வெள்ளி, 1 ஜூலை, 2022

தோஷங்கல் நீங்க

குளியல் மூலம் தோஷங்களை நீக்குவது எப்படி?

நவக்கிரகத்தால் ஏற்படக்கூடிய தோஷங்களை நாம் குளிக்கும் போது போடக்கூடிய ஒரு சில பொருளை கொண்டு தீர்க்கலாம்.9கிரகங்களின் தோஷத்தை தீர்ப்பது எப்படி?என்பதை பார்க்கலாம் வாங்க 


சூரியனால் ஏற்படும் தோஷம் நீங்க

சிகப்பு மலர்களையோ அல்லது குங்குமப்பூவையோ குளிக்கும் நீரில் சிறிதளவு போட்டு பின்பு நான்கைந்து குவளைகள் அந்த நீரில் குளித்துவிட்டு பின் வழக்கம் போல சாதாரண நீரில் குளிக்கலாம். இதனால் சூரிய பகவானால் ஏற்படும் தோஷங்கள் விலகும்.

சந்திரனால் ஏற்படும் தோஷம் நீங்க:

அழகுக்காக பலர் தயிரை முகத்தில் பூசிக்கொள்வது வழக்கம். சந்திரனால் ஏற்படும் தோஷத்தை போக்கவும் இதை தான் செய்யவேண்டும். குளிப்பதற்கு முன்பு சிறிதளவு தயிர் எடுத்து அதை உடல் முழுக்க தடவி பின் குளித்துவந்தால் சந்திரனால் ஏற்படும் தோஷங்கள் விலகும்.சந்திரனால் ஏற்படும் தோஷம் நீங்க:

செவ்வாயால் ஏற்படும் தோஷம் நீங்க:
செவ்வாய் தோஷம் இருப்பதால் திருமணம் தடைபடுகிறது, திருமணத்திற்கு பிறகும் பல பிரச்சனைகள் வருகிறது என்று பலர் கவலைப்படுவதுண்டு. இதற்கு சிறந்த குளியல் பரிகாரம் என்னவென்றால், வில்வ கொட்டையை சிறிதளவு எடுத்துக்கொண்டு அதை நன்கு பொடி செய்து, குளிக்கும் நீரில் கலந்து அதில் ஒரு நான்கைந்து குவளைகள் குளித்துவிட்டு பின் வழக்கம் போல சாதாரண நீரில் குளிக்கலாம். இதனால் செவ்வாய் தோஷம் விலகும்
புதனால் ஏற்படும் தோஷம் நீங்க:
புதன் தோஷம் நீங்க கங்கை நீரோ அல்லது கடல் நீரோ தேவை. சிறிதளவு மஞ்சள் கடுகு எடுத்துக்கொண்டு அதில் தேன் கலந்து பின் அதை சிறிதளவு கடல் நீரிலோ அல்லது கங்கை நீரிலோ கலந்து பின் அனைத்தையும் நாம் குளிக்கும் நீரில் கலக்க வேண்டும். பின் இந்த நீரில் குளிப்பதன் மூலம் புதனால் ஏற்படும் தோஷங்கள் விலகும்.
வியாழனால் ஏற்படும் தோஷம் நீங்க:
கருப்பு ஏலக்காய் சிறிதளவு எடுத்துக்கொண்டு அதை நீரில் நன்கு கொதிக்கவைத்து பின் அதை குளிக்கும் நீரில் கலந்து குளித்துவருவதன் மூலம் வியாழனால் ஏற்படும் தோஷங்கள் விலகும்.
சுக்கிரன் :
சுக்கிர தோஷம் நீங்க, பச்சை ஏலக்காயை சிறிதளவு எடுத்துக்கொண்டு அதை நீரில் நான்கு கொதிக்கவைத்து பின் அதை குளிக்கும் நீரில் கலந்து குளித்துவர வேண்டும்
சனி :
சனி தோஷம் நீங்க, கருப்பு எள் சிறிதளவு எடுத்துக்கொண்டு அதை நீரில் நான்கு கொதிக்கவைத்து பின் அதை குளிக்கும் நீரில் கலந்து குளித்துவர வேண்டும்.
ராகு :
ராகு தோஷம் நீங்க, நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கக்கூடிய மகிஷாக்ஷியை சிறிதளவு எடுத்துக்கொண்டு அதை நீரில் நான்கு கொதிக்கவைத்து பின் அதை குளிக்கும் நீரில் கலந்து குளித்துவர வேண்டும்.
கேது :
கேது தோஷம் நீங்க, அருகம்புல்லை சிறிதளவு எடுத்துக்கொண்டு அதை நீரில் நான்கு கொதிக்கவைத்து பின் அதை குளிக்கும் நீரில் கலந்து குளித்துவர வேண்டும்.
navagragha-mandhiram

sukran
ragu ketu

Hayagriva mantra TamilHayagriva mantra Tamil

பானகம் செய்யும்  முறை 

பானகம் என்பது இனிப்பு, புளிப்பு, லேசான காரம் என மூன்று சுவைகளும் ஒன்றாகக்கலந்த ஒரு பானம். வெல்லம், புளி, ஏலக்காய், சுக்கு, மிளகு சேர்த்து தயாரிக்கப்படும் நீராகாரம். உடலின் களைப்பை நீக்கி குளிர்ச்சியும், புத்துணர்ச்சியும் தரக்கூடிய பானம்.
இது அடுப்பில்வைத்து காய்ச்சாமல் அப்படியே கலக்கி பருகக்கூடிய பானவகையைச் சேர்ந்தது.வெயிலினால் ஏற்படும் உடல் உஷ்ணத்தையும், களைப்பையும் பானகம் பருகி ஓட ஓட விரட்டும். 
தேர்த்திருவிழாவன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்றுகூடி தேரை வடம்பிடித்து இழுத்து வருவார்கள்.வேர்க்க, விறுவிறுக்க தேர் இழுத்துவரும் பக்தர்களுக்காக பானகம் வீட்டிற்கு வீடு தயாரித்துக் கொடுப்பார்கள். தாகமும், களைப்பும் தீரும் அளவுக்கு வயிறுநிறைய வாங்கி, வாங்கி பருகுவார்கள். இனிப்பும், புளிப்பும் கலந்த இந்த பானகம்  உள்ளே சென்றதும் உடலின் மொத்த களைப்பும் நீங்கி புதுத்தெம்புடன் தேரை இழுத்து கோவிலுக்கு கொண்டு சேர்ப்பார்கள்.
நீங்கள் இதுவரை பானகம் குடித்திராத நபராக இருந்தால் ஒருமுறை தயாரித்து சுவைத்துப்பாருங்கள். கண்டிப்பாக உங்களுக்கும் பிடித்துவிடும். இனிப்பும், புளிப்பும் கலந்த இந்த பானத்தின் சுவை உங்களை மீண்டும் மீண்டும் பருகத்தூண்டும்.
தேவையான பொருட்கள்:
புளி – சிறிய எலுமிச்சை அளவிலான உருண்டை
வெல்லம் – 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி – 1/4 டீ ஸ்பூன்
சுக்குப்பொடி – 1/4 டீ ஸ்பூன்
மிளகுத்தூள் – 1/4 டீ ஸ்பூன் 
தண்ணீர் – 2 கப்
செய்முறை:
வெல்லத்தை தட்டி பொடியாக்கிக்கொள்ளவும். புளியை 2 கப் தண்ணீரில் நன்கு கரைக்கவும். கரைத்த புளிநீரில் வெல்லத்தை சேர்க்கவும். வெல்லம் முழுவதுமாக கரையும்படி ஸ்பூன் கொண்டு கலக்கிவிடவும். வெல்லம் முழுமையாக கரைந்தபின் வடிகட்டியால் இறுக்கவும். இதனுடன் ஏலக்காய்பொடி, சுக்குப்பொடி, மிளகுத்தூள் சேர்த்து கலக்கவும். இதை அப்படியே அல்லது சிறிது நேரம் மண்பானையில் வைத்திருந்து பருகவும். மிளகு மற்றும் சுக்கு தொண்டைபிடிப்பை குணமாக்கும் நல்ல மருந்து. சளியையும் குணப்படுத்தும். கோடையில் வெயிலினால் ஏற்படும் உடல் உஷ்ணத்தையும், களைப்பையும் பானாக்கம் பருகி ஓட ஓட விரட்டுங்கள்

திங்கள், 28 மார்ச், 2022


அசைவ உணவை விரும்பி உண்ணும் இஸ்லாமியர்கள்கூட இந்த பிறை தரிசனத்தை காணும் நாளில் கடுமையான விரதங்களை மேற்கொண்ட பின்னரே பிறை தரிசனம் கண்டு விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.
இந்த பிறைநாள் செவ்வாய், வெள்ளி,சனி கிழமைகளில் வந்தால் இரட்டிப்பான பலன்கள் உண்டு, அதே போல் சித்திரை. வைகாசி மாதங்களில் காணும் பிறை தரிசனத்திற்கு ஒரு வருட பிறை தரிசனம் கண்ட பலன் கிட்டும், அதே போல் கார்த்திகை. மார்கழி மாதங்களில் காணும் பிறை தரிசனத்தால் சகல பாவங்களும் தீரும், ஆக மகிமை பெற்ற சந்திர பிறை தரிசனம் செய்தால் அறிவு வளரும், ஞாபக சக்தி கூடும் கேட்ட வரம் கிடைக்கும், செல்வமும் சந்தோஷமும் தேடிவந்து அமையும்.

திருமணம் ஆனவர்கள் தம்பதி சமேதராய் நின்று பிறையை வணங்க வேண்டும்,திருமணம்ஆகாதவர்கள் பெற்றோர்களுடன் நின்று பிறை தரிசனம் காண வேண்டும், சூழ்நிலையால் முடியாதவர்கள் தனித்து நின்றும் வழிபடலாம், இந்த பிறை தரிசனம் காண ஆண்.பெண் பேதமில்லை, யாருக்கு செல்வம். சந்தோஷம். கல்வி வேண்டுமோ அவரவர் தரிசனம் கண்டு வணங்கி கேட்க நிச்சயம் கிடைக்கும்.

ஓரிரு முறை தரிசனம் கண்டும் இன்னும் எதுவும் கிடைக்கவில்லையே என நினைக்காமல் பொறுமையாக வழிபட்டு வரவேண்டும். அவரவர் தன்மைக்கு ஏற்றவாறு இறைவன் யோகத்தை அருளுவார், எனவே பொறுமையாக உண்மையாக வழிபட்டு வரவேண்டும், சிலருக்கு ஒரே தரிசனத்திலேயே கிடைத்து விடும், சிலருக்கு 12 மாதம் பிறை தரிசனம் கண்டவுடன் தான் பலன் கிடைக்கும், எனவே இறைவன் மேல் நம்பிக்கை வைத்து தரிசனம் காணுங்கள் அளவு கடந்த நன்மைகளை பெறுங்கள்.








ஒன்பது நவகிரகங்களும் ஒரே மந்திரம் – ஜபித்தால் நிச்சயம் பலன் உண்டு


நமது வாழ்வில் நிகழும் பல செயல்களுக்கு நவகிரகங்களின் முக்கிய பங்கு உண்டு. நவகிரகங்கள் நமது ஜாதகத்தில் சரியான இடத்தில் இருந்தால் நாம் நமது வாழ்வில் சரியான இடத்தில் இருப்போம். சிலருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட தோஷங்கள் ஜாதகத்தில் இருக்கும். அதனால் தேவையற்ற பல பிரச்சனைகளும் வரும். அந்த தோஷங்களை போக்கி வாழ்வை சிறப்பாக மாற்ற உதவும் நவகிரக மந்திரம் இதோ.

நவகிரக மந்திரம்

‘ஓம் ஹரீம் ஆதித்யாய ச சோமாய
மங்களாய புதாயச குரு
சுக்கிர சனிப்யச்ச
ராகவே கேதவே நமக.’

இந்த மந்திரத்தை தினமும் 9 முறை ஜபிப்பது நல்லது. இந்த மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம் நாம் ஒரு சேர ஒன்பது நவகிரகங்களின் அருளை பெற முடியும். இதை தொடந்து ஜபித்து வர இதன் பலனை நம்மால் உணர முடியும். காரியங்கள் கைகூடும், வறுமை நீங்கும், உடல் சோர்வு மற்றும் மன சோர்வு நீங்கும், செல்வம் நிலைத்திருக்கும், மனதில் உள்ள தீய எண்ணங்கள் அகலும். இப்படி இன்னும் பல பலன்களை இதன் மூலம் நாம் பெறலாம். அதோடு நவகிரங்களாம் ஏற்பட்ட தோஷங்கள் விலகும்.

வியாழன், 23 செப்டம்பர், 2021


தன வரவை அதிகரிக்கும் கோமதி சக்கரம்
தன வரவை அதிகரிக்கும் கோமதி சக்கரம்
ஆன்மிக வளங்களை தாங்கி நிற்கக்கூடிய பொருட்களில், நம்மால் அதிகம்
 அறியப்படாத   பொருளாக ‘கோமதி சக்கரம்’ இருக்கிறது. இது சங்கு போன்ற
 ஒரு வகை சிறிய கல் ஆகும்.

சூ
ரியனுக்கு கீழுள்ள பூமியில் எவ்வளவோ அதிசயங்கள் நமக்கு எட்டாமல் இன்று வரையில்
 இருக்கின்றன என்பதை, நமது அன்றாட வாழ்விலும் அறிவியல் ஆய்வுகளிலும் பார்த்து 
வருகிறோம். ‘காரணமின்றி எவ்விதமான துன்பங்களையும் மனித குலம் அடைய வேண்டாம்’ 
என்றுதான் அனைத்து மகான்களும் விரும்பினார்கள். அதற்கேற்ப பல்வேறு வழிபாடுகளையும், 
இறையருளை பெற்று தரக்கூடிய சாதனங்களையும் அடையாளம் காட்டியதோடு, அவற்றை 
எவ்வாறு தக்க வழிகளில் பயன்படுத்துவது என்பதையும் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். 
அத்தகைய பொருட்களில் கோமதி சக்கரம் என்பது குறிப்பிடத்தக்கதாக உள்ளது. 
தற்காலத்தில் பல துறைகளை சார்ந்த பிரபலங்களும் ‘டாலிஸ்மன்’ எனப்படும் ‘டாலர்’ 
வடிவத்தில் கோமதி சக்கரத்தை அணிந்து பயன் பெற்று வருகிறார்கள்.


ஆன்மிக வளங்களை தாங்கி நிற்கக்கூடிய பொருட்களில், நம்மால் அதிகம் அறியப்படாத 
பொருளாக ‘கோமதி சக்கரம்’ இருக்கிறது. இது சங்கு போன்ற ஒரு வகை சிறிய கல் ஆகும். 
குஜராத் மாநிலம் துவாரகாவில் உள்ள கோமதி நதியில் அதிகமாக கிடைப்பதால், அந்தப் 
பெயர் வந்து விட்டது. வட மாநிலங்களில் பிரபலமாக உள்ள ஸ்ரீமகாலட்சுமி அம்சம்
 பொருந்திய இந்த வகைக் கல், தென் மாநிலங்களில் அதிகம் அறியப்படாமல் 
இருப்பதற்கு காரணம், அதனை ரகசியமாக பலரும் பயன்படுத்தி வந்ததுதான். பூஜை 
அறையில் வைப்பதோடு, மோதிர வடிவத்திலும், கழுத்தில் அணியும் சங்கிலி வடிவிலும் 
இந்த கோமதி சக்கரத்தைப் பயன்படுத்தலாம். திருமகளின் அருளை எளிதாக 
பெற்றுத்தரும் பொருட்களில் ஒன்றாக இருக்கும் கோமதி சக்கரம் பற்றிய பல்வேறு
 தகவல்களை இங்கே காணலாம்.

ராமர் கணையாழி

ராமபிரான், ஆஞ்சநேயர் மூலம் சீதாதேவிக்கு தன்னை அடையாளம் காட்ட 
கொடுத்தது ரகுவம்ச கணையாழி ஆகும். அதில் கோமதி சக்கரம் பதிக்கப்பட்டிருந்ததாக 
புராணங்கள் கூறுகின்றன. மேலும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குவது 
லக்னோவில் உள்ள நைமிசாரண்யம். இங்கு பெருமாளின் சக்ராயுதம் உருண்டு 
ஓடி, தவம் செய்ய சிறந்த இடத்தை முனிவர்களுக்கு காட்டியது. அவ்வாறு சக்ராயுதம் 
உருண்டு ஓடியபோது, அங்கிருந்த ஆற்றில் சக்ராயுதம் பட்டு தெறித்த நீர்த்துளிகள் 
தான், கோமதி சக்கரமாக மாறியதாக ஐதீகம். கோமதி சக்கர கல்லின் வேறு பெயர்கள்
 துவாரகா கல், விஷ்ணு சக்கர கல், நாராயண கல், திருவலஞ்சுழி கல் ஆகியனவாகும்.

கோமதி சக்கரத்தை வணங்குவதன் வாயிலாக அயோத்தி, மதுரா, ஹரித்துவார், காசி,
 காஞ்சீபுரம், 
அவந்திகா எனும் உஜ்ஜையினி, துவாரகை ஆகிய முக்தி தரும் 7 தலங்களை வணங்கிய 
பலன் கிடைக்கும். ஸ்ரீகிருஷ்ணர், கோமதி சக்கரத்தின் மீது அமைந்த தர்ம சபையில்
 வீற்றிருந்து ஆட்சி செய்து வந்தார் என்கிறது புராணம். சொர்க்க துவாரம், மோட்ச 
துவாரம் என்ற இடத்தில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் இந்த கல்லை விஷ்வகர்மா மூலமாக 
உருவாக்கி துவாரகை மக்களின் சங்கடங்களை தீர்க்க அருளி யிருக்கிறார்.

பிள்ளையார் சுழி

கோமதி ஆறு, சரயு நதி ஆகிய இரு நதிகளும் சேரும் இடத்தை, இரு பாம்புகள் கூடும் இடம் 
என்று கூறுகிறார்கள். லக்னோவில் கோமதி நதியும், அயோத்தியில் சரயு நதியும் உருவாகிறது. 
இவ்விரு நதிகளிலும் அபூர்வமான கோமதி சக்கரங்கள் கிடைக்கின்றன. ஸ்ரீவிநாயக 
பெருமானோடும், நாக தேவதையோடும் தொடர்புள்ளதாக கோமதி சக்கரம் கருதப்படுகிறது. 
அதாவது எந்தச் செயலையும் தொடங்குவதற்கு முன்னர் பிள்ளையார் சுழி போடுவது வழக்கம். 
பிள்ளையார் சுழியின் இன்னொரு பெயர் ‘கோமதி திருவலஞ்சுழி’ எனப்படும். இதன்
 உட்பொருள், சுபம் மற்றும் லாபம் என்பதாக உள்ளது. சுதர்சன சக்கரத்திற்கும் முந்தையதாக
 கோமதி சக்கரம் கருதப்படுகிறது.

நட்சத்திர பாகங்கள்

அவரவருக்கு உரிய நட்சத்திரத்திற்குரிய பாகத்தை அறிந்து அந்தப் பகுதியை தொட்டோ அல்லது 
மனதில் நினைத்தோ தெய்வத்தை வழிபடுவதன் மூலமாக, பூரண அருளை பெற இயலும் என்பது
 ரகசிய பூஜை வழிமுறையாக இருந்து வருகிறது. மேலும் அவ்வாறு வழிபடும் போது, கோமதி
 சக்கரமானது நம்முடன் இருக்கும் பட்சத்தில் லட்சுமி கடாட்சம் நன்றாக கிடைக்கும்
 என்பது நம்பிக்கை. நட்சத்திரங்களுக்குரிய பாகங்களை கீழே காணலாம்.

* அசுவினி, பரணி, கிருத்திகை - நெற்றி.

* ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை - முகப்பகுதி.

* புனர்பூசம், பூசம் - இரு தோள்கள்.

* ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், அஸ்தம் - மார்பு பகுதி.

* சித்திரை - வயிற்று பகுதி.

* சுவாதி, விசாகம் - புஜங்கள்.

* அனுசம் - உடலின் மைய பகுதி.

* கேட்டை, மூலம் - இரண்டு கைகள்.

* பூராடம், உத்திராடம் - இரண்டு தொடைகள்.

* திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி - கால் பாதங்கள்.

நாம் எந்த தெய்வத்தை வணங்கினாலும், நமது நட்சத்திரத்திற்குரிய பாகத்தை மனதில் 
கொண்டு, அந்த பாகம் எதுவோ அப்பகுதியை மனதால் நினைத்தோ அல்லது தொட்டோ 
வணங்க வேண்டும். அதன் வாயிலாக நமது வேண்டுதல்கள் அதிசயிக்க தக்க விதத்தில்
 நிறைவேறும் என்பது நம்பிக்கை. 

கோமதி சக்கரத்தின் சிறப்பு
* வலப்புற சுழி அமையப் பெற்ற கோமதி சக்கரத்தை அனைவரும், எவ்வித பாகுபாடும் 
இல்லாமல் வழிபாடு செய்யலாம்.

* கோமதி சக்கரமானது பூஜையில் வைக்கப்படும்போது. நிமிர்ந்த நிலையில் வைக்கப்படவேண்டும்.
 அதிலுள்ள சுழியானது மேல் நோக்கியவாறு இருக்க வேண்டும். முக்கியமாக சிவப்பு 
பட்டுத்துணியில் வைத்து அதை ஒரு வெள்ளி அல்லது செம்பு தட்டில் வைக்கவேண்டும்.

* வில்வ இலையானது காய்ந்து விட்டாலும், ஆறு மாதங்கள் வரையில் பலன் தரும். 
ஆனால் கோமதி சக்கரம் எவ்வளவு நாட்கள் ஆனாலும், தவறாது பலன் அளிக்கக்கூடியது. 
இன்றைக்கும் வடமாநிலங்களில் உள்ள பெரியவர்கள், ஒருவரை ஆசீர்வதிக்கும்போது 
அவர்களது தலைப்பகுதியில் கோமதி சக்கரத்தை வைத்து ஆசீர்வதிப்பது வழக்கம்.

* கோமதி சக்கரத்தை விலைக்கு வாங்குவதை காட்டிலும், பெரியோர்களிடமிருந்தோ 
அல்லது உறவினர்களிடமிருந்தோ அன்பளிப்பாக பெறுவதே சிறப்பானது. விலைக்கு
 வாங்குவதாக இருந்தாலும் நல்ல நாளாக பார்த்து வாங்குவது சிறப்பைத் தரும்.

* மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் கொள்ளும் தொடர்புகள் மூலம், அவரவருக்கு தக்கவாறு
 உயர்வையோ அல்லது தாழ்வையோ அடைகிறார்கள். எழுதிச் செல்லும் விதியின் கைகள்,
 யாரை யாரோடு சந்திக்க வைக்கிறது என்பதை மனிதர்களால் நிர்ணயம் செய்ய 
முடிவதில்லை. 
விதியின் தொடர்பு இல்லாமல் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ள முடிவதில்லை. 
ஒருவரோடு கொள்ளும் தொடர்பின் வாயிலாக வாழ்வை சிறப்பாக அமைத்து கொள்ள 
வலஞ்சுழி அமைப்பு கொண்ட கோமதி சக்கரம் உதவுகிறது.

* ஒரு மனிதருடைய சுழி என்பது, அவருடைய தலை விதியை குறிப்பதற்காக சொல்லப்படுவதாகும்.
 அத்தகைய சுழியானது பல உயிர்களிலும் இறைவனால் அருளப்பட்டதாக அமைந்திருக்கிறது. 
மனித உடலில் அவை, கைகள், கால்கள், தலை உச்சிப்பகுதி, முன் நெற்றி, ஆகியவற்றில் 
அமைந்திருக்கும். நம்முடைய காதுகளின் அமைப்பும் வலஞ்சுழியாக அமைந்திருப்பதை 
காணலாம். எந்த ஒரு தெய்வத்தையும் மூன்றுமுறை சுற்றி வலம் வருவது 
‘கோமதி சுற்று’ எனப்படும். இப்படி உலக இயக்கத்தோடு இணைந்து 
செயல்படுவதால், கோமதி சக்கரம் மனதின் எண்ணங்களை வலிமை பெறச் செய்கின்றன.

* கோமாதா என்று போற்றப்படும் காமதேனுவின் அம்சம், கோமதி சக்கரத்தில் உள்ளது. 
எனவே நமது விருப்பங்கள் நிறைவேறக்கூடிய வாய்ப்புகள் தாமாகவே உருவாகும். வலமாக
 அமைந்த சுழிகள், பசுவின் கண்கள், முதுகு, கால் குளம்புகள், வாலின் மேல் பகுதி, 
நெற்றி, கழுத்து, அடிவயிறு ஆகிய பகுதிகளில் இருக்கும். காமதேனு என அழைக்கப்படும்
 பசுவின் சகல சுழிகளும், ஸ்ரீஹரியால் உருவாக்கப்பட்டதால் விசேஷமான அர்த்தம்
 பெற்றவையாக இருக்கின்றன.

* கோமதி சக்கரத்தை, நாக சக்கர மோதிரமாக செய்து, சர்ப்ப தோஷம் விலக 
பயன்படுத்துகிறார்கள். அதாவது அதன் சுழியானது பாம்பு தனது உடலை சுற்றி 
வைத்திருப்பது போன்ற தோற்றத்தில் இருப்பது கவனிக்கத்தக்கது. ராகு 
தசையால் பாதிக்கப்பட்டவர்கள் கோமதி சக்கரத்துடன் கோமேதக கல்லையும்
 சேர்த்து வைத்து வீட்டில் வழிபட்டு வரலாம்.


* கேதுவின் தசையானது ஜாதக ரீதியாக பாதிப்பை தரும் அமைப்பில் இருந்தால், அந்த 
நபர் கோமதி சக்கரத்துடன், வைடூரிய கல்லை வைத்து வீட்டில் வழிபட்டு வரலாம். 
தங்களது ஜாதகங்களில் கால சர்ப்ப தோஷம் மற்றும் சர்ப்ப தோஷம் 
இருப்பவர்கள் கோமதி சக்கர வழிபாட்டை செய்து வருவது நல்லது.

திங்கள், 3 மே, 2021

உங்கள் வீடு இருள் நீங்கி, சந்தோஷமாக இருக்க

உங்கள் வீடு திடீரென்று இருள் சூழ்ந்த மாதிரி இருக்கின்றதா? இந்தத் தண்ணீர் தெளித்தால் போதும்! வீடு இருள் நீங்கி, பிரகாசமாக மாறும். நம்முடைய வீடானது சந்தோஷமாகத்தான் இருக்கும்.kalasam

வீடு முழுவதும் நிம்மதி நிறைந்திருக்கும். வீட்டின் தோற்றம், மகாலட்சுமி வாசம் செய்வது போல மங்களகரமாக இருக்கும். வீட்டில் பண தட்டுப்பாடு இருக்காது. ஆரோக்கியமான வாழ்க்கை இருக்கும். சண்டை சச்சரவுகள் இருக்காது. சொந்த பந்தங்கள் வருவதும் போவதும், வீட்டில் கலகலப்பை மேலும் அதிகரித்திருக்கும். திடீரென்று ஏதோ ஒரு நாள் இவை அனைத்தும் ஸ்தம்பித்துப் போய் நின்றது போல் ஒரு நினைப்பு தோன்றிவிடும். தேவையில்லாத மனக்குழப்பமும், மனக் கஷ்டமும் ஏற்பட ஆரம்பித்து விடும். நமக்கே தெரியாமல் நம்முடைய வீடு இருளில் மூழ்கியது போல இருக்கும். அதாவது பகல் நேரம் சூரிய ஒளி படும் இடம் கூட, வீட்டில் விளக்கு எரியும் இடம் கூட,  நம் கண்களுக்கு இருண்ட சூழ்நிலையை காட்டும். சில பேருக்கு கெட்ட நேரத்திற்கான அறிகுறி என்று கூட இதை சொல்லலாம்.யாரையும் பயமுறுத்துவதற்காக இது சொல்லப்படுவதில்லை. ஆனால், சில வீடுகளில் இது நடக்கக் கூடியதுதான். இனம்புரியாத மனவருத்தமும் இனம்புரியாத ஏதோ ஒரு கஷ்டமும் நம் மனதை பிசையும் போது, நம்முடைய வீட்டை அந்த இருளிலிருந்து வெளியில் கொண்டுவர வேண்டியது கட்டாயம் நம்முடைய கடமை.
vilakku-deepamஇதற்கு என்ன செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமை தான் செய்ய வேண்டும். செவ்வாய்க்கிழமை தான் செய்யவேண்டும் என்றெல்லாம் காத்திருக்க வேண்டாம். உங்கள் மனதிற்கு எப்போது கஷ்டம் என்று படுகிறதோ அப்போதே இதை ஒருமுறை செஞ்சுடுங்க. 
முதலில் வீட்டை சுத்தப்படுத்தி விட்டு, வாசனையாக இருக்கும் சாம்பிராணி தூபத்தை போட்டுவிடுங்கள். அதன்பின்பு பூஜை அறையை அலங்காரம் செய்து வாசனை உள்ள பூக்களை போட்டு, முடிந்தவரை ஒரே ஒரு தீபம் ஏற்றி வைத்தாலும் போதும். ஒரு சொம்பில், கொஞ்சம் தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஏலக்காய் 2, கிராம்பு 2, பச்சைக் கற்பூரம் ஒரு துண்டு, பன்னீர் நான்கு சொட்டு, விரலி மஞ்சள், சோம்பு, கொஞ்சம் கற்பூரவள்ளி இலை, கொஞ்சம் மருதாணி இலை, துளசி இலை, நன்னாரி தூள் ஒரு ஸ்பூன்,  இவைகள் அனைத்தையும், ஒன்றாக போட்டுக்கொள்ள வேண்டும். மொத்தமாக கிடைக்கவில்லை என்றாலும், இதில் எது உங்கள் வீட்டில் இருக்கின்றதோ அதை, அந்த தண்ணீரில் போட்டுக் கொள்ளுங்கள். காலை நேரத்திலேயே இந்த தண்ணீரை தயார் செய்து உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள். மாலை நேரம் வரை இந்த பொருட்கள் அனைத்தும் அந்த தண்ணீரில் நன்றாக ஊறிய உடன், மா இலையை வைத்தோ அல்லது வெற்றிலையை வைத்தோ, அந்தத் தண்ணீரை உங்கள் வீடு முழுவதும் தெளித்து விட்டாலே போதும். கூடவே, உங்கள் வீட்டின் உறுப்பினர்களது தலையில் இந்த தீர்த்த தண்ணீர் தெளித்து விடுங்கள். 

வீட்டில் இருக்கும் இருள்நீங்கி மகாலட்சுமி மீண்டும் வாசம் செய்வாள் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. உங்கள் வீட்டில் இருள் சூழ்ந்து பிரச்சினை வரப்போகிறது என்று உங்கள் உள் மனது சொல்லும் ஆரம்ப கட்டத்திலேயே இந்த தண்ணீரை தெளித்து விட்டால், வரக்கூடிய பெரிய கஷ்டங்களில் இருந்து கண்டிப்பாக தப்பித்துக் கொள்ளலாம்
இந்த பதிவு உங்க எல்லாருக்கும் பயனுள்ள பதிவாக இருக்கும் இதை உங்க நண்பர்களுக்கு share பண்ணுங்க என்னுடைய blog யை follow பண்ணுங்க இன்னும் இதைப்பற்றி தெரிந்து  கொள்ள என்னுடைய சேனல் Tamilnattu  samayal யை subscribe பண்ணிகோங்கள் நன்றி வணக்கம் ---ஈஸ்வரி சரவணன் 






துளசி தேவிக்கு சொல்ல வேண்டிய ஸ்லோகம்! (4.5.2021)செவ்வாய் கிழமை

துளசி தேவிக்கு சொல்ல வேண்டிய ஸ்லோகம்! (4.5.2021)செவ்வாய் கிழமை 

துளசி ஸ்தவம் ஸ்தோத்ரம் 
முனிவர்களே, சித்தர்களே, காந்தர்வர்களே, பாதாள லோக நாக வாசிகளே, கணீரென்று கிருஷ்ணனை, துளசியை பாடுங்கள். உபதெய்வங்கள் பிரபாவத்தை, சக்தியை எத்தனை கோடியாக புகழ்ந்தாலும், கேசவனின் சக்திக்கும் மகிமைக்கும் அவை ஈடாகுமா. கிருஷ்ணன் அனுக்ரஹத்தால் பாற்கடல் கடையப்பட்டபோது துளசியை தனது சிரத்தில் விஷ்ணு தாங்கினார். 
துளசி மாதா,நமஸ்காரங்கள். விஷ்ணுவின் சரீரத்தில் நீ சாற்றப்படும் போது, எல்லோரையும் நீ பரிசுத்தமாக்குபவள். துளசி தேவி, உனது தளத்தால் நான் ஸ்ரீ ஹரியை அர்ச்சிக்கும்போது எனக்கு ஒரு குறையும் தடையும் இல்லை. நான் தான் உன் பாதுகாப்பில் இருக்கிறேனே. 
துளசியம்மா, உன்னை செடியாக கோமதி நதிக்கரையில் வளர்த்து அந்த கிருஷ்ணன் உலகை ஸ்ரேஷ்டமாக்கி, கோபியரை ரக்ஷித்தான். துளசி தேவி, பிருந்தாவனத்தை செழிப்பாக்கவும், கம்சன் மற்ற ராக்ஷசர்களை அழிக்கவும், விஷ்ணுவுக்கு பக்க துணையாக இருந்தவளே நீ தானே. 
துளசி மாதா,நீ சாமான்யமானவளா. சரயு நதிக்கரையில் வசிஷ்டர் அறிவுரையில் ராமன் உன்னை வளர்த்து தானே ராக்ஷசர்களை அழித்தார்.உனக்கு நமஸ்காரம். அசோக வனத்தில் சீதா தேவி ராமனைப் பிரிந்து வாடும்போது, உன்னை அல்லவா த்யாநித்தாள். நீ அல்லவோ அவளுக்கு தெம்பை தந்தவள். 
அம்மா துளசி, சிவ பிரானை அடைய, ஹிமகிரியில் உன்னைத்தானே வளர்த்து பார்வதி தேவி வணங்கினாள் . எங்கள் நமஸ் காரத்தையும் சமர்பிக்கிறோம். ஏற்றுக்கொள்ளவும். அம்மா துளசி, கயாவிலே , தர்மாரண்யத்தில் பித்ருக்களை திருப்தி படுத்துபவளே. பரிசுத்த காரணி. உனக்கு நமஸ்காரங்கள். 
துளசி தேவி, ஸ்ரீ ராமபிரான் உன்னை வளர்த்தார்,லக்ஷ்மணன் உன்னை வணங்கினான், தண்டகாரண்யத்தில் சீதை உன்னை வளர்த்து பூஜித்தாள் . உனக்கு நமஸ்காரங்கள். 
துளசி தேவி, உன் பெருமை அறிவோம். எப்படி கங்கை மூன்று லோகங்களிலும் புனிதமாக போற்றப்படுகிறதோ, அதே போல் சகல ஸ்தாவர ஜங்கம ஜீவர்களும் வணங்குபவள் நீ. 
அம்மா உன்னை வணங்கி தானே, ரிஷ்யமுக பர்வதத்தில் வானர ராஜன் சுக்ரீவன், வாலியை கொல்லவும், தாரையை அடையவும் முடிந்தது. உனக்கு நமஸ்காரங்கள் 
ஹனுமான், உன்னை வணங்கியபிறகு தானே, சமுத்ரத்தை தாண்டினான், ராம கர்யத்தை வெற்றி கரமாக முடித்து திரும்பினான்.உனக்கு நமஸ்காரங்கள் 
துளசியை தொடுவதாலே, சகல பாபங்களும் விலகுகிறதே, பிரம்மஹத்தி தோஷமும் கூட தீருமே. ரிஷி திலகங்களும் நாடும் துளசி மாதா உனக்கு நமஸ்காரங்கள். Helpmeyoga - Drinking Theertham – Taste Sense Activated... | Facebook
ஒரே ஒரு துளசி தளத்தை ஜலத்தில் இட்டு, ஸ்நானம் செய்தவன்,கங்கா ஸ்நான பலனையும், பாத்து பசுக்களை தானம் செய்த புண்யமும் பெறுவானே. உனக்கு நமஸ்காரங்கள் தாயே. 
தேவ தேவிகளுக்குள் சிறந்தவளே, ஹரியின் பிராண வல்லபி, பாற்கடலில் பிறந்தவளே, எங்கள் நமஸ்காரங்களை சமர்பிக்கிறோம். 

துவாதசி அன்று துளசியை பிரார்த்திப்பவனை கிருஷ்ணன் அவன் செய்த பாவங்களை மன்னித்து அருள்கிறார். துளசிஸ்தவம் பிரார்த்தனை புஸ்தகம் இருக்கும் வீட்டில் துரதிர்ஷ்டம் இல்லை. ஏன் என்றால் அங்கே அதிர்ஷ்ட தேவதை குடி கொண்டவள்.துளசி ஸ்தவம் பாராயணம் செய்பவன் மனதில் கிருஷ்ணனைத் தவிர வேறெதுவும் கிடையாதே. 





சனி, 1 மே, 2021

GOOD NEWS

அறிவிப்பு👏

Tamilnattu Samayal YouTube Channel Analytics Report - PLAYBOARDநண்ப👏👏👏👏ர்கள் அனைவருக்கும் என் இனிய காலை வணக்கம்.எனக்கு நல்ல ஆதரவு கொடுத்து வருகின்ற என்னுடைய followers அனைவருக்கும் என் blog அண்ட் channel மூலமாக நன்றி 🙏.என்னுடைய சேனல் Tamilnattu channel லையும் பாருங்கள் subscribe பண்ணிகோங்க அனைத்து ஆனமீக தகவலை தெரிந்து பலன்களை அடையுங்கள்.இறைவனின் அருளால் அனைவரும் மகிழ்ச்சியான வாழ்வை வாழலாம் .இது ஆனமீகத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டுமே நான் சொல்லுவது. மற்றவர்களுக்கு அல்ல கடவுள் நம்பிக்கை உடையவர்கள் என் சேனல் பார்த்து பலன் பெறுங்கள்.இனி தொடர்ந்து blog கும் வரும் நல்ல விஷயங்களை நம் மனதில் ஏற்றும் போது நல்லதே நமக்கு நடக்கும் வாழ்க வளமுடன் ஓம் நமச்சிவாய 🙏🙏---ஈஸ்வரி சரவணன்  

உப்பை இந்த முறைப்படி வைத்து, பூஜை செய்தால் மகாலட்சுமி வேண்டிய வரம்கிடைக்கும்

    see my YouTube channel Tamilnattu samayal this channel is related to god .subscribe and support my channel

உப்பை இந்த முறைப்படி வைத்து, பூஜை செய்தால் மகாலட்சுமி வேண்டிய 
வரம்கிடைக்கும்


  நிறைய பணம் சம்பாதிக்கனும், வீடு வாங்கனும், வாகனம் வாங்கனும், இப்படி எல்லோருடைய மனதிலும் ஆசை இருக்கத்தான் செய்கின்றது. இதற்கெல்லாம், நமக்கு யோகம் கிடைக்க வேண்டுமென்றால், மகாலட்சுமியின் ஆசீர்வாதமும், அஷ்டலட்சுமிகளின் ஆசிர்வாதமும் கட்டாயம் தேவை என்றே சொல்லலாம். வெள்ளிக்கிழமை அன்று, நாம் செய்யும் பூஜையோடு சேர்த்து, மகாலட்சுமியையும், அஷ்டலட்சுமியையும் நினைத்து, இந்த முறைப்படி பூஜை செய்தால், வேண்டிய வரம் கூடிய விரைவில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சித்தர்கள் தங்களுடைய சித்த குறிப்புகளில் குறிப்பிட்டிருக்கும் முறையை வைத்து, சுலபமாக சொல்லப்பட்டுள்ள, ஒரு பூஜை முறை தான் இது. இந்த பூஜைக்கு, தேவையான பொருட்கள் என்னென்ன? இந்த பூஜையை எப்படி செய்ய வேண்டும்? என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். முதலில் இதற்கு தேவையான பொருட்களை தெரிந்து கொள்ளலாம்.The Pital Store Brass plate 6 inch long for multipurpose use Quarter Plate
ஒரு சிறிய பித்தளைத் தாம்பாளத் தட்டு, ஒரு சிறிய மண் பானை, மண் பானை நிரப்பும் அளவிற்கு தேவையான கல் உப்பு, மல்லிகைப் பூ, ஒரு ரூபாய் நாணயம், இரண்டு மண் அகல் தீபம், தீபம் ஏற்ற நல்லெண்ணெய், நெய், வெற்றிலை 3. இவ்வளவுதான். வெள்ளிக்கிழமை பூஜையை நீங்கள் எப்படி செய்கிறீர்களோ அந்த பூஜையோடு சேர்த்து மகாலட்சுமி தாயாரின் முன்பு இந்த முறைப்படி வேண்டிக் கொள்ளும் பட்சத்தில் உங்களுடைய வேண்டுதல், லட்சுமி தேவியின் செவிகளில் சீக்கிரம் விழும் என்பதில் சந்தேகமே இல்லை. முதலில் மல்லிகை பூவை வைத்து பூஜை அறையையும், மகாலட்சுமி தாயாரின் திருவுருவப் படத்தையும் அலங்காரம் செய்து வைத்துக்கொள்ளுங்கள். அதன் பின்பு ஒரு வெற்றிலையின் மேல் மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைத்து, பூஜை நன்றாக நடந்து முடியவேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.
உங்கள் வீட்டில் நீங்கள் ஏற்றக்கூடிய காமாட்சி அம்மன் விளக்கு, குத்து விளக்கு உங்கள் வீட்டு வழக்கப்படி ஏற்றி வைத்து விடுங்கள். இப்போது மகாலட்சுமி பூஜையை தொடங்க போகின்றோம். மனதிற்குள் ‘ஓம் மகாலட்சுமியே போற்றி’ என்ற மந்திரத்தை சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். மந்திரத்தைச் சொல்லிக்கொண்டே, சிறிய அளவிலான பித்தளை தாம்பூலத்தை எடுத்து வைத்து, அதன் மேல் மண் பானையை வைத்து, Clay Handi in Delhi, Delhi | Clay Handi Price in Delhiமண் பானையில்ண்நேரடியாக பித்தளை தட்டில் வைத்தால் நிற்காது. இதற்காக பச்சரிசியையோ அல்லது சிறிதளவு மஞ்சளையோ குழைத்து பானையின் அடியில் வைத்து கீழே சாயாமல் நிற்க்க வைத்துக் கொள்ளுங்கள்.) மண் பானையின் வாய்ப்பதியை சுற்றி வெளிப்பக்கமாக, மல்லிகைப் பூ  கட்டி விட வேண்டும். அதன் பின்பு மண் பானை நிறைய கல் உப்பைக் கொட்டி விட வேண்டும். அந்த மண் பானையில் கல்லுப்பு முழுமையாக நிறைந்து இருக்க வேண்டும்.Sea Salt (கல் உப்பு) - Grocery D2D Onlineகல் உப்பின் மேல், ஒரு ரூபாய் நாணயத்தை வைத்துக்கொள்ளுங்கள்.  பின்பு, நீங்கள் வைத்திருக்கும் ஒரு மண் அகல் தீபத்தில் நெய் ஊற்றிக் கொள்ளவேண்டும். ஒரு தீபத்தில் எண்ணை ஊற்றிக் கொள்ள வேண்டும். இந்த இரண்டு தீபங்களையும், வெற்றிலையின் மேல் வைத்து, ஏற்ற வேண்டும். இரண்டு  வெற்றிலைவரம்கிடைக்கும் வைத்து, தனித்தனி தீபங்களாக இரண்டு தீபங்கள் ஏற்றிக் கொள்ளுங்கள். இந்த தீபத்தை ஏற்றும்போது உங்களது கோரிக்கைகள் என்ன என்பதை மனதார சொல்லிக்கொண்டே ஏற்ற வேண்டும். மகாலட்சுமியும், அஷ்ட லக்ஷ்மி தேவியர்களும், நீங்கள் வைத்திருக்கும் அந்த மண் பானையில், நிறைந்திருக்கும் உப்பில் வந்து அமர்ந்து, நீங்கள் வேண்டும் வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. இறுதியாக தீப, தூப ஆராதனை காட்டி உங்களது வெள்ளிக்கிழமை பூஜை எப்படி நிறைவு செய்வீர்களோ அப்படி நிறைவு செய்து கொள்ளலாம்.
இந்த மண் பானையானது உங்கள் வீட்டு பூஜை அறையில் அப்படியே இருக்க வேண்டும். மூன்று வாரங்கள் தொடர்ந்து இந்த பூஜையை செய்து முடித்த பின்பு, சனிக்கிழமை அன்று அந்த கல் உப்பை எடுத்து, தண்ணீரில் கரைத்து விட்டு, உப்பு கலந்த தண்ணீரை கால் படாத இடங்களிலோ, அல்லது மரத்திற்கோ ஊற்றி விடலாம். கல் உப்பின் மேல் வைத்திருந்த அந்த ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து உங்களது பீரோவில் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். இப்படி நம்பிக்கையோடு மகாலட்சுமியை வேண்டி செய்யும் இந்த பூஜையானது, மிகவும் சக்தி வாய்ந்த பூஜை என்று சொல்லப்பட்டுள்ளது நம்பிக்கையுள்ளவர்கள் செய்து பலனடையலாம்.  

intha pathivu ellorukkum pidichurukkum nu ninaikkirean  
subscribe and support my blog and channel Tamilnattu samayal 🙏 

ஞாயிறு, 27 டிசம்பர், 2020

 

ஆனை முகனின் அழகிய நாமங்கள்


‘‘விநாயகன்’’ என்பதன் பொருள் தனக்குமேலே வேறொரு தலைவன் இல்லாதவன் என்பதாகும். ‘‘வி’’ என்றால் சிறப்பு என்ற பொருளைச் சுட்டுகின்றது. ‘‘நாயகன்’’ என்பதன் பொருள் தன்னிகரில்லாத் தனிப்பெருந்தலைவன் என்பதாகும். விநாயகப் பெருமான், மூலாதாரத்திற்குரியவர். முழுமுதலாக விளங்குபவர்.

 ‘‘கணபதி’’ என்பதில், ‘க’ என்பது ஞானநெறியில் ஆன்மா எழுவதையும் ‘‘ண’’ என்பது மோட்சம் பெறுதலையும் ‘‘பதி’’ என்பது ஞான நெறியில் திகழ்ந்து பரம்பொருளை அடைதலையும் குறிப்பதாகும். கணங்களின் தலைவன் என்பதால் கணபதி.

 ‘‘கஜானன்’’ கஜா என்றால் யானை என்று பொருள். யானை முகம் கொண்டவன் என்பதால் கஜானன். அடியார்களின் துன்பங்களை நீக்கிக் கருணை புரிபவர்; ஞானத்தை வழங்குபவர்.

 ‘‘ஏகதந்தர்’’ என்றால் ஒற்றைக்கொம்பர் என்பதாகும். விநாயகர் தம்முடைய ஒரு கொம்பை  தந்தத்தை ஒடித்து, அதனைக் கொண்டு கயமுகாசுரனைக் கொன்றார். ஒரு தந்தத்தோடு இருப்பதால் ஏகதந்தர். மேலும் பரமேஸ்வரனால் வழங்கப்பட்ட பரசு ஆயுதத்தால் பூவுலகில் தனது லட்சியத்தை நிறைவேற்றிக் கொண்டார் பரசுராமர். இதன் பொருட்டு சிவனாருக்கு நன்றி சொல்ல திருக்கயிலாயம் வந்தார். வாயிலில் அவரைத் தடுத்து நிறுத்தினார் பிள்ளையார். அவரை பொருட்படுத்தாமல் உள்ளே நுழைய முயன்றார் பரசுராமர். 






இதனால் இருவருக்கும் இடையே சண்டை மூண்டது. அதன் உச்சகட்டமாக... விநாயகரை நோக்கி பரசு ஆயுதத்தை வீசினார் பரசுராமன். அந்த ஆயுதத்தால் தன்னை எதுவும் செய்துவிட முடியாது என்பது பிள்ளையாருக்குத் தெரியும். ஆனால், தந்தை அளித்த அந்த ஆயுதத்துக்கு இழிவு ஏற்பட்டுவிடக் கூடாது என்று கருதினார் பிள்ளையார்; தமது இடது தந்தத்தால் அந்த ஆயுதத்தை எதிர்கொண்டார். தந்தம் முறிந்தது. இதன் மூலம் ஏக தந்தர் எனும் திருநாமத்தை ஏற்றார்.

 ‘‘விகடர்’’ வேடிக்கைகள் செய்வதில் வல்லவர். அதனால் உண்டான பெயர். ‘‘விக்கினேஸ்வரன்’’ விக்கினராஜன், விக்கினங்கள் நீக்குபவர். அதேவேளை, தம்மை வந்து அணுகாதவர்களுக்கு விக்கினங்களை, இடையூறுகளை வருவிப்பவர். விக்கினங்களை உண்டாக்கவும், போக்கவும் வல்லவர். 
அதனால், விக்கினேஸ்வரன் என்ற திருப்பெயர், விநாயகருக்கு வழங்கப்பட்டது.

 ‘‘சிந்தாமணிவிநாயகர்’’ கபிலமுனிவருக்குச் சொந்தமான சிந்தாமணியை கணராஜன் என்பவன் கவர்ந்து சென்றான். விநாயகர் அவனை வென்று சிந்தாமணியை மீட்டு அருளியமையினால் இப்பெயர் வழங்கப்பட்டது.

 ‘‘வக்கிரதுண்டர்’’ பிரளயகால இறுதியில் தோன்றி பிரம்மா, மகாவிஷ்ணு, சிவபெருமான் முதலான மூவர்க்கும் முறையே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களை ஆற்றும்படி அருளுபவர்.

 ‘‘பாலச்சந்திரவிநாயகர்’’ அக்கினியைக் கிளப்பி, அச்சுறுத்திய அனலாசுரனை விநாயகர் குழந்தை வடிவில் சென்று விழுங்கியருளியமையினால் பாலச்சந்திரவிநாயகர் பெயர் அவருக்கு வந்தது.

 ‘‘மகோற்கடவிநாயகர்’’ காசி ராஜனைக் காப்பாற்றுவதற்காக நராந்தகன், தேவாந்தவன் ஆகிய அசுரர்களை, அழித்தொழித்தமையால் இப்பெயர் வரக்காரணமாயிற்று.

 ‘‘வல்லபை விநாயகர்’’ விநாயகரிடத்தில் வரம்பெற்ற பெலி என்னும் அசுரன் திரிலோகங்
களிலும் சஞ்சரிக்கின்ற தேவர்களுக்கு துன்பம் செய்து, அல்லற்படுத்தியபோது தேவர்களின் வேண்டுதலுக்கிணங்க பஞ்சமுக விநாயகராக அவதரித்து அவ்வசுரனைச் சம்காரம் செய்த திருவடிவம் வல்லபை விநாயகர்.

 ‘‘துண்டி விநாயகர்’’ துராசதன் என்னும் கொடியவனை வதம் செய்து, திவோதாசன் என்பவனுக்கு அருள்புரிந்த வடிவம் துண்டி விநாயகர்.

 ‘‘தூமகேதுவிநாயகர்’’ மாதவராசன், அவனின் மனைவி சுமுதை ஆகியோருக்கு கொடுமை இழைத்து வந்த தூமராசன் என்பவனை அழித்து, அருள்புரிந்த வடிவம் தூமகேதுவிநாயகர்.

 ‘‘கயமுகாசுர சம்காரமூர்த்தி’’  தேவர்களை துன்புறுத்திய கயமுகாசுரனை விநாயகப் பெருமான், தம்முடைய திருக்கோட்டிலொன்றைத் திருக்கரத்தால் முரித்துக் கயமுகாசுரன்மீது விட்டார். அது அவனுடைய மார்பைப் பிளந்து விரைந்து சென்று, சுத்தோதக சமுத்திரத்தில் மூழ்கி, அவருடைய திருக்கரத்தில் வந்து வீற்றிருந்தது. கயமுகன் ஆரவாரித்துத் தேர்மேல் வீழ்ந்து மயங்கினான், அவனுடைய மார்பினின்றும் நதி போலப் பெருகிய ரத்தவெள்ளம் பக்கத்திலுள்ள ஒரு காட்டிற் புகுந்தமையால் அவ்விடம் திருச்செங்காடு என்னும் பெயர்பெற்றது.

மார்பு பிளந்த நிலையிலும் கயமுகாசுரன், பழைய உருவத்தை விட்டு ஒரு பெருச்சாளி வடிவங்கொண்டு, விநாயகக் கடவுளைத் தாக்கும்படி வந்தான். வந்தவன் மனம் மாறி, விநாயகரிடம் தங்களை சுமக்கும் பாக்கியம் எமக்கு தந்தருள வேண்டும் என்று பணிந்தான். விநாயகர் ஏற்றுக்கொண்டார். கயமுகாசுரனை சம்காரம் செய்தமையால் கயமுகாசுர சம்காரமூர்த்தி என்று அழைக்கப்பட்டார்.

 ‘‘அநந்தசாப நிவாரண மூர்த்தி’’ ஆதிபராசக்தி, சிவபெருமானுடன் பகடை ஆடுகிறாள். அப்போது மகா விஷ்ணு நடுவராக இருக்கிறார். இதில் சிவபெருமான் வெற்றி பெற்றுவிடுகிறார். சூது செய்து தன்னை வெற்றி பெற்றுவிட்டீர்கள் என்று சிவபெருமானிடம் சினம் கொள்கிறாள் சிவசக்தி. அதோடு நின்று விடாமல் சிவபெருமானின் இந்த வெற்றிக்கு துணை போனதால் அண்ணன் என்றும் பாராமல் மகாவிஷ்ணுவை பாம்பாக போவக்கடவாய் என்று பார்வதி தேவி சபித்தாள். 

இந்த சாபத்திலிருந்து விமோசனம் பெறுவது எப்படி என்று சிவனிடம் கேட்டார் விஷ்ணு. அதற்கு சிவபெருமான், தென்திசையில் ஆலவனமென்று ஒரு இடமிருக்கின்றது. அதில் மிகப்பெரிய ஒரு ஆலமரமுள்ளது. நீ அங்கே போய் அம்மரத்தடியிலுள்ள பொந்தொன்றில் இச்சாபம் நீங்கும்படி பெரும்தவம் செய்துகொண்டிரு. அங்கே நம்முடைய குமாரனாகிய விநாயகன் அங்கே வருவான். நீ அவனை எதிர்கொண்டு தரிசிக்கும்பொழுது, உன்னுடைய இப்பாம்பு வடிவம் நீங்கும் என்று சொல்லி அருளினார்.

அதன்படி மகாவிஷ்ணு பாம்பு உருவத்துடன் ஆலவனத்திற்குப்போய் அங்குள்ள அரசமரத்தடி பொந்தில் தவம் செய்தார்.
விநாயகப்பெருமான் அவ்விடம் வருவதை அறிந்து மகாவிஷ்ணு எதிர்ச்சென்று அவரை பூஜித்து வணங்கினார். பாம்பு உருங்கொண்டிருந்த சாபத்திலிருந்து விமோசனம் பெற்றார். அநந்த என்றால் பாம்பு என்று பொருள். மகாவிஷ்ணுவின் பாம்பு(அநந்த)சாபத்திலிருந்து விமோசனம் அளித்ததால் விநாயகருக்கு அநந்த சாப நிவாரணமூர்த்தி என்ற பெயரும் வந்தது.

 ‘‘வரம் பெறு மூர்த்தி’’ காஞ்சிபுரத்திலுள்ள அநேகதங்காவதம் என்னும் தலத்திலே விநாயகமூர்த்தி அநேகபேச்சுரர் என்னும் திருநாமத்தோடு சிவலிங்கத்தை வைத்து பூஜித்தார். சிவபெருமான் உமாதேவி சமேதராய் தோன்றினார். விநாயகக்கடவுள் அவர்களை வணங்கி நின்றார். உடனே சிவபெருமான், விநாயகரை தமது வலது தொடையின்மேலிருத்தி அவரை நோக்கி, எவராயினும், எந்த ஒரு செயலைச் செய்யத் தொடங்கும் முன்பு அந்தச் செயல் எந்த இடையூறுமின்றி முடிவுற வேண்டுமென்று உன்னை வழிபடுவாராயின் அச்செயல் உனது அருளால் வெற்றியாய் முடியும்.

தேவர்களுக்கும், நம்முடைய பூதாகணங்களுக்கும் அவர்கள் வரம் பெற துணை நிற்கும் நாயகனாக இருப்பாய் என்று அருளினார் சிவ
பெருமான். அதன் பொருட்டே யாவரும் பல்வேறு வரம் வேண்டி தவம் செய்வாராயின் அவர்கள் முதலில் தங்களது தவம் வலிமை பெறவும், அத்தவம் எந்த இடையூறுமின்றி முழுமைபெறவும் விநாயகப்பெருமானின் அருள் வேண்டி முதலில் பூஜிக்கின்றனர். இதன் காரணமாகவே விநாயகப் பெருமானுக்கு வரம்பெறு மூர்த்தி என்ற நாமம் உருவாகிற்று.

 ‘‘அச்சறுத்தருண் மூர்த்தி’’ திரிபுர சங்காரத்தின் பொருட்டுத் தேவர்களால் அமைக்கப்பட்ட பூமியாகிய தேரின்மீது சிவபெருமான் அமர்ந்து, பிரம்மாவிடம் தேரை ஓட்டுங்கள் என்றார். பிரம்மா நான் மறைப் புரவியைச் செலுத்தினார். ரதம் நகரவே இல்லை. பிரம்மா சாட்டையினால் குதிரைகளை அடித்தார். குதிரைகள் தங்களால் ஆன மட்டும் பாய்ந்து செல்ல முயன்றும் தேரானது நின்ற நிலையினின்றும் கொஞ்சம் கூட அசையவில்லை. தேவர்கள் யாவரும் அதனைக்கண்டு ஆதிசிவனின் ரதமே அசையாது நிற்கும்படி தடை ஏது வந்தது.

எதனால் இது நிகழ்ந்தது என யோசித்துக் கொண்டிருந்தனர். அப்போது தான் தெரிந்தது. யானை முகத்தான் கணேசப் பெருமானின் செயல் என்று. உடனே தேவர்கள், பிரம்மாவோடு சேர்ந்து விநாயகப் பெருமானைப் பூஜித்தார்கள். மறுகனமே மூஷிக வாகனத்தில் கணநாதன் எழுந்தருளினார்.
தேரானது நிலை பிரியாது நின்ற இடம் திருஅச்சிறுப்பாக்கம் என்று சொல்லப்படும். இறுதல் - முறிதல், பாக்கம் - ஊர்.

ரதத்தின் அச்சு செயல்படாமல் தடுத்து மீண்டும் அதை செயல்பட வைத்ததாலே கணநாதனுக்கு அச்சறுத்தருண் மூர்த்தி என்ற நாமமும் உண்டு.
 ‘‘விக்கினேசுவரமூர்த்தி’’ தேவர்கள் தேவாமிர்தம் வேண்டி திருப்பாற்கடலைக் கடைந்த பொழுது விநாயகரை வணங்கவில்லை. இதனால் மத்துவாக இருந்த மந்தரமாகிய மலை பாதாள உலகத்துக்கு போய்விட்டது.

பின்னர் திருமாலின் உதவியுடன் மந்தரமலையை பெற்ற தேவர்கள்,  விநாயகரை வணங்கிவிட்டு திருப்பாற்கடலை கடையும் பணியை மேற்கொண்டனர். அதன் விளைவாக அவர்கள் வெற்றிபெற்றனர்.தம்மை நினைக்காதவர்களுக்கு விக்கினங்களை உண்டு பண்ணுதலானும், தம்மை நினைத்தவர்களுக்கு விக்கினங்களைப் போக்குவதாலும் விநாயகப் பெருமானுக்கு விக்கினேசுவர மூர்த்தி என்ற 
நாமமும் உருவானது



 ‘‘பிரணவமூர்த்தி’’ வேதமானது சிவபெருமானை முதல் இடை கடைகளிற் பிரகாசப்படுத்துகின்றது. முதலில் ஓம் என்று தொடங்குகின்றது. அது பிரணவம் என்று சொல்லப்படும். இதன் வடிவமே விநாயகர். வேதத்தின் முதலெழுத்து விநாயகருடைய சொரூப மாதலை அவரது திருமுக முணர்த்தும். அதனையே “கைவேழமுக”மென்று கூறுவர். 

அது “முந்தைவேத முதலெழுத்தாகிய எந்தை” எனவும்,பிரணவமூர்த்தி “மூலமொழிப்பொருளாமெந்தை” எனவும், “தாரகப் பிரமமான மாக்கயமுகத்து வள்ளல்” எனவுங் கந்த புராணங் கூறுமாற்றானும் உணர்க. பிரவணத்தின் வரிவடிவை முதற்கண் அறிவது மரபாம். முதலாம் இரண்டாம் உறுப்புகள் நட்சத்திரவடிவு தண்டவடிவுகளாக அமையப் பெற்றது. பிரணவம் என்று காமிகாகமம் கூறுகின்றது. 

ஆகையால் அவ்விரண்டு உறுப்புங் கலந்த பிள்ளையார்சுழி என்றும், மௌனாக்கரம் என்றும், மௌனக்குறி என்றுஞ் சொல்லப்படும். ‘உ’ என்று எழுத்து நாதவிந்துகளின் வரிவடிவாம். இது ஓங்காரவாச்சியராகிய விநாயகரது துதிக்கை போலாம். இதுபற்றியே கணபதியினை முதலில் வழிபடும் மரபை உலகங் கைக்கொண்டு அனுஷ்டித்து வருகின்றது.

 ‘‘புராண பரிபாலனமூர்த்தி’’ வாதராயணர் என்னும் பெயர்பெற்ற வியாச முனிவர் சிவபெருமானுடைய அனுமதிப்படி சனற்குமார முனிவரிடத்தில் மாணக்கராக இருந்து பதினெண்புராணங்களையும் கூறினார். பின்பு, யாவருந்தம்மை நினைத்துத் தொடங்கிச் செய்கின்ற கருமங்களை விக்கினமின்றி நிறைவேற்றுந் தெய்வமாகிய விநாயகமூர்த்தியை வழிபடாது அப்புராண சரித்திரங்களைச் சுலோக ரூபமாகச் சொல்லத் தொடங்கினார். அவர் விக்கினேசுவரருடைய அருளைப் பெற்றுத் தொடங்காமையால் உண்மை ஞானத்தைப் பெறாமல் ஊமரைப்போல வருந்தி மயங்கிப் பிரம்மதேவரிடம் போய்த் தமது குறையை விண்ணப்பித்தார். 

பிரம்மா வியாசரை நோக்கி, “முனிவனே! நீ வேதத்தை நான்காகப் பகுத்தபோது முதலில் பிரணவத்தை உச்சரியாதபடி வேதம் ஓதுதல் முறையல்ல என்பதை உணர்ந்து முதலிற் பிரணவத்தைச் சொன்னாய்; பிரணவப் பொருளாயிருக்கும் விநாயகர் தம்மைப் பிரணவத்தினாற் தோத்திரஞ் செய்யத் திருவுள்ளம் உவந்து இடையூறு சேராவண்ணங் காத்தருளினார். இப்பொழுது வித்தியா கருவத்தினால் விக்கினங்களை நீக்குங் கடவுளை மனம் வாக்குக் காயங்களினால் வழிபாடு செய்யாமல் புராணஞ் சொல்லத் தொடங்கினமையால் இத்துன்பம் வந்து சேர்ந்தது, விநாயகக் கடவுளைப் பூசைசெய்யின் அவர் உண்மை ஞானத்தைத் தந்து, எடுத்த கருமத்தை நிறைவேற்றுவார்” என்று உபதேசித்தார்.

வியாச முனிவர் பிரம்மாவை வணங்கி விடை பெற்றுக்கொண்டு, ஒரு வனத்திற்சென்று கணபதியைத் தியானித்துப் பன்னிரண்டு வருடம் தவம் செய்தார். விநாயகர் அருள்கூர்ந்து காட்சி கொடுத்தருளினார். முனிவர் அன்புடன் நமஸ்காரஞ் செய்து, கண்களினின்றும் ஆனந்த அருவி சொரிய, சரீரம் பளகங்கொள்ள, அகமுருகிச் “சச்சிதானந்த சொரூபரே! அடியேனது மலபாசத்தை நீக்கி, நீங்காத மெய்யன்பை தருதல் வேண்டும். பதினெண் புராணங்களையும் இடையூறின்றி நிறைவேற்றவும் அருள் செய்யவேண்டும்” என்று பிரார்த்தித்தார். 

விநாயகர், “அவ்விதமே ஆகுக” என்று அருட்செய்து, மறைந்தருளினார். வியாசமுனிவர் தமக்குக் கணேசப்பெருமான் காட்சி கொடுத்தருளிய இடத்தில் ஒரு ஆலயமும் உண்டாக்கி, விநாயகரைப் பிரதிஷ்டைசெய்து, பதினெண் புராணங்களையும் இடையூறின்றி நிறைவேற்றினார்.

 ‘‘பிரம்மசாரியமூர்த்தி’’ மென்கண்டதேவர் திருவெண்ணெய்நல்லூர் சிவாலயத்தில் சுயம்பு மூர்த்தியாய் எழுந்தருளியிருக்கும் பொல்லாப்பிள்ளையாருடைய திருச்சந்நதியிலே வேத சிவாகமப் பொருளை உணர்ந்தும், சிவஞானபோதத்தைத் தெளிந்து நீட்டை கூடியும் வருங்காலத்து, அப்பொல்லாப்பிள்ளையார் மெய்கண்ட தேவருக்குச் சூர்ணிகையைச் செவியறிவுறுத்தினர்.

சூர்ணிகையும் மெய்கண்டதேவர் சிவஞானபோதத்திற்கு அருளிய வார்த்திகமும் பொருளால் ஒற்றுமையுடையனவாம். சூர்ணிகை என்பது சூத்திர முதலியவற்றின் பொருளை இலகுவாகச் சுருங்கிய வசனரூபமாயுரைப்பது எனப் பொருள்படும். வார்த்திகம் என்பது மொழிப்புரை எனப்பொருள்படும்.பொள்ளார் பொல்லார் என மருவிற்று. உளி முதலியவற்றால் போழ்ந்து செய்யப்படாதவர் என்பது கருத்து, எனவே, சுயம்பு மூர்த்தி என்றதாம். என நிரம்பவழகிய தேசிகராற் கூறப்பட்டவாற்றானு முணர்க.

 ‘‘திருமுறை கண்டமூர்த்தி’’ திருவாரூரை தலைநகராகக் கொண்டு அரசாட்சி செய்து வந்த குலசேகர ராஜராஜ மன்னர், தமது சபையில் வரும் அன்பர்கள் மூலம் தேவாரத்துள் ஓரோர் பதிகங்களை ஓதக் கேட்டு, கையிரண்டும் உச்சிமேலேற, கண்ணீர் கரைந்தோட, சிவபெருமானை துதித்து வந்தார்.

அங்ஙனம் இருக்கையில் ஒரு நாள் காலை, திருநாரையூரிலே ஓர் ஆதிசைவப் பிராமணருக்கு ஒரு ஆண் மகன் தோன்றினான். அவன் தான் நம்பியாண்டார் நம்பி. உபநயனஞ் செய்யப்பெற்று, வேதம் முதலிய கலைகளைப் பயின்றுவரும் நாளில், பிதாவாயினார் ஓரூர்க்குச் செல்ல, அவர் கட்டளைப்படி (சுயம்புமூர்த்தி) பொல்லாப்பிள்ளையாருக்குத் திருமஞ்சனம் முதலியன எல்லாம்செய்து, நிவேதனத்தை அவர் திருமுன்னிலையில் வைத்து, “எம்பெருமானே! அதனைத் திருவமுது செய்யவேண்டும்” என்று பிரார்த்தித்தார். பிள்ளையார் திருஅமுது செய்யாதிருப்பது கண்டு, அப்புத்திரர் வெம்பி, அடியேன் ஏதேனுந் தவறு செய்ததுண்டோ? அடியேன் நிவேதித்ததை உண்ணாதது என்ன?” என்று தமது தலையினை கல்லில் மோதலானார். அப்பொழுது பிள்ளையார் “நம்பீ! பொறு” என்று தடுத்து அவ்வமுது முழுவதையும் உவந்து திருவமுது செய்தருளினார்.

நம்பியாண்டார் நம்பி “எந்தையே! அடியேன் இனிப் பாடசாலைக்குச் சென்றால் உபாத்தியாயர் அடிப்பார். ஆதலாலே வேதமுதலிய கலைகளைத் நீரே ஓதித் தரவேண்டும்” என்று கூறினார். பரமாச்சாரியராகிய விநாயகரும் ஓதுவிக்க, நம்பியாண்டார் நம்பி ஓதி மகிழ்ந்தார், அதுபோல மற்றை நாளும் நிகழ, நம்பியாண்டார் நம்பி வீற்றிருந்திடுஞ் செய்தியை வேந்தர் கேட்டு, திருநாரையூர்ப் பொல்லாப் பிள்ளையாருக்கு 
நம்பியாண்டார் நம்பி நிவேதிக்கும்படி வாழைப்பழம், தேன், அவல், எள்ளுருண்டை முதலியவற்றோடு அந்நகரில் வந்து சேர்ந்தார்.

அங்ஙனம் வந்தவர் நம்பியினுடைய பாதங்களை வணங்கி, “இவற்றைப் பொல்லாப்பிள்ளையாருக்கு இப்பொழுதே நிவேதிக்க” என்று சொன்னார், நம்பி, அரசர் கூறியவற்றைக் கேட்டு யானைமுகக் கடவுளுடைய திருவடிகளை வணங்கி, “அரசன் தொகுத்த இப்பொருள்களை நிவேதித்தருளுக” என்று படைத்தனர். விநாயகர் துதிக்கையினால் ஏற்றுத் திருவமுது செய்தருளினார். நம்பியாண்டார்நம்பிக்கு அருள்புரிந்து தில்லைச் சிதம்பரத்திலிருந்த தேவாரத் திருமுறைகளை உலகத்தவர் உய்யும் வண்ணம், வெளியுலகிற்குக் கொண்டுவர அருள்பாலித்தவர் விநாயகப் பெருமான். அதனால் திருமுறைகண்டமூர்த்தி என அழைக்கப்படுகிறார்.

 ‘‘சூர்ப்பகர்ணர்’’ விநாயகரிடம் ஒருமுறை, அக்னி பகவானும் சாபம் பெற்றார். அக்னியைக் காப்பாற்ற தனது காதுகளையே முறங்களாக்கி விசிறி, அக்னியின் வெப்பம் தணியாமல் இருக்க அருள் செய்தார் விக்னேஸ்வரர். இதனால் சூர்ப்பகர்ணர் என்று பெயர்கொண்டார்.

 ஐங்கரன்: மகாகணபதி, சித்தகணபதி, சக்திகணபதி, மோட்சகணபதி, வித்தியாகணபதி என இவ்வைந்து முகங்களோடு கூடி கணபதிப் பெருமானைப், ‘‘பஞ்சமுக விநாயகர்’’ என்று அழைக்கின்றனர். விநாயகப்பெருமான் ஐந்துமுகங்களோடும், ஐந்துகரகங்களோடும் காணப்
படுவதால் சக்தி தெய்வமாகவே விளங்குகிறார்.

ஐந்து என்ற எண்ணில், சில சிறப்புக்கள் உண்டு. பஞ்சாட்சரம், பஞ்சமூர்த்திகள், பஞ்சபூதங்கள், பஞ்சகவ்வியம், பஞ்சாமிர்தம், பஞ்சப்புலன்கள், பஞ்சகோசம், பஞ்செழுத்து மந்திரம், பஞ்சகிருத்தியங்கள், பஞ்சதளம், பஞ்சப்பிரமாணங்கள், இப்படியாக ஐந்தின் மகிமையோடு விளங்குபவர், பஞ்சமுக விநாயகர். ‘‘வித்யா கணபதி’’ வடிவம்; ஐந்தின் மகிமையோடு விளங்குகின்றது. சக்தியின் வாகனமான சிங்கத்தின் மீது, ஐந்து முகங்களோடு காட்சி தருபவர் அருள்புரிபவர், சக்தி விநாயகர். விநாயகப்பெருமான் ஐந்து கரங்களுடன் ஐங்கரன் ஆக விளங்குகிறார்.

எந்தெந்த மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகப்பெருமானை வழிபடும் அடியவர்களுக்கு என்னென்ன பலன் கிட்டும் என்பவற்றைப் பற்றிய அருட்தகவல் கீழே தரப்பட்டுள்ளன :

வன்னிமரப்பிள்ளையார் : அவிட்ட நட்சத்திரத் தினத்தில், வன்னி விநாயகரை நெற்பொரியினால், அர்ச்சனை செய்து வழிபட்டால், திருமணம் கைகூடும்.

புன்னைமரப்பிள்ளையார் : ஆயில்ய நட்சத்திரத் தினத்தில், விநாயகருக்கு இளநீர் அபிஷேகம் செய்து, வஸ்திரங்கள் அணிவித்துப் பின் ஏழைகள் மற்றும் நோயாளிகளுக்கு உணவு, உடைகள் தானம் செய்து, விநாயகரை வழிபட்டால் கணவன், மனைவி தம்பதிகளுக்கிடையே உள்ள மனக்கசப்பு நீங்கும்.

மகிழமரத்தடிப் பிள்ளையார் : அனுஷ நட்சத்திரத்தன்று இந்தப் பிள்ளையாருக்கு, மாதுளம்பழ முத்துக்களால், அபிஷேகம் செய்தால் பணிக்காகக் குடும்பத்தை விட்டுப்பிரிந்து சென்றிருப்பவர்கள் நலமுடன் இருப்பர்.

மாமரத்தடிப் பிள்ளையார் : கேட்டை நட்சத்திரத்தில், இந்தப் பிள்ளையாருக்கு விபூதிக் காப்பிட்டு, ஏழைச் சுமங்கலிப் பெண்களுக்கு உடை, உணவு அளித்து வந்தால் கோபம், பொறாமை, பகைமை நீங்கிப், பாதிக்கப்பட்ட வியாபாரம் சீர்பெறும்.

வேப்பமரத்தடி விநாயகர் : உத்திரட்டாதி நட்சத்திர நாளில் தீபம் ஏற்றி இவரை வழிபட்டால் கன்னிப் பெண்களுக்கு மனம்போல மாங்கல்ய பாக்கியம் கிட்டும்.

ஆலமரத்தடிப் பிள்ளையார் : ஆலமரத்தின் கீழ் வடக்கு நோக்கி வீற்றிருக்கும் விநாயகருக்கு மகம் நட்சத்திரத் தினத்தன்று, சித்திரான்னங்களை நிவேதனம் செய்து தானம் அளித்தால் கடுமையான நோயிலிருந்து நிவாரணம் பெறலாம்.

வில்வமரத்தடிப் பிள்ளையார் : சித்திரை நட்சத்திரத்தினத்தன்று, இவ்விநாயகருக்கு அர்ச்சனை செய்து, வழிபட்டு, ஏழைகளுக்கு முடிந்தளவு தானம் அளித்து வில்வ மரத்தைச் சுற்றிவந்தால் பிரிந்த தம்பதியர், மீளவும் ஒன்று சேர்வர்.

அரசமரத்தடிப்பிள்ளையார் : பூச நட்சத்திரத்தன்று, இவ்விநாயகருக்கு அன்னாபிஷேகம் செய்து, வழிபட்டால், விளைபொருள்கள் மற்றும் பூமியால் லாபம் கூடும்.

வியாழன், 5 நவம்பர், 2020

 துளசியை வழிபடும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்