நந்தியை எத்தனை முறை பிரதட்சணம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும்
சிவாலயங்களில் ஈசனை தரிசனம் செய்யும் முன்பு நந்திதேவரை வணங்கி அவர் அனுமதியுடன் பெருமானை தரிசனம் செய்வது நம் வழக்கம். மேலும் பிரதோஷ காலத்தில், நந்தி எம்பெருமானுக்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இத்தகைய நந்திதேவரை வணங்குவதும், அவரை பிரதட்சணம் செய்வதும் எண்ணிலா நற்பலன்களைக் கொடுக்க வல்லது.
3 முறை பிரதட்சணம் செய்தால் - நாம் விரும்பும் இஷ்ட சித்தி கிடைக்கும்.
5முறை பிரதட்சணம் செய்தால் - எடுத்த காரியத்தில் ஜெயம் கிடைக்கும்.
7 முறை பிரதட்சணம் செய்தால் - அனைவரும் போற்றக் கூடிய சற்குணங்கள் கிடைக்கும்.
9 முறை பிரதட்சணம் செய்தால் - உலகம் மெச்சும் புத்திரப் பிராப்தம் கிடைக்கும்.
11 முறை பிரதட்சணம் செய்தால் - நோய் நொடி இல்லாத ஆயுள் விருத்தி கிடைக்கும்.
13 முறை பிரதட்சணம் செய்தால் - எண்ணிய பிரார்த்தனை சித்தி அடையும்.
15 முறை பிரதட்சணம் செய்தால் - கணக்கில்லா தனப்பிராப்தி கிடைக்கும்.
17 முறை பிரதட்சணம் செய்தால் - கிடைத்த தனம் விருத்தி அடையும்.
108 முறை பிரதட்சணம் செய்தால் - அஸ்வமேதயாகம் செய்த பலன் கிடைக்கும்.
1008 முறை பிரதட்சணம் செய்தால் - ஒரு வருட தீட்சையாகப் பலன் கிடைக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக