அன்பார்ந்த ஆன்மீக தோழிகளுக்கு என் அன்பு வணக்கங்கள் .நாம் எல்லோரும் பெருமாள் கோவில்களுக்கு சென்று இருக்கிறோம்.பெருமாளை சேவித்து விட்டு,அங்கு அர்ச்சகர் கொடுக்கும் துளசி ,தீர்த்தம் எல்லாம் வாங்கி சாப்பிடுகிறோம் .அதன்பிறகு ,நம் தலையில் வைக்கும் கீரிடத்திற்கு பெயர்தான் சடாரி .
சடாரி அல்லது சடகோபம் என்பது திருமாலின் பாதம் பொறிக்கப்பட்ட கீரிடமாகும்.இதனை மணிமுடி என்றும் கூறுவர் .பக்தர்கள் தலை மீது பெருமாள் தங்குவதாக ஐதீகம் .சடாரி யில் பொறிக்கப்பட்ட பாதங்கள் பெருமாளின் பாதங்கள் அல்ல.பிறக்கும் போதே உலக மாயைகளை வென்றவரான நம்மாழ்வாரின் பாதங்கள் ஆகும்.
இதை வைப்பதன் மூலம் இவ்வுலகத்தின் பாசப் பிணைப்புகளில் இருந்து விடுபட்டு பரமாத்மாவை அடையலாம் என்பதே சடாரி வைப்பதன் பயன் .வைணவர்கள் நம்மாழ்வாரே திருமாலின் திருவடிகளில் இருப்பதாக நம்புகிறார்கள்.எந்த கோவிலுக்கு சென்றாலும் இறைவனை தரிசிக்கும் போது ,முதலில் திருவடிகளைத்தான் தரிசிக்க வேண்டும்.பக்தர்களின் தலையெழுத்தை மாற்றும் வல்லமை திருவடிக்கு உண்டு .
தன் தாய் செய்த தவறுக்கு வருந்திய பரதன் ,இராமரை காட்டில் போய் சந்தித்து, மன்னிப்பு கோருகிறான் .மீண்டும் அயோத்திக்கு திரும்பி வந்து ஆட்சி பொறுப்பை ஏற்குமாறு வேண்ட ,இராமர் மறுத்து விடுகிறார்.எனவே இராமனின் பாதுகைகளை கொண்டு போய் அதை சிம்மாசனத்தில் வைத்து அதன் பிரதிநிதியாக ஆட்சி புரிந்தான் பரதன் .இறைவனின் பாதுகைகள் சக்தி வாய்ந்தவை .
நம்மாழ்வாரின் சொரூபமாக கருதப்பட்ட ஸ்ரீ சடாரியை நம் தலையில் தாங்கும் போது ,நம்மாழ்வாரை நினைத்து பெருமானே! இறைவன் பாதத்தில் எம்மையும் சேர்க்க அருள் புரியுங்கள் என வேண்டிக் கொள்ள வேண்டும் .
பெருமாள் கோவில்களில் மட்டுமே சடாரி வைக்கும் பழக்கம் இருக்கிறது .சிவன் கோவில்களில் வைப்பது இல்லை .மூன்று சிவன் கோவில்களில் சடாரி வைக்கும் வழக்கம் உள்ளது .காஞ்சிபுரம் ஏகாம்பரரேஸ்வரர் ,காளஹஸ்தி காளத்தீஸ்வரர் ,சுருட்டப்பள்ளி சிவாலயங்களில் பக்தர்களுக்கு சடாரி வைக்கிறார்கள் .
இறைவன் திருவடியே நிரந்தரமானது .இறைவன் திருவடியைப் பற்றி கொண்டு ,முழு மனதுடன் சரண் அடைந்தால் நமக்கு பிறப்பற்ற நிலையான முக்தி கிடைக்கும்.
என் பதிவுக்கு வந்த அனைத்து நெஞ்சங்களுக்கு நன்றியை தெரிவித்து கொண்டு ,எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க ஆண்டவனைப் பிராத்திக்கிறேன் .
ஓம் நமோ நாராயணா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக