர்ணிக்கும் போது பரமேச்வரி பெற்ற மகனே முருகா, உன் நெற்றியில் இருக்கும் திரு நீர் அழகும், நீண்ட புருவமும், பவளச் செவ்வாயும், காதில் அசைந்தாடும் குண்டலமும், அழகிய மார்பில் தங்க நகைகளும், பதக்கங்களும், நவரத்ன மாலை அசைய உன் வயிறும், அதில் பட்டு வஸ்திரமும் சுடர் ஒளி விட்டு வீச, மயில் மேலேறி வந்து கேட்டவர்களுக்கு எல்லாம் வரம் தரும் முருகா, என்றெல்லாம் அவரை ஸ்ரீ தேவராயர் வர்ணிக்கிறார்.

 அவர் கூப்பிடும் வேல்கள் தான் எத்தனை உடம்பில் தான் எத்தனை பாகங்கள் காக்க என்று வேலை அழைக்கிறார், வதனத்திற்கு அழகு வேல், நெற்றிக்குப் புனிதவேல், கண்ணிற்குக் கதிர்வேல் நாசிகளுக்கு நல்வேல், செவிகளுக்கு வேலவர் வேல், பற்களுக்கு முனைவேல், செப்பிய நாவிற்கு செவ்வேல், கன்னத்திற்கு கதிர்வேல், கழுத்திற்கு இனிய வேல் மார்பிற்கு ரத்தின வடிவேல், 

இளமுலை மார்புக்கு திருவேல், தோள்களுக்கு வடிவேல் பிடறிகளுக்கு பெருவேல், அழகு முதுகிற்கு அருள்வேல், வயிறுக்கு வெற்றிவேல் சின்ன இடைக்கு செவ்வேல், நாண்கயிற்றை நால்வேல், பிட்டம் இரண்டும் பெருவேல், கணைக்காலுக்கு கதிர் வேல், ஐவிரல்களுக்கு அருள்வேல், கைகளுக்கு கருணை வேல், நாபிக்கமலம் நல்வேல் முப்பால் நாடியை முனை வேல், எப்போதும் என்னை எதிர் வேல், பகலில் வஜ்ரவேல், இரவில் அனைய வேல், காக்க காக்க கனக வேல் காக்க. அப்பப்பா எத்தனை விதமான வேல் நம்மைக் காக்கின்றன. 

அடுத்தது எந்தெந்த வகை பயங்களில் இருந்து காக்க வேண்டும் என்று விளக்கப்பட்டுள்ளது. பில்லி, சூன்யம், பெரும் பகை, வல்லபூதம், பேய்கள், அடங்காமுனி, கொள்ளிவாய்ப் பிசாசு, குறளைப் பேய்கள், பிரும்ம ராட்சசன், இரிசி காட்டேரி, இவைகள் அத்தனையும் முருகன் பெயர் சொன்னாலே ஓடி ஒளிந்து விடும் என்கிறார். 

அடுத்தது மந்திரவாதிகள் கெடுதல் செய்ய உபயோகிக்கும் பொருட்கள் பாவை, பொம்மை, முடி, மண்டைஓடு, எலும்பு, நகம், சின்ன மண்பானை, மாயாஜால் மந்திரம், இவைகள் எல்லாம் சஷ்டி கவசம் படித்தால் செயல் இழந்து விடும் என்கிறார். பின் மிருகங்களைப் பார்ப்போம், புலியும் நரியும், எலியும் கரடியும், தேளும் பாம்பும் செய்யான், பூரான், இவைகளால் எற்படும் விஷம் சஷ்டி கவச ஓசையிலேயே இறங்கி விடும் என்கிறார். 

நோய்களை எடுத்துக்கொண்டால் வலிப்பு, சுரம், சுளுக்கு, ஒத்த தலைவலி, வாதம், பைத்தியம், பித்தம், சூலை, குடைச்சல், சிலந்தி, குடல் புண், பக்கப் பிளவை போன்ற வியாதிகள் இதனைப் படித்தால் உடனே சரியாகி விடும் என்கிறார். இதைப் படித்தால் வறுமை ஓடிவிடும் நவகிரகங்களும் நமக்குத் துணை இருப்பார்கள்.

சத்ருக்கள் மனம் மாறி விடுவார்கள். முகத்தில் தெய்வீக ஒளி வீசும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே தினம், தினம் கந்த சஷ்டி கவசம் படியுங்கள். வேலனைப் போற்றுங்கள் உங்கள் வேதனைகள் எல்லாம் விலகி ஓடிவிடும். 

பல நன்மைகளை தரக்கூடிய கந்த  சஷ்டிகவசத்தை பாராயணம் செய்து முகப்பபெருமானின் அருளை பெறுவோமாக  

வலம்புரிச் சங்கு தோன்றிய கதையும்,பூஜை முறையும்

வலம்புரிச் சங்கு தோன்றிய கதையும்,பூஜை முறையும் 


 தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது பதினாறுவகை தெய்வீகப் பொருட்கள் வெளிவந்தன. அவற்றுள் வலம்புரிச் சங்கும் திருமகளும் வர மஹாவிஷ்ணு இடக்கையில் சங்கையும் வலக்கையில் தேவியையும் ஏற்றுக் கொண்டார். 

இதே போல் கிருஷ்ணருக்கும் பலராமருக்கும் வில்வித்தை கற்றுக் கொடுத்த சாந்திபனி முனிவருக்கு குருதட்சணையாக என்ன வேண்டும் என்று கேட்ட போது குருவின் மனைவி, கண்ணீர் விட்டபடி பஞ்சஜனன் என்ற கடல் அரக்கன் அவர்களது ஒரே மகனைக் கடத்திக் கொண்டு போய்க் கடற்பாதாள அறையில் வைத்திருப்பதாகவும் குருதட்சணையாக அவனை மீட்டுத் தரும்படியும் வேண்டினான். கிருஷ்ணரும் பலராமரும் கடல் ராஜாவை அழைத்து வழிகேட்டுச் சென்று அரக்கனை எதிர்த்துப் போரிட்டுச் சாம்பலாக்கி விட்டு, குரு மகனை மீட்டுத் தந்தனர். பஞ்சஜனனின் சாம்பலே ஒன்று திரண்டு சங்காகியதால்-சங்கிற்குப் பாஞ்சஜன்யம் என்ற பெயர் ஏற்பட்டது. இதை வெற்றியின் சின்னமாகக் கிருஷ்ண பரமாத்மா கையில் எடுத்துக் கொண்டு ஊதத் தொடங்கினார், அவரது வாழ்க்கையில் இடம்பெற்ற பஞ்சபாண்டவர்களில் ஐவருமே ஒவ்வொரு விதமான சங்கை வைத்திருந்ததாக பாகவதம் கூறுகிறது.

தருமருடைய சங்கு அனந்த விஜயம், அர்ஜுனனுடைய தேவதத்தம், பீமனுடையது மகாசங்கம். நகுலனுடையது சுகோஷம். மகாதேவனுடையது மணி புஷ்பகம். கடலில் பிறக்கும் சங்குகளில் மணி சங்கு, துவரி சங்கு, பாருத சங்கு, வைபவ சங்கு, பார் சங்கு, துயிலா சங்கு, வெண் சங்கு, பூமா சங்கு, திரிசங்கு என்ற எட்டு வகை சங்குகள் உள்ளன. இவற்றில் வலம்புரி சங்குதான் மிகவும் சக்தி வாய்ந்ததாக ஆகமமும், சாஸ்திரங்களும் சொல்வதைக் காணலாம். மேலே உள்ள இந்த சங்குகள் ஒவ்வொரு தெய்வத்தின் கரங்களில் இருப்பதாக விகனச ஆகமவிதியில் கூறப்பட்டுள்ளது.திருப்பதி பெருமாளுக்கு-மணி சங்கும், ரெங்கநாதருக்கு-துவரி சங்கும், அனந்த பத்மநாப சுவாமிக்கு-பாருத சங்கும், பார்த்தசாரதி பெருமாளுக்கு- வைபவ சங்கும், சுதர்ஸன ஆழ்வாருக்கு-பார் சங்கும், சவுரிராஜப் பெருமாளுக்குத் துயிலா சங்கும், கலிய பெருமாளுக்கு- வெண் சங்கும், ஸ்ரீ நாராயண மூர்த்திக்கு-பூமா சங்கும் உள்ளன.

வலம்புரிச் சங்கு என்கிற கடல் வாழ் நத்தையின் கூட்டை வழிபட்டால் நம்மைத்தேடி மகாலட்சுமி வருவாள் என்று வேதவாக்கியம் சொல்கிறது. நம் வீட்டில் வலம்புரிச் சங்கு பூஜை, முறையாக நடைபெற்றால் பிரம்மஹத்தி தோஷமும் அகன்று விடுகிறது. இதை
சங்க மத்யே ஸ்திதம் தோயம் ப்ராமிதம் சங்கரோபரி
அங்க லக்ஷ்ணம் மனுஷ்யானாம் ப்ரம்மஹத்யாதிகம் தஹேத்
என்ற வரிகளால் அறிந்து கொள்ளலாம். வாஸ்துக் குறை வீட்டில் காணப்பட்டால் மஞ்சள் நீரும் துளசியும் சங்கில் இட்டுக் காலையில் தெளித்து விட்டால் குறைகள் நீங்குவதாக ஐதீகம் இருக்கிறது. முற்காலங்களில் மக்கள் செல்வச் செழிப்போடு வாழ்ந்து வந்ததற்குக் காரணம், வீடு கட்டும்போது ஐந்து வெள்ளிக் கிழமைகள் லக்ஷ்மி வஸ்ய பூஜை செய்த வலம்புரிச் சங்கை வீட்டு நிலை வாசற் படியில் வைத்து- நடு ஹாலில் சங்கு ஸ்தாபன பூஜை செய்து திருமகள் மற்றும் வாஸ்து பகவானை வழிபட்டார்கள். எந்தக் குறைவும் இல்லாமல் அவர்களால் வாழ முடிந்தது.

சங்கு பூஜை செய்யும் முறை: valampuri sangu images hd க்கான பட முடிவு

48 நாள் தினமும் செய்ய விருப்பம் உடையவர்கள் காலை உடற்சுத்தம் செய்துவிட்டு வலம்புரிச் சங்கை சுத்தமான நீரில் அலம்பி சந்தனம் குங்குமம் இட்டு பிளந்த பாகம் வெளிப்பக்கமாக வைத்து மஞ்சள் பொடி சிறிது இட்டு நீர் ஊற்றியபின் ஓம் கம் கணேசாய நம ஸ்ரீ குருதேவாய நம என்ற பின்
ஓம் பாஞ்சஜன்யாய வித்மஹே
பாவ மானாய த்மஹி
தந்நோ சங்க ப்ரசோதயாத்
என்னும் சங்கு காயத்ரியை 3 முறை சொன்ன பிறகு-ஸ்வாகதம்... ஸ்வாகதம் ஸ்ரீ லக்ஷ்மீ குபேராய நம என்று சங்கில் குபேரனை அழைக்க வேண்டும், பிறகு ஓம் நவநிதி தேவதாயை நம சகல ஆராதனை சுவர்ச்சிதம் என்று சிவப்பு மலரைப் போட வேண்டும், (வலம்புரிச் சங்கின் அளவைப் பொறுத்து தாமிரத் தட்டில் பச்சை அரிசி போட்டு அதன்மேல் சங்கை குபேரன் படத்தின் முன் வைக்க வேண்டும். மூன்று முக நெய் தீபம் ஒன்று ஏற்றினால் போதும். பிறகு துளசி, அரளி, சிவப்பு மலர், மல்லிகை கலந்து பன்னீர் தெளித்து வைத்துக் கொண்டு சங்கைச் சுற்றி மலர் தூவ வேண்டும்.
ஓம் பத்ம நிதியே நம
ஓம் சங்க நிதியே நம
ஓம் மகரநிதியே நம
ஓம் சுகச்சப நிதியே நம
ஓம் முகுந்த நிதியே நம
ஓம் குந்தாக்ய நிதியே நம
ஓம் நீல நிதியே நம
ஓம் மகநிதியே நம
ஓம் வரநிதியே நம

என்று நிதிகளை பூஜிக்க வேண்டும், மும்முறை குபேர காயத்ரி மந்திரம் சொல்ல வேண்டும்.
ஓம் யக்ஷசாய வித்மஹே
வைச்ரவ னாய த்மஹி
தந்நோ ஸ்ரீத ப்ரசோதயாத்.

பிறகு 16 நாமாவளி அர்ச்சனை செய்து (மஞ்சள் குங்குமத்தால் செய்வது மிக விசேஷமானது)
ஓம் க்லீம் குபேராய நம

ஓம் க்லீம் ஸ்ரீமதே நம
ஓம் க்லீம் பூர்ணாய நம
ஓம் க்லீம் அஸ்வாரூடாய நம
ஓம் க்லீம் நரவாகனாய நம
ஓம் க்லீம் சதா புஷ்பக வாகநாய நம
ஓம் க்லீம் யக்ஷõய நம
ஓம் க்லீம் நித்யேஸ்வராய நம
ஓம் க்லீம் நித்யானந்தாய நம
ஓம் க்லீம் தனலக்ஷ்மி வாஸாய நம
ஓம் க்லீம் அகாஸ்ரயாய நம
ஓம் க்லீம் மகதைஸ்வர்ய ரூபாய நம
ஓம் க்லீம் சர்வக்ஞாய நம
ஓம் க்லீம் சிவபூஜகாய நம
ஓம் க்லீம் ராஜயோக வராய நம
அர்ச்சனை முடிந்த பிறகு குபேர காயத்ரி சொன்ன பிறகு தூப தீபம் காட்டி ஓம் ஸ்ரீம் லக்ஷ்மி சகித குபேராய நம: மம க்ரஹே அமுதம் நித்யானந்த வாஸம் குரு குரு.. என்று ஆத்ம பிரதட்சிணம் செய்து மலர் போட வேண்டும். கற்கண்டு, பால், அவல் பாயாசம் நிவேதித்து நெய் தீபத்தை கற்பூர ஆரத்திக்குப் பதிலாகக் காட்ட வேண்டும், நமஸ்காரம் செய்த பிறகு.
ஓம் வட திசை வல்லவா போற்றி
ஓம் நவநிதி தேவா போற்றி
ஓம் செல்வத்தின் உருவமே போற்றி
ஓம் செல்வ வளம் சேர்ப்பாய் போற்றி
ஓம் திருமகளின் நட்பே போற்றி
ஓம் ஐஸ்வர்ய கடாட்சமே போற்றி
ஓம் ஆனந்தத்தின் தனமே போற்றி
ஓம் குபேர நாயக போற்றி
என்று நமஸ்காரம் செய்து ரு பெண்ணுக்கு தாம்பூலம் மஞ்சள் தரவேண்டும்.
எளிமையான இந்த குபேர பூஜையை 48 நாட்கள் தொடர்ந்து செய்தால் குடும்ப வருமானம் செழிக்கும். 6 வெள்ளிகள் கடன் தீர வழி ஏற்படும். வியாழக்கிழமை மாலை 5 முதல் 7.30 மணி வரை குபேர காலத்தில் செய்து 9ம் வியாழன் யக்ஞத்துடன் முடிக்க பொருள் சேர வழி உண்டு. 8 பவுர்ணமிகள் குபேர அர்ச்சனையுடன் எளிதாய்ச் செய்து வர செல்வம் சேர வாய்ப்பு உருவாகும். எல்லோருக்கும் நவநிதி லக்ஷ்மி குபேர தரிசனம் கிடைக்கட்டும்

பயன் தரும் மந்திரங்கள்

பயன் தரும் மந்திரங்கள்தொடர்புடைய படம்






பாவம் போக்கும் சிவன் மந்திரம்

நமச்சிவாய வாழ்க!
நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணிதான் தாள் வாழ்க!

ஓம் தத்புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹி!
தன்னோ ருத்ர ப்ரச்சோதயாது!

ஓம் த்ரயம்பகாய வித்மஹே ம்ருத்யுஞ்சாய தீமஹி!
தன்னோ பரமசிவ ப்ரச்சோதயாத்



தன் வினைதான் தன்னைச் சுடும். நாம் செய்யும் ஒவ்வொரு வினைக்கும் உறுதியாக எதிர்விளைவு ஒன்று உள்ளது. நல்லது செயின் நல்ல விளைவுகள் ஏற்படும். தீமைகளும், பாவங்களும் செயின் அதற்கேற்ற தீய விளைவுகளே வாழ்வில் கிடைக்கும். ஒருவர் செய்யும் பாவங்கள் மட்டுமின்றி, அவருடைய பெற்றோர், மூதாதையர் செய்த பாவ வினைகளும் அவர்களைத் தொடர்ந்து வரும். நாம் அறிந்தோ அறியாமலோ செய்யும், தீய செயல்களான தீமையானதைத் திட்டமிடும் சிந்தனை, பிறருடைய மனதைப் புண்படுத்தும் சொல், பிறரைத் துன்பத்திற்கு ஆளாக்கும் செயல், செய்ய வேண்டிய கடமையைப் புறக்கணித்தல், தற்பெருமை, சீற்றம், காம வெறி, பேராசை, பெருந்தீனி விரும்பல், பொறாமை, சோம்பல் போன்ற செயல்கள் அனைத்தும் பாவ செயல்களாகக் கருதப்படுகின்றன. இப்படி ஒருவர் செய்யும் ஒவ்வொன்றிற்கும் அதற்கேற்ற தீய விளைவுகள் அவர்கள் அனுபவிக்க நேரிடும்.
அத்தகைய பாவ விளைவுகளை களைய, ஒருவர் தன்னுடைய ஆணவத்தை துறந்து, சிவனை மனதார வணங்கி, தான்செய்த தீய வினைகளை அவனடியில் சமர்ப்பித்து, மேலே கூறப்பட்டுள்ள சிவன் மந்திரங்களை சொல்லி இறைவனை வணங்க வேண்டும். சிவனுக்கு உரிய நாள் திங்கட்கிழமையாகும். எனவே ஒரு திங்கள் கிழமையில் அல்லது சிவராத்திரி அல்லது பிரதோஷ தினத்தில் சிவன் சன்னதியில் உங்கள் பிரார்த்தனையை ஆரம்பித்து தினமும் கடைபிடித்து வர வேண்டும்.

உங்களுடைய பாவ வினைகள் நீங்கி உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும், நிம்மதியும் நிறைந்திடும். வாழ்வில் நிறைவு ஏற்படும்.



திருப்பம் தரும் திருமால் மந்திரம்

"ஓம் ஹ்ராம் ஹ்ரீம் க்லீம்
ஓம் நம ஸ்ரீ வேங்கடேசாய"



இந்த மந்திரம் நமக்கு நல்ல திருப்பங்களை தந்தருளும் திருப்பதி திருமலை திருவேங்கடவனின் மீது பாடப்பட்ட அரிய மந்திரமாகும். திருவேங்கடவனின் திருவருளை பெறும் பலவித வழிகளில் இந்த மந்திரமும் ஒன்று.

முதலில் பிள்ளையாரையும், குல தெய்வத்தையும் மனதார வணங்கி விட்டு இந்த மந்திரத்தை துளசி மணி மாலை கொண்டு தினமும் காலையில் 108 முறை ஜபம் செய்யவும்.

இம்மந்திரத்தை ஒரு வளர்பிறை திங்கட்கிழமையன்றோ, அல்லது ஒரு திருவோண நட்சத்திரத்தன்றோ அல்லது வளர்பிறை ஏகாதசியன்றோ அதிகாலையில் சொல்லத் துவங்குதல் கூடுதல் நலம் பயக்கும். இம்மந்திரத்தை துதிப்பதோடு ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் வரும் முதல் திங்கட்கிழமைகளில் மலையேறி சென்று திருமலையானின் தரிசனத்தையும் பெற்று வந்தால் சர்வ நிச்சயமாக ஒருவரது பொருளாதார நிலையில் திருப்திகரமான நல்ல மாற்றங்கள் உண்டாகும்.



ஆதித்ய மந்திரம்

சூரிய பகவானின் திருவருளைப் பெற மந்திரம் அருளை பெற மந்திரம்

             ‘ஓம் ஆதித்யாய நம’


இந்த மந்திரம், ஆதவனின் அருளைப் பெற உதவும் மந்திரம் ஆகும். இம்மந்திரத்தை ஒரு வளர்பிறை ஞாயிறு தினத்தன்று காலையில், சூரிய ஹோரை நேரத்தில், கிழக்கு நோக்கி அமர்ந்து, 108 முறை சொல்லி சூரிய பகவானை வணங்க வேண்டும்.
இந்த ஆதித்ய மந்திரத்தை 108 முறைகள் சொல்வதால், நம் ஆன்மப் பிரகாசம் தூண்டப்பட்டு உடலும், மனமும், முகமும் தெளிவுடனும், சுறுசுறுப்பாகவும் இருக்கும். மன எழுச்சியினால் ஒருவரின் உள்ளொளியை அதிகரிக்க கூடிய மகத்தான சக்தி வாய்ந்த மந்திரம் இந்த ஆதவ மந்திரம் ஆகும்.
வளர்பிறை ஞாயிற்று கிழமையில் துவங்கி, தொடர்ந்து ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் இந்த மந்திரத்தை சொல்லி சூரிய பகவானை வணங்கலாம். முடியாதவர்கள், வளர்பிறை ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் இதைக் கடைப்பிடிக்கலாம்.


காரியத்தடை போக்கும் சந்திரன் வழிபாட்டு

சிவனின் சடைமேல் சிறப்புடன் விளங்கும்
மதியே உன்னை மகிழ்வுடன் துதித்தேன்!
நிறத்தில் வெண்மையும், நெல்லாம் தான்யமும்
சிறப்புடன் வழங்கச் செல்வம் கொடுப்பாய்!
முத்தாம் ரத்தினம் முழுமலர்
அல்லி வைத்தோம் உனக்கு வரம்தருவாயே!
புத்தி பலம்பெற பொன்பொருள்
குவிய சக்தி வழங்கும் சந்திரா வருக!



இந்த சந்திரன் வழிபாட்டு பாடலைச் சொல்லி சந்திரனை வழிபடுவதால், நாம் செய்யப் போகும் காரியங்களில் ஏதேனும் காரியத்தடை அல்லது இடையூறுகள் இருப்பினும் அவைகள் நீங்கப் பெற்று செய்யும் செயல்கள் அனைத்தும் ஜெயமாகும். ‘மனது காரகன்’ மற்றும் ‘மாதா காரகன்’ என்று அழைக்கைப்படுபவர் சந்திரன் ஆவார். எனவே, இந்தப் பாடலைச் பாடி சந்திரனை வணங்குவதால் நினைத்த காரியங்கள் குறையேதும் இன்றி வெற்றிகரமாய் அமையும். மனமகிழ்ச்சியும் நிறைவும் வாழ்வில் என்றும் நிலைக்கும்.


கடன் தீர்க்கும் அங்காரக ஸ்தோத்திரம்
அங்காரக மஹீபுத்ர பகவன் பக்த வத்ஸல
நமோஸ்துதே மமாசேஷம் குணமாசு விமோசய
ருணரோகாதிதாரித்ர்ய பாபக்ஷ தபம்ருத்யவ:
பயக்ரோத மன:க்லேசா: நச்யந்து மமஸர்வதா
ருணதுக்க வினாசாய புத்ரஸந்தான ஹேதவே
மார்ஜயாம்யஸிதாரேகா: திஸ்ரோ ஜன்மஸமுத்பவா:
துக்கதௌர்பாக்யநாசாய ஸக ஸந்தான ஹேதவே
க்ருதரேகாத்ரயம் வாம பாதாத் ஸம்மார்ஜயாம்யஹம்



இந்த மந்திரத்தை, செவ்வாய்க் கிழமைகளில் செவ்வாய் பகவானின் யந்திரம் அல்லது திருவுருவப் படத்தின் முன்பு காலை அல்லது மாலையில் விளக்கேற்றி வைத்த பின் சொல்லி வணங்க வேண்டும். செவ்வாய் பகவானின் யந்திரம் அல்லது திருவுருவப் படத்திற்கு சந்தனம், குங்குமம் இட்டு பூக்கள் தூவி சாம்பிராணி ஏற்றி வைத்து நெய் வேத்தியமாக சர்க்கரைப் பொங்கல் சமர்ப்பித்து ஸ்ரீ அங்காரகனை மனதார மேற்கூறிய மந்திரத்தை சொல்லி வழிபட வேண்டும்.

இந்த மந்திரத்தின் பொருள்:
“பூமியின் மைந்தனும் பகவானும் பக்தர்களின் மீது பிரியம் கொண்டவருமான ஸ்ரீஅங்காரக பகவானே, தங்களை வணங்குகிறேன். வெகு சீக்கிரம் எனது எல்லாக் கடன்களையும் போக்கியருள வேண்டும். என்னை வாட்டும் கடன், ரோகம் முதலானவை, தரித்திரியம், பாபம், பசி, அபிமிருத்யு, பயம், கோபம், மனக்கவலை ஆகிய யாவும் அழியட்டும்.
கடனால் ஏற்பட்ட துக்கம் விலகுவதற்கும், தொடர்ந்து குழந்தைகள் பிறப்பதற்கும் வேண்டி, முன் ஜன்ம கர்ம வினைப்பாடுகளை அழிப்பதுபோன்று இந்த மூன்று கோடுகளையும் அழிக்கிறேன் (என்றபடி மூன்று கோடுகளையும் அழிக்கவேண்டும்). அத்துடன், ‘மிகுந்த தேஜஸ்வியும், ஸ்ரீபரமசிவனின் வியர்வையில் இருந்து உண்டானவருமான செவ்வாய் பகவானே, தங்களை வணங்குகிறேன்.
மிகுந்த கடனாளியான நான் உங்களையே சரணடைகிறேன். எனது கஷ்டங்களை நீக்கி அருளுங்கள்” என மனதார வேண்டிக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு செவ்வாய்க்கிழமைகளில் ஸ்ரீ அங்காரக பகவானை இந்த மந்திரம் சொல்லி வழிபடுவதால் நமது கடன்கள் யாவும் நீங்கி நன்மை பயக்கும். இல்லத்தில் தரித்திரமும், வறுமையும் அகன்று குபேர சௌபாக்கியம் உண்டாகும்.

கோடிகளில் பணம் புரள வைக்கும் - லஷ்மி பூஜை




கோடிகளில் பணம் புரள வைக்கும் - லஷ்மி பூஜை

தொடர்புடைய படம்
எப்படி விதி என்ற ஒன்று , யாராலும் வரையறுக்கப்பட முடியவில்லையோ - அதேபோலே தான் - கடன் தொல்லையும். எப்பொழுது கடன் தீரும் என்ற கேள்விக்கு விடை கிடைக்காமல், தவிக்கும் ஏராளமானோரை நாம் பாத்திருப்போம் .கந்து வட்டி கும்பலிடம் மாட்டிக்கொண்டு, முழி பிதுங்க - வாங்கிய அசலை விட ஐந்து மடங்கு வட்டி கட்டி , தப்பி வந்தவர்களை --- வந்த பிறகு அவர்கள் முகத்தில் தெரிந்த - sign of relief - மகிழ்ச்சி , விவரிக்க இயலாதது.

கடன் , அதன் முழு வீர்யம், அதனால் ஏற்படும் மன உளைச்சல் - அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும்.

குடும்பம். மனைவி குழந்தைகள் என அனைவரையும் பிரித்து - அநாதை போன்ற அமைப்பையும் - இந்த கடன் ஏற்படுத்தி விடுகிறது. 



காலை ஐந்து மணிக்கு - குளித்து முடித்து - முழு நம்பிக்கையுடன் - கனகதாரா ஸ்தோத்திரத்தை , பாராயணம் செய்தால் - 100 % சதவீதம் நீங்கள் கடனிலிருந்து தப்பலாம்.

 எந்த ஒரு விஷயமும் தொடங்கும் முன், உங்களுக்கு முழு நம்பிக்கை , அவசியம். காலை பிரம்ம  முஹூர்த்த வேளையில் (காலை 4.30 மணி முதல் 6மணிக்குள் )கண் விழித்து , உடலை சுத்தமாக்கி - நீங்கள் செய்யும் எந்த செயலும் , உங்களுக்கு முழு பலன் அளிக்கும். அது, உடற் பயிற்சியாக இருந்தாலும் சரி,  படிப்பது , வித்தை பயில்வது போன்ற எந்த செயலாக இருந்தாலும் சரி.

இப்படிப் பட்ட சூழலில்  ,     நீங்கள் கனகதாரா ஸ்தோத்ரம் துதிப்பது - உங்களுக்கு மன வலிமை அளித்து , கடன் அடைப்பது ஒன்றே உங்கள் முழு முதல் குறிக்கோள் என்ற எண்ணம் ஏற்படுத்தி , அதற்குரிய வழிகளை உங்களுக்கு ஏற்படுத்துகிறது. மிக மிக அபூர்வ , அதிர்வு ஏற்படுத்தும்
அற்புத வழிமுறை இது.




http://www.goddessgift.com/images/goddess-Lakshmi.jpg
சரியாக - 48 நாட்கள் இடை விடாமல் - இந்த கனக தாரா ஸ்தோத்ரம் பாராயணம் செய்தால் - நீங்கள் உங்கள் கடன் அடைந்து , நிம்மதிப் பெருமூச்சு விடுவது உறுதி. அப்படி ஒரு மண்டலம் நீங்கள் செய்யும்போது , இடையில் வரும் வெள்ளிக் கிழமைகளில் , நீங்கள் மகா லட்சுமி பூஜையும் செய்வது உங்களுக்கு மேலும் நன்மை பயக்கும். 
லக்ஷ்மி  பூஜை செய்யும் முறை க்கான பட முடிவு
வெள்ளிக்கிழமைகளில் இப்பூஜையை செய்து பலன் அடையலாம். இதற்கு வேண்டிய பொருட்கள்:

குத்து விளக்கு ,  உதிர்த்த மல்லிகை மற்றும் சாமந்தி பூக்கள் - ஒரு சிறு பாத்திரத்தில் , பால் - ஒரு கிண்ணம் (சுத்தமான வெள்ளி கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளலாம்) பழங்கள் - வாழை, எந்த பழம் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.  தண்ணீர் - ஒரு கிண்ணம் , குங்குமம் , சந்தனம்/மஞ்சள் , 
பெரிய தாம்பாளம், லக்ஷ்மி உருவம் பதித்த வெள்ளி தகடு  /  அல்லது  சிறிய மகா லக்ஷ்மி விக்ரகங்கள் ,படம்  

சர்க்கரை பொங்கல்  , முளை கட்டிய கருப்பு கொண்டை  கடலை (சுண்டல் ) - (பூஜைக்கு முன் நாள் காலையிலே கடலைகளை ஊற வைத்து விடுங்கள்)

பூஜை அன்று பூஜை செய்யும் இடத்தை சுத்தம் செய்து கோலம் இடுங்கள்.
குத்து விளக்குடன் லக்ஷ்மி தகடை சிறிய நூலால் கட்டிவிடுங்கள். மாட்டுவதற்கு விளிம்பு இருந்தால் குத்து விளக்கில் மாட்டிவிடலாம். குத்து விளக்கை தாம்பாளத்தில் வைத்து மஞ்சள் குங்குமம் இடுங்கள். இப்போது நெய்வேத்யம் செய்ய பால், தண்ணீர், பொங்கல், பழங்கள், கடலைகளை தயாராகி வைத்துவிடுங்கள். ஐந்து முக விளக்கை ஏற்றுங்கள். நெய்யினால் கூட விளக்கு ஏற்றலாம். பூஜையை மலர்களை வைத்து ஆரம்பிக்கலாம்.

லக்ஷ்மி அஷ்டோத்திர மந்திரத்தை முழுவதுமாக மலர்களை கடவுளுக்கு அர்ச்சனை செய்துகொண்டே மனம் ஒன்றி படியுங்கள். படித்து முடித்தவுடன், சகல ஐஸ்வர்யமும் கிட்ட கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள். தீர்த்தம் கொண்டு சர்க்கரை பொங்கல், பழங்கள், பால் மற்றும் கொண்டை கடலைகளை கடவுளுக்கு நெய்வேத்யம் செய்யுங்கள். பின் ஒரு புது துணியில் முளை விட்ட கடலைகளை கட்டி வெற்றிலை பாக்குடன் வைத்து, நெய்வேத்யம் செய்த சர்க்கரை பொங்கல் சேர்த்து சுமங்கலிகளுக்கு கொடுக்கலாம். இவ்வாறு செய்து வர, மகா லக்ஷ்மி நம் வீடு தேடி வருவாள். முளை கட்டிய கடலைகள், சகல சௌபாக்ய வாழ்க்கையின் நம்பிக்கையாக வழங்கப்பட்டு வருகிறது.

thambulam with channa dhall க்கான பட முடிவு
பணத்தை மதித்து - நடந்தாலே அவர்களுக்கு - மகாலட்சுமியின்  பரிபூரண அருள் கிட்டும்.

பாபாவின் தினசரி வாழ்கை முறை

பாபாவின் தினசரி வாழ்கை முறைsai baba temple க்கான பட முடிவு


பாபா சூரியன் உதிக்கும் முன் அதிகாலையிலேயே எழுந்து விடுவார். துனிக்கு முன்னால் உள்ள தூணின் மீது சாய்ந்து இருந்தபடி தியானத்தில் இருப்பார். அவர் என்ன செய்கின்றார் என்பது எவருக்கும் தெரியாது. தன்   அருகில் எவரையும் அப்போது அவர் வர விடமாட்டார். யார் வந்தாலும் பதினைந்து அடி தள்ளி நின்றபடிதான் இருக்க வேண்டும். தியானத்தில் உள்ளபோது அவர் 'யாதே ஹுக்', 'அல்லா வாலி ஹாய்', 'அல்லா மாலிக் ஹாய்' என்று முணுமுணுப்பது உண்டு. அதன் பின் சில யோகக் கலைகளை செய்வார்.

அந்த நேரத்தில் அப்துல் பாபா மற்றும் மாதவ் பாஸ்லே என்பவர்கள் மட்டும் மசூதிக்கு உள்ளே சென்று தரையை பெருக்கி சுத்தம் செய்து, விளக்குத் திரியை சரி செய்து, துனிக்கு அருகில் விறகுகளை வைத்து விட்டுச் செல்வார்கள்.

விடிந்த பின் பாகோஜி ஷிண்டே என்பவர் உள்ளே சென்று பாபாவின் கால்களையும், கைகளையும் மசாஜ் செய்து விடுவார். 1910 ஆம் ஆண்டு பாபா எரிகின்ற நெருப்பில் விழுந்த குழந்தையை காப்பாற்றியபோது அவர் கைகளில் தீக்காயம் ஏற்பட்டது. பாகோஜி பாபாவின் பழைய கட்டை பிரித்து விட்டு, நெய்யை தடவி புதுக் கட்டு போடுவார். அவர் பாபா சமாதி அடைவதற்கு முன் எட்டு வருட காலம் அவருக்கு சேவை செய்து வந்தார் . பாபாவுக்கு தீப்புண் ஆறிய பின்னரும் அவர் பாபாவுக்கு தொடந்து சேவை செய்து வந்தார். அவர் புண்ணிய ஆத்மா.

பாபாவுக்கு ஊது குழாயில் புகையிலை அடைத்து வைத்து நெருப்பு பற்ற வைத்து பாபாவிடம் கொடுக்க பாபா அதில் இருந்து வரும் புகையை சிறிது இழுத்தப் பின் அதை அவரிடமே திருப்பித் தந்துவிடுவார். அப்போது காலை ஏழு அல்லது ஏழரை ஆகிவிட பாபாவின் தரிசனத்துக்கு பக்தர்கள் வரத் துவங்கி விடுவார்கள். வந்த சிலரிடம் பாபா எப்படியெல்லாம் மிக தூரத்தில் இருந்தவர்களையும் தான் காப்பாற்றினேன் என்பதையும், மரணம் அடைந்தவர்களை சொர்கத்துக்கு அனுப்பிய கதைகளையும் கூறுவது உண்டு. அவர் கூறியதையே பாபாவினால் குணம் அடைந்த மற்றும் காப்பாற்றப்பட்ட மக்கள் வந்து கூறும்போது பக்தர்கள் பாபா கூறியது உண்மையே எனத் தெரிந்து கொள்வார்கள்.



அவை எல்லாம் நடந்து கொண்டு இருக்கும் போதே மாதவ் பால்சேயும் துகாராமும் வந்து பக்கெட்டுகளில் நீர் நிரப்புவார்கள் . பாபா பல் துலக்கியதே இல்லை. அவர் வாயை கொப்பளித்து விட்டு முகத்தையும் கை ,கால்களையும் அலம்பிக் கொள்வார். அவர் முகத்தை அலம்பிக் கொள்வதே பார்க்க தனி அழகாக இருக்கும். அவர் வாயை கொப்பளித்து துப்பும் நீரை அங்குள்ள தொழு நோயாளிகள் தம் உடம்பில் பூசிக் கொள்வார்கள். அது அவர்களுடைய நோயை தீர்க்கும் என்ற நம்பிக்கை உண்டு. பாபா முகத்தை கழுவிக் கொள்ளும் போதே பக்தர்கள் காகட ஆரத்திக்கு தேவையான பொருட்களை எடுத்து வருவார்கள். சாவடியில் ஒரு நாள் விட்டு ஒருநாள் காகட ஆரத்தி நடைபெறும்.


பாபா தினமும் குளித்தது இல்லை. பரதேசிகளுக்கு தினமும் குளிக்க வேண்டும் என்பது இல்லை. குளித்தாலும் அவர் கிராமத்தை விட்டு சற்று தள்ளிப் போய் புதர் மறைவில் இருந்தவாறு குளிப்பாராம் . வெகு காலத்துக்குப் பின்னரே அவர் மசூதியில் குளிக்கத் துவங்கினார். இரண்டு தாமிரக் குடத்தில் வெந்நீரும், குளிர்ந்த நீரும் சேவகர்கள் கொண்டு வர மசூதியின் வாசல் திரை சீலை போடப்பட்டு மறைக்கப்படும். பாபா தனக்கு தேவையான அளவு வெந்நீர் கலந்து கொண்டு குளிப்பார். சாதாரணமாக அவர் குளிக்க ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் ஆகும்.

குளித்தவுடன் அவர் துனிக்கு முன் சென்று நிற்க அவருடைய நெருங்கிய பக்தர்கள் அவருடைய உடலைத் துடைத்து விடுவார்கள். அவர் உபயோகித்த நீரை பலரும் தமது நோய்களைத் தீர்க்கும் புனித நீராகக் கருதி உபயோகிப்பார்கள். நாசிக்கை சேர்ந்த ராம்ஜி நாயக் என்ற புத்தி பேதலித்தவர் அந்த நீரை குடித்து குணம் அடைந்தார். அவர் அதற்கு நன்றிக் கடனாக பாபா உட்கார்ந்தபடி குளிப்பதற்காக பெரிய கல்லை பரிசாகத் தந்தார். அது இன்னமும் துவாரகாமாயியில் உள்ளது.

குளிக்கும் கல் 

பாபா தினமும் குளிக்க மாட்டார். ஏழு அல்லது எட்டு நாட்களுக்கு ஒரு முறைதான் குளிப்பார். சில நேரங்களில் ஏழு அல்லது எட்டு வாரங்கள் கூட குளித்தது இல்லை. அது குறித்து அவருடைய பக்தர்கள் அவரிடம் கேட்டால் அவர் கூறுவாராம் ' நான் தினமும் கங்கை நதியில் குளித்து விட்டு வருகின்றேன். அதற்குப் பிறகு எதற்காக மீண்டும் குளிக்க வேண்டும்?'

குளிக்காமல் இருந்தாலும் கூட பாபா மிகவும் சுத்தமாகவே காட்சி அளிப்பார். குளிக்கும் முன் அவர் ஒரு பச்சை கலர் துணியை உடுத்திக் கொண்டு தன்னுடைய கப்னியை துவைத்து துனியின் மீது காயப் போடுவார். அவர் கப்னியைதான் எப்போதும் அவர் போட்டுக் கொண்டு இருப்பார். அவை மிகவும் முரட்டுத் துணி போல இருக்கும் . அவை கிழிந்து விட்டாலும் அதை அவர் உடுத்திக் கொள்வார். தாத்யா பாபாவிடம் மிகவும் வற்புறுத்திக் கூறியே பாபாவை வேறு புதுத் துணி உடுத்த வைப்பார். சில சமயங்களில் தாத்யா பாபாவின் கப்னியில் உள்ள கிழிசல்களை தானே பெரியதாக கிழித்துவிட்டு பாபாவிடம் அதைக் காட்டி ' பாபா இந்த கப்னி கிழிந்து உள்ளதே, வேறு மாற்றலாம்' என ஒன்றும் தெரியாதது போலக் கூறுவார். உடனே பாபா காசிநாத் ஷிண்டே என்ற தன்னுடைய துணி தைப்பவரை அழைத்து புதிய துணியை தைக்கச் சொல்வார். அதற்கான கூலியை விட அதிகக் கூலியை அவருக்குத் தருவார். அதன் பின் பழைய கப்னியை துனியில் போட்டு விட்டு புதியதை உடுத்திக் கொள்வார்.



சாதாரணமாக தான் புதிய கப்னியை உபயோகித்தால் தன்னுடைய பழைய கப்னிகளை அங்குள்ள சாதுக்களுக்கும் ,ஏழைகளுக்கும் தந்து விடுவார். அதனால் பாபா எப்போது புதுத்துணி தைத்தாலும் அவர்களுக்குக் கொண்டாட்டம்தான். 1914 ஆம் ஆண்டு ஒருமுறை பாபா தனது காப்னியை மற்றவர்களுக்குக் கொடுத்துக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு இருந்த நார்கே என்பவர் தனது மனதில் நினைத்தார் ' எனக்கும் ஒரு கப்னியை பாபா தந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் ' . அந்த பக்கம் வந்த பாபா அவர் பக்கம் திரும்பினார் ' இந்த பரதேசிக்கு உனக்கு கப்னியை தர இஷ்டமில்லை. நான் என்ன செய்வது?' பாபா சில நேரத்தில் முடி வெட்டுபவரை அழைத்து தன்னுடைய தலையை மொட்டை அடித்து விடுமாறு கூறுவது உண்டு. அது போலவே தன்னுடைய மீசையையும் சரி வர வெட்டி விடச் சொல்லி அழகு செய்து கொள்வார். அவனுக்கு நிறைய பணமும் தந்துஅனுப்புவார்.


காலை சுமார் எட்டு மணிக்கு பாபா பிச்சை எடுக்கச் செல்லுவார். அவர் கணபதி தத்ய படேல், அப்பாஜி படேல், ஷஹராம் ஷேல்ஹே ,வாமன் கோண்ட்கர் , மற்றும் நாதுராம் மார்வாடி போன்றவர்களுடைய வீடுகளுக்குச் சென்று பிச்சை எடுப்பார். அவர்கள் அனைவரும் அதை பெரும் பாக்கியமாகவே கருதினர். அவர்கள் வீட்டின் முன் சென்று ' ஆபாத் -ஹி -ஆபாத், அல்லா பலா கரேகா, பாசா மா, ஜீவன் தே ரொட்டி தே போன்ற ஏதாவது ஒரு கோஷத்தை எழுப்பி பிச்சை கேட்பார்.
அப்பாஜி படேல், மற்றும் ,வாமன் கோண்ட்கர் வீட்டில் சென்று ' பக்ரி தே ( ரொட்டி குடு ) என்று கூவுவார். ஷஹராம் ஷேல்ஹே வீட்டின் முன் சென்று ' இட்லாயி பாய் ரொட்டி தோ' என்பார்.


நந்துராம் மார்வாடி வீட்டிற்குச் சென்று 'நந்துராம் பாக்ரே தே என்பார்' அல்லது அவருடைய மனைவி ராதாபாயை அழைத்து 'போப்பிடி ( திக்குவாய்) பாக்ரி தே' என்பார். ராதாபாய் திக்குவாய் உடையவர். சில நேரத்தில் அவளுடைய பெயரை சொல்லியும் அவர் அழைப்பார். அவள் பிச்சையை கொண்டு வர தாமதித்தால் அவள் மீது கோபம் கொண்டு கத்துவார். சில நேரத்தில் அவர் அவளுடைய வீட்டிற்குச் சென்று 'போப்பிடி பாய் மீத்தா (இனிப்பு) தே' என்பார். அவளும் பாபா கேட்டு விட்டதினால் பூரண் போளியை செய்து தருவாள்.

அதில் அவர் தான் சிறிது எடுத்துக் கொண்டு மீதியை மற்றவர்களுக்குத் தந்து விடுவார். அவர் 
பிச்சை எடுக்க எப்போது போவர் என்பது தெரியாது, ஆனால் அவர் தினமும் ஒருவர் வீட்டிற்குப் பின் மற்றவர் என ஒரு குறிப்பிட்ட முறைப்படித்தான் வீடுகளுக்கு செல்வார். மேலும் சில நாளில் சிலர் வீட்டிற்கு எட்டு முறைக் கூட பிச்சை எடுக்கச் செல்வார். முதல் மூன்று வருடங்கள் அவர் தினமும் எட்டு முறை பிச்சை எடுத்து வந்தார், அதன் பின் மூன்று வருடங்கள் நான்கு முறையும் அடுத்த பன்னிரண்டு வருடங்கள் தினமும் இரண்டு முறையும் கடைசி சில நாட்களில் ஒருமுறை மட்டுமே பிச்சை எடுத்து வந்தார்.


பாயாஜிபாயின் வீட்டிற்கு அவர் பிச்சை எடுக்கச் சென்றால் அவள் அவரை வீட்டிற்குள் வந்து உணவு அருந்தும்படிக் கூறுவது உண்டு. ஆனாலும் பாபா எவருடைய வீட்டிற்குள்ளும் நுழைந்து உணவு அருந்தியது இல்லை. வீட்டின் தாழ்வாரம் வரைதான் சென்று அமருவார்.
பாயாஜிபாயின் வீட்டிற்கு அவர் எத்தனை முறை பிச்சை எடுக்கச் சென்றாலும் அவள் அலுத்துக் கொள்ளாமல் ஏதாவது உணவை கொண்டு வந்து போடுவாள். ஒன்றுமே இல்லை என்றாலும் சிறிது ஊறுகாய் அல்லது அப்பளமாவது  கொண்டு வந்து போடுவாள். அவளை பாபா தன்னுடைய சகோதரி என்பார் . அவளும் அவருடைய மகிமைகளை புரிந்து கொண்டு இருந்ததினாலோ என்னவோ அவருக்கு பிட்சை போடாமல் தான்சாப்பிட மாட்டாள். அவள் பூர்வ ஜன்மத்தில் புண்ணியம் செய்தவளாக இருந்து இருக்க வேண்டும்.


1876 ஆம் ஆண்டில் அஹமத் நகர் பஞ்சத்தினால் பீடிக்கப்பட்டு இருந்தது. பாபா சீரடிக்கு வந்து இரண்டு ஆண்டுகளே ஆகியிருக்கும். ஆகவே பாபா வசதி இருந்தவர்கள் வீடுகளில் மட்டுமே சென்று பிட்சை கேட்பார். அவர்களில் முக்கியமானவர்களான நந்து ராம் மற்றும் பாயாஜி பாய் வீடுகளில் அந்த நேரங்களில் பாதி ரொட்டி மட்டுமே கிடைக்கும்.


பாபாவின் மகிமைகளை பின்னர் புரிந்து கொண்ட மக்கள் கூட்டம் கூட்டமாக அங்கு வரலாயினர். பல பணக்காரர்கள் பலவிதமான உணவுகளை அங்கு வந்து அவருக்குத் தந்தாலும் அவற்றை அவர் உபயோகித்தது இல்லை. அவருக்கு பிச்சை எடுத்து உண்பதே பிடித்து இருந்தது. அவருக்கு ஆடம்பரங்களும் அலங்காரங்களும் ஏற்புடையதாக இல்லை. ஒரு பரதேசி போலவே இந்த உலகில் வந்தவர் பரதேசி போலவே வாழ்ந்தார். மறு நாளைக்கு என அவர் எதையுமே வைத்துக் கொண்டது இல்லை. கடைசி நாட்களில் அவருக்கு உடல் நலமின்றே போனபோதும் கூட அவர் மற்றவர்களை பிச்சை எடுக்க அனுப்பி அவர்கள் கொண்டு வந்ததையே தான் உண்டார். சில சமயங்களில் அவருக்கு வயிற்று உபாதை ஏற்பட்டால் மூலிகைகளைக் கொண்டு தானே தயாரித்த நாட்டு மருந்தை அருந்துவார். அப்போது அதை அங்கு இருக்கும் பக்தர்களுக்கும் தருவார். கண்களில் நோய் ஏற்பட்டபோது கரும் மிளகை அரைத்து அதைத் தடவிக் கொள்வார் .
அவர் அடிக்கடி ஆஸ்துமா நோயினால் அவதிப் பட்டார். அவரை அந்த நிலையில் பார்க்கும் போது பக்தர்கள் அழுது விடுவார்கள். ஒருமுறை ரகுவீர் புரந்தாரே என்பவர் பாபா ஆஸ்துமா நோயினால் அவதிப்பட்டதை பார்த்து விட்டு அழுது விட்டார். அதைக் கண்ட பாபா அவரிடம் கூறினார் ' சகோதரா எதற்காக நீ அழுகின்றாய்? இது விரைவில் குணமாகிவிடும்'


பாபா உடல் நலிவுற்று இருந்தாலும் தானே பிச்சை எடுப்பதையே விரும்பினார். முடியாமல் இருந்தால் சிலரது தோளில் கையை வைத்துக் கொண்டு அவர்களுடன் ஐந்து வீட்டிற்குச் சென்று பிச்சை பெற்று வருவார். பாபாவின் உடல் நிலையைக் கருதி அவருடைய பக்தர்கள் அவருக்கு சக்கர நாற்காலி வாங்கித் தந்தனர். ஆனால் அவர் அதை உபயோகிக்கவில்லை. அதை தனது கையினால் ஒரே முறை மட்டுமே தொட்டு விட்டு வைத்து விட்டார். அந்த நாற்காலி இன்றும் அங்குள்ள காட்சியகத்தில்வைக்கப் பட்டு உள்ளது. பாபாவுடன் பழகிய புண்ணியசாலிகள் மாதவராவ் தேஷ்பாண்டே, பாலக் ராம் வாமன் ராவ் படேல் போன்றவர்கள் சிலர் உண்டு.

தனது நினைவலையில் ஸ்ரீ சாயி சதானந்த எழுதினர் ' ஒருமுறை பாலக்ராம் சீரடியில் இல்லை. அப்போது அவருக்கு பதிலாக பிச்சை எடுக்க எனக்கு வாய்ப்பு வந்தது. நான் ஸ்ரீ ஜோகின் வீட்டில் இருந்து உணவும் வேறு சிலரிடம் சென்று பாலும் கொண்டு வருவது உண்டு' ஒருமுறை நார்கே அதைப் பார்த்தார். அவருக்கு தனக்கும் அந்த பாக்கியம் கிடைக்காதா என்ற ஆசை எழுந்தது. அவர் கோட்டும் பாண்டும் போட்டுக் கொண்டு மசூதிக்கு ஒருமுறை வந்த போது அவருடைய மனதை அறிந்து கொண்ட பாபா அவரை அந்த கோலத்திலேயே பிச்சை எடுக்க அனுப்பினார். அதற்குப் பின் நார்கே நான்கு மாதம் அந்த வேலையை செய்தார்.

பாபா தன்னுடைய தோளில் ஒரு பையை மாட்டிக் கொண்டு கையில் ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொண்டு பிச்சைக்கு செல்வார். ரொட்டி மற்றும் மற்ற உணவை பையில் போட்டுக் கொண்டும் பால் மற்றும் பிற திரவ பண்டத்தை கிண்ணத்திலும் போட்டுக் கொள்வார். அவர் உணவு எப்படி உள்ளது என அதன் சுவையைப் பார்க்க மாட்டார். சுவையைத் தவிர்க்க வேண்டும் என அனைவருக்கும் கூறுவார். துவாரகாமாயியில் இருந்து கிளம்பி சாவடிக்குச் சென்று முதலில் ஷகாராம் ஷேல்கே , அடுத்து வாமனராவ் கோன்த்கர், அடுத்து பாயாகி படேல், தத்யகோடி படேல் மற்றும் கடைசியாக நந்துராம் மார்வாடி என வரிசையாகச் ஒவ்வொருவர் வீட்டிற்கும் செல்வார். பாயாகி படேல் வீட்டு அருகில் கற்களால் ஆனா சாலையே இருந்ததினால் பாபா காலணி அணிந்து கொண்டே செல்வார். வழியில் உள்ள நாய் மற்றும் காக்கைகளுக்கு உணவு போடுவார். அவருடைய காலணிகள் இன்றும் அவர் நினைவாக வைக்கப்பட்டு உள்ளன. பிச்சை கொண்டு வந்ததும் அதில் சிறிது துனியில் போட்டு விட்டு மீதத்தை அங்கிருந்த 'கொலும்பா' என மராட்டிய மொழியில் அழைக்கப்பட்ட மண் பானையில் போட்டு வைப்பார். அதை நாய்களும், பூனைகளும், எறும்புகளும் வந்து சாப்பிட்டு விட்டுப் போகும். அதில் இருந்து பிராணிகள் மட்டும் அல்ல எவர் வேண்டுமானாலும் உணவை எடுத்துச் செல்லலாம். மசூதியை சுத்தம் செய்ய வருபவளுக்கு குறைந்தது ஆறு ரொட்டியாவது தினமும் அதில் இருந்து கிடைக்கும்.


பாபா தினமும் லேன்டி என்ற இடத்திற்கு காலையில் 8.30 முதல் 9.00 மணிக்குள் நடந்து போவது உண்டு . அப்போது சில நாட்கள் அவர் காலணிகள் அணிவார், சில நாட்கள் அணிய மாட்டார் . வெளியில் சென்று சிறிது நேரம் அங்குள்ள சுவற்றில் கையை வைத்துக் கொண்டு நிற்பார். அதன் பின்னர் மாருதி ஆலயத்தின் எதிரில் சென்று நிற்பார். அங்கு சென்று தன் கைகளை அப்படியும் இப்படியும் ஆட்டிக் கொண்டு ஏதோ செய்வதைப் பார்க்கலாம். அதன் பின் குருஸ்தானில் சென்று நின்றபடி எவருடனோ பேசிக்கொண்டு இருப்பதைப் போன்ற தோற்றம் தருவார்.


வாடாவில் வசிக்கும் பக்தர்கள் அவர் வருகையை எதிர்பார்த்து தெருவின் இரு புறமும் வரிசையாக நிற்பார்கள். மசூதியில் இருந்து கிளம்பி வரும் பாபா அனைவரையும் பார்த்து சிரித்தபடிச் செல்வார். சிலரை பெயரைக் கூறி அழைத்து விசாரிப்பார். அங்கிருந்து கிளம்பி 'பிலாஜி குருவே' என்பவர் வீட்டிற்கு போகும் வழியில் இடப்புறம் திரும்பி 'விட்டலா' ஆலயத்தின் எதிரில் சாலையைக் கடப்பார். அங்கிருந்து வலப்புறம் திரும்பிச் சென்று 'கனிபிநாத் ' என்ற ஆலயத்தைத் தாண்டி மீண்டும் வலப்புறம் திரும்பி லேண்டிக்கு செல்வார். அங்கு சென்று காலை கடனைக் கழிப்பார்.

அங்குள்ள வேப்ப மற்றும் அத்தி மரத்தின் இடையே உள்ள இடத்தில் அணையாத விளக்கு எரிந்து கொண்டு இருக்கும். பாபா அங்கு சென்று சற்று நேரம் அமர்ந்தபடி இருப்பார். அந்த விளக்கை சுற்றி சணல் கோணியினால் ஆன தடுப்புகள் போடப்பட்டு இருக்கும் . அந்த இடத்தை அப்துல் பாபா என்பவர் சுத்தப்படுத்தி வைப்பார். பாபாவுக்காக இரு குடம் நீரையும் வைப்பார். விளக்குக்கு எண்ணை ஊற்றி அணையாமல் பார்த்துக்கொள்வார்.

அந்த குடத்தில் உள்ள தண்ணீரை எடுத்து அனைத்து திசைகளிலும் பாபா தெளிப்பார். அப்போது எவரையுமே -அப்துல்லா பாபாவையும் சேர்த்தே- தன்னுடைய பக்கத்தில் இருக்க அனுமதிக்க மாட்டார். அனைவரும் வெகு தூரம் தள்ளி நிற்க வேண்டும். அந்த இரண்டு மரங்களுக்கான செடிகளை பாபாவே நட்டு இருந்தார் . சற்று தொய்ந்து இருந்த செடியை இப்படியும் அப்படியும் பாபா ஆட்டுவார் . அதனால்தானோ என்னவோ அது மிகவும் பருமனாக நிமிர்ந்து வளர்ந்தது.

பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க தினமும் பாபா லேன்டிக்கு செல்வது அவரை ஊர்வலத்தில் அழைத்துச் செல்வது போல இருந்தது.
தொடர்புடைய படம்

பாபா மசூதியை விட்டு வெளியில் வந்ததும் பாகோஜி ஷிண்டே என்பவர் அவர் தலைக்கு மேல் ஒரு நிழல் குடையை பிடித்துக் கொண்டு நடக்க நானா சாஹேப் நிம்மோங்கர் என்பவரும் பூட்டி என்பவரும் அவருடைய இரண்டு பக்கத்திலும் நடந்து செல்வார்கள். அந்த ஊர்வலத்தின் நடை அழகே தனியானது.


சாதாரணமாக பாபா காலை பத்து மணிக்கெல்லாம் லேன்டிபாகில் இருந்து திரும்பி விடுவார். அதன்பின் காலை பதினோரு அல்லது பதினொன்று முப்பது வரை வரும் பக்தர்கள் கூறும் குறைகளைக் கேட்டும், அவர்களுடைய வேண்டுகோட்களை ஏற்றும் தரிசனம் நடைபெறும் . அதைத் தவிர அங்கு வந்து இசை இசைக்கும் கலைஞர்களுக்கு நிறைய சன்மானமும் தந்து அனுப்புவார்.

சாதாரணமாக ஒவ்வொருவருக்கும் இரண்டு ரூபாயை பாபா வழங்குவார். பக்தர்கள் கொண்டு வருவதை பாபா தொட்டு ஆசிர்வதித்துவிட்டு அவர்களுக்கே அதை பிரசாதமாகத் தந்து அனுப்பி விடுவார். மிக அபூர்வமாகவே அவர் பிரசாதத்தை சிறிது உண்பார். அவர் தரும் பிரசாதத்தை பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வார்கள். மாங்காய் விளைச்சல் பருவத்தில் மாம்பழங்கள் வந்தால் ஒன்றை தான் எடுத்துக் கொண்டு மற்றதை அங்குள்ளவர்களுக்கு விநியோகித்து விடுவார். யாரும் மாம்பழம் கொண்டு வரவில்லை எனில் தானே அதை வாங்கி மற்றவர்களுக்கு கொடுப்பது உண்டு.


தனக்கு வரும் இனிய தின்பண்டங்களை குழந்தைகளுக்குத் தருவது பாபாவின் பழக்கம். ஆகவே பல குழந்தைகள் தினமும் பாபாவைப் பார்க்க வருவது உண்டு. ஒரு வேளை அவர்கள் வரவில்லை எனில் அந்த தின்பண்டங்களை தனியாக எடுத்து வைத்து அவற்றை மறுநாள் குழந்தைகளுக்குத் தருவார். குழந்தைகளிடம் மிகவும் பிரியமாக இருப்பார். ஆகவே எவராவது குழந்தைகளை அனாவசியமாக கடிந்து கொண்டால் அவர்கள் மீது பாபா கோபப்படுவார். குழந்தைகளிடம் அத்தனை ஜாலியாகப் பழகும் பாபா பெரியவர்களிடம் சற்று ஒதுங்கியே இருப்பார். ஒரு புன்முறுவலுடன் அவர்களை அனுப்பி விடுவார். நல்ல மன நிலையில் உள்ள போது நீதிக் கதைகளைக் கூறுவார். அவற்றில் சில கதைகள் தவறுகளை கண்டிக்கும் விதமாக இருக்கும்.


அந்த கதைகளைக் கேட்கும் தவறு செய்தவர்களுக்கு அது தம்மைத்தான் குறிக்கின்றது என்பது புரியும் . சிலருக்கு ஒன்றுமே புரியாது. வேறு சிலர் கதைகளை மறந்து விடுவார்கள். அது என்ன கதை என மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்தாலும் அவர்களுக்கு அது நினைவுக்கே வராது. அந்த அதிசயத்தை பலரும் அனுபவித்து உள்ளனர். சரியாக 11 .30 மணிக்கு மணி அடிக்கும். அது மதிய நேர ஆரத்திகான மணி. எவர் எங்கு இருந்தாலும் உடனே அவர்கள் அனைவரும் மசூதியில் வந்து கூடி விடுவார்கள். பாபாவுக்கு சந்தனத்தை அரைத்து இட்டும் மாலைகள் போட்டும் ஆரத்தி எடுக்கப்படும். பெண்கள் பாபாவுக்கு எதிரில் நிற்க ஆண்கள் பின் புறத்திலும் தாழ்வாரத்திலும் நிற்பார்கள். அந்த நேரத்தில் பாபாவின் முகத்தைப் பார்ப்பதற்கே கோடி கண்கள் வேண்டுமாம். அத்தனை ஜொலிக்கும் முகமாக அவர் முகம் மாறி விடுமாம். அதை பலரும் தமது நாட்குறிப்பில் எழுதி வைத்து உள்ளனராம். கர்பாடேயின் தினக் குறிப்பை படித்தால் அந்த ஆனந்தம் என்பது என்ன எனப் புரியும். ஆரத்தி முடிந்ததும் பாபா அனைவருக்கும் உதி பிரசாதம் தந்து ஆசிர்வாதமும் தந்து அனுப்புவார்.

அனைவரும் சென்றபின் தன்னிடம் வந்துள்ள உணவை பத்து அல்லது பதினைந்து பக்தர்களுடன் பகிர்ந்து கொண்டு அருந்துவார். தாத்யா படேல், ராமச்சந்திர படேல், பய்யாஜி படேல் போன்றோர் பாபாவின் இடதுபுறம் அமர்ந்து கொள்ள , படே பாபா என்ற மாலேகான் பரதேசி, சாமா, பூட்டி, காகா சாஹேப் திக்ஷித், போன்றோர் அவருடைய வலது பக்கத்தில் அமர்ந்து கொள்வார்கள். தாத்யா படேல், ராமச்சந்திர படேல், பய்யாஜி படேல் போன்றோர் ஒரு தட்டிலும், பாபா மற்றும் படே பாபா இருவரும் இன்னொரு தட்டில் இருந்தும் உணவை எடுத்து சாப்பிடுவார்கள். பாபா என்றுமே தனியாக உணவு அருந்தியது இல்லை. அது போல படே பாபா வரும் வரையில் சாப்பிட மாட்டார்.
பக்தர்கள் கைகளையும் கால்களையும் அலம்பிக்கொண்டு வந்து பாபாவின் பக்கத்தில் அமர்ந்து கொள்வார்கள். எல்லா உணவையும் கலந்து பாபாவின் முன்னால் வைப்பார்கள். வாயிலில் தடுப்புச் சீலைகள் போடப்படும். அப்போது வெளியில் இருந்து எவரும் உள்ளே வரக் கூடாது. பாபா முதலில் உணவை கடவுளுக்கு பிரசாதமாக அளித்த பின் தனக்கு வேண்டியதை வைத்துக் கொண்டு மற்றதை வெளியில் காத்திருக்கும் பக்தர்களுக்கு தந்து விடுவார். உணவில் ஒரு பாகத்தை பாலுடன் கலந்தும் மற்ற பாகத்தை சர்க்கரையுடன் கலந்து பிரசாதமாகத் தருவார்.

அதன் பின் நிமோல்கரும் சாமாவும் உணவை மற்றவர்களுக்கு பரிமாறுவார்கள். எவருக்காவது எந்த உணவாவது தேவை எனில் பாபா அவர்களுக்கு அதைத் தருவார்.
எம். டபில்யு. பிரதான் அது குறித்து இப்படி எழுதி உள்ளார். பாபாவுடன் நானும் அங்கு சாப்பிட்டு உள்ளேன். பாபா அனைவரது தட்டுகளையும் உணவினால் நிரப்புவார். அதில் ஒரு பகுதியை நான் வீட்டிற்கு அனுப்பி விடுவேன். அது மொத்த குடும்பத்திற்கே போதுமானதாக இருக்கும். சாப்பிட்டு முடிந்ததும் பாபா அனைவருக்கும் பழம் தருவார். என்னுடைய மகன் பாபுவிற்கு சமைத்த உணவு பிடிக்காது என்பதினால் பாபா அவனுக்கு பழங்களைத் தருவார்.

புதன், 2 மே, 2018

ஸ்ரீகிருஷ்ணர் கவசம்


  1. ஸ்ரீகிருஷ்ணர் கவசம்  தொடர்புடைய படம்
    இது திரு கண்ணதாசனால் இயற்றப்பட்டது.
    அவர் சொல்லுகிறார்:
    துன்பங்களில் இருந்து விடுதலை பெற, குடும்பத்துக்கு நிம்மதி கிடைக்க, நோய்நொடிகள் வருமுன்னே தடுக்க, பேய்பிசாசுகள் பயம் நீங்க, நீண்ட ஆயுளை இறைவனிடம் வேண்ட, ஆன்மாவைச் சுற்றி ஒரு வேலி அமைத்துகொள்ள, இந்தக் கவசத்தைத் தினமும்
    பாராயணம் செய்யவும்.

    கண்ணனை நினைப்போர் சொன்னது பலிக்கும்;
    இந்தக் கவசம் படிப்போர் கவலைகள் பறக்கும்.

    அகரம் முதலே அழியாப் பொருளே
    ஆயர் குலமே நேயர் கரமே
    இகமும் பரமும் இணையும் இடமே
    ஈதல் மரபாம் இதயத் தவமே
    உலகக் குடையே உயிரின் கலையே
    ஊதும் குழலுள் வேதப் பொருளே
    எரியும் கனலில் தெரியும் புனலே
    ஏழை மனதில் வாழும் அருளே
    ஐயம் தீர்க்கும் அறிவுக் கதிரே
    ஐவர் துணையே அன்புச் சிலையே
    ஒளியே விழியே உயிரே வழியே
    ஓடும் நதியில் பாடும் அலையே
    அவ்வவ்வுலகை ஆக்கும் நிலையே
    அடியேன் சரணம் சரணம் சரணம் ! 14

    அறமே அறமே அறமே அறமே
    திறமே திறமே திறமே திறமே
    தவமே தவமே தவமே தவமே
    வரமே வரமே வரமே வரமே
    வேதம் விளையும் வித்தே விளைவே
    நாதம் பொழியும் நலமே நிலமே
    ஓதும் பொழுதே உடனே வருவாய்
    உள்ளம் கேட்கும் வெள்ளம் தருவாய்
    அறியாக் கவலை அதிகம் அதிகம்
    அருள்வாய் அருள்வாய் கவசம் கவசம் ! 24

    பொய்யா மொழியே பொங்கும் நிலவே
    பூமிக் குடையின் காவற் பொருளே
    பார்த்தன் பணியும் பாதம் காக்க
    பாஞ்ச சன்னியம் பக்தனைக் காக்க
    மூடர்கள் தமையும் மோகனன் காக்க
    முள்ளில் மலரால் முளைத்தோன் காக்க
    வாடும் உயிரை மன்னவன் காக்க
    தேடும் விழியைத் திருமால் காக்க
    கேலிப் பொருளைக் கிருஷ்ணன் காக்க
    கண்ணீர் நதியைக் கண்ணன் காக்க
    துன்பம் என்றொரு சுமையைத் தீர்க்க
    தூயோன் வருக துணையே தருக ! 36

    தகிடத் தகிடத் தகிடத் தகவென
    தறிபடு துன்பம் தறிகெட ஓட
    திகிடத் திகிடத் திகிடத் திகிடத்
    திசைவரு கவலை பசைஇல தாக !
    துருவத் துருவத் துருவத் துருவிடத்
    தொலையாப் பொருளே அலையாய் வருக !
    நிஷ்கா மத்தில் நிறைவோன் வருக
    கர்மசந் யாசக் களமே வருக
    ஞானம் யோகம் நல்குவன் வருக
    நல்லோர் வாழ்வில் நலமே நிறைக ! 46

    அடியேன் துயரம் அதிகம் அதிகம்
    அருள்வாய் அருள்வாய் கவசம் கவசம்
    பொங்கும் வேலும் புண்ணாக் காது
    பொருந்தும் துயரம் பொடிபடு மாறு
    தாங்கும் தலைவன் தாமரைக் கண்ணன்
    தாளில் விழுந்தேன் சரணம் சரணம்
    மதுசூதனனே மனிதன் சரணம்
    இருடீ கேசா இயலான் சரணம் ! 54

    கீதா சாரிய கிருஷ்ணா சரணம்
    வேதா சாரிய வேந்தே சரணம்
    தேவகி மைந்தா சிறியேன் சரணம்
    யசோதா குமரா அடியேன் சரணம்
    உன்னை விட்டொரு உறவுகளில்லை
    என்னை விட்டொரு இனியவனில்லை
    நம்மை விட்டொரு நண்பர்களில்லை
    நன்மையில் உன்போல் நாயகனில்லை 
  2. எங்கெங் கேநான் இருந்திடும் போதும்
    அங்கங் கேநீ அருள்செய வருக
    கோசலலை ஈன்ற குமரா வருக
    கோதையின் மாலை கொண்டவன் வருக
    ரகுவம் சத்தின் நாயகன் வருக
    யதுவம் சத்தின் யாதவன் வருக
    மதுவை வென்ற மாதவன் வருக
    மலைக்குடி கொண்ட மாலவன் வருக ! 70

    திருப்பதி யாளும் திருமால் வருக
    திருவரங் கத்துப் பெருமாள் வருக
    இராவணன் கொடுமை தீர்த்தாய்; துன்பம்
    'இரா'வணம் எமக்கும் இன்னருள் புரிக
    கம்சன் கொடுமை களைந்தோய் வருக
    காலனை வெல்லக் கைவலி தருக
    நெற்றியில் திருமண் நெஞ்சில் வைரம்
    காதில் குண்டலம் கையில் வில்லொடு. 78

    தண்டைக் காலில் சலங்கை குலுங்க
    அண்டையில் வந்து அருளே புரிக
    கவுரவர் தம்மைக் களத்தில் வென்றாய்
    கவுரவம் காக்கக் கண்ணா வருக
    பார்த்தன் மகிழப் பாடம் சொன்னாய்
    படித்தவன் மகிழப் பரமே வருக
    மூன்று குணங்கள் முறையாய்க் கூறிய
    சான்றோன் பாதம் தாவி அணைத்தேன். 86

    சிக்கென உன்னைச் சேர்த்துப் பிடித்தேன்
    பக்கென உந்தன் பாதம் பற்றினேன்
    கொக்கென நின்று குறிவைத் திருந்தேன்
    அக்கணம் வந்தாய் அடியில் விழுந்தேன்
    இக்கணம் என்னை ஏங்க விடாமல்
    தக்கவ னேநீ தயவுடன் அருள்க !
    கல்லாய்ப் போனவள் காலடி பட்டு
    பெண்ணாய் ஆனது பிழையே அன்று ! 94

    உன்னால் தானே உலக இயக்கம்
    கண்ணனில் லாமல் கடல்வான் ஏது ?
    கண்ணனில் லாமல் கடவுளு மில்லை
    கண்ணனில் லாமல் கவிதையு மில்ல
    கண்ணனில் லாமல் காலமு மில்லை
    கண்ணனில் லாவிடில் காற்றே இல்லை
    எத்தனை பிறவி எத்தனை பிறவி
    அத்தனை பிறவியும் அடியேன் கொண்டால் 102

    சத்திய நாதன் தாள்களை மறவேன்
    தத்துவக் கண்ணன் தனிமுகம் மறவேன்
    உன்னை நம்பி உனையே சேர்ந்தால்
    பிறவிக ளிலை நீபேசிய பேச்சு
    உலகில் போதும் ஒருமுறை மூச்சு
    உன்னிடம் சேர்த்து உன்வடி வாக்கு
    இங்கே நாங்கள் இருக்கும் வரையில்
    சங்கு முழங்கு தர்மம் நிலைக்க ! 110

    பிள்ளைகள் வாழ்க்கை பிழையா காமல்
    மனையவள் வாழ்க்கை மாண்பு கெடாமல்
    இல்லை என்றொரு நாளில் லாமல்
    இன்னும் என்னும் ஆசை வராமல்
    தொல்லை என்பது துளியு மிலாமல்
    தொற்றும் நோய்கள் பற்றி விடாமல்
    முதுமைத் துயரம் மூண்டு விடாமல்
    படுக்கையில் விழுந்து பரிதவிக் காமல் 118

    சிந்தனை கெட்டுத் திறமையும் கெட்டு
    நிந்தனை பெற்று நீங்கி விடாமல்
    என்றும் பதினா றிளமை வழ்ங்கு
    இப்பணி தொடர அற்புதம் காட்டு
    தளரா மேனியில் சக்தியைக் கூட்டு
    தாய்போ லிருந்து சாதம் ஊட்டு
    வாழ்ந்தால் இப்படி வாழ்வது நன்றென
    ஊரார்க் கென்னை உதாரணம் காட்டு ! 126

    உலகில் ஒருவன் உத்தமன் இவனென
    உயிர்கள் பேசிடும் ஒருநிலை கூட்டு
    சிறியவர் பெரியவர் வறியவர் செல்வர்
    சரிசரி சரியெனத் தலையை அசைக்க
    பொலிபொலி பொலியெனப் புகழும் விளங்க
    மளமள மளவென மனையிருள் நீங்க
    கலகல கலவெனக் காசுகள் சேர
    தளதள தளவெனத் தர்மம் தழைக்க 134

    வரவர வரவர வாய்ப்புகள் வாய்க்க
    ரகுபதி பசுபதி நன்மைகள் அருள்க
    ஐயா சரணம் சரணம் சரணம்
    அடியவன் வாழ்வில் நீயே கவசம்
    கவசம் கவசம் கவசம் கவசம்
    வந்தது வாழ்வில் மன்னவன் கவசம்
    கவசம் கவசம் கவசம் கவசம்
    வாழ்க்கை என்றும் கோபுரக் கலசம் ! 142

    அரிஓம் அரிஓம் அரிஓம் அரிஓம்
    அவனே துணையென அறிவோம் அறிவோம்
    அரிஓம் அரிஓம் அரிஓம் அரிஓம்
    அவனிடம் எதையும் தருவோம் தருவோம்
    ஜெயஜெய ராமா ஜெயஜெய கிருஷ்ணா
    ஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய
    ஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய !