சனி, 14 ஜூலை, 2018

பங்குனி மாத சௌபாக்கிய கௌரி விரதம்

பங்குனி மாத சௌபாக்கிய கௌரி விரதம்

பங்குனி மாத சௌபாக்கிய கௌரி விரதம்

வியாழன், 12 ஜூலை, 2018

குலதெய்வத்தை எப்படி வழிபட வேண்டும்?

Image may contain: 1 person
அன்பார்ந்த ஆன்மீக நண்பர்களுக்கு என் இனிய வணக்கங்கள்.என்னுடைய blog யை நிறைய பேர் பார்த்து உங்கள் கருத்தையும் சொல்லுவது மிகவும் சந்தோசமான விஷயம்.அதே போல் என்னுடைய you  tube சேனல் tamilnattu சமையல் channal லையும் பார்த்து உங்கள் கருத்தை தெரிவியுங்கள்.அதில் ஆன்மீக விஷயங்களையும் போட்டுள்ளேன்.LIKE கொடுத்து   subcribe பண்ணி, தொடர்ந்து பார்த்து உங்கள் கருத்தை தெரிவிக்கவும்.

ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை கட்டும் முறையும்,வழிபாடும்Tamilnattu Samayal

Published on Jul 11, 2018
இந்த பதிவை ஒரு தோழி கேட்டதால் உங்களிடம் SHARE பண்ணுகிறேன் .படித்து பயன் பெறுங்கள்.
குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்துக்கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்று செய்துவிடமுடியாது. 
குலதெய்வத்திற்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் தெய்வங்கள் மாறலாம் ஆனால் அதன் சக்தி ஒரே அளவில் இருக்கும்.குலதெய்வத்தின் அருள் இல்லை என்றால் அந்த வீட்டில் நீங்கள் எப்பேர்பட்ட மகானை வைத்து பூஜை செய்தாலும் ஒரு புண்ணியமும் கிடைக்காது.பிற தெய்வத்தை வணங்குங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. நீங்கள் பிறதெய்வத்தை வணங்கினாலும் உங்களின் குலதெய்வத்தை வணங்கிய பிறகு நீங்கள் பிற தெய்வங்களின் கோவிலுக்கு சென்றால் மட்டும் அந்த தெய்வத்தின் புண்ணியம் கிடைக்கும். உங்களது குலதெய்வம் கோவிலுக்கு மாதம் ஒருமுறை கண்டிப்பாக  நேரில் சென்று பூஜை செய்துகொள்ளவேண்டும்.மற்ற கோவில்களுக்குச் சென்று பூஜை செய்வதற்கும்,குல தெய்வத்தை வணங்குவதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு.மற்ற கோவில்களுக்குச் செல்லும்போது தேங்காய்,பழம் வாங்கி அர்ச்சனை செய்து திரும்புவீர்கள்.ஆனால் குலதெய்வத்தை வழிபடச்செல்லும்போது கூடுதலாக ஒரு கடமையும் இருக்கின்றது.உங்களது குலதெய்வம் கோவிலுக்குச் சென்றதும் பொங்கல்வைத்து படையல் போட்டு வணங்கியப்பின்னரே,அர்ச்சனை செய்து திரும்ப வேண்டும்.இதை செய்வதே முறையான குலதெய்வ வழிபாடு ஆகும்.புதிதாக அகல் விளக்கு வாங்கி அதில் நெய் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.
குலதெய்வம் படத்தை வாங்கிவந்து உங்கள் வீட்டு பூஜையறையில் வைத்துக்கொள்ள வேண்டும்.உங்களது மணிப்பர்ஸில் எப்போதும் வைத்திருக்க வேண்டும்.
பூஜை அறையில் குலதெய்வத்திற்கு என அகல் விளக்கு ஒன்றில் தீபம் ஏற்ற வேண்டும்.குலதெய்வ கோவிலுக்கு செல்ல இயலவில்லை எனில் நம் வீட்டில் சர்க்கரை பொங்கல் செய்து அவரை நினைத்து வழிபாடு செய்யலாம்.வீடு கட்டுவதற்கும்,திருமணம் செய்வதற்கும் முன்பு குலதெய்வத்தை வழிபட்டப்பின்னரே செயலில் இறங்கிட வேண்டும்.குலதெய்வ வழிபாட்டை முக்கியம் என்று சொல்லுவதற்கு காரணம் ஒவ்வொருவரின் குலதெய்வம் மட்டுமே அவர்களுக்கு நன்மை செய்யும். வேறு தெய்வங்களை நீங்கள் வணங்கினாலும் குலதெய்வம் வழியாக மட்டுமே அனைத்தும் கிடைக்கும் என்பதை பல ஆன்மீகவழிகளில் முயற்சி செய்து பார்த்து சொல்லும் மகான்களின் உண்மை.

இன்னும் புதிய ஆன்மீக விஷயங்களை  ஷேர் பண்ணுகிறேன்.
நன்றி வணக்கம்.உங்கள் தோழி 
ஈஸ்வரிசரவணன் 
 
ஈஸ்வரி சரவணன் 

எந்த கிழமையில் என்ன உணவு சாப்பிடவேண்டும்?

ஒவ்வொரு கிழமைகளுக்கும் நாம் சாப்பிடும் சாப்பாட்டிற்க்கும் சம்பந்தம் உண்டாம். மேலும் எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் என்ன உண்ணலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

தொடர்புடைய படம்ஞாயிறு —  சூரியன்

கோதுமையினால் ஆன உணவை உண்ணலாம்.
சிம்ம ராசியினருக்கு  நலம் உண்டாகும்.

கோதுமை அல்வா, கோதுமை பாயாசம், கோதுமை சாதம்,

சப்பாத்தி, பூரி, கேசரி, கேரட் அல்வா,

மாதுளை ஜூஸ்,   கேரட் சூப் , பரங்கிக்காய் சாம்பார்.

திங்கள் — சந்திரன்
பால் சம்மந்தமான உணவு – கடக  ராசியினருக்கு  நலம் உண்டாகும்.

பால், பால் கோவா, பால் பாயாசம், லஸ்ஸி,

பச்சரிசி சாதம், முள்ளங்கி, கோஸ் பொரியல்,

தேங்காய் சாதம், கல்கண்டு சாதம், தயிர் சாதம்.


செவ்வாய் — செவ்வாய்

துவரம் பருப்பு சாம்பார், துவரம் பருப்பு சட்னி, வடை,

பீட்ரூட் அல்வா, பேரிச்சை பாயாசம்,,தர்பூசணி ஜூஸ்,,

தேன் கலந்த செவ்வாழை ,ஆப்பிள்,ஆரஞ்சு பழக்கலவை.


மேஷ, விருச்சிக   ராசியினருக்கு  நலம் உண்டாகும்.

புதன் —  புதன்

கீரை தோசை, கீரை, வேப்பம்பூ ரசம்,

பாவக்காய் கொத்சு,  முருங்கைக் காய் சூப்,

பாசிப்பயறு சுண்டல், புதினா, கொத்துமல்லி சட்னி,

வாழைப் பழம் , கொய்யாப் பழம் சேர்த்த பழக்கலவை.


மிதுனம், கன்னி ராசியினருக்கு  நலம் உண்டாகும்.

வியாழன் — குரு

சுக்கு காபி,அல்லது கஷாயாம், சோளம்,

கடலைப் பருப்பு கூட்டு, கடலைப் பருப்பு வடை,

தயிர் வடை, கொண்டைக்கடலை சுண்டல்,

சாத்துக்குடி, மாம்பழஜூஸ்,,பொங்கல்,

கதம்பதயிர் , எலுமிச்சை சாதம்,

மாதுளை, முந்திரி,திராட்சை, பேரிட்சை கலந்த தயிர் சாதம்.

தனுசு, மீன   ராசியினருக்கு  நலம் உண்டாகும்.

வெள்ளி — சுக்கிரன்
பால் இனிப்புகள், பால் பாயாசம், காஷ்மீர் அல்வா,

தேங்காய் பர்பி, வெண்ணையில் செய்த பிஸ்கட்,

முலாம்பழஜூஸ், வெள்ளரிஜூஸ், வாழத்தண்டுஜூஸ்,

கம்பு தோசை,அவியல், தயிர், கோஸ் சாம்பார், பூண்டு ரசம்,வாழத்தண்டுபொரியல்,

நீர் மோர், வெள்ளரி, பாசிப்பருப்பு  சாலட்.

ரிஷபம், துலா ராசியினருக்கு  நலம் உண்டாகும்.

சனி — சனி

எள் உருண்டை, ஜிலேபி, அதிரசம்,

சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, கொள்ளு சுண்டல், எள்ளு சாதம், எள் சட்னி, கொள்ளு ரசம், மிளகு சாதம், மிளகு ரசம், உளுந்து சாதம்,

புளியோதரை, எண்ணை கத்தரிக்காய் குழம்பு,

நாவல் பழம், கருப்பு திராட்சை ஜூஸ், பாதாம் , முந்திரி, திராட்சை, பேரிச்சை, பிஸ்தா கலவை.

மகரம், கும்ப ராசியினருக்கு  நலம் உண்டாகும்.

கடவுள் இருப்பதை உணர்வது எப்படி? ஒரு குட்டி கதை

கடவுள் இருப்பதை உணர்வது எப்படி? ஒரு குட்டி கதைgod krishna க்கான பட முடிவு

கடவுளிடம் பக்தி கொண்ட ஒருவர் தான் கடவுளை உணரமுடியாததால் அது குறித்து கேட்க ஒரு மகானிடம் சென்றார். கடவுள் எங்கு இருப்பார்? எப்படி இருப்பார்? அவரை உணர்வது எப்படி? என்று அந்த மகானிடம் அவர் கேட்டார். அதற்கு அந்த மகான், “கடவுள் எல்லா இடங்களிலும் இருக்கிறார். சர்வ ஞானமும் பெற்ற, அழியாத, பேரின்பம் நிறைந்த வடிவம் தான் கடவுள், நீயும் கடவுள் தான்” என்றார்.
அதற்கு பக்தர், “அப்படியானால் ஏன் என்னால் உணர முடியவில்லை?” என்று வினவினார். அதற்கு அந்த மகான் மிக அழகாக, “உன் எண்ணங்களில் அவர் இருக்கிறார், ஆனால் உன் எண்ணம் உலகத்தில் நடக்கும் விஷயங்களில் சூழ்ந்திருப்பதால் அவரை உணர முடியவில்லை” என்று பதிலளித்தார்.
இப்படி பல வழிகளில் அந்த மகான் உண்மையை புரிய வைக்க முயன்றார். அனால் அந்த பக்தரோ அதை புரிந்துகொள்ளமுடியாமல் தவித்தார். இறுதியாத அந்த பக்தரை ஹரித்வாருக்கு செல்லும்படி அந்த மகான் கூறினார். அங்குள்ள கங்கை நதியில் ஒரு அபூர்வமான வண்ணத்தைக் கொண்ட ஒரு மீன் இருக்கின்றது” என்றும் சொன்னார். மேலும், மனிதர்கள் போலவே பேசும் குரல் அதற்கு இருப்பதால் உன் கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும் என்றும் சொன்னார்.
உடனடியாக மகானின் பாதங்களில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று ஹரித்வாருக்குப் புறப்பட்டார். அபூர்வமான மீனின் வருகைக்குக் காத்துக் கொண்டிருந்தார். அந்த சமயம், ’கடவுள் எங்கு இருக்கிறார், எப்படி அவரை உணர முடியும்?” என்ற கேள்விகளைக் கேட்டுக் கொண்டே உட்கார்ந்திருந்தார்.
சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த மீன் அங்கு வந்து, ” எங்கிருந்து வந்திருக்காய்?” என்று கேட்டது.
அதற்கு அந்த பக்தர், “மகான் ஒருவர் உன்னிடமிருந்து கடவுளைப் பற்றித் தெரிந்து கொள்ள அனுப்பி வைத்தார்” என்று கூறினார். அதற்கு அந்த மீன், எனக்கு ஏழு நாட்களாக ஒரே தாகம். எங்கு தண்ணீர் கிடைக்கும்?” என்று கேட்டது. அதற்கு பக்தர், “பைத்தியக்கார மீனே, வலது, இடது, மேலே, கீழே என்று எல்லாப் பக்கங்களிலும் தண்ணீர் தானே” என்று பதிலளித்தார்.
உடனே மீன் கொஞ்சம் கடுமையாக, “நீ தேடிக் கொண்டிருக்கும் கடவுளும் அப்படிதான். எல்லா பக்கங்களிலும் இருக்கிறார்” என்று மிக அழகாகக கூறலாயிற்று. அந்த பதிலைக் கேட்டுத் திருப்தி அடைந்த போதிலும் ஒரு சந்தேகத்தை முன் வைத்தார், “அப்படியானால் கடவுளை உணர முடியாமல் ஏன் இப்படித் தவிக்கின்றேன்?”
அதற்கு அந்த மீன், ” இதே கேள்வி தான் எனக்கும். தண்ணீரால் சூழ்ந்திருக்கும் எனக்கு ஏன் தாகம் தணியவில்லை என்பது தான்”.
மீனின் வடிவமைப்பு குறித்து அந்த பக்தன் நன்கு அறிந்திருந்தான். ஆகையால் மீன் எப்படி நீந்தால் அதன் வாயில் தண்ணீர் சென்று அதன் தாகம் தணியும் என்பதை அவன் மீனிற்கு எடுத்துரைத்தான்.
உடனே மீன், “எப்படி நீந்தினால் என் தாகம் தணியும் என்று நீங்கள் கூறியது போல , கடவுளை உணர நீங்கள் முயற்சி செய்தால் நீங்கள் கடவுளை உணரலாம். ஆசைகளை திசை திருப்பி கடவுளின் மேல் செலுத்த வேண்டும். உலக விஷயங்கள் மேல் இருக்கும் எண்ணங்களைக் கடவுள் மேல் திருப்பினால் கவலைகளுக்குத் தீர்வு கிடைக்கும்”.
பக்தரும் அப்படியே செய்து உண்மையை புரிந்து கொண்டார்.

சனி, 7 ஜூலை, 2018

சிவ வழிபாட்டிற்குரிய லிங்கங்கள் மூன்று வகைப்படும்.

சிவ வழிபாட்டிற்குரிய லிங்கங்கள் மூன்று வகைப்படும்.


ஷணிக லிங்கம் ... இஷ்ட லிங்கம் ... ஆத்ம லிங்கம்
 
ஷணிக லிங்கம்:

நாள்தோறும் சிவ வழிபாடு நடத்தி பின்பு கைவிடப்படும் லிங்கம் ஷணிக லிங்கம் எனப்படும். இதை செய்வது மிகவும் எளிதானது. இது 16 வகைப்படும். இதனை நாமே செய்யலாம். குருவிடமிருந்து லிங்கத்தை பெற இயலாதவர்கள் இதை செய்து வழிபடலாம்.


1. புற்றுமண் லிங்கம் ..... மோட்சம் தரும்2. ஆற்றுமண் லிங்கம் ..... பூமிலாபம் தரும்3. பச்சரிசி லிங்கம் ..... பொன், பொருள் தரும்4. அன்ன லிங்கம் ..... அன்ன விருத்தி தரும்5. பசுவின் சாண லிங்கம் ..... நோய்கள் தீரும்6.வெண்ணெய் லிங்கம் ..... மன மகிழ்ச்சி தரும்7. ருத்ராட்ச லிங்கம் ..... அகண்ட அறிவைத் தரும்8. விபூதி லிங்கம் ..... அனைத்து செல்வமும் தரும்9. சந்தன லிங்கம் ..... அனைத்து இன்பமும் தரும்10. மலர் லிங்கம் ..... ஆயுளை அதிகமாக்கும்11. தர்ப்பைப்புல் லிங்கம் ..... பிறவியிலா நிலை தரும்12. சர்க்கரை லிங்கம் ..... விரும்பிய இன்பம் தரும்13. மாவு லிங்கம் ..... உடல் வன்மை தரும்14. பழ லிங்கம் ..... சுகத்தைத் தரும்15. தயிர் லிங்கம் ..... நல்ல குணத்தைத் தரும்16. தண்ணீர் லிங்கம் ..... எல்லா மேன்மைகளும் தரும்


 
இஷ்ட லிங்கம்:
மரகதம், படிகம், கருங்கல் இவற்றினால் செய்யப்பட்ட லிங்கத்தை குருவிடமிருந்து முறையாக பெற்று தன் ஆயுள் உள்ள வரைக்கும் தன்னிடமே வைத்துக்கொண்டு தினமும் தாம் செல்லுமிடமெல்லாம் கூடவே எடுத்து சென்று வழிபடும் லிங்கம் இஷ்ட லிங்கம் எனப்படும்.

1. இந்திரன் ..... பத்மராக லிங்கம்
2. குபேரன் ..... ஸ்வர்ண லிங்கம்
3. யமன் ..... கோமேதக லிங்கம்
4. வருணன் ..... நீல லிங்கம்
5. விஷ்ணு ..... இந்திர நீல லிங்கம்
6. பிரம்மன் ..... ஸ்வர்ண லிங்கம்
7. அஷ்ட வசுக்கள், வசுதேவர்கள் ..... வெள்ளி லிங்கம்
8. வாயு ..... பித்தளை லிங்கம்
9. அசுவினி தேவர்கள் ..... மண் லிங்கம்
10. மகா லட்சுமி ..... ஸ்படிக லிங்கம்
11. சோம ராஜன் ..... முத்து லிங்கம்
12. சாதுர்யர்கள் ..... வஜ்ஜிர லிங்கம்
13. பிராம்மணர்கள் ..... மண் லிங்கம்
14. மயன் ..... சந்தன லிங்கம்
15. அனந்தன் முதலான நாகராஜர்கள் .... பவள லிங்கம்
16. தைத்தியர்கள், அரக்கர்கள் ..... பசுஞ்சாண லிங்கம்
17. பைசாசங்கள் ..... இரும்பு லிங்கம்
18. பார்வதி .... வெண்ணெய் லிங்கம்
19. நிருதி ..... தேவதாரு மர லிங்கம்
20. யோகிகள் ..... விபூதி லிங்கம்
21. சாயா தேவி ..... மாவு லிங்கம்
22. சரஸ்வதி ..... ரத்தின லிங்கம்
23. யட்சர்கள் ..... தயிர் லிங்கம்

 
ஆத்ம லிங்கம்:

தூய மனத்துடன் மனப்பூர்வமாக வழிபட சிவபெருமான் கொண்ட திருவுருவம் ஆத்மலிங்கம் ஆகும். இவ்வகை லிங்கத்திற்கு மனப்பூர்வமான வழிபாடே போதுமானது. வெளிபுற வழிபாடு தேவையில்லை. மனப்பூர்வமாக செய்யப்படும் சிவ லிங்க வழிபாடு ஆத்ம லிங்க வழிபாடு எனப்படும்.


1. மண் ..... காஞ்சிபுரம் ..... ஏகாம்பர லிங்கம்
2. நீர் ..... திருவானைக்கா ...... ஜம்பு லிங்கம்
3. நெருப்பு ..... திருவண்ணாமலை ..... அருணாசல லிங்கம்
4. வாயு ..... திருகாளத்தி ..... திருமூல லிங்கம்
5. ஆகாயம் ..... சிதம்பரம் ..... நடராச லிங்கம்
support and subscribe my you tube channel Tamilnattu samayal நன்றி ஈஸ்வரி சரவணன் 

தொழிலில் சிறந்து விளங்க செய்யவேண்டிய ஹஸ்த்ர வழிபாடு!

தொழிலில் சிறந்து விளங்க செய்யவேண்டிய ஹஸ்த்ர வழிபாடு!



job

தொழிலில் நிரந்தரமாக கால் பதிக்க விரும்புபவர்களும், வீழ்ச்சியடையாத நிலையே எட்ட வேண்டும் என்று நினைப்பவர்களும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
தொழிலில் வெற்றி பெற்று, மிகப்பெரிய சாம்ராஜியத்தை உருவாக்குவதற்கான வழிமுறையை தான் இன்று காணப்போகிறோம்.
அந்த வழிபாடு தான் ஹஸ்த்ர வழிபாடு. 
ஹஸ்த்ர வழிபாடு என்றால் என்ன? 
பெருமாள் கையில் இருக்கக்கூடிய சங்கு, சக்கரமாகும்.  இதை அபய ஹஸ்த்ரம் என்று கூறுகிறோம். 
பகவான் விஷ்ணுவின் கையில் இருக்கும் சங்கு சக்கரத்திற்கு அவ்வளவு விஷேசங்களும், மகத்துவமும் வாய்ந்தது. மிகப்பெரிய சாம்ராஜியத்தை உருவாக்குவது.  உன்னதமான பலன்களை அள்ளித்தருவது. 
சக்கரத்தை எப்படி உருவாக்குவது? 
சங்கு, சுதர்ஸன சக்கர யந்திரம் ஆகிய இரண்டையும் எடுத்துக்கொள்ள வேண்டும். முதலில் சங்கு முழுவதும் சில்லறை காசுகளால் நிரப்ப வேண்டும், பின்னர், சுதர்ஸன யந்திரத்தின் மீதும் சில்லறையை வைத்துவிட்டு இந்த மந்திர ஜெபத்தைச் சொல்ல வேண்டும்...
ஸுதர்சனர் மந்திரம்
ஓம் ஐம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் கிருஷ்ணாய 
கோவிந்தாய, கோபி ஜன வல்லபாய, 
பராய, பரம ப்ருஷாய, பரமாத்மனே, 
பரகர்ம மந்த்ர யந்த்ர தந்த்ர ஔஷத
அஸ்த்ர, சஸ்த்ராணி, ஸம்ஹர, ஸம்ஹர,
ம்ருத்யோர் மோசய, மோசய,
ஓம் நமோ பகவதே மஹா ஸுதர்சனாய,
ஓம் ப்ரோம் ரீம் ரம் தீப்த்ரே, ஜ்வாலா
பரீதாய, ஸர்வதிக் ஷோபன ஹராய, 
ஹும்பட், பரப்ரஹ்மணே, 
பரம்ஜ்யோதிஷே, ஸ்வாஹா
என்ற சுதர்ஸன மூலமந்திரத்தை ஜெபித்துவிட்டு..
ஓம் சுதர்ஸனாய நமக..
ஓம் மஹாவிஷ்னுவே நமக..
ஓம் மஹாலட்சுமியை நமக..
ஓம் மஹாலட்சுமியை நமக..
இவ்வாறு தினம் தினம் சங்கிற்கும், சுதர்ஸன சக்கரத்திற்கும் குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும். தொடர்ந்து தினமும் பூஜை செய்துவர பல உன்னதமான பலன்களை கொடுக்கும். பூஜை செய்த சங்கையும், சுதர்ஸன சக்கரத்தையும் எடுத்து தொழில் ஸ்தாபனங்களில் வைக்கலாம் அல்லது நம் வீட்டுப் பூஜை அறையில் வைக்கலாம். இவ்வாறு செய்துவர தொழிலில் வெற்றிவாகை சூடலாம். 
சங்கு என்றால் எந்த சங்கை வைக்கலாம்? 
வலம்புரி சங்கு மகத்துவம் வாய்ந்தது. சங்கின் நுனி  வடக்கு அல்லது கிழக்குப் பார்த்து வைக்க வேண்டும். சங்கு முழுவதும் சில்லரை காசுகளை நிரப்ப வேண்டும். பக்கத்தில் சுதர்ஸன யந்திரத்தையும் வைத்து அதன்மேல் சில்லரை காசுகளை வைக்க வேண்டும். இரண்டையும் ஒரே தட்டில் வைப்பது நல்லது. அதன் மேல் குங்குமத்தால் தினமும் அர்ச்சனை செய்ய வேண்டும். அந்தக் குங்குமத்தை தினமும் நெற்றியில் ஈட்டுக்கொள்ளலாம். 
இவ்வாறு தினமும் சங்கு, சக்கரத்தை வைத்து பூஜித்து ஆராதனை செய்துவந்தால் கைமேல் பலன் கிடைக்கும். தொழிலில் வீழ்ச்சியில்லாத மிகப்பெரிய சாம்ராஜியத்தை அடைய முடியும். 

வியாழன், 5 ஜூலை, 2018

ஆதிசங்கரரின் தாய் பாசம்-என்னை உருக வைத்த கதை

ஆதிசங்கரரின் தாய் பாசம் 



ஹலோ நண்பர்களே!   என்னை உருக வைத்த இந்த பதிவைவை உங்களுக்காக பதிவேற்றுகிறேன்.தாய் நம்மை சிறு வயதில் எப்படி கண்ணும் கருத்துமாக பார்த்து வளர்கிறாள்.ஒரு கல்யாண வீட்டில் இனிப்பு பதார்த்தங்கள்  கொடுத்தால் கூட அது தன் பிள்ளைக்கு பிடிக்கும் என தான் சாப்பிடாமல் பிள்ளைக்கு கொண்டு வந்து கொடுக்கிறாள் தாய்.அதுதான் தாய் பாசம் என்பது.தாயிடம் இருக்கும் அன்பு புனிதமானது.ஆதலால் ஒவ்வொருவரும்  தாயிடமும்  அன்புடன் இருக்க வேண்டும்.ஆதலால் நம் தாயை காப்பது ஒவ்வொரு பிள்ளைகளின் கடமையாகும்.தாயின் அன்புக்கு ஈடு இணை வேறொன்றும் இல்லை.வாங்க கதையை பார்ப்போம்.

ஆதிசங்கரருக்கு இளம் வயதிலேயே துறவு மனப்பான்மை ஓங்கி இருந்தது. தாய் ஆர்யாம்பாளிடம் துறவுக்கு அனுமதியைக் கேட்க, தன் ஒரே மகன் துறவியாவதைக் காண சகிக்க முடியாத அந்தத் தாய் மறுத்து விட்டார். இளம் வயதிலேயே விதவையான அந்தத் தாயிற்கு அந்த உத்தம மகனை விடப் பெரிய உறவோ, சொத்தோ இருக்கவில்லை. தாயின் அனுமதியில்லாமல் துறவறம் மேற்கொள்ள ஆதிசங்கரருக்கு மனம் ஒப்பந்தம் அளிக்கவில்லை. 

ஒருமுறை பூர்ணா நதியில் குளிப்பதற்காக தாயுடன் சென்றிருந்த ஆதிசங்கரரின் காலை ஒரு முதலை பற்றிக் கொண்டது. ஆதிசங்கரர் உரத்த குரலில் தாயிடம் சொன்னார், “தாயே! என் காலை ஒரு முதலை பிடித்து இழுத்துக் கொண்டிருக்கிறது. நான் துறவறம் மேற்கொள்ள நீங்கள் அனுமதி தந்தால் அது என்னை விட்டு விடும்”. ஓர் இக்கட்டான நிலைக்கு ஆளான ஆர்யாம்பாள் வேறு வழியில்லாமல் மகன் துறவியாவதற்கு ஒப்புதல் அளித்தார். ஆதிசங்கரர் தகுந்த மந்திரங்களை எல்லாம் சொல்லி அந்த நதியிலேயே துறவறம் மேற்கொண்டார். முதலை அவர் காலை விட்டு விட்டது. (அந்த முதலை பிரம்மாவின் சாபம் பெற்ற ஒரு கந்தர்வன் என்றும் ஆதிசங்கரரின் கால் பட்டதும் அவன் சாப விமோசனம் பெற்றான் என்றும் சொல்லப்படுகிறது)


கரையேறிய ஆதிசங்கரர் தன் வீடு புகவில்லை. வீடு வந்த பின்னும் வாசலிலேயே “பிக்ஷாந்தேஹி ” என்று மகன் நின்ற போது தான் ஆர்யாம்பாளுக்கு உண்மை முழுமையாக உறைத்திருக்க வேண்டும். முன்பே ஒரு முறை மகன் துறவியாவது போல் கனவு கண்டு அந்தக் கனவுக்கே துடித்துப் போன அந்தத் தாயின் நிலைமை அப்போது எப்படி இருந்திருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. எல்லையில்லாத சோகத்தில் மூழ்கிய ஆர்யாம்பாள் மகன் இருந்தும் இல்லாதது போல் வாழ வேண்டி வரும் நிலைமையையும், ஈமக்கிரியை கூட மகன் இல்லாமல் போகும் அவலத்தையும் எண்ணி மிகவும் வருந்தினார். உறவுகளைத் துறக்கும் போது உறவுகளுடன் கூடிய அனைத்தையும் முடித்துக் கொள்வதால் துறவிகள் பெற்றவர்களுக்கு ஈமக்கிரியைகள் கூட செய்யக் கூடாது என்று சாஸ்திரம் கூறுகிறது. ஆனால் தாயின் சோகத்தால் நெகிழ்ந்த ஆதிசங்கரர் அந்த விதியை மீறித் தன் தாயிற்கு வாக்களிக்கிறார். ”உன் அந்திம காலத்தில் உன் ஈமக்கிரியைகளைச் செய்ய நான் கண்டிப்பாக வருவேன்”.


ஆண்டுகள் பல கழிந்த பின் ஆர்யாம்பாள் மரணப்படுக்கையில் கிடக்கையில் தன் ஞான திருஷ்டியால் அதை அறிந்த ஆதிசங்கரர் உடனடியாகத் தாயிடம் வந்தார். ஒரு துறவியான பின் தாயிற்கு ஈமக்கிரியை செய்வதா என்று சாஸ்திரம் படித்த உறவினர்கள் குமுறினார்கள். சிதைக்குத் தீ மூட்ட நெருப்பைக் கூடத் தர மறுக்க தன் சக்தியாலேயே தாயின் சிதைக்கு ஆதி சங்கரர் தீ மூட்டினார். அரும் பெரும் தத்துவங்களையும், உபநிடத சாரங்களையும் உலகத்திற்குத் தந்த ஆதிசங்கரர் தாயின் அந்திம காலத்தில் மடியில் கிடத்திக் கொண்டு பாடிய “மாத்ரு பஞ்சகம்” மிகவும் நெகிழ்ச்சியானது. அறிவால், ஞானத்தால், பக்தியால் எத்தனையோ பொக்கிஷங்களைத் தந்த ஆதிசங்கரர் உணர்ச்சி பூர்வமாக எழுதியது அந்த ஐந்து சுலோகங்களை மட்டுமே. ஜகத்குருவான ஆதிசங்கரர், ஒரு மகனாக அன்னையின் பாசத்தையும், தியாகத்தையும் எண்ணிப் பாடிய மாத்ரு பஞ்சகம் இது தான் -



“அம்மா, என்னைக் கருவில் தாங்கி நான் பிறக்கும் வரை உடல் மெலிந்து நீ பட்ட கஷ்டங்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்ய முடியும்? குழந்தையான என் மலம் மூத்திரம் எல்லாம் சுத்தம் செய்து, எனக்காகப் பத்தியம் இருந்து என்னைக் காப்பாற்றி வளர்த்த உனக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன்? அன்று முதல் இன்று வரை நீ எனக்கு செய்ததற்கு கைம்மாறு செய்ய எனக்குப் பல ஜென்மங்கள் போதாதே! நான் குருகுலத்தில் இருந்த ஒரு சமயம் நான் துறவு பூண்டதாக நீ கனவு கண்டாய். உடனே நீ அங்கு ஓடி வந்து கதறினாய். அதைக் கண்டு எல்லோரும் என்ன விஷயம் என்று கேட்க உன் கனவைச் சொல்லிக் கதற அதைக் கேட்ட குருகுலம் முழுவதும் கதறியதே! அத்தகைய உனது காலில் வீழ்ந்து நான் இன்று கதறுகிறேன். எல்லா சக்திகளும் அற்றுப் போன கடைசி காலத்தில் கொஞ்சம் தண்ணீர் தந்தால் ஆறுதல் உண்டாகும். அந்தப் பாக்கியமும் எனக்குக் கிடைக்கவில்லையே. பின்பு ஒவ்வொரு முறையும் திதியில் சிரார்த்தம் செய்யும் பாக்கியமும் இல்லாத சன்னியாசியாக நான் இருக்கிறேனே. அம்மா! என்னைக் கூப்பிடும் போதெல்லாம் முத்தே, மணியே, கண்ணே, ராஜாவே, குழந்தாய் நீ வெகு காலம் வாழ வேண்டும் என்று வாழ்த்திய வாய்க்கு வாய்க்கரிசி போடுகிறேனே. தாயே பிரசவ வேதனை தாளாமல் அம்மா, அப்பா, சிவனே, கிருஷ்ணனே, கோவிந்தா, முகுந்தா என்றெல்லாம் கதறிய ஒரு கதறலுக்கு என்னால் பதில் கூற முடியுமா? தாயே உன்னை வணங்குகிறேன்.”

என் பதிவை காண வந்த கண்களுக்கு நன்றிகள் பல.என்னுடைய blog யை follow பண்ணுங்கள்.என்னுடைய tamilnattu samayal you tube channel லை support அண்ட் subscribe பண்ணுங்கள்இந்த சேனலில்  ஆன்மீக விஷயங்கள்,சமையல்களையும் பகிர்ந்துள்ளேன்.  

குத்து விளக்கிற்கு பொட்டு வைத்து தீபம் ஏற்றுவது எப்படி?Published on Jun 27, 2018

உங்கள் அன்பு தோழி 
ஈஸ்வரி சரவணன்