செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015

கேட்பதை கொடுக்கும் காமதேனு

கேட்பதை கொடுக்கும் காமதேனு காமதேனு க்கான பட முடிவு
ஹாய் பிரண்ட்ஸ் ,


அனைவருக்கும் காலை வணக்கம்.


 கோவிலில் காமதேனுவை நாம் எல்லாரும்  பாத்திருப்போம் .அதைப் பற்றி எனக்கு தெரிந்ததை 
பகிர்ந்து கொள்ளலாம் என்று  இருக்கேன்.


காமதேனு
                                                      

                                                                            
தேவர்களும்,அசுரர்களும் பாற்கடலை கடந்த போது அதிலிருந்து  பல பொருட்கள் தோன்றினர் .அதில் ஒன்றுதான் காமதேனு . 

காமதேனு என்பது தேவலோகத்தில் வசிக்கின்ற பசு .யார் அதனிடம் என்ன கேட்டாலும்  
அதை கொடுக்கும் சக்தி  படைத்தது .இது பெண்ணின் தலை ,மார்பு ,பசுவின் உடல் ,மயில் 
தொகை போன்றவற்றுடன் இருக்கும் .

கெளசிகன் என்ற மன்னன் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது . பசி பிணியை போக்கும் பொருட்டு,வசிஷ்டர் முனிவரிடம் இருக்கும் காமதேனுவின் தங்கை நந்தினி பசுவை கேட்கிறான். வசிஷ்டர் தர மறுக்கிறார் . முனிவரிடம் காமதேனுவின் தங்கை நந்தினி பசுவை கேட்கிறான். வசிஷ்டர் தர மறுக்கிறார் . முனிவரிடம் போர்தொடுத்து தோல்வி அடைந்தான் .பிரம்மரிஷிக்கு மட்டுமே காமதேனு ,நந்தினி கட்டுப்படும் என்பதால் தவம் இருக்கிறான் மன்னன் .சத்திரிய குலத்தில்  பிறந்தவர்கள் பிரம்மரிஷி பட்டம்  பெற முடியாது என்று வசிஷ்டர் கூறுகிறார்.நான் வாங்கி  காட்டுகிறேன் என்று மன்னர் சவால் விடுகிறான்.



ஆட்சியை துறந்து கடுமையான தவம் இருந்து நம் அம்மை அப்பனான பார்வதி ,பரமேஸ்வரனிடம் 
 பிரம்மரிஷி பட்டத்தை   பெறுகிறார் .அந்த மன்னன் தான் நமக்கு காயத்திரி மந்திரத்தை தந்த 
விஸ்வாமித்திரர்.

தொடர்புடைய படம்













கேட்டது கிடைக்க காமதேனு காயத்திரி மந்திரம்
மந்திரங்களை ஜெபம் செய்து  உச்சரிக்கும் போது  ஜெபம் முடிவில் எட்டு வகை முத்திரைகள் செய்யப்படுகின்றன. அவற்றில் சுரபி, ஞானம், வைராக்யம், யோநி, சங்கம் பங்கஜம், லிங்கம், நிர்வாணம் ஆகிய எட்டில் முதல் முத்திரையே சுரபி என்னும் பசு முத்திரை ஆகும். இதன் பொருள் பசு பால் தருவதைப் போல நாம் உச்சரிக்கும் மந்திரங்கள் நலம் பொங்க செய்யட்டும் என்பதாகும்.
ஓம் சுபகாமாயை வித்மஹே
காமதாத்ரை ச தீமஹி
தன்னோ தேனுஹ் ப்ரசோதயாத்
- இந்த காயத்திரி மந்திரத்தை தினமும் பக்தியுடன் சொல்லி வந்தால் கேட்டவை அனைத்தும் கிடைக்கும்.
பசு என்றால் தருமத்திற்கு கட்டுப்பட்டது. இந்துக்கள் காமதேனுவை தெய்வமாக கருதி,வழிபடுகிறார்கள் .காமதேனு அள்ள  அள்ள தரக்கூடிய தெய்வம் .நான் கூட காமதேனுவை வழிபடுவதால் அதைப் பற்றி சொல்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.


கடவுள் பெருமையை சொல்வதும்,எழுதுவதும் ஒரு விதமான பக்தி ஆகும் .அந்த பக்தி 
என்றென்றும் எனக்கு கிடைக்க ஆண்டவனை  வேண்டுகிறேன் . 


  நன்றி !வணக்கம் .   

  

அடுத்த பதிவில் உங்கள் அன்பு தோழி ஈஸ்வரி  சரவணன்  










                   






















வெள்ளி, 7 ஆகஸ்ட், 2015

வலம்புரி சங்கு

வலம்புரி சங்குதொடர்புடைய படம்

அன்பார்ந்த தோழிகளே !

எல்லோருக்கும் வணக்கம் .இன்னிக்கு ஆடி வெள்ளிகிழமை என்பதால் பூஜைகள் எல்லாம்
பண்ணி இருப்பீர்கள் ?என்று நினைக்கிறேன்.இன்னிக்கு வலம்புரி சங்கை பற்றி பார்க்கலாம்.

கடலில் வாழும் உயிரினங்களில் கிளிஞ்சல் வகை புழுக்கள் தனக்கு பாதுகாப்பிற்காக கட்டிக் 
கொள்ளும் மேல் கவசம்தான் சங்குசிறியதாக குறுகியஅளவானவை பெண் சங்குகள்.


சற்று பருத்த திடசங்குகள் ஆண் சங்குகள்சங்குகளின்மேல் உள்ள வரிகளை (கோடுகள்)
வைத்து வலம்புரிச்சங்குஇடம்புரிச்சங்கு என்று கூறுவார்கள்ஒருசங்கின் சுருள் பகுதி 
அதனுடைய வாய் பகுதியில் ஆரம்பித்து சுருள் முனைக்கு வலது புறமாக சுற்றி வந்தால் அது 
வலம்புரிச்சங்கு எனப்படும்.



ஒரு சங்கின் சுருள் பகுதி அதன் வாய் பகுதியில் இருந்து இடதுபுறம் வந்தால் அது இடம்புரிசங்குவலம்புரிச் சங்குஇடம் புரிச்சங்கு அகியவற்றில் வலம்புரிச்சங்குதான் அபூர்வமானதும்சிறப்பானதும் ஆகும்இந்த வலம்புரிச்சங்கு பொங்கும் கடலில் இருந்து எடுக்கப்படுகிறதுஎனவே இதற்கு அரிய தெய்வீக சக்திஉண்டு.



தூய்மையான வெண்ணிறத்துடன் நீண்டு மூன்றில் ஒரு பங்கு நீளத்தில் வாலும்தலைப்பாகத்தில் 
ஏழு சுற்றும் அமைந்து சங்கின் சுற்றளவு அடிமுடி நீளத்திற்குசமமாக இருப்பது சிறப்பு நீளம் 
அதிகமாக இருந்தால் மிகச் சிறப்புஸ்ரீ மகாவிஷ்ணுவின் இடது கையில் உள்ளது வலம்புரிச்சங்கு.



இந்தச்சங்கை காதில் வைத்துக்கேட்டால் `ஓம்என்ற சப்தம் கேட்கும்வலம்புரிச்சங்கை வீட்டில்வியாபார இடங்களில் சுத்தமாக வைத்து பூஜை செய்தால்செல்வம் பெருகும் மற்றும் பலவித 
நன்மைகள் கிடைக்கும்மாமிசம் சாப்பிட்ட அன்றும்பெண்கள் மாதவிலக்கான நாட்களிலும் 
வலம்புரிச் சங்கைத்தொடக்கூடாது.


இந்துக்களின் பூஜை அறையில் இருக்கவேண்டியதில் ஒன்று வலம்புரி சங்கு .சங்கு மகாலக்ஷ்மி யின் அம்சம்  .பாற்கடலில் இருந்து தோன்றிய பொருள்களில் சங்கும் ஒன்று .சங்கையும் மகாலக்ஷ்மியையும் பெருமாள் எடுத்துக் கொண்டார் .சங்கை அரிசி பரப்பி அதன் மீது வைக்க வேண்டும் அல்லது பித்தாளை பலகையில் வைக்க வேண்டும் .வெறும் தரையில் வைக்க கூடாது.
தொடர்புடைய படம்

இல்லத்தில் சங்கை வைத்து வழிபட்டால் ஐஸ்வரியம் பெருகும்.குடும்பத்தில் மன அமைதி ,
மகிழ்ச்சி நிலவும். வியாபார ஸ்தலங்களில் வழிபட்டால் மேன்மை அடையும். பணப்புழக்கம் 
இருக்கும்.   


ஒரு வலம்புரி சங்கு கோடி இடம்புரி சங்கிற்கு  சமம் .சங்கில் வலம்புரி சங்கே  சிறப்பு மிக்கது.
வலம்புரி சங்கால்  அபிஷேகம் செய்தால் 10 மடங்கு பலன் கிடைக்கும் .


செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் சங்கில் பால் நிரப்பி ,செவ்வாய் கிரக பூஜை செய்தால் 
தோஷம் நீங்கி திருமணம் நடக்கும்.கடன் பிரச்சனை இருப்பவர்கள் குங்கும அர்ச்சனை செய்தால் 
கடன் விலகும் .பில்லி ,சூனியம் ,திருஷ்டி அண்டாது. 




தீர்த்தம் நிரப்பி சங்கில் துளசி இலை போட்டு அதை வெள்ளி கிழமை வீ ட்டில் தெளித்தால் 
வாஸ்து தோஷம் நீங்கும் .

சங்கு வடக்கு ,தெற்கு  பார்த்து இருக்கணும்.சங்கில் தண்ணீரோ ,அரிசியோ போட்டு வையுங்கள்.
sangu poojai க்கான பட முடிவு
கடன் தொல்லையிலிருந்து  மீண்டு வர 16  சங்கு கோலம் போட்டு  பவுர்ணமி இரவு குங்குமத்தால் அர்ச்சனை செய்து ,குளிகை காலத்தில் கடன் கொடுத்தவரை சந்தித்து சிறிதளவு பணத்தை திருப்பி கொடுத்தால் விரைவிலேயே முழு கடன் அடையும்.







கிராமங்களில் பெரும்பான்மையான வீடு வாசலில் சங்கை பூமிக்கு அடியிலும்  மீதி மேலேயும் 
தெரியும் படி பதிப்பர்.நான் கூட இதை பாத்திருக்கிறேன் . அது எதுக்கு  தெரியுமா ? .
வெளியில் இருந்து வரும் காற்று சங்கின் ஊது துவாரம் வழியாக சென்று சங்கின் உள்ளே 
கிருமிகள் அழிக்கப்பட்டு ,சுத்தமான காற்றாக வீட்டுக்குள்ளே வருகிறது .இதனால்தான் ,
சங்கை வீட்டு வாசலில் கட்டி தொங்க விடுகின்றன .


குழந்தைகளுக்கு சங்கில் பாலை ஊற்றி கொடுக்கும் பழக்கம் பழங்காலத்தில் இருந்தது.குழந்தைகளுக்கு இதில் பசும் பால் ஊற்றி வைத்துப் பாலாடையாகப் புகட்ட நல்ல 
ஆரோக்கியம் கிடைக்கும்வலம்புரிசங்கு இருக்கும் வீட்டில் துர்தேவதைகள்நெருங்காதுஇச்சங்கில் தண்ணீர் விட்டு பூஜை செய்து அதை அருந்தினால் வியாதிகள் குணமடையும்.

குழந்தை இல்லாதவர்கள் சங்கில் பால்,குங்குமப் பூ இட்டு சந்தான கணபதியை நினைத்து 
பூஜை செய்து 48 நாள் கணவருடன் சேர்ந்து அருந்தி வந்தால் பலன் கிடைக்கும்.

போருக்கு போகும் காலங்களிலும்,விழாக்களிலும் சங்கில் ஒளி எழுப்பி செல்வது வழக்கமாக கொண்டிருந்தது .சங்கின் ஒலி  மங்களத்தை கொடுக்கவல்லது .

போருக்கு செல்வதை வலியுறுத்தும் படி,அர்சுனனும் ,கிருஷ்ணனும் சங்கொலி எழுப்பி சென்றன.

சங்கு  மந்திரம் 

பாஞ்ச ஜன்யாய வித்மஹே 
சங்க ராஜாய தீமஹி 
தந்நோ சங்க பிரசோதயாத் 

இந்த மந்திரத்தை சொல்லி சங்கை வழிபட குபேரனது அருளும் ,லக்ஷ்மியின் ஆசீர்வாதமும் 
கிடைக்கும் .

சங்கு இருக்கும் வீட்டில் தீய சக்திகள்  வராமல் நல்லவைகள் நம்மை வந்து சேரும் . 

என் பதிவை அதிகம் பேர் பார்த்திருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது .என் பணி மேலும் மேலும் தொடர ,பதிவைப் பார்க்கும் என்  இனிய நண்பர்கள் எனக்கு கமெண்ட்ஸ் கொடுத்தால் பல புதிய தலைப்புடன் ஆன்மீகத்தைப்  பற்றி  எழுத ஊக்கமளிப்பதாக இருக்கும்.

மீண்டும் அடுத்த பதிவில் 

உங்கள் அன்பு தோழி 
ஈஸ்வரி 




புதன், 5 ஆகஸ்ட், 2015

சத்குரு சாய் பாபா


இன்னிக்கு வியாழக் கிழமை.நாம்   எல்லோரும்  தினமும் சாமி கும்பிடுகிறோம் .ஆனால்
ஒவ்வொரு நாளுக்குரிய தெய்வத்தை வணங்கினால்,அந்த தெய்வம் நமக்கு கேட்டதெல்லாம் 
கொடுக்கும் .இதில் ஒன்றும் சந்தேகமே இல்லை .

அதன்படி ,நாம் கடவுளுக்கு அடுத்ததாக மகான்களை வழிபடுவது நல்லது .என்னுடைய குரு ,
மகான் எல்லாம் ஷீரடி சாய் பாபாவும்,பெரியவா தான் .ஏற்கனவே, நான் பெரியவாப்  பற்றி 
என்னுடைய பதிவில் எழுதி இருக்கேன்.

நான்  சாய் பாபா உடைய தீவிர டிவோடீஸ்  என்பதால் அவரைப்  பற்றி கேட்டாலும் இன்பம் படித்தாலும் இன்பம் .நான் அவரைப் பற்றி எழுதுவதே !எனக்குள் ஒரு பேரின்பத்தை கொடுக்கிறது .
பாபா என்  வாழ்க்கையை வழி  நடத்தி செல்கிறார் .என் அனுபவத்தில் நிறைய உதவிகளை
செய்திருக்கிறார் .பாபாவின் புகழை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது .


சாதாரணமாக ,நம் பாபா யார் மனத்திலும் வர மாட்டார் .அப்பிடி வந்தார்  என்றால் அது நாம் செய்த பாக்கியம் எனலாம் .அந்த பாக்கியம் இந்த பதிவை நீங்கள் படிப்பதன் முலம் உங்களுக்கும்
சாய்  பாபாவின் அனுக்கிரகம் கிடைத்திருக்கிறது .சரி பாபாவைப் பற்றி பார்ப்போம் .


சாய் பாபா எளிமையானவர்.அவருடைய  பேச்சு சூத்திரங்களை போன்றது ,அர்த்தமோ  கம்பீரமானது.அவர் பேச்சு சுருக்கமானது .ஏழை ,பணக்காரர் ,தாழ்ந்தவர்,உயர்ந்தவர் என்ற பேதமின்றி நம்மை நல்வழி காட்டுபவர் சற்குரு சாய்நாதர்.பாபா கருணைக்கடல்.

அவர் நடத்தி காட்டிய அற்புதங்கள் கணக்கிட முடியாது.எண்ணெய்  இல்லாமல் விளக்கெரிய வைத்த அதிசயம் .

பாபா குழந்தைகளுடன் அன்பாக இருப்பார் .அவரை மக்கள் பாட்டு பாடியும், ஆடியும்
சந்தோசப்படுத்தினர்.பாபாவும் அவர்களுடன் சந்தோசமாக ஆடுவார் .








பாபா ஒரு வார்த்தை சொன்னால் ,அவருக்கு சாப்பாடு கொடுக்க நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் பாபா அவருக்காக ஒவ்வொரு வீடாக பிச்சை எடுத்து மற்ற உயிரினங்களான  நாய்,பூனை ,
ஆடு,மாடு போன்றவைக்கு உணவு அளித்தார்.




செடிகளும் ஒரு உ யிர் தான் என அவர் நிறைய செடிகளை தண்ணீர் ஊற்றி வளர்த்தார் .





உயிரினங்கள் அனைத்தும் என்னுள் அடக்கம் . எல்லாப்  படைப்புகளிலும் பாபா இருக்கிறார் என்று உணர்ந்து அன்பு காட்ட வேண்டும்.என்னுடைய பக்தர் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் சரி .சிட்டுக்குருவியின் காலில் நூல் கட்டி இழுப்பது போல் என்னிடம் கொண்டு வந்து சேர்ப்பேன்
என்று பாபா கூறுகிறார்.

இறைவனின் தூதுவன் நம் பாபா .இறைவனின் தூதுவர்களுக்கே மகிமை .இறைவன் அடியவர்களை
சித்தர்கள்,ஞானிகள் ,மகான்கள்  என்று நாம் போற்றி வருகிறோம்.இறைவனின் அன்பை அவர்களே
நேரடியாக முதலில்  பெற்றவர்கள்.அவர்களை மதித்து நடப்பது அவசியம் .நம் மகான்
பாபாவும் அப்படித்தான் .

நம்முடைய பாவங்களை பாபாவின் காலடியில் தானம் ,பொருள் மூலமாக கொடுக்கிறோம்.அவர்
அதை ஏற்று ,நமக்கு நன்மை செய்கிறார்.

பாபாவிடம் நம்பிக்கையுடனும் ,பொறுமையுடனும் வேண்டினால் நினைத்த காரியம் நடக்கும்.நாம்
எல்லாம் அவருடைய செல்ல பிள்ளைகள்.பாபாவை வணங்கி பலன் பெற உங்கள் எல்லோரையும்
அன்புடன் அழைக்கிறேன்.


ஓம் சாயீ நமோ நம !சற்குரு சாயீ  நமோ நம !


இந்த எளிய மந்திரத்தை சொல்லி ,அனைவருக்கும்  பாபாவின் அருள் கிடைக்க வேண்டுகிறேன். 


உங்கள் தோழி ஈஸ்வரி 









செவ்வாய், 4 ஆகஸ்ட், 2015

புதன் பகவான்

புதன் பகவான்









ஹாய் பிரண்ட்ஸ்,

வணக்கம்.கர்ம வினையினால் நமக்கு நல்லது ,கேட்டது நடக்கிறது.அதன்படி ,நவகிரகங்கள்
நமக்கு நல்லதையும் ,கஷ்டத்தையும் கொடுத்து அருள்கின்றன .9 கிரகங்களும் அவரவர்
வேலைகளை செய்து வருகின்றன .நமக்கு வரும் நல்லவைகளுக்கு கடவுளுக்கு நன்றி சொல்வோம் .கஷ்டங்களில் இருந்து விடுபட ,அந்தந்த நவகிரகங்களுக்கு விரதம் இருப்போம் .

ஒவ்வொரு நாளுக்குரிய நவக்கிரகங்களை வேண்டி ,நமக்கு நன்மை பெறுவோம் .

இன்னிக்கு புதன் கிழமை .ஆதலால்  , புதன் பகவானை நாம் சேர்ந்து வழிபடலாம் .வாருங்கள் !


கல்வி தரும் புதன் பகவான்



புதன் பகவான்  விரதம் இருந்தால் கல்வி ,ஞானம் ,தனம் போன்றவை பெருகும் என்பதால்
சிறுவர் ,பெண்கள் ,ஆண்கள் யார் வேண்டுமானாலும் இதை அனுசரிக்கலாம்.

புதன் பகவானுக்கு "சவும்யன்" என்ற பெயர் உண்டு .புதனை வழிபட்டால் அகங்காரம் அழியும்.
அமைதி கிடைக்கும் .


புதனின் அம்சம்



நிறம் ----பச்சை

தானியம் ---பச்சை பயறு

நவரத்தினம் ----மரகதம்

உலோகம் ----பித்தளை

பருவம்---இலையுதிர் காலம்

பஞ்ச பூதம் ----நிலம்



புதன் கிழமை அன்று நாராயணை வழிபட்டு பின்னர் நவக்கிரங்களை வணங்கி ,பின் புதன் பகவான்
முன் நின்று வழிபட வேண்டும் .இப்படி செய்தால் சகல சிறப்புகளையும் அடையலாம் .


பூஜையறையில் 5 அகல் தீபம் ஏற்றி ,இஷ்ட தெய்வத்தை வணங்க ,பெருமாளை வழிபடவும் .



புதன் கிழமை பச்சை பயறு வேக வைத்து பசு மாட்டுக்கு கொடுக்கலாம் .

புதன் பகவான் ஸ்லோகம்

இதமுற வாழ இன்னல்கள் நீக்குபுத பகவானே பொன்னடி போற்றிபதந் தத்தாள்வாய் பன்னொலியானேஉதவியே யருளும் உத்தமா போற்றி

புதன் காயத்ரி மந்திரம்

ஓம்  கஜத்துவ ஜாய  வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி
தன்னோ புத : பிரசோதயாத்

இந்த பாடலை பாடி புதன் அருளை பெற உங்க எல்லோருக்காகவும் பிராத்திக்கிறேன்.





நாளை இன்னுமொரு பதிவில்


உங்கள் ஈஸ்வரி














விபூதி

அன்பார்ந்த தோழிகளுக்கு ,

                  என்னுடைய பதிவை  தொடர்ந்து பார்க்கும் அன்பு நெஞ்சங்களுக்கு  என்  அன்பார்ந்த 
வணக்கங்கள். நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்துக்கும் அர்த்தம் இருக்கிறது .அது போல் ஆன்மீகத்தில் இருக்கும் அனைவரும் ஒவ்வொரு சம்பிராதயமும் ஏன் செய்கிறார்கள் ? என்பதை 
தெரிந்து செய்தால் நாம் சீக்கிரமாக கடவுள் அருகில் செல்ல முடியும் .


 விபூதி


















 .விபூதிக்கு திருநீறு என்ற பெயர் உண்டு .விபூதி சைவர்களது புனித அடையாள சின்னம் ."எவராக இருந்தாலும் இந்த உடல் ஒரு நாள் மரணத்திற்கு பிறகு, இறுதியில் தீயில்  வெந்து பிடி சாம்பலாக போகிறது "என்ற தத்துவத்தை உணர்த்துகிறது .ஆகையால் ,தூய்மையான அறநெறியில்இறை சிந்தனையோடு வாழ வேண்டும்.


பசுவின் சாணத்திலிருந்து சுட்டு தயாரிக்கப்படுவது திருநீறு .விபூதி அணியாமல் செய்யும் சிவபூஜை ,
ஜெபம்,பிதுர் கர்மம் ,தேவர்களின் யாகம் முழுமை அடையாது .


ஸ்ரீ மகா லக்ஷ்மிக்கு உகந்தது விபூதி . திரு என்றால் மகா லக்ஷ்மி .விபூதியை திருநீறு என்று  அழைக்கிறார்கள் .

விபூதியை எந்த திசை பார்த்து பூச  வேண்டும் ?


'நீரில்லா நெற்றி பாழ் 'என்பது நாம் எல்லோரும் அறிந்ததே.

சைவர் திருநீறும் ,வைணவர்கள் திருமண்ணும் அவசியம் நெற்றியில்  அணிதல் வேண்டும் .

வடக்கு  திசை ,கிழக்கு திசை நோக்கி நின்று கீழே சிந்தாமல் ,மூன்று விரல்களால் (நடு விரல் ,
மோதிர விரல் ,ஆள் காட்டி விரல் )பூச  வேண்டும் . விபூதி நிலத்தில் சிந்துவது பாவம்.
 பூசும் போது திருசிற்றம்பலம் ,சிவாய நம  அல்லது சிவ சிவ என்றும் உதடு பிரியாமல் மனம் ஒன்றி சொல்ல வேண்டும் .


திருமணமாகாத பெண்கள் விபூதி பிரசாதத்தை கழுத்தில் பூச வேண்டும்.இதனால் கழுத்தில் மாங்கல்யம் அணியும் பாக்கியம் ஏற்படும் .





எப்போது விபூதி பூசலாம் ?


        காலை, மாலை ,பூசைக்கு முன்னும் ,பின்னும் ,ஆலயம் செல்வதற்கு முன் ,இரவில்
உறங்க போவதற்கு முன் ,விபூதி தரிக்க வேண்டும் .

மூன்று படுக்கை வசக் கோடு  பூசுவதை "திரிபுண்டரம் "எனப்படும் .



இன்னும் விபூதியின் மகிமையை அறிய  ஒரு
சின்ன கதை இதோ!

'பர்னாதன்' என்ற சிவபக்தன் இருந்தான் .உணவு,தண்ணீர்  மறந்து சிவனை நினைத்து ,கடும்தவம் இருந்தான் .ஒரு நாள் ,அவனுக்கு கடுமையான பசி ஏற்பட்டது.தவத்தை கலைத்துகண் திறந்து பார்த்தான் .அவனைச்  சுற்றிசிங்கங்களும்,புலிகளும் ,பறவைகளும் என பல உயிரினங்களும் காவலுக்கு இருந்தன .
பறவைகள் பழங்களை பறித்து கொண்டு வந்து ,அவன் முன் வைத்தது. பசி தீர சாப்பிட்டான்.மீண்டும் தவம் செய்ய துவங்கினான் . பலவருடங்கள் கடந்தோடியது.தவம் முடிந்து ,சிவ வழிபாட்டை தொடங்கினான்.
ஒரு நாள்,தர்பை புல்லை அறுக்கும் போது  அவன் கையில் கத்திபட்டு ரத்தம் கொட்டியது.
அவன் பதற்றம் இல்லாமல் இருந்தான்.ஆனால் அவனை என்றும் காத்து அருளும் ஈசனின் மனம் பதறியது.

சிவபெருமான் வேடன் உருவில் பர்னாதனின்
கையைப் பிடித்து பார்த்தார்.என்ன ஆச்சரியம் !ரத்தம் கொட்டிய இடத்தில் விபூதி கொட்ட ஆரம்பித்தது.வந்தது தாய்மானவர் என்பதை அவன் அறிந்தான் .



ரத்தத்தை நிறுத்தியது யார்?என்பதை அறிவேன் .சுவாமி !'உங்கள் சுய ரூபத்தை எனக்கு காட்டுங்கள் 'என்று பர்னாதன் வேண்டினான்.ஈசனும் காட்சி கொடுத்தார்.
"உனக்காகவே சாம்பல்லை உருவாக்கினேன் .அதனால் இந்த சாம்பல் இன்று முதல் விபூதி என 
அழைக்கப்படட்டும் ".உன் நல் தவத்தால் விபூதி உருவானது 


.அக்னியை யாரும் நெருங்க முடியாதது போல இதை பூசுபவர்களை  துஷ்ட சக்தி நெருங்காது .விபூதி என் ரூபம் என்று கூறி அவனுக்கு ஆசி வழங்கினார்.



               விபூதி பிள்ளையார்






















இங்கே இருக்குற படம் மதுரையில் உள்ள மீனாக்ஷி அம்மன் கோவிலில் அமைத்துள்ள விபூதி பிள்ளையார் . இந்த  பிள்ளையாருக்கு நம் கையால்  விபூதி அபிஷேகம் செய்தால் செல்வம் சேரும் .இவரை வணங்கினால் ,வாழும்  காலத்தில்பொருளும் ,பிறவா நிலையும் கிடைக்கும் என்பது
பக்தர்களது நம்பிக்கை .நீங்களும் மீனாக்ஷி அம்மன் கோவிலுக்கு போனால்  பிள்ளையாரை தரிசனம் பண்ணுங்கள் .

விபூதியால் என்ன நன்மை ? என்று ராமன் அகத்தியரிடம் கேட்டார்.



பகை ,தீராத வியாதி ,மனநல பாதிப்பு ,செய் வினை பாதிப்பு உள்ளவர்கள் தொடர்ந்து பூசினால்
அனைத்தும் விலகும் என்று உபதேசம் செய்தார்.

என்ன பிரண்ட்ஸ்,

இனிமேல்,  விபூதி பூசும் போது அதன் பொருள் அறிந்து பூசுவீர்கள் !என்று நினைக்கிறேன். என்
பதிவு நிறைய பேர்களுக்கு ஆன்மீகச்  சிந்தனையை தூண்டும் என எண்ணி ,இந்த பதிவை முடிக்கிறேன்.

சர்வமும் சிவமயம் !  சகலமும் சிவனருள் !நடப்பதெல்லாம் ஈசன் செயல்!




அன்பு தோழி ஈஸ்வரி

திங்கள், 3 ஆகஸ்ட், 2015

ஆடி 18 ம் பெருக்கு

ஆடி 18 ம் பெருக்கு


ஹலோ ப்ரண்ட்ஸ் 

இனிய காலை வணக்கம்.ஆடி மாதம் என்றாலே  அம்மனுக்கு திருவிழாதான்.இன்னிக்கு 18ம் பெருக்கு .ஆடி 
பெருக்கு காவேரி ஆற்றை சம்பந்தப்படுத்தி தான் ஆரம்பித்தது .

முன்னொரு காலத்தில் காவேரி 
ஆறு பெருக்கெடுத்து ஓடியது. தமிழ் நாட்டில்  காவேரி ,பெண்ணை ,பொருணை நதி ஓடுகிறது.
18 படித்துறைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் ஆடி பெருக்கு எனப் பெயர் வந்தது.


காவேரி ஆறு தென்னிந்தியாவில் புண்ணிய நதிகளில் ஒன்றாகும் .ஸ்ரீ ரங்கம் கோவிலில் அம்மா மண்டபத்தில் பெருமாள் காவேரிக்கு சீர் வரிசை அளிக்கும் காட்சியை  கண்டால் , கோடி புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம் .



பயிர் செழிக்க வளம் அருளும் அன்னை காவேரிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஆற்றங்கரையிலும்
நதி கரையிலும்  ஆடி பெருக்கை மக்கள் கொண்டாடுகிறார்கள் .இது கிராமப்புறங்களில் மிகச்
சிறப்பாக கொண்டாடப்படுகிறது .

பழங்காலத்தில்  காவேரி ஆற்றில் தண்ணீர் பிரச்சனை இல்லாத காலம் அது .

மக்கள் காலையில்  எண்ணெய் குளியல் செய்து ,புத்தாடையுடுத்தி மாலை ஆற்றங்கரைக்கு குடும்பத்துடன் சென்று ,ஓடிவரும் காவேரி அன்னைக்கு பூஜை செய்வர்.பின் தம்முடன் கொண்டு வந்துள்ள சித்ரன்னங்களான

புளியோதரை ,மாங்காய் சாதம் ,எலுமிச்சை சாதம்,தயிர் சாதம் ,மற்றும் சர்க்கரை சாதம் முதலியவை அன்னைக்கு நிவேதம் செய்து நண்பர்களுடன் பகிர்ந்து உண்பர் .



ஒரு முறத்தில் வெற்றிலை ,பாக்கு ,தேங்காய் ,பழம் ,பூ ,ரவிக்கைத் துணி ,காதோலை ,கருகமணி ,திருமாங்கல்யச் சரடு என்று ஒரு பெண் விரும்பி ஏற்கும் அனைத்தையும் வைத்து ,மற்றொரு முறத்தால் மூடி எடுத்து செல்வர்.


ஆற்றங்கரையில் இவற்றை வைத்து தேங்காய் உடைத்து ,கற்பூரம் ஏற்றி வணங்குவர் .தீபங்களை ஒரு வாழை மட்டையில் வைத்து முறத்துடன் ஆற்றில் மிதக்க விடுவர்.





இன்றைய நாட்களில் ஆடிப்பெருக்கு அன்று புதிதாக திருமணமான தம்பதிகள் தங்கள் திருமாங்கல்யத்தை மாற்றி கொள்ளும் தினமாக அனுஷ்டிக்கின்றனர் .பழைய திருமாங்கல்யத்தை எடுத்து விட்டு புது மாங்கல்யத்தை அணிகின்றனர் .

 இப்போது ஆற்றில் தண்ணீர் இல்லாததால் நகர் புறத்தில் உள்ளவர்கள் தங்கள் வீடுகளில் உள்ள
குழாய்களில் பூஜை செய்து வழிபடுகிறார்கள்.

ஆடி பெருக்கில்  ஆரம்பிக்கப்படும் எந்த ஒரு நல்ல காரியமும் பல மடங்கு பெருகும் என்பது ஐதீகம் கணவனின் நலனுக்காகவும் ,கன்னி பெண்களுக்கு சீக்கிரமே நல்ல கணவர் கிடைக்கவும் இன்று பூஜை செய்து வழிபடுகிறார்கள் .


என்ன தோழிகளே !சந்தோசமா ஆடி 18ம் பெருக்கை கொண்டாடுங்க .நாளை இன்னொரு பதிவில் சந்திக்கிறேன்.

நன்றி .
வணக்கம் .
`உங்கள் அன்பு தோழி   ஈஸ்வரி








ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

எந்த தெய்வத்தை வணங்கலாம்

ஹலோ நண்பர்களே
 
           எல்லோருக்கும் வணக்கம்.சாமியை வணங்குவதற்கு வயது வரம்பு கிடையாது .நம்
வீட்டு குழந்தைகளுக்கு சாமி கும்பிட சொல்லி கொடுங்கள்  .சாமி கும்பிட்டால்
நன்மைதான் வருமே ஒழிய தீமை ஒரு போதும் வராது .எனவே இந்த சின்னஞ்சிறு வயதிலே சாமி கும்பிட எல்லா பெற்றோரும்  சொல்லி கொடுங்கள் .



அதிகாலையில் குளித்து விட்டு ,தலைவாரி சாமியை கும்பிட்டால் அஷ்ட ஐஸ்வரியமும்  கிடைக்கும் .
பண்டிகைகாலங்களில் நம் வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் அதிகாலையில் எழுந்து குளித்து
புத்தாடை உடுத்தி ,சாமி கும்பிடும் அழகைப் பார்க்கவே இரண்டு கண் பத்தாது .






 எந்த காரியம் நடக்க எந்த தெய்வத்தை வணங்கலாம் ?


இடையூறுகள்  நீங்க ,வெற்றி உண்டாக விநாயகரை வழிபட வேண்டும் .

செல்வம் சேர ஸ்ரீ மகா லக்ஷ்மி ,ஸ்ரீ லக்ஷ்மி நாராயணரை  வழிபடவும் .

நோய் தீர ஸ்ரீ தட்சணா மூர்த்தியை வழிபடலாம் .

ஆயுள்  ஆரோக்கியம் பெற சிவனை வழிபடவும்.

நல் புத்தி ,நல் பலம் ,பதவி ,கணவன் மனைவி ஒன்று சேர  ஸ்ரீ ஆஞ்சநேயரை வழிபட வேண்டும்.

மாங்கல்யம் நிலைக்க மங்கள கௌரியை வழிபடுங்கள் .

புத்திர பாக்கியம் பெற சந்தான லக்ஷ்மியையும் ,சந்தான கிருஷ்ணனையும் வழிபட்டு வாருங்கள் .

உணவு கஷ்டம் நீங்க ஸ்ரீ அன்ன பூரணியை வழிபட  வேண்டும்.

தொழில் சிறந்து லாபம் பெற திருப்பதி வெங்கடாசலபதியை வணங்குங்கள் .

திருமணம் நடை பெற தூர்க்கை,ஸ்ரீ காமாட்ஷி அம்மனை வணங்கவும் .

புதிய தொழில் துவங்க ஸ்ரீ கஜ லக்ஷ்மியையும்,பகைவர் தொல்லை அகல திருச்செந்தூர் முருகனையும் , ஞானமும் ,சக்தியும் பெற சிவனை வழிபடவும் .

தோழிகளே! உங்கள்  பிள்ளைகளுக்கு இந்த சின்ன வயதிலேயே ,சாமி கும்பிட பழக்கப்படுத்தி விட்டால் ,அவர்களுக்கு  வாழ்க்கையில் நம்பிக்கை என்னும் வேர் அவர்கள் மனத்தில் நிலைத்து
இருக்கும் .


இனி நாளை அடுத்த பதிவில் சந்திப்போம்.
 உங்கள்  தோழி ஈஸ்வரி