ஆன்மீக தேடல்

திங்கள், 4 ஜூன், 2018

கல்யாண தடை நீக்கும் வாழைமலர் பூஜை:

அன்பார்ந்த தோழிகளுக்கு  என் இனிய வணக்கங்கள்.நமக்கு எத்தனையோ தேவைகள் இருந்து கொண்டே இருக்கின்றன.நாம் கேட்கும் நியாயமான கோரிக்கைகளை நிச்சயம் இறைவன் கொடுப்பார்.முதலில் நம்பிக்கை வையுங்கள்.கிடைப்பது தாமதமானாலும் நல்லதாக கிடைக்கும் என இறைவன்மீது நம்பிக்கை வையுங்கள்.நீங்கள் எந்த தெய்வத்தை கும்பிட்டாலும் நம்பிக்கையுடன் ஒவ்வொருநாளும் பூஜை அறையில் 5நிமிடம் நம் கோரிக்கைகளை வைத்து அந்த தெய்வத்திற்குரிய பாடல்கள்,மந்திரங்கள் எது உங்களுக்கு தெரியுமோ அதை சொல்லுங்கள்.முதலில் முழுமுதல் கடவுளான விநாயகரை வழிபட்ட பிறகுதான் நாம் மற்ற தெய்வத்தை கும்பிட வேண்டும்.

நான் படித்த பதிவை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என இந்த பதிவை போடுகிறேன்.கல்யாண ஆவதற்கு தடங்கல் இருந்து கொண்டே இருக்கும். இந்த பூஜையின்மூலம் அது நீங்கி விரைவில் திருமணம் நடக்கும்.
வாழைமலர் பூஜை:கலசம் க்கான பட முடிவு
கல்யாண தடை நீக்கும் வாழைமலர் பூஜை:
பூஜையறையில், நுனி பாகம் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி இருக்கும்படி நுனிவாழை இலை விரித்துப்போட வேண்டும். அதில் பச்சரிசி பரப்பி வைத்து, அதன் மீது மோதிரவிரலால் ஸ்வஸ்திகம் அல்லது திருநாமம் வரையவும். பிறகு, பஞ்சவர்ண நூல் சுற்றிய (3 லிட்டர் கொள்ளளவு கொண்ட) மண் கலசத்தை தீர்த்தத்தால் நிரப்பி, மஞ்சள் பொடி, ஏலக்காய், பச்சை கற்பூரம் தூள் இட்டு, கலசத்தின் மீது முற்றிய வாழை மலரை இதழ்கள் விரிந்து இருக்கும்படி வைக்கவேண்டும். அதற்கும் வாசனை மலர், சந்தன-குங்குமத் திலகமிட வேண்டும். பிறகு, கலசத்துக்கு எதிரில் பசுஞ்சாணத்தில் பிள்ளையார் பிடித்துவைத்து, அவருக்கு அருகம்புல் சமர்ப்பித்து ஒரு வெற்றிலையின் மீது வைக்கவும்.
தொடர்ந்து, பெரிய தட்டு ஒன்றின் மீது 16 தென்னங்குச்சிகளில் பஞ்சு அல்லது திரிவிலையை சுற்றிவைத்து,  நெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் ஆகிய மூன்று எண்ணெய் கலவையில் அவற்றை நனைத்து தீபம் ஏற்றத் தயாராக வைக்கவேண்டும். அல்லது 5 முகக் குத்துவிளக்கை இரண்டு பக்கங்களிலும் ஏற்றிவைக்கலாம். இனி, பூஜையை ஆரம்பிக்கலாம்.
முதலில், வழக்கம்போல் விநாயகர் பூஜை.
ஆனை முகத்தவனே அருகம்புல் நாயகனே
வீணை சரஸ்வதிக்கு வித்தகனாய் வந்தவனே
வாழை மலர் முன்பு வாசமுடன் அமர்ந்தோனே
வாழ்வை பெறும் பூசை வெற்றிதர அருள்வாயே
- என்றபடி மலர்கள் சமர்ப்பித்து, விநாயகரைத் தியானித்து வணங்க வேண்டும். திருமணத் தடையுள்ள ஆண்-பெண் அமர்ந்து இதைச் செய்தல் அவசியம். அடுத்ததாக அன்றைய திதி, வாரம், நட்சத்திர விவரங்களைச் சொல்லி, கையில் மலர் மற்றும் மஞ்சள் அரிசியை எடுத்துக்கொண்டு, மம அதிசீக்கிர விவாக பராப்தியர்த்தம் களத்திர தோஷ நிவாரணார்த்தம் என்று பெயரைச் சொல்லி சங்கல்பம் செய்யவேண்டும். பிறகு ஸ்ரீதுர்காதேவி துதி, ஸ்ரீலட்சுமி துதி, ஸ்ரீமகாவிஷ்ணு துதி, ஸ்ரீஸ்வயம்வர கலாதேவியின் துதி ஆகியவற்றை பாராயணம் செய்ய வேண்டும். அல்லது, கீழ்க்காணும் துதியை 7 முறை சொல்லலாம்.
விறல் மாறன் ஐந்து மலர்வானி சிந்த
மிகவானில் இந்து வெயில் காய
மிதவாடை வந்து தழல் போல ஒன்ற
வினை மாதர் தத்தம் வசை கூறக்
குறவாணர் குன்றில் உறை பேதை கொண்ட
கொடிதான துன்ப மயல் தீரக்
குளிமாலையின் கண் அணிமாலை தந்து
குறைதீர வந்து குறுகாயோ
மஹிமான் உகந்த இறையோன் மகிழ்ந்து
வழிபாடு தந்த மதியானா!
ஆண்கள், கந்தர்வராஜ மந்திரமான...
ஓம் காமேஸ்வராய வித்மஹே பூவித
                  சீக்ராய தீமஹி
தந்தோ கந்தர்வராஜ; ப்ரசோதயாத்
என்று 32 தடவை சொல்லி வணங்கலாம். மேலும்,
பலரும் பரவப் படுவாய் சடைமேல்
மலரும் பிறையோன் நுடையாய் மருகல்
புலருந்த் தனையும் துயிலான் புடைபோத்
தலரும் படுமோ அடியானிவனே  
எனும் இந்தப் பாடலையும் 5 முறை படித்து, ஆத்ம பிரதட்சிணம் செய்து, தேங்காய் மற்றும் மூவகை கனிகளை தாம்பூலத்துடன் படைத்து, குலதெய்வம், குரு, பித்ருக்களை நினைத்து மலரிட்டு வணங்கிய பிறகு, 'ஓம் சர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதகே சரண்யே திரியம்பிகே தேவி நாராயணி நமோஸ்துதே’ என்று சொல்லி தீபக்குச்சிகள் 16-யும் ஏற்றுக. பிறகு, கற்பூர ஆரத்தி காட்டி மஞ்சள்- குங்குமம் பிரசாதமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்ததாக, கலசநீரை வீடு முழுவதும் தெளிக்கலாம். பின்னர், ஒரு மணைப் பலகையில் பெண்ணை அமர வைத்து மங்கல வாசகங்கள் சொல்லி அபிஷேகம் செய்துவிட்டு, மடி ஆடை உடுத்தச் செய்யவேண்டும். தொடர்ந்து, மீண்டும் பூஜையறைக்குச் சென்று வணங்கி குங்குமப் பிரசாதம் எடுத்துக்கொண்டு, சிறிது பூவை எடுத்து தலையில் வைத்துக்கொண்டு, தெய்வங்களை வணங்கிவிட்டு, வீட்டுப் பெரியவர்களிடமும் வாழ்த்து பெற வேண்டும்.
இந்த வழிபாட்டால் கிடைக்கும் இறையருளாலும் பெரியோர் ஆசியாலும் விரைவில் கல்யாணம் கூடிவரும்.
இடுகையிட்டது Eswari நேரம் 4:03 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

ஞாயிறு, 3 ஜூன், 2018

அகல் விளக்கு தீபம் சிறந்தது என்பது ஏன்?


அகல் விளக்கு தீபம் சிறந்தது என்பது ஏன்?


நெய் தீபம்
திருக்கோயிலில் தீபம் ஏற்றுவது மிக சக்தி வாய்ந்த பரிகாரம் ஆகும். அதுவும் அதிகாலை, நண்பகல் (உச்சிவேலை), அந்திபொழுதில் ஏற்றப்படும் தீபங்களுக்கு மிகவும் விஷேச சக்தி உண்டு. அதில் பல சூட்சும ரகசியங்கள் அடங்கி உள்ளன. கோவில்களில் இந்த மூன்று வேளைகளில் ஏற்றப்படும் தீபம் உடனுக்குடன் துன்ப நிவர்த்தியை தரும்
.மிக கடுமையான பிரச்சனைகளுக்கு நல்ல சுத்தமான நெய்யை, இறைவனின் கருவறையில் சுடர்விட்டு பிரகாசிக்கும் தூங்கா விளக்கில் சேர்த்து வந்தால் போதும். இப்படி தூங்கா விளக்கினை நெய்யால் ஏற்றி மேல் சொன்னது போல இந்த மூன்று வேளைகளில் தொடர்ந்து தீபம் ஏற்றி வர நாம் எண்ணிய காரியத்தை நிறைவேற்றுமாம்.
இத்தகைய தீபம் உடலில் இருந்து பிரிய போகும் ஒரு ஜீவனின் நேரத்தையே தள்ளிப்போடும் அளவிற்கு சக்திவாய்ந்தது ஆகும். ஆகவே பல ஆயிரம் செலவு செய்து பரிகாரங்கள் பண்ணுவதைவிட ஒரு நெய்தீபம் பல மடங்கு சிறந்தது.
எந்த கடவுளுக்கு தீபம் ஏற்றினாலும் அகல் விளக்கில் தீபம் ஏற்றுவது சிறந்தது

அகல், எண்ணெய், திரி, சுடர் இவையெல்லாம் சேர்ந்ததே விளக்கு. நெய் விளக்கு ஏற்றும் இடத்தில் மகாலக்ஷ்மி குடியிருப்பாள்.

எந்த கடவுளுக்கு தீபம் ஏற்றினாலும் அகல் விளக்கில் தீபம் ஏற்றுவது சிறந்தது. அதற்கு காரணமும் உண்டு. அதாவது அகல் விளக்கு ஒரு ஏழை ஒருவனால் ஐம்பூதங்களைக் [மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்] கொண்டு செய்யப்படுகிறது. 

அவன் களிமண்ணில் நீரை ஊற்றி, சூரிய ஒளியில் காய வைத்து, காற்றின் உதவி கொண்டு நெருப்பில் இட்டு ஒரு அழகான அகல் விளக்கை செய்கிறான். அகல் விளக்கில் தீபம் ஏற்றுவதையே அம்பாள் விரும்புகிறாள்.

இன்னுமொரு காரணம்,

அகல் விளக்கை வாங்குவதால் அந்த ஏழைக் குடும்பமும் பிழைக்கிறது. நம்மை அறியாமல் ஒரு நல்ல செயல்களை செய்கிறோம். இதுவும் புண்ணியக் கணக்கில் போய் சேரும்.
தீப பலன்கள்!
Image may contain: candles and night
நெய்தீபம் ஏற்றுவது லட்சுமி, குரு, அய்யப்பன், நரசிம்மருக்கு உகந்தது. இதனால் கடன் தீரும்.
நல்லெண்ணை தீபம் சனீஸ்வரர், சரபேஸ்வரருக்கு உகந்தது. நீண்ட ஆயுள் கிடைக்கும்.
இலுப்பை எண்ணை துர்க்கைக்கு உகந்தது. இந்த எண்ணெய்  கொண்டு தீபம் ஏற்றி வர எதிரிகளால் ஏற்படும் பயம் விலகும்.
தேங்காய் எண்ணெய் கணபதிக்கு உகந்தது. இதனால் காரிய சித்தி, தேர்வில் வெற்றி உண்டாகும்.
தேங்காய் எண்ணெய் , இலுப்பை எண்ணை, நல்லெண்ணை, விளக்கெண்ணை, நெய் இந்த ஐந்தையும் ஒன்றாகக் கலந்து கோவில்களில் விளக்கேற்றினால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.
இடுகையிட்டது Eswari நேரம் 11:11 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

ஸ்த்ரீகள் ஜெபிக்க வேண்டிய மந்திரம்


maha periyava க்கான பட முடிவுஸ்த்ரீகள் ஜெபிக்க வேண்டிய மந்திரம் வேலைக்கு போகிறவர்கள் (குறிப்பாக ஸ்திரீகள்) ஜெபிக்க சுலபமான மந்திரம்!

அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்மணி ஒருவர், பெரியவாள் தரிசனத்துக்கு வந்தார். இந்நாளைய பெண்மணியாக இருந்தாலும், உள்ளுர பக்தி இருந்தது;
சமய சடங்குகளையும் மந்திர தோத்திரங்களையும் முறையாக பெற்றுக்கொண்டு அனுஷ்டிக்க முடியவில்லையே என்ற தாபம் இருந்தது.
மனமுருக பெரியவாளிடம் பிராத்தித்து கொண்டார்: “நான் வேலைக்கு போகிறவள். எனக்கு ஓய்வு நேரம் குறைவு.
அத்துடன், மடி, ஆசாரம் என்றெல்லாம் கண்டிப்புடன் இருக்க முடியாது. நீளமான ஸ்தோத்திரங்கள், பாராயணம் செய்யவும் இயலாது. அதனால், எதாவது சுலபமான மந்திர ஜெபம் செய்யவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. பெரியவாள் அனுக்ரகம் பண்ணனும்.”

உடனே, கருணாமூர்த்தியான பெரியவாள், அந்த பெண்மணியின் உள்ளுணர்வையும் சிரத்தையையும் புரிந்துக்கொண்டு , “சொல்லு…” என்றார்கள்.
‘ஹரிநாராயண துரிதநிவாரண
பரமானந்த சதாசிவசங்கர’
உபதேசம் பெற்ற அம்மங்கையர்கரசி, மனமகிழ்ந்து, பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்தார். ‘ஆசார அனுஷ்டானமில்லாத உனக்கெல்லாம் மந்திர உபதேசம் என்ன வேண்டியிருக்கு?”
என்ற கடிய சொற்களை எதிர்பார்த்து வந்தவருக்கு, கனிவான உபதேசத்தால் நெகிழ்ந்தே போனார்.
ஆனால், இந்த மந்திரம் அந்த பெண்மணிக்கு மட்டும் அளிக்கப்பட்ட உபதேசம் அல்ல; நம் அத்தனை பேருக்கும்தான்!
ஸ்ரீராமஜெயம்


இடுகையிட்டது Eswari நேரம் 10:54 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

திருவிளக்கு பூஜை ஆரம்பிக்கும் முன் செய்ய வேண்டிய விதிமுறைகள்

தொடர்புடைய படம்

திருவிளக்கு பூஜை ஆரம்பிக்கும் முன் செய்ய வேண்டிய விதிமுறைகள் 


·    பூஜைக்குத் தேவையான பொருட்களைச் சேகரித்துக் கொண்டு, நிவேதனங்களைத் தயார் செய்து கொண்ட பின்பே பூஜைக்கு அமரவும்.


·    சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்வது நல்லது. வேண்டும் பிற நிவேதனங்களும் செய்யலாம்.


·    திருவிளக்கு பூஜைக்கு, விளக்கை கிழக்கு முகமாக ஏற்றுவதே சிறந்தது. பூஜிப்பவர், வடக்கு நோக்கி அமர்ந்து பூஜிக்கவும்.


·    வாழை இலையில் அரிசியை சதுரமாகப் பரப்பி அதன் மேல் திருவிளக்கை இட்டு பூஜிப்பது சிறந்தது. இலையின் நுனி, விளக்குக்கு இடப்புறம், வடக்கு நோக்கி இருக்க வேண்டும். சிறிய தாம்பாளத்தட்டிலும் அரிசியைப் பரப்பி அதன் மேல் விளக்கை இட்டு பூஜிக்கலாம். திருவிளக்கின் கீழிருக்கும் அரிசியை, மறுநாள்  வீட்டுக்கு உபயோகிக்கலாம்.


·    மாக்கோலமிட்டு அதன் மேல் வாழை இலையை வைப்பது சிறந்தது.


·    பூஜிப்பவர், பாய் அல்லது விரிப்பில் அமர்ந்து தான் பூஜை செய்ய வேண்டும்.



·    பூஜிக்கும் விளக்கிற்கு அருகில் ஒரு சிறு விளக்கை ஏற்றி வைக்கவும். அதிலிருந்து தான், ஊதுபத்தி,கற்பூரம் முதலியவை ஏற்ற வேண்டும். பூஜை செய்யும் விளக்கை அதற்கு உபயோகிக்கக் கூடாது.


·    பூஜை செய்யும் போது (இடையில்) நடுவில் எழுந்திருக்கக்கூடாது.


·    பூஜை செய்யும் விளக்கைச் சுத்தம் செய்து, பொட்டு வைத்து, தண்டுப்பாகத்தில், பூ சூட்டி பூஜையில் வைக்கவும். விளக்கின் அடிப்பகுதியில், அம்பிகையின் பாதங்களைக் குறிக்கும் விதமாக, இரண்டு பொட்டுக்கள் வைக்கவும்.


·    எண்ணை ஊற்றி அதன் பின்பே திரியைப் போடவேண்டும்.



·    பூஜைக்குப் புதுத் திரிகளையே உபயோகிக்க வேண்டும். தினந்தோறும் விளக்கேற்றும் போதும், புதுத் திரிகளை உபயோகிப்பதே சிறந்தது.


·    குங்குமம், அட்சதை, மலர்கள் ஆகியவற்றால் அர்ச்சிக்கலாம்.




·    பூஜை முடியும் வரை, விளக்கு ஆடக் கூடாது. ஆகவே, சற்று தாராளமாக அரிசி போட்டு, விளக்கை சரியாக வைக்கவும். சற்று கெட்டித் திரியாகப் போட்டால், பூஜை முடியும் வரை சுடர்கள் அலைபாயாமல் இருக்கும்.


பூஜைக்குத் தேவையான பொருட்களைச் சேகரிக்கும் நேரத்திலிருந்து, பூஜை முடியும் வரை இறை நாமங்களை ஜெபித்தபடி இருப்பது, பூஜையில் மனம் ஒன்றிச் செய்ய உதவும்.


மஞ்சள் பிள்ளையாரை, ஒரு சிறு வெற்றிலையில் அல்லது தட்டில் பிடித்து வைத்துக் கொள்ளவும்.


தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழத்தை ஒரு தாம்பாளத் தட்டில் வைக்கவும். பிள்ளையாருக்கு நிவேதனம் செய்யத் தேவையான வெற்றிலை, பாக்கு, பழத்தைத் தனியாக வைக்கவும்.


பூஜைக்குத் தேவையான,மலர்கள், அட்சதை முதலியவற்றைத் தனித் தனி தட்டுக்களில் வைக்கவும். சந்தனம், குங்குமம், உள்ளிட்ட பூஜைப் பொருட்களை கைக்கெட்டும் தூரத்தில் வைத்துக் கொண்டு, திருவிளக்கை நமஸ்கரித்து, பூஜைக்கு அமரவும்.


முதலில், பிரதான விளக்கிற்கு அருகிலிருக்கும் சிறு விளக்கை ஏற்றவும். பின், பிரதான விளக்கை, அந்த சிறு விளக்கைக் கொண்டோ, தீபக்காலைக் கொண்டோ ஏற்றவும். விளக்கு ஏற்றும் போது,'ஒளிவளர் விளக்கே போற்றி' என்று சொல்லிக் கொண்டே ஏற்றவும்.


மஞ்சள் பிள்ளையாரில், ஸ்ரீ விக்னேஸ்வரரை எழுந்தருளப் பிரார்த்தித்து, பூஜை எவ்வித விக்னமும் இன்றி நிறைவேற விக்னேஸ்வர பூஜையைச் செய்யவும். பிள்ளையாருக்கு, வெற்றிலை பாக்கு பழம் நிவேதனம் செய்யவும்.


பின், பிரதான விளக்கில், அம்பிகையை எழுந்தருளப் பிரார்த்திக்கவும். நம் உள்ளத்திலும் இல்லத்திலும் திருவிளக்கிலும் அம்பிகை எழுந்தருளி, நம் வாழ்வில் ஒளியேற்றப் பிரார்த்திக்கவும். 

பின், அம்பிகைக்கு உபசார பூஜைகள் செய்து, லக்ஷ்மி அஷ்டோத்திரம், ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம், திருவிளக்கு போற்றிகள் முதலியவற்றை, நேரம்,சௌகரியத்திற்கு தகுந்தபடி கூறி, குங்குமம், அட்சதை மற்றும் மலர்களால் அர்ச்சிக்கவும்.
பூஜை செய்வதற்கு, ஸ்ரீ லலிதா அஷ்டோத்திர சத நாமாவளியை பஜனையாக பாலடவும்
ஊதுபத்தி ஏற்றிக் காட்டவும். ஒரு முக தீபத்தை(தீபக்கால்) ஏற்றிக் காட்டவும். பின்பு நிவேதனங்களை பக்தியுடன் சமர்ப்பிக்கவும். நிவேதனம் செய்யும் போது, எவ்வித நிவேதனமாக இருந்தாலும் 'அம்ருதமயமான இந்த நிவேதனத்தை உனக்குச் சமர்ப்பிக்கிறேன்(சர்வம் அம்ருதமயம் நிவேதயாமி)' என்று கூறி சமர்ப்பிக்கவும். 
தேங்காய் உடைத்து, வெற்றிலை, பாக்கு, பழத்துடன் நிவேதனம் செய்யவும். கற்பூரம் ஏற்றிக் காட்டவும். தூபம் முதலானவை காட்டும் பொழுது, எழுந்து நின்று உபசார பூஜைகளைச் செய்வது சிறந்தது.
முடிந்தால், திருவிளக்கைச் சுற்றி வந்து நமஸ்கரிக்கவும். இல்லையெனில், ஆத்மபிரதக்ஷிணமாக(தன்னைத் தானே சுற்றுதல்) செய்து திருவிளக்கை நமஸ்கரிக்கவும். கை நிறைய புஷ்பங்களை எடுத்து அம்பிகையின் பாதாரவிந்தங்களில் சமர்ப்பித்து நமஸ்கரிக்கவும்.
ஒரு தட்டில், மஞ்சள் குங்குமம் கலந்த நீரில், இரு சிறு நெய்தீபங்களை ஏற்றி வைத்து, திருவிளக்கிற்குக் காட்டவும். இந்த ஆரத்தி நீரை பூஜை முடிந்த பின் செடிகளுக்கு ஊற்றவும்.
பூஜையில் ஏற்பட்டிருக்கக் கூடிய குறைகளுக்காக அம்பிகையிடம் மானசீகமாக மன்னிப்புக் கோரவும். நமஸ்கரிக்கும் போது, தீபச்சுடரில் எழுந்தருளியிருக்கும் அம்பிகையுடன், மனமொழி மெய்யை இணைத்து, 'நீயே அனைத்தும்' என்று மானசீகமான சரணாகதியடைந்து நமஸ்கரிக்கவும். 'நீங்காத பக்தியை அருள்வாய்' என்று அம்பிகையிடம் மனமுருகி வேண்டவும்.
பூஜை முடிந்ததும், பூ, அக்ஷதையை திருவிளக்கின் பாதத்தில் இட்டு, தீபத்திலிருக்கும் அம்பிகையை தம் இடம் சேரப் பிரார்த்திக்கவும். பின் திருவிளக்கை, கிழக்காக நகர்த்தவும். பூஜைப் பிரசாதங்களை சிறிது உண்டுவிட்டு, மற்றவர்களுக்கும் விநியோகிக்கவும். சுமங்கலிகளுக்குத் தாம்பூலம் அளிப்பது சிறந்தது.
குத்துவிளக்கின் முத்துச் சுடரொளியில் அம்பிகை குடியிருக்கிறாள். நம்மைச் சுற்றிலும் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள், சக்திகளை அகற்ற வல்ல வலிமை தீப வழிபாட்டிற்கு உண்டு. இதை உணர்ந்து, உள்ளன்போடு தீப வழிபாடு செய்யச்செய்ய, வாழ்வில் நல்ல பல மாற்றங்கள் ஏற்படுவதைக் கண்கூடாகக் காணலாம்.
தீப வழிபாடு செய்து, அம்பிகையின் அருளால் வெற்றி பெறுவோம்!!!
இடுகையிட்டது Eswari நேரம் 6:21 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

காசியின் மகிமை!

காசியின் மகிமை!

 பருந்து பறக்காத - பல்லி ஒலிக்காத நகரம்!
 சில தலங்களுக்கென தனித்துவங்கள் உண்டு. காசிக்கு ஐந்து
அதிசயங்களைச் சொல்வார்கள். காசியில் கருடன் பறப்பதில்லை; பல்லி
ஒலிப்பதில்லை; மாடு முட்டுவதில்லை; பூக்கள் மணப்பதில்லை; 
எரிக்கப்படும் பிணங்கள் நாறுவதில்லை.
       இந்த அதிசயங்களில் காசியில் கருடன் பறக் காமைக்கும் பல்லி
ஒலிக்காமைக்கும் காரணமானவர் பைரவர்தான். காசி நகரைச் சுற்றி 45 மைல் பரப் பளவில் கருடன் பறப்பதில்லை என்கிறார்கள்.
இராவணனை வதம் செய்தபின் சேதுவில் சிவபூஜை செய்ய நினைத்தார்
இராமபிரான். காசிக்குச் சென்று சிவலிங்கம் ஒன்று கொண்டு வருமாறு
அனுமனுக்குக் கட்டளையிட்டார். அனுமன் காசிக்குச் சென்றார். அங்கு
எங்கு பார்த்தாலும் சிவலிங்கங்கள் இருந்தன. அந்த லிங்கங்களில் எந்த
லிங்கம் சுயம்பு லிங்கம் என்று புரியாமல் தடுமாறினார் அனுமன்.
அந்த நேரத்தில் அவருக்குத் துணை செய்ய நினைத்தார் மகாவிஷ்ணு. 
விஷ்ணுவின் அருளால் அவருடைய வாகனமான கருடன் ஒன்று பறந்து
வந்தது. ஒரு குறிப்பிட்ட லிங்கத்துக்கு மேல் வட்டமடித்தது. பல்லியும்அதே நேரத்தில் நல்லுரை சொல்வதுபோல ஒலித்தது.
இந்த இரண்டு குறிப்புகளையும் புரிந்து கொண்ட அனுமன், அந்தலிங்கம்
தான் சுயம்பு லிங்கம் என்று உணர்ந்து, அச்சிவலிங்கத்தைப்பெயர்த்து 
எடுத்துக் கொண்டு தெற்கு நோக்கிப் பறக்கலானார்.
      காசிக்கு காவல் தெய்வம் பைரவர். எட்டு பைரவர்கள் காசி நகரின்எட்டு 
திசைகளிலிருந்து காவல் செய்வதாக ஐதீகம்.
சிவலிங்கத்துடன் வந்த அனுமனைத் தடுத்த பைரவர், ""என்னுடையஅனுமதியில்லாமல் காசியில் இருக்கும் லிங்கத்தை நீ எப்படி பெயர்த்துச்செல்லலாம்?'' என்று கேட்டார்.
     
அனுமன், பைரவரைப் பற்றி சற்றும் கவலைப்படாமல், ""என்தெய்வமான இராமபிரானின் உத்தரவு. அதனால் லிங்கத்தை 
எடுத்துக்கொண்டு செல்கிறேன்'' என்று சொன்னார்.
அனுமனின் பதிலில் திருப்தியடையாத பைரவர் அனுமனுடன்
சண்டையிட்டார். இருவருக்கும் கடும் போர் நடந்தது. வெற்றி- தோல்வியை நிர்ணயிக்க முடியாமல் அந்தப் போர் அமைந்தது. அவர்கள்இருவரும் சண்டை யிட்டுக் கொள்வதைக் கண்ட முப்பத்து முக்கோடிதேவர்களும் 
கவலையில் ஆழ்ந்தார்கள். அவர்களுள் சிலர் காசி நகரைநோக்கி விரைந்தார்கள். கால பைரவரை வணங்கினார்கள்.  

""சுவாமி! உலக நன்மைக்காக இந்த சிவலிங்கத்தை எடுத் துக் கொண்டு தென்னாடுபோக அனுமனுக்கு அனுமதி தரவேண்டும். ஸ்ரீஇராமபிரான் 
இந்தலிங்கத்துக்குப் பூஜை செய்வதற்காக சேதுவில் காத்திருக்கிறார். 
எனவேஅனுமனை அனுமதிக்க வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார்கள்.
தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி னார் பைரவர். மனசாந்தி
அடைந்தார். சிவலிங்கத் தைக் கொண்டு போக அனுமதித்தார்.
அனுமனுக்குச் சரியான லிங்கத்தை அடையாளம் காட்டியது கருடனும்
பல்லியும். அனுமனுக்குத் துணைபுரிந்த கருடன் இனிமேல் காசி நகர
எல்லைக்குள் பறக்கக்கூடாது என்றும்; காசியில் பல்லிகள் இருந்தாலும்
அவை ஒலிக்கக்கூடாது என்றும் கட்டளையிட்டார் பைரவர்.
பைரவரின் கட்டளைப்படிதான் காசியில் இன்றும் கருடன் பறப்பதில்லை;
 பல்லி ஒலிப்பதில்லை என்கிறார்கள்.
இடுகையிட்டது Eswari நேரம் 5:47 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

கலசம் வைத்து பூஜிப்பது ஏன்?

கலசம் வைத்து பூஜிப்பது ஏன்? 





மண் அல்லது செம்பு, பித்தளை, தாமிரம் போன்ற உலோகங்களால் செய்யப்பட்ட நீர் நிறைந்த ஒரு பாத்திரம் - செம்பு - சிறுபானைதான் கலசம் எனப்படுகிறது. இந்தக் கலசத்தில் மாவிலைகள் செருகப்பட்டு, அவற்றின் நடுவில் ஒரு தேங்காய் வைக்கப்படும். வெண்மை அல்லது சிவப்பு நிறமுள்ள நூல்கள் பானையின் கழுத்திலிருந்து முழுமையாக டயமண்ட் வடிவத்தை உரு வாக்கும் வகையில் நுணுக்கமாகக் கட்டப்படுகிறது. பானையின் மேல் அழகானவடிவங்கள் வரையப்படுவதும் உண்டு. இந்தப் பானை கலசம் என்றழைக்கப்படுகிறது. இது நீரினாலோ அல்லது அரிசியினாலோ நிரப்பப்படும். இது பூர்ண கும்பம் என்றழைக்கப்படுகிறது. 

இது போன்றே ஜடப்பொருளான நமது உடல் தெய்வீகமான சக்தியால் உயிர்பெறும் பொழுது அற்புதமான, போற்றத்தக்க செயல்களை செய்யக்கூடியதாக மாறுகிறது. மரபுப்படி நடத்தப் பெறும் கிருகப் பிரவேசம், திருமணம், தினசரி பூஜைகள் போன்ற சமயங்களில் இத்தகைய கலசம் வைக்கப்படுகிறது. மேலும், விழா நடத்தப்படும் இடத்தின் நுழைவாயிலில், வருவோரை வரவேற்கும் வகையில் இக்கலசத்தை வைக்கிறார்கள். பெரியோர்களையும் முக்கியப் பிரமுகர்களையும் பூரண கும்பம் கொடுத்து வரவேற்பது மரபு.

பூஜிப்பது ஏன்? 

உலகைப் படைக்கும் முன் பகவான் விஷ்ணு, பாற்கடலில் பாம்பணையின் மேல் சாய்ந்தவாறு அமர்ந்திருந்தார். அவருடைய நாபிக் கமலத்திலிருந்து ஒரு தாமரை வெளிப்பட்டது. அந்த மலரிலிருந்து படைப்புக் கடவுளான பிரம்மா தோன்றினார். பிரம்மாவே உலகத்தை சிருஷ்டித்தார். கலசத்தில் உள்ள நீரானது, எந்த நீரிலிருந்து படைப்பில் உள்ள அனைத்தும் தோன்றியதோ, அந்த நீரைக் குறிக்கிறது. அந்தப் புனித நீர்தான் அனைத்திற்கும் உயிர் அளிக்கும் சக்தி படைத்தது. இந்த நீர் எண்ணிலடங்கா உருவங்களையும் வடிவங்களையும் உயிர்த் துடிப்பும் உணர்வும் உள்ள பொருள்கள் மற்றும் ஜடப் பொருள்கள் ஆகிய அனைத்தையும் படைக்கும் சக்தியைத் தன்னுள் அடக்கியுள்ளது. 

மேலும், உலகில் உள்ள மங்களகரமான அனைத்தையும் படைக்கும் சக்தியையும் பெற்றது, இது. கலசத்தில் உள்ள இலைகளும் தேங்காயும் சிருஷ்டியைக் குறிக்கின்றன. கலசத்தைச் சுற்றியுள்ள நூல் படைப்பில் உள்ள அனைத்தையும் ஒன்றாகப் பிணைக்கும் அன்பைக் குறிக்கிறது. ஆகவேதான் கலசம் புனிதமாகக் கருதப்பட்டு பூஜிக்கப்படுகிறது. புனிதமான நதிகளின் நீர், அனைத்து வேதங்களின் சாரம் மற்றும் அனைத்து தேவதைகளின் ஆசி ஆகியவை கலசத்தில் உள்ள நீரில் வந்து சேரவேண்டுமென்று பிரார்த்திக்கப்படுகிறது. பின்னர், கலச நீர் அபிஷேகத்திற்கும் மற்ற சடங்குகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

ஆலய கும்பாபிஷேகத்தில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கலசத்தில் உள்ள புனித நீர் ஆலய கோபுரக் கலசங்களின் மேல் ஊற்றப்படுகிறது. அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, அமுத கலசத்தை ஏந்தியவாறு இறைவன் தோன்றினார். இவ்வமுதம் அனைவருக்கும் இறவாவரத்தை அருளியது. எனவே, கலசமும் இறவாத் தன்மையைக் குறிக்கிறது. ஞானியர் என்போர் நிறை மனிதர்கள். இதற்குக் காரணம் அவர்கள் தங்களுடைய உண்மை சொரூபம், பூர்ணமான - எங்கும் நிறைந்த - பேருண்மையேயன்றி வேறில்லை என்பதை நன்கு உணர்ந்தவர்கள். 

அவர்கள் என்றும் குறைவற்ற மகிழ்ச்சியும் அன்பும் நிறைந்து விளங்குகின்றனர். உலகில் உள்ள மங்களகரமான அனைத்தையும் குறிப்பவர்களாக அவர்கள் விளங்குகின்றனர். அந்த நிறை மனிதர்களின் பெருமையைப் போற்றும் வகையில் பூர்ணகும்பத்துடன் அவர்கள் வரவேற்கப்பட்டனர். இது அவர்களிடத்து நமக்கு உள்ள பக்தி நிறைந்த மரியாதையை நாம் முழுமனதுடன் வெளிப்படுத்துவதன் அடையாளமாகும்.
இடுகையிட்டது Eswari நேரம் 5:22 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

சனி, 2 ஜூன், 2018

குடும்பத்தில் நிம்மதி தரும் குபேர விளக்கு ஏற்றும் முறை

குடும்பத்தில் நிம்மதி தரும் குபேர விளக்கு ஏற்றும் முறைRelated image

குபேரனின் அருள் கிடைக்க குபேர தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.குபேரன் செல்வத்தின் அதிபதி. வற்றாத செல்வத்தை நமக்கு கொடுக்கக்கூடியவர்.யாருக்கெல்லாம் பணம் என்றும் தன்னுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதோ அவர்கள் குபேர பூஜை செய்வது நல்லது.அதுமட்டுமல்லாமல் குபேர தீபம் ஏற்றி வழிபடவேண்டும்.குபேர தீபம் ஏற்ற சரியான நேரம் குபேரருக்குஉகந்த நேரமான வியாழக்கிழமை சாயந்திரம் 5மணி முதல் 8மணி ஆகும்.இந்த நேரத்தில் நம் வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்து,பச்சரிசி மாவினால்  கோலம் போட்டு அதற்கு செம்மண் பட்டை இட்டு அழகுபடுத்த வேண்டும்.

நிலைப்படிக்கு மஞ்சள் தெளித்து சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும்.புள்ளிகள் இல்லாத எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி ,ஒரு பகுதியில் மஞ்சளும் மற்றொரு பகுதியில் குங்குமமும்  தடவ வேண்டும்.நிலைப்படிக்கு ஒரு பக்கத்தில் மஞ்சள் தடவிய  எலுமிச்சை பழத்தையும் ,மறு பக்கத்தில் குங்குமம் தடவிய  எலுமிச்சை பழத்தையும் இருபுறமும் வைக்கவும்.நிலைப்படிக்கு இருபுறமும் பூ வைக்க வேண்டும். தினமும் எலுமிச்சை பழத்தை  மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.காய்ந்த பழத்தை கால்மிதி படாத இடமாக பார்த்து போட வேண்டும்.


வீட்டுவாசலில் நின்றபடி நமது இடதுபுறம் குபேர விளக்கை ஒரு மரப்பலகை அல்லது தட்டில் வைத்து கிழக்கு பார்த்து தீபம் எரியும்படி வைக்க வேண்டும்.முதலில் விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஊற்றி இரு திரிகளை  ஒரு திரியாக்கி ஏற்ற வேண்டும்.இவ்வாறு ஏற்றுவதால் நமக்கு குபேரனின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

 பழைய திரியோ அல்லது முதல் நாள் ஏற்றி மிஞ்சிய எண்ணெயையோ பயன் படுத்தக்கூடாது. அதே போல எலுமிச்சை பழத்தையும் தினமும் புதியதாக வைக்க வேண்டியது அவசியம்.

இதை மாதவிடாய் சமயத்தில் மட்டும் செய்ய வேண்டாம்.
மற்ற தினங்களில் தொடர்ந்து செய்யவும்.
இப்படி செய்வதன் மூலம் குடும்பத்தில் உள்ள சங்கடங்கள் துண்பங்கள் கடன் பிரச்சனைகள் அனைத்தம் பனி போல் கரையும்.
விளக்கு காற்றில் அலைந்தால் சற்று வாசலின் உள்புறம் வைக்கலாம். தவறில்லை.
குறிப்பு: இதை வீட்டில் திருமணம் ஆகாத பெண்கள் கூட செய்யலாம்.

குபேரன் நமக்கு தங்குதடையில்லா செல்வத்தை அள்ளிக்கொடுப்பார்.இந்த குபேர தீபத்தை வார வாரம் வியாழக்கிழமைகளில் செய்து வர எல்லா வளங்களும் நமக்கு கிடைக்கும்.நீங்களே மாற்றத்தை காண முடியும்.


இடுகையிட்டது Eswari நேரம் 12:59 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

aarthi cafe

BakthiTamil

BakthiTamil
Click to Launch Bakthi Tamil

Bakthitamil.com

Bakthitamil.com

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

வலைப்பதிவு காப்பகம்

  • ▼  2022 (4)
    • ▼  ஜூலை (2)
      • தோஷங்கல் நீங்க
      • பானகம் செய்யும்  முறை 
    • ►  மார்ச் (2)
  • ►  2021 (5)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  மே (4)
  • ►  2020 (12)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (1)
    • ►  ஜூலை (3)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (3)
  • ►  2019 (24)
    • ►  டிசம்பர் (1)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஜூலை (2)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (3)
    • ►  மார்ச் (3)
    • ►  பிப்ரவரி (3)
    • ►  ஜனவரி (6)
  • ►  2018 (354)
    • ►  டிசம்பர் (4)
    • ►  நவம்பர் (8)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (9)
    • ►  ஆகஸ்ட் (17)
    • ►  ஜூலை (21)
    • ►  ஜூன் (37)
    • ►  மே (90)
    • ►  ஏப்ரல் (52)
    • ►  மார்ச் (54)
    • ►  பிப்ரவரி (34)
    • ►  ஜனவரி (22)
  • ►  2017 (204)
    • ►  டிசம்பர் (7)
    • ►  நவம்பர் (25)
    • ►  அக்டோபர் (30)
    • ►  செப்டம்பர் (4)
    • ►  ஆகஸ்ட் (16)
    • ►  ஜூலை (21)
    • ►  ஜூன் (13)
    • ►  மே (3)
    • ►  ஏப்ரல் (14)
    • ►  மார்ச் (38)
    • ►  பிப்ரவரி (21)
    • ►  ஜனவரி (12)
  • ►  2016 (138)
    • ►  டிசம்பர் (13)
    • ►  நவம்பர் (9)
    • ►  அக்டோபர் (19)
    • ►  செப்டம்பர் (19)
    • ►  ஆகஸ்ட் (9)
    • ►  ஜூலை (19)
    • ►  ஜூன் (12)
    • ►  மே (14)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (9)
    • ►  பிப்ரவரி (4)
    • ►  ஜனவரி (3)
  • ►  2015 (63)
    • ►  டிசம்பர் (2)
    • ►  நவம்பர் (7)
    • ►  அக்டோபர் (7)
    • ►  செப்டம்பர் (10)
    • ►  ஆகஸ்ட் (13)
    • ►  ஜூலை (24)

என்னைப் பற்றி

Eswari
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.