திங்கள், 4 ஜூலை, 2016

பெரியவாவின் பத்து கட்டளைகள்

அன்புள்ள ஆன்மீக நண்பர்களுக்கு என் இனிய வணக்கங்கள்.


சாய் பாபா எந்த அளவுக்கு எனக்கு பிடிக்குமோ அந்த அளவுக்கு மகா பெரியவாவை  பிடிக்கும்.அவர்களின் துணையுடன் செய்யும் அனைத்து செயல்களும் வெற்றியைத் தரும்.

நான் அவர்களின் ஆசியுடன் இந்த பதிவை எழுதுகிறேன்.

பெரியவாவின் கட்டளைகளை நாம் பின்பற்றி நடப்பது நாம் செய்யும் பாக்கியம்.

பெரியவாவின் பத்து கட்டளைகள்

காலையில் எழுந்தவுடன்  இரண்டு நிமிடங்களாவது கடவுளை மனதில் பிராத்தனை செய்ய வேண்டும்.

அன்றைய தினம் நல்ல தினமாக இருக்க கடவுளை வேண்டிக் கொள்ள வேண்டும்.

அடுத்து புண்ணிய நதிகள்,கோமாதா,சிரஞ்சீவிகள்,சப்த கன்னியர்கள் முதலியவர்களை குறைந்தபட்சம் ஒரு நிமிடமாவது நினைக்க வேண்டும்.

வாரத்தில் ஒரு நாளாவது அருகிலுள்ள திருக்கோவிலுக்குச் சென்று கடவுளை வழிபட வேண்டும்.

உன் பக்கத்தில் வாழ்பவர்களையும்,மற்றவர்களையும் நேசிக்க வேண்டும்.

சாப்பிடும் முன் மிருகங்களுக்கோ,பட்சிகளுக்கோ ஆகாரம் அளித்து விட்டு பிறகு சாப்பிட வேண்டும்.

அன்றாடம் குறைந்தபட்சம் சக்திக்கேற்றபடி தர்மம் செய்ய வேண்டும்.

நெற்றியில் தவறாது திலகம் வைத்து  கொள்ள வேண்டும்.

உறங்கச் செல்லும்முன் அன்றைய நாளில் நீ செய்த நல்லது, கெட்டதுகளை எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஆண்டவன் நாமத்தை 108 முறை உச்சரித்து விட்டு ,பின்பு உறங்க செல்ல வேண்டும்.   

பெரியவாவுடைய கட்டளைகளை அனைவரும் பின்பற்றி மேலும் நம் வாழ்க்கையில் முன்னேற நான் பெரியவாவை பிராத்திக்கிறேன்.

நன்றி வணக்கம் 
உங்கள் அன்பு தோழி ஈஸ்வரி 


ஞாயிறு, 3 ஜூலை, 2016

ஒவ்வொரு நட்சத்திற்குரிய வெற்றிலை பரிகாரங்கள்

 வெற்றிலை







வெற்றிலையை நாம் பூஜைக்குரிய பொருளாகவும்,மங்கள பொருளாகவும் பயன்படுத்தி வருகிறோம். வெற்றிலை ஜீரண தன்மை கொண்டதால் அது மருத்துவ குணம் கொண்டுள்ளது எனலாம்.

கடவுளுக்கு அளிக்கும் நெய்வேத்தியத்துடன் வெற்றிலையும் சேர்த்து அளிக்கப்பட வேண்டும்.வெற்றிலை பாக்கு இல்லாமல் செய்யப்படும் பூஜை  நிறைவு அடைவது இல்லை.வெற்றிலையில் முப்பெரும் தேவிகளான துர்க்கா,லக்ஷ்மி ,சரஸ்வதி இருப்பதாக நம் சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது.

ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை 


வெற்றிலை ஆஞ்சநேயருக்கு பிடித்த இலை.வெற்றியை தேடி தருவதால் ஆஞ்சநேயருக்கு நாம் வெற்றிலை மாலை சாற்றி வழிபடுகிறோம்



ஒவ்வொரு ராசிக்காரர்களும் வெற்றிலையுடன் பழங்கள் வைத்து வழிபட்டு வந்தால் அவர்கள்  துன்பங்கள் அகன்று இன்பங்கள் கிடைக்கும் என்பது திண்ணம்.


வெற்றிலை பரிகாரம் 

மேஷம்------  வெற்றிலையில் மாம்பழம் வைத்து செவ்வாய் கிழமை முருகனை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம் அகலும்.

ரிஷபம்-----  வெற்றிலையில் மிளகு வைத்து செவ்வாய்   கிழமை ராகுவை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம் விலகும்.

மிதுனம் -----வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து புதன் கிழமை இஷ்ட தெய்வத்தை  வழிபட்டு  சாப்பிட்டால் துன்பம் விலகும்.

கடகம் ------வெற்றிலையில் மாதுளம்பழம் வைத்து வெள்ளிக்கிழமை காளி தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கஷ்டம்  விலகும்.

சிம்மம் -----வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து வியாழக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம் விலகும்.

கன்னி -----வெற்றிலையில் மிளகு வைத்து வியாழக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம் தீரும்.

துலாம் ----வெற்றிலையில் கிராம்பு வைத்து வெள்ளிக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு  சாப்பிட்டால் துன்பம் தீரும்.

விருச்சிகம்-----வெற்றிலையில் பேரிச்சம் பழம்  வைத்து செவ்வாய்க்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு  சாப்பிட்டால் துயரம் தீரும்.

தனுசு ----வெற்றிலையில் கற்கண்டு வைத்து வியாழக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துயரம் தீரும்.

மகரம் ----வெற்றிலையில் அச்சு வெல்லம் வைத்து சனிக்கிழமை காளி தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கவலை தீரும்.

கும்பம் ----வெற்றிலையில் நெய் வைத்து சனிக்கிழமை காளி தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கவலை தீரும்.

மீனம் ----வெற்றிலையில் சர்க்கரை வைத்து ஞாயிற்றுக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் நோய் தீரும். 

என் பதிவுகளைப் படித்து உங்கள் கருத்துக்களை எழுதவும்.



















வியாழன், 30 ஜூன், 2016

சாய்பாபாவின் உதி

அன்பு தோழிகளுக்கு என் அன்பு நமஸ்காரங்கள்.


என் குருநாதராகிய சாய்பாபாவின் அருளால் அவரைப் பற்றியும் ,அவர் அளித்த உதியின் மகிமையைப் பற்றியும்   சொல்வது ஒரு உண்மையான பக்தியை அறிய ,ஒரு வாய்ப்பு ஆகும்.





வாருங்கள்! அவர் கொடுத்த உதியின் பெருமையை அறிவோம்.


 சாய்பாபாவின் உதி


துவாரகாமாயீயில்  சாய்பாபாவால் ஏற்றி வைத்த அக்னி குண்டம் இன்றும் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது.அதில் விறகுக்கட்டை போட்டு எரித்து கொண்டிருந்தார்.அதன்முன் அமர்ந்து தினமும் தியானம் செய்வது அவர் வழக்கம்.

தன் பக்தர்களுக்கு இந்த அக்னி  குண்டத்திலிருந்து 'உதி' என்று அழைக்கப்படும் விபூதியை எடுத்து தருவார்.அக்னி  குண்டத்தை எடுக்கும்போது வேண்டுமானால் அது சாம்பலாக இருக்கலாம்.

பகவான் சாயியின் ஸ்பரிசம் பெற்ற பிறகு இந்த உதி மிகவும் சக்தி வாய்ந்ததாகிறது.எல்லாவித
ஊழ் வினைகளையும்,வியாதிகளையும் போக்கவல்லது.தினமும் குளித்தபின் உதியை நெற்றியில்  இட்டு கொண்டும் ,கொஞ்சம் நீரில் கலந்து சாப்பிட்டால் உடல் நோய் நிவாரணம் தரும்.

பாபா மக்களுக்கு கூறிய பொதுவான உபதேசம் நம்பிக்கையும்,பொறுமையும் ஆகும்.அவர் மேல் நம்பிக்கை வைத்து நம் வேண்டுதலை சொன்னால்,பாபா அதை நிறைவேற்றி வைப்பார்.

உதி விதியை மாற்றும் 


துகாராம் பார் ஷீரடியில்  விவசாயம் செய்து வந்தார்.1912ம் ஆண்டு ஷுரடியிலிருந்து 20கிலோ மீட்டர் தொலைவில் கரஞ்சிகாவோன் என்ற கிராமத்திற்கு சென்று வேலை செய்து சம்பாதிக்க புறப்பட்டு விட்டார்.

அப்போதுதான் கோதாவரியை சுற்றியுள்ள வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்து விட்டார்கள்.அதனால் தனக்கு வேலை கிடைக்கும் என புறப்பட்டார். 

கோபர்கான் சாலையில் செல்லும்போது பாபா அவரது கழுத்தில் தன் கையை போட்டு போகாதே என்றார்.ஆனால் துகாராம்  பாபாவின் வார்த்தை கண்டு கொள்ளவில்லை.கரஞ்சிகாவோன் வந்தார்.வந்த மறுநாளே அவருக்கு காய்ச்சல் வந்தது.காய்ச்சல் நிற்கவே இல்லை.தன் சாப்பாட்டிற்காக சம்பாதிக்க வந்தவர் தற்போது சொந்தக்காரர்களை சார்ந்து இருக்க வேண்டியதாகி விட்டது.

பதினைந்து நாட்கள் கழித்து ஷீரடிக்கு திரும்பி விட நினைத்தார்.காய்ச்சல் நிற்கவில்லை. 45நாட்கள் தொடர்ந்தது.உடனே தன் அம்மாவிடம் சொல்லி பாபாவின் உதியை அனுப்ப சொன்னார்.உதியை இட்டு கொண்ட  மறுநாளே காய்ச்சல் முற்றிலும் நின்று  விட்டது.

உதியின் சக்தியும் செயல் திறமையும் 

ஒருமுறை பாலாஜியின் திவசத்தின் போது சில விருந்தினர் அழைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு சமைக்கப்பட்டது.ஆனால் சாப்பாட்டு நேரத்தில் அழைக்கப்பட்ட பேர்களை விட  மூன்று மடங்கு பேர் வந்து விட்டனர்.

பாலாஜி மனைவி திகைத்து போய் விட்டாள்.குழுமியுள்ள மக்களுக்கு சாப்பாடு பற்றாது என்றும்,அது பற்றாது போகுமானால் குடும்பத்தின் கெளரவம் பாதிக்கக்கூடும் என்றும் அவள் நினைத்தாள்.அவளுடைய மாமியார் பயப்படாதே.அது நம்முடைய உணவல்ல.சாயியினுடையது.

ஒவ்வொரு பாத்திரத்திலும் கொஞ்சம் உதி போட்டு ஒரு துணி போட்டு மூடி அதை திறக்காமலே அவர்களுக்கு  பரிமாறப்பட்டது.சாயி நம்மை இந்த அவமானத்திலிருந்து காப்பார் என்று கூறித் தேற்றினாள்.அவரை கூறியபடியே செய்தாள்.சிறிது நேரத்தில் அந்த அதிசயம் நடந்தது.பரிமாறுவதற்கு உணவு எல்லோருக்கும் போதுமானதாக இருந்ததுடன் ,மீதமும் இருந்ததை கண்டார்கள்.


பாபாவின் அற்புதங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.பாபா நம்மை என்றும் காப்பார்.பாபாவின் மேல் நம்பிக்கையும் பொறுமையும் வையுங்கள்.அவர் நம்மை நல்வழிக்கு கூட்டி செல்வர்.

மீண்டும் அடுத்த பதிவில் இன்னுமொரு தலைப்பில் உங்களை சந்திக்கிறேன்.

உங்கள் அன்பு தோழி ஈஸ்வரி 




















செவ்வாய், 28 ஜூன், 2016

கலசம்

கலசம்


நாம்  செய்யும் அனைத்து நல்ல காரியங்கள்,விசேஷங்கள் சிறப்புற நடைபெற கலசம் வைத்து அதில் நாம் வணங்கும் தெய்வத்தை ஆவாகரணம் செய்து வழிபடுவது இந்துக்கள் செய்யக்கூடிய ஒன்றாகும்.

கலசம் என்பது என்ன?

மண் அல்லது செம்பு,பித்தளை,தாமிரம் போன்ற உலோகங்களால் செய்யப்பட்ட நீர் நிறைந்த ஒரு பாத்திரம்-செம்பு-சிறு பானைதான்  கலசம் எனப்படுகிறது.

இந்த கலசத்தில்  மாவிலைகள் செருகப்பட்டு நடுவில்  ஒரு தேங்காய் வைக்கப்படும்.வெண்மை அல்லது சிவப்பு நிறமுள்ள நூல்கள் பானையின் கழுத்திலிருந்து முழுமையாக டயமண்ட் வடிவத்தை உருவாக்கும் வகையில் நுணுக்கமாக கட்டப்படுகிறது .பானையின் மேல் அழகான லக்ஷ்மி தேவியின் உருவத்தை வரைவது உண்டு.இந்த பானை கலசம் என்றழைக்கப்படுகிறது.

பூரண கும்பம் 


கலத்தில் நீரோ அல்லது அரிசியோ நிரப்பப்படும்.இதற்கு பூரண கும்பம் என்றழைக்கப்படுகிறது.

கிரக பிரவேசம்,திருமணம்,விரத நாட்களில் கலசம் வைத்து வழிபடுவார்கள்.மேலும் விழா நடத்தப்படும் இடத்தின் நுழைவாயிலில் ,வருவோரை வரவேற்க்கும் வகையில் இக்கலசம்  வைக்கப்படுகிறது.
பெரியோர்களை முக்கிய பிரமுகர்களை பூரண கும்பம் கொடுத்து வரவேற்பர்.

கலசம் வைத்து பூஜிப்பது ஏன்?


உலகை படைக்கும் முன் விஷ்ணு,பாற்கடலில் பாம்பணையின் மேல் சாய்ந்து அமர்ந்திருந்தார்.அவருடைய நாபிக் கமலத்திலிருந்து ஒரு தாமரை வெளிப்பட்டது.அந்த மலரிலிருந்து படைக்கும் கடவுளான பிரம்மதேவன் தோன்றினார்.பிரம்மாவே உலகத்தை சிருஷ்டித்தார்.

கலசத்தில் உள்ள நீரானது ,எந்த நீரிலிருந்து படைப்பில் உள்ள அனைத்தும் தோன்றியதோ,அந்த நீரைக் குறிக்கும்.அந்த புனித நீர்தான் அனைத்திற்கும்  உயிர் அளிக்கும் சக்தி படைத்தது.இந்த நீர் எண்ணிலடங்கா உருவில்,வடிவில்,உயிர்த்துடிப்பும் உணர்வும் உள்ள பொருள்கள் மற்றும் ஜடப் பொருள்கள் ஆகிய அனைத்தையும் படைக்கும் சக்தியைத் தன்னுள் அடக்கியுள்ளது. 

மேலும் உலகிலுள்ள மங்களமான அனைத்தையும் படைக்கும் சக்தி பெற்றது.கலசத்தில் வைக்கப்படும் மாவிலைகளும்,தேங்காயும் சிருஷ்டியைக் குறிக்கும்.கலசத்தில் சுற்றிய நூல் படைப்பில் உள்ள அனைத்தையும் ஒன்றாக பிணைக்கும் அன்பைக் குறிக்கிறது.ஆகவேதான் கலசம் புனிதமாக கருதி பூஜிக்கப்படுகிறது.

புனிதமான நதிகளின் நீர் அனைத்தும் வேதங்களின் சாரம் மற்றும் அனைத்து தேவதைகளின் ஆசி கலசத்தில் உள்ள நீரில் வந்து சேர வேண்டுமென்று பிரார்த்திக்க வேண்டும்.பின்னர் பூஜைகள் முடிந்தவுடன்,நம் வீட்டில் உள்ள எல்லா இடங்களிலும்  புனித  நீராக தெளிக்கப்படுகிறது.
ஆலய கும்பாபிஷேகங்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கலசத்தில் உள்ள புனித நீரை ஆலய கோபுர கலசங்களின் மேல் ஊற்றப்படுகிறது .









செவ்வாய், 21 ஜூன், 2016

16வகை லிங்கங்கள்

16வகை லிங்கங்கள் 



என்  அன்பு ஆன்மீக அன்பர்களுக்கு என்னுடைய நமஸ்காரங்கள்.


நம் எல்லோருக்கும் பரம்பொருளாக விளங்கும் ஈசனைப் பற்றி சொல்வது என்றால் சொல்லிக் கொண்டே போகலாம். இந்த பிரபஞ்சமே அவர் அருளால்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.நம்முடைய ஆன்மா இறுதியில் அவர் காலடியில் தான் சென்றடையும்.இதில் எந்தவொரு மாற்றங்களும் இல்லை.

இருக்கும் நாளில் தினமும் அவருடைய நாமங்களை சொல்லுவதும்,அவர் அருள் சின்னமான திருநீறைப்  பூசுவதும் நம் இந்துக்கள்  ஒவ்வொருவரின் கடமையாகும்.நாமும் இதைப்பின்பற்றி ,நம் குழந்தைகளுக்கும் சொல்லி கொடுப்போம்.

லிங்கங்கள் பல உள்ளன.அதைப்பற்றி எனக்கு தெரிந்தவற்றையும்,அறிந்தவற்றையும் உங்களுடன்  பகிர்ந்து கொள்கிறேன்.

இந்த பதிவுகளை எழுதுவதால்  எனக்கு பல ஆன்மீக விஷயங்கள் தெரிய வழிவகுக்கிறது.அதற்காக உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள் பல.


இப்பொழுது  16வகையான லிங்கங்களைப் பற்றி பார்ப்போம்.

இஷ்ட லிங்கம்

மரகதம்,படிகம்,கருங்கல் இவற்றால் செய்யப்பட்ட லிங்கத்தை குருவிடமிருந்து முறையாக வாங்கி,தன் ஆயுள் உள்ள வரை தன்னிடமே வைத்து கொண்டு தினமும் தான் செல்லுமிடம் எல்லாம் கூடவே எடுத்து சென்று வழிபாடும் லிங்கம் இஷ்ட லிங்கம் ஆகும்.

ஷணிக லிங்கம் 

நாள்தோறும் சிவ வழிபாடு நடத்திய பிறகு கைவிடப்படும் லிங்கம் ஷணிக லிங்கம்.இதை செய்வது எளிதானது.இது 16 வகைப்படும்.இதனை நாமே செய்யலாம்.குருவிடமிருந்து லிங்கம் பெற இயலாதவர்கள் இதை செய்து வழிபடலாம்.

 சிவ ஆகமப்படி, 16 வகையான பொருட்களால் லிங்க ரூபம் செய்து வழிபடுவது பெரும் சிறப்பு என்று ரிஷிகள் கூறுகிறார்கள்.

எந்த வகை லிங்கத்தை வழிபட்டால் என்ன பயன் ? 

புற்று மண் லிங்கம் -----முக்தி தரும்.

ஆற்றுமண் லிங்கம் ----பூமி லாபம் உண்டாகும்.

பச்சரிசி  லிங்கம் -------பொருள் பெருகும்.

சந்தன  லிங்கம் -------சுகபோகம் உண்டாகும்.

மலர் லிங்கம்  ---------நீண்ட ஆயுள் கிடைக்கும்.

அரிசிமாவு லிங்கம்----உடல் வலிமை ஏற்படும்.

பழ  லிங்கம் -----------நல்லின்ப வாழ்வு  கிடைக்கும்.

தயிர் லிங்கம் -------- நற்குணம் பெறலாம்.

தண்ணீர் லிங்கம் ---மேன்மை அடையலாம்.

அன்ன லிங்கம் ------உணவு பஞ்சம் ஏற்படாது.

தர்ப்பைப்புல் லிங்கம் ---பிறவியில்லா நிலை தரும்.

சர்க்கரை ,வெல்லம்  லிங்கம் ----இன்பம் கிடைக்கும்.

பசு சாண லிங்கம் -----நோயற்ற வாழ்வு கிடைக்கும்.

வெண்ணெய் லிங்கம் ---மனமகிழ் அதிகரிக்கும்.

ருத்ராட்ச லிங்கம்-------நல்லறிவு வாய்க்கும்.

விபூதி லிங்கம்   ---------செல்வவளம் உயரும் .

ஒரு பயனுள்ள பதிவை என் அன்பு நண்பர்களுக்கு  கொடுத்த மனநிறைவுடன்,இந்த பதிவை முடிக்கிறேன்.

உங்கள் அன்பு தோழி

ஈஸ்வரி 







சனி, 18 ஜூன், 2016

ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி


ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி


பிரத்தியங்கிரா தேவி பத்ரகாளியின் அவதாரம் ஆவாள்.

அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியாய்  திகழ்கின்ற மஹா பிரத்தியங்கிரா தேவி சரபேஸ்வரரின் நெற்றிக்கண்ணிலிருந்து ,1000 சிங்க முகங்கள்,2000 கைகளுடன் தோன்றியவள்.

கம்பீரமான விஸ்வரூபம்.சிரசின் மேல் நிழற் குடையாக ஆதிசேஷன் இருக்கின்றது.அடியவருக்கு வாரி வழங்கும் 4 திருக்கரங்கள் உள்ளன.கரங்களில் சூலம்,கபாலம்,பாசம்,டமருகம் திகழ்கின்றன.

"என் பக்தன் இவன் ,இவனிடம் வராதே"என்று எதிரி எச்சரிக்கும்விதமாக டமருகம்.


இவள் நரசிம்ம மூர்த்தியின் உக்கிரகத்தை விழுங்கி ஜெயித்தவள்.இவளுக்கு அபராஜிதா என்ற பெயர் பெற்றவள்.அபராஜிதா என்றால் 'யாராலும் வெல்ல முடியாதது' என்று பொருள்.

பிரத்தியங்கிரா தேவி பயத்தை போக்குபவள்.எந்த நேரத்திலும் துன்பம் என்று அவளை சரணடைந்ததால் ,நாம் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து நம் துன்பங்களை தவிடு பொடி ஆக்கி ,நம்மை எல்லையில்லா மகிழ்ச்சிக்கு கொண்டு செல்வாள்.

செய்வாய்,வெள்ளி,ஞாயிறு  வரும் ராகு காலம்,அமாவாசை,பவுர்ணமியில் நடத்தப்படும் விசேஷ பூஜை,தேய்பிறை அஷ்டமி யாகம்,நடுநிசி வேளை  பிரத்தியங்கிரா தேவியை வழிபடக்கூடிய நேரம் ஆகும்.

இந்த யாகம் நாம் நினைத்த காரியம் நிறைவேற வழிவகுக்கும்.

ஒவ்வொரு மாத அமாவாசை அன்று காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை தேவிக்கு செய்யப்படும் நிகும்பலா யாகம் எனப்படும் மூட்டை மூட்டையாக சில மிளகாயை யாகத்தீயில் கொட்டி யாகம் நடை பெறுகின்றன.

தேவியின் சக்தியை காட்டும் விதமாக தீயில் போடப்படும்  காய்ந்த மிளகாய் எந்த விதமான நெடியையும் ஏற்படுத்துவது இல்லை.எவருடைய கண்களுக்கும்  எரிச்சல் ஏற்படாத  அதிசயத்தை உலகில் வேறு எங்குமே காணமுடியாது.கைமேல் பலன் தருவாள்.



மும்மூர்த்தி மனைவிகளான பார்வதி,லக்ஷ்மி,சரஸ்வதி போன்ற மூவரும் ஒன்று சேர்ந்து தமது சக்திகளை உள்ளடக்கிய வடிவமே பிரத்தியங்கிரா  என்று புராணங்கள் கூறுகின்றது.


 மானாமதுரையில் ஸ்ரீ மகா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி ஆலயம் உள்ளது.இக்கோவில் அம்பாளைத் தவிர தனி மனிதர் யாருக்கும் மாலை மரியாதை ஏதும் அளிக்கப்படுவது இல்லை.


கோவைக்கு அருகில் சிங்காநல்லூரில் சரபேஸ்வரர் ,பிரத்தியங்கரா தேவி கோவில் சிறப்பாக அமைத்துள்ளது.மிகவும் உக்கிரகமான முகத்துடன்,காட்சி தரும் இவள் உருவம் பார்ப்பதற்கு பயங்கரமாக இருந்தாலும் ,கருணை உள்ளம் கொண்டவள்.

ஜெய் பிரத்தியங்கிரே ஜெய் ஜெய் பிரத்தியங்கிரே இந்த மந்திரம் அனைவரும் எளிதாக சொல்லக்கூடியது.

காயத்ரீ மந்திரம்

ஓம் அபரஜீதாய வித்மஹே 

பிரத்யங்கிராய தீமஹி 

தந்நோ உக்ர ப்ரசோதயாத் 

இம்மகா சக்தியை வணங்கினால் சத்ருபயம்,வியாதி,தடைகள் விலகும்.சுபிட்சமான வாழ்வு கிடைக்கும்.  







 









வியாழன், 16 ஜூன், 2016

சிவபெருமானின் 5 முகங்கள்

சிவபெருமானின் 5 முகங்கள்


சிவபெருமான் சைவர்களின் தலைவராக வழி படக்கூடிய மூம்மூர்த்திகளில்  ஒருவர்.சிவனை சிவன் என்றும்,சிவபெருமானை பரம்பொருள் என்றும் அழைக்கிறார்கள்.

சிவன் முப்பத்தாறு தத்துவங்களை கடந்து நின்று ஐந்தொழிலை செய்து,ஆன்மாக்களின் மூன்று மலங்களையும் போக்கி வீடுபேறு அருளுகிறார்.


மூவகைத் திருவடிவங்கள் யாவை?

அருவம்,அருவுருவம்,உருவம் என்பவையாகும்.

அருவம் = கண்ணிற்கு புலனாகாது சக்தி வடிவமாக இருந்தே, காரியங்களை செய்வது. இலயசிவன்(நிஷ்கள சிவன்,சத்தர்) என்று அழைக்கபடுவர். சிவபெருமான் ஞானசக்தியுடன் மட்டுமே பொருந்தியிருக்கும் தன்மையால் அருவ வடிவம் தாங்குகின்றார்.

அருவுருவம் = ஞானசக்தியையும் கிரியாசக்தியையும் சம அளவில் கொள்வதன் மூலம் பூணுகின்ற வடிவம். ஒருமுறை புலனாகியும், புலனாகாமலும் இருப்பது இவ்வடிவமாகும். புலனாகும்போது முகம்,கை,கால் போன்ற உறுப்புக்கள் ஏதுமின்றி காட்சியளிப்பது. ஒளி, இலிங்கம் ஆகியன அருவுருவத் திருவடிவங்களாகும்.

உருவம் = ஞானசக்தியைவிட கிரியாசக்தியை மிகுவித்து; அதன்மூலம் கண்களுக்கு புலனாகும்வகையில் முகம்,கை,கால் போன்ற உறுப்புகளுடன் தெளிவாகத் தோன்றுவது உருவத் திருவடிவமாகும். தென்முகக்கடவுள்,சோமஸ்கந்தர்,அர்த்தநாதீசுவரர்,நடராசர் போன்ற மகேசுவர மூர்த்தங்கள் இதற்குள் அடங்கும்.

சிவம் என்றால் செம்மை [பூரணத்துவம்]மங்களமானது என்று பொருள்.சிவதரிசனம் செய்யும் வேலைகளை கொண்டே பலன் கிடைக்கும்.

காலையில் சிவனை வழிபட்டால் நோய்கள் தீரும்.
நண்பகலில் தரிசிக்க தனம் பெருகும்.
மாலையில் தரிசிக்க பாவம் அகலும்.
அர்த்த சாமத்தில் தரிசிக்க வீடுபேறு கிடைக்கும்.

படைத்தல்,காத்தல் ,அழித்தல் ,அருளல் ,மறைத்தல் போன்றவை சிவனின் தொழில்களாகும்.

சிவனின் 5 முகங்களைப் பார்ப்போம்.

1.சத்யோஜாதம் 

பிரம்ம தேவன் சிவபெருமானை மேற்கு திசையினை நோக்கி சிவபெருமானைக் குறித்து தவம் செய்த போது இறைவன் அழகிய வடிவத்துடன்  வெண்மை நிறத்தில்,பிரம்மன் முன் தோன்றினார்.இந்த முகமே சத்யோஜாதம் ஆகும்.

2.வாமதேவம் 

மீண்டும் பிரம்ம தேவன் வடக்கு திசை நோக்கி சிவபெருமானை குறித்து தவம் செய்த போது இறைவன் சிவந்த நிறத்துடன் பாம்பை அணிந்தும் ,மானும்  மழுவும் கைகளில் ஏந்தி பிரம்மதேவனுக்கு காட்சி கொடுத்தா.இந்த முகமே பிரம்மதேவனுக்கு காட்சி கொடுத்தார்.இந்த முகமே வாமதேவம் ஆகும்.

3.தத்புருஷம் 

அதன் பிறகு பிரம்ம தேவன் கிழக்கு திசை நோக்கி சிவனை குறித்து  தவம் செய்தார். இறைவன் தங்க நிறத்துடன் பிறையை சென்னியில் சூடி காட்சி கொடுத்தார்.இறைவனின் இந்த முகமே தத்புருஷம் ஆகும்.பிரம்மனின் தவத்தால் மகிழ்ந்த இறைவன் உளம் மகிழ்ந்து தனது அழகிய உருவத்திலிருந்து காயத்ரீ தேவியை உண்டாக்கி பிரம்ம தேவனிடம் அளித்தார் .காயத்ரீயை வணங்கி வருபவருக்கு நரகம் கிடையாது எனவும் வரமளித்தார்.

 4.அகோரம் 

பிறகு பிரம்மா தெற்கு திசையினை நோக்கி சிவபெருமானை குறித்து தவம் செய்தார். இறைவன் முக்கண் கொண்டவராக நெருப்பினையும்,வாளினையும் கரத்தில் கொண்டவராய் கரிய நிறத்துடன் தோன்றினார். இறைவனின் இந்த முகம் அகோரம் என்று பெயர் பெற்றது.

5.ஈசானனம்  

கடைசியாக பிரம்ம தேவன் ஆகயத்தினை நோக்கி சிவபெருமானை குறித்து தவம் செய்தார்.இறைவன் சாம்பல் வண்ணத்தில் முக்கண் கொண்ட ,இளமதியை சென்னியில் சூ டியவாரும்,கோரைப்பற்கள் கொண்ட உருவமாய் இரண்டு பெண்களுடன் தோன்றினார்.இறைவனின் இந்த முகமே ஈசானனம் எனப்படும்.

அதில் ஒரு பெண் மாயன் முதல் தேவர்கள் வரை அனைவரையும் ஈன்ற அன்னை.

மற்றொரு பெண் தாமரையில் வீற்றிருக்கும் கலைமகள் ஆவாள்.

5முகங்களை நினைத்து தியானம் செய்தாலும் அல்லது வழிபாடு செய்தாலும் இப்பிறவியில் சகல சுகங்களும் கிட்டி மறுபிறவியில் முக்தி கிட்டும் என்பது  பிரம்ம தேவன் வாக்கு ஆகும்.