ஞாயிறு, 28 ஜனவரி, 2018

நோய் தீர்க்கும் ரத சப்தமி விரதம்

நோய் தீர்க்கும் ரத சப்தமி  விரதம்ratha saptami 2018 க்கான பட முடிவு

தை மாதம் சுக்லபட்ச சப்தமியன்று சூரிய ரதம் மேற்கு நோக்கித் திரும்புகிறது. அன்றைய நாளுக்கு ரதசப்தமி என்று பெயர். அன்று சூரியனுடைய பல நாமங்களில் ஒன்றின் பொருளையாவது நன்கு உணர்ந்து ஜபித்து அவரை வழிபட்டால், சகல சௌபாக்கியங்கள் கிட்டுவதுடன் வாழ்வின் இறுதியில் சூரிய லோகத்தையும் அடையலாம். நாம் ஆண்டுதோறும் பற்பல விரதங்களைக் கடைப்பிடிக்கிறோம். அவற்றுள் ஒன்றுதான் ரதசப்தமி விரதம்.

ஒரு சக்கரம், ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட ரதத்தை ரதசப்தமியன்று விஷ்ணு சூரியனுக்கு அளித்தார். இதன் சாரதி அருணன். இவன் காசிப முனிவரின் மனைவி விரதையின் மகன். சூரிய ரதத்தின் ஏழு குதிரைகளை காயத்ரி, பிருகதி, உஷ்ணிக், ஜகதி, திருஷ்டுப், அனுஷ்டுப், பங்கிதி என்றும்; இவற்றையே தினமணி, கத்யை, லோக பந்து, சுரோத்தமை, தாமநிதி, பத்மினி, ஹரி என்ற பெயர்களாலும் அழைப்பர்.

ரதசப்தமியன்று காலை குளிக்கும்போது சூரியனுக்குப் பிடித்த எருக்கன் இலைகளை ஏழு அல்லது ஒன்பது எண்ணிக்கையில் எடுத்து அடுக்கி, அதன்மீது அட்சதை, எள் வைக்க வேண்டும். ஆணுக்கு அதனுடன் விபூதியும், பெண்ணுக்கு அதனுடன் மஞ்சள் பொடியும் வைக்க வேண்டும். இவ்விலை அடுக்கைத் தலைமீது வைத்து ஸ்நானம் செய்ய வேண்டும். இப்படிச் செய்வதால், மின்சாரம் எப்படி உலோகக் கம்பி வழியே பாய்கிறதோ, அப்படி சூரியனின் ஏழு வகைக் கதிர்கள் அன்று மட்டும் எருக்கன் இலை வழியே இழுக்கப்பட்டு விரைவில் நம் உடலில் பாய்ந்து, உடல் உபாதைகளையும் நோய்களையும் நீக்குகிறது என்றுதான் நம் முன்னோர்கள் இதைச் செய்தனர். 


ratha saptami 2018 க்கான பட முடிவுratham drawing க்கான பட முடிவு



இப்படிக் குளித்தபின் வீட்டில் சூரியஒளி படும் சுத்தமான இடத்தில் செம்மண்ணால் மெழுகி சூரிய ரத கோலமிட்டு, அதில் சூரிய- சந்திரர்களை வரைய வேண்டும். பின் வண்ண மலர்களால் அலங்கரித்துப் பூஜை செய்ய வேண்டும். இதற்குமுன் கிண்ணங்களில் அரிசி, பருப்பு, வெல்லம் வைத்து, நைவேத்யத்திற்கு சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடையும் வைக்க வேண்டும். அதன்பின் முதலில் கணபதி பூஜை, பின் சூரிய நாராயண பூஜை செய்ய வேண்டும். சோடச உபசாரத்துடன் இப்பூஜையைச் செய்தால் சூரியன் சாந்தியடைந்து உலகிற்கு நன்மை செய்வதுடன், பூஜிப்பவர்களுக்கும் வளமும் நலமும் தந்து சிறப்பாக வாழ வைப்பான்.

சூரிய வழிபாடு ஆதிகாலம் முதல் உள்ளது. சூரிய வழிபாட்டிற்கு மந்திரம் தெரியாவிடில் பரவாயில்லை. எளிமையாக, "ஓம் நமோ ஆதித் யாய புத்திர் பலம் தேஹிமே சதா' என்று காலை சூரியனைப் பார்த்துக் கூறி, மூன்று முறை வணங்க வேண்டும்.

பீஷ்மாஷ்டமி
ரதசப்தமிக்கு மறுநாள் வருவது பீஷ்மாஷ்டமி. மகாபாரதம் படித்தவர்களுக்கு பீஷ்மரைப் பற்றி நன்கு தெரிந்திருக்கும். இவர் மகாபாரதப் போரில் அம்புகள் தைக்கப்பட்டபோதும் இறக்கவில்லை. விருப்பப்பட்டபோது உயிர் விடும் வரம் பெற்றவர். தட்சிணாயன காலத்தில் உயிர்விட விரும்பாததால், அர்ச்சுனனை அம்புப் படுக்கை தயார் செய்யச் சொல்லி அதில் கிடத்தப்பட்டார். அப்போது இவரால் உருவானதுதான் விஷ்ணு சகஸ்ரநாமம். கண்ணனின் விஸ்வரூப தரிசனம் கண்டார். பின் உத்தராயன புண்ணிய காலத்தில் (அப்போது உயிர் விட்டால்தான் புண்ணியம்) ரதசப்தமிக்கு மறுநாள் இவர் உடலிலிருந்து உயிர் பிரிந்தது. (அவரின் விருப்பம் போலவே).
பீஷ்மர் நித்ய பிரம்மச்சாரி. வாரிசுகள் இல்லை. எனவே ஆண்கள் இவருக்கு பீஷ்மாஷ்டமியன்று உரிய மந்திரங்கள் கூறி மூன்று முறை அர்க்யம் செய்தால், செய்பவர் சென்ற வருடம் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும் என்று புண்ணிய நூல்கள் கூறுகின்றன.

ஸ்ரீமகாவிஷ்ணுவைப் போல் சூரியனுக்கும் சங்கும், சக்கரமும் உண்டு. தீவிர வைஷ்ணவர்கள் நாராயணனே சூரியன் என்றும் சொல்லுவார்கள். மகாபாரதப் போரில் போர் ஆரம்பிக்கும் முன்னர் துரியோதனனுக்குக் குறித்துக் கொடுத்த நாளான அமாவாசை அன்று அவன் போரை ஆரம்பிக்கக் கூடாது என்பதற்காக ஒரு நாள் முன்பாகவே சூரிய, சந்திரரைச் சேர்ந்து இருக்கச் செய்த பெருமையும், ஜெயத்ரதனைக் கொல்வதற்காக, சூரியனை மறைத்த பெருமையும் கண்ணனுக்கு உண்டு. அதனாலோ என்னமோ நாராயணனைச் சூரியநாராயணன் என்று சொல்வாரும் உண்டு. நாராயணனுக்கே உரிய சங்கும், சக்கரமும் சூரியனுக்கும் உண்டு. 

ஓசை வடிவான இந்தப்பூமியில், இந்தப் பூமியும், மற்ற கிரகங்களும் சூரியனை மையமாக வைத்தே சுழல்கின்றன. ஓசையை ஏற்படுத்தும் சங்கு அதனாலேயே சூரியன் கையில் உள்ளது. இந்தப் பூமி சுழல்வதை நினைவு படுத்தும் விதமாய்ச் சக்கரம் உள்ளது. தாமரை மலரில் அமர்ந்திருக்கும் சூரியன், சொல்வது என்னவென்றால் பகலில் விரியும் தாமரை, இரவில் எவ்வாறு ஒடுங்கி விடுகிறதோ, அப்படியே நம்முடைய பரந்த கல்வி, அனுபவ அறிவினால் உண்டாகும் ஞானத்தினால் கர்வம் ஏற்படாமல் இரவுத் தாமரையைப் போல் ஒடுங்கி இருக்க வேண்டும் என்பதே ஆகும்.

ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் சூரியனின் பயணம் துவங்குகிறது. ஏழு குதிரைகள் வாரத்தின் ஏழு நாட்களைக் குறிக்கும். சூரியனின் ரதம் வடக்கு நோக்கித் திரும்பி பூமிக்கு அருகே நெருங்க ஆரம்பிப்பதும் இன்றில் இருந்து தான்.இன்று எருக்க இலைகளை வைத்துக் கொண்டு குளிப்பார்கள். அதுவும் தலை, கை, கால், புஜம் ஆகிய இடங்களில் ஆண்கள் விபூதியுடனும், பெண்கள் மஞ்சளுடனும் வைத்துக் கொண்டு குளிப்பார்கள். இதன் தாத்பரியம் என்னவென்றால், மகாபாரதப் போரில் வீழ்த்தப் பட்ட பீஷ்மபிதாமகர் நினைத்த நேரத்தில் உயிர் விடலாம் என்ற வரத்தினால் உத்தராயனத்தில் உயிர் விடவேண்டி அம்புப் படுக்கையில் படுத்திருக்கிறார். அப்போது அவர் தாகம் தீர்க்கவேண்டி அர்ஜுனன் கங்கையைப் பிரவாகம் எடுக்கச் செய்வதும் நிகழ்கிறது. என்றாலும் காலம் போய்க் கொண்டே இருக்கிறது. பீஷ்மர் உயிர் பிரியவில்லை. அனைவரும் வந்து, வந்து அவரைப் பார்த்துப் போய்க் கொண்டிருக்கின்றனர். பீஷ்மருக்கோ ஒரே ஆதங்கம், அப்போது அங்கே அவரைப் பார்க்க வந்தார் வேத வியாசர்.அவரிடம் பீஷ்மர், "நான் என்ன பாவம் செய்தேன்? ஏன் இன்னும் என் உயிர் போகவில்லை?" என்று மனம் வருந்தினார். வியாசர், அவரிடம், "பீஷ்மா,ஒருவர், தன் மனம், மொழி, மெய்யால் தீமை புரியாவிட்டாலும், பிறர் செய்யும் தீமைகளைத் தடுக்காமல் இருந்ததும், இருப்பதும் கூடப் பாவம் தான், அதற்கான தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும்" என்று சொல்கின்றார். பீஷ்மருக்குப் புரிந்தது. "பாஞ்சாலியைத் துச்சாதனன் துகில் உரிந்த போது, அப்பாவியான திரெளபதி, வேட்டையாடப் பட்ட மானைப் போல் தன்னைக் காப்பார் இல்லாமல், அந்தச் சபையைச் சுற்றிச் சுற்றி, யாரும் வரமாட்டார்களா? தன்னை இந்த இக்கட்டில் இருந்து விடுவிக்க மாட்டார்களா? என்று மலங்க மலங்கப் பார்த்தாள். அப்போது அந்த அபலையை நிர்க்கதியாகத் தவிக்க விட்ட பாவத்தை அல்லவோ இப்போது நான் அனுபவிக்கிறேன். இதற்கு என்ன பிராயச்சித்தம் குருவே?" என வேண்டினார்.

பீஷ்ம பிதாமகர்வியாசர் அதற்கு, "பீஷ்மா, நீ எப்போது உன் பாவத்தை உணர்ந்தாயோ அப்போதே அது அகன்று விட்டாலும், திரெளபதி, "கண்ணா, கேசவா, மாதவா, பரந்தாமா, ஜெகத் ரட்சகனே, என்னை ரட்சிக்க மாட்டாயா? என்று கதறிய போது அதைக் கேளாமல் வாளா இருந்த உன் செவிகள், பார்த்தும் பாராதது போல் இருந்த உன்னிரு கண்கள், தட்டிக் கேட்காத உன் வாய், உன்னிடம் இருந்த அசாத்திய தோள்வலிமையை சரியான நேரத்துக்கு உபயோகிக்காமல் இருந்த உன்னிரு தோள்கள், வாளை எடுக்காத உன்னிரு கைகள், இருக்கையில் இருந்து எழும்பாத உன் இரு கால்கள், இவற்றை யோசிக்காத உன் புத்தி இருக்குமிடமான உன் தலை ஆகியவைக்குத் தண்டனை கிடைத்தே தீர வேண்டும் என்பது விதி!" என்று சொல்கின்றார். அப்போது," என் இந்த அங்கங்களைப் பொசுக்கக் கூடிய வல்லமை படைத்தவர் அந்தச் சூரியனே, சாதாரண நெருப்புப் போதாது, எனக்குச் சூடு வைக்க, சூரிய சக்தியை எனக்குப் பிழிந்து தாருங்கள்," என்று துக்கத்தோடு பீஷ்மர் வேண்டினார்.

வியாசர் அதற்கு அவரிடம் எருக்க இலை ஒன்றைக் காட்டி, "பீஷ்மா, எருக்க இலை சூரியனுக்கு உகந்தது. இதன் பெயர் அர்க்க பத்ரம். அர்க்கம் என்றாலே சூரியன் என்றே பொருள், சூரியனின் சாரம் இதில் உள்ளது. சந்திரனைத் தலையில் சூடிக் கொண்ட எம்பெருமான், சூரியனாக உருவகம் ஆன எருக்க இலையையும் இதன் காரணமாகவே சூடிக் கொண்டிருக்கிறார். நீ ஒரு நைஷ்டிகப் பிரம்மச்சாரி, உன்னைப் போலவே கணேசனும் நைஷ்டிகப் பிரம்மச்சார், அவனுக்கும் எருக்க இலை உகந்தது. ஆகவே இந்த இலைகளால், உன்னுடைய அங்கங்களை அலங்கரிக்கிறேன்," என்று பீஷ்மரின் அங்கங்களை எருக்க இலையால் அலங்கரித்தார். கொஞ்சம் கொஞ்சமாய் சாந்தி அடைந்து வந்த பீஷ்மர் தியானத்தில் மூழ்கி ஏகாதசி அன்று தன் உயிரை உடலில் இருந்து விடுவித்துக் கொள்கிறார். அவருக்குச் சிராத்தம் போன்றவைகள் செய்ய யாருமில்லாமல் திருமணம் ஆகாத நைஷ்டிக பிரம்மச்சாரியாக உயிர் நீத்ததை நினைத்து வருந்திய தருமரிடம், வியாசர், "வருந்தாதே, தருமா, ஒழுக்கமே தவறாத பிரம்மச்சாரியும், துறவிக்கும் பிதுர்க்கடன் என்பது அவசியமே இல்லை,. அவர்கள் மேம்பட்ட ஒரு நிலைக்குப் போய்விடுகிறார்கள், என்றாலும் உன் வருத்தத்துக்காக, இனி இந்த பாரத தேசமே பீஷ்மனுக்காக நீர்க்கடன் அளிக்கும். ரதசப்தமி அன்று தங்கள் உடலில் எருக்க இலைகளை வைத்துக் கொண்டு குளிக்கும் மக்கள் தங்கள் பாவங்களில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ளுவதோடு அல்லாமல், பீஷ்மனுக்கும் நீர்க்கடன் அளித்த புண்ணியம் அவர்களுக்குக் கிடைக்கும்." என்று சொல்லி ஆறுதல் செய்கிறார்.

விரத முறை: 
ரதசப்தமி அன்று விரதம் இருப்பது மிகவும் சுலபமானது. சூரிய உதய சமயத்தில் (காலை 6.10) குளிர்ந்த நீரில் நீராடவேண்டும். வீட்டை சுத்தம் செய்து அன்று முழுவதும் எதுவும் உண்ணாமல் உபவாசம் இருக்க வேண்டும். வசதிப்படுபவர்கள் மவுன விரதமும் இருக்கலாம். பெரியவர்கள் தனி இடத்தில் அமர்ந்து ஆழ்ந்த தியானம் செய்யலாம். பணிக்கு செல்பவர்கள் உபவாசம் மட்டும் கடைபிடித்தால் போதுமானது.

ரதசப்தமி ஸ்நான‌ம்
7 எருக்கு இலைகள்,7 இலந்தை இலைகள்,அட்சதை,மஞ்சள் தூள்,சேர்த்து உச்சந்தலையில் வைத்து நீராடவும். மஞ்சள்  பெண்கள் மட்டுமே பயன் படுத்தவேண்டும்.பெற்றோர் இல்லாதவர்கள்,எள்,பச்சரிசி,சேர்க்கவேண்டும்.இது ஆயிரம் சூரியகிரகத்துக்கு சமம்.







ஆண்டு முழுவதும் வரும் ஒவ்வொரு ஏகாதசி விரதங்கள்


ஆண்டு முழுவதும் வரும் ஒவ்வொரு ஏகாதசி விரதங்கள் க்கான பட முடிவு


ஆண்டு முழுவதும் வரும் ஒவ்வொரு ஏகாதசி விரதங்கள் 

ஏகாதசி என்பது ஒவ்வொரு பக்தர்களுக்கும் ஏகாந்த தினமாகவே உள்ளது. மோட்சத்தை அளிக்கும் விரதத்தை கடைபிடிக்க வழி ஏற்படுத்தியிருக்கும் ஏகாதசியால் ஏகாந்தம் ஏற்படாமல் எப்படி இருக்கும். அமாவாசை, பவுர்ணமிக்கு அடுத்த 11 நாட்களில் ஒரு ஏகாதசி என்ற கணக்கில் ஆண்டுக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகின்றன. ஆண்டு முழுவதும் வரும் ஏகாதசிகளுக்கு ஒவ்வொரு பெயர்களும், அந்தந்த ஏகாதசி தினங்களில் இருக்கும் விரதங்களால் பக்தர்களுக்கு கிடைக்கப்பெறும் நன்மை பயக்கும் பலன்களும் பலவாறு வகுத்து கூறப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஏகாதசியும் ஒவ்வொரு பலனை வழங்கினாலும், வைகுண்ட பதவிக்கும் வழிவகுக்கும் என்பதே சிறப்பு வாய்ந்ததாகும். 

* சித்திரை மாத வளர்பிறை ஏகாதசி, ‘காமதா ஏகாதசி’ என்றும், தேய்பிறையில் வரும் ஏகாதசி ‘பாப மோகினி ஏகாதசி’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த இரு ஏகாதசியிலும் விரதம் இருப்பவர்களுக்கு, அவர்கள் விரும்பிய அனைத்து பேறுகளும் கிடைக்கப் பெறும். 

* வைகாசி மாத வளர்பிறை தினத்தில் வரும் ஏகாதசி ‘மோகினி ஏகாதசி’ என்றும், தேய்பிறை ஏகாதசி ‘வருதித் ஏகாதசி’ என்றும் கூறப்படுகிறது. இந்த ஏகாதசி காலங்களில் விரதம் இருப்பவர்கள் அனைவரும், இமய மலை சென்று பத்ரிநாத்தை தரிசனம் செய்து வந்ததற்கான பலனை பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது.

* ஆனி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி ‘நிர்ஜலா ஏகாதசி’ என்றும், தேய்பிறையில் வரும் ஏகாதசி ‘அபார ஏகாதசி’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசிகளில் தங்கள் விரதத்தை மேற்கொள்பவர்கள் சொர்க்கத்தை அடைவார்கள். 

* ஆடி மாத வளர்பிறை ஏகாதசி ‘சயனி’ என்றும், தேய்பிறை ஏகாதசி ‘யோகினி’ என்றும் பெயர்பெற்றுள்ளது. இந்த ஏகாதசிகளில் விரதம் அனுஷ்டிப்பவர்களுக்கு அன்னதானம் வழங்கியதற்கு நிகரான பலன்கள் கிடைக்கப்பெறும்.

* ஆவணி மாத வளர்பிறை ஏகாதசியானது ‘புத்ரஜா’ என்றும், தேய்பிறை ஏகாதசியானது ‘காமிகா’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசி தினங்களில் விரதம் இருந்தால் மக்கட்பேறு கிடைக்கப்பெறுவார்கள்.

* புரட்டாசி மாத வளர்பிறை ஏகாதசி, ‘பத்மநாபா’ என்றும், தேய்பிறை ஏகாதசி ‘அஜா’ என்றும் பெயர் பெற்றது. இந்த ஏகாதசியில் விரதம் இருந்தால் குடும்ப ஒற்றுமை வளரும்.

* ஐப்பசி மாத வளர்பிறை ஏகாதசி ‘பாபாங்குசா’ என்றும், தேய்பிறை ஏகாதசி ‘இந்திரா’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசியில் விரதம் இருப்பதால், வறுமை ஒழியும், நோய் அகலும், பசிப்பிணி நீங்கும், நிம்மதி நிலைக்கும், தீர்த்த யாத்திரை சென்ற புண்ணியம் கிடைக்கும். 

* கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி ‘பிரபோதின’ எனப்படும். இந்த ஏகாதசியில் விரதம் இருந்தால் இருபத்தியோரு தானம் செய்ததற்கான பலனும், தேய்பிறை ஏகாதசியான, ‘ரமா’ தினத்தில் இறைவனுக்கு பழங்களை கொண்டு நைவேத்தியம் செய்தால் மங்கள வாழ்வு கிடைக்கும்.

* மார்கழி மாத ஏகாதசி ‘வைகுண்ட ஏகாதசி‘ என சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மனிதர்களின் ஓராண்டு தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். அதன்படி மார்கழி மாதம் தேவர்களுக்கு விடியற்காலை நேரம் ஆகும். இம்மாதம் மகாவிஷ்ணு அறிதுயிலில் இருந்து விழித்தெழும் மாதம். ஆகவேதான் இந்த மாதத்தில் வரும் ஏகாதசி சிறப்பு பெறுகிறது. இந்த மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி ‘உத்பத்தி’ ஏகாதசி எனப்படுகிறது.

* தை மாத வளர்பிறை ஏகாதசி ‘புத்ரதா’ என்றும், தேய்பிறை ஏகாதசி ‘சுபலா’ என்றும் பெயர் பெறும். இந்த ஏகாதசிகளில் விரதம் இருந்தால் புத்திர பாக்கியம், ஒளிமயமான வாழ்வு அமையும்.

* மாசி மாத வளர்பிறை ஏகாதசி ‘ஜெயா’ என்றும், தேய்பிறை ஏகாதசி ‘ஷட்திலா’ என்றும் அழைக்கப்படும். இந்த ஏகாதசிகளில் விரதம் இருப்பவர்கள், மூதாதையர்களின் முக்திக்கான வழியை பெறுவார்கள்.
 பங்குனி தேய்பிறை ஏகாதசி ‘விஜயா’ எனப்படும். இந்த நாளில் 7 வகையான தானியங்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கு முறையில் கலசத்தில் வைத்து மஹாவிஷ்ணுவை பிரார்த்தித்தால் கடல் கடந்து சென்று வெற்றி பெறுவீர். வளர்பிறை ஏகாதசி ‘ஆமலகி’ எனப்படும். இன்று விரதம் இருப்பவர்களுக்கு ஆயிரம் பசுதானம் செய்த பலன் கிடைக்கும். 

* ஆண்டில் கூடுதலாக வரும் ஏகாதசி ‘கமலா ஏகாதசி’ எனப்படும். அன்று மகாலட்சுமியை வழிபடுவது சிறப்பு.
 

சனி, 27 ஜனவரி, 2018

குறைவில்லா வாழ்வு தரும் தைப்பூச திருநாள்.!

குறைவில்லா வாழ்வு தரும் தைப்பூச திருநாள்.!


தைப்பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். அத்தனை மகத்துவம் நிறைந்தஇந்த தை மாதத்தில் பூச நட்சத்திரத்தில் அமையும் தைப்பூச திருநாள்முருகப்பெருமானின் பேரருள் கிடைக்க 
வழிவகுக்கிறது. தைப்பூசம் அன்றுமுருகப்பெருமானை கண் குளிர தரிசித்தால், பால் பொங்குவது போல்,இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சி பொங்கும். முருகப் பெருமான்நிகழ்த்திய அற்புதங்கள் பல்லாயிரம். அதில் ஒன்றாக, இதே தைப்பூசம்திருநாளில்  வாய் பேச முடியாத குழந்தையை பேச வைத்த முருகப்பெருமானின் அற்புத சம்பவம் ஒன்றை தெரிந்துக்கொள்வோம்.




பேசாத வாய் பேசியது

சோமசுந்தரப் படையாச்சி- சுப்பம்மா என்ற தம்பதியினருக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது.இந்திரனை போல் அழகாக குழந்தை திகழ்ந்ததால் இந்திரன் என பெயர் சூட்டினர். வசீகரத்தை தந்தஇறைவன், வாய் திறந்து பேசும் பாக்கியத்தை அந்த குழந்தைக்கு தரவில்லை. மற்ற பிள்ளைகள் நன்றாகபேசும்போது, தன் மகன் இந்திரன் பேச முடியாமல் அவதிபடுகிறானே, அவன் நம்மை அம்மா- அப்பா என்று அழைக்க மாட்டானா? அவன் எதிர்காலம் என்ன ஆகும்? என்று வருந்தினார்கள் இந்திரனின்  பெற்றோர்.

காலமும்  நேரமும் கூடி வந்தால் வராத சொந்தங்களும் வரும், கிடைக்காத செல்வங்களும் கிடைக்கும். அவ்வாறே சிறுவன் இந்திரனுக்கும் விடிவு காலம் வந்தது.

குக ஸ்ரீ. அருணாசல அரனடிகள். இவர் சிறந்த வரகவி. இவரை பற்றி கேள்விப்பட்ட இந்திரனின்பெற்றோர், மகனை அழைத்துக்கொண்டு அரனடிகளை சந்தித்து, தங்கள் மகனின் குறையை பற்றிசொன்னார்கள்.

கவலைவேண்டாம். முருகப்பெருமானின் கருணை உங்கள் மகனுக்கு இருக்கிறது. நிச்சயம் உங்கள்மகன் பேசுவான். தைப்பூசம் அன்று உங்கள் மகனை பால் காவடி எடுக்கச்சொல்லுங்கள். பால், 
வயிற்றை குளிர்விப்பதுபோல், முருகப்பெருமானையும் குளிர்விக்கும். அத்துடன் முருகப்பெருமானின் பெயரில் பத்துபதிகம் எழுதித் தருகிறேன். அந்த பதிகங்களை முருகனின் சன்னதியில் நீங்கள் பாடுங்கள்.  பிறகு என்அப்பன் முருகன் அனைத்தையும் பார்த்துக்கொள்வான்.” என்று கூறி பத்துப் பதிகங்களை எழுதி, இந்திரனின் பெற்றோரிடம் கொடுத்து, குழந்தையை ஆசீர்வதித்தார் சுவாமிகள்.



என்றைக்கு தைப்பூசம் வரும்? நம் குழந்தை அன்றைக்கு சுவாமிகள் சொன்னது போல் பேச வேண்டும். குழந்தை பேசுவதை கேட்க வேண்டும்.” என்று ஆவலாக காத்திருந்தனர்.

இவர்கள் எதிர்பார்த்த தைப்பூச திருநாள் வந்தது.

முருகப் பெருமான் இந்திரனை பால்குடம் எடுக்க செய்தார்கள். பால்குடம் எடுத்த பிறகு, சிறுவன்
இந்திரனை அழைத்துகொண்டு, முருகன் சந்நதியில் நின்று சோமசுந்தரப் படையாச்சியும் 
அவருடையமனைவி சுப்பம்மாவும் அரனடிகள் எழுதிகொடுத்த பத்து பதிகங்களை நம்பிக்கையுடன் பாடினார்கள்.


அப்போது, அந்த அற்புதத்தை நிகழ்த்தி காட்டினான் கந்தன். ஸ்ரீ அருணாசல அரனடிகள் சொன்னதுபோல் பத்தாவது பதிகத்தை மனம் உருகி பாடி முடித்தவுடன், அதுவரையில் பேசமுடியாமல் அவதிபட்டசிறுவன் இந்திரன் முருகப்பெருமானின் அருளால், “அம்மா  அப்பா என்று தன் தாய்-தந்தையை பார்த்துஅழைத்தான்  பேசினான்.

இப்படிபட்ட அற்புதங்களை சர்வசாதாரணமாக முருகப்பெருமான் நிகழ்த்துவார். நம்பியவர்களை காக்கும்கண்கண்ட தெய்வம் கந்தன். கந்தன் இருக்க குறை ஏது?

தைப்பூசம் அன்று முருகப்பெருமானுக்கு பால்குடம் அல்லது காவடி எடுத்து முருகப்பெருமானைவணங்குவோம்  நலன்கள் யாவும் பெற்று மகிழ்ச்சியோடு வாழ்வோம்.

வேல் உண்டு வினை இல்லை.மயில் உண்டு பயம் இல்லை.
குகன் உண்டு குறை இல்லை.

கந்தனுக்கு அரோகரா. முருகனுக்கு அரோகரா. 
வேலனுக்கு அரோகரா.!

வெள்ளி, 26 ஜனவரி, 2018

நலம் தரும் திதிகளும் அவற்றின் பலன்களும்

நலம் தரும் திதிகளும் அவற்றின் பலன்களும்Image result for pournami moon




சந்திரனின் சஞ்சாரத்தை அடிப்படையாகக் கொண்டது – திதி
சந்திர மாதம்; 29 நாள் 12 மணி 44 நிமிடங்கள் கொண்டது ஒரு சந்திர மாதம், சந்திர வருடம்; இப்படி பன்னிரண்டு சந்திர மாதங்கள் கொண்டது ஒரு சந்திர வருடம். இது 354 நாட்கள் கொண்டது. ஒரு சந்திர மாதத்தின் இருபத்து ஒன்பதரை நாட்கள்க்குள் முப்பது திதிகள் அடங்கி நிற்கும்.Image result for amavasai pournami

கிருஷ்ண பட்சம்: சந்திரன் பூமியைச்சுற்றி வரும்பொழுது அது தேய்ந்து வருகின்ற காலம் தேய்பிறைக் காலமாகும். இது அமாவாசையில் முடிவுறும். இதை கிருஷ்ண பட்சம் என்பர்.

சுக்ல பட்சம்: சந்திரன் பூமியைச்சுற்றி வரும்பொழுது அது வளர்ந்து வருகின்ற காலம் வளர்பிறைக் காலமாகும். இது பௌர்ணமி என்னும் முழுநிலவில் முடிவுறும். இதை சுக்ல பட்சம் என்பர்.

வளர் பிறைக்காலத்தில் பதினைந்து திதிகளும், தேய்பிறைக்காலத்தில் பதினைந்து திதிகளும் வருகின்றன. இந்தப்பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை அமாவாசையும் பௌர்ணமியும் மாதமொரு முறை மாறி மாறி வந்து போகின்றன. அமாவாசை – நிலவில்லாத நாள். இன்று நிலவுக்கு ஒரு கலை.
1 பிரதமை – முதலாம் பிறை. இன்று நிலவுக்கு இரண்டு கலைகள் உள்ளன.

2. துதியை – இரண்டாம் பிறை. இன்று நிலவுக்கு மூன்று கலைகள். துவி என்பது இரண்டு என்று பொருள் படும். ஆங்கிலத்தில் இரண்டைக் குறிக்கும் ‘one’ என்ற சொல்லும் இதிலிருந்தே வந்தது. இதில் இருந்துதான் துவிச்சக்கர வண்டி, துவைதம் போன்ற சொற்கள் வந்தன. அத்துவைதம் என்றால் இரண்டு அல்லாதது என்று பொருள்.

3. திருதியை- மூன்றாம் பிறை. இன்று நிலவுக்கு நான்கு கலைகள். திரி என்ற சொல் மூன்று என்று பொருள்படும். ஆங்கிலத்தில் மூன்றைக் குறிக்கும் ‘Three’ என்ற சொல் இதில் இருந்துதான் வந்தது. திரிபுரம் என்பது முப்புரங்களான மூன்று நகரங்களைக் குறிக்கும். திரிநேத்ரன் என்றால் முக்கண்ணன் என்று சிவனைக் குறிக்கும்.

4. சதுர்த்தி- நாலாம் பிறை. இன்று நிலவுக்கு ஐந்து கலைகள். சதுர் என்றால் நான்கு என்று பொருள். சதுரம் என்றால் நான்கு பக்கங்கள் உள்ளது என்று பொருள். சதுர்முகன் என்றால் நான்கு முகங்களை உடைய பிரம்மாவைக் குறிக்கும். ‘சுக்லாம் பரதரம்’ என்ற பிள்ளையார் மந்திரத்தில் வருகின்ற சதுர்ப்புஜம் என்பது பிள்ளையாரின் நான்கு தோள்களைக் குறிக்கும். சதுர்யுகம் என்பது கிருதயுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என்ற நான்கு யுகங்களின்  கூட்டாகும்.


5. பஞ்சமி-ஐந்தாம் பிறை. இன்று நிலவுக்கு ஆறு கலைகள். பஞ்ச என்றால் ஐந்து என்று பொருள். ஆங்கிலத்தில் ஐந்தைக் குறிக்கும் ‘five’ என்ற சொல் இதிலிருந்துதான் வந்தது. பஞ்சாட்சரம் என்பது சைவத்தின் ந-ம-சி-வா-ய என்ற ஐந்து எழுத்து மந்திரத்தைக் குறிக்கும். பஞ்ச பூதங்கள் என்பது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐந்து பௌதிகப் பேரலகுகளைக குறிக்கும். பஞ்சாங்கம் என்பது ஒவ்வொரு நாளுக்கும் உரிய வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்து அங்கங்களை உடைய வானியல் கணிப்பைக் குறிக்கும்.

6. ஷஷ்டி-ஆறாம் பிறை. இன்று நிலவுக்கு ஏழு கலைகள். ஷ என்றால் ஆறு என்று பொருள். ஆங்கிலத்தில் ஆறு என்ற எண்ணைக் குறிக்கும் ‘six’ என்ற சொல் இதிலிருந்துதான் வந்தது.ஷண்முகன் என்பது ஆறு முகங்களுடைய முருகனைக் குறிக்கும். ஷடாட்சரம் என்பது முருகனின் ச-ர-வ-ண-ப-வ என்ற ஆறு எழுத்து மந்திரமாகும்..

7. ஸப்தமி-ஏழாம் பிறை. இன்று நிலவுக்கு எட்டு கலைகள். ஸப்த என்றால் ஏழு என்று பொருள். ஆங்கிலத்தில் ஏழைக் குறிக்கும் ‘seven’ என்ற சொல் இதிலிருந்துதான் வந்தது. ஸப்த ரிஷிகள் என்பது ஏழு முனிவர்களைக் குறிக்கும்.

8. அட்டமி-எட்டாம் பிறை. இன்று நிலவுக்கு ஒன்பது கலைகள். ஆங்கிலத்தில் எட்டு என்னும் எண்ணைக் குறிக்கும் ‘Eight’என்ற சொல் இதிலிருந்தே வந்தது. அட்டம் என்றால் எட்டு என்று பொருள். அட்டலட்சுமி என்றால் எட்டு இலட்சுமிகளைக் குறிக்கும். அட்ட திக்குகள் என்றால் கிழக்கு, தென் கிழக்கு, தெற்கு, தென் மேற்கு, மேற்கு, வட மேற்கு, வடக்கு, வடகிழக்கு என்னும் எட்டுத் திக்குகளைக் குறிக்கும். அட்டதிக்குப் பாலகர்கள் என்றால் முறையே இந்த எட்டு திக்குகளுக்கும் உரிய இந்திரன். அக்கினி, இயமன், நிருதன், வருணன், வாயு, குபேரன், ஈசானன் எட்டு திக்குத்தெய்வங்களையும் குறிக்கும். ‘ அருணன் இந்திரன் திசை அணுகினான்’ என்றால் சூரியனின் சாரதியாகிய அருணன் இந்திரனுக்குரிய கிழக்குத் திசையை அணுகினான் என்று பொருள். இந்த வரி திருவாசகத்தின் திருப்பள்ளி எழுச்சியில் வருகின்றது.

9. நவமி- ஒன்பாதம் பிறை. நிலவுக்கு பத்து கலைகள். நவம் என்றால் ஒன்பது. ஆங்கிலத்தில் ஒன்பதைக் குறிக்கும் ‘Nine’ என்ற சொல் இதிலிருந்துதான் வந்தது. நவராத்திரி என்றால் ஒன்பது இரவுகளைக்குறிக்கும். நவதானியம் என்றால் ஒன்பது தானியங்களைக் குறிக்கும். நவக்கிரகம் என்பது ஒன்பது கிரகங்களைக் குறிக்கும்.

10. தசமி- பத்தாம் பிறை. இன்று நிலவுக்கு பதினொரு கலைகள். தசம் என்றால் பத்து. கணிதத்தில் தசமத்தை அறிமுகப்படுத்தியவர்கள் இந்துக்களே. இதை ஆங்கிலத்தில் Decimal என்று கூறுகிறார்கள். தசகாரியம் என்பது ஆத்மீகப்பாதையிலுள்ள பத்துப்படிநிலைகளைக் குறிக்கும். தசரா என்று நமது நவராத்திரியை வட இந்தியாவில் பத்து நாட் கொண்டாட்டமாகக் கொண்டாடுவர். ‘தக்க தசமதி தாயொடு தான்படும் துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்’ – திருவாசகம். இங்கு தசமதி என்பது பத்து மாதங்கள். இது தாயின் வயிற்றில் நாம் இருந்த காலத்தைக் குறிக்கின்றது.

11. ஏகாதசி- பதினோராம் பிறை. இன்று நிலவுக்கு பன்னிரண்டு கலைகள். தசம் என்றால் பத்து என்று பார்த்தோம். ஏகம் என்றால் ஒன்று. ஏகாதசி என்றால் பத்தும் ஒன்றும் சேர்ந்த பதினொன்று.

12. துவாதசி- பன்னிரண்டாம் பிறை. இன்று நிலவுக்கு பதின்மூன்று கலைகள். துவி என்றால் இரண்டு என்று பார்த்தோம். தசம் என்றால் பத்து என்று பார்த்தோம். துவாதசி என்பது பத்தும் இரண்டும் சேர்ந்த பன்னிரண்டைக் குறிக்கும்.

13. திரயோதசி-பதின்மூன்றாம் பிறை. இன்று நிலவுக்குப் பதினான்கு கலைகள். திரி என்றால் மூன்று என்று பார்த்தோம். தசம் என்றால் பத்து என்று பார்த்தோம். திரயோதசி என்பது பத்தும் மூன்றும் சேர்ந்த பதின்மூன்றைக் குறிக்கும்.

14. சதுர்த்தசி- பதினான்காம் பிறை. இன்று நிலவுக்குப் பதினைந்து கலைகள். சதுர் என்றால் நான்கு என்று பார்த்தோம். தசம் என்றால் பத்து என்று பார்த்தோம். சதுர்த்தசி என்பது பத்தும் நான்கும் சேர்ந்த பதினான்கைக் குறிக்கும்.

15. பௌர்ணமி- பூரண நிலவு. இன்று பூரண நிலவுக்கு கலைகள் பதினாறு. அமாவசையில் இருந்து ஒவ் வொரு கலைகளாக வளர்ந்து இன்று பதினாறு கலைகள் கொண்ட பூரண நிலவாகப் பரிணமிக்கின்றது.
இந்த திதிகளை தேய்பிறைக்காலத்தில் கிருஷ்ண பட்ச திதிகள் என்றும் வளர்பிறை காலத்தில் சுக்ல பட்ச திதிகள் என்றும் அழைக்கிறோம். ஆக மொத்தம் திதிகள் முப்பது.

வியாழன், 25 ஜனவரி, 2018

சிவனுக்கு உகந்த அபிஷேகப் பொருள்களும் அதன் பலன்களும்!

சிவனுக்கு உகந்த அபிஷேகப் பொருள்களும் அதன் பலன்களும்! 

சிவபெருமான், எளியவர்க்கும் அருளும் கருணை உள்ளம் கொண்டவர். ஆனாலும், சிவபெருமானின் திருவருளைப் பெற விரும்பும் அன்பர்கள், சிவபெருமானுக்கு பலவகையான அபிஷேகத் திரவியங்களால் அபிஷேகம்செய்து வழிபடுகின்றனர். இதன் பலனாக சிவபெருமானின் பேரருளுக்குப் பாத்திரமாகி , பல நன்மைகளைப்பெறுகின்றனர்.
சிவனுக்கு பால் அபிஷேகம்

சிவபெருமானுக்கு உகந்த அபிஷேகத் திரவியங்களும் கிடைக்கும் பலன்களும்:

1.வலம்புரிச் சங்கு அபிஷேகம்:
வலம்புரிச் சங்கு

சிவபெருமானுக்கு மிகவும் உகந்தது து வலம்புரிச் சங்கினால் செய்யப்பெறும் அபிஷேகம். வலம்புரிச் சங்கில் மகாலட்சுமியும் குபேரனும் வாசம் செய்வதாக ஐதீகம். வலம்புரிச் சங்கினால் அபிஷேகம் செய்தால், சகல ஐஸ்வர்யங்களும் கிடைப்பதுடன், தீவினைகள் நீங்கி, நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும்.

2.விபூதி அபிஷேகம்:
விபூதி

விபூதியால் அபிஷேகம் செய்தால், இன்ப வாழ்க்கையும் மோட்சமும் கிடைக்கும்.

3.கரும்புச் சாறு:
கரும்புச் சாறு
கரும்புச் சாறினால் அபிஷேகம் செய்தால், நோய்நொடிகள் நீங்கி, ஆரோக்கிய வாழ்வைப் பெறலாம்.

4.எலுமிச்சம்பழச் சாறு: 
எலுமிச்சம் பழச் சாறு

எலுமிச்சம் பழச்சாறினால் அபிஷேகம் செய்தால்,  எதிரிகள் அச்சம் நீங்கி, பகைமைகள் விலகும்.

5.இளநீர்:
இளநீர்

இளநீரால் அபிஷேகம் செய்தால், இன்பமான வாழ்வு கிடைக்கும்.

6.பஞ்சாமிர்தம்: 
பஞ்சாமிர்தம்
பழங்கள், தேன், கற்கண்டு ஆகியவை சேர்த்த பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்தால், உடலும் உள்ளமும் வலிமைபெறும்.

 7.தேன்:
தேன்

தேனால் அபிஷேகம் செய்தால், இசை வல்லமை கிடைக்கும்.
8.பால்:
பால்
பாலால் அபிஷேகம் செய்தால், நோய்நொடிகள் நீங்கும்; ஆரோக்கிய உடல் நலத்துடன் ஆயுள் நீடிக்கும்.

9.தயிர்:
தயிர்
தயிரால் அபிஷேகம் செய்தால், நல்ல குழந்தைகளைப் பெறலாம்.

10.நெய்: 
நெய்
நெய்யால் அபிஷேகம் செய்தால், முக்தியைத் தரும்.

கோயிலாக இருந்தால், அர்ச்சகரிடம் கொடுத்து அபிஷேகம் செய்யச் சொல்லலாம். முறைப்படி வீட்டிலேயே சிவலிங்கம் வைத்து பூஜை செய்பவர்கள், அவரவர் விரும்பும் பலனுக்கு ஏற்ற அபிஷேகப் பொருள்களைக்கொண்டு அபிஷேகம் செய்யலாம்.






புதன், 24 ஜனவரி, 2018

வேண்டுதல் நிறைவேற காமாட்சி அம்மனுக்கு எலுமிச்சை மாலை …


வேண்டுதல் நிறைவேற காமாட்சி அம்மனுக்கு எலுமிச்சை மாலை …




எல்லாத் தீமைகளையும் அழித்து எல்லாத் தடைகளையும் போக்கி நல்வாழ்க்கையைத் தருபவள் காமாட்சியே ஆவாள். வெற்றியை விரும்புவோர் காமாட்சியை விரும்பி வழிபடுவார்கள்.
சிவன், விஷ்ணு, பிரம்மன், யமன், இந்திரன், முதலான தேவர்களின் மகாசக்திகளின் ஒட்டு மொத்த வடிவமாக காமாட்சி விளங்குவதால் அவள் பல ரூபங்களை கொண்டவள்.
அவளை நினைத்தாலும் அவளுடைய மகாமந்திரங்களை ஜபித்தாலும் நமக்கு ஏற்படக்கூடிய மரண பயம், இகலோக பயம், பரலோக பயம், அரவு பயம், சுருதி பயம், வேதனா பயங்கள்உள்ளிட்ட அனைத்து பயங்களும் ஓடி ஒளிகின்றன.ஆடி மாதம் முழுவதும் ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும் அமாவாசை, பௌர்ணமி நாட்களிலும் காமாட்சியை வழிபடுவது சாலச்சிறந்தது.
ஒருவருடைய ஜாதகத்தில் கிரக தோஷத்தால் திருமணத் தடைகள் ஏற்பட்டிருக்கலாம். இதிலிருந்து நிவர்த்தி பெற காமாட்சிக்கு புடவை சார்த்தி எலுமிச்சம்பழ மாலை, செவ்வரளி மாலை அணிவித்து பசு நெய் அல்லது நல்லெண்ணையால் தன் வயது எண்ணிக்கையுள்ள தீபம் ஏற்றி குங்குமத்தால் அருச்சனை செய்தால் திருமணத் தடைகள் நீங்கும். மகப்பேறு, தொழில், அபிவிருத்தி, கல்வியில் தேர்ச்சி மற்றும் சகல செல்வங்களும் பெருகும்.காமாட்சி அம்மனுக்கு எலுமிச்சை மாலை … க்கான பட முடிவு


அம்பாளுக்கு எலுமிச்சை பழம் மாலை சார்த்தும் போது 18, 27, 54, 108, 1008 எண்ணிக்கை உள்ள எலுமிச்சம் பழ மாலையைச் சாற்றுவதால் நமக்கு உண்டாகும் உக்கிரமமான நோய்கள், வயிற்று உபாதைகள் தணிகின்றன. தீராத துன்பங்கள் நீங்குகின்றன.காமாட்சி மற்றும் துர்க்கை அம்மனுக்கு மாலையாக அணிவிக்கப்படும் சிறப்புடையது எலுமிச்சம்பழம், இதனை குறுக்குவாட்டில் இரண்டாக நறுக்கி சாற்றை பிழிந்துவிட்டு மூடியில் எண்ணெய் அல்லது நெய் விட்டு ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் விளக்கேற்றி வந்தால் அம்மனின் அருள் எளிதில் கிடைக்கும். கன்னிப்பெண்கள் இவ்வாறு விளக்கேற்றி வந்தால் விரைவில் திருமணம் நடைபெறும்.
எலுமிச்சம் பழங்களை மாலையாகத் தொடுத்து காமாட்சி அம்மனுக்கு அணியும் வழக்கமும் உள்ளது. இவ்வாறு செய்வதால் வேண்டுதல் உடனடியாக நிறைவேறும்.எலுமிச்சை ஜீவ கனி மட்டுமல்ல. வெற்றிக் கனியுமாகும். அந்தக் காலத்தில் அரசர்கள் எதிரி நாட்டின் மீது படையெடுத்துச் செல்லும் முன்பாக காவல் தெய்வம், எல்லைத் தெய்வம் சம்கார தெய்வங்களை எலுமிச்சை மாலை அணிவித்து, அந்த தெய்வங்கள் முன்பாக நின்று உறுதி மொழி எடுத்துக் கொண்டு அதன்பிறகு தங்களது படைகளை வழி நடத்திச் செல்வார்கள்.


போரில் வாகை சூடி திரும்பி வந்த பின்பு மீண்டும் எலுமிச்சை மாலை சூடி வழிபாடு செய்யும் வழக்கம் இருந்தது.பில்லி, சூனியம், மாந்திரீகம் இவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இன்றைக்கும் காளி அம்மனுக்கு எலுமிச்சை மாலை சூடி வணங்கி வழிபடுவதை திருவக்கரை வக்கிர காளியம்மன், பட்டீஸ்வரம் துர்கையம்மன் உள்ளிட்ட பல முக்கிய ஆலய வழிபாடுகளில் பிராதானமாக அமைந்துள்ளதைக் காணலாம்.