அஷ்ட ஐஸ்வர்யம் அருளும் அஷ்டலக்ஷ்மி வழிபாடு!
வழிபாட்டு முறை:
லக்ஷ்மி விக்ரகம் இருந்தால், அதை பட்டுத்துணியில் எழுந்தருளப் பண்ணி, பின் அர்ச்சனை செய்ய வேண்டும். வெற்றிலை, பாக்கு, பழம், பூ (வாசனை உள்ள பூக்கள் மட்டும்) வெண் சாமந்தி, மஞ்சள் நிற சாமந்தி, தாமரை சாத்தவும். அர்ச்சிக்கவும் உகந்தவை. பால் பாயசம் செய்து நைவேத்தியம் செய்யலாம் அல்லது துளசியிலை போட்டு தீர்த்தம் உசிதம்.
வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலையை (3 இலை), கரைத்து வைத்த சந்தனத்தில் தோய்த்து, லக்ஷ்மி அஷ்டோத்திரம் சொல்லி அர்ச்சிக்கலாம்.
அபிஷேகம் செய்ய விரும்பினால், பால், தேன், பன்னீர் பிறகு இவை எடுத்து வைத்துவிட்டு, பின் சந்தனம், மஞ்சள் அபிஷேகம் செய்து, மல்லிகை, தவனம், மரு, தாமரை இப்படி வாசனை பூக்களால் அர்ச்சிக்கலாம்.
பூஜை முடிந்ததும் தாம்பூலம் கொடுத்து,. பிரசாதம் விநியோகம் செய்ய வேண்டும். எதுவுமில்லை எனில், துளசி தீர்த்தமாவது நைவேத்தியம் செய்து கொடுக்கலாம். மிகச்சிறந்த பலன் உண்டு.
அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரம்!
மஹாலக்ஷ்மி:
யாதேவீ ஸர்வபூதேஷு லக்ஷ்மிரூபேண
ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை,
நமஸ்தஸ்யை நமோ நம!
எல்லா உயிரினங்களிலும் ஸ்ரீலக்ஷ்மி உருவில் உள்ள ஸ்ரீமஹாலக்ஷ்மியை வணங்குகிறேன்.
தனலக்ஷ்மி:
யாதேவீ ஸர்வபூதேஷு புஷ்டிரூபேண
ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை,
நமஸ்தஸ்யை நமோ நம!
சகல உயிர்களிடமும் புஷ்டி (நிறைவு) உருவத்தில் உள்ள தனலக்ஷ்மியை வணங்குகிறேன்.
தான்யலக்ஷ்மி:
யாதேவி ஸர்வபூதேஷு க்ஷுதாரூபேண
ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை,
நமஸ்தஸ்யை நமோ நம!
எல்லா உயிரினங்களிலும் பசியை நீக்கும் தான்ய உருவில் உள்ள தான்ய லக்ஷ்மியை வணங்குகிறேன்.
வித்யா லக்ஷ்மி:
யாதேவி ஸர்வபூதேஷு புத்திரூபேண
ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை,
நமஸ்தஸ்யை நமோ நம!
எல்லா உயிரினங்களிலும் புத்தி உருவில் உள்ள வித்யாலக்ஷ்மியை வணங்குகிறேன்.
வீரலக்ஷ்மி:
யாதேவி ஸர்வபூதேஷு த்ருதி ரூபேண
ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை,
நமஸ்தஸ்யை நமோ நம!
எல்லா உயிரினங்களிலும் தைர்ய உருவில் உள்ள வீரலக்ஷ்மியை வணங்குகிறேன்.
சௌபாக்ய லக்ஷ்மி:
யாதேவி ஸர்வ பூதேஷு துஷ்டிரூபேண
ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை,
நமஸ்தஸ்யை நமோ நம!
எல்லா உயிரினங்களிலும் துஷ்டி (மகிழ்ச்சி) உருவில் உள்ள சௌபாக்ய லக்ஷ்மியை வணங்குகிறேன்.
ஸந்தான லக்ஷ்மி:
யாதேவீ ஸர்வபூதேஷு மாத்ருரூபேண
ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை,
நமஸ்தஸ்யை நமோ நம!
எல்லா உயிரினங்களிலும் தாய் உருவில் உள்ள ஸந்தான லக்ஷ்மியை வணங்குகிறேன்.
காருண்யலக்ஷ்மி:
யாதேவீ ஸர்வபூதேஷு தயாரூபேண
ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை,
நமஸ்தஸ்யை நமோ நம!
எல்லா உயிரிங்களிலும் தயையுருவில் உள்ள காருண்ய லக்ஷ்மியை வணங்குகிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக