திங்கள், 20 பிப்ரவரி, 2017

ராமபிரானுக்கு அவரது குரு வசிஷ்டர் சொன்ன அறிவுரை

ராமபிரானுக்கு அவரது குரு வசிஷ்டர் சொன்ன அறிவுரை




ஆன்மீக நண்பர்களுக்கு என் இனிய நமஸ்காரங்கள்.மேலும் மேலும் புதிய ஆன்மீக தகவல்களை சொல்லுவதில் நான் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்.
எனக்கு தெரிந்த,அறிந்த ஆன்மீக  விஷயங்களை உங்களுடன் சொல்லுவதற்கு ஒரு வாய்ப்பை கொடுத்த என் அன்னை ஆதிபராசக்திக்கு என் நன்றி.

நன்றி என்று ஒரு சொல்லால் கூற முடியாது.ஏன் என்றால் 'அவளின்றி ஓர் அணுவும் அசையாது'.நான் வாழும் இந்த வாழ்க்கை கூட அவளால் கிடைத்ததே.

இந்த அறிவுரை நமக்கும் உதவும் .


தங்கள் கடமையைச் சரிவரச் செய்யாதவர்கள்உதாசீனப்படுத்தியவர்கள் நரகத்தில் வீழ்வார்கள்சிலர் மரம்செடிகொடியாவும்சிலர் மிருகமாகவும் பிறப்பார்கள்.மனிதன் வாழும் காலத்தில் தனது செயல்பாடுகளால் தான் உயர்வோ தாழ்வோ அடைவான்அதுபோலஅவனது வினைகளின் அடிப்படையிலேயே சொர்க்கத்துக்கேநரகத்துக்கோ செல்ல முடியும்.வெற்றிதோல்வி பற்றி கவலைப்படாமல் இன்ப துன்பங்களைச் சமமாக நினைத்து கடமையைச் செய்பவன்எப்பொழுதும்இன்பமாயிருப்பான்.எப்படி நல்ல இசையால் மான்பாம்பு ஆகியவையெல்லாம் மயங்குகிறதோஅதுபோல பணிவாகவும்இனிமையாகவும் பேசுபவன் எல்லோராலும் போற்றப்படுவான்.பிறரை மதிக்கும் தன்மைநேர்மைஅறிவு போன்ற நற்குணங்கள் வேலைக்காரர்களின் சேவையைப் போல மறுபிறவியிலும் தொடரும்கிடைத்ததைக் கொண்டு திருப்தியடைந்து உலக வாழ்வு என்ற மாயப்பற்றில் இருந்து விடுபடு.உலகில் பிறந்தால் பிரச்னைகள் ஏற்படத்தான் செய்யும்அவற்றைக் கண்டு பதட்டப்படாதேசங்கடப்படாதேநிறைந்த கடலைப் போல இருஉனக்கு கிடைத்துள்ள பதவிபணத்தால் பெருமையோஅகம்பாவமோ கொள்ளாதே.பொறுமையாகஅமைதியாகநடுநிலையாக, @நர்மையாக இருநவரத்தினம் போல் ஜொலிப்பாய்."நான் மட்டுமே துன்பப்படுகிறேன்தனிமையில் இருப்பது போல உணர்கிறேன்என்று உனக்கு மட்டும் ஒரு தனித்துவத்தை வழங்கிக் கொள்ளாதேஉலகில் எல்லாருமே இதே நிலையில் இருக்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்.எப்படி மழைக்காலத்தில் கருத்த மேகங்களைக் கண்டவுடன் அன்னப்பறவைகள்கொக்குகள் வெளிப்படுகின்றனவோஅதுபோல் முற்பிறவியில் செய்த நற்செயல்களின் பலன்மறுபிறவியிலும் தானாகத் தொடரும்.சொந்த முயற்சியால் நாம் அடைந்த பொருள்சொர்க்கத்தில் இருந்து நம் கையில் விழுந்த பழத்துக்கு சமமானது.பல பெரியநல்லவல்லமையுள்ள மனிதர்கள்அவர்கள் மறைந்த பிறகும் நம் மனதில் நினைவுகளாக வாழ்கிறார்கள்அவர்களில் நீயும் ஒருவராகும் நிலையில் இருந்து கொள்இருந்தாலும்மறைந்தாலும் உன் பெயர் நிலைத்திருக்க வேண்டும்.பிறப்பும் இறப்பும் அழுகையுடன் ஆரம்பித்து அழுகையுடன் முடிகிறதுஇதற்கு இடைப்பட்ட காலத்தில் நடப்பதெல்லாம் கனவு போல மறைந்து விடுகிறதுஇதுதான் வாழ்க்கை என்பதைப் புரிந்து கொள்.கடந்த காலத்தைப் பற்றி சிந்திக்காதேவருங்காலம் பற்றி திட்டமிட்டும் பயனில்லைநிகழ்காலத்தில் நல்லதைச் செய்வாழ்ந்து காட்டுஅதுவே நிஜம்.வாழ்க்கையில் நடப்பவற்றைக் கண்டு பயப்படுபவனுக்கு நிம்மதியே இருக்காதுஇவர்கள் படும் துன்பங்களில் இருந்து மீள விதியோபணமோஉறவினர்களோ உதவியும் செய்வதில்லைஉன் சுயமுயற்சியால் மட்டுமே கஷ்டத்தில் இருந்து விடுபட முடியும்.





ஞாயிறு, 19 பிப்ரவரி, 2017

அகத்தியர் அருளிய "ஆதித்ய ஹ்ருதயம்' தமிழில்!

அகத்தியர் அருளிய "ஆதித்ய ஹ்ருதயம்' தமிழில்!



தினமும் சூரியோதய வேளையில் அகத்தியர் அருளிய "ஆதித்ய ஹ்ருதயம்' சொல்வது மிகுந்த நன்மை தரும்.

* அதிதியின் புத்திரனே! நீயே இந்த உலகத்தை படைத்திருக்கிறாய். உலக ஜீவன்கள் தங்கள் செயல்களை செய்யும்படியான பலத்தை கொடுக்கிறாய். எவ்வித எதிர்பார்ப்புமின்றி உலகிற்கு ஒளி கொடுப்பதற்காக ஆகாயத்தில் சஞ்சரிக்கிறாய். ஒளிமிக்க கதிர்களை கொண்டிருக்கிறாய்.


* தங்க நிறமானவனே! நீ அபரிமிதமான பலன்களை கொடுக்கிறாய். சுவர்ணமயமான இந்த பிரபஞ்சத்திற்கு நீயே அதிபதி. நீயே பகலைப் படைக்கிறாய்.


* கருத்த குதிரைகளால் இழுக்கப்படுபவனே! ஆயிரம் கதிர்களைக் கொண்டவனே!"சப்த' என்ற பெயரை உடைய குதிரை பூட்டிய தேரை உடையவனே! விசேஷ பிரகாசம் உள்ளவனே! இருட்டை நாசம் செய்கிறவனே! உன்னிடமிருந்தே சகல சுகமும் எங்களுக்கு கிடைக்கிறது. இவ்வுலகத்தில் உள்ள அனைத்து பொருட்களையும் நீயே அழிக்கிறாய்.


* சூரியனே! ஆகாயத்திற்கு நீயே நாதன். ராகு என்னும் இருளைப் பிளந்து கொண்டு வெளியில் வரும்படியான சக்தியைக் கொண்டிருக்கிறாய். ரிக், யஜூர், சாமம் என்ற வேதங்களின் முடிவைக் கண்டவனாய் இருக்கிறாய்.


* கண்கண்ட தெய்வமே! உன்னிடத்திலிருந்தே மழை உண்டாகிறது. நீ கடலரசனின் நண்பன். தட்சிணாயண காலத்தில் விந்தியபர்வதம் என்ற மலையின் வழியாக செல்கிறாய். ஆகாயத்தில் தெப்பமாய் மிதக்கிறாய். உன்னிடமிருந்தே வெயில் பிறக்கிறது.


*வட்ட வடிவத்தை உடையவனே! விரோதிகளை நாசம் செய்கிறவனே! உதயமாகும் போது மஞ்சள் நிறம் கொண்டவனே! மதிய வேளையில் எல்லா வஸ்துகளையும் தகிக்கச் செய்கிறவனே! சாஸ்திரங்களை உபதேசிக்கிறவனே! உலகிற்கு வழிகாட்டுபவனே!


*மகத்தான ஒளியை உடையவனே! எல்லாப் பிராணிகளிடமும் அன்பு கொண்டவனே! அந்தப் பிராணிகளை அழிப்பவனே! நட்சத்திரங்களுக்கும் கிரகங்களுக்கும் அதிபதியே! பிரபஞ்சத்தை நிறைபெறச் செய்கிறவனே! எல்லா தேவதை களைக் காட்டிலும் அதிகமான சக்தியை உடையவனே! இந்திரன், வருணன், தாரா, பகன், பூஷா, அர்யமா. அர்சிஸ், விவஸ்வான், த்வஷ்டா, ஸவிதா, விஷ்ணு என்ற 12 மூர்த்திகளை உள்ளடக்கியவனே! உனக்கு நமஸ்காரம்.


* உருகியோடும் தங்க ஆறு போன்ற பிரகாசம் கொண்டவனே! அக்னியின் வடிவே! சகல உலகமும் தோன்றக் காரணமானவனே! அஞ்ஞானம் என்ற இருளை போக்குபவனே! கருணாமூர்த்தியே! உலகிலுள்ள சகல ஜீவன்களின் புண்ணிய பாவங்களுக்கும் சாட்சியாய் இருப்பவனே! உனக்கு நமஸ்காரம்.


* உலகம் அழியும் காலத்தில் இந்த ஜகத்தை நீயே அழிக்கிறாய். மீண்டும் நீயே அதை சிருஷ்டிக்கிறாய். ஜலத்தை வற்றச் செய்கிறாய். உலகையே எரிக்கிறாய். மழை பெய்யச் செய்கிறாய். எல்லா உயிர்களும் அழித்து அடங்கியிருக்கும் போது நீ மட்டும் விழித்துக் கொண்டிருக்கிறாய்.

சர்வாத்மாவே! சர்வேஸ்வரனே! வேதங்களால் கூட உன்னை அறியமுடியாது. ஆதித்யனே! வேத விற்பன்னர்கள் செய்யும் யாகமாகவும், அதன் பலனாகவும் இருப்பவனே! உனக்கு நமஸ்காரம்.


இந்த எளிய ஸ்லோகத்தை படித்து பயன் பெறுவோமாக! 

வியாழன், 16 பிப்ரவரி, 2017

அன்னதான மகிமையை விளக்கும் கதை





★கர்ணன் வாழ்ந்த காலத்தில் தன்னுயிர் காக்கும் கவச குண்டலங்கள் உட்பட - தான் செய்த புண்ணியங்கள் அனைத்தையும் தானம் கொடுத்தவன். தானத்திற்கே பெயர் பெற்றவன். தானம் என்றால் என்ன? என்பதை உலகிற்குக் காட்டியவன். அவன் இறந்ததும் கண்ணனால் சொர்க்கத்திற்கு  அனுப்பப்பட்டவன்.

★அங்கு சென்று சகல வசதிகளுடன் இருந்தும் அவனுக்கு ஏனோ பசி அடங்கவில்லை. எப்பொழுதும் வயிற்றுப்பசி இருந்து கொண்டே இருந்தது. அவனும் சாப்பிட்டுச் சாப்பிட்டு அலுத்துப் போனான். பிறகு சொர்க்கத்தின்  தலைவனிடம் சென்று கேட்டான். நான் எவ்வளவு தான தருமங்கள் செய்திருக்கிறேன் - எனக்கு ஏன் இக்கொடிய தண்டனை? - எனக்கு ஏன் இப்படிப் பசிக்கிறது எனக் கேட்டான்.

★தலைவனோ - கர்ணா! நீ பூவுலகில் வாழ்ந்த காலத்தில் பொன்னும் பொருளும் மணியும் ஏன் உன்னுயிரும் தானமாகக் கொடுத்து பெரும் புகழ் பெற்றவன். ஆனால் சிந்தித்துச் சொல் - எப்போதாவது யாருக்கேனும்  அன்ன தானம் செய்திருக்கிறாயா? - எனக் கேட்டான்.

★கர்ணனுக்கு அன்ன தானம்  செய்ததாக நினைவு இல்லை. அன்ன தானம் செய்யாததால் தான் இப்பொழுது உன் வயிற்றுப்பசி அடங்கவில்லை எனவும் கூறக் கேட்டான். அப்படியானால் இதற்கு என்ன தான் வழி? எனக் கேட்ட போது - தலைவன் கூறினான் - உனது வலது கை ஆள் காட்டி விரலை வாயில் வைத்துக் கொள் - பசி அடங்கி விடும் என்றான்.

★கர்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை. விரலைச் சப்பினால் பசி அடங்குமா? - என்ன இது என ஐயப்பாடு இருந்தாலும் - வேறு வழி இல்லை என வலது கை ஆள் காட்டி விரலை வாயில் வைத்து சப்ப - பசி உடனே அடங்கிற்று.

★ஒன்றும் புரியாத கர்ணன் - இது எப்படி மாய மந்திரம் எனக் கேட்க - தலைவன் கூறினான் - அன்பின் கர்ணா - நீ பூவுலகில் வாழும் போது உன்னிடம் ஒரு வறியவன் பசியுடன் வந்து எங்கு அன்னதானச் சத்திரம் இருக்கிறதென்று கேட்க - நீயும் உனது வலது கை ஆள்காட்டி விரலால் இதோ! இப்பக்கம் செல்க என வழி காட்டினாய். அந்த புண்ணியச் செயல் - நற்செயல் உனக்கு இப்பொழுது உதவுகிறது எனக் கூற -கர்ணனும் அன்ன தான மகிமையை உணர்ந்தான்.

தோழிகளே!  நாமும் பிறந்த நாள்  திருமண நாள்  என்று கொண்டாடும் போதெல்லாம் முதியோர் இல்லங்களில் வாழ்பவர்கள், அனாதை இல்லங்களில் வாழ்பவர்கள் வறியோர் இவர்களுக்கெல்லாம் அன்ன தானம் செய்தால் அவர்கள் பெறும் மகிழ்ச்சியானது நமக்கும் மகிழ்ச்சியினையும் புண்ணியத்தைனையும் தரும் .

கோயில்களில் ஒரு வருடம் தொடர்ந்து செய்யப்படும் அன்னதானத்தால்
என்ன புண்ணியம் கிடைக்குமோ, அதை விட அதிகமான புண்ணியம் காசியில்
ஒரே ஒரு நாள் ஏழை ஒருவனுக்கு அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்.


காசியில் ஒரு ஆண்டு முழுக்க செய்யப்படும் அன்னதானம் தரும் புண்ணியத்தை
விட அதிக புண்ணியம் திரு அண்ணாமலையில் ஒரே ஒரு சாதாரண நாளில் அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்.

திருஅண்ணாமலையில் துவாதசி திதியன்று ஏழை ஒருவருக்கு செய்யப்படும் 
அன்னதானமானது, அன்னதானம் செய்தவரின் வாழ்நாள் முழுக்க அன்னதானம் 
செய்த பலனைத் தரும் என்பது அண்ணாமலையாரின் வாக்கு.ஆதாரம்: 
அருணாச்சல புராணம்.


★வாருங்கள்! நாமும் அன்னதானம் செய்து புண்ணியத்தை அடைவோம் .




செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

விரதம் என்ற பெயரில் பட்டினியை விட்டுவிடு---பாபா

விரதம் என்ற பெயரில் பட்டினியை விட்டுவிடு 


வைதீகம், பட்டினி(விரதம்)  இவற்றுக்கு பாபா முக்கியத்துவம் கொடுத்ததில்லை. அவர் விரும்புவது எல்லாம் தன் பக்தனிடம் உளப்பூர்வமான நம்பிக்கையை மட்டுமே.

பாபாவுக்கு பிடித்த ஒரு சிறுவன் ஒருவன் இருந்தான். அவனது முதல் ஆண்டு பிறந்தநாள் விழா மாதவராவ் தேஷ்பாண்டே வீட்டில் சிறப்பாக நடந்தது. இந்த விழாவுக்கு பாலா சாகேப் பாடே என்ற பாபா பக்தரும் அழைக்கப்பட்டிருந்தார். அவர் வர இயலாமையைத் தெரிவித்துவிட்டு, பாபாவை பார்க்கச் சென்றிருந்தார்.
"பிறந்தநாள் விழா விருந்தில் சாப்பிட்டாயா? என்று கேட்டார் பாபா." இன்று வியாழக் கிழமை ஆதலால் நான் சாப்பிடவில்லை! என்றார் பாலா சாகேப்.
"இருந்தால் என்ன?" என்றார் பாபா. "குருவுக்கு உகந்த நாட்களில் நான் வெளியே சாப்பிடுவதில்லை. அது என் வழக்கம்!" என்றார் பாலா சாகேப்.
"யாரை திருப்திப்படுத்த இந்த விதி?" என்று பாபா கேட்ட போது, "தங்களைத் திருப்திப்படுத்தவே !" என்றார் பாலா சாகேப்.
"அப்படியானால் நான் சொல்கிறேன், மாதவராவ் அளிக்கும் விருந்தில் சாப்பிடு!" எனக் கூறி திருப்பி அனுப்பினார். பாலா சாகேப் விருந்துக்கு வந்து சாப்பிட்டார். 
நான் உன்னோடு தானே இருக்கிறேன். நடப்பவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன். விரதம் என்ற பெயரில் பட்டினியை விட்டுவிடு.

பாபாவின்  மிக நெருங்கிய பக்தர்களில் ஒருவரான தத்யா என்பவர், மிகவும் வைதீகமானவர். முறையாகத் தவறாமல் ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பவர். ஆனால், பாபாவிடம் வந்த பிறகு, பாபா, விரத நாட்களில் தின்பதற்கு எதையாவது தந்து கொண்டேயிருந்ததால், அவர் பட்டினி இருப்பதை நிறுத்த வேண்டியதாயிற்று. மனுதர்ம சாஸ்திரம் போன்ற சட்ட நூல்கள் கூட, சாஸ்த்திரங்களுக்கும் பரிபூரணமடைந்த ஞானி ஒருவரின் சொற்களுக்கும் முரணிருக்குமாகில், ஞானியின் சொற்களே ஏற்கப்பட வேண்டுமென்றுதான் கூறுகின்றன.

பொதுவாக சாய்பக்தர்கள் தங்கள் விருப்பம் நிறைவேற 9 வியாழக்கிழமைகளில் விரதம் இருந்து அவரை பூஜித்து வழிபடுவார்கள். இந்த விரதத்தை ஏதாவது ஒரு வியாழக்கிழமை தான் தொடங்குவார்கள். 
எனவே உங்களது மேலான லட்சியம் நிறைவேற இன்று நீங்கள் 9 வார சாய்பாபா விரதத்தைத் தொடங்கலாம். இது நல்ல வாய்ப்பு. அதிர்ஷ்டமான வாய்ப்பு. சாய்பாபா ஒரு போதும் பட்டினியாக இருந்ததில்லை. மற்றவர்களையும் பட்டினியாக இருக்க விட்டது இல்லை. எனவே பட்டினி கிடந்து 9 வியாழக்கிழமை விரதம் இருக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். 
அதற்கு மாறாக 9 வியாழக்கிழமைகளிலும் சாய்பாபா கதை படித்தும், அற்புதங்களை வாசித்தும் விரதம் இருக்கலாம். "சாயி சாயி" என்று அவரது நாமத்தை தொடர்ந்து உச்சரிக்கலாம். அது ஆறு கடலுடன் இரண்டற கலந்து விடுவது போல உங்களை சாய்பாபாவுடன் இரண்டற கலந்து விடசெய்யும். ஜெய் சாய்ராம்.

உன் சந்ததியை வளமாகவும் வைப்பேன்
நானே கர்த்தா (காரணமாவேன்) என்ற எண்ணத்தை ஒதுக்கிவிட்டு, அதற்கு சாயி தான் கர்த்தா என்பதை புரிந்துகொண்டு என்னிடம் அனைத்தையும் ஒப்படைத்தால் நான் பார்த்துக் கொள்வேன். 
இப்படியெல்லாம் செய்து, உன்னை முற்றிலுமாக என்னிடம் ஒப்படைத்து சரணாகதி செய்யும்போது, நான் நிரந்தரமாக உன்னிடம் தங்கி, உன் பிள்ளைகளை வளர்த்து, உன் பிரச்னைகளைப் போக்கி, உன் மனக் கவலையை தீர்த்து உனக்குள்ள அனைத்தையும் மாற்றி உன்னை இந்த உலகத்தில் நிம்மதியாகவும், உன் சந்ததியை வளமாகவும் வைப்பேன். 
-ஸ்ரீ சாயியின் குரல்-




திங்கள், 13 பிப்ரவரி, 2017

எளிய முறையில் தினசரி பூஜை செய்வது எப்படி?

எளிய  முறையில்  தினசரி பூஜை  செய்வது எப்படி?

தினசரி பூஜை செய்ய வேண்டும் எனப் பலருக்கு  ஆசையிருக்கும். ஆனால் நேரமின்மை காரணமாக பூஜைகள் செய்ய முடிவதில்லை. மிக குறுகிய நேரத்தில் கீழ்க்கண்ட முறையில் சிறப்பாக பூஜை  செய்ய முடியும்.

1. அபிஷேகம்.  2. மந்திர புஸ்பம்.   3. தூபம்.      4. தீபம்.
5. நைவேத்தியம்.   6. ஆராதனை

1. அபிஷேகம்.

இரண்டொரு துளி தண்ணீரினை ( பச்சை கற்பூரம், கிராம்பு பொடி கலந்த தூய பன்னீர் சிறப்பானது. ) நாம் பூசை செய்யப் போகும் தெய்வத்தின் உருவச் சிலையின் பாதத்தில் அல்லது அந்த தெய்வத்தின் படத்தில் அதன் பாதத்தில் சேர்ப்பிக்க வேண்டும். உருசச் சிலை,  படம் இல்லாதவரகள் மானசீகமாக தெய்வத்தின் பெயரைக் கூறி நீரினை தூய பாத்திரத்தில் சேர்க்கலாம்.

2. மந்திர புஸ்பம்.

அந்தந்த தெய்வத்திற்கு உகந்த பூவினை அல்லது பூக்களைக் கொண்டு அந்த தெய்வத்தின் பதினாறு திருநாமங்களை (குறைந்த பட்சம்) சொல்லி ஒரு நாமத்திற்கு குறைந்தது ஒரு பூவாக உருவச் சிலையின் பாதத்தில் அல்லது அந்த தெய்வத்தின் படத்தில் அதன் பாதத்தில் சேர்ப்பிக்க வேண்டும். உருவச் சிலை,  படம் இல்லாதவர்கள் மானசீகமாக தெய்வத்தின் பெயரைக் கூறி தூய பாத்திரத்தில் சேர்க்கலாம். பதினாறு பெயர் தெரியாதவர்கள் தாங்கள் எந்த பெயரை சொல்லி தெய்வத்தை வணங்குகிறார்களோ அதே பெயரை மீண்டும் மீண்டும் 16 தடவை கூறி பூ சேர்க்கலாம். முடிந்தவர்கள் 108 தடவை பூ சமர்பிக்கவும். இறுதியில் தங்களை வணங்கி பூ சேர்க்கிறேன் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று வேண்டிக் கொள்ள வேண்டும். 


பூ கிடைக்காதவர்கள் மந்திரம் மட்டும் சொல்லி வணங்கலாம். மந்திரம் என்றதும் ஏதோ மிகப் பெரிய விஷயமாக எண்ண வேண்டாம். ஓம் அதனைத் தொடர்ந்து தெய்வத்தின் பெயர் இறுதியில் போற்றி. இது எளிமையான மந்திரமாகும். உதாரணமாக வினாயகருக்கு என்றால்  ஓம் வினாயகப் பெருமானே போற்றி போதுமானது. முருகனுக்கு என்றால்  ஓம் முருகப் பெருமானே போற்றி ஆகும்.

3. தூபம்.

தூய சாம்பிராணி தூபம் கொண்டு மூன்று முறை வலம் சுழியாக தெய்வத்தின் பெயரைக் கூறியபடி தெய்வத்தை சுற்றி வாசனை தூபம் காட்டினேன் ஏற்றுக் கொள்ளுங்கள் என வேண்டிக் கொள்ளவேண்டும். தூய சாம்பிராணி கிடைக்காதவர்கள் நல்ல வாசனையுள்ள பத்தி காட்டலாம்.

4. தீபம்.

நெய் தீபம் கொண்டு மூன்று முறை வலம் சுழியாக தெய்வத்தின் பெயரைக் கூறியபடி தெய்வத்தை சுற்றி காட்டி தீபம் காட்டினேன் ஏற்றுக் கொள்ளுங்கள் என வேண்டிக் கொள்ளவேண்டும்.

5. நைவேத்தியம்

உலர்திராட்சை அல்லது டயமண்ட் கல்கண்டு வைத்து முதலில் நீரினால் 3 முறை சுற்றி அந்த நீரை வலது புறம் விட்டு விட்டு ஒரு இரண்டு பூக்களை எடுத்து நீரில் பூவினை நனைத்து நைவேத்தியத்தை 3 முறை சுற்றி தெய்வத்திற்கு ஊட்டி விடுவது போல் பாவனை செய்த படி நைவேத்தியத்தை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டிக் கொள்ள வேண்டும். பூ இல்லாதவர்கள் நீரினை கொண்டு செய்யலாம்.

6. ஆராதனை

ஆராதனை என்று சொல்லும் போது அது கற்பூர தீப ஆரத்தியையே குறிக்கிறது. கற்பூர தீபம் கொண்டு மூன்று முறை வலம் சுழியாக தெய்வத்தின் பெயரைக் கூறியபடி தெய்வத்தை சுற்றி காட்டி கற்பூர தீபம் காட்டினேன் ஏற்றுக் கொள்ளுங்கள் என வேண்டிக் கொள்ளவேண்டும். பின்னர் சிறிது பூவினை எடுத்து நீரில் நனைத்து கற்ரபூ  தீபத்தினை 3 முறை சுற்றி ஏதோ எனக்கு தெரிந்த முறையில் முடிந்த அளவில் பூஜை செய்தேன். எனது பூஜையில் இருக்கும் குற்றம் குறைகளை மன்னித்து எனது பூஜையை ஏற்றுக்  கொள்ளுங்கள் என மனதார வேண்டிக்கொண்டு பாதத்தில் சமர்பிக்க வேண்டும். ஓரிரு நிமிடங்கள் கண்ணை மூடி நாம் வணங்கிய தெயவத்தின் உருவத்தை மனக்கண்ணில் கொண்டு வந்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

கற்பூர தீப ஆராத்தியினை தொட்டுக் கும்பிட்டு கண்ணில் ஒற்றிக் கொள்ளவும்.

நம் வீட்டில் பூ,சூடம்  இல்லை .தீர்ந்து விட்டது என்றால் அதற்காக கவலைப்பட தேவையில்லை.நம்மிடம் எது இருக்கிறதோ அதைக் கொண்டு பூஜை செய்தாலே இறைவன் ஏற்றுக் கொள்வார்.ஒரு விளக்கை ஏற்றி ,பால்,பழம்,க ல்கண்டு ,பேரீச்சம் பழம்,உலர்ந்த திராட்சை இதில் ஏதேனும் ஒன்றை  நைவேத்தியமாக வைத்து தீபம் காட்டி, மணி அடித்து நம் இஷ்ட தெய்வத்தை வழிபடுங்கள்.உங்கள்  வாழ்வில் வளம் உண்டாகும்.

கடவுளுக்காக ஒரு நிமிடம் செலவழித்து வாழ்ந்தால் என்றென்றும் இன்பங்கள் அடையலாம்.உங்கள் அன்றாட பூஜையை வளரும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து,அவர்களை நல்ல வழியில் கூட்டி செல்லுங்கள்.


இந்த பதிவை பார்க்கும் அத்தனை நெஞ்சங்களுக்கும் நன்றிகள் பல.உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எண்ணி முடிக்கிறேன்.உங்கள் கருத்துக்களை தெரிவித்தால் அது எனக்கு மேலும் எழுத தூண்டுகோலாக அமையும்.

பண்டிகை காலத்தில் பூஜை செய்யும் முறை

பண்டிகை காலத்தில்  பூஜை செய்யும் முறை  


அதிக நேரம் ஒதுக்கக் கூடியவர்கள் அதாவது அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை ஒதுக்கக் கூடியவர்கள் கீற்கண்ட பூசை முறையை கடைப்பிடிக்கலாம். இந்த முறை பதினாறு உபசார படிகளை கொண்டது. அவையாவன  


1. ஆவாஹனம்.     2. ஆசனம்.          3. பாத்யம்.    4. அர்க்யம்.         5. ஆசமனீயம்.      6. ஸ்நானம்.  7. வஸ்த்ரம்.        8. உபவீதம்.         9. கந்தம்.          10. புஷ்ப அர்சனை;  .11. தூபம்.           12. தீபம்.13. நிவேதனம்.      14. தாம்பூலம்.      15. நீராஜனம்.16. பிரதக்‌ஷிண நமஸ்காரம்.



1. ஆவாஹனம்:

எந்த தெய்வத்திற்காக பூஜை  செய்கிறோமோ அந்த தெய்வத்தினை முதலில் தியானம் செய்ய வேண்டும். ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு தியான சுலோகம் உள்ளது. அந்த சுலோகத்தினை முதலில் மனப்பாடம் செய்து கொள்ள வேண்டும். அந்த சுலோகத்தினைச் சொல்லி அந்த தெய்வத்தை தியானிக்க வேண்டும். செய்யப்போகும் பூஜைக்கு வரும்படி அழைக்க வேண்டும். இதுவே ஆவாஹணம் ஆகும். மந்திர சுலோகம் தெரியாதவர்கள் தெய்வத்தின் பெயரைச் சொல்லி மனதார வேண்டி அழைக்க வேண்டும்.

2. ஆசனம்.

தியானித்து அழைத்து வந்த தெய்வத்திற்கு இருக்கை கொடுத்து அமர வைக்க வேண்டும். அந்த தெய்வத்திடம் அந்த தெய்வத்தின் உருவச் சிலையில் அல்லது அந்த தெய்வத்தின் படத்தில் வந்து அமரும்படி மனதார வேண்டி அமர்த்த வேண்டும்.

3. பாத்யம்.

தெய்வத்தின் பெயரை மூன்று முறை கூறி பாதங்களில் நீர் சமர்பித்தல்.

4. அர்க்யம்.



தெய்வத்தின் பெயரை மூன்று முறை கூறி கைகளில் நீர் சமர்பித்தல்.

5. ஆசமனீயம்.


தெய்வத்தின் பெயரை மூன்று முறை கூறி வாயிற்கு நேராக நீரை உட்கொள்ள செய்ய கொடுக்கும் பாவனையில் மூன்று முறை நீர் சமர்பித்தல்.

6. ஸ்நானம்.

குளித்தல் ஆகும். படங்களாயின் தெய்வத்தின் பெயரைச் சொல்லி படத்தின் முன்னால் தூய பாத்திரத்தில் நீரை சேர்க்க வேண்டும். சேர்க்கும் போது தூய நீரினால் தங்களை அபிஷேகம் செய்கிறேன்  என்று வேண்டிக் கொண்டு நீரைச் சேர்ப்பிக்க வேண்டும். உருவச் சிலையானால் நீரினால் அபிஷேகம் செய்வது சிறப்பாகும். முடியாவிட்டால் படத்திற்கு செய்வது போல தூய பாத்திரத்தில் நீரை சேர்க்கலாம். (இந்த இடத்தில் எண்ணை, திருமஞ்சன பொடி, மாப்பொடி. பால், தயிர், எலுமிச்சை சாறு, கனிவர்க்கங்கள், அவற்றின் சாறு, பஞ்சாமிர்தம், தேன், நெய் போன்ற அபிஷேகங்களும் செய்யலாம்.)

7.  வஸ்த்ரம்.

குளித்த பின் ஆடை அணிவித்தல் ஆகும். உருவச் சிலையானால் ஆடை அணிவிக்கலாம். படமானால் 2, 3 பூக்களை நீரில் நனைத்து ஆடை அணிவிக்கிறேன் என மனதார வேண்டிக் கொண்டு பாதங்களில் பூக்களை சமர்பிக்கலாம்.

8. உபவீதம்.

முப்புரி நூலை அணிவிக்க வேண்டும். உருவச் சிலையானால் முப்புரி நூல் அணிவிக்கலாம். படமானால் பருத்தி திரியில் மஞ்சள், குங்குமம் தடவி பாதங்களில் பூக்களை சமர்பிக்கலாம். அல்லது 2, 3 பூக்களை நீரில் நனைத்து முப்புரி நூல் அணிவிக்கிறேன் என மனதார வேண்டிக் கொண்டு பாதங்களில் பூக்களை சமர்பிக்கலாம். இதனுடன் ஆபரணங்கள் அணிவிப்பதும் உண்டு.

9. கந்தம்.

சந்தனப் பொட்டு வைத்தல்.

10. புஷ்ப அர்ச்சனை.

அந்தந்த தெய்வத்திற்கு உகந்த பூவினை அல்லது பூக்களைக் கொண்டு அந்த தெய்வத்தின் பதினாறு திருநாமங்களை (குறைந்த பட்சம்) சொல்லி ஒரு நாமத்திற்கு குறைந்தது ஒரு பூவாக உருவச் சிலையின் பாதத்தில் அல்லது அந்த தெய்வத்தின் படத்தில் அதன் பாதத்தில் சேர்ப்பிக்க வேண்டும். பதினாறு பெயர் தெரியாதவர்கள் தாங்கள் எந்த பெயரை சொல்லி தெய்வத்தை வணங்குகிறார்களோ அதே பெயரை மீண்டும் மீண்டும் 16 தடவை கூறி பூ சேர்க்கலாம். பூக்களினால் அர்சிப்பது சிறப்பான பலனைத் தருவதால் முடிந்தவர்கள் 108 திருநாமங்களினால் அர்சித்து பூ சமர்பிக்கவும். இறுதியில் தங்களை வணங்கி பூ சேர்க்கிறேன் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.

11. தூபம்.

தூய சாம்பிராணி தூபம் கொண்டு மூன்று முறை வலம் சுழியாக தெய்வத்தின் பெயரைக் கூறியபடி தெய்வத்தை சுற்றி வாசனை தூபம் காட்டினேன் ஏற்றுக் கொள்ளுங்கள் என வேண்டிக் கொள்ளவேண்டும். தூய சாம்பிராணி கிடைக்காதவர்கள் நல்ல வாசனையுள்ள பத்தி காட்டலாம்.

12. தீபம்.


நெய் தீபம் கொண்டு மூன்று முறை வலம் சுழியாக தெய்வத்தின் பெயரைக் கூறியபடி தெய்வத்தை சுற்றி காட்டி தீபம் காட்டினேன் ஏற்றுக் கொள்ளுங்கள் என வேண்டிக் கொள்ளவேண்டும்.


15. நைவேத்தியம்


உலர்திராட்சை அல்லது டயமண்ட் கல்கண்டு வைத்து முதலில் நீரினால் 3 முறை சுற்றி அந்த நீரை வலது புறம் விட்டு விட்டு ஒரு இரண்டு பூக்களை எடுத்து நீரில் பூவினை நனைத்து நைவேத்தியத்தை 3 முறை சுற்றி தெய்வத்திற்கு ஊட்டி விடுவது போல் பாவனை செய்த படி நைவேத்தியத்தை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டிக் கொள்ள வேண்டும். பூ இல்லாதவர்கள் நீரினை கொண்டு செய்யலாம். சர்க்கரைப் பொங்கல், சுண்டல், பாயாசம் போன்ற உண்ணும் பொருட்களே சிறப்பான நைவேத்தியமாக இருக்கும். குறிப்பாக பச்சரிசியினால் செய்யப்படும் இனிப்பு உணவே சிறப்பானதாக இருக்கும். இதனைத் தொடர்ந்து வாழைப்பழம் மற்றும் கனிவகைகளை நைவேத்தியமாக கொடுக்கலாம்.

14. தாம்பூலம்:


ஓரிரு பூக்களை எடுத்து நீரில் பூக்களை நனைத்து வெற்றிலை, பாக்கினை 3 முறை சுற்றி தெய்வத்திற்கு ஊட்டி விடுவது போல் பாவனை செய்த படி தாம்பூலத்தை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டிக் கொள்ள வேண்டும்.

15. நீராஜனம்.


நீராஜனம் என்று சொல்லும் போது அது கற்பூர தீப ஆரத்தியையே குறிக்கிறது. கற்பூர தீபம் கொண்டு மூன்று முறை வலம் சுழியாக தெய்வத்தின் பெயரைக் கூறியபடி தெய்வத்தை சுற்றி காட்டி கற்பூர தீபம் காட்டினேன் ஏற்றுக் கொள்ளுங்கள் என வேண்டிக் கொள்ளவேண்டும். பின்னர் சிறிது பூவினை எடுத்து நீரில் நனைத்து கற்புர தீபத்தினை 3 முறை சுற்றி ஏதோ எனக்கு தெரிந்த முறையில் முடிந்த அளவில் பூசைசெய்தேன். எனது பூஜையில் இருக்கும் குற்றம் குறைகளை மன்னித்து எனது பூசையை ஏற்றக் கொள்ளுங்கள் என மனதார வேண்டிக்கொண்டு பாதத்தில் சமர்பிக்க வேண்டும். ஓரிரு நிமிடங்கள் கண்ணை மூடி நாம் வணங்கிய தெயவத்தின் உருவத்தை மனக் கண்ணில் கொண்டு வந்து பூசையை நிறைவு செய்ய வேண்டும்.
கற்பூர தீப ஆராத்தியினை தொட்டுக் கும்பிட்டு கண்ணில் ஒற்றிக் கொள்ளவும்.

16. பிரதக்‌ஷிண நமஸ்காரம்:


பூசை அறை அமைப்பை பொருத்து தெய்வத்தை வலமாக சுற்றி வந்து கீழே விழுந்து வணங்க வேண்டும். சுற்றி வர வசதிஇல்லாதவர்கள் மட்டும் தெய்வத்தை வலம் வருவாக நினைத்து கொண்டு தன்னைத் தானே குறைந்தது 3 முறை சுற்றி பின் கீழே விழுந்து வணங்கலாம்.

நாமும் அந்தந்த தெய்வங்களுக்கு உரிய  விசேஷமான விழாக்காலங்களில் இந்த  பூஜை முறையை  கடைப்பிடித்து வாழ்வில் சகல நலன்களையும் பெறுவோமாக.


உங்கள் தோழி ஈஸ்வரி சரவணன் 


ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

செல்வத்திற்குரிய வீட்டு பூஜை குறிப்புகள்



செல்வத்திற்குரிய வீட்டு பூஜை குறிப்புகள் 


1. தினசரி காலையும், மாலையும் தூய மனதுடன் சில நிமிடங்களாவது கடவுள் பெயரை உச்சரித்தல் வேண்டும் .
2. தினசரி காலை எழுந்தவுடன் பார்க்க வேண்டியவை கோவில், கோபுரம், சிவலிங்கம், தெய்வப் படங்கள், நல்ல புஷ்பங்கள், மேகம் சூழ்ந்த மலைகள், தீபம், கண்ணாடி, சந்தனம், மிருதங்கம், கன்றுடன் பசு, உள்ளங்கை, மனைவி, குழந்தைகள்.
3. நம் வீட்டின் கிழக்குப் பக்கம் துளசிச் செடி, வேப்ப மரம் இருக்க வேண்டும். அதனால் எந்தவித நோயும் வராது. விஷ ஜந்துக்களும் நம்மை அண்டாது. தூய்மையான காற்றும் கிடைக்கும்

.
4. வீடுகளில் பூஜை அறை என்று தனியாக வைத்துக் கொண்டிருந்தால் அங்கு தேவை இல்லாத உடைந்த பொருட்களைச் சேர்த்து வைக்காதீர்கள். இது இறை சக்தியைக் குறைக்கும். அங்கு ஆன்மீக அதிர்வுகள் ஏற்படாது. மிகக் குறைந்த பூஜைக்கு பொருட்களை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள்.
5. சிவன், பார்வதி, விநாயகர், முருகர் உள்ள படம் ஒன்றை கிழக்குப் பார்த்து மாட்டி வைத்தால், அது வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகளை சிறிது சிறிதாக நீக்கும்.
6. செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களில் பூறை அறையை தண்ணீர் ஊற்றிக் கழுவ வேண்டும். மார்பிள், கிரானைட் தரைகளாக இருந்தால் ஈரத்துணியால் துடைக்க வேண்டும். அமாவாசை, பவுர்ணமி, வருடப்பிறப்பு போன்ற பண்டிகை நாட்களுக்கு முதல் நாளும் இவ்வாறு செய்ய வேண்டும்.

7. நமது வலது உள்ளங்கையில் மகாலட்சுமி இருப்பதால் காலை எழுந்தவுடன் வலது உள்ளங்கையை பார்க்க வேண்டும். இது துவாதசன தரிசனம் எனப்படும்.
8. அமாவாசை, திவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது.
9. அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, ஜன்ம நட்சத்திரம் ஆகிய தினங்களில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க கூடாது.
10. பொதுவாக நெற்றிக்கு திலகமிடாமல் பூஜை செய்யக்கூடாது.
11. பெண்கள் பூசணிக்காய் உடைத்தல் கூடாது. இரு கைகளால் தலையை சொரிதல் ஆகாது.
12. கர்ப்பிணி பெண்கள் தேங்காய் உடைத்தல் கூடாது. மற்றவர்கள் தேங்காய் உடைக்கும் இடத்தில் இருக்கவும் வேண்டாம்.
13. சாமி படங்களுக்கு வாசனை இல்லாத பூக்களைக் சூடக்கூடாது.
14. வீட்டின் நிலைகளில் குங்குமம், மஞ்சள் வைக்க வேண்டும். இதனால் தீய சக்திகளும், விஷப்பூச்சிகளும் வீட்டிற்குள் வராது
.
15. வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே குளிர்ந்து விடுவது தான் நல்லது. நாம் அணைக்கக் கூடாது.
16. அதிகாலை நாலரை மணி முதல் ஆறு மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும், மாலை ஐந்தரை மணி முதல் ஆறு மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும் நிறைவான வளமும், பலன்களும் நிச்சயம் கிடைக்கும். எக்காரணம் கொண்டும் எவர்சில்வர் விளக்குகளைப் பூஜை அறையில் விளக்கேற்றப் பயன்படுத்தக் கூடாது.
17. நெய், விளக்கு எண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இவை ஐந்தும் கலந்து ஊற்றி 48 நாட்கள் விளக்கேற்றி பூஜை செய்தால், தேவியின் அருளும், மந்திர சக்தியும் கிடைக்கும்.
18. ஏற்றிய விளக்கில் இருந்து கற்பூரத்தையோ ஊதுபத்தியையோ ஏற்றக்கூடாது.
19. விளக்கேற்றும் போது மற்றவர்கள் ஏற்றி வைத்த விளக்கின் மூலமாக நம் விளக்கை ஏற்றக்கூடாது. தீப்பெட்டி மூலமாக தான் விளக்கேற்ற வேண்டும்.
20. ஓம் என்ற மந்திரத்தை பூஜை அறையில் பத்மாசனத்தில் அமர்ந்து ஒருவர் தொடர்ந்து கூறி தியானம் செய்து வந்தால் அவரை எப்பேர்ப்பட்ட வினைப்பயனும், வியாதியும் நெருங்காது.
21. வீட்டில் பூஜை அறையில் தெய்வப் படங்களுடன் மறைந்த மூதாதையர் படத்தை சேர்க்காமல் தனியாக வைத்து வணங்கினால், சிறந்த பலன் கிடைக்கும்.
22. சனி பகவானுக்கு வீட்டில் எள்விளக்கு ஏற்றக் கூடாது.
23. ருத்ரம், சமகம் போன்றவற்றை வீட்டில் காலையில் தினமும் கேட்பது நல்லது.
24. நாம் வீட்டில் கடவுளை வணங்கும்போது நின்றவாரே தொழுதல் குற்றமாகும். அமர்ந்தபடி தான் தொழுதல் வேண்டும்.
25. யாராவது தூங்கிக் கொண்டிருக்கும்போது காலை, மாலை வேளைகளில் விளக்கேற்றக்கூடாது. தூங்குபவர்கள் எழுந்த பிறகுதான் விளக்கேற்ற வேண்டும். தூங்குபவர்களின் தலைக்கு நேராக தேங்காய் உடைக்கக் கூடாது.
26. பூஜையின்போது விபூதியை நீரில் குழைத்து பூசக் கூடாது. தீட்சை பெற்றவர்கள் மட்டுமே விபூதியை நீரில் குழைத்து பூசலாம்.
27. பூஜை அறையில் வழிபாடு முடிந்ததும் இடது நாசியில் சுவாசம் இருக்கும்போது பெண்கள் குங்குமம் இட்டுக் கொண்டால் மாங்கல்ய விருத்தி ஏற்படும்.
28. பூஜை அறையில் தெய்வப்படங்களை வடக்குப் பார்த்து வைத்தால் சாபமுண்டாகும்.
29. விரத தினத்தில் தாம்பூலம் தரித்தல், பகல் உறக்கம், தாம்பத்திய உறவு, சண்டையிடுதல் கூடாது.
30. ஈர உடையுடனும், ஓராடையுடனும், தலைகுடுமியை முடியாமலும், தலையிலும், தோளிலும் துணியை போட்டுக் கொண்டோ, கட்டிக் கொண்டோ வழிபாடு செய்யக் கூடாது.
31. ஈர ஆடையுடன் வழிபட நேருமானால் ஈர உடையை, ஓம் அஸ்த்ராய பட் என்ற 7 முறை கூறி உதறி உதடுத்தலாம்.
32. சுப்ரபாதத்தை தினமும் காலை வேளையில் மட்டுமே கேட்க வேண்டும். அவ்வாறு கேட்க முடியாத நிலையில் மாலையில் கேட்பது அவ்வளவு உசிதமானதில்லை எனப்படுகிறது.
33. பகவானின் மந்திரத்தை சொல்லி பிரார்த்திக்க தெரிந்தவர்களுக்கு எப்போதும் எல்லாமே வெற்றிதான். காலையில் விழித்தவுடன் நாராயணனையும் இரவு தூங்கு முன் சிவபெருமானையும் நினைக்க வேண்டும்.
34. கஷ்டங்கள் நீங்க நினைத்தது நடக்க எளிய வழி தீபம் ஏற்றுவதுதான் தீப ஒளி இருக்குமிடத்தில் தெய்வ அணுக்கள் நிறைந்திருக்கும். வீட்டில் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தீபம் ஏற்றி வைக்கலாம்.
35. தீபத்தில் உள்ள எண்ணெய் தான் எரிய வேண்டுமே தவிர திரி அல்ல. திரி எரிந்து கருகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
36. விளக்கை ஏற்றும்போது வீட்டில் பின் வாசல் இருந்தால் அதன் கதவை சாத்தி விட வேண்டும்.
37. காலையில் நின்று கொண்டு செய்யும் ஜெபத்தால் இரவில் செய்த பாவமும், மாலையில் உட்கார்ந்து கொண்டு செய்யும் ஜெபத்தால் பகலில் செய்த பாவமும் தொலைகிறது.
38. விளக்கு எரிந்து கொண்டிருக்கும் போது கைவிரலால் எண்ணெய்யிலுள்ள தூசியை எடுப்பதோ திரியை தூண்டுதோ கூடாது. 39. எரிந்து கொண்டிருக்கும் தீபத்தை ஆண்கள் அணைக்கக் கூடாது.
40. ஆண்கள் தெய்வங்களை வழிபடும்போது தையல் உள்ள உடைகளை அணியக் கூடாது.
41. ஈரத்துணியை உடுத்திக் கொண்டு பூஜைகள், ஜபங்கள் செய்யக்கூடாது.
42. வாழைப் பழத்தில் பத்தியை சொருகி வைக்கக் கூடாது.
43. தேங்காய் இரண்டுக்கு மேற்பட்ட துண்டுகளாக உடைந்தால் அதை தெய்வத்திற்கு நிவேதனம் செய்யக்கூடாது.
44. புழுங்கல் அரிசியால் சமைக்கப்பட்ட உணவை தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது.
45. மா இலை கட்டுவதால் பல தோஷங்கள் நீங்கும். மா இலை தோரணங்களுக்கு பதிலாக பிளாஸ்டிக், பித்தளை முதலியவற்றால் மாவிலை போன்று தோரணம் கட்டலாகாது.
46. தெய்வப் படம், குத்து விளக்குளில் மின் வயரால் அலங்காரம் செய்யக்கூடாது.
47. தினசரி பிரார்த்தனை என்பது வீட்டு வாசலில் ஓடி வரும் தெளிந்த ஆறு போன்றது. யார் ஒருவர் அதில் தன்னை சுத்தி செய்து கொள்கிறானோ அவர் தன்னை நிர்மலமாக்கிக் கொள்கிறார்.
48. வீட்டில் பூஜை செய்து முடித்ததும் துளசியை கையில் வைத்துக் கொண்டு என் பக்தன் எங்கு சென்றாலும் நான் அவனைப்பின் தொடர்ந்து செல்வேன் என பகவான் கூறியுள்ளார். அதனால் ஒருவர் கையில் துளசி இருக்கும் வரை விஷ்ணுவின் துணை அவருக்கு உண்டு.
49. தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யும்போது வெற்றிலை மற்றும் பாக்குகளை இரட்டைப்படை எண்ணிக்கையில் (2, 4, 6, 8, 10) வைக்க வேண்டும்.
50. பூஜைக்கு உபயோகிக்கும் பாக்கு, வெற்றிலை அனைத்து வகை பழங்கள், பூக்கள், தர்ப்பங்கள், ஸ்மித்துகள் போன்றவற்றை பூமியில் நேரடியாக வைக்கக் கூடாது. தட்டு போன்ற பொருட்களின் மீது வைக்க வேண்டும்.
51. வலம்புரிச் சங்கு வைத்திருக்கும் வீட்டில் வற்றாத செல்வம் வந்து சேரும். ஏனெனில் வலம்புரிச் சங்கிலே மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது மகான்களின் கூற்று. பல மகோன்னதம் ஒரு வலம்புரிச் சங்கிற்கு உண்டு.
52. நிர்மால்யம் என்பது பூஜையின் முதல் நாள் போட்டு வாடிய புஷ்பங்களை குறிக்கும். நிர்மால்யங்களை காலில் படாமல் கண்களில் ஒற்றிக் கொண்டு தாம்பாளம், கூடையில் போட்டு வைத்திருந்து ஓடும் தண்ணீரில் விட வேண்டும்.
53. செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் வெண்ணை உருக்கக் கூடாது. காரணம் மேற்படி கிழமைகளில் லட்சுமிக்கு உகந்தவை ஆதலாலும் வெண்ணையில் மகாலட்சுமி இருப்பதாலுமே வெண்ணை உருக்கக் கூடாது என்பார்கள்.
54. உறவினர்களை வெளியூர் செல்ல வழியனுப்பிய பிறகு பூஜை, முதலியவைகளை செய்யக் கூடாது.
55. பெரியவர்களும், சிறுவர்களும் தேவாரம், திருவாசகம், திருப்புகழ் ஆகியவற்றை வாய்விட்டுத் தினமும் படிக்க வேண்டும். வாய்விட்டு படிப்பதால் குரல் உறுப்புகள் பலம் கொள்ளும். அதனால் மார்பு ஆரோக்கியம் பெறும். சுவாசப் பைகளுக்கும் நல்லது.
56. பூஜை செய்யும் நேரத்திலாவது பெண்கள் ஸ்டிக்கர் போட்டு அணியாது குங்குமம் இட்டுக் கொள்ள வேண்டும்.
57. பெண்கள் வகிடு ஆரம்பத்தில் குங்குமப் போட்டு கட்டாயம் வைக்க வேண்டும். ஸ்ரீமகாலட்சுமியும், அம்பாளும் வகிட்டில்தான் நிரந்தர வாசம் செய்வதால் சுமங்கலிகளுக்கு சகல சவுபாக்கியங்களையும், மங்கலத்தையும் அளிப்பார்கள்.
58. வெள்ளியன்று குத்து விளக்கிற்கு குங்குமம், சந்தனம் பொட்டிட்டு, பூ சார்த்தி, குங்குமம், புஷ்பம், மஞ்சள் அட்சதையால் குத்து விளக்கு பூஜை செய்வது குடும்ப நலத்திற்கு நல்லது.
59. வீட்டில் துளசியை வளர்ப்பது மிகச் சிறப்பு. காலையில் எழுந்ததும் துளசியைத் தரிசிப்பதால் நம் தீவினைகள் மறையும். தானம் கொடுக்கும்போது சிறிது துளசியுடன் தானம் கொடுக்க வேண்டும். துளசியோடு தரப்படாத தானம் வீண்.
60. பூஜை அறையில் தெய்வங்களுக்குப் படைப்பதற்கு வெற்றிலை, பாக்கு வைக்க வேண்டும். சீவல் பொட்டலத்தை வைக்கக் கூடாது. வெற்றிலையை இரட்டைப் படை எண்களில்தான் வைக்க வேண்டும். இரண்டு வெற்றிலைக்கு ஒரு பாக்கு என்ற கணக்கில் எவ்வளவு வெற்றிலை வைக்கிறோமோ அந்த அளவு பாக்கு வைக்க வேண்டும்.
61. வெற்றிலை நுனியில் லட்சுமியும், மத்தியில் சரவஸ்தியும், காம்பில் மூதேவியும் வாசம் செய்வதாக ஐதீகம். எனவே வெற்றிலைக் காம்பை கிள்ளி விட்டு வெற்றிலையைக் கழுவிய பின் பூஜைக்கு வைக்க வேண்டும்.
62. வெற்றிலையின் நுனிப்பாகம் சுவாமிக்கு இடது புறம் வருமாறு வைக்க வேண்டும். அப்போது வெற்றிலையின் காம்புப் பகுதி சாமிக்கு வலதுபுறம் இருக்கும்.
63. சாமிக்கு படைக்கும்போது வாழை இலை போட்டு படைக்கிறோம். அப்படி வாழை இலை போடும் போது வாழை மரத்திலிருந்து நறுக்கப்பட்ட பகுதி சுவாமி படத்திற்கு வலது பக்கம் வரவேண்டும்.
64. மாலையில் வீட்டில் விளக்கு ஏற்றுவதற்கு முன் தான தருமம் செய்வதென்றால் செய்து விடுங்கள். விளக்கு ஏற்றிய பின் தான தருமம் செய்யாதீர்கள்.
65. குழந்தைகளுக்கு ஆன்மிக வழிகாட்டும் ஸ்லோகங்களும், நமது நீதி நூல்களில் உள்ள நல்ல பழக்க வழக்கங்களும் கற்றுத் தர வேண்டும்.
66. பெண்கள் தலைமுடியை வாரி முடிந்து முடிச்சு போட்டுக் கொள்ள வேண்டும். தலையை விரித்து போட்டு இருந்தால் லட்சுமி தேவி தங்க மாட்டாள்.
67. பூஜை செய்யும்போது கடவுள் உருவங்களின் பாதங்கள் மற்றும் முகத்தைப் பூக்களால் மறைத்து விடக்கூடாது. முகமும், பாதமும் திறந்து நிலையில் இருக்க வேண்டும்.
68. செல்வத்திற்குரிய தெய்வங்களான வெங்கடாஜலபதி, லட்சுமி, குபேரன் ஆகியோர் படங்களை வீட்டின் வெளிப்புறம் பார்த்து இருக்குமாறு மாட்டக்கூடாது.
69. பூஜை அறையிலோ, வீட்டிலோ தெய்வப் படங்களை கிழக்கு நோக்கி வைக்க வேண்டும். வணங்குபவர் தெற்குப் பகுதியில் வடக்குத் திசையைப் பார்த்தவாறு அமர்ந்து வணங்கலாம். தெற்கு நோக்கி தெய்வப் படங்களை வைக்கக் கூடாது. கிழக்குப் பக்கம் முடியாவிட்டால் தெற்குப் பக்கத்தைத் தவிர பிற திசைகளைப் பார்த்து படங்களை வைக்கவும்.
70. பூஜை செய்பவர் தெற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு ஆகிய திசைகளைப் பார்த்து கொண்டு உட்கார்ந்து பூஜை செய்யக்கூடாது.
71. பூஜை அறையில் அதிக படங்களையும், தெய்வச் சிலைகளையும் வைக்கிறோம் என்பதற்காக அவற்றை நெருக்கமாக வைக்கக் கூடாது. ஒவ்வொரு தெய்வச் சிலைக்கும் இடையில் போதிய இடம் விட்டு வைக்க வேண்டும்.
72. நிவேதனம் செய்த தேங்காயை சமையலில் சேர்த்து அந்த உணவை மறுபடியும் சாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது.
73. அன்னம் முதலியவற்றை எவர்சில்வர் பாத்திரங்களில் நேரடியாக வைத்து தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது. பாத்திரத்தில் இலை வைத்து அதில் உணவை வைத்து நிவேதனம் செய்யலாம்.
74. திங்கட்கிழமையன்று பஞ்சால் செய்யப்பட்ட விளக்கு திரியை கையால் தொடக்கூடாது.
75. தனது வீட்டில் கோலம் போடாமலும் விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு செல்லக்கூடாது.
76. எரியும் விளக்கில் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு அதைத் தன் தலையில் தடவிக் கொள்வதும் கூடாது.
77. சாமி படங்களில் உலர்ந்த பூக்களை விட்டு வைக்கக் கூடாது.
78. விஷ்ணுவை வணங்கி வீடு திரும்புபோது லட்சுமி தேவியும் நம்முடன் நம் வீட்டுக்கு வருகிறாள் என்பது ஐதீகம். ஆகவே விஷ்ணு கோவிலிலிருந்து வீடு திரும்புமுன் அங்கே உட்காரக் கூடாது.
79. ஸ்வஸ்திக், ஸ்ரீ சக்கரம், ஓம் மற்றும் திரிசூலம் சின்னங்களை வாசல் கதவிலோ அல்லது வாசலின் உள்ளே நேர் எதிரேயோ ஒட்டி வைப்பது பாதுகாப்பிற்கும், அதிர்ஷ்டத்திற்கும் உதவும். வெளியே செல்லும்போது சட்டைப் பையிலும் வைத்துக் கொள்ளலாம்.
80. வாசலுக்கு நேர் எதிரே வாசலைப் பார்த்து சிரிக்கும் புத்தரை வைப்பது வளமை, வெற்றி, தனலாபம் ஆகியவை அளிக்க வல்லது