வெள்ளி, 30 மார்ச், 2018

மாரியம்மன் 108 போற்றி! ஓம் சக்தி


மாரியம்மன் 108 போற்றி! ஓம் சக்தி

கருணையுள்ளம் கொண்டவள் மாரியம்மன்.நாம் கேட்க்கும் நியாமான கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து நமக்கு அருள்மழை பொழிபவள்.ஆதலால் அந்த அம்மனின் 108 போற்றி சொல்லி வழிபட்டால் சகல வளங்களும் பெறலாம்.
தொடர்புடைய படம்






  1. ஓம் அம்மையே போற்றி
  2. ஓம் அம்பிகையே போற்றி
  3. ஓம் அனுக்ரஹ மாரியே போற்றி
  4. ஓம் அல்லல் அறுப்பவளே போற்றி
  5. ஓம் அங்குசபாசம் ஏந்தியவளே போற்றி
  6. ஓம் ஆதார சக்தியே போற்றி
  7. ஓம் ஆதி பராசக்தியே போற்றி
  8. ஓம் இருள் நீக்குபவளே போற்றி
  9. ஓம் இதயம் வாழ்பவளே போற்றி
  10. ஓம் இடரைக் களைவாய் போற்றி
  11. ஓம் இஷ்ட தேவதையே போற்றி
  12. ஓம் ஈஸ்வரித் தாயே போற்றி
  13. ஓம் ஈடிணை இலாளே போற்றி
  14. ஓம் ஈகை மிக்கவளே போற்றி
  15. ஓம் உமையவளே தாயே போற்றி
  16. ஓம் உயிர் பிச்சை தருவாய் போற்றி
  17. ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
  18. ஓம் எலுமிச்சை பிரியாயே போற்றி
  19. ஓம் எட்டுத்திக்கும் வென்றாளே போற்றி
  20. ஓம் ஏகாந்த முத்துமாரியே போற்றி
  21. ஓம் ஏழையர் அன்னையே போற்றி
  22. ஓம் ஐங்கரத்தவளே போற்றி
  23. ஓம் ஒற்றுமை காப்பாய் போற்றி
  24. ஓம் ஓங்கார ரூபினியே போற்றி
  25. ஓம் ஔடதம் ஆனவளே போற்றி
  26. ஓம் கவுமாரித்தாயே போற்றி
  27. ஓம் கண்ணாகத் திகழ்பவளே போற்றி
  28. ஓம் கரை சேர்ப்பவளே போற்றி
  29. ஓம் காக்கும் அன்னையே போற்றி
  30. ஓம் கிள்ளை மொழியாளே போற்றி
  31. ஓம் கீர்த்தி அளிப்பவளே போற்றி
  32. ஓம் குங்கும நாயகியே போற்றி
  33. ஓம் குறை தீர்ப்பவளே போற்றி
  34. ஓம் கூடிக் குளிர்விப்பவளே போற்றி
  35. ஓம் கை கொடுப்பவளே போற்றி
  36. ஓம் கோலப்பசுங்கிளியே போற்றி
  37. ஓம் சக்தி உமையவளே போற்றி
  38. ஓம் சவுந்தர நாயகியே போற்றி
  39. ஓம் சித்தி தருபவளே போற்றி
  40. ஓம் சிம்ம வாகினியே போற்றி
  41. ஓம் சீரெலாம் தருபவளே போற்றி
  42. ஓம் சீதளா தேவியே போற்றி
  43. ஓம் சூலம் ஏந்தியவளே போற்றி
  44. ஓம் செந்தூர நாயகியே போற்றி
  45. ஓம் செண்பகாதேவியே போற்றி
  46. ஓம் செந்தமிழ் நாயகியே போற்றி
  47. ஓம் சொல்லின் செல்வியே போற்றி
  48. ஓம் சேனைத் தலைவியே போற்றி
  49. ஓம் சோகம் தீர்ப்பவளே போற்றி
  50. ஓம் தத்துவ நாயகியே போற்றி
  51. ஓம் தர்ம தேவதையே போற்றி
  52. ஓம் தரணி காப்பாய் போற்றி
  53. ஓம் தத்துவம் கடந்தவளே போற்றி
  54. ஓம் தாலிபாக்கியம் தருவாய் போற்றி
  55. ஓம் தாமரைக் கண்ணியே போற்றி
  56. ஓம் தீமை களைபவளே போற்றி
  57. ஓம் துன்பம் தவிர்ப்பவளே போற்றி
  58. ஓம் தூய்மை மிக்கவளே போற்றி
  59. ஓம் தென்றலாய் குளிர்பவளே போற்றி
  60. ஓம் தேசமுத்து மாரியே போற்றி
  61. ஓம் தையல் நாயகியே போற்றி
  62. ஓம் தொல்லை போக்குவாய் போற்றி
  63. ஓம் தோன்றாத் துணையே போற்றி
  64. ஓம் நன்மை அளிப்பவளே போற்றி
  65. ஓம் நலமெல்லாம் தருவாய் போற்றி
  66. ஓம் நாக வடிவானவளே போற்றி
  67. ஓம் நாத ஆதாரமே போற்றி
  68. ஓம் நாகாபரணியே போற்றி
  69. ஓம் நானிலம் காப்பாய் போற்றி
  70. ஓம் நித்ய கல்யாணியே போற்றி
  71. ஓம் நிலமாக நிறைந்தவளே போற்றி
  72. ஓம் நீராக குளிர்ந்தவளே போற்றி
  73. ஓம் நீதி நெறி காப்பவளே போற்றி
  74. ஓம் நெஞ்சம் நிறைபவளே போற்றி
  75. ஓம் நேசம் காப்பவளே போற்றி
  76. ஓம் பக்தர் தம் திலகமே போற்றி
  77. ஓம் பவளவாய் கிளியே போற்றி
  78. ஓம் பல்லுயிரின் தாயே போற்றி
  79. ஓம் பசுபதி நாயகியே போற்றி
  80. ஓம் பாம்புரு ஆனாய் போற்றி
  81. ஓம் புற்றாகி நின்றவளே போற்றி
  82. ஓம் பிச்சியாய் மணப்பவளே போற்றி
  83. ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி
  84. ஓம் பிழை பொறுப்பவளே போற்றி
  85. ஓம் பிள்ளையைக் காப்பாய் போற்றி
  86. ஓம் பீடை போக்குபவளே போற்றி
  87. ஓம் பீடோப ஹாரியே போற்றி
  88. ஓம் புத்தி அருள்வாய் போற்றி
  89. ஓம் புவனம் காப்பாய் போற்றி
  90. ஓம் பூமாரித்தாயே போற்றி
  91. ஓம் பூவில் உறைபவளே போற்றி
  92. ஓம் பூஜைக்குரியவளே போற்றி
  93. ஓம் பூக்குழி ஏற்பவளே போற்றி
  94. ஓம் பூசல் ஒழிப்பவளே போற்றி
  95. ஓம் மழைவளம் தருவாய் போற்றி
  96. ஓம் மங்கள நாயகியே போற்றி போற்றி
  97. ஓம் மந்திர வடிவானவளே போற்றி
  98. ஓம் மழலை அருள்வாய் போற்றி
  99. ஓம் மண்ணுயிர் காப்பாய் போற்றி
  100. ஓம் மாணிக்க வல்லியே போற்றி
  101. ஓம் மகமாயித் தாயே போற்றி
  102. ஓம் முண்டகக்கண்ணியே போற்றி
  103. ஓம் முத்தாலம்மையே போற்றி
  104. ஓம் முத்து நாயகியே போற்றி
  105. ஓம் வாழ்வு அருள்வாய் போற்றி
  106. ஓம் வீரபாண்டி வாழ்பவளே போற்றி
  107. ஓம் வேம்பில் இருப்பவளே போற்றி
  108. ஓம் ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி.

பிரச்சனைகள் அகல ஸ்ரீ வாராஹி அம்மன் 108 போற்றி

பிரச்சனைகள் அகல ஸ்ரீ வாராஹி அம்மன் 108 போற்றி

பிரச்சனைகள் அகல ஸ்ரீ வாராஹி அம்மன் 108 போற்றி
சப்த கன்னிகள் ஏழு பேரில் ஐந்தாவது கன்னிதான் இந்த வராஹி அம்மன். மனித உடலும், வராகி பன்றி முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே, ஆதரவிலே மழைக்கு நிகரானவள். இவளது ரதம் கிரி சக்கர காட்டு பன்றிகள் இழுக்கும் ரதமாகும். இந்தியாவில் வராஹிஅம்மனுக்கு இரு இடங்களில் தான் ஆலயம் உள்ளது.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மனமுருக பிரார்த்தனை செய்தால் குழந்தை பாக்கியம் கைகூடுகிறது. தவிர வழக்கு விவகாரங்கள், வியாபார சிக்கல்கள், கோர்ட் சம்பந்தமான பிரச்சினைகள் குறித்து வாராஹி அம்மனிடம் வேண்டிக்கொண்டால் பிரச்சினைகள் தீர்கின்றன.
ஓம் வாராஹி போற்றி
ஓம் சக்தியே போற்றி
ஓம் சத்தியமே போற்றி
ஓம் ஸாகாமே போற்றி
ஓம் புத்தியே போற்றி
ஓம் வித்துருவமே போற்றி
ஓம் சித்தாந்தி போற்றி
ஓம் நாதாந்தி போற்றி
ஓம் வேதாந்தி போற்றி
ஓம் சின்மயா போற்றி
ஓம் ஜெகஜோதி போற்றி
ஓம் ஜெகஜனனி போற்றி
ஓம் புஷ்பமே போற்றி
ஓம் மதிவதனீ போற்றி
ஓம் மனோநாசினி போற்றி
ஓம் கலை ஞானமே போற்றி
ஓம் சமத்துவமே போற்றி
ஓம் சம்பத்கரிணி போற்றி
ஓம் பனை நீக்கியே போற்றி
ஓம் துயர் தீர்ப்பாயே போற்றி
ஓம் தேஜஸ் வினி போற்றி
ஓம் காம நாசீனி போற்றி
ஓம் யகா தேவி போற்றி
ஓம் மோட்ச தேவி போற்றி
ஓம் நானழிப்பாய் போற்றி
ஓம் ஞானவாரினி போற்றி
ஓம் தேனானாய் போற்றி
ஓம் திகட்டா திருப்பாய் போற்றி
ஓம் தேவ கானமே போற்றி
ஓம் கோலாகலமே போற்றி
ஓம் குதிரை வாகனீ போற்றி
ஓம் பன்றி முகத்தாய் போற்றி
ஓம் ஆதி வாராஹி போற்றி
ஓம் அனாத இரட்சகி போற்றி
ஓம் ஆதாரமாவாய் போற்றி
ஓம் அகாரழித்தாய் போற்றி
ஓம் தேவிக்குதவினாய் போற்றி
ஓம் தேவர்க்கும் தேவி போற்றி
ஓம் ஜுவாலாமுகி போற்றி
ஓம் மாணிக்கவீணோ போற்றி
ஓம் மரகதமணியே போற்றி
ஓம் மாதங்கி போற்றி
ஓம் சியாமளி போற்றி
ஓம் வாக்வாராஹி போற்றி
ஓம் ஞானக்கேணீ போற்றி
ஓம் புஷ்ப பாணீ போற்றி
ஓம் பஞ்சமியே போற்றி
ஓம் தண்டினியே போற்றி
ஓம் சிவாயளி போற்றி
ஓம் சிவந்தரூபி போற்றி
ஓம் மதனோற்சவமே போற்றி
ஓம் ஆத்ம வித்யே போற்றி
ஓம் சமயேஸ்ரபி போற்றி
ஓம் சங்கீதவாணி போற்றி
ஓம் குவளை நிறமே போற்றி
ஓம் உலக்கை தரித்தாய் போற்றி
ஓம் சர்வ ஜனனீ போற்றி
ஓம் மிளாட்பு போற்றி
ஓம் காமாட்சி போற்றி
ஓம் பிரபஞ்ச ரூபி போற்றி
ஓம் முக்கால ஞானி போற்றி
ஓம் சர்வ குணாதி போற்றி
ஓம் ஆத்ம வயமே போற்றி
ஓம் ஆனந்தானந்தமே போற்றி
ஓம் நேயமே போற்றி
ஓம் வேத ஞானமே போற்றி
ஓம் அகந்தையழிப்பாய் போற்றி
ஓம் அறிவளிப்பாய் போற்றி
ஓம் அடக்கிடும் சக்தியே போற்றி
ஓம் கலையுள்ளமே போற்றி
ஓம் ஆன்ம ஞானமே போற்றி
ஓம் சாட்சியே போற்றி
ஓம் ஸ்வப்ன வாராஹி போற்றி
ஓம் ஸ்வுந்திர நாயகி போற்றி
ஓம் மரணமழிப்பாய் போற்றி
ஓம் ஹிருதய வாகீனி போற்றி
ஓம் ஹிமாசல தேவி போற்றி
ஓம் நாத நாமக்கிரியே போற்றி
ஓம் உருகும் கோடியே போற்றி
ஓம் உலுக்கும் மோகினி போற்றி
ஓம் உயிரின் உயிரே போற்றி
ஓம் உறவினூற்றே போற்றி
ஓம் உலகமானாய் போற்றி
ஓம் வித்யாதேவி போற்றி
ஓம் சித்த வாகினீ போற்றி
ஓம் சிந்தை நிறைந்தாய் போற்றி
ஓம் இலயமாவாய் போற்றி
ஓம் கல்யாணி போற்றி
ஓம் பரஞ்சோதி போற்றி
ஓம் பரப்பிரஹ்மி போற்றி
ஓம் பிரகாச ஜோதி போற்றி
ஓம் யுவன காந்தீ போற்றி
ஓம் மௌன தவமே போற்றி
ஓம் மேதினி நடத்துவாய் போற்றி
ஓம் நவரத்ன மாளிகா போற்றி
ஓம் துக்க நாசினீ போற்றி
ஓம் குண்டலினீ போற்றி
ஓம் குவலய மேனி போற்றி
ஓம் வீணைஒலி யே போற்றி
ஓம் வெற்றி முகமே போற்றி
ஓம் சூதினையழிப்பாய் போற்றி
ஓம் சூழ்ச்சி மாற்றுவாய் போற்றி
ஓம் அண்ட பேரண்டமே போற்றி
ஓம் சகல மறிவாய் போற்றி
ஓம் சம்பத் வழங்குவாய் போற்றி
ஓம் நோயற்ற வாழ்வளிப்பாய் போற்றி
ஓம் நோன்புருக்கு வருவாய் போற்றி
ஓம் வாராஹி பதமே போற்றி

வியாழன், 29 மார்ச், 2018

இல்லற வாழ்வு அருளும் பங்குனி உத்திரம்

Image result for panguni uthiram imagesஅன்பார்ந்த என் ஆன்மீக நண்பர்களுக்கு என் வணக்கம்.இந்துக்கள் அனைவரும் இறைவனை வணங்கும்விதமாக பல விழாக்களை கொண்டாடுகிறோம்.அதன்வரிசையில் நாளை பங்குனி உத்திரம் வருகிறது.ஆதலால் அதைப்பற்றி எனக்கு தெரிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.உங்களால் என்ன செய்து இறைவனை குளிர்விக்க மகிழ்விக்க முடியுமோ அதை செய்யுங்கள் இப்படித்தான் செய்ய வேண்டும் என்ற வரைமுறை இல்லை.ஆத்மாத்தமாக  ஒரு பூ,நீர் என எதை   கொடுத்தாலும் இறைவன் ஏற்று நமக்கு அருள் புரிவார்.எனவே மகிழ்ச்சியாக முருகனை, சிவசக்தியை துதித்து வழிபடுங்கள் 

இந்த உலகத்தின் அனைத்து இயக்கங்களுமே சிவசக்தியின் சங்கமத்தால்தான் நிகழ்கின்றன. சிவசக்தியின் தத்துவத்தை உணர்த்தும் புனித நாளே பங்குனி உத்திர திருநாளாகும். 



இல்லற வாழ்வு அருளும் பங்குனி உத்திரம்

 பங்குனி உத்திர நாளில்தான் பார்வதி தேவியை சிவபெருமான் மணந்ததாகவும், முருகப்பெருமான், தெய்வ யானையை மணந்ததாகவும், ஸ்ரீரங்கத்தில் ஆண்டாளை ரங்கமன்னார் மணந்ததாகவும், சீதையை ராமர் மணம்புரிந்ததாகவும் கூறப்படுகிறது.


 இதனால் பங்குனி உத்திர விரதமே திருமண விரதம் என்று அழைக்கப்படுகிறது. இத்தினத்தில் இளைஞர்களும் கன்னிகளும் சிவனையும் முருகனையும் திருமண கோலத்தில் வணங்கி வழிபட்டால், அவர்களுக்கு விரைவிலேயே சிறப்பான இல்லற துணையும் வாழ்வும் அமையும் என்று பெரியோர்கள் கூறுகின்றனர்.

பங்குனி உத்திரம் உருவான வரலாறு

அக்காலத்தில் தட்சனின் மகள் தாட்சாயினியாக உமாதேவி பிறந்தார். அவரை பெண் கேட்ட சிவபெருமானை ஆணவத்தால் தட்சன் அவமதித்தான். இதனால் கோபமான தாட்சாயினி ஹோமகுண்டத்தில் வீழ்ந்தார். பின்னர், தட்சனுக்கு மகளாகப் பிறந்த களங்கத்தை போக்க, பார்வதி என்ற நாமகரணத்துடன் காஞ்சிபுரத்தில் மலையரசன் இமயவனின் மகளாகப் பிறந்தார். அப்போது காஞ்சிபுரத்தில் ஓடிய கம்பை ஆற்றில் சிவபெருமானை எண்ணி, பார்வதிதேவி மணலால் சிவலிங்கம் செய்து வைத்து தினந்தோறும் வழிபட்டு வந்தார். அந்த கம்பை ஆற்றில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. வெள்ளப் பெருக்கில் தான் வழிபட்டு வரும் சிவலிங்கம் அடித்து செல்லப்படுமே என அஞ்சிய பார்வதி, அந்த லிங்கத்தை தனது மார்புடன் கட்டி அணைத்து கொண்டாள். பார்வதியின் அன்பில் நெகிழ்ந்த சிவபெருமான், அவரை மணமுடித்த நாளே பங்குனி உத்திர திருநாளாகும். ஆண்டுதோறும் பங்குனி உத்திர தினத்தன்று மயிலை உட்பட பல்வேறு சிவாலயங்களில் சிவபெருமான்-பார்வதி திருக்கல்யாண உற்சவங்கள் வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.

பங்குனி உத்திர விரதம் இருக்கும் முறை

பங்குனி உத்திர விரதத்தை 8 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளும் 80 வயதுக்கு உட்பட்ட பெரியவர்களும் மேற்கொள்ளலாம். விரதம் இருப்பதற்கு முன்தினம் இரவு குறைவாக உணவருந்த வேண்டும். விரத தினத்தன்று காலைக்கடன்களை முடித்துவிட்டு, பூஜை மற்றும் பாராயணங்களை செய்து முடிக்க வேண்டும். அன்று சிவபெருமான் மற்றும் உமையன்னைக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, தூப தீபாராதனை காட்டி, நைவேத்தியம் படைக்க வேண்டும். அன்றைய தினம் நம்மை விட மூத்த மற்றும் வயதான தம்பதி ஒருவரை வீட்டுக்கு வரவழைத்து, அவர்களுக்கு பாதபூஜை செய்ய வேண்டும். பின்னர் அவர்கள் இருவருக்கும் அறுசுவை விருந்து அளித்து, தாம்பூலத்துடன் வேட்டி, புடவை வழங்கி வணங்க வேண்டும். பின்னர் நாள் முழுவதும் இறைவனை பற்றிய சிந்தனையில் மூழ்கி சிவபுராணம், கந்தசஷ்டி கவசம் போன்றவற்றை படிக்கலாம். ஓம் சிவாயநம, ஓம் பராசக்திநம என்ற நாமத்தை 108 முறை ஜெபிக்கவேண்டும். 

இறைவனின் நாமாவளிகளை கூறலாம். பட்டினி இருக்க முடியாதவர்கள் துளசி தீர்த்தம், பால், மோர், இளநீர், தேன் போன்ற திரவ பொருட்களை சிறிதளவு எடுத்து கொள்ளலாம். அன்றைய தினம் ஆலயங்களில் நடைபெறும் சிவபெருமான்-பார்வதி, முருகப்பெருமான்-தெய்வானை, ரங்கமன்னார்-ஆண்டாள் ஆகியோரின் திருமண உற்சவங்களை கண்டுகளித்து அருள் பெறலாம். பின்னர் இரவில் பால், பழம் உண்டு, தரையில் துணி விரித்து படுக்க வேண்டும். மறுநாள் மீண்டும் கோயிலுக்கு சென்று இறைவனை தரிசித்து விரதத்தை முடிக்க வேண்டும்.

ஓம் நமோநாராயணாய என்னும் நாமம்

ஓம் நமோநாராயணாய என்னும் நாமம் 

Image result for maha periyava images






பகவான் நாமா கைகுடுப்பது போல் எந்த டாக்டரோ, மருந்தோ உதவி பண்ணாது. பகவான் நாமா பிழைக்கவும் வைக்கும், அதே ஸமயம் ஆயுஸ் முடியப்போகும் தருணத்தில், பகவானின் திருவடிப் பேற்றையும் சுலபமாக அளித்து விடும்- ஸ்ரீ மஹா பெரியவா




ஸ்ரீ மஹா பெரியவாளை தரிசனம்   பண்ண ஒரு பக்தர் வந்தார். கூட்டம் அதிகம் இல்லை.
“அப்பா எப்டியிருக்கார்?”…
“அப்பாக்கு ரொம்ப ஒடம்பு முடியலே பெரியவா……ப்ரக்ஞை இல்லே; அதுனால ஆஸ்பத்ரில சேத்திருக்கேன்…”
மேலே சொல்லு என்பது போல் ஸ்ரீ மஹா பெரியவா உன்னிப்பாக கேட்டார்.
“…பணம் பணம்ன்னு ஆஸ்பத்ரில பிடுங்கி எடுக்கறா…..ட்ரிப்ஸ் ஏத்தறதுக்கு பணம்; ஆக்ஸிஜன் வெக்கறதுக்கு பணம்; அதுக்கு இதுக்குன்னு நின்னா, ஒக்காந்தா பணம் ஒண்ணுதான் கேட்டுண்டே இருக்கா பெரியவா! ஏகப்பட்ட செலவாயிடுத்து…”
“அப்பாவுக்கு என்ன வயஸ்?”
“ஸதாபிஷேகம் ஆய்டுத்து”
“அவரை டிஸ்சார்ஜ் பண்ணி அழைச்சிண்டு வந்துடு! ஆத்துல ஒரு கட்டில்ல அவருக்கு ஸ்ரமம் இல்லாதபடி ஸௌகர்யமா படுக்க வை; ஜாஸ்தி சூடு இல்லாம, 
Image result for vishnu sahasranamam imagesவெதுவெதுன்னு கஞ்சி, பால் இதுமாதிரி நீர்க்க குடு; அவரோட காதுல விழறா மாதிரி தெனோமும் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொல்லு; ஆத்துல எல்லாருமா பகவன் நாமாவை சொல்லுங்கோ; ஆத்மார்த்தமா ஸுஸ்ருஷை பண்ணு; இப்டி பண்ணினியானா …….ஒனக்கும் பணச்செலவு இல்லே! அவரும் கடைசி காலத்தை நிம்மதியா கழிப்பார்…..”
மகன் மன த்ருப்தியோடு ப்ரஸாதம் பெற்றுக்கொண்டு சென்றார்.
அவர் போனதும் பக்கத்தில் இருந்தவர்களிடம் ஸ்ரீ மஹா பெரியவா சொன்னார்…..
“இப்போல்லாம் யாருக்கும் தர்மமே தெரியறதில்லே! ஒடம்புக்கு கொஞ்….சம் அஸௌகர்யம் வந்துடுத்துன்னா……ஒடனே ஆஸ்பத்ரில சேத்துடறா! வ்யாதிக்கு மருந்து வேணுந்தான்…வாஸ்தவம். ஆனா…..அருமருந்து ஒண்ணு இருக்குங்கறதே யாருக்கும் தெரியறதில்லே!…..”
பகவான் நாமா கைகுடுப்பது போல் எந்த டாக்டரோ, மருந்தோ உதவி பண்ணாது. பகவான் நாமா பிழைக்கவும் வைக்கும், அதே ஸமயம் ஆயுஸ் முடியப்போகும் தருணத்தில், பகவானின் திருவடிப் பேற்றையும் ஸுலபமாக அளித்து விடும்.
எனவே, உடல் நிலை ஸரியில்லாதவர்களை குறிப்பாக வயஸான நம் பெற்றோர், தாத்தா,பாட்டி போன்றோரை, வயஸான காலத்தில் கஞ்சி குடுத்தாலும், அதை அன்போடு குடுத்து, பகவானின் நாமத்தை ஸதா கேட்கவோ, சொல்லவோ வைத்து, அவர்களை நிம்மதியாக வைத்துக் கொள்வதே கடவுளுக்கு மிகவும் பிடித்த கைங்கர்யம்.
அவர்களுக்கு விலையுயர்ந்த பரிசுகள் வேண்டாம், விதவிதமான உணவு வகைகள் வேண்டாம். உண்மையான அன்போடு ஒரு பத்து நிமிஷமாவது அவர்களுக்காக ஒதுக்கி, “ஸாப்பிட்டீர்களா? ஏதாவது வேண்டுமா?” என்று கேட்பதே அவர்களை மனஸார நம்மை வாழ்த்த வைக்கும். அவர்கள் வாழ்ந்த வீட்டை விட, அது குச்சு வீடாக இருந்தாலும் ஸரிதான், தன் மக்களை விட்டுவிட்டு, வேறு எந்த பெரிய ஆஸ்பத்ரியிலும் அவர்களால் நிம்மதியாக இருக்க முடியாது.
ஓம் நமோ பகவதே ஸ்ரீ காஞ்சி காமகோடி சந்த்ரசேகராய!
ஓம் ஸ்ரீ காஞ்சி சங்கர! ஓம் ஸ்ரீ காமகோடி சங்கர !ஜெய ஜெய சங்கர!
ஓம் ஸ்ரீ காஞ்சி சங்கர! ஓம் ஸ்ரீ காமகோடி சங்கர! ஜெய ஜெய சங்கர!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர .. ஸ்ரீ சந்திர சேகர சரஸ்வதி சங்கர.
ஸ்ரீ மஹா பெரியவா எனக்கு அபயம் கொடுத்து காத்து ரக்ஷிப்பாய் பரம கருணா சாகரா.
ஸ்ரீ மஹா பெரியவா சரணாரவிந்தங்களுக்கு அநேக கோடி நமஸ்காரங்கள்.








தெய்வம் அருள்புரிந்த கதை


Related image
தெய்வம் அருள்புரிந்த கதை 
” ஸ்வாமி ”வீட்டு திண்ணையில் அமர்ந்தபடி , கண்களை மூடியவாறு ராம ஜபம் செய்து கொண்டிருந்த தியாகராஜர் , குரல் கேட்டு சட்டென்று கண் விழித்தார் !
எதிரே ஒரு வயதான தம்பதி !அருகே ,கூப்பிய கரங்களுடன் ஒரு இளைஞன் !,

மெல்லிய குரலில் அந்த முதியவர் இப்போது பேச ஆரம்பித்தார் ;..
” ..ஸ்வாமி …நாங்கள் வடக்கே ரொம்ப தூரத்திலிருந்து கால்நடையாய் ஷேத்ராடனம் பண்ணிண்டு வரோம் !.நாளை ராமேஸ்வரம் போகணும் !..இன்று ஒரு ராத்திரி மட்டும் உங்க க்ருஹத்துல தங்கிவிட்டு , காலை பொழுது விடிந்ததும் கிளம்பிடறோம் !.தயவுசெய்து ஒத்தாசை பண்ணணும் !”
கம்மிய குரலில் , பேசினார் அவர்;
வயதான அந்த தம்பதியின் அழுக்கு படிந்த உடைகள் , முகங்களில் தெரிந்த களைப்பு , வாட்டம் மற்றும் , பேச்சில் தெரிந்த ஆயாசம் ..இவையெல்லாவற்றையும் தாண்டி , அம்மூவரின் முக லாவண்யமும் , தெய்வீக அம்சமும் தியாகராஜரை என்னவோ செய்ய …அவருக்கு ஒரு வித பக்தி மயக்கம் ஏற்பட்டது !
ஒரு கணம் நிலை தடுமாறியவர் பின் , மெலிதான புன்னகையுடன் , இரு கரங்களையும் கூப்பி அவர்களை வணங்கினார் ;
” அதற்கென்ன … பேஷாய் தங்கலாம் !…இரவு போஜனம் பண்ணிட்டு நிம்மதியாய் தூங்குங்கோ !”
அவர்களை உள்ளே அழைத்து சென்று அமர செய்தவர் பின் , அடுக்களையை நோக்கி , உரத்த குரலில் ,
” கமலா …குடிக்க தீர்த்தம் கொண்டு வா ..”
என்றார் ;
அடுத்த கணம் தீர்த்த சொம்பு சகிதம் அங்கே வந்த கமலாம்பாளின் கண்கள் , அங்கு அமர்ந்திருந்த புதியவர்களை கண்டு வியப்பில் விரிந்தன !
‘ யார் இவர்கள் ?’
” கமலா …”
தியாகராஜரின் குரல் அவளை தட்டியெழுப்பியது ;
” கமலா …..இவர்கள் நமது விருந்தாளிகள் ..! .இன்று நமது கிருஹத்தில் தங்க போகிறார்கள் ..இரவு உணவை இவர்களுக்கும் சேர்த்து தயார் செய் ! ”
தீர்த்த சொம்பை அவளிடமிருந்து வாங்கியவாறே இயல்பாய் பேசினார் அவர் ;
‘ ….அடடா ..வீட்டில் இரண்டு பேர்களுக்கு போதுமான அரிசியே இல்லை .. !..இப்போது , .ஐந்து பேர்களுக்கு உணவு தயாரிக்க வேண்டுமானால் அரிசிக்கு என்ன செய்வது ?…பக்கத்து வீட்டுக்கு சென்று அரிசி வாங்கி வர வேண்டியது தான் ‘
உள்ளுக்குள் எண்ணியவள் , பின் எதையும் வெளிக்காட்டாமல் , புன்னகையுடன் அவருக்கு தலையசைத்து விட்டு , அடுக்களையை நோக்கி விரைந்தாள் ;
போன வேகத்திலேயே ,அங்கிருந்த பாத்திரங்களில் ஒன்றை கையில் எடுத்தவள் , பின் அதை யார் கண்ணிலும் படாமலிருக்க புடவையால் மறைத்தவாறு அங்கிருந்து வெளியே வந்த அக்கணம் ….
அந்த சிறிய கூடத்தில் அமர்ந்திருந்த அந்த முதியவரின் குரல் அவளை தடுத்து நிறுத்தியது ;
” அடடா …எங்கே செல்கிறீர்கள் அம்மா ?……..எங்களுக்காக சிரமப்பட வேண்டாம் .! ….எங்களிடம் , வேண்டிய அளவு தேனும் , தினை மாவும் இருக்கிறது …..இரண்டையும் பிசைந்து ..ரொட்டி தட்டி , நாம் அனைவரும் சேர்ந்தே சாப்பிடலாம் !”
அவளின் மனதை படம் பிடித்து காட்டியது போன்று பேசியவரை , வியப்புடனும் , தர்மசங்கடத்துடனும் அவள் பார்த்து கொண்டிருக்கும் போதே, அவள் சற்றும் எதிர்பாராத கையில் , தேனும் , தினை மாவும் அடங்கிய ஒரு சிறிய பையை அவளிடம் நீட்டினார் அந்த முதியவர் ;….!
தயக்கத்துடனும் , சங்கோஜத்துடனும் அதனை பெற்று கொண்ட அவள் , உணவுத்தயாரிக்கும் பொருட்டு , அடுக்களையை நோக்கி விரைந்தாள் …
அன்று இரவு ,அனைவரும் அந்த ரொட்டியை சாப்பிட்டு பசியாற …..
.தியாகராஜர் , அவர்களுடன் விடிய விடிய பேசிக்கொண்டிருந்து விட்டு , பின் , ஒரு கட்டத்தில் உறங்கி போனார் .. ..
.. பொழுது விடிந்தது !
காலைக்கடன்களை முடித்து விட்டு , கூடத்தில் அமர்ந்து , வழக்கம் போல கண்களை மூடியவாறு , ராம நாமத்தை ஜபித்தவாறிருந்த தியாகராஜர் , குரல் கேட்டு கண்களை திறந்தார் .
” ஸ்வாமி .. ..! “..
எதிரே புன்னகையுடன் அந்த முதியவர் !
அருகே , அவரின் பார்யாளும் , மற்றும் அந்த இளைஞனும் …!
அந்த முதியவர் தொடர்ந்தார் ….;
” ரொம்ப சந்தோஷம் …..நாங்க காவேரியில் ஸ்நானம் பண்ணிட்டு அப்படியே கிளம்பறோம் …..இரவு தங்க இடம் கொடுத்து ….வாய்க்கு ருசியாய் ஆகாரமும் கொடுத்து …அன்பாய் உபசரித்ததற்கு மிக்க நன்றி ..”
கூப்பிய கரங்களுடன் அந்த முதியவர் பேச ..
அருகே அந்த மூதாட்டியும் , இளைஞனும் அவரின் வார்த்தைகளை ஆமோதிப்பது போன்று தலையசைத்தவாறு நின்றிருந்தனர் ..
சொல்லி விட்டு மூவரும் அங்கிருந்து கிளம்ப ……
.தியாகராஜரும் அவர்களை வழியனுப்பும் நிமித்தமாய் , அவர்களுடன் வாசலுக்கு வந்தார் …
அவர்கள் மூவரும் வாசலை கடந்து , தெருவில் இறங்கி நடக்க ஆரம்பிக்க …
அவர்கள் செல்வதையே கண் இமைக்காமல் பார்த்தவாறு நின்றிருந்த தியாகராஜரின் கண்களில் ‘ சட்டென்று ‘ ஒரு தெய்வீக காட்சி இப்போது !
அந்த வயோதிகர் , ஸ்ரீ ராமனாகவும் .
அந்த மூதாட்டி , சீதையாகவும் ,
அந்த இளைஞன் , ஸ்ரீ அனுமனாகவும் தோற்றமளிக்க …..
அவருக்குள் இனம் புரியாத ஒரு பதைதைப்பு !
கண்கள் பனிசோர ..நா தழுதழுக்க .. … தன்னை மறந்து பக்தி பரவசத்தில் ஆனந்த கூத்தாடினார் !
” என் தெய்வமே ….தசரதகுமாரா ….ஜானகி மணாளா ….நீயா என் கிருஹத்துக்கு வந்தாய் ?….. என்னே நாங்கள் செய்த பாக்கியம் …அடடா …..வெகு தூரத்திலிருந்து நடந்து வந்ததாய் சொன்னாயே … உன் காலை பிடித்து அமுக்கி , உன் கால் வலியை போக்குவதை விடுத்து , ..உன்னை தூங்க விடாமல் ..விடிய விடிய பேசிக்கொண்டே இருந்தேனே …மகா பாவி நான் ! …..என் வீட்டில் தரித்திரம் தாண்டவமாடறதுன்னு தெரிஞ்சு , ஆகாரத்தையும் கொண்டு வந்ததுடன் , ஒரு தாய் , தகப்பனாயிருந்து எங்கள் பசியையும் போக்கினாயே ! உனக்கு அநேக கோடி நமஸ்காரம் ! ”
நடு வீதி என்பதையும் மறந்து கண்ணீர் மல்க கதறி அழுதார் தியாகராஜர் !
அப்போது அவர் திருவாயினின்று , அனிசையாய் ,
” சீதம்ம…..மாயம்ம…”

என்கிற கீர்த்தனை பிறந்தது !

புதன், 28 மார்ச், 2018

மதுரை தெப்பக்குளம் மாரியம்மன்




மதுரை தெப்பக்குளம் மாரியம்மன்


மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் – இந்தத் திருப்பெயரைக் கேட்டதுமே மதுரைவாழ் பக்தர்களிடம் அப்படியொரு சிலிர்ப்பும் பரவசமும் தொற்றிக்கொள்ளும். அந்த அளவுக்கு அன்பர்களின் மனதில் குடிகொண்டிருக்கிறாள் இந்த மாரியன்னை. திருமலை நாயக்க மன்னரால் உருவாக்கப்பட்ட மதுரையின் மிகப்பெரிய தெப்பக்குளம், மன்னரின் பெயரில் அழைக்கப்படாமல் மாரியம்மன் பெயரில் ‘மாரியம்மன் தெப்பக்குளம்’ என்றே பிரசித்திப் பெற்றிருக்கிறது.
வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் எனும் இந்த குளம் 1646-ம் ஆண்டில் வெட்டுவிக்கப்பட்டிருக்கிறது. திருமலை நாயக்கரால் உருவாக்கப்பட்ட இந்த பிரமாண்டமான குளம் 16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.இது மீனாட்சி அம்மன் கோயிலுக்கு கிழக்காக 5 கி.மீ தூரத்தில் உள்ளது. குளத்தின் மையத்தில் விநாயகர் சன்னதி வீற்றிருக்கிறது.
அரண்மனைக் கட்டுமானத்துக்காக தோண்டப் பட்டதால் ஏற்பட்ட பள்ளத்தையே நாயக்க மன்னர் திருக்குளமாக அமைத்தாராம். இங்கே மண் தோண்டப்பட்டபோது கிடைத்த பெரிய விநாயகரையே மதுரை மீனாட்சியம்மன் கோயி லில் முக்குறுணி விநாயகராகத் தரிசிக்கிறோம். இக்குளத்தில் தை மாதம் நிகழும் தெப்போற்ஸவம் விசேஷமானது. இப்படி பெருமைகள் வாய்ந்த இந்தக் குளத்தின் அருகிலேயே மாரியம்மன் கோயில் கொண்டிருப்ப தால் கூடுதல் சிறப்புப் பெற்றுவிட்டது.

மதுரை மக்களுக்கு மட்டுமல்ல, அன்னை மீனாட்சிக்கும் பிரியமானவள் இந்த மாரியன்னை என்று சிலாகிக்கிறார்கள் உள்ளூர் பக்தர்கள்.  பாண்டிய மன்னர்கள், சேதுபதி மன்னர்கள், நாயக்க மன்னர்கள் அனைவராலும் வணங்கப்பட்ட அன்னை 
மாரி இங்கே கோயில் கொண்ட வரலாறு இதுதான்…    





மன்னர் கூன்பாண்டியன் ஆட்சி காலத்தில் குறும்பர்கள் எனும் இனத்தவர்கள் மகிழ 

மரக் காடுகளாக இருந்த இந்த இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து, அப்பகுதி மக்களுக்குப் 
பெரும் தொந்தரவு கொடுத்து அட்டகாசம் செய்து வந்துள்ளனர். மேலும் அங்கிருந்த 
இயற்கை வளங்களையும் அழித்துவந்துள்ளனர். இதுபற்றிய புகார் மன்னர் கூன்பாண்டியன்
 கவனத்துக்குச் சென்றுள்ளது. மக்களைக் காப்பாற்ற அப்பகுதிக்குப் படையுடன்  சென்ற 
மன்னர், ஆக்கிரமிப்பு செய்த குறும்பர் இனத்தவருடன் சண்டையிட்டு அவர்களை விரட்டி 
அடித்துள்ளார். அதன் வெற்றியைத் தொடர்ந்து அங்கிருந்த வைகை ஆற்றில் கிடைத்த 
அம்மனின் சிலையை வைகை ஆற்றின் தெற்குக் கரையில் வைத்து வழிபட்டுள்ளார். 
அதிலிருந்து போருக்குச் செல்லும்முன் அம்மனை வழிபட்டுச்  செல்வதை வழக்கமாகக் 
கொண்டிருந்தார். அதனால் பல வெற்றிகளையும் அடைந்திருக்கிறார்.  தங்களுடைய  
 மன்னரே வணங்கியதால், மக்களும் மாரியம்மனை பக்திபூர்வமாக வழிபட்டு வருகின்றனர்.

தந்தையின் கட்டளையை நிறைவேற்றவேண்டி, தன் தாய் ரேணுகாதேவியின்  தலையைத் 
துண்டித்த பரசுராமர், மறுபடியும் தன் தாயை உயிர்ப்பித்துத் தருமாறு தந்தையைக் 
கேட்டதாகவும், அதன்படி உயிர்த்தெழுந்த ரேணுகாதேவியே இங்கே மாரியம்மனாகக் 
கோயில் கொண்டதாகவும் ஒரு வரலாறு சொல்லப்படுகிறது.
வைகை ஆற்றின் வண்டியூர் மேல்மடைக்கு நேரில் இருப்பதால் வண்டியூர் மாரியம்மன் 
கோயில் என்று அழைக்கப்படும் இந்தக் கோயிலில், மகிஷனை வதம் செய்வது போன்ற
 நிலையில் காட்சி தருகிறாள். அந்த வகையில் மாரியம்மனே மகிஷாசுரமர்த்தினியாகவும் 
திகழ்கிறாள் என்பதும் தனிச்சிறப்பு. மேலும் இடக்காலின் மீது வலக்காலைப் போட்டபடி 
இந்த அம்பிகை அமர்ந்திருப்பது அபூர்வ திருக்கோலம். போருக்குச் செல்லும் முன்பு 
வெற்றியை வேண்டி மன்னர்கள் வழிபட்ட மாரியம்மனை, தேர்வுகளிலும் விளையாட்டுப் 
போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டி வழிபட்டுச் செல்கிறார்கள் பக்தர்கள். அரசமர
 விநாயகர், பேச்சியம்மன் ஆகியோரும் இங்கே காட்சி அருள்கின்றனர்.
பிணிகள் தீர்க்கும் தீர்த்தம்!
அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படும் இந்தத் தீர்த்தம், கோயில் நிர்வாகத்தினரால் 

பித்தளை அல்லது செம்புப் பாத்திரங்களில் சேகரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு 
வழங்கப்படுகிறது. கண் நோய், அம்மை நோய், தோல் நோய் மற்றும் நாள்பட்ட 
வியாதி உள்ளவர்களுக்கு இந்தத் தீர்த்தம், பிணிகள் தீர்க்கும் மருந்தாகத் திகழ்கிறது 
என்பது நம்பிக்கை. தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீர்த்தப் பிரசாதம் 
பெற்றுச் செல்கின்றனர்.தோல் வியாதி உள்ளவர்கள், அம்பிகைக்கு, உப்பு, மிளகு இடுவர்
தொடர்புடைய படம்
 வேண்டுதல் நிறைவேறியவர்கள் வெள்ளிக்கிழமைகளில் கூழ் காய்ச்சி இங்கு வரும்
 பக்தர்களுக்கு கொடுக்கின்றன .


வாரி வழங்கும் கற்பகத் தருவாகத் திகழும் மாரியன்னையின் சந்நிதிக்கு நாமும் 






தேடி வரும் அடியார்களின் வாழ்க்கைச் செழிக்க வரம்

தலம்: மதுரை.

அம்மன்: அருள்மிகு தெப்பக்குளம் மாரியம்மன்.

தலச் சிறப்பு: மாரியம்மனே மகிஷாசுர மர்த்தினி கோல

ஞாயிறு, 25 மார்ச், 2018

செல்வவளம் பெருக

தொடர்புடைய படம்
செல்வவளம் பெருக
1. இலவங்கப்பட்டையை பொடி செய்து சிறிது எடுத்து ஒரு பச்சை நிற துணியில் மடித்து பச்சை நூலால் கட்டி மணிபர்சிலோ அல்லது சட்டைப்பையிலோ எப்பொழுதும் வைத்துக்கொள்ளவும்.
2. பசுமையான வெற்றிலை ஒன்றை எந்த நல்ல காரியங்கள், பணசம்பந்தமான காரியங்கள் போன்றவற்றிக்கு செல்லும் போதும் உடன் வைத்துக்கொள்ளவும்.
3. நிலக்கரி தனாகர்ஷண ஷக்தி உடையது அதனை ஒரு சிறு துண்டு எப்போதும் உடன் வைத்துக்கொள்ளவும்.
4. ரூபாய்த்தாளை எப்பொழுதும் சுருளாக கட்டியே பணப்பெட்டியில் வைத்துக்கொள்ள வேண்டும்.
( சுழற்சி சக்தி உண்டாகி செல்வமானது பெருகி தங்கும் ).
5. தினமும் ஏதேனும் ஒரு நாணயத்தை இரண்டு கைகளிலும் பிடித்தபடி உங்கள் தேவையினை மனமார வேண்டி - அந்த காசுகளை சேமித்து வந்து மாதக்கடைசியில் சேமித்த பணத்தில் வாழைப்பழம் வாங்கி பாசுமாட்டிற்கு தானமாக வழங்கவும்.
6. எந்த விஷயத்திற்காக பணத்தினை செலவிட்டாலும், செலவிடும் பணத்தினை கையில் வைத்து நெஞ்சிற்கு நேராக பிடித்து பிறர் அறியாதவாறு "ஓம் ஸ்ரீம் நமஹ இலட்சமாக திரும்பிவா வசி வசி" என்று ஐந்து முறை கூறி செலவிடவும்.
7. முக்கியமான காரியங்கள், பணசம்பந்தமான விஷயங்களுக்கு செல்லும்போது எலுமிச்சம் பழம் ஒன்றை "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் சக்தியே அருள்வாய் போற்றி ஓம்" என ஆறு முறை உச்சரித்து உடன் வைத்துக்கொள்ளவும்.
8. மாதச்சம்பளமாகட்டும், சுயத்தொழில், வியாபாரம் செய்பவர்கள் யாராகினும் வருவாயில் முதல் செலவாக உப்பு, மல்லிகைபூ இரண்டையும் வாங்குவதே முதல் செலவாக இருக்க வேண்டும்.
( பணவருவாய் பலவகையிலும் பெருகும் ).
9.பணப்பெட்டி தென்மேற்கு மூலையில் இருக்கவேண்டும், அதில் எப்போதும் மல்லிகைபூ போட்டு வைக்கவேண்டும்.
10. பணப்பெட்டியில் பெரிய தொகைகளை வைக்கும்போது ஆறு வெற்றிலைகள், மூன்று பாக்குகள் சேர்த்து வைக்கவும்.
11. மகாலக்ஷ்மி படத்திற்கு தினமும் காலை, மாலை நெய், தேங்காய் எண்ணெய் , நல்லெண்ணெய் ஏதாவதொன்றில் இரண்டு திரி போட்டு விளக்கு ஏற்றி வீடு, கடை முழுவதும் சாம்பிராணி புகை காட்டிவருவது பண விஷயத்தில் மிகசிறந்த வசியமாகும்.
12. குழந்தைகள் வளரும்போது விழும் முதல் பல்லை பால் பற்கள் என்கிறோம், அவ்வாறான பால் பற்களில் ஏதேனும் ஒன்று பையிலோ பணப்பெட்டியிலோ வைத்தால் செல்வம் பெருகும்.
13. வடகிழக்கு மூலையில் குடிக்கும் நீரைவைத்து அதில் எலுமிச்சை ஒன்றை போட்டு வைக்கவும், தொடர்ந்து இரண்டு மாதங்கள் செய்து வந்தால் பற்றாக்குறை நீங்கி செல்வம் கொழிக்கும்.
14. கல் உப்பை வீட்டில் வியாபார ஸ்தலங்களில் எல்லா மூலைகளிலும் சிறிது போட்டு வைத்தால் தீய சக்திகள் ஓடும், பணம் பெருகும்.
15. பணப்பெட்டி சந்தனப்பெட்டியாக இருந்தால் அதிர்ஷ்டம் பெருகும். வசதி இல்லையேல் பச்சை நிற பட்டுத்துணியில் பணப்பை செய்து அதனுள் சிறிய சந்தனக்கட்டை ஒன்றை அதனுள் போட்டு வைக்கவும், சந்தனம் இருப்பதை வளர்க்கும் சக்தி உடையது.
16. வருமானத்தில் ஐந்து சதவீதத்தை தானதிற்கென போட்டு வையுங்கள், மாதம் ஒருநாள் அதை தானமாக கொடுங்கள், கொடுப்பது பெருகும்.
17. முக்கியகாரியமாக தொழில் விஷயமாக வெளியே செல்லும்போது அருகம்புல் நுனி ஒன்றையோ, திருநீற்றுப்பச்சிலை ஒன்றையோ பறித்து பையில் வைத்துச்செல்ல சென்ற காரியம் நிச்சயம் வெற்றியே.
18. சாம்பிராணியும், மருதாணி விதையும், வெண்கடுகும் கலந்து வீட்டில், வியாபார ஸ்தலத்தில் தூபமிட தீய சக்திகள், கண்திருஷ்டி, தோஷங்கள் நீங்கி தொழில் முன்னேற்றம் அடையும், மகாலக்ஷ்மி நம்மிடத்தில் நடமாடுவாள்