என் இணையத்தளத்தை காண வந்த அத்தனை நெஞ்சங்களுக்கும் என் அன்பு வணக்கங்கள்.வரலக்ஷ்மி விரதத்தை சிறப்பாக கொண்டாடிய சந்தோஷத்துடன் இந்த பதிவை எழுதுகிறேன்.
இன்று விநாயகர் சதுர்த்தி என்பதால் விநாயகருக்கு எந்த பூவினால் அர்ச்சனை செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை இங்கு தந்துள்ளேன்.படித்து பயன் பெற முழுமுதல் கடவுளை வேண்டுகிறேன்.
1. அருகம்புல் - சகல பாக்யங்களும் பெற
2. வில்வம் - இன்பம் அடைய
3. அரசு - உயர் பதவி கௌரவம் அடைய
4. மாவிலை - அறம், நீதி காக்க
5. துளசி - கூர்மையான அறிவினை பெற
6. மாதுளை - பெரும் புகழ் அடைய
7. அரளி - எடுக்கும் காரியங்கள் வெற்றி பெற
8. நாயுருவி - வசீகரம் உண்டாக
9. கண்டங்கத்திரி - வீரம் உண்டாக
10. தவனம் - திருமண தடை விலகி நல்வாழ்வு கிட்ட
11. மரிக்கொழுந்து - இல்லற சுகம் பெற
12. ஜாதி மல்லி - சொந்த வீடு பூமி பாக்கியம் பெற
13. நெல்லி - செல்வ செழிப்பு உண்டாக
14. இலந்தை - கல்வி ஞானம் பெற
15. ஊமத்தை - பெருந்தன்மை உயர
16. தேவதாரு - எதையும் தாங்கும் வலிமை பெற
17. கரிசலாங்கன்னி - வாழ்க்கைக்கு தேவையான பொருள் கிடைக்க
18. எருக்கு - வம்ச விருத்தி அடைய
19. மருதம் - குழந்தை பேறு அடைய
20. அகத்திக்கீரை - கடன் தொல்லையில் இருந்து விடுபட
21. வன்னி - இந்த பிறப்பிலும் அடுத்த பிறப்பிலும் நன்மை அடைய
விநாயக பெருமானுக்கு இந்த 21 விதமான அர்ச்சனையும் செய்து வந்தால் நம்வினைகள் எல்லாம் நீங்கி நல்வாழ்வு பெறலாம்.
விநாயகர் சதுர்த்தி அன்று மட்டும் அர்ச்சனைக்கு துளசி பயன்படுத்தலாம். மற்றநாட்களில் விநாயகர் பூஜையில் துளசி பயன்படுத்தக் கூடாது.

இந்த பதிவை உங்களுடன் பகிர்ந்து கொண்ட மகிழ்ச்சியில் இந்த பதிவை முடிக்கிறேன்.சந்தோஷமாக விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுங்கள்.
நீங்களும் சந்தோஷமாக இருங்கள்.உங்களை குடும்பத்தினரையும் சந்தோஷபடுத்துங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக