புதன், 13 ஜனவரி, 2016

பொங்கல் பண்டிகை

பொங்கல் பண்டிகை 

என்  இணையத்தை படிக்கும்  அனைத்து  ஆன்மீக அன்பர்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .


இந்த ஆண்டில் நாம் கொண்டாடும் முதல் விழா பொங்கல் திருநாள்.

என்றென்றும் நம் வாழ்வில் சந்தோஷம்  பொங்க நான் இறைவனை பிராத்திக்கிறேன் .


பொங்கல் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாட்டம் தான் .நம் சொந்த பந்தங்கள் கூடுவதும் இந்த 4நாட்களில் தான் .


பொங்கல் பண்டிகை ஒரு நாள் பண்டிகை அன்று .நான்கு நாட்கள் கொண்டாடப்படுவது ,



பொங்கல் திருநாளுக்கு முதல் நாள் கொண்டாடுவது போகி பொங்கல் .மார்கழி கடைசி நாள் இது கொண்டாடப்படுகிறது .இந்நாளில் பழையதை கழித்து  புது பொருட்களை வீட்டிற்கு வாங்குவார்கள் .வீட்டிற்கு  வர்ணம் பூசி ,அழகுப்படுத்துவர்.நம் மனத்தில் உள்ள தீய எண்ணம் ,தவறான எண்ணம் நீக்கப்பட வேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.தை முதல் நமக்கு புது வாழ்வு பிறக்க செய்வதால் இந்நாளை போக்கி என்றனர்.நாளடைவில் மருவி "போகி "என்றானது .


போகி என்று இந்திரனுக்கு ஒரு பெயர் உண்டு .இந்திரனுக்காக ஆயர்களால் கொண்டாடப்படுவது 
 போகி பொங்கல் .
.

பொங்கல் உழைக்கும் மக்களுக்கும் ,உயிர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாக கொண்டாடப்படுகிறது .சூரிய பகவான் நல்லவர் ,கெட்டவர்  என்று பேதம் பார்க்காமல் நம் அனைவருக்கும் ஒளியை தருபவர் .அவர் செய்யும் பணி  மிகவும் மகத்தானது .அவரை  போல் நாமும் அனைவரிடமும் அன்பு காட்ட வேண்டும் .


தை பிறந்தால் வழி  பிறக்கும்' என்பது ஆன்றோர்களின் அனுபவ பூர்வமான வாக்கு .அந்த நம்பிக்கையின் காரணமாகத்தான் நாம் புது தெம்புடன் இருக்கிறோம்.


சூரிய பாகவான் நவகிரகங்களுக்கு எல்லாம் அதிபதி .இறைவனின் உத்தரவை நிறைவேற்றும் கோள்களின் அரசன் சூரியபகவான் தன்  தேரை திருப்பி பூலோகத்தை பார்க்கிறான்.
தை மாதம் முதல் நாள் சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கிறார்.இதை மகர சங்கராந்தி என்று 
அழைப்பர்.தமிழர்களால் கொண்டாடப்படுவது பொங்கல் விழா .இவ்விழா தமிழ் நாடு,இலங்கை ,மலேசியா , சிங்கப்பூர் ,அமெரிக்கா என தமிழ் மக்கள் வாழும் இடங்களில் கொண்டாடப்படுகிறது .


வாசலில் சூரியன் கோலம் போட்டு ,பொங்கல் பானையில் மஞ்சள் கொத்தை கட்டி விபூதி ,சந்தனம்.குங்குமம் இட்டு பொங்கல் வைப்பர் .வெற்றிலை ,பாக்கு,பூ ,பழம் ,தேங்காய் ,கரும்பு வைத்து சூரிய நாராயனணை வணங்கி வழிபடுவர் .நமக்கு தெரிந்த சூரிய பகவானுடைய மந்திரத்தையும்,ஆதித்திய இருதயம் படித்து பலம் பெறுவோம் .


மூன்றாம்  நாள்  கொண்டாடப்படுவது  மாட்டு  பொங்கல் .இது கிராமங்களில் ,நகர் புறத்தில் மாடு வைத்திருப்பவர்கள் கொண்டாடுவர்.




மாடுகளை  குளிப்பாட்டி ,கொம்புகளுக்கு  வர்ணம் பூசி ,ஆடை போட்டு ,சந்தானம் ,பொட்டு  வைத்து அதை வணங்குவது மாட்டு பொங்கல் .அன்று தான் ஜல்லிக்கட்டும் நடைபெறும்.இது தமிழர்களின் வீரத்திற்கு ஒரு சவால் ஆகும் .ஜல்லிக்கட்டை காண மேலை நாடுகளில் இருந்து வருவர்.


நான்காம் நாள் காணும் பொங்கல் .மக்கள் தங்கள் உற்றார் உறவினரை சென்று சந்தித்து தங்கள் அன்பையும் ,உணவு பண்டங்களையும் பகிர்ந்து கொள்வர்.பொங்கல் பானையில் வைத்து கட்டிய புது மஞ்சள் கொத்தினை முதிய தீர்க்க சுமங்கலிகள் பெண்களுக்கு முகத்தில் பூசிவிடுவர் .இந்த நாளுடன் விழா  சிறப்புடன் முடிவடையும் .

வரவிருக்கும் பொங்கலை சந்தோசமாக இறைவனின் அருளுடன் கொண்டாட உங்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.


சந்தோஷமாக  இருங்கள் .மற்றவர்களையும் சந்தோஷப்படுத்துங்கள் .

உங்கள் அன்பு தோழி 
ஈஸ்வரி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக