ஞாயிறு, 3 ஜூன், 2018

திருவிளக்கு பூஜை ஆரம்பிக்கும் முன் செய்ய வேண்டிய விதிமுறைகள்

தொடர்புடைய படம்

திருவிளக்கு பூஜை ஆரம்பிக்கும் முன் செய்ய வேண்டிய விதிமுறைகள் 


·    பூஜைக்குத் தேவையான பொருட்களைச் சேகரித்துக் கொண்டு, நிவேதனங்களைத் தயார் செய்து கொண்ட பின்பே பூஜைக்கு அமரவும்.


·    சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்வது நல்லது. வேண்டும் பிற நிவேதனங்களும் செய்யலாம்.


·    திருவிளக்கு பூஜைக்கு, விளக்கை கிழக்கு முகமாக ஏற்றுவதே சிறந்தது. பூஜிப்பவர், வடக்கு நோக்கி அமர்ந்து பூஜிக்கவும்.


·    வாழை இலையில் அரிசியை சதுரமாகப் பரப்பி அதன் மேல் திருவிளக்கை இட்டு பூஜிப்பது சிறந்தது. இலையின் நுனி, விளக்குக்கு இடப்புறம், வடக்கு நோக்கி இருக்க வேண்டும். சிறிய தாம்பாளத்தட்டிலும் அரிசியைப் பரப்பி அதன் மேல் விளக்கை இட்டு பூஜிக்கலாம். திருவிளக்கின் கீழிருக்கும் அரிசியை, மறுநாள்  வீட்டுக்கு உபயோகிக்கலாம்.


·    மாக்கோலமிட்டு அதன் மேல் வாழை இலையை வைப்பது சிறந்தது.


·    பூஜிப்பவர், பாய் அல்லது விரிப்பில் அமர்ந்து தான் பூஜை செய்ய வேண்டும்.



·    பூஜிக்கும் விளக்கிற்கு அருகில் ஒரு சிறு விளக்கை ஏற்றி வைக்கவும். அதிலிருந்து தான், ஊதுபத்தி,கற்பூரம் முதலியவை ஏற்ற வேண்டும். பூஜை செய்யும் விளக்கை அதற்கு உபயோகிக்கக் கூடாது.


·    பூஜை செய்யும் போது (இடையில்) நடுவில் எழுந்திருக்கக்கூடாது.


·    பூஜை செய்யும் விளக்கைச் சுத்தம் செய்து, பொட்டு வைத்து, தண்டுப்பாகத்தில், பூ சூட்டி பூஜையில் வைக்கவும். விளக்கின் அடிப்பகுதியில், அம்பிகையின் பாதங்களைக் குறிக்கும் விதமாக, இரண்டு பொட்டுக்கள் வைக்கவும்.


·    எண்ணை ஊற்றி அதன் பின்பே திரியைப் போடவேண்டும்.



·    பூஜைக்குப் புதுத் திரிகளையே உபயோகிக்க வேண்டும். தினந்தோறும் விளக்கேற்றும் போதும், புதுத் திரிகளை உபயோகிப்பதே சிறந்தது.


·    குங்குமம், அட்சதை, மலர்கள் ஆகியவற்றால் அர்ச்சிக்கலாம்.




·    பூஜை முடியும் வரை, விளக்கு ஆடக் கூடாது. ஆகவே, சற்று தாராளமாக அரிசி போட்டு, விளக்கை சரியாக வைக்கவும். சற்று கெட்டித் திரியாகப் போட்டால், பூஜை முடியும் வரை சுடர்கள் அலைபாயாமல் இருக்கும்.


பூஜைக்குத் தேவையான பொருட்களைச் சேகரிக்கும் நேரத்திலிருந்து, பூஜை முடியும் வரை இறை நாமங்களை ஜெபித்தபடி இருப்பது, பூஜையில் மனம் ஒன்றிச் செய்ய உதவும்.


மஞ்சள் பிள்ளையாரை, ஒரு சிறு வெற்றிலையில் அல்லது தட்டில் பிடித்து வைத்துக் கொள்ளவும்.


தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழத்தை ஒரு தாம்பாளத் தட்டில் வைக்கவும். பிள்ளையாருக்கு நிவேதனம் செய்யத் தேவையான வெற்றிலை, பாக்கு, பழத்தைத் தனியாக வைக்கவும்.


பூஜைக்குத் தேவையான,மலர்கள், அட்சதை முதலியவற்றைத் தனித் தனி தட்டுக்களில் வைக்கவும். சந்தனம், குங்குமம், உள்ளிட்ட பூஜைப் பொருட்களை கைக்கெட்டும் தூரத்தில் வைத்துக் கொண்டு, திருவிளக்கை நமஸ்கரித்து, பூஜைக்கு அமரவும்.


முதலில், பிரதான விளக்கிற்கு அருகிலிருக்கும் சிறு விளக்கை ஏற்றவும். பின், பிரதான விளக்கை, அந்த சிறு விளக்கைக் கொண்டோ, தீபக்காலைக் கொண்டோ ஏற்றவும். விளக்கு ஏற்றும் போது,'ஒளிவளர் விளக்கே போற்றி' என்று சொல்லிக் கொண்டே ஏற்றவும்.


மஞ்சள் பிள்ளையாரில், ஸ்ரீ விக்னேஸ்வரரை எழுந்தருளப் பிரார்த்தித்து, பூஜை எவ்வித விக்னமும் இன்றி நிறைவேற விக்னேஸ்வர பூஜையைச் செய்யவும். பிள்ளையாருக்கு, வெற்றிலை பாக்கு பழம் நிவேதனம் செய்யவும்.


பின், பிரதான விளக்கில், அம்பிகையை எழுந்தருளப் பிரார்த்திக்கவும். நம் உள்ளத்திலும் இல்லத்திலும் திருவிளக்கிலும் அம்பிகை எழுந்தருளி, நம் வாழ்வில் ஒளியேற்றப் பிரார்த்திக்கவும். 

பின், அம்பிகைக்கு உபசார பூஜைகள் செய்து, லக்ஷ்மி அஷ்டோத்திரம், ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம், திருவிளக்கு போற்றிகள் முதலியவற்றை, நேரம்,சௌகரியத்திற்கு தகுந்தபடி கூறி, குங்குமம், அட்சதை மற்றும் மலர்களால் அர்ச்சிக்கவும்.
பூஜை செய்வதற்கு, ஸ்ரீ லலிதா அஷ்டோத்திர சத நாமாவளியை பஜனையாக பாலடவும்
ஊதுபத்தி ஏற்றிக் காட்டவும். ஒரு முக தீபத்தை(தீபக்கால்) ஏற்றிக் காட்டவும். பின்பு நிவேதனங்களை பக்தியுடன் சமர்ப்பிக்கவும். நிவேதனம் செய்யும் போது, எவ்வித நிவேதனமாக இருந்தாலும் 'அம்ருதமயமான இந்த நிவேதனத்தை உனக்குச் சமர்ப்பிக்கிறேன்(சர்வம் அம்ருதமயம் நிவேதயாமி)' என்று கூறி சமர்ப்பிக்கவும். 
தேங்காய் உடைத்து, வெற்றிலை, பாக்கு, பழத்துடன் நிவேதனம் செய்யவும். கற்பூரம் ஏற்றிக் காட்டவும். தூபம் முதலானவை காட்டும் பொழுது, எழுந்து நின்று உபசார பூஜைகளைச் செய்வது சிறந்தது.
முடிந்தால், திருவிளக்கைச் சுற்றி வந்து நமஸ்கரிக்கவும். இல்லையெனில், ஆத்மபிரதக்ஷிணமாக(தன்னைத் தானே சுற்றுதல்) செய்து திருவிளக்கை நமஸ்கரிக்கவும். கை நிறைய புஷ்பங்களை எடுத்து அம்பிகையின் பாதாரவிந்தங்களில் சமர்ப்பித்து நமஸ்கரிக்கவும்.
ஒரு தட்டில், மஞ்சள் குங்குமம் கலந்த நீரில், இரு சிறு நெய்தீபங்களை ஏற்றி வைத்து, திருவிளக்கிற்குக் காட்டவும். இந்த ஆரத்தி நீரை பூஜை முடிந்த பின் செடிகளுக்கு ஊற்றவும்.
பூஜையில் ஏற்பட்டிருக்கக் கூடிய குறைகளுக்காக அம்பிகையிடம் மானசீகமாக மன்னிப்புக் கோரவும். நமஸ்கரிக்கும் போது, தீபச்சுடரில் எழுந்தருளியிருக்கும் அம்பிகையுடன், மனமொழி மெய்யை இணைத்து, 'நீயே அனைத்தும்' என்று மானசீகமான சரணாகதியடைந்து நமஸ்கரிக்கவும். 'நீங்காத பக்தியை அருள்வாய்' என்று அம்பிகையிடம் மனமுருகி வேண்டவும்.
பூஜை முடிந்ததும், பூ, அக்ஷதையை திருவிளக்கின் பாதத்தில் இட்டு, தீபத்திலிருக்கும் அம்பிகையை தம் இடம் சேரப் பிரார்த்திக்கவும். பின் திருவிளக்கை, கிழக்காக நகர்த்தவும். பூஜைப் பிரசாதங்களை சிறிது உண்டுவிட்டு, மற்றவர்களுக்கும் விநியோகிக்கவும். சுமங்கலிகளுக்குத் தாம்பூலம் அளிப்பது சிறந்தது.
குத்துவிளக்கின் முத்துச் சுடரொளியில் அம்பிகை குடியிருக்கிறாள். நம்மைச் சுற்றிலும் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள், சக்திகளை அகற்ற வல்ல வலிமை தீப வழிபாட்டிற்கு உண்டு. இதை உணர்ந்து, உள்ளன்போடு தீப வழிபாடு செய்யச்செய்ய, வாழ்வில் நல்ல பல மாற்றங்கள் ஏற்படுவதைக் கண்கூடாகக் காணலாம்.
தீப வழிபாடு செய்து, அம்பிகையின் அருளால் வெற்றி பெறுவோம்!!!

காசியின் மகிமை!

காசியின் மகிமை!

 பருந்து பறக்காத - பல்லி ஒலிக்காத நகரம்!
 சில தலங்களுக்கென தனித்துவங்கள் உண்டு. காசிக்கு ஐந்து
அதிசயங்களைச் சொல்வார்கள். காசியில் கருடன் பறப்பதில்லை; பல்லி
ஒலிப்பதில்லை; மாடு முட்டுவதில்லை; பூக்கள் மணப்பதில்லை; 
எரிக்கப்படும் பிணங்கள் நாறுவதில்லை.
       இந்த அதிசயங்களில் காசியில் கருடன் பறக் காமைக்கும் பல்லி
ஒலிக்காமைக்கும் காரணமானவர் பைரவர்தான். காசி நகரைச் சுற்றி 45 மைல் பரப் பளவில் கருடன் பறப்பதில்லை என்கிறார்கள்.
இராவணனை வதம் செய்தபின் சேதுவில் சிவபூஜை செய்ய நினைத்தார்
இராமபிரான். காசிக்குச் சென்று சிவலிங்கம் ஒன்று கொண்டு வருமாறு
அனுமனுக்குக் கட்டளையிட்டார். அனுமன் காசிக்குச் சென்றார். அங்கு
எங்கு பார்த்தாலும் சிவலிங்கங்கள் இருந்தன. அந்த லிங்கங்களில் எந்த
லிங்கம் சுயம்பு லிங்கம் என்று புரியாமல் தடுமாறினார் அனுமன்.
அந்த நேரத்தில் அவருக்குத் துணை செய்ய நினைத்தார் மகாவிஷ்ணு. 
விஷ்ணுவின் அருளால் அவருடைய வாகனமான கருடன் ஒன்று பறந்து
வந்தது. ஒரு குறிப்பிட்ட லிங்கத்துக்கு மேல் வட்டமடித்தது. பல்லியும்அதே நேரத்தில் நல்லுரை சொல்வதுபோல ஒலித்தது.
இந்த இரண்டு குறிப்புகளையும் புரிந்து கொண்ட அனுமன், அந்தலிங்கம்
தான் சுயம்பு லிங்கம் என்று உணர்ந்து, அச்சிவலிங்கத்தைப்பெயர்த்து 
எடுத்துக் கொண்டு தெற்கு நோக்கிப் பறக்கலானார்.
      காசிக்கு காவல் தெய்வம் பைரவர். எட்டு பைரவர்கள் காசி நகரின்எட்டு 
திசைகளிலிருந்து காவல் செய்வதாக ஐதீகம்.
சிவலிங்கத்துடன் வந்த அனுமனைத் தடுத்த பைரவர், ""என்னுடையஅனுமதியில்லாமல் காசியில் இருக்கும் லிங்கத்தை நீ எப்படி பெயர்த்துச்செல்லலாம்?'' என்று கேட்டார்.
     
அனுமன், பைரவரைப் பற்றி சற்றும் கவலைப்படாமல், ""என்தெய்வமான இராமபிரானின் உத்தரவு. அதனால் லிங்கத்தை 
எடுத்துக்கொண்டு செல்கிறேன்'' என்று சொன்னார்.
அனுமனின் பதிலில் திருப்தியடையாத பைரவர் அனுமனுடன்
சண்டையிட்டார். இருவருக்கும் கடும் போர் நடந்தது. வெற்றி- தோல்வியை நிர்ணயிக்க முடியாமல் அந்தப் போர் அமைந்தது. அவர்கள்இருவரும் சண்டை யிட்டுக் கொள்வதைக் கண்ட முப்பத்து முக்கோடிதேவர்களும் 
கவலையில் ஆழ்ந்தார்கள். அவர்களுள் சிலர் காசி நகரைநோக்கி விரைந்தார்கள். கால பைரவரை வணங்கினார்கள் 

""சுவாமி! உலக நன்மைக்காக இந்த சிவலிங்கத்தை எடுத் துக் கொண்டு தென்னாடுபோக அனுமனுக்கு அனுமதி தரவேண்டும். ஸ்ரீஇராமபிரான் 
இந்தலிங்கத்துக்குப் பூஜை செய்வதற்காக சேதுவில் காத்திருக்கிறார். 
எனவேஅனுமனை அனுமதிக்க வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார்கள்.
தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி னார் பைரவர். மனசாந்தி
அடைந்தார். சிவலிங்கத் தைக் கொண்டு போக அனுமதித்தார்.
அனுமனுக்குச் சரியான லிங்கத்தை அடையாளம் காட்டியது கருடனும்
பல்லியும். அனுமனுக்குத் துணைபுரிந்த கருடன் இனிமேல் காசி நகர
எல்லைக்குள் பறக்கக்கூடாது என்றும்; காசியில் பல்லிகள் இருந்தாலும்
அவை ஒலிக்கக்கூடாது என்றும் கட்டளையிட்டார் பைரவர்.
பைரவரின் கட்டளைப்படிதான் காசியில் இன்றும் கருடன் பறப்பதில்லை;
 பல்லி ஒலிப்பதில்லை என்கிறார்கள்.

கலசம் வைத்து பூஜிப்பது ஏன்?

கலசம் வைத்து பூஜிப்பது ஏன்? 





மண் அல்லது செம்பு, பித்தளை, தாமிரம் போன்ற உலோகங்களால் செய்யப்பட்ட நீர் நிறைந்த ஒரு பாத்திரம் - செம்பு - சிறுபானைதான் கலசம் எனப்படுகிறது. இந்தக் கலசத்தில் மாவிலைகள் செருகப்பட்டு, அவற்றின் நடுவில் ஒரு தேங்காய் வைக்கப்படும். வெண்மை அல்லது சிவப்பு நிறமுள்ள நூல்கள் பானையின் கழுத்திலிருந்து முழுமையாக டயமண்ட் வடிவத்தை உரு வாக்கும் வகையில் நுணுக்கமாகக் கட்டப்படுகிறது. பானையின் மேல் அழகானவடிவங்கள் வரையப்படுவதும் உண்டு. இந்தப் பானை கலசம் என்றழைக்கப்படுகிறது. இது நீரினாலோ அல்லது அரிசியினாலோ நிரப்பப்படும். இது பூர்ண கும்பம் என்றழைக்கப்படுகிறது. 

இது போன்றே ஜடப்பொருளான நமது உடல் தெய்வீகமான சக்தியால் உயிர்பெறும் பொழுது அற்புதமான, போற்றத்தக்க செயல்களை செய்யக்கூடியதாக மாறுகிறது. மரபுப்படி நடத்தப் பெறும் கிருகப் பிரவேசம், திருமணம், தினசரி பூஜைகள் போன்ற சமயங்களில் இத்தகைய கலசம் வைக்கப்படுகிறது. மேலும், விழா நடத்தப்படும் இடத்தின் நுழைவாயிலில், வருவோரை வரவேற்கும் வகையில் இக்கலசத்தை வைக்கிறார்கள். பெரியோர்களையும் முக்கியப் பிரமுகர்களையும் பூரண கும்பம் கொடுத்து வரவேற்பது மரபு.

பூஜிப்பது ஏன்? 

உலகைப் படைக்கும் முன் பகவான் விஷ்ணு, பாற்கடலில் பாம்பணையின் மேல் சாய்ந்தவாறு அமர்ந்திருந்தார். அவருடைய நாபிக் கமலத்திலிருந்து ஒரு தாமரை வெளிப்பட்டது. அந்த மலரிலிருந்து படைப்புக் கடவுளான பிரம்மா தோன்றினார். பிரம்மாவே உலகத்தை சிருஷ்டித்தார். கலசத்தில் உள்ள நீரானது, எந்த நீரிலிருந்து படைப்பில் உள்ள அனைத்தும் தோன்றியதோ, அந்த நீரைக் குறிக்கிறது. அந்தப் புனித நீர்தான் அனைத்திற்கும் உயிர் அளிக்கும் சக்தி படைத்தது. இந்த நீர் எண்ணிலடங்கா உருவங்களையும் வடிவங்களையும் உயிர்த் துடிப்பும் உணர்வும் உள்ள பொருள்கள் மற்றும் ஜடப் பொருள்கள் ஆகிய அனைத்தையும் படைக்கும் சக்தியைத் தன்னுள் அடக்கியுள்ளது. 

மேலும், உலகில் உள்ள மங்களகரமான அனைத்தையும் படைக்கும் சக்தியையும் பெற்றது, இது. கலசத்தில் உள்ள இலைகளும் தேங்காயும் சிருஷ்டியைக் குறிக்கின்றன. கலசத்தைச் சுற்றியுள்ள நூல் படைப்பில் உள்ள அனைத்தையும் ஒன்றாகப் பிணைக்கும் அன்பைக் குறிக்கிறது. ஆகவேதான் கலசம் புனிதமாகக் கருதப்பட்டு பூஜிக்கப்படுகிறது. புனிதமான நதிகளின் நீர், அனைத்து வேதங்களின் சாரம் மற்றும் அனைத்து தேவதைகளின் ஆசி ஆகியவை கலசத்தில் உள்ள நீரில் வந்து சேரவேண்டுமென்று பிரார்த்திக்கப்படுகிறது. பின்னர், கலச நீர் அபிஷேகத்திற்கும் மற்ற சடங்குகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

ஆலய கும்பாபிஷேகத்தில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கலசத்தில் உள்ள புனித நீர் ஆலய கோபுரக் கலசங்களின் மேல் ஊற்றப்படுகிறது. அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, அமுத கலசத்தை ஏந்தியவாறு இறைவன் தோன்றினார். இவ்வமுதம் அனைவருக்கும் இறவாவரத்தை அருளியது. எனவே, கலசமும் இறவாத் தன்மையைக் குறிக்கிறது. ஞானியர் என்போர் நிறை மனிதர்கள். இதற்குக் காரணம் அவர்கள் தங்களுடைய உண்மை சொரூபம், பூர்ணமான - எங்கும் நிறைந்த - பேருண்மையேயன்றி வேறில்லை என்பதை நன்கு உணர்ந்தவர்கள். 

அவர்கள் என்றும் குறைவற்ற மகிழ்ச்சியும் அன்பும் நிறைந்து விளங்குகின்றனர். உலகில் உள்ள மங்களகரமான அனைத்தையும் குறிப்பவர்களாக அவர்கள் விளங்குகின்றனர். அந்த நிறை மனிதர்களின் பெருமையைப் போற்றும் வகையில் பூர்ணகும்பத்துடன் அவர்கள் வரவேற்கப்பட்டனர். இது அவர்களிடத்து நமக்கு உள்ள பக்தி நிறைந்த மரியாதையை நாம் முழுமனதுடன் வெளிப்படுத்துவதன் அடையாளமாகும்.

சனி, 2 ஜூன், 2018

குடும்பத்தில் நிம்மதி தரும் குபேர விளக்கு ஏற்றும் முறை

குடும்பத்தில் நிம்மதி தரும் குபேர விளக்கு ஏற்றும் முறைRelated image

குபேரனின் அருள் கிடைக்க குபேர தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.குபேரன் செல்வத்தின் அதிபதி. வற்றாத செல்வத்தை நமக்கு கொடுக்கக்கூடியவர்.யாருக்கெல்லாம் பணம் என்றும் தன்னுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதோ அவர்கள் குபேர பூஜை செய்வது நல்லது.அதுமட்டுமல்லாமல் குபேர தீபம் ஏற்றி வழிபடவேண்டும்.குபேர தீபம் ஏற்ற சரியான நேரம் குபேரருக்குஉகந்த நேரமான வியாழக்கிழமை சாயந்திரம் 5மணி முதல் 8மணி ஆகும்.இந்த நேரத்தில் நம் வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்து,பச்சரிசி மாவினால்  கோலம் போட்டு அதற்கு செம்மண் பட்டை இட்டு அழகுபடுத்த வேண்டும்.

நிலைப்படிக்கு மஞ்சள் தெளித்து சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும்.புள்ளிகள் இல்லாத எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி ,ஒரு பகுதியில் மஞ்சளும் மற்றொரு பகுதியில் குங்குமமும்  தடவ வேண்டும்.நிலைப்படிக்கு ஒரு பக்கத்தில் மஞ்சள் தடவிய  எலுமிச்சை பழத்தையும் ,மறு பக்கத்தில் குங்குமம் தடவிய  எலுமிச்சை பழத்தையும் இருபுறமும் வைக்கவும்.நிலைப்படிக்கு இருபுறமும் பூ வைக்க வேண்டும். தினமும் எலுமிச்சை பழத்தை  மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.காய்ந்த பழத்தை கால்மிதி படாத இடமாக பார்த்து போட வேண்டும்.


வீட்டுவாசலில் நின்றபடி நமது இடதுபுறம் குபேர விளக்கை ஒரு மரப்பலகை அல்லது தட்டில் வைத்து கிழக்கு பார்த்து தீபம் எரியும்படி வைக்க வேண்டும்.முதலில் விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஊற்றி இரு திரிகளை  ஒரு திரியாக்கி ஏற்ற வேண்டும்.இவ்வாறு ஏற்றுவதால் நமக்கு குபேரனின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

 பழைய திரியோ அல்லது முதல் நாள் ஏற்றி மிஞ்சிய எண்ணெயையோ பயன் படுத்தக்கூடாது. அதே போல எலுமிச்சை பழத்தையும் தினமும் புதியதாக வைக்க வேண்டியது அவசியம்.

இதை மாதவிடாய் சமயத்தில் மட்டும் செய்ய வேண்டாம்.
மற்ற தினங்களில் தொடர்ந்து செய்யவும்.
இப்படி செய்வதன் மூலம் குடும்பத்தில் உள்ள சங்கடங்கள் துண்பங்கள் கடன் பிரச்சனைகள் அனைத்தம் பனி போல் கரையும்.
விளக்கு காற்றில் அலைந்தால் சற்று வாசலின் உள்புறம் வைக்கலாம். தவறில்லை.
குறிப்பு: இதை வீட்டில் திருமணம் ஆகாத பெண்கள் கூட செய்யலாம்.

குபேரன் நமக்கு தங்குதடையில்லா செல்வத்தை அள்ளிக்கொடுப்பார்.இந்த குபேர தீபத்தை வார வாரம் வியாழக்கிழமைகளில் செய்து வர எல்லா வளங்களும் நமக்கு கிடைக்கும்.நீங்களே மாற்றத்தை காண முடியும்.


வியாழன், 31 மே, 2018

பூசை அறையை எப்படி வைப்பது?

பூசை அறையை எப்படி வைப்பது? 

பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் க்கான பட முடிவு

சைவ மதத்தில் ஒரு சிறப்பிருக்கிறது. யார் வேண்டுமானாலும், ஒரு பூசாரியாகவும், தனது சொந்தக் கோயிலுக்கு பொறுப்பாளராகவும் இருக்க முடியும். அந்தக் கோயில் ஒவ்வொருவரினதும் வீட் டின் பூஜை அறைதான்.
இன்றைய அவசர யுகத்தில் கோயிலுக்குச் சென்று தெய்வ தரிசனம் கூடச் செய்ய நேர மின்றி நாங்கள் ஓடிக் கொண்டிருக்கிறோம். இந்நிலையில் வீட்டில் பூஜை யறையில் ஒருசில நிமிடங்கள் கண்கள் மூடிப் பிரார்த்திப்பது மன நிம்மதியைத் தருவதாக அநேகர் கூறக் கேட்டிருக்கின்றோம்.
மனிதனுக்கு வாழ்க்கை யில் நிம்மதியைத் தரு வது ஆன்மீகமே. வாழ்க்கையில் ஏற்படும் சுகதுக்கங் கள் எல்லாவற்றிற்கும் தெய்வ வழிபாடு முக்கியமானதாகின்றது.
இதில் எந்த தெய்வத்துக்கு எதை எப்படிச் செய்தால் நல்லது என்று எமது சாஸ்திரங்கள் கூறுகின்றன.
இன, மத, மொழி பேதமின்றி நம் நாட்டு மக்கள் கோயிலாக இருந்தாலும் சரி, வீடாக இருந்தாலும் சரி தினசரி பூஜைகள், விரதங்கள், ஹோமங் கள், யாகங்கள் என்று பலவாறாக தெய்வத்தை வணங்குகிறார்கள். இப்படி இருக்க நம் நாட்டு பெண்கள் தினமும் வீட்டில் பூஜை செய்வது என்பது ஒரு பழக்கமாக உள்ளது. நாம் தெரிந்து சில விஷயங்களை செய்கிறோம். தெரியாமல் பல விஷயங்களை செய் கிறோம். இதில், நாம் நல்லது என்று நினைத் துக் கொண்டு பல தவறான பூஜை விதிகளை கடைப் பிடிப்பதும் உண்டு. வீட்டில் அனைவரும் நலமுடன் வாழவும், சந்தோஷமாக இருக்கவும் பூஜையறையை தூய்மையாக கோவில் போல  வைத்துக் கொள்ள வேண்டும்.
சில வீடுகளில் இடப்பற்றாக்குறை. காரணமாக படுக்கை அறைச் சுவரில் அல்லது சமையலறைச் சுவரில், உள்ள அலுமாரிகளைப் பூஜை அறையாகப் பயன்படுத்துவதுண்டு. சில சமயங்களில் மரப்பெட்டிகளில் கடவுளின் படங்களை வைத்து வழிபாடு செய்யப்படுவதும் உண்டு.
பூஜையறை என்பது நம் வீட்டில் உள்ள கோவில் என்றே சொல்லலாம். பூஜையறையில் முதலில் தெய்வ படங்களை சுவரில் மாட்டும் பொழுது தெய்வத்தின் கண்கள் தரையில் படும்படியாக படங்களை மாட்ட வேண்டும். படங்கள் பூமியை நோக்கி இருக்க வேண்டும். இறந்தவர்கள் படங்களை பூஜையில் தெய்வ படங்களுடன் மாட்டக் கூடாது. இறந்தவர்கள், தெய்வமாக இருந்து நம்மை காப்பாற்றுவார்களே தவிர அவர்கள் தெய்வம் அல்ல. அதனால் இறந்தவர்கள் படங்கள் தனியாக வைத்து பூஜை செய்வது நல்லது.
சாந்தமான தெய்வங்களே வீட்டுக்கு நல்லது. குடும்பம் சந்தோஷமாக, ஐஸ்வர்யத்துடன் வாழ வேண்டும் என்று அனைவரும் விரும்புவது உண்டு. ஆகையால் உக்ர தெய்வங்களை வழிபடுவது அவ்வளவாக உகந்தது அல்ல.
உக்ர தெய்வங்களை வழிபடுவது என்றால் அதற்கு சில விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். சில வீடுகளில் சில உக்ர தெய்வங்களை வழிபடுபவர்கள் உண்டு. அப்படி இருக்கும் பட்சத்தில் தனியாக சுத்தமாக இருக்க வேண்டும்.
தெய்வச் சிலைகளை சில பேர் வீட்டில் வைத்து பூஜை செய்வது உண்டு. சிலைகள் எப்பொழுதுமே 2 அடிக்கு மேல் இருக்க கூடாது. மண் சிலைகளாக இருந்தாலும் சரி, விக்ரஹங்களாக இருந்தாலும் சரி, முறையாக பூஜை செய்ய வேண்டும். அப்படி செய்யாமல் வைத்திருந்தால் நமக்கு பலன் ஏதும் இல்லை.பூஜை அறை க்கான பட முடிவு
பூஜை அறை என்று தனியாக இருந்தால் பூஜை முடிந்தவுடன் கதவுகளை சாத்தி வைப்பது நல்லது. பெண்கள் சுத்தமாக இருக்கும் பொழுது மட்டுமே வீட்டில் விளக்கேற்றி பூஜை செய்வது நல்லது. அப்படி இல்லாதபட்சத்தில் அது தெய்வ குற்றமாகும்.பூஜை அறை சுவர்களின் வண்ணம் வெள்ளை அல்லது இள மஞ்சள் அல்லது நீல நிறத்தில் இருக்க வேண்டும்.பூஜை அறை மாடிப்படிகளின் கீழ் அமைந்து இருக்கக் கூடாது.
பூஜைக்கு ஏற்ற மலர்கள் என்று பார்த்தால் வாசனை மலர்களால் மட்டுமே அர்ச்சனை செய்வது நல்லது. கண்டிப்பாக செவ்வரளி மலர் வீட்டில் பூஜைக்கு ஏற்றதல்ல. கோவிலில் துர்க்கைக்கு மற்றும் அம்மனுக்கு அரளி பூ உகந்தது. ஆனால் வீட்டில் அரளி பூவால் அர்ச்சனை செய்யக் கூடாது. சிவனுக்கு வில்வம், பெருமாளுக்கு துளசி, விநாயகருக்கு அருகம்புல் பெண் தெய்வங்களுக்கு மல்லிகை, முல்லை, மற்றும் ஜாதி, தாமரை இப்படி அர்ச்சனை செய்து பூஜை செய்தால் நல்லது.
தெய்வங்களுக்கு பொதுவாக நாம் எந்த மலரால் அர்ச்சனை செய்கிறோமோ அதற்கு ஏற்ற பலன் இப்பிறவியில் மட்டுமேயன்றி, மறுபிறவிக்கும் அது பயன் தரும். அலங்காரத்திற்காக பயன்படும் எதுவுமே பூஜையறையில் வைக்கக்கூடாது. ஒரு படம்வைத்து பூஜை செய்தாலும் அது உருப்படியாக இருக்க வேண்டும். தூசி, ஓட்டடை படிந்து சுத்தம் செய்யாமல் வைத்திருக் கக் கூடாது. பழைய படங்கள், உடைந்த பொம்மைகள் மற்றும் கறைபடிந்த உடைந்த கண்ணாடியுடன் இருக்கும் படங்கள் கண்டிப்பாக பூஜையறையில் வீட்டிலேயே இருக்கக் கூடாது. சிலபேர் முப்பாட்டனார் காலத்தில் உள்ள படங்கள், கடையில் விற்கும்சக்கரம், இயந்திரங்கள், உறவினர், நண்பர்கள் கொடுத்தார்கள் என்று பூஜையறை முழுவதும் படங்களை ஒட்டி அது பாதி கிழிந்த நிலையில் இருக்கும். அப்படி இருக்கும் படங்களை நாம் கடலில் போடுவது நல்லது. தொடர்புடைய படம்தொடர்புடைய படம்

வீட்டில் பூஜையறையில் ஒற்றை குத்து விளக்கு ஏற்றக் கூடாது. காமாட்சி அம்மன் விளக்கு, மண் அகல் மற்றும் இரண்டு குத்து விளக்குகள் ஏற்றினால் நல்லது. மூன்று அடுக்கு வைத்த விளக்கு மிகச் சிறப்பானது. விளக்கு பூஜை செய்பவர்கள். ஒரு குத்து விளக்கில் ஐந்து முகமும் ஏற்றி பூஜை செய்யலாம். விளக்கு பூஜை செய்பவர்கள் ஒரு முகம் மட்டும் ஏற்றி செய்வது அவ்வளவு உகந்தது அல்ல. வீட்டில் பூஜை அறையில் எப்பொழுதும் ஒரு செம்பு தண்ணீர் இருப்பது நல்லது. அதே போல் கற்பூரம் ஆரத்திக்குப் பதிலாக நல்லெண்ணெய் தீபம் ஏற்றி ஆரத்தி செய்வது நல்லது. எக்காரணத்திலும் கடலெண்ணெய் தீபம் ஏற்றக் கூடாது.
பூஜை அறையாக இருந்தாலும் சரி, சுவரில் தெய்வ படங்கள் வைத்து பூஜை செய்தாலும் சரி, எதுவாக இருந்தாலும் சுத்தமாக மனத் தூய்மையுடன் செய்தால் தெய்வம் நம்மில் குடிகொள்ளும். சுத்தமாக வீட்டை வைத்திருந்து பூஜை செய்தாலே எல்லா நலனும் நம்மைத் தேடிவரும்.

புதன், 30 மே, 2018

தலையிலேயே விடிந்த சாபம்!


தலையிலேயே விடிந்த சாபம்! 

பகவானிடம் பக்தி வைத்து வழிபட்டு, அவனருள் பெறுவது தான் பக்தர்களின் நோக்கமாக இருக்க வேண்டும். “அதைக் கொடு, இதைக் கொடு’ என்று கேட்பதில்லை பகவான். “பகவானே… எனக்கு உயர்ந்ததென எதைக் கொடுக்க விரும்புகிறாயோ, அதையே கொடு…’ என்று கூறினாலே போதும்; கிடைக்கும். கீதோபதேசம் முடிந்ததும், “கிருஷ்ணா… நீ சொன்னதையெல் லாம் கேட்டேன். இப்போது நான் எதைச் செய்தால் கீர்த்தியும், மேன்மையும் ஏற்படுமோ, அதைச் சொல்; செய்கிறேன்…’ என்று, முடிவை பகவானிடமே விட்டு விட்டான் அர்ஜுனன்.
மகாபாரதத்தில் யுத்தம் நடந்த போது, ஜயத்ரதன் என்பவனை, சூர்யஸ்தமனத்துக்குள் கொன்று விடுகிறேன் அல்லது தீக்குளிப்பேன் என்று சபதம் செய்தான் அர்ஜுனன். அன்று காலையிலிருந்து ஜயத்ரதன், மறைவாகவே இருந்தான். துரியோதனன், கர்ணன் போன்றவர்கள், அவனுக்குப் பாதுகாவலர்களாக இருந்தனர்.
அர்ஜுனனால் ஜயத்ரதனை நெருங்கவும் முடியவில்லை; அவன் இருக்கும் இடமும் தெரியவில்லை. மாலை நேரமும் வந்துவிட்டது. “என்ன கிருஷ்ணா… சூரியன் அஸ்தமிக்கும் நேரமாகிறதே… ஜயத்ரதனை எப்படிக் கொல்வது?’ என்று கேட்டான்.
சக்ராயுதத்தால் சூரியனை மறைத்தார் பகவான்; இருள் சூழ ஆரம்பித்தது. இதைப் பார்த்த ஜயத்ரதன் குதூகலித்தான். “சூரியன் அஸ்தமித்து விட்டான். இனி, அர்ஜுனன் தீக்குளித்து விடுவான்…’ என்ற எண்ணத்தில் தலையை வெளியே நீட்டினான். உடன், அர்ஜுனனைப் பார்த்து, “அதோ, ஜயத்ரதன் தலை தெரிகிறது…
ஒரே அம்பால் அவன் தலையைக் கொய்து, தலை கீழே விழாமல், அருகில் சமந்த பஞ்சகத்தில் உள்ள விருத்தட்சரன் என்பவருடைய மடியில் தள்ளு…’ என்றார் கிருஷ்ணன்.
இந்த ஜயத்ரதனுடைய தகப்பனார் தான் விருத்தட்சரன். அவர் கோரமான தவம் செய்ததன் பலனாக, இந்த பிள்ளையைப் பெற்றார். அந்த பிள்ளை பிறந்ததும் ஒரு அசரீரி, “உன் புத்திரன் எல்லாராலும் கொண்டாடப்பட்டு, மகாவீரனாக இருப்பான். மிக்க கோபமும், பராக்ரமும் உள்ள ஒரு வீரனால் இவன் தலை அறுபட்டு மாள்வான்…’ என்றது.
இதைக் கேட்ட விருத்தட்சரன், “தன் தவ வலிமையால், யுத்த களத்தில் எவன் என் பிள்ளையின் தலையை கீழே தள்ளுகிறானோ, அவனது தலை நூறு சுக்கல்களாக சிதறிப் போகட்டும்…’ என்று சாபம் விட்டார்.
இந்த விபரத்தை அர்ஜுனனுக்கு சொல்லி, “உன்னால் அறுபட்டு இந்தத் தலை கீழே விழுந்தால் உன் தலை நூறு சுக்கல்களாக வெடித்து விடும். அதனால், அருகிலுள்ள அவனது தகப்பனார் விருத்தட்சரனுடைய மடியில் அந்தத் தலையைத் தள்ளு…’ என்றார் கிருஷ்ணன்.
அர்ஜுனனும் அப்படியே செய்தான். அந்த சமயம், பூமியில் அமர்ந்து விருத்தட்சரன் சந்தியோ பாசனம் செய்து கொண்டிருந்ததால், மடியில் தலை விழுந்ததை கவனிக்கவில்லை.
பிறகு, அர்க்யம் கொடுப்பதற்காக எழுந்த போது, அவரது மடியில் கனமாக ஏதோ இருப்பதைக் கண்டு அதை கீழே தள்ளினார். அது பூமியில் விழுந்தது. தன் பிள்ளையின் தலையை எவன் பூமியில் தள்ளுகிறானோ, அவன் தலை நூறு சுக்கல்களாகும் என்று இவரே சொல்லியிருந்தபடி இவரது தலையே சுக்கல்களாகியது.
இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், நம்முடைய எண்ணம் எப்படியெல்லாமோ இருக்கும்; ஆனால், பகவானுடைய சித்தம் வேறு விதமாக இருக்கும். மனிதனை மனிதன் ஏமாற்றி விடலாம்; தெய்வத்தை ஏமாற்ற முடியாது.
நாம் என்ன தான் தந்திரமான சூழ்ச்சி செய்தாலும், சாமர்த்தியமாக நடந்து கொண்டாலும், என்ன நடக்க வேண்டுமென்பதையும், அதை எப்படி நடத்தி வைக்க வேண்டுமென்பதையும் தீர்மானம் செய்வதும், நடத்தி வைப்பதும் பகவான் தான்.
அதனால், எல்லாப் பொறுப்புகளையும் அவனிடம் ஒப்புவித்து விட்டு, “பகவானே… எல்லாம் உன் சித்தம்! எது நல்லதோ, அதைச் செய்!’ என்று சொல்லி, அவனையே சரணடைந்து விட்டால் போதும்… காப்பாற்ற வேண்டியது அவன் கடமை, அவன் செய்வான்!

செவ்வாய், 29 மே, 2018

வார தீப பரிகார பூஜை


 வார தீப பரிகார பூஜை 


வாரத்தின் ஒவ்வொரு நாட்களிலும் தெய்வங்களுக்கு உகந்த தீபங்களை ஏற்றி வழிபாடு செய்து வந்தால் தடைகளும், பிரச்சனைகளும் படிப்படியாக மறையும்.தடைகள், பிரச்சனைகளை தீர்க்கும் வார தீப பூஜை