ஆன்மீக அன்பர்களுக்கு என் இனிய காலை வணக்கங்கள்.எல்லோரும் இன்பமாக வாழ இறைவனை பிராத்திக்கின்றேன்.என் பதிவை காணவந்த அத்தனை தோழிகளுக்கும் என் நன்றிகள் பல.
நன்மை தரும் சுதர்சனஹோமம்!
ஸ்ரீசுதர்சனரின் மூல மந்திரத்தை 12 லட்சம் தடவை உச்சரித்து ஒருவர் ஹோமம் செய்தால் இந்த மந்திரத்துக்கு உண்டான ஸித்தி கிடைக்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்.
ஸுதர்சன ஹோமம் ஏன் செய்ய வேண்டும்.,? அதன் பலன்கள் என்ன.,?
ஸுதர்சன ஹோமம் செய்யும்போது ஸுதர்சன சக்ரத்தின் தேவதை.,ஸ்ரீநரசிம்மர்.,ஸ்ரீதன்வந்திரி என்று பல்வேறு தேவதைகள் பூஜிக்கப் படுகின்றனர்.,இதனால் நமக்குக் கிடைக்கும் பயன்கள் ஏராளம்.,
நாம் வேண்டிக்கொள்ளும் நல்ல விஷயங்கள் நிறைவேறும்.,ஐஸ்வர்யம் ( தனம்.,செல்வம் அபிவிருத்தி) )ஏழ்மை விலகுதல் .,வியாதி ( ரோக ) நிவாரணம்.,மன நிம்மதி.,(துக்க நிவாரணம் ) .,எடுத்த கார்யத்தில் வெற்றி., ஆகிய பலன்கள் கிடைக்கின்றன.,நமது முயற்சிக்கு ஏற்படும் தடங்கல்கள் நீங்கும்.,தொல்லைகள் நீங்கும்,.,எதிரிகளால் நமக்கு ஏற்படும் கஷ்டங்கள் விலகும்.,
ஸுதர்சன ஹோமத்தால் இவை எல்லாம் எப்படி சாத்தியமாகிறது.,?ஏனெனில் சுதர்சன சக்ரமும்., அதன் தேவதையும்., அதன் எஜமானன் ஸ்ரீமன்நாராயணனும்., அபரிமிதமான் சக்தி வாய்ந்தவர்கள்.,இது ஒரு மிகுந்த சக்தி வாய்ந்த ஹோமம்.,இந்த மந்திரங்களில் பீஜாக்ஷரங்கள் அடங்கியுள்ளன
எள், கடுகு, தாமரைப்பூ, வில்வ இலை, பால் பாயசம் ஆகிய ஒவ்வொன்றையும் கொண்டு, குறிப்பிட்ட (ஆயிரம் ஆயிரமாக எண்ணிக்கையில் அந்த மந்திரத்தை உளமார உச்சரித்து ஜபிக்க வேண்டும். முழு மனதோடு மிகுந்த முயற்சியுடன் செயல்பட்டால்தான் கிடைக்கிற பலன் முழு அளவில் இருக்கும்.
இருவகை ஹோமங்கள்
ஒன்று- காம்ய ஹோமம்; மற்றொன்று - நைமித்திக ஹோமம். செல்வம், உடல் நலம் போன்ற வளங்களைப் பெறும் பொருட்டு, வீட்டிலேயே செய்யும் ஹோமங்கள், காம்ய ஹோமம் எனப்படும்!
அடுத்த வகையான நைமித்திக ஹோமத்தை உலக நலனுக்காகவும் அமைதிக்காகவும் பொதுவான ஓர் இடத்தில் செய்வார்கள். நாட்டில் சுபிட்சம் நிலவவும் மழை வேண்டியும் கோயில் மாதிரியான பொது இடங்களில் பலர் முன்னிலையில் இத்தகைய ஹோமங்களைச் செய்வார்கள்.
ஹோமங்களை எந்த அளவுக்கு நாம் சிரத்தையாகப் பண்ணுகிறோம் என்பதை வைத்து பகவான் அனுக்கிரஹம் செய்வார். பகவத் கீதையில், 'நீ என்னை நினைத்தால் நான் உன்னை நினைப்பேன்' என்கிறார் பகவான் ஸ்ரீகிருஷ்ணர். வீட்டில் ஏதேனும் ஹோமங்கள் நடத்தப்படும்போது ஹோமம் செய்பவரின் சிந்தனையும் மனமும் ஹோமத்திலேயே லயித்திருக்க வேண்டும். வேறு எந்தச் சிந்தனையும் வந்து இடையூறு செய்யக் கூடாது. சிலர் மனசால் நினைத்து ஹோமம் செய்த மாத்திரத்திலேயே பகவான் வந்தது உண்டு. அக்னியிலேயே ஜோதி ஸ்வரூபமாக பகவானைச் சிலர் பார்க்கலாம்.
ப்ரஜேதஸ் என்பவனின் குமாரர்கள் பத்தாயிரம் வருடம் தொடர்ந்து தவம் இருந்தனர். பகவான் வரவே இல்லை. இந்த தவத்தைக் கண்டு பகவான் சந்தோஷம் அடைந்தாரே தவிர, உடனடியாக அவர்களுக்குக் காட்சி தரவில்லை. காரணம், அந்த நேரத்தில் அவர்களுக்குத் தன் உதவி தேவை இல்லை என்று பகவான் முடிவு செய்து விட்டார். யார் யாருக்கு, எப்போது தனது அனுக்கிரஹம் தேவை என்பதையும் கடவுளே தீர்மானிப்பார். இந்தத் தவத்துக்குப் பிறகு ஒரு கட்டத்தில் ப்ரஜேதஸின் குமாரர்களுக்கு பகவான் வந்து காட்சி தந்ததாக ஒரு கதை உண்டு.
வாழ்வில் பல நன்மைகளைப் பெறுவதற்கு நாம் ஸ்ரீசுதர்சன ஹோமம் செய்வது அவசியம். இதன் பலன்கள் ஏராளம். பொதுவாக, பல வகையான ஹோமங்கள், ஏதோ குறிப்பிட்ட ஒரு நற்பலனை உத்தேசித்து மட்டுமே செய்யப்படுபவை. ஆனால், ஸ்ரீசுதர்சன ஹோமம் பல நற்பலன்களைக் கொடுக்க வல்லது.
இந்த ஹோமத்தில் ஸ்ரீசுதர்சனரின் மூல மந்திரம், காயத்ரி மந்திரம் இவற்றைச் சொல்லி ஹோமம் செய்ய வேண்டும். எந்த மந்திரத்தைச் சொல்ல வேண்டும் என்று வேத விற்பன்னர் அறிவுறுத்துவார்.
தீர்க்க ஆயுசு நிச்சயம்!
பூரண ஆயுள் கிடைக்கவும், நினைத்தது நிறைவேறவும் அருகம்புல்லை பசும்பாலில் முக்கி எடுத்து அதை அப்படியே அக்னியில் போட்டு பத்தாயிரம் தடவை ஹோமம் செய்ய வேண்டும். இதனால் நீண்ட ஆயுளைப் பெறலாம்!
அஷ்ட ஐஸ்வர்யம்!
தாமரைப்பூவை நெய்யில் முக்கி எடுத்து, அதை அப்படியே அக்னியில் போட்டு பத்தாயிரம் தடவை ஹோமம் செய்ய வேண்டும். இதனால் இல்லத்தில் அஷ்ட ஐஸ்வரியங்களையும் பெற்று இனிதே வாழலாம்!
புத்தியில் தெளிவு!
ஷமதப்பூவை (ஒரு வகையான பூ) நெய்யில் முக்கி எடுத்து, அக்னிக்குச் சமர்ப்பித்து பத்தாயிரம் தடவை ஹோமம் செய்ய வேண்டும். இதனால் ஞாபக சக்தி அதிகரிக்கும். ஞானம் பெறலாம். புத்தியில் தெளிவு பிறக்கும்!
இனி ஆபத்து இல்லை!
குக்குலு (கோலிக்குண்டு மாதிரி உருண்டையாக இருக்கும்) என்கிற ஹோமப் பொருளை அக்னியில் சமர்ப்பித்து ஆயிரத்தெட்டு தடவை ஹோமம் செய்ய வேண்டும். இதனால், ஆபத்து சம்பத்துக் காலங்களில், கடவுள் சக்தி துணை நின்று காத்தருளும். ஸ்ரீசுதர்சனம் அருள்பாலிக்கும்!
பசு விருத்தி!
கிண்ணம் போல் மடிக்கப்பட்ட ஒரு மாவிலையில் நெய் எடுத்துக் கொண்டு பத்தாயிரம் தடவை ஹோமம் செய்ய வேண்டும். இதனால் வீட்டில் உள்ள பசு அதிகம் பால் சுரக்கும். பசுவை எந்த நோயும் அண்டாது. பசு விருத்தியாகும்!
எதிரிகள் தொல்லை!
திங்கட் கிழமையில் ஆரம்பித்து ஒரு மண்டலம் வரை (41 நாட்கள்) இந்த ஹோமம் செய்ய வேண்டும். நெய்யை அக்னியில் விட்டு இந்த ஹோமத்தைச் செய்ய எதிரிகள் தொல்லை ஒழியும்! இதேபோல், நாயுருவி சமித்தை நெய்யில் முக்கி எடுத்து பத்தாயிரம் தடவை ஹோமம் செய்ய வேண்டும்.
மன நலம் குணமாகும்!
கருநொச்சி, இருமுள், நீல ஊமத்தம்பூ, வெள்ளை பிளாச்சு இவற்றைக் கொண்டு மூவாயிரம் தடவை ஹோமம் செய்ய வேண்டும். ஒரு மண்டல காலம் இதைத் தொடர்ந்து செய்து வந்தால், புத்தி பேதலித்தவர்கள் நலம் பெறுவார்கள். விரைவில் மனோபலம் பெறலாம்.
தீராத நோயும் தீரும்!
பஞ்சகவ்யம் உருவாக்கி நாயுருவியால் பத்தாயிரம் தடவை ஹோமம் செய்ய வேண்டும். இந்த ஹோமம் முடிந்ததும் ஹோமத்தின் சாம்பலை தயிருடன் கலந்து வீட்டைச் சுற்றி பத்துத் திக்குகளிலும் வீசி எறிய வேண்டும் (எட்டுத் திசைகள் தவிர, ஆகாயம், பூமி ஆகிய இரண்டும் சேர்த்து பத்துத் திசைகள் என்பது கணக்கு). கேன்சர், சர்க்கரை வியாதி போன்ற கண்ணுக்குத் தெரியாத நோய்கள் நீங்கும் என்பது ஐதீகம்!
கோபம் தணியும்!
ஆல மர சமித்தைக் கொண்டு இந்த ஹோமம் செய்ய வேண்டும். பால், நெய், சர்க்கரைப் பொங்கல் இவற்றை இந்த சமித்து மூலம் எடுத்து அக்னியில் விட்டு ஹோமம் செய்ய வேண்டும். ஒவ்வொன்றையும் தனித் தனியாக நான்காயிரம் தடவை செய்ய வேண்டும். இந்த ஹோமம் செய்வதன் மூலம் கோபத்தை முற்றிலுமாகக் குறைக்கலாம். குருவை அவமதித்த பாவம், சாதுக்களைத் திட்டிய சாபம், பெரியவர்களை மதிக்காமல் போன பாவம் நீங்குவதற்கும் இந்த ஹோமத்தின் மூலம் பரிகாரம் தேடிக் கொள்ளலாம்.
சுகப் பிரசவம் உறுதி!
கலசத்தில் நீரை நிரப்பி, சுதர்சனரை ஆவாஹனம் செய்ய வேண்டும். இந்தக் கலச நீரைக் கொண்டு தொடர்ந்து ஏழு நாட்களுக்கு பிரசவம் ஆக வேண்டிய பெண்மணிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.
சுபிட்சமும் வளமும் தரும் சுதர்சன ஹோமத்தைச் செய்யுங்கள். வீடும் நாடும் நலம் பெறட்டும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக