விரதங்களில் மிக முக்கியமான விரதம் அன்னபூரணி விரதமாகும்.மகத்தான சக்தி கொண்ட விரதம் இது.சிவபெருமானே ஞானத்துக்காக அன்னபூரணியிடம் வேண்டி நின்றிருக்கிறார்.இதிலிருந்து அன்னபூரணியின் மகிமையை அறிந்து கொள்ளலாம்.
அன்னபூரணி விரதம் முக்கியமாக தீபாவளி சமயம்வரும் 3 தினங்களிலும்,ஒவ்வொரு மாதத்திலும் வரும் வெள்ளிக்கிழமைகள்,மகா சிவராத்திரிக்கு மறுநாள்,ஸ்ரீ ராம நவமிக்கு முதல்நாள் வரும் அஷ்டமி தினம் போன்ற நாட்களில் விரதமிருந்து அன்னபூரணியை பூஜிப்பது நல்லது.வாழ்வில் மேலும் மேலும் கஷடங்கள் வந்து கொண்டிருக்கும் குடும்பத்தினர் 48நாட்கள் தொடர்ந்து அன்னபூரணியை வேண்டி விரதமிருந்து பூஜித்து வந்தால் நிச்சயமாக துன்பங்கள் தீரும்.
அன்னபூரணி விரதம் இருக்கும் முறை
அன்னபூரணி விரதம் இருப்பவர்கள் காலையில் நீராடி மனத்தூய்மையுடன் அன்னபூரணியை வேண்டி தங்களது துயரம் தீர பிராத்தனை செய்து கொள்ள வேண்டும்.மாலை வரை பூரண விரதம் அனுஷ்டிக்க வேண்டும்.பசி தாங்காதவர்கள்,நோயாளிகள் மட்டும் சிறிது பால் அருந்தலாம்.மாலை 6 மணியளவில் பூஜையை மேற்கொள்ள வேண்டும். இப்பூஜையில் அன்னபூரணி விக்கிரகம் வைப்பது முக்கியம்.பூஜை செய்பவர்கள் வெண்பட்டு அல்லது கோதுமை நிற நூல்புடவை உடுத்தி கொண்டு பூஜை செய்ய வேண்டும்.
பூஜை செய்யும் இடத்தை சுத்தம் செய்து,அங்கு பச்சரிசியினால் மாக்கோலமிட வேண்டும்.
மனைப்பலகையைக் கிழக்கு நோக்கி வைத்து அதன்மேல் பித்தளைப்படியில் அரிசியை வைத்து,அதன்மேல் அன்னபூரணி விக்கிரகத்தை வைக்க வேண்டும்.வடஇந்தியர்கள் அரிசிமீது கோதுமை வைத்து செய்வர்.அன்னபூரணி சிலைக்கு ஆடை உடுத்தி ,கருகமணியை மஞ்சள்சரடியில் கோர்த்து அணிவிக்க வேண்டும்.5வகையான வாசனைமிகு மலர்களால் மாலை கட்டி போடவேண்டும்.பூஜை செய்பவர் வடக்கு பார்த்து பலகையில் அமர்ந்து செய்ய வேண்டும்.பச்சரிசி மாவினால் 16விளக்குகள் செய்து சுற்றிலும் வைத்து தீபமேற்றவும்.
முதலில் விநாயக பெருமானை வணங்கி விட்டு,பிறகு அன்னபூரணியை வணங்க வேண்டும்.அட்சதை,புஷபங்களை கையில் எடுத்து மனமுருக பிராத்தித்து சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும்.பிறகு 16வகை [ஷோடச]உபசாரம்செய்து,மலர்போட்டு அன்னபூரணிக்குரிய 108நாமாவளியை சொல்லி வழிபட வேண்டும்.இறுதியில் பஞ்சதீபம் காட்டவும்.
நைவேத்தியம்
Very well explained. Thank you
பதிலளிநீக்குthank u sri
நீக்குsee my YouTube channel Tamilnattu samayal this channel is related to god subscribe and support my channel
நீக்கு