திங்கள், 18 செப்டம்பர், 2017

பஞ்சதீப எண்ணெய் சிறப்பு

பஞ்சதீப எண்ணெய் சிறப்பு



பஞ்ச பூதசக்திகளை சமநிலையில் வைத்தால் சகல நன்மைகளையும் பெறமுடியும். இதற்கு பஞ்சதீப எண்ணெய் ஊற்றி விளகேற்றினால் நற்பயன்களை பெறலாம்.

பஞ்ச தீபம் எண்ணெய்யின் பலன்கள்:
பசு நெய் - கிரகதோஷம்,செல்வவிருத்தி, நினைத்தது கைகூடும்.
நல்லெண்ணை - தாம்பத்ய விருத்தி,ஆரோக்கியம் அதிகரிக்கும்.
வேப்ப எண்ணை - ஐஸ்வர்ய யோகம்,உறவு நலம் பெறவும், மற்றவர்களின் உதவி பெறவும்.
இலுப்பை எண்ணை -சகல காரிய வெற்றி.
விளக்கெண்ணை - புகழ், குல தெய்வ அருள் கிடைக்கும்.
ஒரு லிட்டர் பஞ்சதீபம் எண்ணை செய்ய தேவையானவைகள்:
1. சுத்தமான பசு நெய் - 200 மில்லி
2. நல்லெண்ணை - 350 மில்லி
3. வேப்ப எண்ணை - 100 மில்லி
4. இலுப்பை எண்ணை - 200 மில்லி
5. விளக்கெண்ணை - 150 மில்லி
பஞ்சதீப எண்ணெய் சிறப்பு
மேலே குறிப்பிட்ட எண்ணைகளை அதன் அளவு மாறாமல் ஒன்றாக சேர்த்து ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்து கொண்டு தினமும் தீபம் ஏற்றி பஞ்ச தீபம் எண்ணெய்யின் பலனை அடையலாம்.

பசுநெய், விளக்கு எண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகிய இந்த ஐந்தும் கலந்த பஞ்ச தீப எண்ணெய் ஊற்றி ஐந்து முகம் விளக்கேற்றி, பஞ்சமி திதியில் தேவியை வழிபட்டால் அம்மனின் அருள் கிடைக்கும். வீடு மற்றும் கோவில்களில் விளக்கு ஏற்றி வர நமக்கு ஏற்படும்  தொடர்நோய்களில் இருந்து விடுதலை, செய்வினை, பில்லி, சூனியம், ஏவல், கடன் தொல்லைகள் போன்றவை அகலும்.

இந்த எண்ணெயை அம்மாவாசை, பெளர்ணமி மற்றும் செவ்வாய், வெள்ளி போன்ற தினங்களில் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை விளக்கேற்றும் பொழுது சிறந்த பலன் கிடைக்கும். ஞாயிறு, திங்கள், வியாழன், சனி ஆகிய தினங்களில்தான் குத்துவிளக்கை விளக்கி சுத்தப்படுத்த வேண்டும். பிற நாட்களில் சுத்தப்படுத்தக் கூடாது. 

குத்து விளக்கு பூஜை செய்தால் தலைவாழை இலை மீது குத்து விளக்கை வைத்து பூஜை செய்ய வேண்டும். விளக்கில் விபூதி, சந்தனம் அல்லது குங்குமம் உச்சியில் ஒரு பொட்டும் அதன் கீழ் மூன்றும், அதன் அடி கீழ் இரண்டும், அடியில் இரண்டுமாக எட்டு இடங்களில் பொட்டு இட வேண்டும். 

குத்து விளக்கின்அடிப்பாகத்திலும், நடுப்பகுதியிலும், உச்சிப் பகுதியிலும் பூச்சூட வேண்டும். விளக்கில் முதலில் திரியைப் போட்டு பின்னர் எண்ணெய் ஊற்றக் கூடாது. முதலில் எண்ணெய் ஊற்றி விட்டு பின்னர்தான் திரிபோட வேண்டும். 

சிவன் கோயிலில் திங்கட்கிழமைகளில் மாலை நேரத்தில் பஞ்சதீபம் ஏற்றி பிரார்த்தனை செய்துகொண்டால் நினைத்தது நடக்கும்.
பயத்தை விரட்டும் பைரவர் வழிபாடு



பவுர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமி தினத்தில், பைரவருக்கு பஞ்ச தீபம் ஏற்றி வழிபாடு செய்தால், தீராத தொல்லைகள் எதுவாக இருந்தாலும் தீர்ந்து வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை. 

நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய், பசு நெய் ஆகியவற்றை தனித்தனி அகல் விளக்கில் ஊற்றி, தீபம் ஏற்ற வேண்டும். ஒரு தீபத்தில் இருந்து மற்றொரு தீபத்தை ஏற்றாமல் ஒவ்வொரு தீபத்தையும் தனித்தனியாக ஏற்றி வழிபாடு செய்து வந்தால் எண்ணிய காரியங்கள் எளிதில் நிறைவேறுவதுடன், பைரவரின் பரிபூரணஅருளும் கிட்டும்.


தீபாவளி தின தீப வழிபாடு உங்கள் புகழ், செல்வம், உடல் நலத்தை மேலும் அதிகரிக்கும்.Shar
0

செவ்வாய், 5 செப்டம்பர், 2017

தீபத்தில் எத்தனை வகைகள்

தீபத்தில் எத்தனை வகைகள்



நாம் விளக்கு ஏற்றும் தீபத்தில் எத்தனை வகைகள் உள்ளது தெரியுமா? அதன் மகத்துவம் தெரியுமா?

காமாட்சி விளக்கு 

விளக்குகளில் காமாட்சி விளக்கு புனிதமானது. இது எல்லா வீடுகளிலும் இருக்க வேண்டிய விளக்கு. பூஜைக்கு முன் பூவும், பொட்டும் வைத்து மங்கலத்துடன்  தீபம் ஏற்றி, தினமும் வழிபடத்தக்கது. பல குடும்பங்களில் பரம்பரை பரம்பரையாக காமாட்சியம்மன் விளக்குகளை பொன் போலப் போற்றிப் பாதுகாத்து  வைத்துள்ளனர். சிலர் தம் முன்னோர்கள் ஏற்றிய காமாட்சியம்மன் விளக்குச் சுடர் தொடர்ந்து, நிலைத்து, எரியும்படி கவனித்துக் கொள்கின்றனர். புதுமனை புகும்  போதும், மணமக்கள் மணப்பந்தலை வலம் வரும்போதும், எல்லா இருள்களையும் நீக்கியபடி, அருள் ஒளியை அனைவருக்கும் அருளியபடி முன்னால் பக்தியுடன்  ஏந்திச் செல்லப்படும் விளக்கும் காமாட்சி அம்மன்திருவிளக்கே. புதுப்பெண் புகுந்த வீட்டுக்கு வரும்போது, 'நிறைநாழி'' எனப்படும் படியில் நெல் வைத்து அதன்  மீது காமாட்சி அம்மன் விளக்கு வைத்து அதில் தீபம் ஏற்றப்படும். பெண்ணுக்கு சீர் வரிசைகளை தரும்போது காமாட்சி அம்மன் விளக்கும், இரண்டு குத்து  விளக்குகளும் அவசியம் வழங்கப்பட வேண்டும். விளக்குகள் தமிழர் வாழ்வில் ஓர் அங்கம். மங்கலப் பொருட்களில் இந்த காமாட்சி விளக்கும் ஒன்று.

குத்து விளக்கு

குத்துவிளக்கும், காமாட்சியம்மன் விளக்கை போலப் புனிதமானது. செங்குத்தாக நிமிர்ந்து நேராக நிற்கும் விளக்கு (குத்து-நேர்) என்பதால் குத்துவிளக்கு என்ற  பெயர் ஏற்பட்டது. இந்த விளக்கு பூஜையில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஐந்துமுகக் குத்துவிளக்குகள் இரண்டு பூஜை அறையில் சுடர் விட்டு பிரகாசிக்குமானால்  அங்கே மங்கலம் பொங்கும் என்பது ஐதீகம். ஓர் அங்குலம் முதல், பல அடிகள் உயரமுள்ள குத்து விளக்குகள், மிக அழகிய கலை நுட்பங்களுடன்  கிடைக்கின்றன. உச்சியில் அன்னம் வீற்றிருக்கும் குத்து விளக்குகளில் சில வழிபாட்டுக்குரியவையாகவும், சில அலங்காரத்திற்கு உரியவையாகவும்  விளங்குகின்றன.

பாவை விளக்கு


ஒரு பெண் அகல் விளக்கை ஏந்திக் கொண்டிருப்பது போல் இருப்பது பாவை விளக்கு எனப்படுகிறது. இந்த வகை விளக்குகளை கடவுளின் முன் ஒளிதரும் விளக்காக பயன்படுத்தலாம்.

தீபங்கள் பதினாறு

தூபம், தீபம், புஷ்பதீபம் (பூ விளக்கு), நாத தீபம், புருஷா மிருகதீபம், கஜதீபம், ருயாஜத (குதிரை) தீபம், வியாக்ர (புலி) தீபம், ஹம்ஸ (அன்னம்) தீபம், கும்ப  (குடம்) தீபம், குக்குட (கோழி) தீபம், விருக்ஷ தீபம், கூர்ம (ஆமை) தீபம், நட்சத்திர தீபம், மேருதீபம், கற்பூர தீபம் என தீபங்கள் 16 வகைப்படும்.

தூக்கு விளக்குகள் எட்டு

1. வாடா விளக்கு
2. தூக்கு விளக்கு
3. தூண்டாமணி விளக்கு
4. நந்தா விளக்கு
5. கூண்டு விளக்கு
6. புறா விளக்கு
7. சங்கிலித் தூக்கு விளக்கு
8. கிளித்தூக்கு விளக்கு.

பூஜை விளக்குகள் ஒன்பது 

சர்வராட்சத தீபம், சபூத தீபம், பிசாஜ தீபம், கின்னர தீபம், கிம்புரு தீபம், கணநாயக தீபம், வித்யாதர தீபம், கந்தர்வ தீபம், பிராக தீபம் ஆகியவை 9 வகை பூஜை  விளக்குகளாக வழக்கத்தில் உள்ளன. சரவிளக்கு, நிலை விளக்கு, கிளித்தட்டு விளக்கு ஆகியன கோவில் விளக்குகளின் மூன்று வகைகளாகும். கைவிளக்குகள் ஐந்து கஜலட்சுமி விளக்கு, திருமால் விளக்கு, தாமரை விளக்கு, சிலுவை விளக்கு, கணபதி விளக்கு ஆகியவை கை விளக்குகளாகும். நால்வகை திக்பாலர் தீபங்கள் ஈசான தீபம், இந்திர தீபம், வருண தீபம், யம தீபம். 

அஷ்டகஜ தீபங்கள் எட்டு

ஐராவத தீபம், புண்டரீக தீபம், குமுத தீபம், ஜனதீபம், புஷ்பகந்த தீபம், சார்வ பவும தீபம், சுப்ரதீபம், பித்ர தீபம் .

தீபங்கள் ஏற்றும் இடங்கள்:



வீட்டின் பூசையறை,  நடு முற்றம், சமயலறை, துளசி மாடம், பாம்பு புற்று, நீர் நிலைகளின் கரைகள், ஆலயம் போன்ற இடத்திலும் தீபங்களை ஏற்றலாம். மாலை நேரம் நடு முற்றத்தில் மாக்கோலம் போட்டு மஞ்சள் திரி வைத்து நெய் தீபம் ஏற்றினால் அந்த குடும்பம் வறுமையின் ஆழத்தில் கிடந்தாலும் மிக கண்டிப்பாக செல்வ செழிப்பின் உச்சத்திற்கு வருமென்று சாஸ்திரங்கள் உறுதியாக சொல்லுகின்றன.

தத்தாத்ரேரும்,அவரது மகிழ்ச்சிக்கான காரணங்களும்


“மரத்தையும், கல்லையும், விஷம் கக்கும் பாம்பையும் மனிதன் வணங்குகிறானே… மிருகங்களை இறைவனுக்கு வாகனமாக்கி யுள்ளானே… இதெல்லாம் மூடநம்பிக்கை இல்லையா?’ என்று கேட்பவர்கள் இருக்கின்றனர்.
தத்தாத்ரேயர் இவர்களுக்கெல்லாம் பதில் சொல்லி உள்ளார். இவர், அத்திரி முனிவர்- அனுசூயா தம்பதியின் புதல்வர். பெரிய ரிஷியாக விளங்கினார்.
தத்தாத்ரேயர் காட்டில்  சுற்றிக் கொண்டிருந்த போது, யது என்ற மன்னனைச் சந்தித்தார். தத்தாத்ரேயர் மிக மகிழ்ச்சியாக இருந்ததைக்கண்ட அவன், அவரது மகிழ்ச்சிக்கான காரணத்தையும், அவரது குரு யார் என்பதையும் கேட்டான்.
“எனக்கு 24 குருமார்கள் இருக்கின்றனர்…’ என்றார்.
இந்தப் பதிலைக் கேட்டு ஆச்சரியப்பட்ட மன்னன், “சுவாமி! ஒருவருக்கு ஒரு குரு தானே இருக்க முடியும்? தங்கள் பதில் வித்தியாசமாக உள்ளதே…’ என்றான்.
அவனிடம், “பஞ்சபூதங்களான ஆகாயம், நீர், நிலம், நெருப்பு, காற்று, சந்திரன், புறா, மலைப்பாம்பு, கடல், விட்டில்பூச்சி, வண்டு, தேனீ, குளவி, சிலந்தி, யானை, மான், மீன், பருந்து, பாம்பு ஆகியவையும், நாட்டியக் காரி பிங்களா, ஒரு குழந்தை, ஒரு பணிப்பெண், அம்பு தயாரிப் பவன், சூரியன் ஆகியோரும் என் குருக்கள் ஆவர்…’ என்றார் தத்தாத்ரேயர். மன்னன் ஏதும் புரியாமல் நின்றதைக் கண்ட தத்தாத்ரேயர் இதற்கு விளக்கமளித்தார்…
“மன்னா! பொறுமையை பூமியிடம் கற்றேன்; தூய்மையை தண்ணீரிடம் தெரிந்து கொண்டேன். பலருடன் பழகினாலும், பட்டும், படாமல் இருக்க வேண்டும் என்பதைக் காற்றிடம் படித்தேன். எதிலும் பிரகாசிக்க வேண்டும் என்பதை தீ உணர்த்தியது; பரந்து விரிந்த எல்லையற்ற மனம் வேண்டும் என்பதை ஆகாயம் தெரிவித்தது.
“ஒரே சூரியன் இருந்தாலும் பல குடங்களில் உள்ள தண்ணீரில் பிரதிபலிப்பது போல மனம் ஒன்றாக இருந்தாலும் பலவாறாக சிந்திப்பதை உணர்ந்தேன்.
“வேடன் ஒருவன் புறாக்குஞ்சு களைப் பிடித்தான். அவற்றின் மீது அன்பு கொண்ட தாய்ப்புறா தானும் வலியச் சென்று வலையில் சிக்கியது. இதில் இருந்து பாசமே துன்பத்திற்கு காரணம் என்பதை உணர்ந்தேன்.
“எங்கும் அலையாமல் தன்னைத் தேடி வரும் உணவைப் பிடித்துக் கொள்வது போல, கிடைப்பதை உண்டு பிழைக்க வேண்டும் என்பதை மலைப்பாம்பிடம் கற்றேன். பல்லாயிரம் நதிகளை ஏற்றுக்கொள்ளும் கடல் போல, எவ்வளவு துன்பம் வந்தாலும் ஏற்கும் பக்குவத்தை கடலிடம் படித்தேன். பார்வையை சிதற விடாமல் ஒரே இடத்தில் மனதை செலுத்துவதை விட்டில் பூச்சி கற்றுத் தந்தது.
“எல்லாவற்றையும் மறந்து மகிழ்ச்சியாயிருப்பதை தாயிடம் பால் குடிக்கும் குழந்தையிடம் கற்றேன். பணிப்பெண் ஒருத்தி அரிசி புடைக்கும்போது வளையல்கள் உரசி ஒலி எழுப்பின; இரண்டு வளையல்களில் ஒன்றை அவள் கழற்றியதும், ஒலி அடங்கியது. இதில் இருந்து இரண்டு பேர் இருந்தாலும் தேவையற்ற விவாதம் ஏற்படும் என்பதைப் புரிந்து கொண்டு, தனிமையே சிறந்ததென்ற முடிவுக்கு வந்தேன்.
“பிங்களா என்ற நாட்டியக்காரி ஏற்கனவே பலரிடம் வருமானம் பார்த்தபின், இன்னும் யாராவது வரமாட்டார்களா எனக் காத்திருந்தாள். யாரும் வராததால், கிடைத்தது போதும் என்று உறங்கி விட்டாள். இதில் இருந்து ஆசையை விட்டால் எல்லாமே திருப்தியாகும் என்பதை புரிந்து கொண்டேன்.
“புற்களால் குழிக்குள் மாட்டிக்கொண்ட பெண் யானையை பார்த்த ஆண் யானை, அதன் மேல் ஆசை கொண்டு அதுவும் வீழ்ந்தது. இதில் இருந்து, பெண்ணாசையும் துன்பத்துக்கு காரணம் என்பதை உணர்ந்தேன்…’ என்று ஒவ்வொரு பொருளுக்கும் விளக்கமளித்தார்.
இதைக் கேட்ட அரசன், தன் பதவியையே உதறித் தள்ளி விட்டு, ஆன்மிகத்தில் ஈடுபட்டான்.
தத்தாத்ரேயர் இயற்கையிடம் கற்ற இந்த உயர்ந்த பாடம் நம் எல்லாருக்குமே பொருந்தும் தானே!

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

இராகு காலம்,எமகண்டம்,குளிகை நேரத்தை கண்டுபிடிக்க சுலபமான வழி

இராகு காலம்,எமகண்டம்,குளிகை நேரத்தை கண்டுபிடிக்க சுலபமான வழி 

நம் வாழ்க்கையில் ராகுகாலம்,எமகண்டம்,குளிகை காலம்.இவற்றைப் பார்த்தே பல செயல்களைச் செய்கின்றோம்.ஆனால் இவற்றை நினைவில் வைத்துக் கொள்வது மிகவும் கஷ்டமான ஒரு விஷயம்.இதை எளிதில் நினைவே வைத்துக் கொள்ள எளிமையான வழிமுறைகள்.

 இராகு காலம் நேரம் 
தினந்தோறும் ராகுவால் ஆளப்படுகின்ற 1.30மணி  நேரமே ராகுகால நேரம் என அழைக்கப்படுகிறது.இந்த நேரம் கெட்ட நேரமாகவே எடுத்துக் கொள்ளப்படுகிறது.
திருவிழா சந்தையில் வெண்  புட்டு  விற்க சென்றான் ஞானம் 
ராகு காலம் முதலில் ஆரம்பிப்பது திங்கட்கிழமையாகும்.

திங்கள் =காலை  7.30 – 9.00
சனி = 09.00 – 10.30
வெள்ளி = 10.30 – 12.00
புதன் = மதியம் 12.00 – 01.30
வியாழன் = 01.30 – 03.00
செவ்வாய் = 03.00 – 04.30
ஞாயிறு = 04.30 – 06.00


எமகண்டம்
எமகண்ட நேரம் 1.30மணி   இது கெட்ட நேரமாக கருதப்படுகிறது.எமனுக்கு ஏற்ற நேரம்.இவர் குருவின் புதல்வர் ஆவதால் வியாழக் கிழமையையே முதலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.பின்பு பின்னோக்கி கிழமைகளை புதன்,செவ்வாய்,திங்கள்,ஞாயிறு,சனி,வெள்ளி என்று நினைவில் வைத்துக் கொண்டால் எமகண்ட நேரம் சரியாக இருக்கும். 
கிழமை : எமகண்டம் :: பகல் பொழுதில்
வியாழன் =காலை 6.00--7.30
புதன் : 07.30 – 09.00
செவ்வாய் : 09.00 – 10.30
திங்கள் : 10.30 – 12.00
ஞாயிறு : மதியம் 12.00 – 01.30

சனி : 01.30 – 03.00
வெள்ளி : 03.00 – 04.30

இராகு காலம், எமகண்டம் ஆகிய நேரங்களில் சுபச் செயல்களை நீக்க வேண்டும். குளிகை காலத்தில் அசுபச் செயல்களை நீக்க வேண்டும்.
குளிகை
குளிகை காலத்தின் அளவு 1.30மணி நேரம் .குளிகன் என்பவர் சனியின் மைந்தன்.குளிகை காலம் ஆரம்பிப்பது முதலில் சனிக்கிழமை,பின்பு மற்ற நாட்களை பின்னோக்கினால் சனிக்கப் பின்,வெள்ளி,வியாழன்,புதன்,செவ்வாய்,திங்கள்,ஞாயிறு என்று கணக்கில் கொள்ளவும்.குளிகை காலமும் கெட்ட நேரமாகும்.இதில் ஆரம்பிக்கும் எந்த செயலும் முற்றுப் பெறாது மீண்டும் தொடரும் என்று கருதப்படுகிறது.
கிழமை = குளிகை நேரம் :: பகல் பொழுதில் 
சனி =காலை 06.00 – 07.30
வெள்ளி = 07.30 – 09.00
வியாழன் = 09.00 – 10.30
புதன் = 10.30 – 12.00
செவ்வாய் = மதியம் 12.00 – 01.30
திங்கள் = 01.30 – 03.00
ஞாயிறு = 03.00 – 04.30

தமிழ் மாதத்தின் முக்கிய பண்டிகைகள்

தமிழ் மாதத்தின் முக்கிய பண்டிகைகள்



இந்துக்களாகிய நாம் எல்லோரும் வருடம் முழுவதும் மாதா மாதம் ஏதாவது ஒன்று அல்லது அதற்கு மேலும் பண்டிகைகளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இந்தப் பண்டிகை நாட்களைக் கூர்ந்து கவனித்தால் பெரும்பாலும் அமாவாசையும் ,பவுர்ணமியும் பங்கு வகிக்கின்றன. இந்த இரண்டு நாட்களையும் நம் முன்னோர்கள் புனித நாட்களாகக் கருதி அந்த நாட்களில் இறைவனிடம் மனதை செலுத்த விரத நாட்களாகவும் ஆக்கினார்கள். அப்படி விரதம் இருக்க வேண்டுமானால் நம் உடலில் பலமும், மனதில் சக்தியும் வேண்டும்.
விஞ்ஞான ரீதியாக மட்டுமல்லாமல் ஆன்மிக ரீதியாகவும் பவுர்ணமி மிகவும் சிறப்பு வாய்ந்த முக்கிய
நாளாகக் கருதப்படுவதால் மாதாமாதம் ஒவ்வொரு பவுர்ணமியையும் ஒரு பண்டிகையாகக் கொண்டாடும்படி நம் முன்னோர்கள் வைத்துள்ளார்கள். மாதா மாதம் பவுர்ணமி ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்திலேயே வரும், அந்த நாட்களில் கொண்டாடப்படும் பண்டிகைகள் பெரும்பாலும் அந்த நட்சத்திரத்தின் பெயரிலேயே வருவதைக் காணலாம். மேலும், தட்சனது சாபத்தால் சிவபெருமானிடம் அடைக்கலம் வேண்டினார் சந்திரன். சந்திரனுக்கு அடைக்கலம் அளித்த சிவபெருமான் அதை தன் தலையில் சூடிக்கொண்டு சந்திரசேகரர் ஆனார். ஆதலால் பன்னிரண்டு பவுர்ணமிகளுமே சிவபெருமானுக்குரிய விசேஷ  நாட்களாகும்.

சித்திரை – சித்ரா பவுர்ணமி
சித்திரை மாதத்தில் பவுர்ணமி சித்திரை நட்சத்திரத்தில் வரும். சித்ரா பவுர்ணமி யன்றுதான் யமதர்மராஜாவின் கணக்கரான சித்ரகுப்தன் அவதரித்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. அன்று ஒரு நாள் விரதம் இருந்து சித்ரகுப்தனை வழிபட்டால் மோக்ஷம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சித்திரை நட்சத்திரம் அம்மனுக்குரிய சிறப்பு தினம். சிவாலயங்களில் சிவனுக்கு மருக்கொழுந்தால் அபிஷேகம் செய்வார்கள்.

வைகாசி – வைகாசி விசாகம்
வைகாசி மாதத்தில் பவுர்ணமியில் வரும் விசாகம் என்பது முருகப் பெருமான் பொய்கையில் ஆறு முகங்களுடன் அவதரித்த நாளாகும் என்பதால் முருகன் கோயில்களில் இந்தநாள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். சிவாலயங்களில் சிவனுக்கு சந்தனதத்தால் அபிஷேகமும், அலங்காரமும் செய்வார்கள்.

ஆனி – ஆனித் திருமஞ்சனம்
ஆனி மாதத்தில் பவுர்ணமி கேட்டை நட்சத்திரத்தில் வரும். சிவன் கோயில்களில் சிவனுக்கு முக்கனிகளால் (மா, பலா, வாழை) அபிஷேகம் செய்வார்கள். ஆனி மாதத்தில் சிவபெருமான், பார்வதியின் அருளைப் பெற வழிவகுக்கும் நாளாகும். ஆனி மாதம் பவுர்ணமியன்று காரைக்கால் அம்மையாருக்கு மாங்கனித் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும்.

ஆடி – ஆடி குரு பூர்ணிமா
ஆடி மாதத்தில் பவுர்ணமி உத்திராடம் நட்சத்திரத்தில் வரும். இந்த பவுர்ணமியில் சிவன் கோயில்களில் சிவனுக்கு காராம் பசுவின் பாலால் அபிஷேகம் செய்வார்கள். மகாபாரதம் ஸ்ரீமத் பாகவதம் போன்ற புராணங்களை எழுதியவர் வேதவியாசர். ஆடி மாத பவுர்ணமியை வியாச பூர்ணிமா அல்லது குரு பூர்ணிமா என்ற பெயரில் வியாசபகவானை பூஜிக்கிறார்கள். ஆடி மாத பவுர்ணமியில் அனைத்துப் பெருமாள் கோயில்களிலும் கஜேந்திர மோட்சம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். அம்மன் கோயில்களிலும் இந்த பவுர்ணமி அன்று மாவிளக்கு போடுதல், பொங்கல் இடுதல், லலிதா ஸஹஸ்ரநாமம் அர்ச்சனை போன்ற விசேஷ ஆராதனைகள் நடைபெறுகின்றன.

ஆவணி – ஆவணி அவிட்டம்
ஆவணி மாதம் அவிட்டம் நட்சத்திரத்தில் வரும். இந்த பவுர்ணமியில் சிவன் கோயில்களில் சிவனுக்கு வெல்ல சர்க்கரையால் அபிஷேகம் செய்வார்கள். உபநயனம் செய்து கொண்ட பிராமணர்கள் ஆவணி மாத்தில் அவிட்டம் நட்சத்திரத்தோடு கூடிய பவுர்ணமி அன்று கொண்டாடும் பண்டிகை ஆவணி அவிட்டம்.

புரட்டாசி – புரட்டாசி பூரட்டாதி
புரட்டாசி மாதம் பூரட்டாதி நட்சத்திரத்தில் பவுர்ணமி வருகிறது. இந்த மாத பவுர்ணமியில் சிவன் கோயில்களில் சிவனுக்கு கோதுமையும் வெல்லமும் கலந்த வெல்ல அப்பத்தால் அபிஷேகம் செய்வார்கள். இந்த மாத பவுர்ணமி அன்று தான் உமா மகேஸ்வர விரதம் கடைபிடிக்கப்படுகிறது.

ஐப்பசி – ஐப்பசி அன்னாபிஷேகம்
ஐப்பசி மாதம் அசுவினி நட்சத்திரத்தில் பவுர்ணமி வரும். எல்லா சிவாலயங்களிலும் சிவனுக்கு அன்னாபிஷேகம் மிக மிக சிறப்பாகக் கொண்டாடப்படும். உலகில் உள்ள ஜீவராசிகளுக்கெல்லாம் உணவளித்துக் காக்கும் சிவபிரானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிவனுக்கு அன்னம், காய்கறி, பழங்கள், இனிப்பு வகைகளால் அலங்கரிப்பார்கள்.

கார்த்திகை – கார்த்திகை தீபம்
கார்த்திகை பவுர்ணமி கார்த்திகை நட்சத்திரத்திலேயே வரும். இந்த பவுர்ணமியில் எல்லா சிவாலயங்களிலும் சிவனுக்குப் பசு நெய்யால் அபிஷேகம் செய்வார்கள். கார்த்திகை நட்சத்திரமும் கார்த்திகை பவுர்ணமி நாளும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் எல்லா சிவாலயங்களிலும் கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த நாளில் ஏற்றப்படும் திருவண்ணாமலை தீபம் உலக பிரசித்தம். அன்று தான் பார்வதிக்கு ஈசுவரன் இடபாகம் தந்து அர்த்தநாரீசுவரன் ஆனார் என்பர்.
மார்கழி – மார்கழி திருவாதிரை
மார்கழி பவுர்ணமி திருவாதிரை நட்சத்திரத்தில் வரும். இது பரமசிவனின் நட்சத்திரமாகும். இந்த நாளில் சிவனுக்குப் பசு நெய்யாலும் நறுமண பன்னீராலும் அபிஷேகம் செய்வார்கள். மார்கழியில் பாடப்படும் திருப்பாவை மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் என்று பவுர்ணமியில் துவங்குகிறது. கோயில்களில் ஆருத்ரா தரிசனமும் இந்த திருவாதிரை பவுர்ணமி அன்றுதான் கொண்டாடப்படும்.

தை – தைப்பூசம்
தை மாதத்தில் பவுர்ணமி பூசம் நட்சத்திரத்தில் வரும். அன்று செய்யும் தைப்பூசம் முருகன் வழிபாட்டிற்கு ஈடு இணையே இல்லை. தைப்பூசம் முருகனுக்கு உகந்த நாள் என்றாலும் அன்று முருகனுடன் சிவனையும் வழிபட வேண்டும். சிவனுக்கு அன்று கருப்பஞ்சாறால் அபிஷேகம் செய்வது உகந்தது. தைப்பூசத்தன்றுதான் உலகம் தோன்றியதாகக் கூறப்படுகிறது. சத்தியஞான சபையைத் தோற்றுவித்த வள்ளலார் தைமாத வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரத்தன்று ஏற்றி வைத்த ஜோதி ஜோதி தரிசனமாகக் காட்டப்படுகிறது. சிவபெருமான் உமா தேவியுடன் ஞான சபையான சிதம்பரத்தில் நடனம் ஆடி தரிசனம் தந்ததும் இந்த தைப்பூசத் திருநாளில்தான்.

மாசி – மாசிமகம்
மாசி மாதத்தில் பவுர்ணமி மகம் நட்சத்திரத்தில் வரும். சிவன் கோயில்களில் சிவனுக்குப் பசு நெய்யில் அபிஷேகம் செய்வார்கள். இந்த நாளை மாசி மகம் என்று கோயில்களில் இறைவனை புனித நீர் நிலைகளில் நீராடல் செய்து கொண்டாடுவார்கள். வீடுகளில் அன்று சித்ரான்னங்கள் பாயசம் முதலியன செய்து நிலவிற்குப் படைத்து நிலவொளியில் குடும்பத்துடன் உண்டு மகிழ்வார்கள்.

பங்குனி – பங்குனி உத்திரம்

பங்குனி மாதத்தில் பவுர்ணமி உத்திர நட்சத்திரத்தில் வரும். சிவன் கோயில்களில் முருகனுக்கு சிறப்பு விரத தினமாக் கொண்டாடப்படுகிறது. கடவுளரின் திருமண நாளாகவும் கொண்டாடப்படும். இந்த பவுர்ணமியன்று திருச்செந்தூர் கோயிலில் ஐராவத மண்டபத்தில் 108 சிவலிங்கங்கள் சாட்சியாக வள்ளி முருகன் திருமணம் சிறப்பாக நடைபெறும். மேலும் பார்வதி தேவி சிவனை மணந்து கொண்ட நாள். மேலும் மீனாட்சி சுந்தரேஸ்வரர், ஸ்ரீராமர் – சீதை, ஆண்டாள் – ஸ்ரீரங்கநாதர், சாவித்திரி – சத்தியவான், மயிலை கற்பகாம்பாள் – கபாலீஸ்வரர் திருமணங்கள் நடைபெற்ற நன்னாள். இந்த தினம் ஸ்ரீஐயப்பனும், அர்ஜுனனும் அவதரித்த திருநாள்.

ஸ்ரீ கணபதியின் திருவுருவங்கள் - நாமகரணங்கள்




திருவுருவங்கள்

1. பாலகணபதி
2. தருண கணபதி
3. பக்த கணபதி
4. வீர கணபதி
5. சக்தி கணபதி
6. துவஜ கணபதி
7. சித்தி கணபதி
8. உச்சிஷ்ட கணபதி
9. விக்கினராஜ கணபதி
10. ஷிப்ர கணபதி
11. ஹேரம்ப கணபதி
12. லட்சுமி கணபதி
13. நிருத்த கணபதி
14. ஊர்த்துவ கணபதி
15. ஏகாட்சர கணபதி
16. வர கணபதி
17. திரியட்சர கணபதி
18. ஷிப்ரப்பிரசாத கணபதி
19. ஹரித்திரா கணபதி
20. ஏகதந்த கணபதி
21. சிருஷ்டி கணபதி
22. உத்தண்ட கணபதி
23. ரிணமொச்சக கணபதி
24. துண்டி கணபதி
25. துவிமுக கணபதி
26. திரிமுக கணபதி
27. சிம்ம கணபதி
28. துர்க்கா கணபதி
29. யோக கணபதி
30. சங்கடஹர கணபதி



நாமகரணங்கள்

1. ஏகதந்தர்
2. சுமுகர்
3. கஜகர்ணர்
4. கபிலர்
5. லம்போதரர்
6. விகடர்
7. விநாயகர்
8. விக்னராஜர்
9. தூமகேது
10. கணாத்யட்சர்
11. கஜானனர்
12. பாலசந்திரர்


ஆயுதங்கள் - அணிகலன்கள்

1. பாசம்
2. அங்குசம்
3. தந்தம்
4. வேதாளம்
5. சக்தி
6. அம்பம்
7. வில்
8. சக்கரம்
9. கத்தி
10. கேடகம்
11. சம்மட்டி
12. கதை
13. நாகபாசம்
14. சூலம்
15. குந்தாவி
16. மழு
17. கொடி
18. தண்டம்
19. கமண்டலம்
20. பரசு
21. சங்கம்
22. கரும்புவில்
23. புஷ்பபாணம்
24. கோடாரி
25. அஷமாலை
26. சாமரம்
27. கட்டுவாங்கம்
28. தீஅகல்
29. வீணை.

9ன் சிறப்பு

9ன் சிறப்பு


எண்களில் விசேஷமான எண்ணாக கருதப்படுவது ஒன்பது.
அந்த எண்ணில் நீண்ட வாழ்வு எனும் அர்த்தம் பொதிந்திருப்பதாகச் சொல்கின்றனர்,
சீனர்களின் சொர்க்க கோபுரம், ஒன்பது வளையங்களால் சூழப்பட்டுள்ளது.
எகிப்து, ஐரோப்பா, கிரீக் முதலான நாடுகளும்  9-ஆம் எண்ணை  விசேஷமாகப் பயன்படுத்திப் போற்றுகின்றன.
புத்த மதத்தில், மிக முக்கியமான  சடங்குகள் யாவும் ஒன்பது துறவிகளைக் கொண்டே
நடைபெறும். தங்கம்,வெள்ளி மற்றும் பிளாட்டினத்தின் சுத்தத்தை 999 என்று மதிப்பிடுவார்கள்
பெண்களின் கர்ப்பம், பூரணமாவது ஒன்பதாம் மாத நிறைவில்தான்!
ஒன்பது எனும் எண்  இன்னும் மகத்துவங்கள்  கொண்டது.
ஒன்பது என்ற எண்ணுக்கு வடமொழியில் நவம் என்று பெயர்.
நவ என்ற சொல்  புதிய, புதுமை எனும் பொருள் உடையது.
நவ சக்திகள்:
1,வாமை,
2,ஜேஷ்டை,
3,ரவுத்ரி,
4,காளி,
5,கலவிகரணி,
6,பலவிகரணி,
7,பலப்பிரமதனி,
8,சர்வபூததமனி,
9,மனோன்மணி,
நவ தீர்த்தங்கள்:
1,கங்கை,
2,யமுனை,
3,சரஸ்வதி,
4,கோதாவரி,
5,சரயு,
6.நர்மதை,
7,காவிரி,
8,பாலாறு,
9,குமரி
நவ வீரர்கள்:
1,வீரவாகுதேவர்,
2,வீரகேசரி,
3,வீரமகேந்திரன்,
4,வீரமகேசன்,
5,வீரபுரந்திரன்,
6,வீரராக்ஷசன்,
7,வீரமார்த்தாண்டன்,
8,வீரராந்தகன்,
9,வீரதீரன்
நவ அபிஷேகங்கள்:
1,மஞ்சள்,
2,பஞ்சாமிர்தம்,
3,பால்,
4,நெய்,
5,தேன்,
6,தயிர்,
7,சர்க்கரை,
8,சந்தனம்,
9,விபூதி.
நவ ரசம்:
1,இன்பம்,
2,நகை,
3,கருணை,
4,கோபம்,
5,வீரம்,
6,பயம்,
7,அருவருப்பு,
8,அற்புதம்,
9,சாந்தம் ,
ஆகியன நவரசங்கள் ஆகும்.
நவக்கிரகங்கள்:
1,சூரியன்,
2,சந்திரன்,
3,செவ்வாய்,
4,புதன்,
5,குரு,
6,சுக்கிரன்,
7,சனி,
8,ராகு,
9.கேது
நவமணிகள்:-
(நவரத்தினங்கள்)
1,கோமேதகம்,
2,நீலம்,
3,வைரம்,
4,பவளம்,
5,புஸ்பராகம்,
6,மரகதம்,
7,மாணிக்கம்,
8,முத்து,
9,வைடூரியம்
நவ திரவியங்கள்:
1,பிருதிவி,
2,அப்பு,
3,தேயு,
4,வாயு,
5,ஆகாயம்,
6,காலம்,
7, திக்கு,
8,ஆன்மா,
9,மனம்
நவலோகம் (தாது):
1,பொன்,
2,வெள்ளி,
3,செம்பு,
4,பித்தளை,
5,ஈயம்,
6,வெண்கலம்,
7,இரும்பு,
8,தரா,
9,துத்தநாகம்
நவ தானியங்கள்:
1,நெல்,
2,கோதுமை,
3,பாசிப்பயறு,
4,துவரை,
5,மொச்சை,
6,எள்,
7,கொள்ளு,
8,உளுந்து,
9,வேர்க்கடலை
சிவ விரதங்கள் ஒன்பது:
1,சோமவார விரதம்,
2,திருவாதிரை விரதம்,
3,உமாகேச்வர விரதம்,
4,சிவராத்ரி விரதம்,
5,பிரதோஷ விரதம்,
6,கேதார விரதம்,
7,ரிஷப விரதம்,
8,கல்யாணசுந்தர விரதம்,
9,சூல விரதம்
நவசந்தி தாளங்கள்:
1,அரிதாளம்,
2,அருமதாளம்,
3,சமதாளம்,
4,சயதாளம்,
5,சித்திரதாளம்,
6,துருவதாளம்,
7,நிவர்த்திதாளம்,
8,படிமதாளம்,
9,விடதாளம்
அடியார்களின் பண்புகள்:
1,எதிர்கொள்ளல்,
2,பணிதல்,
3,ஆசனம் (இருக்கை) தருதல்,
4,கால் கழுவுதல்,
5,அருச்சித்தல்,
6,தூபம் இடல்,
7,தீபம் சாட்டல்,
8,புகழ்தல்,
9,அமுது அளித்தல்,
(விக்ரமார்க்கனின் சபையிலிருந்த 9 புலவர்கள்; நவரத்னங்கள் எனச் சிறப்பிக்கப்படுவர்)
1,நவரத்னங்கள் (முனிவர்கள்)தன்வந்த்ரி
2,க்ஷணபகர்,
3,அமரஸிம்ஹர்,
4,சங்கு,
5,வேதாலபட்டர்,
6,கடகர்ப்பரர்,
7,காளிதாசர்,
8,வராகமிஹிரர்,
9,வரருசி
அடியார்களின் நவகுணங்கள்:
1,அன்பு,
2,இனிமை,
3,உண்மை,
4,நன்மை,
5,மென்மை,
6,சிந்தனை,
7,காலம்,
8,சபை,
9,மவுனம்.
நவ நிதிகள்:
1,சங்கம்,
2,பதுமம்,
3,மகாபதுமம்,
4,மகரம்,
5,கச்சபம்,
6,முகுந்தம்,
7,குந்தம்,
8.நீலம்,
9.வரம்
நவ குண்டங்கள்:
யாகசாலையில் அமைக்கப்படும்
ஒன்பது வகையிலான
யாக குண்ட அமைப்புக்கள்:
1,சதுரம்,
2,யோனி,
3,அர்த்த சந்திரன்,
4,திரிகோணம்,
5,விருத்தம் (வட்டம்),
6.அறுகோணம்,
பத்மம்,
எண்கோணம்,
பிரதான விருத்தம்.
1,நவவித பக்தி :
2,சிரவணம்,
3,கீர்த்தனம்,
4,ஸ்மரணம்,
5,பாத சேவனம்அர்ச்சனம்,
6,வந்தனம்,
7,தாஸ்யம்,
8,சக்கியம்,
9,ஆத்ம நிவேதனம்
நவ பிரம்மாக்கள் :
1,குமார பிரம்மன்,
2,அர்க்க பிரம்மன்,
3,வீர பிரம்மன்,
4,பால பிரம்மன்,
5,சுவர்க்க பிரம்மன்,
6,கருட பிரம்மன்,
7,விஸ்வ பிரம்மன்,
8,பத்ம பிரம்மன்,
9,தராக பிரம்மன்
நவக்கிரக தலங்கள் –
1,சூரியனார் கோயிவில்,
2,திங்களூர்,
3,வைத்தீஸ்வரன் கோவில்,
4,திருவெண்காடு,
5,ஆலங்குடி,
6,கஞ்சனூர்,
7,திருநள்ளாறு,
8,திருநாகேஸ்வரம், 9,கீழ்ப்பெரும்பள்ளம்
நவபாஷாணம் –
1,வீரம்,
2, பூரம்,
3, ரசம்,
4,ஜாதிலிங்கம்,
5,கண்டகம்,
6,கவுரி பாஷாணம்,
7,வெள்ளை பாஷாணம்,
8,ம்ருதர்சிங்,
9,சிலாஷத்
நவதுர்க்கா –
1,ஸித்திதத்ரி,
2,கஷ்முந்தா,
3,பிரம்மாச்சாரினி,
5,ஷைலபுத்ரி,
7,மகா கவுரி,
8,சந்திரகாந்தா,
9,ஸ்கந்தமாதா,
6.மகிஷாசுரமர்த்தினி, -,காளராத்ரி
நவ சக்கரங்கள் –
1,த்ரைலோக்ய மோகன சக்கரம்,
2,சர்வசாபுரக சக்கரம்,
3,சர்வ சம்மோகன சக்கரம்,
4,சர்வ சவுபாக்ய சக்கரம்,
5,சர்வார்த்த சாதக சக்கரம்,
6,சர்வ ரக்ஷõகர சக்கரம்,
7,சர்வ ரோஹ ஹர சக்கரம்,
8,சர்வ ஸித்தி ப்ரத சக்கரம்,
9,சர்வனந்தமைய சக்கரம்.
நவநாதர்கள் –
1,ஆதிநாதர்,
2,உதய நாதர்,
3,சத்ய நாதர்,
4,சந்தோஷ நாதர்,
5,ஆச்சாள் அசாம்பயநாதர்,
6,கஜ்வேலி கஜ்கண்டர் நாதர்,
7,சித்த சொவ்றங்கி
8,நாதர், மச்சேந்திர நாதர்,
9,குரு கோரக்க நாதர்
உடலின் நவ துவாரங்கள் :
இரண்டு கண்கள்,
இரண்டு காதுகள்,
இரண்டு மூக்குத் துவாரங்கள்,
ஒரு வாய்,
இரண்டு மலஜல துவாரங்கள்
உடலின் ஒன்பது சக்கரங்கள் :
1,தோல்,
2,ரத்தம்,
3,மாமிசம்,
4,மேதஸ்,
5,எலும்பு,
6,மஜ்ஜை,
7,சுக்கிலம்,
8,தேஜஸ்,
9,ரோமம்
ஸ்ரீகிருஷ்ணருக்குப் பிரியமான மாதம்... மார்கழி. இது வருடத்தின் 9-வது மாதம்! மனிதராகப் பிறந்தவன் எப்படி வாழ வேண்டும் என வாழ்ந்து காட்டிய ஸ்ரீராமபிரான் பிறந்தது, 9-ஆம் திதியான நவமி நாளில்தான்.