ஞாயிறு, 27 மே, 2018

இதுவல்லவா பக்தி!

கிருஷ்ணன் நாரதர் க்கான பட முடிவு

இதுவல்லவா பக்தி!



பகவான் கிருஷ்ணரின் நினைவு எந்நேரமும் நம் நினைவில் இருந்தால் போதும். உலகில் எதையும் சாதிக்கலாம். பக்தனின் உண்மை அன்புக்கு அவன் உடனே கட்டுப்படுவான். 
ஒருசமயம், கிருஷ்ணர் தனக்கு தலைவலி வந்தது போல நடித்தார். அவரது மனைவி சத்யபாமாவுக்கு விஷயம் தெரிந்து மருந்துடன் ஓடோடி வந்தாள். அடுத்து ருக்மணி வந்தாள். அவர்கள் தங்களால் ஆன வைத்தியத்தை எல்லாம் செய்து பார்த்தார்கள். வலியால் துடிப்பது போல நடித்தார்.
அந்த சமயத்தில் நாரதர் அங்கு வந்தார். ஊரையே ஏமாற்றும் நாரதரை உலகளந்த பெருமான் ஏமாற்றி விட்டார். உண்மையிலேயே, சுவாமிக்கு தலைவலி தான் போலும் என்று நம்பிவிட்டார். இதற்கான மருந்தை அந்த பரந்தாமனைத் தவிர வேறு யாரால் சொல்ல முடியும் என நினைத்து,""ஐயனே! எங்களைப் போன்ற ஜடங்களுக்கு வியாதி வந்தால் வைத்தியர் மருந்தளிப்பார். நீயே உலகம். உனக்கு ஒன்று என்றால், அதற்கு மருந்தும் உன்னிடம் தானே இருக்கும். என்ன மருந்து என சொல். வரவழைக்க ஏற்பாடு செய்கிறேன்,'' என்றார்.
கிருஷ்ணர் அவரிடம், ""என் மீது அதிக பக்திகொண்டவன் யாரோ, அவனது பாதத்தில் படிந்த மணலை உதிர்த்து தண்ணீரில் கலக்கிக் கொண்டு வாருங்கள். அந்த "பாததூளி தீர்த்தம்' என்னைக் குணமாக்கி விடும்,' ' என்றார். நாரதரும் தேடிப்பார்த்தார். யாரும் சிக்கவில்லை. எல்லாரும் தங்கள் பக்தியில் ஏதோ ஒரு குறை இருப்பதாகவே கூறினர்.
கிருஷ்ணரிடமே திரும்பிய நாரதர்,"" மருந்தைச் சொன்ன நீ மருந்து எங்குள்ளது?'' என்பதையும் சொல்லி விடு,'' என்றார்.
அதற்கு, கிருஷ்ணர் சொன்ன பதிலைக் கேட்டு, நாரதர் சிரித்துவிட்டார்.
""கிருஷ்ணா! கோபியர்களின் கால் தூசைக் கொண்டு வரச்சொல்கிறாயே! எங்களைப் போன்றவர்கள் யாகம், பூஜைகளால் உன்னை ஆராதிக்கிறோம். 
அப்படிப்பட்ட நாங்களே எங்கள் பாத தூசை தருவதற்கு யோசிக்கிறோம்.கல்வியறிவற்ற கோகுலத்துப் பெண்களின் கால் தூசை கேட்கிறாயே!என்ன விளையாட்டு இது,'' என்றார்.
""சொன்னதைச் செய்,''என்றார் கிருஷ்ணர். 
நாரதர் கோகுலம் சென்றார்.
""கோபியரே! கிருஷ்ணனுக்கு உடல்நிலைசரியில்லை,''என்றார்.
இதைக் கேட்ட மாத்திரத்திலேயே பல கோபிகைகள் மயங்கி விழுந்து விட்டனர். சிலர் அரைகுறை மயக்கத்தில்,""கண்ணா! உனக்கு என்னாயிற்று! கிருஷ்ணா! நீ பிழைக்காவிட்டால் நாங்களும் பிழையோம். இந்த உலகில் வாழமாட்டோம்,'' என்று உயிர்போகும் நிலைக்கு ஆளாகிவிட்டனர். சிலர், பித்துப் பிடித்ததைப் போல தயிர் பானைகளை கீழே போட்டு விட்டு அங்குமிங்குமாக ஓடினர். 
""கிருஷ்ணா! உனக்கு என்னாயிற்று? இப்போதே உன்னைப் பார்க்க வேண்டும்!'' என்று அரற்றினர். அவர்களின் பக்தியைப் பார்த்து நாரதர் அசந்து போனார்.
தேவலோகத்திற்கு போய், ""கிருஷ்ணனுக்கு உடல்நிலை சரியில்லை, உங்களில் பக்தி மிக்கவர் பாதத்தூளியைக் கொடுங்கள் என்ற போது, ""நாங்கள் ஒன்றும் அவர் நினைக்குமளவு பக்தி செலுத்தவில்லையே!'' என்றார்களே தவிர, ஒருவராவது இப்படி வருத்தப்பட்டார்களா! ஏன்! நாராயணா! நாராயணா! என்று அவன் திருநாமத்தை எந்நேரமும் உச்சரிக்கும் நான் கூட அப்படி ஒரு நிலையை அடையவில்லையே! இந்தக் கோபிகைகளோ, "கிருஷ்ணனின் உடல்நிலை சரியில்லை எனக் கேட்டதுமே கலங்கித் துடிக்கிறார்களே! உயிரையே விடுமளவு பக்தி செலுத்துகிறார்களே! இவர்களின் பாதத்தூளியே கிருஷ்ணரின் வியாதியைக் குணப்படுத்தும்' என்று நினைத்த நாரதர், அவர்கள் பாதம்பட்ட கோகுலத்து மண்ணில் சிறிதளவு நீரில் கரைத்து கொடுத்தார். கிருஷ்ணருக்கு சுகமாகி விட்டது.
அந்தக்கண்ணனை நாமும் "கிருஷ்ணா! கிருஷ்ணா' என பக்தியுடன் நினைப்போம். அவனது கருணை நம்மீது படத்திடும்.
அனைத்தும் கிருஷ்ணார்ப்பணம் 

பெண்கள் வளையல் அணிவதில் இத்தனை விஷயங்கள் இருக்கிறதா?


Image result for பெண்கள் வளையல் அணிவது ஏன்பெண்கள் வளையல் அணிவதில் இத்தனை விஷயங்கள் இருக்கிறதா?



பெண்களுக்கு என்றால் வளையல், மூக்குத்தி, தோடு, நெத்திச்சுட்டி, அட்டி என ஏராளமான ஆபரண அணிகள் கொட்டிக் கிடக்கின்றன. அந்த அணிகள் ஒவ்வொன்றின் பின்னணியிலும் சுவாரசியமான காரணங்கள் இருக்கின்றன.
வளையல் அணிவதிலும் கூட பெண்களுக்கு சில அபூர்வ பலன்கள் அடங்கியிருக்கிறது. ஆனால் இன்றெல்லாம் பெண்கள் பெரும்பாலும் வளையல் அணிவதில்லை. ஏதாவது விசேஷம் என்றால் மட்டும் அணிகிறார்கள். நகரங்களில் வளையல் என்பது ஃபேஷன் பட்டியலில் இருந்தே நீக்கப்பட்டு பல யுகங்கள் ஆகிவிட்டன.

தேவி தத்துவம்:
கண்ணாடி வளையலில் தேவி தத்துவம், சாத்வீகத் தன்மை மற்றும் சைதன்யம் போன்ற அதியற்புத தன்மைகள் நிறைந்திருக்கின்றன. அவற்றை அணிந்து கொள்ளும்போது, எழும் ஓசை சாத்வீக, சைதன்ய அதிர்வலைகளை ஈர்க்கின்றன. தீய சக்திகளை விரட்டியடித்து பெண் தேவதையின் அருளை ஈர்க்கும் சக்தி இந்த சாத்வீக-சைதன்ய அதிர்வலைகளுக்கு உண்டு.

வளைகாப்பு:
பெண்களுக்கு வளைகாப்பு என்ற சுபநிகழ்ச்சி இந்தியா முழுவதும் பண்டைய காலத்தில் இருந்தே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கருவுற்றிருக்கும் பெண்ணுக்கு வளையல் அணிவிப்பது மட்டுமின்றி, அந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் எல்லா வயது பெண்களுக்கும் வளையல்கள் சீராக கொடுக்கப்படும். கர்ப்பிணிப் பெண் மெல்ல நடந்துவரும் உடல்வாகை கொண்டிருப்பாள். அவள் வரும்போது வளையோசை சத்தம் கேட்கும். இதனால் அவள் வருவதை புரிந்துகொண்டு அவளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் மற்றவர் ஒதுங்கிச் செல்வர்.

கண்ணாடி வளையல்:
கண்ணாடி வளையல்களில் விரிசல் அல்லது உடைப்பு ஏற்பட்டிருந்தால் அதை அணியக்கூடாது. உடனடியாக கைகளிலிருந்து அகற்றிவிட வேண்டும். ஏனென்றால் உடைந்த வளையல்களில் சாத்வீக-சைதன்ய சக்திகள் செயலற்று போகும். இதனால் அந்த வளையல்களை அணிவதன் மூலம் எந்தவித காப்பு சக்திகளும் கிடைக்காது. டெல்லி நகரத்து பெண்கள் தங்கள் பாதுகாப்பிற்காக ஹேண்ட்பேக்கில் வைத்திருக்கும் சிறு கத்தி போன்று, நம் இளம்பெண்களின் பாதுகாப்பு கவசமாகவும் கூட கண்ணாடி வளையல்கள் திகழ்கின்றன.

நிறங்களின் பலன்கள்:
  1. பச்சை நிற வளையல்கள் அணிவது சிறப்பானது. இந்நிறத்தில் அணிவதால் மன நிம்மதி, மகிழ்ச்சி கிடைக்கும்.
  2. சிவப்பு நிற வளையல் தீய  சக்திகளை விரட்ட வல்லது. காப்பு சக்திகளை அதிகம் கிரகிக்கக்கூடிய ஆற்றல் இந்நிறத்திற்கு உண்டு.
  3. ஜிகினா வேலைப்பாடுகள் கொண்ட வளையல்கள் இதுபோன்ற காப்பு சக்திகளை ஈர்க்காது என்பதால் அவற்றை தவிர்ப்பது நன்று.

வியாழன், 24 மே, 2018

மழலைச் செல்வம் தரும் சந்தான லட்சுமி விரத வழிபாடு

சந்தான லட்சுமி க்கான பட முடிவுமழலைச் செல்வம் தரும் சந்தான லட்சுமி விரத வழிபாடு




குழந்தை பாக்கியத்தை இயற்கையிலே வாய்க்கப்பெறாத பெண்கள் சந்தான லட்சுமி விரதத்தையும் ,சந்தான கிருஷ்ண விரதத்தையும் கடைப்பிடிக்க வேண்டும். வளர்பிறையும் நல்ல திதியும் அமைந்த நல்ல ஞாயிற்றுக்கிழமையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். வீட்டில் ஓர் அறையில் கிழக்கு முகமாக பீடமமைத்து, நெல்லைப் பரப்ப வேண்டும். அதன் மீது ஒரு தட்டை வைக்க வேண்டும். அதில் பச்சரிசி பரப்ப வேண்டும். பச்சரிசித் தட்டில் கலசம் வைத்து, கலசத்தில் முழுவதும் நீர் ஊற்றி மாவிலையும் தேங்காயும் வைக்க வேண்டும். முகமில்லாமல் ஒரு வட்டமாய் இருக்கும் வாழைப்பூ குத்துவிளக்கைக் கலசத்திற்கு அருகில் வைக்க வேண்டும். சந்தானலட்சுமி, தானியலட்சுமி, சந்தான கிருஷ்ணன் ஆகிய தெய்வ பூஜைக்கு இந்த விளக்கைத்தான் பயன்படுத்த வேண்டும் என்பது சாஸ்திர விதி.
 

ஞாயிற்றுக்கிழமை சூரியன் தோன்றுவதற்கு முன், இவற்றைத் தயாராக வைத்திருந்து, சூரியன் தோன்றும் வேளையில் விநாயகர் பூஜையைத் தொடங்க வேண்டும். கலச பூஜையைத் தனலட்சுமி ஸ்தோத்திரங்களைச் சொல்லி, கற்பூர தீப தூபம் காட்டி வணங்க வேண்டும். திருவிளக்குப் பூஜையை அஷ்டோத்ர ஈத நாமாவளி சொல்லிப் பூஜை செய்து வணங்க வேண்டும். தனலட்சுமி அஷ்டோத்திர சத நாமாவளி சொல்லிக் கலசத்தைப் பூஜை செய்ய வேண்டும். பூஜை முடிந்தவுடன், கணவனும், மனைவியும் ஒன்றாகத் தட்டைப்பிடித்துக் கற்பூர தீபாராதனை காட்டி வணங்க வேண்டும். இருவரும் சேர்ந்தே உடலின் எட்டு உறுப்புகளும் தரையில்படும்படி (அஷ்டாங்க) ஆணும் ஆறு உறுப்புகளும் தரையில் படும்படி பெண்ணும் நமஸ்காரம் செய்ய வேண்டும்.

கணவன்-மனைவி இருவர் மட்டுமே செய்யும் இந்த பூஜை முடிந்ததும், அக்கம் பக்கமுள்ள சின்னஞ்சிறு குழந்தைகளை அழைத்துவரச் சொல்லி, பூஜை பீடத்தைச் சுற்றி அமரச் சொல்ல வேண்டும். பின்பு, மீண்டும்
கலச பூஜை, கற்பூர தூப தீபம் காட்டி வணங்கிவிட்டு, பிரசாதங்களுள் பசுவின் பால், தேன், இளநீர், எள் உருண்டை ஆகியவை தவிர மற்றவற்றைக் குழந்தைகளுக்கத் தரவேண்டும். கணவனும், மனைவியும், எள் உருண்டைகளை உண்டு விட்டு, பால், தேன், இளநீர் ஆகியன கலந்த சந்தான பானத்தை அருந்த வேண்டும். இந்த முறைப்படி, கரு தோன்றும் வரை பதினொரு வாரம், பதினாறு வாரம், இருபத்தொரு வாரம், நாற்பது வாரம், நாற்பத்தெட்டு வாரம் என விரதம் இருக்கலாம். ஒரே வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை தனலட்சுமி விரதத்தையும் புதன்கிழமை சந்தானகிருஷ்ண விரதத்தையும் கடைபிடிக்கலாம்.

பிள்ளை வரம் தரும் ஆடிப்பூர தரிசனம்!

பிள்ளை வரம் தரும் ஆடிப்பூர தரிசனம்! க்கான பட முடிவு
பிள்ளை வரம் தரும் ஆடிப்பூர தரிசனம்!
தொடர்புடைய படம்ஆடி மாதத்தில் உள்ள முக்கியமான வைபவங்களில் ஆடிப்பூரமும் ஒன்று. ஸ்ரீஆண்டாளின் அவதாரத் திருநாள் ஆடிப்பூரம். இந்த நன்னாளில், அதாவது ஆடி மாத பூர நட்சத்திர நாளில், சுமங்கலிகளுக்கு வளையல், மஞ்சள், குங்குமம், தேங்காய், பழம், வெற்றிலைப்பாக்கு, ரவிக்கை வைத்து கொடுத்தால் ஐஸ்வர்யம் பெருகும் என்பது ஐதீகம். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும் என்பது நம்பிக்கை.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீரங்கமன்னார் கோயில், மன்னார்குடி ஸ்ரீராஜகோபால ஸ்வாமி கோயில் மற்றும் திருவண்ணாமலை கோயில்களில் பத்து நாட்களும், கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் மூன்று நாட்களும் ஆடிப்பூரத் திருவிழா விமரிசையாக நடைபெறும்.
ஆடிப்பூர நாளில், அனைத்து ஆலயங்களிலும் அம்பாள் சந்நிதிகளில் வளையல்கள் சாற்றி வழிபாடுகள் நடைபெறும். இந்த வைபவத்தைத் தரிசிப்பதுடன், பிரசாதமாகத் தரப்படும் வளையலை பெற்றுச் சென்று வீட்டில் வைத்தால், அங்கு சர்வ மங்கலங்களும் பொங்கிப்பெருகும். விரைவில் பிள்ளை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்
கர்ப்பமான பெண்களுக்கு வளைக் காப்பு செய்வது வழக்கமல்லவா? அம்பிகைக்கு வளையல்கள் சார்த்தியும் வழிபாடுகள் நடைபெறும். அகிலாண்ட நாயகிக்கு வளையல்களாகலேயே அலங்காரம் செய்து வழிபடும் நாள் ஆடி மாதத்தில், பூரம் நட்சத்திரம் இணையும் நாள் ஆகும். வளைகாப்பு நிகழ்ச்சி என்பது கர்ப்பமான பெண்ணுக்கு மகிழ்ச்சியூட்டும் விதமாக உறவினர்கள் புடைசூழ வாழ்த்துவார்கள்.

கர்ப்ப காலத்தில் பெண்ணுக்கு எவ்வித (உடல் - மனம்) கஷ்டங்களும் உண்டாகாதவாறு பார்த்துக் கொள்வார்கள். இந்த ஆடிப்பூர தினத்தில்தான் அம்பிகைக்கு வளைகாப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். அம்பிகை வளையல் அலங்காரத்தின் மனம் மகிழ்ந்து, நெஞ்சம் நிறைந்து தன் மக்கள் அனைவருக்கும் அருள்பாலிப்பாள்.
அம்பிகைக்கு வளையல்கள் வழங்கி சார்த்துவதும், வளையல் காப்பு அலங்காரத்தை தரிசனம் செய்வதும் அற்புதமான பலன்களை வாரி வழங்க கூடியது. ஆனந்தத்தை வழங்கக் கூடியது. வளமான வாழ்க்கையை வழங்கக் கூடியது. 

புதன், 23 மே, 2018

நடராஜரின் நடன சபைகள்!

நடராஜரின் நடன சபைகள்!வெள்ளி சபை க்கான பட முடிவு

ஐம்பெரும் அம்பலங்கள் அல்லது ஐம்பெரும் மன்றங்கள் என்பது சிவன் நடனக் கோலத்தில் நடராசராக எழுந்தருளியுள்ள சிவத்தலங்களுள் முக்கியமான ஐந்து தலங்களாகும்

 சிதம்பரம், மதுரை, திருவாலங்காடு, திருநெல்வேலி, குற்றாலம் ஆகிய ஐந்து இடங்களிலும் உள்ள சிவாலய ங்களில் நடராஜர், தன் நடனத்தால் சிறப்பித்த சபைகள் இருக்கின்றன. இவை பஞ்ச சபைகள் அல்லது ஐம்பெரும் சபைகள் என்று அழைக்கப்படுகின்றன. 



நடராஜரின் நடன சபைகள் கனகசபைஇரத்தினசபைவெள்ளி சபைதாமிர சபைசித்திர சபை என்றும் அழைக்கப்படுகின்றன.
வெள்ளி சபை க்கான பட முடிவு

பொற்சபை

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ளது திருமூலட்ட நாதர் ஆலயம். இங்கு அருள் பாலிக்கும் நடன நாயகன் நடராஜர் வீற்றிருக்கும் இடமே, பொற்சபை, பொன்னம்பலம், கனக சபை, பொன் மன்றம் என்று பல பெயர்களால் அழைக்கப்படுகின்றன. இறைவன் தனது திருநடனத்தை, பதஞ்சலி முனிவர் மற்றும் வியாக்கிரபாதர் ஆகியோருக்கு அருளிய தலம் இதுவாகும்.

இந்த தலத்தில் நடராஜர், தனது இடது காலை ஊன்றி, வலது காலைத் தூக்கி நடனம் ஆடுகிறார். இங்கு இறைவனின் நடனம் ‘ஆனந்த தாண்டவம்’ என்று அழைக்கப்படுகிறது.

சித்திர சபை

திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள குற்றாலநாதர் ஆலயத்தில் இருக்கிறது சித்திர சபை. இங்கு எமனை சம்ஹரித்த இறைவன், பார்வதியுடன் மார்கண்டேயருக்கு அருளியபடி சித்திர வடிவில் காட்சியளிக் கிறார். இங்கு நடனம் புரிந்த இறைவ னின், தாண்டவத்தை கண்டுகளித்த பிரம்மதேவன், தானே இறைவனின் திருநடனத்தை ஓவிய வடிவில் வடித்ததாக கருதப்படுகிறது. இந்த இடம் சித்திர சபை, சித்திர அம்பலம், சித்திர மன்றம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. இங்கு இறைவன் ஆடிய திருநடனம் ‘திரிபுர தாண்டவம்’ எனப்படுகிறது.

ரத்தின சபை

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் உள்ளது, ரத்தின சபை. இங்கு காளியை தனது நடனத்தின் மூலம் சிவபெருமான் வெற்றி கண்டார் என்கிறது தல புராணம். இந்த இடம் ரத்தின அம்பலம், ரத்தின சபை, மணி மன்றம் என்று பல பெயர்களால் வழங்கப்படுகி றது. இங்கு இறைவன் எட்டு கரங்களுடன், வலது காலை ஊன்றி இடது காலால் காதணியை மாட்ட ஆயத்தமாவது போல் காட்சியளிக்கின்றார்.

காளியுடன் நடந்த போட்டியில், காதில் இருந்து விழுந்த காதணியை இறைவன் தனது இடது காலால் எடுத்து இடது காதில் மாட்டி காளியை வெற்றி கொண்டார் என்கிறது தல வரலாறு. காரைக்கால் அம்மையார், தன் தலையால் நடந்து சென்று, இங்குள்ள நடராஜரின் திருவடியில் அமர்ந்து, அனுதினமும் அவரது திருநடனத்தைக் காணும் பேறு பெற்றார். இங்கு இறைவன் ஆடும் நடனம் ‘ஊர்த்துவ தாண்டவம்’ என்று போற்றப்படுகிறது.

வெள்ளி சபை

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அருளும் ஆலயமே ‘வெள்ளி சபை’ என்று போற்றப்படுகிறது. இதனை வெள்ளியம்பலம், வெள்ளி மன்றம் என்றும் போற்றுகிறார்கள். இங்கு அருள்பாலிக்கும் நடராஜர், தனது பக்தனான பாண்டிய மன்னனின் வேண்டு கோளுக்கு இணங்க, வலது காலை ஊன்றி, இடது காலைத் தூக்கி திருநடனம் புரிகிறார்.

இங்கும் முதலில் இறைவன் பஞ்சலி, வியாக்கிர பாத முனிவருக்கு தில்லையில் காட்டிய காட்சியையே காட்டி அருளினார். அதன்பிறகு, பாண்டிய மன்னனின் வேண்டுகோள்படி, காலை மாற்றி ஆடி, அந்த நிலையிலேயே அருள்கிறார். இங்கு இறைவ னின் நடனம் ‘சந்தியா தாண்டவம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

தாமிர சபை

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் இருக்கும் நடராஜர் சன்னிதியே ‘தாமிர சபை’ என்று போற்றப்ப டுகிறது. இங்கு தாமிரத்தால் ஆன அம்பலத்தில், இறைவன் தன் இடது காலை ஊன்றி வலது காலைத் தூக்கி திருநடனம் புரிகின்றார். இறைவன் நடனம் புரியும் சபையானது, தாமிர சபை, தாமிர அம்பலம், தாமிர மன்றம் என்று வழங்கப்படுகிறது. இங்குள்ள இறைவன் சந்தன சபாபதி என்று அழைக்கப்படுகி றார். இங்கு இறைவன் ஆடும் நடனமானது ‘திருத்தாண்டவம்’ என்று சொல்லப்படுகிறது.

இறந்தவர்களை வணங்குவதால் என்ன பலன்?

இறந்தவர்களை வணங்குவதால் என்ன பலன்?முன்னோர்களுக்கு தர்ப்பணம்

வணங்குதல் வேறு, வழிபடுதல் வேறு. பொதுவாக நம்முடைய போற்றுதலுக்கு உரியவர்கள் மூவர் - தேவர்கள், ரிஷிகள், பித்ருக்கள் என்று வரிசைப்படுத்தலாம். தேவர்களையும், ரிஷிகளையும் நாம் நேரடியாகக் காண இயலாது. இவ்வாறு காணமுடியாமல் அனுபவித்து மட்டுமே உணரக்கூடிய இந்த சக்திகளைப் போற்றும் முறைக்கு வழிபடுதல் என்று பெயர். பித்ருக்கள் என்று அழைக்கப்படுபவர்களை நேரடியாகக் கண்டிருப்போம், அவர்களது மறைவிற்குப் பின் அவர்களுடன் பழகிய நினைவுகளை எண்ணி அதனை அனுபவித்தும் உணர்வோம். 

உயிருடன் இருக்கும்வரை அவர்களை வணங்கியும், இறந்தபின் அவர்களை தெய்வாம்சம் கொண்டவர்களாகக் கருதி அவர்களை வழிபடவும் செய்கிறோம். ஆக, உயிருடன் இருப்பவர்களைப் போற்றுவதை வணங்குதல் என்றும், கண்ணால் காண முடியாத சக்திகளைப் போற்றுவதை வழிபடுதல் என்றும் இரண்டு வகையாகப் பிரித்துப் பார்க்க வேண்டும். இந்த இரண்டு முறைகளையும் நாம் பயன்படுத்துவது முன்னோர்களிடம் மட்டுமே. 

இந்த மூவரில் தேவர்களிடம் ஏதேனும் ஒரு வேண்டுகோளை நிறைவேற்றக்கோரும் வகையில் நம்முடைய வழிபாடு அமைகிறது. ரிஷிகளிடம் ஞானத்தினையும், நல்லறிவினையும் தர வேண்டுகிறோம். இந்த இருவரிடமும் ஏதோ ஒரு ஆதாயத்தை எதிர்பார்த்தே நம்முடைய வழிபாடு அமைகிறது. ஆனால், முன்னோர்களை ஆராதனை செய்வது என்பது நாம் அவசியம் செய்ய வேண்டிய நம் கடமைகளில் ஒன்று என சாஸ்திரம் வலியுறுத்துகிறது. 

பலனை எதிர்பாராமல் செய்யவேண்டிய கடமைகளில் அதிமுக்கியமானது முன்னோர் வழிபாடு. பித்ரு லோகத்தில் இருக்கும் அவர்களுக்கு ஆகாரம் அளிக்க வேண்டியது பிள்ளைகளாகிய நமது கடமை. ஈரேழு பதினான்கு லோகத்தில் உள்ளவர்களுக்கும் இறைவன் ஏதோ ஒருவழியில் உணவளித்துக்கொண்டுதான் இருக்கிறான் என்றாலும் பித்ரு லோகத்தில் உள்ளவர்களுக்கு அவர்களது வம்சாவழியினர் அளிக்கின்ற உணவே திருப்தியைத் தருகிறது. தனயன் வெறும் தண்ணீரைத் தந்தாலும் அது அமிர்தமாக தந்தையைச் சென்றடைகிறது. 

உதாரணமாக பள்ளியில் மாணவர்களுக்கு என்னதான் அரசாங்கம் மதிய உணவினைத் தந்தாலும், வீட்டிற்கு வந்து பெற்றோர் கையால் சாப்பிடும் உணவே அவர்களுக்கு முழுமையான மனநிறைவைத் தருகிறது. ஹாஸ்டலிலும், ஹோட்டலிலும் பணம் கட்டிச் சாப்பிட்டாலும், பெற்றவர்களின் கையால் சாப்பிடும் பழைய சோறுகூட பஞ்சாமிர்தமாக சுவைக்கிறது. 

ஆக, அவரவருக்கு உரிமையானவர்கள் அளிக்கும் உணவே முழுமையான திருப்தியைத் தருவதால் பித்ருக்களுக்கு சிராத்தம் செய்ய வேண்டியது அவசியமாகிறது. வம்சவிருத்தி, மனத்தெளிவு, நிலையான சொத்து அமைதல் என சகல சௌபாக்யங்களும் முன்னோர் வழிபாட்டின் பலனாகக் கிடைக்கும் என்றாலும், இந்தப் பலன்களையெல்லாம் எதிர்பாராது செய்ய வேண்டிய அதிமுக்கியமான கடமை முன்னோர்களை வழிபடுவதாகும். 



முன்னோர் ஆசி பெற வழிபாடு!

முன்னோர் ஆசி பெற வழிபாடு!தொடர்புடைய படம்
இறந்தவர்களின் திதி வரும் அன்று பிண்டம் கொடுத்து வரும் பழக்கம் இருக்கிறது. அப்படி கொடுக்கும் அனைவரும், வாழ்க்கையில் ஓரளவுக்கு நல்ல நிலையில் இருக்கிறார்கள். உங்கள் முன்னோர்களின் ஆசி, உங்களுக்கு முழுவதும் கிடைக்க, ஒவ்வொரு அமாவாசையும் விரதம் இருந்து, மனமுருகி உங்கள் முன்னோர்களின் ஆசியை வேண்டுங்கள்.   அவர்களை விட, உங்களுக்கு வரும் இன்னல்களை தடுக்க கூடிய சக்தி வேறு இல்லை. நீங்கள் உயிருள்ள வரை, உங்கள் தாய், தந்தையரின் இறந்த திதி வரும் நாளில், சிராத்தம்  செய்யுங்கள்.     இதைவிட உங்களுக்கு பெரிய காரியம், முக்கியமான காரியம் எதுவும் இல்லை.    வாய்ப்பு இருக்கும் அன்பர்கள், நீங்களும் ஒவ்வொரு அமாவாசைக்கும் தர்ப்பணம் செய்ய  ஆரம்பிக்கலாம்.   காலையில் தினமும், நீங்கள் உணவு உட்கொள்ளும் முன் காகத்திற்கு உணவிடலாம். உங்கள் கடன் தீர்ந்தால் தான், உங்கள் பலம் பெருகும். உங்கள் சந்ததியை நீங்கள் காக்க முடியும். உங்கள் உணவை காகம் சாப்பிடும் போது உங்கள் கர்ம வினைகள் கரைய ஆரம்பிக்கும்.      உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் அத்தனை விஷயங்களும், விலகும்.    உங்கள் பின்னால், உங்கள் மேல் உயிருக்குயிராக பாசம் வைத்து இருக்கும் ஒரு படையே உருவாகும். நீங்கள் வெகு விரைவில் நிம்மதியும், புகழின் உச்சியிலும் நிற்பீர்கள். சூரிய சஞ்சாரத்தில் உத்தராயணம், தட்சிணாயனம் என்று இரு பிரிவுகள் இருக்கிறது. 

இரவை ஆரம்பிக்கும் மாதங்களில், விண்ணில் இருந்து அபரிமிதமான சக்தி வெளிப்படுகிறது. அந்த வகையில் ஆடி மாதத்திற்கும், தை மாதத்திற்கும் வரும் அமாவாசையில் நீங்கள் உங்கள் முன்னோர்களை நினைத்து எந்த பூஜை, தர்ப்பணம் செய்தாலும், அவர்களை உடனே சென்றடையும். இறந்தவர்களின் திதி தெளிவாக தெரியாதவர்கள், இந்த ஆடி அமாவாசையன்றோ, அல்லது தை அமாவாசையன்றோ, பித்ரு பூஜை செய்து, பிண்டங்கள் கொடுக்கலாம். 

உங்களின் முன்னோர்களின் ஆசி முதலில், அதன்பின் உங்கள் குலதெய்வம், அதற்கு பிறகு தான் மற்ற தெய்வங்கள் எல்லாம். உங்களுக்கு ஒரு கஷ்டம், உடனே ஓடி வர்றது, உங்க அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி தான். இவர்களுக்கு பலம் கொடுக்கிறது, உங்கள் பித்ரு பூஜையும், தர்ப்பணமும் தான். 
பித்ரு பூஜை க்கான பட முடிவு

பித்ரு பூஜை செய்ய, தர்ப்பணம் கொடுக்க வசதி இல்லை என்று நினைக்கக்கூடாது. உள்களால் என்ன முடியுமோ, அதை மட்டும் செய்யுங்கள் போதும். பித்ருக்களை வழிபட மந்திரம் தெரிந்திருக்க வேண்டும், ஐதீகம் புரிய வேண்டுமே என்று சிலர் தவிப்பார்கள், தயங்குவார்கள். அத்தகைய தவிப்போ, தயக்கமோ  தேவை இல்லை.

தாயே தந்தையே நான் கொடுக்கும் இந்த தண்ணீரையும், எள்ளையும் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சொன்னால் கூட போதும். உங்கள் பெற்றோர் அல்லது முன்னோர்கள் மனம் குளிர்ந்து போவார்கள். எனவே பித்ரு பூஜைகள், தர்ப்பணம், சிரார்த்தம் செய்யாமல் இருந்து விடாதீர்கள். அதிலும் வரும் மகாளய  அமாவசை தினம் மகிமை வாய்ந்தது.