வெள்ளி, 29 ஜனவரி, 2016

ஸ்ரீ சங்கட ஹர சதுர்த்தி



ஹாய் பிரண்ட்ஸ்  ,எல்லோருக்கும் என் அன்பு வணக்கங்கள் .இந்த  வலைத்தளம்  ஆன்மீகவாதிகளுக்கு பயனுள்ளதாக  இருக்கும் என்று எழுதுகிறேன். இன்னிக்கு  ஸ்ரீ சங்கட ஹர சதுர்த்தி விரதத்தை  பற்றி சொல்கிறேன் .







விநாயகர் முழுமுதல் கடவுள் .எந்த காரியம் செய்வதாக இருந்தாலும் முதலில் கணபதியை வணங்கி விட்டுதான் ஆரம்பிப்போம் என்பது  நாம் அனைவரும் அறிந்ததே !

சங்கடங்கள் அனைத்தும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தி விரதம் அளவு கடந்த ஆனந்தத்தை தரக்கூடியது .சகல சௌபாக்கியத்தை தரக்கூடாது .


 செவ்வாய் கிழமை  வரும் சங்கட ஹர சதுர்த்தி ,மகா சதுர்த்தி விரதம் மிகவும் விசேஷம் .ஆவணி மாத தேய்பிறையில் வரும் சதுர்த்தி நாளில் இவ்விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும்.அங்கார பகவான் விநாயகரைப் பூஜித்தே கிரக பதவி அடைந்தார்.



சங்கட ஹர சதுர்த்தி அன்று காலை குளித்து விட்டு ,திருநீறு குங்குமம் இட்டு அருகிலுள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று மூன்று முறை விநாயகரை வலம் வந்து ,தங்களுடைய குறைகளை சொல்லி வழிபட வேண்டும். விநாயகர் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில்  கலந்து கொள்ள வேண்டும். விநாயகருக்கு வெள்ளை எருக்கு,அருகம்புல் மாலை சாற்றி வழிபட வேண்டும்.




மாலையில் கோவிலுக்கு சென்று அபிஷேகம் ,அர்ச்சனை ,அன்னதானம் ,தேங்காய் விடல் செய்து வீட்டிற்கு வந்து சந்திரன் உதயமானதும் பார்த்து தரிசித்து விட்டு உண்ணாவிரதத்தை முடிக்க வேண்டும்.விரதம் அன்று பால் ,பழம் ஏதேனும் ஒன்றை சாப்பிட்டு விட்டு விரதம் இருக்க வேண்டும்.





ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அடுத்த சதுர்த்தி திதியே சங்கட ஹர சதுர்த்தி .இந்த விரதம் இருந்தால் கல்வி அறிவு ,புத்தி கூர்மை ,நீண்ட ஆயுள் ,நிலையான செல்வம் கிடைக்கும்.




சனி தோஷத்திற்கு உள்ளாகி இருப்பவர்கள் விரதம் இருந்தால் சனியின் தாக்கம் குறையும்.


முதல் முதலில் தாய் பார்வதி தேவிக்கு கணபதியே இவ்விரதத்தை சொல்லி அருளினார். 




பார்வதி இவ்விரதத்தை மேற்கொண்டு தன் பதியை அடைந்தாள் .இந்திரன் ,சிவன்,இராவணன் போன்றோர்கள் இவ்விரதம் இருந்து நற்பலன் அடைந்தனர். அனுமன் சீதையை கண்டதும் ,தமயந்தி நளனை அடைந்தது இந்த விரதத்தின் மகிமையால் தான் .

விநாயகர் காயத்ரி மந்திரம் 

ஓம் தத் புருஷாய வித்மஹே 
வக்ர துண்டாய தீமஹி 
தன்னோ தந்தி :ப்சோதயாத் 

இந்த மந்திரத்தை விநாகருக்கு சொல்லி,பூஜை செய்தால் சகல நலங்களை அடையலாம்.விநாயகர் அகவல் பாடுதல் கூடுதல் பலன் உண்டு.


சங்கட ஹர சதுர்த்தி விரதம் இருந்தால் கஷ்டங்கள் தொலைந்து போகும் .நீங்களும் இந்த விரதத்தை கடைப்பிடித்து கணபதியின் அருள் பெற வேண்டுகிறேன் . 





நன்றி வணக்கம் 















வியாழன், 21 ஜனவரி, 2016

தைப்பூசம்

தைப்பூசம்


தைப்பூசம்  முருக பெருமானுக்கு கொண்டாடப்பாடும் திருநாளாகும் .தை மாதம் புனிதமான மாதம்  ஆகும்.முருகனுக்கு உகந்த நாள் தைப்பூசம் ஆகும்.



சூரபத்மனை அழிக்க சக்தி தேவி  வேல் கொடுத்ததும் இந்த நாளில் தான் .முருகன் தலத்தில் தைப்பூசம் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது .

சிவசக்திக்கு உரிய நாள் தைப்பூசம்.தகப்பனை வழிபட வந்தவர்கள் தகப்பன் சுவாமி முருகனுக்கும் முக்கியத்துவம் தந்தனர் .


சிவபெருமான் உமா தேவியுடன் சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி,தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பர்.சிதம்பரத்திற்கு அரும்பெரும் திருப்பணி செய்து ,நடராஜரை இரணிய வர்மன் என்ற மன்னன் சிவனுக்கு பூஜை செய்து நேருக்கு நேர் தரிசித்ததும் இந்நாளில் தான்.



தேவர்கள்  குரு  பிரகஸ்பதியின்  நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குரு வழிபாடு மிகுந்த பலனைத் தரும் .


பூச நட்சத்தின் பிரதான தேவதை குரு பகவான்.ஆகவே தைப்பூச அன்று புனித தீர்த்தத்தில்  நீராடி குருவை வழிபட கல்வி ஞானம்  பெருகும் .


தைப்  பூசத்தன்று அதிகாலையில் எழுந்து .குளித்து விட்டு திருநீறு ,உருத்திராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபடுவர். தேவாரம் ,திருவாசகம் பாராயணம் செய்து ,உணவு உண்ணாமல் 3 வேளையும் பால் ,பழம்  சாப்பிடுவர் .மாலையில் கோவிலுக்கு சென்று சிவபூஜையில் பங்கேற்று சிவனை தரிசித்து நிறைவு செய்வர்.



முருகனுக்கு பக்தர்கள் காவடி,பால் குடம் தூக்கி நேர்த்தி கடன் செலுத்துவர் .நம் ஊர்களில் மட்டும் அல்லாமல் மலேசியா ,சிங்கப்பூர் போன்ற தமிழ் மக்கள் வாழும் இடங்களில் முருகன் திருத்தலத்தில் தைப்பூசம் சிறப்பாக நடைபெறுகிறது .



நன்றி வணக்கம்,























புதன், 13 ஜனவரி, 2016

பொங்கல் பண்டிகை

பொங்கல் பண்டிகை 

என்  இணையத்தை படிக்கும்  அனைத்து  ஆன்மீக அன்பர்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .


இந்த ஆண்டில் நாம் கொண்டாடும் முதல் விழா பொங்கல் திருநாள்.

என்றென்றும் நம் வாழ்வில் சந்தோஷம்  பொங்க நான் இறைவனை பிராத்திக்கிறேன் .


பொங்கல் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாட்டம் தான் .நம் சொந்த பந்தங்கள் கூடுவதும் இந்த 4நாட்களில் தான் .


பொங்கல் பண்டிகை ஒரு நாள் பண்டிகை அன்று .நான்கு நாட்கள் கொண்டாடப்படுவது ,



பொங்கல் திருநாளுக்கு முதல் நாள் கொண்டாடுவது போகி பொங்கல் .மார்கழி கடைசி நாள் இது கொண்டாடப்படுகிறது .இந்நாளில் பழையதை கழித்து  புது பொருட்களை வீட்டிற்கு வாங்குவார்கள் .வீட்டிற்கு  வர்ணம் பூசி ,அழகுப்படுத்துவர்.நம் மனத்தில் உள்ள தீய எண்ணம் ,தவறான எண்ணம் நீக்கப்பட வேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.தை முதல் நமக்கு புது வாழ்வு பிறக்க செய்வதால் இந்நாளை போக்கி என்றனர்.நாளடைவில் மருவி "போகி "என்றானது .


போகி என்று இந்திரனுக்கு ஒரு பெயர் உண்டு .இந்திரனுக்காக ஆயர்களால் கொண்டாடப்படுவது 
 போகி பொங்கல் .
.

பொங்கல் உழைக்கும் மக்களுக்கும் ,உயிர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாக கொண்டாடப்படுகிறது .சூரிய பகவான் நல்லவர் ,கெட்டவர்  என்று பேதம் பார்க்காமல் நம் அனைவருக்கும் ஒளியை தருபவர் .அவர் செய்யும் பணி  மிகவும் மகத்தானது .அவரை  போல் நாமும் அனைவரிடமும் அன்பு காட்ட வேண்டும் .


தை பிறந்தால் வழி  பிறக்கும்' என்பது ஆன்றோர்களின் அனுபவ பூர்வமான வாக்கு .அந்த நம்பிக்கையின் காரணமாகத்தான் நாம் புது தெம்புடன் இருக்கிறோம்.


சூரிய பாகவான் நவகிரகங்களுக்கு எல்லாம் அதிபதி .இறைவனின் உத்தரவை நிறைவேற்றும் கோள்களின் அரசன் சூரியபகவான் தன்  தேரை திருப்பி பூலோகத்தை பார்க்கிறான்.
தை மாதம் முதல் நாள் சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கிறார்.இதை மகர சங்கராந்தி என்று 
அழைப்பர்.தமிழர்களால் கொண்டாடப்படுவது பொங்கல் விழா .இவ்விழா தமிழ் நாடு,இலங்கை ,மலேசியா , சிங்கப்பூர் ,அமெரிக்கா என தமிழ் மக்கள் வாழும் இடங்களில் கொண்டாடப்படுகிறது .


வாசலில் சூரியன் கோலம் போட்டு ,பொங்கல் பானையில் மஞ்சள் கொத்தை கட்டி விபூதி ,சந்தனம்.குங்குமம் இட்டு பொங்கல் வைப்பர் .வெற்றிலை ,பாக்கு,பூ ,பழம் ,தேங்காய் ,கரும்பு வைத்து சூரிய நாராயனணை வணங்கி வழிபடுவர் .நமக்கு தெரிந்த சூரிய பகவானுடைய மந்திரத்தையும்,ஆதித்திய இருதயம் படித்து பலம் பெறுவோம் .


மூன்றாம்  நாள்  கொண்டாடப்படுவது  மாட்டு  பொங்கல் .இது கிராமங்களில் ,நகர் புறத்தில் மாடு வைத்திருப்பவர்கள் கொண்டாடுவர்.




மாடுகளை  குளிப்பாட்டி ,கொம்புகளுக்கு  வர்ணம் பூசி ,ஆடை போட்டு ,சந்தானம் ,பொட்டு  வைத்து அதை வணங்குவது மாட்டு பொங்கல் .அன்று தான் ஜல்லிக்கட்டும் நடைபெறும்.இது தமிழர்களின் வீரத்திற்கு ஒரு சவால் ஆகும் .ஜல்லிக்கட்டை காண மேலை நாடுகளில் இருந்து வருவர்.


நான்காம் நாள் காணும் பொங்கல் .மக்கள் தங்கள் உற்றார் உறவினரை சென்று சந்தித்து தங்கள் அன்பையும் ,உணவு பண்டங்களையும் பகிர்ந்து கொள்வர்.பொங்கல் பானையில் வைத்து கட்டிய புது மஞ்சள் கொத்தினை முதிய தீர்க்க சுமங்கலிகள் பெண்களுக்கு முகத்தில் பூசிவிடுவர் .இந்த நாளுடன் விழா  சிறப்புடன் முடிவடையும் .

வரவிருக்கும் பொங்கலை சந்தோசமாக இறைவனின் அருளுடன் கொண்டாட உங்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.


சந்தோஷமாக  இருங்கள் .மற்றவர்களையும் சந்தோஷப்படுத்துங்கள் .

உங்கள் அன்பு தோழி 
ஈஸ்வரி