திங்கள், 18 செப்டம்பர், 2017

பஞ்சதீப எண்ணெய் சிறப்பு

பஞ்சதீப எண்ணெய் சிறப்பு



பஞ்ச பூதசக்திகளை சமநிலையில் வைத்தால் சகல நன்மைகளையும் பெறமுடியும். இதற்கு பஞ்சதீப எண்ணெய் ஊற்றி விளகேற்றினால் நற்பயன்களை பெறலாம்.

பஞ்ச தீபம் எண்ணெய்யின் பலன்கள்:
பசு நெய் - கிரகதோஷம்,செல்வவிருத்தி, நினைத்தது கைகூடும்.
நல்லெண்ணை - தாம்பத்ய விருத்தி,ஆரோக்கியம் அதிகரிக்கும்.
வேப்ப எண்ணை - ஐஸ்வர்ய யோகம்,உறவு நலம் பெறவும், மற்றவர்களின் உதவி பெறவும்.
இலுப்பை எண்ணை -சகல காரிய வெற்றி.
விளக்கெண்ணை - புகழ், குல தெய்வ அருள் கிடைக்கும்.
ஒரு லிட்டர் பஞ்சதீபம் எண்ணை செய்ய தேவையானவைகள்:
1. சுத்தமான பசு நெய் - 200 மில்லி
2. நல்லெண்ணை - 350 மில்லி
3. வேப்ப எண்ணை - 100 மில்லி
4. இலுப்பை எண்ணை - 200 மில்லி
5. விளக்கெண்ணை - 150 மில்லி
பஞ்சதீப எண்ணெய் சிறப்பு
மேலே குறிப்பிட்ட எண்ணைகளை அதன் அளவு மாறாமல் ஒன்றாக சேர்த்து ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்து கொண்டு தினமும் தீபம் ஏற்றி பஞ்ச தீபம் எண்ணெய்யின் பலனை அடையலாம்.

பசுநெய், விளக்கு எண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகிய இந்த ஐந்தும் கலந்த பஞ்ச தீப எண்ணெய் ஊற்றி ஐந்து முகம் விளக்கேற்றி, பஞ்சமி திதியில் தேவியை வழிபட்டால் அம்மனின் அருள் கிடைக்கும். வீடு மற்றும் கோவில்களில் விளக்கு ஏற்றி வர நமக்கு ஏற்படும்  தொடர்நோய்களில் இருந்து விடுதலை, செய்வினை, பில்லி, சூனியம், ஏவல், கடன் தொல்லைகள் போன்றவை அகலும்.

இந்த எண்ணெயை அம்மாவாசை, பெளர்ணமி மற்றும் செவ்வாய், வெள்ளி போன்ற தினங்களில் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை விளக்கேற்றும் பொழுது சிறந்த பலன் கிடைக்கும். ஞாயிறு, திங்கள், வியாழன், சனி ஆகிய தினங்களில்தான் குத்துவிளக்கை விளக்கி சுத்தப்படுத்த வேண்டும். பிற நாட்களில் சுத்தப்படுத்தக் கூடாது. 

குத்து விளக்கு பூஜை செய்தால் தலைவாழை இலை மீது குத்து விளக்கை வைத்து பூஜை செய்ய வேண்டும். விளக்கில் விபூதி, சந்தனம் அல்லது குங்குமம் உச்சியில் ஒரு பொட்டும் அதன் கீழ் மூன்றும், அதன் அடி கீழ் இரண்டும், அடியில் இரண்டுமாக எட்டு இடங்களில் பொட்டு இட வேண்டும். 

குத்து விளக்கின்அடிப்பாகத்திலும், நடுப்பகுதியிலும், உச்சிப் பகுதியிலும் பூச்சூட வேண்டும். விளக்கில் முதலில் திரியைப் போட்டு பின்னர் எண்ணெய் ஊற்றக் கூடாது. முதலில் எண்ணெய் ஊற்றி விட்டு பின்னர்தான் திரிபோட வேண்டும். 

சிவன் கோயிலில் திங்கட்கிழமைகளில் மாலை நேரத்தில் பஞ்சதீபம் ஏற்றி பிரார்த்தனை செய்துகொண்டால் நினைத்தது நடக்கும்.
பயத்தை விரட்டும் பைரவர் வழிபாடு



பவுர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமி தினத்தில், பைரவருக்கு பஞ்ச தீபம் ஏற்றி வழிபாடு செய்தால், தீராத தொல்லைகள் எதுவாக இருந்தாலும் தீர்ந்து வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை. 

நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய், பசு நெய் ஆகியவற்றை தனித்தனி அகல் விளக்கில் ஊற்றி, தீபம் ஏற்ற வேண்டும். ஒரு தீபத்தில் இருந்து மற்றொரு தீபத்தை ஏற்றாமல் ஒவ்வொரு தீபத்தையும் தனித்தனியாக ஏற்றி வழிபாடு செய்து வந்தால் எண்ணிய காரியங்கள் எளிதில் நிறைவேறுவதுடன், பைரவரின் பரிபூரணஅருளும் கிட்டும்.


தீபாவளி தின தீப வழிபாடு உங்கள் புகழ், செல்வம், உடல் நலத்தை மேலும் அதிகரிக்கும்.Shar
0

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக