சனி, 1 மே, 2021

உப்பை இந்த முறைப்படி வைத்து, பூஜை செய்தால் மகாலட்சுமி வேண்டிய வரம்கிடைக்கும்

    see my YouTube channel Tamilnattu samayal this channel is related to god .subscribe and support my channel

உப்பை இந்த முறைப்படி வைத்து, பூஜை செய்தால் மகாலட்சுமி வேண்டிய 
வரம்கிடைக்கும்


  நிறைய பணம் சம்பாதிக்கனும், வீடு வாங்கனும், வாகனம் வாங்கனும், இப்படி எல்லோருடைய மனதிலும் ஆசை இருக்கத்தான் செய்கின்றது. இதற்கெல்லாம், நமக்கு யோகம் கிடைக்க வேண்டுமென்றால், மகாலட்சுமியின் ஆசீர்வாதமும், அஷ்டலட்சுமிகளின் ஆசிர்வாதமும் கட்டாயம் தேவை என்றே சொல்லலாம். வெள்ளிக்கிழமை அன்று, நாம் செய்யும் பூஜையோடு சேர்த்து, மகாலட்சுமியையும், அஷ்டலட்சுமியையும் நினைத்து, இந்த முறைப்படி பூஜை செய்தால், வேண்டிய வரம் கூடிய விரைவில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சித்தர்கள் தங்களுடைய சித்த குறிப்புகளில் குறிப்பிட்டிருக்கும் முறையை வைத்து, சுலபமாக சொல்லப்பட்டுள்ள, ஒரு பூஜை முறை தான் இது. இந்த பூஜைக்கு, தேவையான பொருட்கள் என்னென்ன? இந்த பூஜையை எப்படி செய்ய வேண்டும்? என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். முதலில் இதற்கு தேவையான பொருட்களை தெரிந்து கொள்ளலாம்.The Pital Store Brass plate 6 inch long for multipurpose use Quarter Plate
ஒரு சிறிய பித்தளைத் தாம்பாளத் தட்டு, ஒரு சிறிய மண் பானை, மண் பானை நிரப்பும் அளவிற்கு தேவையான கல் உப்பு, மல்லிகைப் பூ, ஒரு ரூபாய் நாணயம், இரண்டு மண் அகல் தீபம், தீபம் ஏற்ற நல்லெண்ணெய், நெய், வெற்றிலை 3. இவ்வளவுதான். வெள்ளிக்கிழமை பூஜையை நீங்கள் எப்படி செய்கிறீர்களோ அந்த பூஜையோடு சேர்த்து மகாலட்சுமி தாயாரின் முன்பு இந்த முறைப்படி வேண்டிக் கொள்ளும் பட்சத்தில் உங்களுடைய வேண்டுதல், லட்சுமி தேவியின் செவிகளில் சீக்கிரம் விழும் என்பதில் சந்தேகமே இல்லை. முதலில் மல்லிகை பூவை வைத்து பூஜை அறையையும், மகாலட்சுமி தாயாரின் திருவுருவப் படத்தையும் அலங்காரம் செய்து வைத்துக்கொள்ளுங்கள். அதன் பின்பு ஒரு வெற்றிலையின் மேல் மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைத்து, பூஜை நன்றாக நடந்து முடியவேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.
உங்கள் வீட்டில் நீங்கள் ஏற்றக்கூடிய காமாட்சி அம்மன் விளக்கு, குத்து விளக்கு உங்கள் வீட்டு வழக்கப்படி ஏற்றி வைத்து விடுங்கள். இப்போது மகாலட்சுமி பூஜையை தொடங்க போகின்றோம். மனதிற்குள் ‘ஓம் மகாலட்சுமியே போற்றி’ என்ற மந்திரத்தை சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். மந்திரத்தைச் சொல்லிக்கொண்டே, சிறிய அளவிலான பித்தளை தாம்பூலத்தை எடுத்து வைத்து, அதன் மேல் மண் பானையை வைத்து, Clay Handi in Delhi, Delhi | Clay Handi Price in Delhiமண் பானையில்ண்நேரடியாக பித்தளை தட்டில் வைத்தால் நிற்காது. இதற்காக பச்சரிசியையோ அல்லது சிறிதளவு மஞ்சளையோ குழைத்து பானையின் அடியில் வைத்து கீழே சாயாமல் நிற்க்க வைத்துக் கொள்ளுங்கள்.) மண் பானையின் வாய்ப்பதியை சுற்றி வெளிப்பக்கமாக, மல்லிகைப் பூ  கட்டி விட வேண்டும். அதன் பின்பு மண் பானை நிறைய கல் உப்பைக் கொட்டி விட வேண்டும். அந்த மண் பானையில் கல்லுப்பு முழுமையாக நிறைந்து இருக்க வேண்டும்.Sea Salt (கல் உப்பு) - Grocery D2D Onlineகல் உப்பின் மேல், ஒரு ரூபாய் நாணயத்தை வைத்துக்கொள்ளுங்கள்.  பின்பு, நீங்கள் வைத்திருக்கும் ஒரு மண் அகல் தீபத்தில் நெய் ஊற்றிக் கொள்ளவேண்டும். ஒரு தீபத்தில் எண்ணை ஊற்றிக் கொள்ள வேண்டும். இந்த இரண்டு தீபங்களையும், வெற்றிலையின் மேல் வைத்து, ஏற்ற வேண்டும். இரண்டு  வெற்றிலைவரம்கிடைக்கும் வைத்து, தனித்தனி தீபங்களாக இரண்டு தீபங்கள் ஏற்றிக் கொள்ளுங்கள். இந்த தீபத்தை ஏற்றும்போது உங்களது கோரிக்கைகள் என்ன என்பதை மனதார சொல்லிக்கொண்டே ஏற்ற வேண்டும். மகாலட்சுமியும், அஷ்ட லக்ஷ்மி தேவியர்களும், நீங்கள் வைத்திருக்கும் அந்த மண் பானையில், நிறைந்திருக்கும் உப்பில் வந்து அமர்ந்து, நீங்கள் வேண்டும் வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. இறுதியாக தீப, தூப ஆராதனை காட்டி உங்களது வெள்ளிக்கிழமை பூஜை எப்படி நிறைவு செய்வீர்களோ அப்படி நிறைவு செய்து கொள்ளலாம்.
இந்த மண் பானையானது உங்கள் வீட்டு பூஜை அறையில் அப்படியே இருக்க வேண்டும். மூன்று வாரங்கள் தொடர்ந்து இந்த பூஜையை செய்து முடித்த பின்பு, சனிக்கிழமை அன்று அந்த கல் உப்பை எடுத்து, தண்ணீரில் கரைத்து விட்டு, உப்பு கலந்த தண்ணீரை கால் படாத இடங்களிலோ, அல்லது மரத்திற்கோ ஊற்றி விடலாம். கல் உப்பின் மேல் வைத்திருந்த அந்த ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து உங்களது பீரோவில் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். இப்படி நம்பிக்கையோடு மகாலட்சுமியை வேண்டி செய்யும் இந்த பூஜையானது, மிகவும் சக்தி வாய்ந்த பூஜை என்று சொல்லப்பட்டுள்ளது நம்பிக்கையுள்ளவர்கள் செய்து பலனடையலாம்.  

intha pathivu ellorukkum pidichurukkum nu ninaikkirean  
subscribe and support my blog and channel Tamilnattu samayal 🙏 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக