நம்முடைய அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க கூடிய விஷயங்கள் ஒவ்வொன்றும் அறிவியல் ரீதியாக ஏற்பட்டவையே.யாரும் சும்மா சொன்னால் கேக்க மாட்டார்கள்..அதே விஷயத்தை ஆன்மீகத்தின் அடிப்படையில் சொல்லும்போது மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.இங்கே காரணங்கள் என்ன என்பதைப் பற்றி பார்ப்போம்.
விரத நாட்களில் எண்ணெய் குளியல் கூடாது ஏன் ?
விரதத்திற்கு முதல் நாள் எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு விரத நாட்களில் வெறும் தலைக்கு குளிக்கலாம் என்றனர். எண்ணெய்க் குளியல் நம்மைச் சுற்றிலும் ஓர் புகை வளையத்தை ஏற்படுத்துவதாக சமீபகால அறிவியல் தெரிவிக்கின்றது. இதை நமது முன்னோர்கள் பழங்காலந்தொட்டே அறிந்துள்ளனர்.
குளித்ததும் முதலில் முதுகைத் துடைப்பது ஏன்?
குளிக்கும்போது உடலின் எல்லாப் பாகங்களிலும் குளிர் பரவினாலும் மிக அதிகமான குளிர் அனுபவப்படுவது முதுகில்தான். முதுகெலும்பில் ஆழ்உணர்வு பாதிக்குமளவு குளிர் பரவி விட்டால் நோய்வாய்ப்பட நேரும். குளத்திலோ, ஆற்றிலோ குளிப்பவர்கள் முதலில் முதுகு குளிர்வதை உணர்வர். எனவே நம் பெரியவர்கள், 'முதுகில் மூதேவி வருவதற்குள் முதலில் துடை' என்ற மரபினை வைத்தனர்.
நெற்றியில் இரு புருவங்களுக்கிடையே உள்ள மத்திய பாகம் ஆக்கினை (ஆக்ஞா சக்கரம்) முக்கியமான நரம்பு புள்ளியாகும். இது மனித உடலின் ஐந்தாவது திறன் மையம். இங்கே குங்குமப் பொட்டு வைப்பதால் உடலிலிருந்து சக்தி வெளியேறுவது தடுக்கப்படுகிறது. மனம் ஒருநிலைப்படுகிறது. நெற்றியில் பொட்டு வைத்தவர்களை ஹிப்னாடிசம் செய்ய முடியாது. நமது சமயச் சின்னங்களான விபூதி, திருமண், சந்தனம், குங்குமம் இவற்றை நெற்றியில் தரித்து நாம் நலம் பெறுவோம்.
ஆக விதிகளின்படி மணி ஓசை கெட்ட சக்திகளை விரட்டுவதாகும். கடவுளின் பூஜைக்கான நேரம் என அறிவுறுத்துவதாகும். விஞ்ஞான ரீதியாகப் பார்த்தால் பல்வேறு மன ஓட்டத்தில் இருந்து நம்மை விடுவித்து இறைசிந்தனையில் ஆழ்த்துகிறது மணியோசை. மேலும் மணியோசை நமது வலது மற்றும் இடதுபக்க மூளைக்குச் சமமாகச் செல்கிறது. மணியை அடித்த பின் அதன் ரீங்காரம் ஏழு நொடிகளில் உடலிலுள்ள சப்தநாடிகளையும் சென்றடைந்து அவைகளை விழித்தெழச் செய்கிறது.
வடக்கே தலை வைத்துப் படுத்தல் கூடாது ஏன்?
வாராத வாழ்வு வந்தாலும் வடக்கே
தலைவைத்துப் படுக்காதே
என்பது பழமொழி.
அறிவியல் காரணம் நமது உடலில் ஒரு காந்த சக்தி இருக்கிறது. வடக்கு தெற்காக பூமியின் காந்தப்புலம் உள்ளது. நாம் வடக்கே தலைவைத்துப் படுக்கும் போது, நமது காந்த சக்தியும், பூமியின் காந்த சக்தியும் சம அமைப்போடு இருப்பதில்லை. மாறுபாடு ஏற்படுவதால் உடல்நிலை பாதிப்படைகிறது. உடலில் உள்ள இரும்புச் சத்து காந்த சக்தியால் ஈர்க்கப்பட்டு மூளைக்குச் செல்வதால் தலைவலி, ஞாபகமறதி, மூளைச் சிதைவு போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
திருமணமான பெண்கள் காலில் வெள்ளியாலான மெட்டி அணிவது நம் பண்பாடு. இதன் பின்னுள்ள அறிவியல் விளக்கம் யாதெனில், கட்டை விரலுக்கு அடுத்துள்ள விரலில் மெட்டி அணிவதால் கருப்பை பலமடைகிறது. இதயம் பலமடைகிறது. மாதவிலக்குச் சீராகிறது. வௌ்ளி ஒரு மின்கடத்தி என்பதால் பூமியிலிருந்து சக்தியை எடுத்து உடலுக்குக் கடத்துகிறது.
பெண்கள் தம் மனம்கவர் மணாளன் கட்டிய தாலியை இதயத்திற்கு அருகிலேயே வைத்திருப்பதால் இதய நோய் ஏற்படும் அபாயம் குறைகிறது.
தெய்வங்களை வணங்கும்போது தலைக்கு மேலே கைகூப்பி வணங்க வேண்டும். பின்னர் இதயத்திற்கு நேராகக் கைகூப்பி வணங்க வேண்டும். குருவை வணங்கும்போது நெற்றிக்கு நேரே கைகூப்பி வணங்க வேண்டும். அன்னையை வயிற்றுக்கு நேராக கைகூப்பி வணங்க வேண்டும். நமக்குச் சமமானவர்களை, கூப்பிய கைகளின் விரல்களை அவர்களுக்கெதிரே நீட்டி வணங்க சொல்ல வேண்டும்.
கடவுளை வணங்கும்போது இரு கரங்களை இணைத்துக் குவித்து வணங்குவதால் விரல்நுனிகள் ஒன்றோடொன்று இணைகின்றன. இந்த அழுத்தம் கண்கள், காது மற்றும் மூளைக்குச் செல்கிறது. தீபாராதனையின் போது கடவுள் சிலையிலிருந்து வெளிப்படும் பஞ்சபூத சக்தி நம் ஐந்து விரல்கள் வழியாக நம் உடலுக்குள் ஊடுருவி ஆரோக்கியத்தையும், நிம்மதியையும் நமக்கத் தருகிறது.
மனித உடலில் மிகக் கூடுதல் உறிஞ்சும் சக்தியுடைய பகுதி காதுக்குப் பின்புறம்தான். துளசியைக் காதுக்குப் பின்புறம் வைக்கும்பொழுது துளசி இலையில் உள்ள மருத்துவக் குணங்கள் முழுமையாக உறிஞ்சப்பட்டு உள் செல்வதால், தலையில் நீர் கோர்க்காமல் துளசியின் இதமான சூடு நம்மைக் காக்கிறது. இதனால் மூளை மண்டலமும் பலம் பெறுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக