தைப்பூசம்
தைப்பூசம் முருக பெருமானுக்கு கொண்டாடப்பாடும் திருநாளாகும் .தை மாதம் புனிதமான மாதம் ஆகும்.முருகனுக்கு உகந்த நாள் தைப்பூசம் ஆகும்.
சூரபத்மனை அழிக்க சக்தி தேவி வேல் கொடுத்ததும் இந்த நாளில் தான் .முருகன் தலத்தில் தைப்பூசம் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது .
சிவசக்திக்கு உரிய நாள் தைப்பூசம்.தகப்பனை வழிபட வந்தவர்கள் தகப்பன் சுவாமி முருகனுக்கும் முக்கியத்துவம் தந்தனர் .
சிவபெருமான் உமா தேவியுடன் சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி,தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பர்.சிதம்பரத்திற்கு அரும்பெரும் திருப்பணி செய்து ,நடராஜரை இரணிய வர்மன் என்ற மன்னன் சிவனுக்கு பூஜை செய்து நேருக்கு நேர் தரிசித்ததும் இந்நாளில் தான்.
தேவர்கள் குரு பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குரு வழிபாடு மிகுந்த பலனைத் தரும் .
பூச நட்சத்தின் பிரதான தேவதை குரு பகவான்.ஆகவே தைப்பூச அன்று புனித தீர்த்தத்தில் நீராடி குருவை வழிபட கல்வி ஞானம் பெருகும் .
தைப் பூசத்தன்று அதிகாலையில் எழுந்து .குளித்து விட்டு திருநீறு ,உருத்திராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபடுவர். தேவாரம் ,திருவாசகம் பாராயணம் செய்து ,உணவு உண்ணாமல் 3 வேளையும் பால் ,பழம் சாப்பிடுவர் .மாலையில் கோவிலுக்கு சென்று சிவபூஜையில் பங்கேற்று சிவனை தரிசித்து நிறைவு செய்வர்.
நன்றி வணக்கம்,

முருகனுக்கு பக்தர்கள் காவடி,பால் குடம் தூக்கி நேர்த்தி கடன் செலுத்துவர் .நம் ஊர்களில் மட்டும் அல்லாமல் மலேசியா ,சிங்கப்பூர் போன்ற தமிழ் மக்கள் வாழும் இடங்களில் முருகன் திருத்தலத்தில் தைப்பூசம் சிறப்பாக நடைபெறுகிறது .
நன்றி வணக்கம்,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக