வியாழன், 17 செப்டம்பர், 2015

புரட்டாசி சனிக்கிழமை விரதம்

ஹாய் பிரண்ட்ஸ்

வணக்கம் .இன்னிக்கு புரட்டாசி மாதம் ஆரம்பமாகி விட்டது.நாளைக்கு புரட்டாசி சனிக் கிழமை .
அதனால் புரட்டாசி சனிக்கிழமை விரதம் பற்றி எழுதுகிறேன் .

புரட்டாசி சனிக்கிழமை விரதம்  புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமை தோறும் கோவில்களிலும்,வீடுகளிலும் பெருமாளை வணங்குகினறனர்.
விரதம் இருக்காதவர்கள் இந்த மாதத்தில்  விரதம் இருப்பது  நல்ல பலனை தரும்.விரதம் இருப்பவர்கள் திருநாமம் இட்டு,சர்க்கரை பொங்கல்,வடை,எள் சாதம்  நைவேத்தியம் செய்து காக்கும் கடவுளான பெருமாளை வழிபடுவர்.

சூரிய பகவானுக்கும் ,சாயா தேவிக்கும் மகனாக பிறந்தார் சனி .சனிக்கிழமை, சனி பகவானை நினைத்து, சனி தோஷம் உள்ளவர்கள் சனி தோஷம் நீங்க கடைப்பிடிக்கப்படும் விரதம் இது .

ஏழரை சனி பிடித்தவர்களுக்கு கஷ்டமான காலம் .சனியை வணங்கினால் தாக்கம் குறையும்.
சனி பகவானை போல் கெடுப்பாரும் இல்லை .அவரை போல் கொடுப்பாரும் இல்லை .முதலில் கஷ்டங்களை கொடுத்து பிறகு ,நன்மையையும் செய்வார் சனி பகவான் .


சனி தோஷ காலங்களில் புத்திர பாக்கியம் குறைவு ,மரண பயம் .அதிக பிரயாணம் ,அதிக செலவு ,பண நஷ்டம் ,வீண் சச்சரவு ஏற்படும் .இதை போக்க ,சனிக்கிழமை அதிகாலையில் நல்லெண்ணெய் ஸ்தானம் செய்து .ஆலயம் சென்று கருப்பு துணியில் எள்ளை சிறு மூட்டையாக
கட்டி  நல்லெண்ணெய் ஊற்றி ,தீபம் ஏற்ற வேண்டும்.

அர்ச்சனை செய்து ,பின் சிவவிஷ்ணுவை வழிபட்டு தேவாரம் ஓதி ,விஷ்ணு ஸ்தோத்திரம் பாடி துதிக்க வேண்டும் .சனிக்கு அதிபதி விஷ்ணு .  

சனி வாகனமான காகங்களுக்கு உணவு வைத்தபின் ,உணவுண்ண  வேண்டும் .சனிக்கிழமை விஷ்ணு சகஸ்ர நாமம் படித்தால் நன்மை உண்டாகும்.


இந்தியாவின் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் மிகச் சிறப்பு வாய்ந்தது .சனி தோஷம் உள்ளவர்கள்
இங்கு சென்று வணங்கினால் தோஷம் விலகி நல்லது நடக்கும் .


இந்த மாதம் குல தெய்வ பூஜை ,நேத்திக்கடனுக்கு சிறந்த மாதம்.


சனிக்கிழமை பெருமாளுக்கு வீடுகளில் மாவிளக்கு போட்டு வழிபடுவர் .சிலர் வீடு வீடாக சென்று ,
அரிசி பிச்சை கேட்டு பெருமாள் கோவிலுக்கு கொடுப்பர் .காணிக்கை கொடுப்பவர்களும் கோவிலில் போடுவர் .

புரட்டாசியில் தான் நவராத்திரி வருகிறது .


நன்றி வணக்கம்
மீண்டும் மற்றுமொரு பதிவில்
உங்கள் தோழி ஈஸ்வரி



























திங்கள், 14 செப்டம்பர், 2015

சரஸ்வதி

என் அன்பு தோழிகள் அனைவருக்கும் காலை வணக்கம் . 

ஆன்மீக தேடலில் என்னுடைய பயணம் 
தொடர்ந்து செல்ல என் இஷ்ட  தெய்வங்களை வணங்குகிறேன் .உங்களையும் அழைத்து செல்வது இறைவன் செயலாக எண்ணி என் பதிவை தொடர்கிறேன் .


இன்னிக்கு நமக்கு கல்வி செல்வத்தை தரும் சரஸ்வதியைப் பற்றி பார்ப்போம் 

சரஸ்வதி , நான்முகன் பிரம்மாவின் மனைவி .கல்விக்கு அதிபதி .வெண் பட்டுயுடுத்தி ,கையில் வீணையும்,ஏட்டுச் சுவடியும்  வைத்து வெண் தாமரையில் வீற்றிருப்பாள் .அள்ள அள்ள  குறையாத செல்வம் கல்வி செல்வம்.அதை வழங்குவது சரஸ்வதி  தாய் .                                                                              

கல்வி ,ஞானம் ,கலை அனைத்தும் பெற சரஸ்வதி தாயாரை வணங்க வேண்டும்.சரஸ்வதி தேவி மூல மந்திரம் ,அஷ்டோத்ர நாமம் ,நாமாவளி ,சுலோகம் கூறி வழிபடலாம் .இதையெல்லாம் சொல்ல தெரியாது என்பவர்கள் "ஓம் சரஸ்வதியே நம !"என 108 தடவை சொல்லலாம் . சரஸ்வதிகுரிய  பாடல்கள் பாடியும் வணங்கலாம் .


புதன் கிழமை காலையில்  கிழக்கு நோக்கி அமர்ந்து ,சரஸ்வதி 12 நாமங்களை சொன்னால் ,கல்வி முன்னேற்றம் ,நல்ல வாக்கு வன்மை கிடைக்கும் . 

12 நாமங்கள் 

பாரதி 
சரஸ்வதி 
சாரதாதேவி 
ஹம்சவாகிணி 
ஜகதீக்யாதா 
மகேஸ்வரி 
கெளமாரி 
பிரம்மச்சாரிணி 
வித்யதாத்ரிணி 
வரதாயினி 
ருத்ரகண்டா 
புவனேஸ்வரி 



மாணவர்கள்,பணி  புரிபவர்கள்.கலை துறையில் உள்ளவர்கள் இதை சொன்னால் கல்வியில் 
உயரவும்,இருக்கும் நிலை தக்க வைத்து கொள்ளலாம் .

சரஸ்வதிக்கு கொண்டைக் கடலை சுண்டல் ,வடை ,பாயாசம் செய்து வழிப்படலாம் .இவையெல்லாம் செய்ய முடியாதவர்கள் கல்கண்டு ,பேரீச்சம் பழம் ஏதாவது வைத்து வணங்கலாம் .

படிக்கிற குழந்தைகள் சரஸ்வதியை வணங்க அம்மாவின் அனுக்கிரகம் கிடைக்கும் .சகல நலங்கள் 
பெற சரஸ்வதியை புகழ் பாடி போற்றுவோம்.

நன்றி வணக்கம் 
 ஈஸ்வரி 





















வெள்ளி, 11 செப்டம்பர், 2015

துர்க்கை அம்மன்

ஹாய் ப்ரண்ட்ஸ்


அனைவருக்கும் வணக்கம் . இன்னிக்கு துர்க்கை அம்மனை பற்றி எனக்கு தெரிந்ததை பகிர்ந்து 
கொள்ளலாம்னு இருக்கிறேன் .

துர்க்கை பார்வதி தேவியின்  அவதாரம் எனலாம்.துர்க்கை என்றால் "துன்பத்தை போக்குபவள் "
துன்பத்தை போக்கி இன்பத்தை தருபவள் நம் துர்க்கா .பத்து  கைகளில் ஆயுதம் ஏந்தி ,
சிங்கத்தின் மீது சவாரி செய்யும் காட்சியைப் பார்க்க நமக்கு இரண்டு கண்கள் போதாது.


இப்ப துர்க்கை எப்படி அவதாரம் எடுத்தாங்கனு பாப்போமா ?

ஒரு சமயம் உலதத்தையே தன்  கைக்குள் கொண்டு வர அசுரபலம் கொண்ட அசுரன் சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தான்.சிவனோ தன்னை வணங்குபவர்கள் யாராக இருந்தாலும் கொடுக்கும் கருணைக் கடல் ஆயிற்றே !உடனே அசுரனுக்கு வரத்தை கொடுத்தார்.


அசுரன் அவன் வேலையை காட்டி விட்டான்.அது என்ன தெரியுமா?.நம் கருணா மூர்த்தி சிவனையே
கொல்ல முற்பட்டான்.கணவனுக்கு ஒரு பிரச்சனை என்றால் நம் மானிடப்  பிறவி மனைவியர் சும்மா இருப்பார்களா ? நம் தாய் பார்வதி தேவியர் உலகத்தையே ஆள்பவர் ஆயிற்றே ! சும்மாவா இருப்பார்?


உடனே,துர்கையாக மாறி அவனை அழித்தாள் .இந்த நிகழ்ச்சியை கருவாக கொண்டு 10 நாட்கள்
சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. கீழே விழும் அசுரனின் தலையை துர்க்கை அம்மன் சிம்மவாகனத்துடன் தன கையில் ஏந்துகிறாள்.

அசுரனின்  ரத்தம் பூமியில் பட்டவுடன், இரத்தத்தின் வழியாக மீண்டும் அசுரனாக உருவெடுக்காகக்
கூடாது என்று எண்ணிய துர்க்கை ,சண்டி அம்மனை அசுரனின் இரத்தத்தை உறிஞ்சி கட்டளையிட்டாள் .

துர்கா  பூஜைக்கு எலுமிச்சை விளக்குகள் பயன்படுத்தபடுகிறது.




எலுமிச்சை தீய சக்தியை அண்ட விடாது .கண் திருஷ்டியை போக்கி ,கெட்ட ஆவிகளை விலக்க
செய்யும் .நம்மிடம் உள்ள கோபம் ,காமம்,பேராசை,மாயை போன்றவற்றை கடவுளுக்கு முன் எரிய விட வேண்டும் .

எலுமிச்சை பழத்தை நறுக்கும் போது  ஐம்  என்ற மந்திரத்தையும்,மூடியை திறக்கும் போது க்ரீம்
என்ற மந்திரத்தையும் சொல்லி பஞ்சு திரி போட  வேண்டும் .எண்ணெய் ஊற்றும் போது க்லீம் என்று சொல்லி ஊற்ற வேண்டும்.விளக்கை துர்க்கை முன் வைத்து சாமுண்டாய விச்சே என்று சொல்லி வைக்க வேண்டும்.

ஐம் --சரஸ்வதி

க்ரீம் --லக்ஷ்மி

க்லீம் ---காளி யை குறிக்கும்.


வெள்ளிக் கிழமையை ராகு கால நேரத்தில் 10.30 லிருந்து 12 மணி வரை விளக்கு ஏற்றினால் நம்
பிரச்சனை நீங்கி ,செழிப்போடும் ,சந்தோசமாகவும் வாழலாம் .

கோவிலில் துர்க்கையை பார்த்து தீபம் ஏற்றக்கூடாது .நம்மை பார்த்து ஏற்ற வேண்டும்.

ஞாயிற்று கிழமை ராகு  கால வேளை  மதியம் 4.30 முதல் 6 மணியாக இருப்பதால் அந்த நேரத்தில் விளக்கு போட்டால் நோய்கள் குணமாகும் .இரு விளக்கு போடலாம் .9விளக்குகள் போடலாம் .
செவ்வாய் கிழமை விளக்கு ஏற்ற குடும்பம் மற்றும் தனிப்பட்ட வேண்டுதல்கள் நிறைவேறும்.

சரி நண்பர்களே ! எனக்கு தெரிந்த விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைந்து , என் பதிவினை முடிக்கிறேன் .

நன்றி மீண்டும் அடுத்த பதிவில்

இந்த பதிவை பார்த்து உங்கள்  கருத்துக்களை  எழுதினால் ,  எனக்கு மேலும் மேலும் எழுதுவதற்கு ஒரு தூண்டு கோலாக அமையும் .

உங்கள் அன்பு தோழி
ஈஸ்வரி


















செவ்வாய், 8 செப்டம்பர், 2015

அர்ச்சனை



அர்ச்சனை

எல்லோருக்கும் வணக்கம் .இன்னிக்கு அர்ச்சனைப் பற்றி பகிர்ந்து கொள்ளலாம்னு இருக்கேன்.


முதலில் அர்ச்சனை என்ற சொல் எப்படி வந்தது தெரியுமா ?

அர்ச்சனை என்றால் அர்ச்சா என்ற சொல்லில் இருந்து வந்தது.அர்ச்சா என்றால் சிலை என்று பொருள் .இதிலிருந்து  அர்ச்சனை ,அர்ச்சித்தல் சொற்கள் வந்தன .


இறைவனின் புகழை மனதார வாயார பாடுவதாகும்.அப்படி பாடும் போதே மன குறைகளையும் அவனிடம் முறை இடுவது செய்வதன் தாத்பரியம்.  


கடவுள் பெயரில் அர்ச்சனை செய்யாலாமா ?என்பது  பல பேர்களின் கேள்வியாக இருக்கலாம் .இதோ அதன் பதில் .


கடவுள் நமக்கு தந்த நன்மைக்காக நன்றி செலுத்த வேண்டுமெனில் அவர் பெயரில் அர்ச்சனை செய்யலாம் .

அவரிடம் ஏதாவது விண்ணப்பம் வைக்க நம் பெயரில் செய்யலாம் .அவருக்கு தெரியாதா? நமக்கு 
என்ன கொடுப்பது என்பது .மூக்காலமும் அறிந்தவர் கடவுள். அவர் பெயரில் செய்வது நல்லது .

வாசனை மிக்க மலர்களை கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும்.வீட்டில் உதிரி மல்லிகைப் பூவால் அர்ச்சனை செய்தல் நம்மை தேடி நம் குல தெய்வம் வரும். நம்முடைய கோரிக்கைகளை நிறைவேற்றும்.   


வீட்டில் அரளி பூவால் அர்ச்சனை பண்ணக் கூடாது .


கடனில் இருப்பவர்கள் பௌர்ணமி தோறும் சங்குக்கு குங்கும அர்ச்சனை செய்தால் கடன் தீரும் .

குங்கும அர்ச்சனை செய்தால் அம்பாள் மாங்கல்ய பலத்தை கொடுப்பாள் .

வெள்ளி தோறும் வீட்டை சுத்தம் செய்து வாசலில் கோலம் போட்டு குத்து விளக்கு ஏற்றி , பூஜை 
செய்தால் சகல நலன்களும் பெறலாம் .


எல்லோரும் இன்புற்று இருக்க நான் அம்பாளை வேண்டிக் கொண்டு என் பதிவை முடிக்கிறேன் .

நாளை மற்றுமொரு பதிவில்  

உங்கள் அன்பு தோழி 

ஈஸ்வரி 

ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

சந்திர பகவான்

ஹலோ நண்பர்களே ,


வணக்கம். என் கணினியில் பழுது ஏற்பட்டதால் தொடர்ந்து பதிவை அனுப்ப முடியவில்லை.
மீண்டும் இறைவனின் அருளோடு நான் எழுதுவதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன். ஏன் பதிவை
பார்த்து ஆன்மீக சிந்தனையில் திளைத்திருக்க கடவுளை வேண்டுகிறேன்.

முழுமுதற் கடவுளுக்கு வணக்கம்.எனக்கு குருவாக விளங்கும் சாய்பாபா .பெரியவா ஆசிர்வாதத்துடன் ஆரம்பிக்கிறேன் .


 சந்திர பகவான்

திங்கட்கிழமை சந்திர பகவானுக்கு உடையது .




திங்கட்கிழமைகளில் விரதம் இருத்தல் (சோம வார விரதம்),  பௌர்ணமி நாட்களில் சாதத்தில் தேனும் சர்க்கரையும் கலந்து செப்பு பாத்திரத்தில் சந்திரனுக்கு படைப்பது,  செம்பருத்தி பூவால் அர்ச்சனை செய்வது,  முத்து பதித்த மோதிரம் அணிவது, 

வெங்கடாசலபதியை தரிசிப்பது, திருப்பதி சென்று வருவது, சந்திரனின் அதிதேவதையான பார்வதி தேவியை திங்களன்று வணங்குவது, ஸ்ரீபராசக்தி, துர்க்கா தேவியை வழிபடுவது, இரண்டு முகங்கள் கொண்ட ருத்ராட்சையை அணிந்து கொள்வது, 

நீர், பசும்பால், அரிசி போன்றவற்றை திங்கட்கிழமைகளில் பெண்களுக்கு தானம் தருவது, வெள்ளி பாத்திரங்களை உபயோகிப்பது, வெள்ளை நிற ஆடை அணிவது, எப்போதும் வெள்ளை நிற கைக்குட்டை வைத்திருப்பது. அதுபோல ஓம் ஷரம் ஸ்ரீம் ஷெளரம் சந்திராய நமஹ என சந்திரனின் மூல மந்திரங்களை 40 நாட்களுக்கு தினம் 250 வீதம் 10,000 தடவை ஜெபிப்பது. 

சந்திராயன விரதம் என்ற முறையில் அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமை அன்று 1 கவளம் அடுத்த நாள் 2 கவளம் என வரிசையாக ஒவ்வொரு நாளுக்கு ஒரு கவளம் மட்டும் உணவு சேர்த்து மறுபடியும் பௌர்ணமியன்று முழு உபவாசம் இருப்பது.


எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும் 
திங்களே போற்றி,திருவருள் தருவாய் 
சந்திரா போற்றி ,சத்குரு போற்றி 
சங்கடம் தீர்ப்பாய் சந்திரா போற்றி 

இந்த சிறிய ஸ்லோகத்தை சொல்லி வழிபடுங்கள்.நலம் யாவும் பெறுங்கள்.


நன்றி வணக்கம் .
அன்பு தோழி ஈஸ்வரி 























செவ்வாய், 1 செப்டம்பர், 2015

பாபாவின் அறிவுரை

ஹாய் ப்ரண்ட்ஸ்    அனைவருக்கும் என் இனிய காலை வணக்கம் .

எல்லோரும் வரலக்ஷ்மி பூஜையை சிறப்பாக கொண்டாடி இருப்பீர்கள்? .நான்கூட வரலக்ஷ்மி விரதம் இருந்ததால் தொடர்ந்து என் பதிவை போடமுடியவில்லை.உங்களுடன் எனக்கு தெரிந்தவற்றை   பகிர்ந்து கொள்வதில் பெரும்மகிழ்ச்சி கொள்கிறேன் .

போனபதிவில் சொன்ன மாதிரி நான் ஓரு தீவிர பாபாபக்தை .பாபாவை நினைக்காத நாளே இல்லை .ஒவ்வொரு நொடியும் அவரை நினைக்கிறேன் .நான் செய்யும் செயல்கள் அனைத்தும் பாபாவின் இயக்கமே .

இன்னிக்கு பாபா நமக்கு சொன்ன சில அறிவுரைகளை சொல்லலாம் என்று இருக்கேன்.
வாங்க !பார்க்கலாம்.

நீங்கள் எங்கு வேண்டுமானாலும் இருங்கள் .என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் .நான் உங்கள் இதயத்தில் இருக்கிறேன்.

 எல்லா  ஜீவராசிகளையும் அரவணைக்கிறேன் ,என்னை நினைப்பவனை எந்த துன்பமும் நெருங்காது . 

எவர்  உள்ளத்தில்  நான் இருக்கிறேனோ  அங்கு அன்பு இருக்கும் . 

  • நம்பிக்கை ,பொறுமை  பாபா மீது  வைத்தால் நாம் நினைத்தது  நிறைவேறும் .

    சாயி சாயி  என்று சொன்னால்  பாவங்கள் தீர்ந்து விடும்.

    பாபா எண்ணம் ,செயல் ,சொலால் இறைவனை சரணடை என்கிறார் .

    என்னை வணங்க பூஜை பூனஸ்காரம்  தேவையில்லை .ஆத்மார்த்தமாக என்னை வணங்கு .நான் உன்னுடன் இருப்பேன் .

    கஷ்டம் வந்தால் துவண்டு போகாதே .அது உன் பூர்வ ஜென்ம கர்மா .இன்பத்தை எவ்வாறு சந்தோசமாக ஏற்கின்றாயோ அதே போல் கஷ்டத்தையும் மகிழ்ச்சியுடன் ஏற்று என் மீது போட்டு விடு .நான் பார்த்து கொள்கிறேன் . கவலைபடாதே !

என்ன நண்பர்களே  பாபா அறிவுரையை கேட்டு அவரை முழுமையாக நம்பிக்கையுடன் ஜெபம் செய்தால் நிச்சயமாக பாபா நம் மீது கருணைக்காட்டுவார் .
ஜெய் சாய்  ராம் !
வாழ்க வளமுடன் 
உங்கள் அன்பு தோழி  ஈஸ்வரி 

திங்கள், 24 ஆகஸ்ட், 2015

எண்ணெய் ஸ்நானம்

 ஹாய் ப்ரண்ட்ஸ்

வணக்கம் . சிறு இடைவெளிக்குப் பிறகு என்னுடைய ஆன்மீகப் பயணத்தை தொடர்கிறேன் .இதுவரைக்கும் இறைவனைப் பற்றி நான் எழுதிக்கிட்டு வந்தேன் .அத்துடன் சில பயனுள்ள
தகவல்களையும் உங்ககிட்ட பகிர்ந்து கொள்ளலாம் என்று  இருக்கேன்.

எண்ணெய் குளியல் 


நாம் எல்லோரும் தினமும் குளிக்கிறோம்.வாரத்தில் இரு நாட்கள் தலைக்கு குளிக்க வேண்டும் .
விசேஷ நாட்களிலும் ,பூஜையில் கலந்து கொள்ளும் போதும் தலைக்கு குளிக்க வேண்டும்.இது
வயதானவர்களுக்கு ,நோயாளிகளுக்கு ,சிறு குழந்தைகளுக்கு பொருந்தாது.




எண்ணெய் தேய்த்து, நாம் தீபாவளி அன்று ,அதிகாலையில் குளிப்போம் .இது எல்லோருக்கும்
பொதுவானது. அறிந்ததும் கூட .

எந்த நாட்களில் எண்ணெய் தேய்த்து குளித்தால் என்ன நன்மை ,தீமை? என்று பார்ப்போம்.

ஞாயிற்று கிழமை -----அழகு போகும்திங்கள் கிழமை -----பொருள் சேரும்செவ்வாய் ------குடும்பத்திற்கு ஆகாதுபுதன் ----கல்வி வளரும்வியாழன் ------அறிவு அழியும்வெள்ளி ------புகழ் உண்டாகும்சனி ------சம்பத்து உண்டாகும்


அமாவாசை ,பிறப்பு ,இறப்பு காலங்களில் வெந்நீரில் குளிக்க கூடாது.


மீண்டும் அடுத்த பதிவில்
நன்றி .

உங்கள் அன்பு தோழி

ஈஸ்வரி