செவ்வாய், 17 ஜனவரி, 2017

மந்திர ஜெபம் செய்யும்போது பார்க்க வேண்டியவை

மந்திர ஜெபம் செய்யும்போது பார்க்க வேண்டியவை 

 உருத்திராட்சம்

உருத்திராட்சம் பயன்படுத்தி மந்திரம் சொல்லும்போது குறிப்பிட்ட விசயம் ஜெயம் பெறுவதற்காக இவற்றை பயன்படுத்தலாம்.

ஒரு முகம் - காரிய  சித்திஇருமுகம் - லட்சுமி கடாட்சம்மும்முகம் -சகல சித்திநான்கு முகம்- அறம், வீடு நல்கும்ஐந்து - பாவத்தை போக்கும்


உருத்திராட்சத்தின் அளவு


இலந்தையளவு - சுக சௌபக்கியம்நெல்லியளவு - துக்க நிவாரணம்கடலை அளவு- சகல சித்தி. பலன் வரையறுக்கு முடியாதுதானமாக உருதிராடசம் வாங்கக் கூடாது. சிறிய மணி விசேசம்


உருத்திராடசத்துடன்


பொன்மணி சேர்த்தால் செல்வம்முத்து சேர்த்தால்  புகழ்ஸ்படிகம் சேர்த்தால் சந்தான விருத்திபவளம்  - வசியகாமிவெள்ளி - வாகனகாமி


மந்திரம் சொல்ல ஏற்ற மணிகள்

சிவன் - உருத்திராட்சம்

விஷ்ணு- முத்து

ஸ்படிகம் - சூரியன்

பவளம் - சண்டிகை

தாமிரமணி- ஐய்யப்பன்


மந்திர ஜெபம் சொல்லும்போது கணக்கிட,

  • விரல்ரேகை - எட்டு பங்கு அதிகம்
  • பவளம் - ஆயிரம் மடங்கு
  • ஸ்படிகமணி- பத்தாயிரம் மடங்கு
  • முத்துமணி -இலட்சம் மடங்கு
  • தாமிரமணி - 10 லட்சம் மடங்கு
  • பொன்மணி - கோடி மடங்கு
  • உருத்திராட்சம் , தர்ப்பை முடி - கணக்கிட முடியாத பலன் தரும்.


ஜெப மாலையில் மணிகளின் எண்ணிக்கை

30 மணி - ஐஸ்வர்யம்27 மணி- சக்தி25 மணி - முக்தி15 மணி - மந்திர சித்தி


கிழக்கு பார்த்து சொன்னால் வசியம்
மேற்கு பார்த்து சொன்னால் - தனம்

மணியை உருட்டபெருவிரல் - முக்திசுட்டு விரல் - சத்துரு நாசம்மத்திம விரல் - பொருள்மோதிர விரல் - சாந்திகனிஷ்ட விரல் - யாவும் உண்டாகும்.


நம்மை பார்த்து உள் பக்கமாக மணியை உருட்டினால் நமக்கான பலன் மற்றவர்களுக்காக பிராத்திக்க  வெளிபக்கமாக உருட்டவேண்டும்.

நவகிரகங்கள்

நவகிரகங்கள்





நம்முடைய இந்து தர்மப்படி, நாம் உருவாக்கும் சட்ட திட்டத்திற்கு நாமே கட்டுப்பட வேண்டும். அதாவது இறைவனுக்கும் ஜென்ம நட்சத்திரம் உண்டு என்ற வகையில் அவரும் நவக்கிரகங்களுக்கு கட்டுப்பட்டாக வேண்டும் என்ற வாதமும் உள்ளது. கடவுளுக்கு எவ்வாறு நட்சத்திரம், ராசி கணிக்கிறீர்கள்? அது அவர்களுடைய பிறந்த நாள் என்று ஏதும் இல்லையாதலால், அவதரித்த நாளைக்கொண்டு நட்சத்திரத்தை கணித்துள்ளனர். சிவபெருமான் ருத்திர அவதாரமெடுத்ததை அடிப்படையாக்க்கொண்டு அவருக்கு திருவாதிரை நட்சத்திரம் அளிக்கப்பட்டுள்ளது. அதே போல சிவனுக்கு நேரம் கெட்டிருந்தபோது அவர் பிச்சையெடுத்த கதையெல்லாம் உள்ளது. இப்படித்தான் ராமனுக்கு நவமியும், கிருஷ்ணனுக்கு அஷ்டமியும் உள்ளது. நவகிரகங்களை வழிபடும் முறை: நவகிரகங்களை வழிபடுவது நல்லது என்றாலும், எந்த ஒரு கோயிலிற்குச் சென்றாலும் மூலவரை வழிபடாமல் வெறும் நவகிரக வழிபாட்டை மற்றும் மேற்கொள்வது தவறானது. முழு முதற் கடவுளான விநாயகரை வழிபட்ட பின்னர், அந்த கோயிலின் மூலவரை வணங்கி விட்டு, இறுதியாகவே நவகிரக வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். இதுவே சிறந்த பலன்களை அளிக்கும். மூலவரை வழிபடாமல் நவகிரங்கங்களை மட்டும் வழிபடுவது எதிர்மறையான பலன்களையே கொடுக்கும்.


நவக்கிரகங்களும், வழிபாட்டுத் தலங்களும்



நாள்: ஞாயிறு கிரகம்: சூரியன்

ஸ்தலம்: சூரியனார் கோவில்
நிறம்: சிவப்பு
தானியம்: கோதுமை
வாகனம்: ஏழு குதிரை பூட்டிய தேர்
மலர்: செந்தாமரை
உலோகம்: தாமிரம்
ராசிகற்கள்: மாணிக்கம்
பலன்கள்: காரிய சித்தி.

நாள்: திங்கள் கிரகம்: சந்திரன்

ஸ்தலம்: திங்களூர்
நிறம்: வெள்ளை
தானியம்: அரிசி
வாகனம்: வெள்ளை குதிரை
மலர்: வெள்ளரளி
உலோகம்: ஈயம்
ராசிகற்கள்: முத்து
பலன்கள்: தடங்கல் நீங்கும், முன்னேற்றம் ஏற்படும்.

கிரகம்: செவ்வாய் நாள்: செவ்வாய் 

ஸ்தலம்: வைதீஸ்வரன் கோவில்
நிறம்: சிவப்பு
தானியம்: துவரை
வாகனம்: ஆட்டுக்கடா
மலர்: செண்பகம்
உலோகம்: செம்பு
ராசிகற்கள்:பவழம்

பலன்கள்: பகைவர்களை வெற்றி கொள்ளுதல், சகல சாஸ்திர ஞானம்


கிரகம்: ராகு --- செவ்வாய் கிழமை
 

ஸ்தலம்: திருநாகேஸ்வரம்
நிறம்: கரு நிறம்
தானியம்: உளுந்து
வாகனம்: ஆடு
மலர்: மந்தாரை
உலோகம்: தாமிரம் மற்றும் கருங்கல் 
ராசிகற்கள்: கோமேதகம்
பலன்கள்: எந்த காரியத்திலும் ஜெயம் அடைதல்




கிரகம்: புதன் நாள்: புதன்

ஸ்தலம் : திருவென்காடு
நிறம்: பச்சை
தானியம்: பச்சைபயிர்
வாகனம்: குதிரை
மலர்: வெண்காந்தல்
உலோகம்:பித்தளை
ராசிகற்கள்: மகரந்தம்
பலன்கள்: சகல சாஸ்திரம் மற்றும் ஞானம்


கிரகம்: குரு நாள்: வியாழன்

ஸ்தலம்: ஆலங்குடி
நிறம்: மஞ்சள்
தானியம்: கொண்டை கடலை
வாகனம்: அன்னம்
மலர்: வெண்முல்லை
உலோகம்: பொன்
ராசிகற்கள்: புஷ்பராகம்
பலன்கள்: சகல சம்பந்துக்கள், மற்றும் வித்தைகள் தேர்ச்சி

கிரகம்: சுக்கிரன் நாள்: வெள்ளிh

ஸ்தலம்: ://image.wikifoundry.com/image/1/PL8xMSeKIn17T73t5wVYig27272 
நிறம்: வெள்ளை
தானியம்: மொச்சை
வாகனம்: கருடன்
மலர்: வெண்தாமரை
உலோகம்: வெள்ளி 
ராசிகற்கள்: வைரம்
பலன்கள்: விவாகம் மற்றும் பிராப்தம் செளபாக்கியம் மலட்டுத்தன்மை நீங்கும்

ராசிகற்கள்: வைரம்
பலன்கள்: விவாகம் மற்றும் பிராப்தம் செளபாக்கியம் மலட்டுத்தன்மை நீங்கும்

கிரகம்: சனி நாள்: சனி

ஸ்தலம்: திருநள்ளாறு
நிறம்: கருப்பு
தானியம்: எள்
வாகனம்: காகம்
மலர்: கருங்குவளை
உலோகம்: இரும்பு

ராசிகற்கள்: நீலம்
பலன்கள்: வியாதிகள், பயம், மற்றும் தீராத கடன்கள் நீங்கும்


கிரகம்: கேது -சனிக்கிழமை 

ஸ்தலம்: கீழ்பெரும் பள்ளம்
நிறம்: பல நிறம்
தானியம்: கொள்ளு
வாகனம்: சிங்கம்
மலர்: செவ்வள்ளி
உலோகம்: கருங்கல்

ராசிகற்கள்: வைடூரியம்
பலன்கள்: வறுமை, வியாதிகள் நீங்கும்.











108-ம் அதன் சிறப்புக்களும்

108-ம் அதன் சிறப்புக்களும்

படைத்த கடவுளுக்கும் அவனது படைப்புக்கும் உள்ள தொடர்பை விளக்கும் எண்ணாக 108 திகழ்கிறது என்கிறார்கள். பிரார்த்தனை, வேண்டுதல் என்று அன்றாடம் நாம் 108 என்று எண்ணைப் பயன்படுத்துகிறோம், அதற்கு இதோ ஒரு சில உதாரணங்கள்.
* வேதத்தில் 108 உபநிடதங்கள்.
* பஞ்சபூதத் தலங்கள், அறுபடை வீடுகள் என்பதுகோல சைவ, வைணவ திவ்ய ÷க்ஷத்திரங்கள் 108.
* பிரபஞ்ச அமைப்பில், பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் சந்திரனின் விட்டத்தைப் போல் 108 மடங்கு.
* பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் சூரியனின் விட்டத்தைப் போல 108 மடங்கு.
* நடராஜரின் கரணங்கள் 108. தாளங்கள் 108
* அர்ச்சனையில் 108 நாமங்கள்
* அரமரத்தையும் பல தெய்வங்களையும் வலம் வருவது 108 முறை.
* சூரியனின் விட்டம் பூமியில் விட்டத்தைப் போல 108 மடங்கு.
ஒர் எண் சிறப்பான இடம் பெறும்போது அதே எண்ணிக்கையில் பல விஷயங்களும் அமைகின்றன.
* தாவோ தத்துவத்தில் 108 தெய்வீக நட்சத்திரங்கள்.
* திபெத்திய புத்த சமயப் பிரிவில் பாவங்களின் எண்ணிக்கை 108
* ஜப்பானிய ஷிண்டோ சமயத்தில் புது வருடம் 108 மணி ஓசைகளால் வரவேற்கப்படும். இந்த ஓசை 108 வகை மனத் தூண்டுதல்களை நாம் வெற்றி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.
* மகா நிர்வாணத்தை அடைய 108 படிகள் உள்ளதாக புத்தமதம் கூறுகிறது.
* முக்திநாத் ÷க்ஷத்திரத்தில் 108 நீரூற்றுக்கள்.
* உத்தராகண்டில் ஜோகேஸ்வரர் சிவன் கோவிலில் 108 சிவசந்நிதிகள்.
* உடலில் 108 மர்ம ஸ்தானங்கள் என வர்மக்கலை கூறுகிறது.
* குங்ஃபூ கலை உடலில் 108 அழுத்தப் புள்ளிகள் இருப்பதாகக் கூறுகிறது.
* மனித மனதின் ஆசைகளும் 108 விதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
* சீக்கிய குருமார்கள் 108 முடிச்சுகள் உள்ள கம்பளி ஜபமாலையையே பயன்படுத்துவார்கள்.
* 108 சக்தி நாடிகள் உடலின் பல்வேறு பாகங்களிலிருந்து இருதய ஸ்தானத்தில் குவிவதாக தந்திர சாஸ்திரம் கூறுகிறது.
108 என்பது வரையறைக்குட்பட்ட எண்ணாக இருந்து கொண்டு வரம்பற்ற நிலையை உணர்த்துகிறது.
"1 என்பது கடவுளை அல்லது உயர் உண்மையையும் "0 என்பது சூன்யத்தை அல்லது ஆன்மிகச் சாதனையில் முழுமையையும், 8 என்பது எட்டுத் திக்குகளிலும் உள்ள எல்லையற்ற ஆகாயத்தையும் குறிக்கும்.

ஜபமாலையில் 108 மணிகள் ஏன்?
ஜபமாலையில் 108 அல்லது 54 அல்லது 27 மணிகள் கொண்ட மாலைகளும் உண்டு. இந்த எண்ணிக்கைகளைக் கூட்டினால் ஒன்பது வருகிறது. (1+0+8: 5+4 : 2+7)
மனிதன் ஒரு நாளில் 21,600 முறை மூச்சு விடுகிறான். தூக்கத்திற்காகவும், உடலைப் பேணுவதற்கான காரியங்களுக்காகவும் அதில் பாதியைக் கழித்தால் உணர்வுடன் வேலை செய்யும் போது10800 முறை மூச்சு விடுகிறான். 108 என்பது இதையே உணர்த்துகிறது. ஒவ்வொரு மூச்சுக்கும் ஒரு தடவை மந்திரம் உச்சரிக்கப்பட வேண்டும் என்ற லட்சியத்தை நினைவுபடுத்தவே இந்த 108 எண்ணிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ஜபமாலை என்பது ஜபம் செய்யும் போது எண்ணிக்கையை கணக்கிட உதவுகிறது. கைவிரல்களால் ஜபத்தை பண்ண முடிந்தாலும், ஜப மாலையினால் செய்வது எளிது. ஜபமாலையில் மணிகள் பொதுவாக பத்து விதமான பொருட்களால் செய்யப்படுகின்றன. அவைகளில் ருத்திராட்சம், உலர்ந்த துளசித்துண்டு, தாமரை விதை, சந்தனம், ஸ்படிகம் ஆகியவை அதிகம் பயன்படுத்தப்படுபவை.

ராஜராஜேஸ்வரி ஸ்தோத்திரம்

ராஜராஜேஸ்வரி ஸ்தோத்திரம் 


1. ஸ்ரீ சக்ர வாஸி நி ஸ்ரீ தேவி நமஸ்தே
சிவகாமசுந்தரி ஸ்ரீ தேவி நமஸ்தே
ஸ்ரீ கிருஷ்ண ஸோதரி ஸ்ரீ தேவி நமஸ்தே
ராஜராஜேஸ்வரி ஸ்ரீ தேவி நமஸ்தே

2. பத்மதளலோசனி ஸ்ரீதேவி நமஸ்தே
பக்தபரிபாலினி ஸ்ரீதேவி நமஸ்தே
பர்வத வர்த்தினி ஸ்ரீதேவி நமஸ்தே
ராஜராஜேஸ்வரி ஸ்ரீதேவி நமஸ்தே

3. கருணாவிலாஸினி ஸ்ரீதேவி நமஸ்தே
காத்யாயினி கௌரி ஸ்ரீதேவி நமஸ்தே
கதம்பவன வாஸினி ஸ்ரீதேவி நமஸ்தே
ராஜராஜேஸ்வரி ஸ்ரீதேவி நமஸ்தே

4. சக்தி பரமேஸ்வரி ஸ்ரீதேவி நமஸ்தே
சம்புண மோஹினி ஸ்ரீதேவி நமஸ்தே
சங்கரி மஹேஸ்வரி ஸ்ரீதேவி நமஸ்தே
ராஜ ராஜேஸ்வரி ஸ்ரீதேவி நமஸ்தே

5. அன்னபூர்ணேஸ்வரி ஸ்ரீதேவி நமஸ்தே
அகிலாண்ட நாயகி ஸ்ரீதேவி நமஸ்தே
அபயப்ரதாயினி ஸ்ரீதேவி நமஸ்தே
ராஜராஜேஸ்வரி ஸ்ரீதேவி நமஸ்தே

6. ஸத்யஸ்வரூபிணி ஸ்ரீதேவி நமஸ்தே
ஸத்குருரூபிணி ஸ்ரீதேவி நமஸ்தே
தர்மஸ்வரூபிணி ஸ்ரீதேவி நமஸ்தே
ராஜராஜேஸ்வரி ஸ்ரீதேவி நமஸ்தே

7. அகண்ட பரிபூரணி ஸ்ரீதேவி நமஸ்தே
ஆதிபராசக்தி ஸ்ரீதேவி நமஸ்தே
அகில பரிபாலிணி ஸ்ரீதேவி நமஸ்தே
ராஜராஜேஸ்வரி ஸ்ரீதேவி நமஸ்தே

8. அனாதரக்ஷகி ஸ்ரீதேவி நமஸ்தே
ஸெளபாக்கிய தாயினி ஸ்ரீதேவி நமஸ்தே
ஸந்தான பலப்ரதே ஸ்ரீதேவி நமஸ்தே
ராஜராஜேஸ்வரி ஸ்ரீதேவி நமஸ்தே

9. பாஹி புவனேஸ்வரி ஸ்ரீதேவி நமஸ்தே
ஸ்ரீ வித்யா ரூபிணி ஸ்ரீதேவி நமஸ்தே
சக்தி ஸ்ரீ சாரதே ஸ்ரீதேவி நமஸ்தே
ராஜ ராஜேஸ்வரி ஸ்ரீதேவி நமஸ்தே


திங்கள், 16 ஜனவரி, 2017

நன்மை தரும் சுதர்சனஹோமம்!

ஆன்மீக அன்பர்களுக்கு என்  இனிய காலை வணக்கங்கள்.எல்லோரும் இன்பமாக வாழ இறைவனை பிராத்திக்கின்றேன்.என் பதிவை காணவந்த அத்தனை தோழிகளுக்கும் என் நன்றிகள் பல.

  நன்மை  தரும்  சுதர்சனஹோமம்!


ஸ்ரீசுதர்சனரின் மூல மந்திரத்தை 12 லட்சம் தடவை உச்சரித்து ஒருவர் ஹோமம் செய்தால் இந்த மந்திரத்துக்கு உண்டான ஸித்தி கிடைக்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்.


ஸுதர்சன ஹோமம் ஏன் செய்ய வேண்டும்.,? அதன் பலன்கள் என்ன.,?

ஸுதர்சன ஹோமம் செய்யும்போது ஸுதர்சன சக்ரத்தின் தேவதை.,ஸ்ரீநரசிம்மர்.,ஸ்ரீதன்வந்திரி என்று பல்வேறு தேவதைகள் பூஜிக்கப் படுகின்றனர்.,இதனால் நமக்குக் கிடைக்கும் பயன்கள் ஏராளம்.,

நாம் வேண்டிக்கொள்ளும் நல்ல விஷயங்கள் நிறைவேறும்.,ஐஸ்வர்யம் ( தனம்.,செல்வம் அபிவிருத்தி) )ஏழ்மை விலகுதல் .,வியாதி ( ரோக ) நிவாரணம்.,மன நிம்மதி.,(துக்க நிவாரணம் ) .,எடுத்த கார்யத்தில் வெற்றி., ஆகிய பலன்கள் கிடைக்கின்றன.,நமது முயற்சிக்கு ஏற்படும் தடங்கல்கள் நீங்கும்.,தொல்லைகள் நீங்கும்,.,எதிரிகளால் நமக்கு ஏற்படும் கஷ்டங்கள் விலகும்.,

ஸுதர்சன ஹோமத்தால் இவை எல்லாம் எப்படி சாத்தியமாகிறது.,?ஏனெனில் சுதர்சன சக்ரமும்., அதன் தேவதையும்., அதன் எஜமானன் ஸ்ரீமன்நாராயணனும்., அபரிமிதமான் சக்தி வாய்ந்தவர்கள்.,இது ஒரு மிகுந்த சக்தி வாய்ந்த ஹோமம்.,இந்த மந்திரங்களில் பீஜாக்ஷரங்கள் அடங்கியுள்ளன


எள், கடுகு, தாமரைப்பூ, வில்வ இலை, பால் பாயசம் ஆகிய ஒவ்வொன்றையும் கொண்டு, குறிப்பிட்ட (ஆயிரம் ஆயிரமாக எண்ணிக்கையில் அந்த மந்திரத்தை உளமார உச்சரித்து ஜபிக்க வேண்டும். முழு மனதோடு மிகுந்த முயற்சியுடன் செயல்பட்டால்தான் கிடைக்கிற பலன் முழு அளவில் இருக்கும்.



இருவகை ஹோமங்கள் 

 ஒன்று- காம்ய ஹோமம்; மற்றொன்று - நைமித்திக ஹோமம். செல்வம், உடல் நலம் போன்ற வளங்களைப் பெறும் பொருட்டு, வீட்டிலேயே செய்யும் ஹோமங்கள், காம்ய ஹோமம் எனப்படும்!

அடுத்த வகையான நைமித்திக ஹோமத்தை உலக நலனுக்காகவும் அமைதிக்காகவும் பொதுவான ஓர் இடத்தில் செய்வார்கள். நாட்டில் சுபிட்சம் நிலவவும் மழை வேண்டியும் கோயில் மாதிரியான பொது இடங்களில் பலர் முன்னிலையில் இத்தகைய ஹோமங்களைச் செய்வார்கள்.

ஹோமங்களை எந்த அளவுக்கு நாம் சிரத்தையாகப் பண்ணுகிறோம் என்பதை வைத்து பகவான் அனுக்கிரஹம் செய்வார். பகவத் கீதையில், 'நீ என்னை நினைத்தால் நான் உன்னை நினைப்பேன்' என்கிறார் பகவான் ஸ்ரீகிருஷ்ணர். வீட்டில் ஏதேனும் ஹோமங்கள் நடத்தப்படும்போது ஹோமம் செய்பவரின் சிந்தனையும் மனமும் ஹோமத்திலேயே லயித்திருக்க வேண்டும். வேறு எந்தச் சிந்தனையும் வந்து இடையூறு செய்யக் கூடாது. சிலர் மனசால் நினைத்து ஹோமம் செய்த மாத்திரத்திலேயே பகவான் வந்தது உண்டு. அக்னியிலேயே ஜோதி ஸ்வரூபமாக பகவானைச் சிலர் பார்க்கலாம்.

ப்ரஜேதஸ் என்பவனின் குமாரர்கள் பத்தாயிரம் வருடம் தொடர்ந்து தவம் இருந்தனர். பகவான் வரவே இல்லை. இந்த தவத்தைக் கண்டு பகவான் சந்தோஷம் அடைந்தாரே தவிர, உடனடியாக அவர்களுக்குக் காட்சி தரவில்லை. காரணம், அந்த நேரத்தில் அவர்களுக்குத் தன் உதவி தேவை இல்லை என்று பகவான் முடிவு செய்து விட்டார். யார் யாருக்கு, எப்போது தனது அனுக்கிரஹம் தேவை என்பதையும் கடவுளே தீர்மானிப்பார். இந்தத் தவத்துக்குப் பிறகு ஒரு கட்டத்தில் ப்ரஜேதஸின் குமாரர்களுக்கு பகவான் வந்து காட்சி தந்ததாக ஒரு கதை உண்டு.

வாழ்வில் பல நன்மைகளைப் பெறுவதற்கு நாம் ஸ்ரீசுதர்சன ஹோமம் செய்வது அவசியம். இதன் பலன்கள் ஏராளம். பொதுவாக, பல வகையான ஹோமங்கள், ஏதோ குறிப்பிட்ட ஒரு நற்பலனை உத்தேசித்து மட்டுமே செய்யப்படுபவை. ஆனால், ஸ்ரீசுதர்சன ஹோமம் பல நற்பலன்களைக் கொடுக்க வல்லது.

இந்த ஹோமத்தில் ஸ்ரீசுதர்சனரின் மூல மந்திரம், காயத்ரி மந்திரம் இவற்றைச் சொல்லி ஹோமம் செய்ய வேண்டும். எந்த மந்திரத்தைச் சொல்ல வேண்டும் என்று வேத விற்பன்னர் அறிவுறுத்துவார்.

தீர்க்க ஆயுசு நிச்சயம்!

பூரண ஆயுள் கிடைக்கவும், நினைத்தது நிறைவேறவும் அருகம்புல்லை பசும்பாலில் முக்கி எடுத்து அதை அப்படியே அக்னியில் போட்டு பத்தாயிரம் தடவை ஹோமம் செய்ய வேண்டும். இதனால் நீண்ட ஆயுளைப் பெறலாம்!

அஷ்ட ஐஸ்வர்யம்! 

தாமரைப்பூவை நெய்யில் முக்கி எடுத்து, அதை அப்படியே அக்னியில் போட்டு பத்தாயிரம் தடவை ஹோமம் செய்ய வேண்டும். இதனால் இல்லத்தில் அஷ்ட ஐஸ்வரியங்களையும் பெற்று இனிதே வாழலாம்!

புத்தியில் தெளிவு!

ஷமதப்பூவை (ஒரு வகையான பூ) நெய்யில் முக்கி எடுத்து, அக்னிக்குச் சமர்ப்பித்து பத்தாயிரம் தடவை ஹோமம் செய்ய வேண்டும். இதனால் ஞாபக சக்தி அதிகரிக்கும். ஞானம் பெறலாம். புத்தியில் தெளிவு பிறக்கும்!

இனி ஆபத்து இல்லை!

குக்குலு (கோலிக்குண்டு மாதிரி உருண்டையாக இருக்கும்) என்கிற ஹோமப் பொருளை அக்னியில் சமர்ப்பித்து ஆயிரத்தெட்டு தடவை ஹோமம் செய்ய வேண்டும். இதனால், ஆபத்து சம்பத்துக் காலங்களில், கடவுள் சக்தி துணை நின்று காத்தருளும். ஸ்ரீசுதர்சனம் அருள்பாலிக்கும்!

பசு விருத்தி!

கிண்ணம் போல் மடிக்கப்பட்ட ஒரு மாவிலையில் நெய் எடுத்துக் கொண்டு பத்தாயிரம் தடவை ஹோமம் செய்ய வேண்டும். இதனால் வீட்டில் உள்ள பசு அதிகம் பால் சுரக்கும். பசுவை எந்த நோயும் அண்டாது. பசு விருத்தியாகும்!

எதிரிகள் தொல்லை!

திங்கட் கிழமையில் ஆரம்பித்து ஒரு மண்டலம் வரை (41 நாட்கள்) இந்த ஹோமம் செய்ய வேண்டும். நெய்யை அக்னியில் விட்டு இந்த ஹோமத்தைச் செய்ய எதிரிகள் தொல்லை ஒழியும்! இதேபோல், நாயுருவி சமித்தை நெய்யில் முக்கி எடுத்து பத்தாயிரம் தடவை ஹோமம் செய்ய வேண்டும்.

மன நலம் குணமாகும்!

கருநொச்சி, இருமுள், நீல ஊமத்தம்பூ, வெள்ளை பிளாச்சு இவற்றைக் கொண்டு மூவாயிரம் தடவை ஹோமம் செய்ய வேண்டும். ஒரு மண்டல காலம் இதைத் தொடர்ந்து செய்து வந்தால், புத்தி பேதலித்தவர்கள் நலம் பெறுவார்கள். விரைவில் மனோபலம் பெறலாம்.

தீராத நோயும் தீரும்!

பஞ்சகவ்யம் உருவாக்கி நாயுருவியால் பத்தாயிரம் தடவை ஹோமம் செய்ய வேண்டும். இந்த ஹோமம் முடிந்ததும் ஹோமத்தின் சாம்பலை தயிருடன் கலந்து வீட்டைச் சுற்றி பத்துத் திக்குகளிலும் வீசி எறிய வேண்டும் (எட்டுத் திசைகள் தவிர, ஆகாயம், பூமி ஆகிய இரண்டும் சேர்த்து பத்துத் திசைகள் என்பது கணக்கு). கேன்சர், சர்க்கரை வியாதி போன்ற கண்ணுக்குத் தெரியாத நோய்கள் நீங்கும் என்பது ஐதீகம்!

கோபம் தணியும்!

ஆல மர சமித்தைக் கொண்டு இந்த ஹோமம் செய்ய வேண்டும். பால், நெய், சர்க்கரைப் பொங்கல் இவற்றை இந்த சமித்து மூலம் எடுத்து அக்னியில் விட்டு ஹோமம் செய்ய வேண்டும். ஒவ்வொன்றையும் தனித் தனியாக நான்காயிரம் தடவை செய்ய வேண்டும். இந்த ஹோமம் செய்வதன் மூலம் கோபத்தை முற்றிலுமாகக் குறைக்கலாம். குருவை அவமதித்த பாவம், சாதுக்களைத் திட்டிய சாபம், பெரியவர்களை மதிக்காமல் போன பாவம் நீங்குவதற்கும் இந்த ஹோமத்தின் மூலம் பரிகாரம் தேடிக் கொள்ளலாம்.

சுகப் பிரசவம் உறுதி!

கலசத்தில் நீரை நிரப்பி, சுதர்சனரை ஆவாஹனம் செய்ய வேண்டும். இந்தக் கலச நீரைக் கொண்டு தொடர்ந்து ஏழு நாட்களுக்கு பிரசவம் ஆக வேண்டிய பெண்மணிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.

சுபிட்சமும் வளமும் தரும் சுதர்சன ஹோமத்தைச் செய்யுங்கள். வீடும் நாடும் நலம் பெறட்டும்! 


நன்றி வணக்கம்.

வெள்ளி, 13 ஜனவரி, 2017

புகழ்பெற்ற திருக்கோவில் பிரசாதங்கள்

    புகழ்பெற்ற திருக்கோவில்  பிரசாதங்கள்


புகழ்பெற்ற திருக்கோயில் பிரசாதங்கள் என்றால் திருப்பதி லட்டுவும், பழநி பஞ்சாமிர்தமுமே பெரும்பாலானோருக்குத் தெரிந்தவை. இவை மட்டுமின்றி, இன்னும்பல தலங்களின் பிரசாதங்களும் பிரசித்திப் பெற்றவையே. அவை:

பிள்ளையார்பட்டி - கொழுக்கட்டை

உப்பிலியப்பன் கோவில் - உப்பில்லாத பிரசாதங்கள்

ஸ்ரீமுஷ்ணம் - கோரைக்கிழங்கு

ஸ்ரீரங்கம் - திருமால்வடை



சுசீந்திரம் - வடை

சபரிமலை - அரவணை பாயசம்

திருப்புல்லாணி - பாயசம்

காஞ்சிபுரம் - குடலை இட்லி

வைத்தீஸ்வரன்கோவில் -  தினை மாவு

திருச்செந்தூர் - அரிசிப்புட்டு

திருவல்லிக்கேணி - திருக்கண்ணமுது

சிதம்பரம் - களி

அழகர் கோயில் - தோசை


ஆழ்வார் திருநகரி - வங்கார தோசை

செவ்வாய், 3 ஜனவரி, 2017

அன்னபூரணி விரதம்



அன்னபூரணி விரதம் 


விரதங்களில் மிக முக்கியமான விரதம் அன்னபூரணி விரதமாகும்.மகத்தான சக்தி கொண்ட விரதம் இது.சிவபெருமானே ஞானத்துக்காக அன்னபூரணியிடம் வேண்டி நின்றிருக்கிறார்.இதிலிருந்து அன்னபூரணியின் மகிமையை அறிந்து கொள்ளலாம்.

அன்னபூரணி விரதம் முக்கியமாக தீபாவளி சமயம்வரும்  3 தினங்களிலும்,ஒவ்வொரு மாதத்திலும் வரும் வெள்ளிக்கிழமைகள்,மகா சிவராத்திரிக்கு மறுநாள்,ஸ்ரீ ராம நவமிக்கு முதல்நாள் வரும் அஷ்டமி தினம் போன்ற நாட்களில் விரதமிருந்து அன்னபூரணியை பூஜிப்பது நல்லது.வாழ்வில் மேலும் மேலும் கஷடங்கள் வந்து கொண்டிருக்கும் குடும்பத்தினர் 48நாட்கள் தொடர்ந்து அன்னபூரணியை வேண்டி விரதமிருந்து பூஜித்து வந்தால் நிச்சயமாக துன்பங்கள் தீரும்.


அன்னபூரணி விரதம் இருக்கும் முறை 

அன்னபூரணி விரதம் இருப்பவர்கள் காலையில் நீராடி மனத்தூய்மையுடன் அன்னபூரணியை வேண்டி தங்களது துயரம் தீர பிராத்தனை செய்து கொள்ள வேண்டும்.மாலை வரை பூரண விரதம் அனுஷ்டிக்க வேண்டும்.பசி தாங்காதவர்கள்,நோயாளிகள் மட்டும் சிறிது பால் அருந்தலாம்.மாலை 6 மணியளவில் பூஜையை மேற்கொள்ள வேண்டும். இப்பூஜையில் அன்னபூரணி விக்கிரகம் வைப்பது முக்கியம்.பூஜை செய்பவர்கள் வெண்பட்டு அல்லது கோதுமை நிற நூல்புடவை உடுத்தி கொண்டு பூஜை செய்ய வேண்டும்.
பூஜை செய்யும் இடத்தை சுத்தம் செய்து,அங்கு பச்சரிசியினால் மாக்கோலமிட வேண்டும்.

மனைப்பலகையைக் கிழக்கு நோக்கி வைத்து அதன்மேல் பித்தளைப்படியில் அரிசியை வைத்து,அதன்மேல் அன்னபூரணி விக்கிரகத்தை வைக்க வேண்டும்.வடஇந்தியர்கள் அரிசிமீது கோதுமை வைத்து செய்வர்.அன்னபூரணி சிலைக்கு ஆடை உடுத்தி ,கருகமணியை மஞ்சள்சரடியில் கோர்த்து அணிவிக்க வேண்டும்.5வகையான வாசனைமிகு மலர்களால் மாலை கட்டி போடவேண்டும்.பூஜை செய்பவர் வடக்கு பார்த்து பலகையில் அமர்ந்து செய்ய வேண்டும்.பச்சரிசி மாவினால் 16விளக்குகள் செய்து சுற்றிலும் வைத்து தீபமேற்றவும்.


முதலில் விநாயக பெருமானை வணங்கி விட்டு,பிறகு அன்னபூரணியை வணங்க வேண்டும்.அட்சதை,புஷபங்களை கையில் எடுத்து மனமுருக பிராத்தித்து சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும்.பிறகு 16வகை [ஷோடச]உபசாரம்செய்து,மலர்போட்டு அன்னபூரணிக்குரிய 108நாமாவளியை சொல்லி வழிபட வேண்டும்.இறுதியில் பஞ்சதீபம் காட்டவும்.

நைவேத்தியம்

அன்னபூரணிக்கு பிடித்த உணவு பாயாசம்.எந்தவிதமான பாயாசமாகவும் இருக்கலாம்.உலர் பழவகை,வாழைப்பழம்,கற்கண்டு வைத்து வழிபடலாம்.



தாம்பூலத்தின் மீது அதிக விருப்பமுடையவள்.எனவே,தாம்பூலம் வைத்து வழிபட வேண்டும்.


இச்சா சக்தி,ஞானசக்தி,கிரியா சக்தியாக அன்னபூரணி திகழ்கிறாள்.அவளிடம் நம்முடைய சரீரத்தில் உள்ள முக்குணங்களின் தோஷங்களையும் நீக்க வேண்டி 3தீபங்கள் ஏற்றி வழிபட வேண்டும்.கைநிறைய மலர்களை அள்ளி எடுத்து அம்பிகையின்  பாதங்களில் சமர்ப்பித்து 4முறை நமஸ்கரிக்க வேண்டும்.


அன்னபூரணி அஷ்டகம்,அன்னபூரணா பஞ்சரத்னம் சொல்லலாம்.சொல்ல தெரியாதவர்கள் மனத்தில் அன்னையை நினைத்து மனமுருகி வேண்டி கொள்ளலாம்.நைவேத்தியம் வைத்து கற்பூரம் காட்டி,வழிபட்ட பிறகு உணவு உட்கொண்டு விரத்தை முடிக்கலாம்.நாம் கேட்டும் அனைத்து நியாயமான கோரிக்கைக்களையும் நிறைவேற்ற காத்துக் கொண்டு இருக்கிறாள் நம் அன்னை.  

நாமும் அன்னபூரணி விரதம் இருந்து அன்னையை பிராத்தித்து வேண்டிய வரத்தை பெறுவோம்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்தை தெரிவிக்கவும்.