திங்கள், 27 ஜூலை, 2020

கவலை, பயத்தை போக்கும் சாய்பாபா மந்திரம்

மனதிலிருக்கும் கவலை, பயத்தை போக்கும் சாய்பாபா மந்திரம்


சனி, 6 ஜூன், 2020

நம் வீட்டில் அதிகப்படியான பணம் சேர்வதற்கு என்ன செய்ய வேண்டும்?

 நம் வீட்டில் அதிகப்படியான பணம் சேர்வதற்கு என்ன செய்ய வேண்டும்? 


இது ஒரு சுலபமான பரிகாரம். நம்பிக்கையோடு செய்து பார்க்கும் பட்சத்தில், நல்ல பலனை பெற முடியும். எந்த ஒரு பரிகாரமும், செய்தவுடன் பலனை கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது மிகவும் தவறு. ஒரு பிரச்சினைக்கு பல பரிகாரங்கள் சொல்லப்பட்டாலும், உங்களுக்கு தகுந்த பரிகாரம் எது என்பதை தேர்ந்தெடுக்க வேண்டியது உங்கள் கையில்தான் உள்ளது. அதை நினைவில் வைத்துக்கொண்டு பரிகாரத்தை தொடங்க வேண்டும். சரி. பணவரவு அதிகரிக்க என்ன செய்யலாம்? என்பதை தெரிந்து கொள்வோமா? 







ஒரு செப்புப் பாத்திரம் கட்டாயம் இதற்கு தேவை. வேறு எந்த ஒரு உலோகப் பொருட்களையும் பயன்படுத்தினால், விரைவாக பலனை எதிர்பார்க்க முடியாது. செம்பினால் ஆன சொம்போ, டம்லரோ இருந்தால் எடுத்துக் கொள்ளலாம். அதில் கல் உப்பு, சர்க்கரை, பச்சரிசி ஒரு ரூபாய் நாணயம் இவைகளை நிரப்பி வைக்கப் போகின்றோம். இன்று நம்முடைய வீடுகளில் இனிப்பு சுவைக்காக பயன்படுத்துவது சர்க்கரை தான். ஆனால் சர்க்கரைக்கு பதிலாக, நாட்டு சர்க்கரை, வெல்லம் இவைகளை பயன்படுத்துவது சிறந்தது. நீங்கள் எடுத்து வைத்திருக்கும் செம்பு டம்ளரில், முதலாவதாக 2 டேபிள்ஸ்பூன் அளவு கல்லுப்பு, 2 டேபிள்ஸ்பூன் அளவு நாட்டுச் சர்க்கரையோ, சர்க்கரையோ அல்லது வெல்லமும் போட்டுக்கொள்ள வேண்டும். அதன் பின்பு பச்சரிசி 2 கைப்பிடி அளவு, அதன்மேல் ஐந்து ரூபாய் நாணயம் ஒன்று இப்படியாக, தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இதில் போடப்படும் அளவுகள் உங்களுடைய இஷ்டம்தான். பச்சரிசியை மட்டும் இரண்டு கைப்பிடி அளவு போட்டுக் கொள்ளுங்கள். 


 இதை எந்த கிழமையில் வேண்டும் என்றாலும் செய்யலாம். குறிப்பாக வியாழக்கிழமை செய்வது நல்ல பலனைத் தரும். நீங்கள் தயார் செய்த இந்த செம்பு பாத்திரத்தை உங்கள் வீட்டு பூஜையறையில் மகாலட்சுமிக்கு முன்பாக வைத்து விடவேண்டும். எந்த கிழமையில் நீங்கள் இதை தொடங்குவீர்களோ, அந்தக் கிழமையில் இருந்து ஒரு வாரம் கழித்து, அதாவது ஏழு நாட்கள் கழித்து, இந்த பொருட்களை எல்லாம் புதியதாக மாற்றி வைக்க வேண்டும். பழைய பொருட்களை காக்கை குருவிகளுக்கு உணவாக போட்டுவிடலாம். வியாழக்கிழமை அன்று இந்த பரிகாரத்தை செய்தால், அடுத்த வியாழக்கிழமை பழைய பொருட்களை மாற்றி விட்டு, புதிய பொருட்களை வைக்கலாம். பணவரவு அதிகரிக்கவும், கையில் இருக்கும் பணம் வீண் விரயம் ஆகாமல் இருக்கவும், வீட்டிலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். தொழில் செய்யும் ஸ்தாபனத்திலும், இந்த பரிகாரத்தை செய்யலாம். தொடர்ந்து 21 வாரங்கள் செய்து வாருங்கள், இப்படி செய்து வரும் பட்சத்தில் மாற்றம் நிச்சயம் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. நம்பிக்கையுள்ளவர்கள் நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து, பயனடையுங்கள்  

திங்கள், 25 மே, 2020

பிரதோஷ நேரத்தில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்


பிரதோஷ நேரத்தில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்..! Pradosham Mantras in Tamil..!


தோஷம் என்பது குற்றம் என்ற வார்த்தையை குறிக்கின்றது. பிரதோஷம் என்றால் குற்றம் இல்லாத வாழ்க்கை என்பதை குறிக்கும். குற்றமற்ற இந்த பிரதோஷ காலத்தில் இறைவனை வழிபட்டால் நமக்கு இருக்கும் தோஷங்கள் அனைத்தும் நீங்கும் என்பது தான் இதன் பொருள். இரவும் பகலும் சந்திக்கும் காலத்தை தான் ‘உஷத் காலம்’ என்று கூறுவார்கள்.
இந்த சமயத்தில் அதிதேவதையான உஷாதேவி சூரியனின் மனைவியாக இருப்பாள். இதேபோல் பகலும் இரவும் சந்திக்கும் காலத்தில் பிரதியுஷா மனைவியாக இருப்பாள். இந்த நேரம் பிரத்யுஷத் காலம் என்று கூறப்படுகிறது. பிரத்யுஷத் காலம் என்று கூறப்பட்ட இந்த காலம் பேச்சுவழக்கில் பிரதோஷ காலம் என்று மாறிவிட்டது.

இந்தப் பிரதோஷ காலத்தில் சிவபெருமானை நாம் வழிபட்டு வந்தால் நமக்கு இருக்கும் இன்னல்களானது தீரும் என்பது நம்பிக்கை. நம் வேண்டும் வேண்டுதல்கள் யாவும் விரைவாக பலிக்கும் என்பது நம்பிக்கை. இந்தப் பிரதோஷ சமயத்தில் ஒருமுறை நமது குல தெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் சேர்த்து வழிபடுவதும் நல்லது.

பிரதோஷ கால மந்திரம் / பிரதோஷ நேரத்தில் சொல்ல வேண்டிய ஸ்லோகம் (Pradosham Mantras in Tamil): 1
ஓம் சிவசிவ சிவனே சிவபெருமானே போற்றி போற்றி விரைவினில் வந்தருள் விமலா போற்றி போற்றி.
பிரதோஷ கால மந்திரம் / பிரதோஷ நேரத்தில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்: 2
ஓம் மஹா, ஈசா மகேசா போற்றி போற்றி மனதினில் நிறைந்திடும் பசுபதியே போற்றி போற்றி.
பிரதோஷ கால மந்திரம் / பிரதோஷ நேரத்தில் சொல்ல வேண்டிய ஸ்லோகம் (Pradosham Mantras in Tamil): 3
ஓம் மூவுலகிற்கதிபதியே முதல்வா போற்றி போற்றி மூவா இளமையருளும் முக்கண்ணா போற்றி போற்றி.
பிரதோஷ கால மந்திரம் / பிரதோஷ நேரத்தில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்: 4
ஓம் ஐந்தெழுத்தின் உட்பொருளே போற்றி போற்றி திரு ஐயாறமர்ந்த குருபரனே போற்றி போற்றி.

பிரதோஷ கால மந்திரம் / பிரதோஷ நேரத்தில் சொல்ல வேண்டிய ஸ்லோகம் (Pradosham Mantras in Tamil): 5
ஓம் சத்தியமே சத்தியத்திற்கோர் திருமுகமே போற்றி போற்றி.
பிரதோஷ நேரத்தில் சொல்ல வேண்டிய ஸ்லோகம் / பிரதோஷ வழிபாடு மந்திரம்: 6ஓம் உமையொருபங்கா போற்றி போற்றி அதற்கு மோர்த்திருமுகமே போற்றி போற்றி.
பிரதோஷ வழிபாடு மந்திரம் (Pradosham Mantras in Tamil): 7ஓம் உலகமே நாயகனே லோக நாயகா போற்றி போற்றி அகோரத்திற்கோர் திருமுகமே போற்றி போற்றி.
பிரதோஷ வழிபாடு மந்திரம் (Pradosham Mantras in Tamil): 8
ஓம் உருத்திர பசுபதியே போற்றி போற்றி.
பிரதோஷ நேரத்தில் சொல்ல வேண்டிய ஸ்லோகம் / பிரதோஷ வழிபாடு மந்திரம்: 9
ஓம் உருத்திர தாண்டவ சிவனே போற்றி போற்றி.
பிரதோஷ வழிபாடு மந்திரம்: 10
ஓம் ஓம் அகோர மூர்த்தியே லிங்கமே போற்றி போற்றி அதற்கு மோர்திருமுகமே போற்றி போற்றி.
பிரதோஷ மந்திரம் (Pradosham Mantras in Tamil): 11
ஓம் உமையே அம்பிகையே அம்பிகையின் பாகா போற்றி போற்றி 
அம்பிகைக்கோர் முகமே அம்பிகா பதியே போற்றி போற்றி.
பிரதோஷ நேரத்தில் சொல்ல வேண்டிய ஸ்லோகம் / பிரதோஷ மந்திரம்: 12
ஓம் பஞ்சாட்சரனே பஞ்சமுகங் கொண்ட பரமனே போற்றி போற்றி.
பிரதோஷ மந்திரம் (Pradosham Mantras in Tamil): 13
ஓம் சாம்பசிவ சதா சிவனே சத்குருவே போற்றி போற்றி.
பிரதோஷ மந்திரம்: 14
ஓம் ஜடையுடைய ஜடாதரனே ஜம்பு நாதா போற்றி போற்றி.
பிரதோஷ மந்திரம் (Pradosham Mantras in Tamil): 15
ஓம் சந்திரனை சூரியனை நெருப்பைக் கொண்ட முக்கண்ணா போற்றி போற்றி.
பிரதோஷ நேரத்தில் சொல்ல வேண்டிய ஸ்லோகம் / பிரதோஷ மந்திரங்கள்: 16
ஓம் கங்காதரனே கங்களா போற்றி போற்றி.
பிரதோஷ மந்திரங்கள் (Pradosham Mantras in Tamil): 17
ஓம் இடபத்தூர்ந்து செல்லும் இறைவா போற்றி போற்றி ஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ.
பிரதோஷ தினத்தன்று பிரதோஷ காலமான 4.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் இந்த பிரதோஷ கால மந்திரத்தை ஏதாவது ஒரு சிவ ஆலயத்திற்கு சென்று கண்களை மூடி ஒரு நிமிடம் ஓம் நமசிவாய என்ற மந்திரத்தை 11 முறை சொல்லி, பின்பு இந்த சிவமூர்த்தி ஸ்தோத்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
இந்த மந்திரத்தோடு சேர்த்து சிவனுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்வது மிகவும் சிறந்தது.

சனி, 9 மே, 2020

அஷ்ட ஐஸ்வர்யம் அருளும் அஷ்டலக்ஷ்மி வழிபாடு!



அஷ்ட லக்ஷ்மியின் திருவருளைப் பெற,  தினமும் அல்லது வெள்ளிக்கிழமை, பௌர்ணமி தினங்களில் அரிசி மாவினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள கோலத்தை போட்டு, அதைச்சுற்றி, மஞ்சள் பொடியால் அதேபோல் வரைந்து, நடுவில் மஞ்சள் குங்குமமிட்டு, இரண்டு பக்கமும் விளக்கேற்றி வைக்க வேண்டும்.



வழிபாட்டு முறை:


லக்ஷ்மி விக்ரகம் இருந்தால், அதை பட்டுத்துணியில் எழுந்தருளப் பண்ணி, பின் அர்ச்சனை செய்ய வேண்டும். வெற்றிலை, பாக்கு, பழம், பூ (வாசனை உள்ள பூக்கள் மட்டும்) வெண் சாமந்தி, மஞ்சள் நிற சாமந்தி, தாமரை சாத்தவும். அர்ச்சிக்கவும் உகந்தவை.  பால் பாயசம் செய்து நைவேத்தியம் செய்யலாம் அல்லது துளசியிலை போட்டு தீர்த்தம் உசிதம்.

வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலையை (3 இலை), கரைத்து வைத்த சந்தனத்தில் தோய்த்து, லக்ஷ்மி அஷ்டோத்திரம் சொல்லி அர்ச்சிக்கலாம்.

அபிஷேகம் செய்ய விரும்பினால், பால், தேன், பன்னீர் பிறகு இவை எடுத்து வைத்துவிட்டு, பின் சந்தனம், மஞ்சள் அபிஷேகம் செய்து, மல்லிகை, தவனம், மரு, தாமரை இப்படி வாசனை பூக்களால்  அர்ச்சிக்கலாம்.

பூஜை முடிந்ததும்   தாம்பூலம் கொடுத்து,. பிரசாதம் விநியோகம் செய்ய வேண்டும். எதுவுமில்லை எனில், துளசி தீர்த்தமாவது நைவேத்தியம் செய்து கொடுக்கலாம். மிகச்சிறந்த பலன் உண்டு.


அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரம்!


மஹாலக்ஷ்மி:
யாதேவீ ஸர்வபூதேஷு லக்ஷ்மிரூபேண
ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை,
நமஸ்தஸ்யை நமோ நம!


எல்லா உயிரினங்களிலும் ஸ்ரீலக்ஷ்மி உருவில் உள்ள ஸ்ரீமஹாலக்ஷ்மியை வணங்குகிறேன்.



தனலக்ஷ்மி:
யாதேவீ ஸர்வபூதேஷு புஷ்டிரூபேண
ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை,
நமஸ்தஸ்யை நமோ நம!


சகல உயிர்களிடமும் புஷ்டி (நிறைவு) உருவத்தில் உள்ள தனலக்ஷ்மியை வணங்குகிறேன்.



தான்யலக்ஷ்மி:
யாதேவி ஸர்வபூதேஷு க்ஷுதாரூபேண
ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை,
நமஸ்தஸ்யை நமோ நம!


எல்லா உயிரினங்களிலும் பசியை நீக்கும் தான்ய உருவில் உள்ள தான்ய லக்ஷ்மியை வணங்குகிறேன்.



வித்யா லக்ஷ்மி:
யாதேவி ஸர்வபூதேஷு புத்திரூபேண
ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை,
நமஸ்தஸ்யை நமோ நம!


எல்லா உயிரினங்களிலும் புத்தி உருவில் உள்ள வித்யாலக்ஷ்மியை வணங்குகிறேன்.


வீரலக்ஷ்மி:
யாதேவி ஸர்வபூதேஷு த்ருதி ரூபேண
ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை,
நமஸ்தஸ்யை நமோ நம!


எல்லா உயிரினங்களிலும் தைர்ய உருவில் உள்ள வீரலக்ஷ்மியை வணங்குகிறேன்.


சௌபாக்ய லக்ஷ்மி:
யாதேவி ஸர்வ பூதேஷு துஷ்டிரூபேண
ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை,
நமஸ்தஸ்யை நமோ நம!


எல்லா உயிரினங்களிலும் துஷ்டி (மகிழ்ச்சி) உருவில் உள்ள சௌபாக்ய லக்ஷ்மியை வணங்குகிறேன்.


ஸந்தான லக்ஷ்மி:
யாதேவீ ஸர்வபூதேஷு மாத்ருரூபேண
ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை,
நமஸ்தஸ்யை நமோ நம!


எல்லா உயிரினங்களிலும் தாய் உருவில் உள்ள ஸந்தான லக்ஷ்மியை வணங்குகிறேன்.


காருண்யலக்ஷ்மி:
யாதேவீ ஸர்வபூதேஷு தயாரூபேண
ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை,
நமஸ்தஸ்யை நமோ நம!


எல்லா உயிரிங்களிலும் தயையுருவில் உள்ள காருண்ய லக்ஷ்மியை வணங்குகிறேன்.

புதன், 22 ஏப்ரல், 2020

அட்சய திருதியை நாளில்என்ன வாங்க வேண்டும்?

வரும் அட்சய திருதியை நாளில் தங்கத்தை வாங்க தேவையில்லை இதை வாங்கினாலே செல்வம் குவியும். 

இந்த சார்வரி வருடத்தில் வருகின்ற ஏப்ரல் 26 ஆம் தேதி சித்திரை மாதத்தின் இறுதியில் ஞாயிற்று கிழமையில் அட்சய திருதியை நாள் வருகின்றது. அட்சய திருதியை என்றாலே கேட்டது அனைத்தும் கிடைக்கும், வாங்கிய அனைத்தும் பெருகும், எல்லா காரியங்களும் சுபமாக அமையும் என்பது அனைவரின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. 


விநாயகரிடம் வேதவியாசர் மகாபாரதத்தை எழுதுமாறு சொன்னது அட்சய திருதியை அன்று தான். மகாவிஷ்ணு பரசுராம அவதாரம் எடுத்ததும் அக்ஷய திருதியை நன்னாளில் தான்.. 

அட்சய திருதியை நாளில் மகா விஷ்ணுவிற்கு விரதமிருந்து நெல்லுடன் கூடிய அரிசியை நிவேதனம் வைத்து வழிபட்டால் சகல செல்வங்களும் பெருகும் என்பது ஐதீகம். மேலும் இந்நாளில் கங்கையில் நீராடினால் அனைத்து பாவங்களும் நீங்கும். இதே நாளில் தான் அன்னபூரணி தாயாரிடம், சிவபெருமான் ‘பவதி பிக்ஷாம் தேஹி’ என்று பிச்சை கேட்டதும் புராணத்தில் இடம் பெற்றுள்ளது. ‘அட்சய’ என்பதற்கு ”எப்போதும் குறையாது” என்பது தான் அர்த்தமாகும். 


இந்நாளில் எந்த பொருள் வாங்கினாலும், எதை வேண்டுதலாக முன்வைத்தாலும், பெருகிக் கொண்டே இருக்கும் என்று அனைவராலும் நம்பப்படுகிறது. துரியோதனன் சபையில் பாஞ்சாலி துகில் உரிக்கும் பொழுது கிருஷ்ண பகவான் துகிலை வளர செய்ததும் அட்சய திருதியை நன்னாளில் தான். இப்போது புரிகிறதா பாஞ்சாலி ஆடை ஏன் உருவ உருவ வளர்ந்துகொண்டே இருந்தது என்று? செல்வத்திற்கு அதிபதியான குபேரனும் அக்ஷய திரிதியை நன்னாளில் தவறாமல் லக்ஷ்மி தேவியை வழிபாடு செய்கின்றார் என்று லட்சுமி தந்திரம் என்னும் நூல் குறிப்பிட்டு கூறியுள்ளது. 

இந்நாளை தானம் செய்வதற்கு மிகவும் உகந்த நாளாக சொல்லப்பட்டுள்ளது. அட்சய திருதியை நாளில் தானம் அளிப்பது இரட்டிப்பு பலனை அளிக்கும் என்கிறது சாஸ்திரம். இந்நாளில் மக்கள் இயலாதவர்களுக்கு அரிசி, பருப்பு, புளி, உப்பு, சர்க்கரை, நெய், காய்கறிகள், பழங்கள், விசிறி இவற்றை தானம் அளிப்பதன் மூலம் மோட்சம் கிட்டும். 

தயிர் சாதம், எலுமிச்சை சாதம் போன்ற உடலை குளிர்விக்கும் அன்னத்தை தானம் அளித்தால் உங்கள் அடுத்த அடுத்த சந்ததியினருக்கு அன்னத்தால் பஞ்சம் ஏற்படாது என்று கூறப்படுகிறது. இந்த நாளில் பசிக்கும் வயிற்றுக்கு அன்னம் இட்டால் இப்பிறவியில் நீங்கள் செய்த புண்ணியம் இரண்டாக பெருகி அடுத்த பிறவியில் நல்ல வாழ்க்கையை வாழலாம். 

ஸ்படிகம் ருத்ராட்சம் முதலியவற்றை அணிவதற்கு இந்நாள் உகந்த நாளாக இருக்கும். முறையான வழிபாடுகள் செய்து இவற்றை இந்நாளில் அணிவதால் சகல உஷ்ண ரோகங்களும் நீங்கி, ஆரோக்கியம் விருத்தியாகும். 

அட்சய திரிதியை என்றாலே தங்கம், வெள்ளி, வைரம் போன்ற விலை உயர்ந்த பொருட்களை வாங்கினால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கையாக உள்ளது. ஆனால் இக்காலகட்டத்தில் தங்கம் வாங்கும் நிலையில் நாம் இல்லை. தங்கத்தை விட பல மடங்கு உயர்ந்த சக்தியை பெற்று பெற்றிருப்பது மகாலட்சுமியின் அம்சமான கல்லுப்பு. மிகவும் சாதாரண ஒரு பொருள் தான் என்றாலும், இதற்குரிய மதிப்பு பலருக்கு புரிவதில்லை. அக்ஷய திருதியை நாளில் நீங்கள் எதுவும் செய்யத் தேவையில்லை மளிகைக் கடைக்கு சென்று கல் உப்பை, காசு கொடுத்து வாங்கி வந்து வீட்டில் அந்த உப்பை வைத்து சமையல் செய்தாலே போதுமானது. இந்நாளில் காசு கொடுத்து வாங்கப்படும் கல்லுபிற்கு மிகுந்த சக்தி உள்ளது. உங்கள் செல்வ வளம் மென்மேலும் பெருகி கொள்ள இந்த பரிகாரம் துணை புரியும்.


.


கல் உப்பை வாங்கி வந்ததும் அதை எவர் சில்வர் பாத்திரத்திலோ, பிளாஸ்டிக் டப்பாக்களிலோ போடுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். கல் உப்புற்கு மகாலட்சுமிக்கு இணையான மரியாதை செலுத்த வேண்டும். பீங்கான் ஜாடியில் அல்லது மட்பாண்டத்தில் போட்டு வைக்கலாம். நீங்கள் தெய்வங்களுக்கு பூஜை செய்யும் பொழுது ஒரு ரூபாய் நாணயத்தை இந்த ஜாடியில் போட்டு கொண்டே வரவேண்டும். அக்ஷய திரிதியை நாளில் இருந்து தொடர்ந்து 108 நாட்கள் இவ்வாறு செய்து வந்தால் குடும்பத்தில் மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் செய்வாள். நூற்றி எட்டு நாட்களில் சேகரித்த 108 ரூபாயை முடிந்து கோவில்களுக்கு செல்லும் பொழுது உண்டியலில் சேர்த்து விடலாம்.


நீங்கள் தெய்வங்களுக்கு பூஜை செய்யும் பொழுது ஒரு ரூபாய் நாணயத்தை இந்த ஜாடியில் போட்டு கொண்டே வரவேண்டும். அக்ஷய திரிதியை நாளில் இருந்து தொடர்ந்து 108 நாட்கள் இவ்வாறு செய்து வந்தால் குடும்பத்தில் மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் செய்வாள். நூற்றி எட்டு நாட்களில் சேகரித்த 108 ரூபாயை முடிந்து கோவில்களுக்கு செல்லும் பொழுது உண்டியலில் சேர்த்து விடலாம்.

திங்கள், 6 ஏப்ரல், 2020



லட்சுமி கடாட்சம் அருளும் வெள்ளிக்கிழமை விரதம்


60-ம் கல்யாணத்தை எப்படிக் கொண்டாட வேண்டும்?

60-ம் கல்யாணத்தை எப்படிக் கொண்டாட வேண்டும்

ல்யாணம், நம் இல்லத்தில் உள்ளவர்கள்  மட்டும் அல்லாமல்  நம் உறவினர்கள், நண்பர்கள் என்று அனைவரும் ஒன்றுகூடி மகிழும் தருணம். ஆனால், அதில் இருந்து இன்னும் மேம்பட்டவிதமாக,  தங்களுக்கு திருமணம் செய்துவைத்த பெற்றோருக்கு பிள்ளைகளெல்லாம் சேர்ந்து  திருமணம் செய்துவைத்து மகிழும் ஓர் அற்புத நிகழ்வே அறுபதாம் கல்யாணம். தந்தையின் அறுபதாவது வயதில், பிள்ளைகள் அனைவரும் ஒன்றுகூடி பெற்றோருக்கு இந்த வைபவத்தை நடத்துவதால், இதை 'அறுபதாம் கல்யாணம்', 'மணிவிழா', 'சஷ்டியப்த பூர்த்தி' என்றெல்லாம் சொல்வார்கள். கல்யாணம்     இந்த நிகழ்வானது 60  வயது முடிந்து, 61-வது வயது தொடங்கும்போது நடத்தப்படுகிறது. 

இதற்குக் காரணம் என்ன? ஒரு  மனிதரின் பிறந்த தமிழ் மாதம், தேதி, நட்சத்திரம், வருடம்  இவையனைத்தும் அவருடைய 60-வது நிறைவு பெற்றதற்கு அடுத்த நாள் வருகிறது. இப்படிப்பட்ட நிகழ்ச்சி மீண்டும் 60  வருடங்கள்  ஆன   பிறகுதான் வரும். அதாவது 120 -வது வயதில்தான். நடைமுறையில் இது சாத்தியம் இல்லை.

ஒருவர் தன்னுடைய குடும்பத் தேவைகளுக்காக பணத்தை சம்பாதிக்கக் கடுமையாக உழைக்கிறார். மேலும் சம்பாதித்த பணத்தை எப்படி சேமிப்பது, தன் குடும்பத்துக்கு எப்படி ஆக்கப்பூர்வமான முறையில் சேமிப்பது, பிள்ளைகளின் கல்வி, திருமணம் போன்றவற்றை எப்படி சிறப்பாக அமைத்துக்கொடுப்பது என்கிற சிந்தனையிலேயே காலத்தைக் கடத்திவிடுகிறார்.  
இப்படி 60  வயது வரை தனது கடமைகளை எல்லாம் நிறைவேற்றிய பிறகு, சாதாரண வாழ்க்கையில் இருந்து  விடுபட்டு முழுமையாக தன்னை ஆன்மிகச்  செயல்பாடுகளில் ஈடுபடுத்திக்கொள்ளும் வயதாக இந்த 61-ம் வயது பார்க்கப்படுகிறது. 
தங்களின் நலனுக்காக உழைத்த தாய்-தந்தையரின் மனம் மகிழும் வண்ணமாகவும் நன்றி பாராட்டும் விதமாகவும் அவர்களது பிள்ளைகள்தேங்காய்- பழம்எல்லாம் சேர்ந்து, இந்த மணவிழாவை நிகழ்த்துவார்கள். 
பெரும்பாலும் அறுபதாம் கல்யாணம், கோயில்களிலேயே நடத்தப்படுகிறது.பல்வேறு ஹோமங்களும் பூஜைகளும் செய்யப்படுகின்றன. அதிதேவதைகளுக்கு பூரண கும்பங்கள் வைத்து பூஜைகள் செய்யப்படுகின்றன .மேலும் கலச பூஜையும் செய்யப்படுகின்றது. தங்கள் வசதிக்குத்  தகுந்தவாறு கலசங்கள் முறையே 16, 32, 64  எண்ணிக்கையில் வைத்து பூஜிக்கப்படுகின்றன.    
பூஜை முடிந்ததும், கலசங்களில்   பூஜிக்கப்பட்டு இருக்கும் புனித நீரானது அவர்களின் பிள்ளைகளால், உறவினர்களால், நண்பர்களால் மணமக்களின் மீது ஊற்றப்படுகிறது. மணமக்களின் பாதங்களில்  விழுந்து வணங்கி ஆசீர்வாதம் வாங்குவது மிகுந்த பாக்கியமாகக் கருதப்படுகிறது. 
மணமக்களின் குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள் மட்டும் அல்லாமல், ஆலயத்தில் இறைவனை தரிசிக்க வருவோர் அனைவருமே மணமக்களின் மீது கலச நீரை ஊற்றி, ஆசீர்வாதம் பெறலாம்.
மணமக்களும் தங்களிடம் ஆசீர்வாதம் பெற்றவர்களுக்கு  சேலை, ஜாக்கெட், மஞ்சள், மாங்கல்யச் சரடு போன்ற பொருட்களை தங்கள் வசதிக்குத் தகுந்தவாறு வழங்குகின்றனர். இத்திருமண  நிகழ்வைக் காண்பது என்பது சொர்க்கத்தைக் காண்பது போன்றது என்பதாலேயே பலரும் இத்திருமண வைபவத்தில் தவறாமல் கலந்துகொள்வார்கள். 
நாகப்பட்டினம் மாவட்டம், திருக்கடையூரில் உள்ள சிவாலயத்தில்தான்  அறுபதாம் கல்யாணம் அதிக அளவில் நடைபெறுகிறது. அங்கு செல்ல முடியாதவர்கள், தாங்கள் வசிக்கும்  இடங்களுக்கு அருகாமையில் உள்ள  ஆலயங்களில் செய்துகொள்ளலாம்.
திருக்கடையூர் அம்மன்
அறுபதாம் கல்யாணம் செய்வதென்பது,ஒரு  மனிதன், தான் இதுவரை தனக்கு  அளிக்கப்பட்ட கடமைகள் அனைத்தையும் நிறைவேற்றிய மன நிறைவுக்காகவும், இதுநாள்வரையிலும் யாருக்கும்  ஏதேனும் தெரிந்தோ, தெரியாமலோ தீங்கு செய்திருந்தால், அதற்கு இறைவனிடம் மனமுருகி மன்னிப்பு கேட்பதற்கான ஒரு வாய்ப்பாகவும் அமைகின்றது.
தனக்காகவும், தன் குடும்பத்துக்காகவும் வாழ்ந்த வாழ்க்கையில் இருந்து விடுபட்டு, இறை வழிபாட்டிலும் ஆன்மிகச் சாதனைகளிலும்   தன்னை முழுமையாக ஒப்படைத்துக்கொள்ளும் நிகழ்வாகவும் பார்க்கப்படுகின்றது.