மாரியம்மன்
பல நோய்களை போக்கும் கசப்பு சுவையுள்ள வேம்பு மரம் மாரியம்மனுக்கு தல விருட்சமாக திகழ்கிறது.மாரியம்மனுக்கு 4திருக்கரங்கள் ,பாசம் ,டமருகம் .கத்தி,கபாலம் ,3திருக்கண்கள்,கீரிடம் ,சிவந்த திருமேனி ,சகல ஆபரணங்கள் ,சிகப்பு
நிற ஆடை அணிந்து ,வலது காலை மடக்கி ,இடது காலை தொங்க விட்டு சுகாசனத்தில் வீற்றிருக்கக்கூடியவள்.
அவள்தான் எல்லாம் என்று நினைத்து காலில் வந்து விழுபவர்க்கு உடனே அருள் தருபவள் மாரியம்மன்.அம்மை நோயை போக்குவதாக ,அன்னையின் அருள் பெற்ற தீர்த்தம் மருந்தாக பயன்படுகிறது .
இறைவனிடம் பல வரங்களையும் ,மகா பலத்தையும் பெற்ற மாராசூரன் ஆணவமும் ,அகங்காரமும் கொண்டு மூன்று உலகத்தையும் துன்புறுத்தி வந்தான் .அன்னை லோக மாதா பராசக்தியிடம் தேவர்களும் ,முனிவர்க்கும் முறையிட்டனர்.
தேவியும் திருவுளமிரங்கி காத்தருள உறுதி பூண்டாள்.கோப ஆவேசத்துடன் மாராசுரனின் இரு கால்களையும் பிடித்து மேலே தூக்கி அவனது தலையை பூமியில் அழுத்தினாள் .அவன் பெற்ற வரத்தின்படி மாண்டான் .மாராசுரனை தேவி அளித்தமையால் "மாரியம்மன் "என பெயர் வந்தது .
ஆடி மாதத்தில் மழை வேண்டி ,அம்மனுக்கு மக்கள் விழா எடுப்பர்.அன்னையும் மனமிரங்கி ,மழை பொழிவாள் ..அம்மனுக்கு மாவிளக்கு எடுத்தும் ,கூழ் காய்ச்சியும் மாரியம்மனை வழிபடுகிறார்கள்
நோய்களை அகற்றும் தெய்வமாகவும்,ஊர்காவல் தெய்வமாகவும் மாரியம்மன் திகழ்கிறாள்.
தினமும் குளித்து விளக்கேற்றி அம்மனுக்கு நெய்வேத்தியம் பண்ணி ,108 மாரியம்மன் போற்றியை படித்து வர நம் அன்னை மனம் குளிர்ந்து நமக்கு வேண்டியதை எல்லாம் தருவாள் .
அம்மனுக்கு உரிய எளிமையான மந்திரம்
அரி ஓம் பகவதி திரிலோக பகவதி
வசீகரி ஆனந்த கல்யாணி
ஓம் தேவி வீரலெக்ஷ்மி
என் வாக்கிலும் என் மனதிலும்
நிற்க நிற்கவே சுவாகா
அன்னையின் அருள் நமக்கு கிடைக்க அவளை சரணடைந்து வழிபடுவோம் .
என்னுடைய பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க கமெண்ட்ஸ் கொடுங்க .அது எனக்கு மேலும் மேலும் எழுத ஒரு தூண்டுகோலாக இருக்கும் .
நன்றி வணக்கம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக