ஹாய் பிரண்ட்ஸ் ,எல்லோருக்கும் என் அன்பு வணக்கங்கள் .இந்த வலைத்தளம் ஆன்மீகவாதிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று எழுதுகிறேன். இன்னிக்கு ஸ்ரீ சங்கட ஹர சதுர்த்தி விரதத்தை பற்றி சொல்கிறேன் .
விநாயகர் முழுமுதல் கடவுள் .எந்த காரியம் செய்வதாக இருந்தாலும் முதலில் கணபதியை வணங்கி விட்டுதான் ஆரம்பிப்போம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே !
சங்கடங்கள் அனைத்தும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தி விரதம் அளவு கடந்த ஆனந்தத்தை தரக்கூடியது .சகல சௌபாக்கியத்தை தரக்கூடாது .
செவ்வாய் கிழமை வரும் சங்கட ஹர சதுர்த்தி ,மகா சதுர்த்தி விரதம் மிகவும் விசேஷம் .ஆவணி மாத தேய்பிறையில் வரும் சதுர்த்தி நாளில் இவ்விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும்.அங்கார பகவான் விநாயகரைப் பூஜித்தே கிரக பதவி அடைந்தார்.
சங்கட ஹர சதுர்த்தி அன்று காலை குளித்து விட்டு ,திருநீறு குங்குமம் இட்டு அருகிலுள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று மூன்று முறை விநாயகரை வலம் வந்து ,தங்களுடைய குறைகளை சொல்லி வழிபட வேண்டும். விநாயகர் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொள்ள வேண்டும். விநாயகருக்கு வெள்ளை எருக்கு,அருகம்புல் மாலை சாற்றி வழிபட வேண்டும்.
மாலையில் கோவிலுக்கு சென்று அபிஷேகம் ,அர்ச்சனை ,அன்னதானம் ,தேங்காய் விடல் செய்து வீட்டிற்கு வந்து சந்திரன் உதயமானதும் பார்த்து தரிசித்து விட்டு உண்ணாவிரதத்தை முடிக்க வேண்டும்.விரதம் அன்று பால் ,பழம் ஏதேனும் ஒன்றை சாப்பிட்டு விட்டு விரதம் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அடுத்த சதுர்த்தி திதியே சங்கட ஹர சதுர்த்தி .இந்த விரதம் இருந்தால் கல்வி அறிவு ,புத்தி கூர்மை ,நீண்ட ஆயுள் ,நிலையான செல்வம் கிடைக்கும்.
சனி தோஷத்திற்கு உள்ளாகி இருப்பவர்கள் விரதம் இருந்தால் சனியின் தாக்கம் குறையும்.
முதல் முதலில் தாய் பார்வதி தேவிக்கு கணபதியே இவ்விரதத்தை சொல்லி அருளினார்.
பார்வதி இவ்விரதத்தை மேற்கொண்டு தன் பதியை அடைந்தாள் .இந்திரன் ,சிவன்,இராவணன் போன்றோர்கள் இவ்விரதம் இருந்து நற்பலன் அடைந்தனர். அனுமன் சீதையை கண்டதும் ,தமயந்தி நளனை அடைந்தது இந்த விரதத்தின் மகிமையால் தான் .
விநாயகர் காயத்ரி மந்திரம்
ஓம் தத் புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தன்னோ தந்தி :ப்சோதயாத்
இந்த மந்திரத்தை விநாகருக்கு சொல்லி,பூஜை செய்தால் சகல நலங்களை அடையலாம்.விநாயகர் அகவல் பாடுதல் கூடுதல் பலன் உண்டு.
சங்கட ஹர சதுர்த்தி விரதம் இருந்தால் கஷ்டங்கள் தொலைந்து போகும் .நீங்களும் இந்த விரதத்தை கடைப்பிடித்து கணபதியின் அருள் பெற வேண்டுகிறேன் .
நன்றி வணக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக