கனகதாரா ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்தால்
கிடைக்கும் பலன்கள் என்னென்ன?
இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றித்தான்
உங்களுக்குத் தெரியுமா?
கனகதாரா ஸ்தோத்திரம் உருவான கதைதான் உங்களுக்குத் தெரியுமா?
இந்த மூன்று கேள்விகளையும் ஒருநாள் என்னிடம் கேட்டார் நண்பர்.
நான் பதில் தெரியாமல் திகைத்தபோது, அந்த நண்பரே, ''நான் கேட்ட மூன்று கேள்விகளுக்கும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய சம்பவங்களின் மூலமாக உங்களுக்கு விடை கிடைத்துவிடும்'' என்றவர் தொடர்ந்து அந்தச் சம்பவங்களை விளக்கினார்.
துவாரகையில் கண்ணன் அரசாண்ட காலம்.
துவாரகையில் கண்ணன் அரசாண்ட காலம்.
ஒருநாள் கண்ணனைக் காண அவருடைய பால்ய சிநேகிதன் குசேலர் துவாரகைக்கு வந்தார்.
கண்ணனும் குசேலனும் சாந்தீபனி முனிவரின் ஆசிரமத்தில் ஒன்றாகக் கல்வி பயின்றவர்கள். குருகுல வாசம் முடிந்ததும் இருவரும் பிரிந்தனர்.
கண்ணன் துவாரகையின் அரசராக செல்வச் செழிப்புடன் இருந்தார். ஆனால், அவருடைய தோழன் குசேலரோ வறுமையின் பிடியில் சிக்கித் தவித்தார்.
வறுமைத் துன்பம் நீங்க வழி தெரியாமல் தடுமாறிய குசேலரிடம் அவருடைய மனைவி, 'நீங்கள் உங்கள் நண்பரும் துவாரகையின் அரசருமான கண்ணனை சென்று பார்த்தால், அவர் நம் வறுமைத் துன்பம் தீர வழி செய்வாரே'' என்று கூறினாள். ஆனால், நண்பனிடம் சென்று உதவி கேட்க குசேலருக்குத் தயக்கம்.
ஒருநாள் கண்ணனைக் காண அவருடைய பால்ய சிநேகிதன் குசேலர் துவாரகைக்கு வந்தார்.
கண்ணனும் குசேலனும் சாந்தீபனி முனிவரின் ஆசிரமத்தில் ஒன்றாகக் கல்வி பயின்றவர்கள். குருகுல வாசம் முடிந்ததும் இருவரும் பிரிந்தனர்.
கண்ணனும் குசேலனும் சாந்தீபனி முனிவரின் ஆசிரமத்தில் ஒன்றாகக் கல்வி பயின்றவர்கள். குருகுல வாசம் முடிந்ததும் இருவரும் பிரிந்தனர்.
கண்ணன் துவாரகையின் அரசராக செல்வச் செழிப்புடன் இருந்தார். ஆனால், அவருடைய தோழன் குசேலரோ வறுமையின் பிடியில் சிக்கித் தவித்தார்.
வறுமைத் துன்பம் நீங்க வழி தெரியாமல் தடுமாறிய குசேலரிடம் அவருடைய மனைவி, 'நீங்கள் உங்கள் நண்பரும் துவாரகையின் அரசருமான கண்ணனை சென்று பார்த்தால், அவர் நம் வறுமைத் துன்பம் தீர வழி செய்வாரே'' என்று கூறினாள். ஆனால், நண்பனிடம் சென்று உதவி கேட்க குசேலருக்குத் தயக்கம்.
கடைசியில் வேறு வழி இல்லாமல், மனைவி கூறியபடியே துவாரகைக்குச் செல்ல முடிவெடுத்தார் குசேலர். ஆனால், பால்ய சிநேகிதனைப் பார்க்கப் போகும்போது ஏதேனும் கொண்டு செல்லவேண்டுமே. எதைக் கொண்டு செல்வது என்று குசேலர் யோசித்துக் கொண்டிருந்தபோது, அவருடைய மனைவி, ''உங்கள் சிநேகிதருக்கு மிகவும் பிடித்த அவல் கொஞ்சம் இருக்கிறது. அதை கொண்டு சென்று உங்கள் சிநேகிதருக்குக் கொடுங்கள்'' என்று கூறி, கொஞ்சம் அவலை எடுத்துக் கொடுத்தாள்.
அவரும் தன் கந்தல் உடையின் ஒரு முனையில் அவலை முடிந்துகொண்டு நடைப் பயணமாக துவாரகைக்கு சென்றார்.
துவாரகை அரண்மனை வாயிலில் இருந்த காவலர்கள் குசேலரின் வறுமை நிலையையும் அவருடைய கந்தல் உடையையும் பார்த்து, அவரை உள்ளே விட மறுத்தனர்.
குசேலர் மிகவும் வற்புறுத்தவே வேறு வழி இல்லாமல் காவலர்கள் உள்ளே சென்று கண்ணனை வணங்கி, குசேலரின் வருகையைத் தெரிவித்தனர்.
பால்ய சிநேகிதன் குசேலர் வந்திருக்கிறார் என்ற தகவலைக் கேட்டதுதான் தாமதம், பரபரப்பாக எழுந்த கண்ணன், காவலர்களுக்கு முன்பாகச் சென்று குசேலரை கட்டித் தழுவி வரவேற்றார். அவரை உள்ளே அழைத்துச் சென்று ருக்மிணியுடன் சேர்ந்து பாதபூஜை செய்து, விருந்தளித்து உபசரித்தார்.
உபசாரங்கள் முடிந்ததும் கண்ணனும் குசேலரும் ஓய்வாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அருகில் ருக்மிணி தேவியும் இருந்தார்.
''குசேலா, என்னைக் காண இவ்வளவு தொலைவு வந்த நீ, எனக்கு எதுவும் கொண்டு வரவில்லையா?'' என்று கேட்டார்.
செல்வச் செழிப்புடன் இருக்கும் கண்ணனுக்கு அவலை எப்படித் தருவது என்று குசேலருக்குத் தயக்கம். ஆனால் கண்ணன் மேலும் மேலும் கேட்கவே, குசேலர் தான் கொண்டு வந்த அவலை தயக்கத்துடன் கண்ணனிடம் நீட்டினார்.
கண்ணன் ஒரு பிடி எடுத்து தன் வாயில் போட்டுக்கொண்டார். அவ்வளவில், குசேலரின் வீட்டில் அனைத்து செல்வங்களும் குவிந்துவிட்டன. இரண்டாவது பிடி அவலை எடுத்து வாயில் போட்டுக்கொண்டார். உடனே குசேலருக்கு மறுமைக்கான பலன்கள் கிடைத்துவிட்டன.
மூன்றாவது பிடியை கண்ணன் தன் வாயில் போட்டுக்கொள்ளப் போன நேரம், ருக்மிணி அதைத் தடுத்தாள். அவளுக்குள் ஒரு தயக்கம். காரணம், கண்ணன் வாமனனாக வந்தபோது ஓரடியால் விண்ணையும், மறு அடியால் மண்ணையும் அளந்துமுடித்த நிலையில், மூன்றாவது அடிக்கு மகாபலியையே ஆட்கொண்டுவிட்டானே, அதேபோல் மூன்றாவது பிடி அவலை உண்டு கண்ணன் எங்கே குசேலருக்கு ஆட்பட்டு விடுவானோ என்பதுதான்.
ருக்மிணி தடுத்ததற்கான காரணம் பற்றி கண்ணன் கேட்டபோது, ''சுவாமி, தங்களுக்கு அளிக்கப்படும் எதுவும் மகா பிரசாதமாக ஆகிவிடுகிறது. உங்களுடைய தூய பக்தன் அன்புடன் கொண்டு வந்த அவல் மொத்தத்தையும் தாங்களே உண்டுவிட்டால் எப்படி? பிரசாதமாக எனக்கும் கொஞ்சம் தரக்கூடாதா? என்றுதான் தடுத்தேன்'' என்றார். கண்ணன் மீதம் இருந்த அவலை ருக்மிணிக்குத் தந்தார்.
இந்தச் சம்பவம்தான், பகவானுக்கு நாம் படைக்கும் நைவேத்தியம் பிரசாதமாக நமக்குக் கிடைப்பதன் பின்னணியில் அமைந்திருக்கிறது.
சரி-,
பெற்ற செல்வத்தை எப்படிப் பயன்படுத்தவேண்டும் தெரியுமா?
அதற்கு முன்பு கனகதாரா ஸ்தோத்திரம் தோன்றியதன் பின்னணியில் அமைந்த நிகழ்ச்சியைப் பார்த்தால், செல்வத்தை எப்படிப் பயன்படுத்தவேண்டும் என்ற கேள்விக்கான விடையும் நமக்குக் கிடைத்துவிடும்.
கயிலை நாயகனின் அம்சமாக காலடியில் அவதரித்து, அனைத்து ஜீவன்களிலும் இருக்கும் பரம்பொருள் ஒன்றே என்னும் அத்வைத தத்துவத்தை போதித்தவர் ஜகத்குரு ஆதிசங்கரர். அவர் சந்நியாசம் மேற்கொள்வதற்கு முன்பாக, தினமும் சில வீடுகளில் பிக்ஷைக்குச் செல்வது வழக்கம்.
ஒருநாள் ஆதிசங்கரர் ஒரு பிராமணரின் வீட்டுக்குச் சென்று பிக்ஷை கேட்டார். அந்த பிராமணரோ வறுமையின் பிடியில் சிக்கித் தவிப்பவர். ஆதிசங்கரர் அந்த வீட்டுக்குச் சென்றபோது பிராமணர் வெளியில் சென்றிருந்தார். வீட்டில் அவருடைய மனைவி மட்டும் இருந்தாள். வாசலில் வந்து பிக்ஷை கேட்ட பாலக சங்கரனைப் பார்த்தபோது, சாட்சாத் சிவபெருமானே பாலகன் வடிவில் வந்து பிக்ஷை கேட்பது போல் தோன்றியது. பால்வடியும் முகத்துடன் நின்றிருந்த சங்கரனுக்கு பிக்ஷையிட எதுவும் இல்லையே என்ற தவிப்புடன் அவள் வீடு முழுவதும் தேடிப் பார்த்தாள். அவளுடைய கண்களில் ஒரு தட்டில் உலர்ந்த நெல்லிக்கனி இருப்பது தென்பட்டது.
பிக்ஷையிடத் தகுதியில்லாத பொருளாக இருந்தாலும், அன்பின் மிகுதியால் அந்த நெல்லிக்கனியை எடுத்து வந்து பாலக சங்கரனின் தட்டில் போட்டாள். தன்னுடைய நிலையை நினைத்து வேதனையில் துடித்தாள்.
பிக்ஷையிடத் தகுதியில்லாத பொருளாக இருந்தாலும், அன்பின் மிகுதியால் அந்த நெல்லிக்கனியை எடுத்து வந்து பாலக சங்கரனின் தட்டில் போட்டாள். தன்னுடைய நிலையை நினைத்து வேதனையில் துடித்தாள்.
அந்தப் பெண்மணியின் அன்பில் மகிழ்ந்த சங்கரர், அந்தப் பெண்மணியின் வறுமை தீரவேண்டி, மகாலக்ஷ்மியை பிரார்த்தித்து ஸ்லோகங்களைப் பாடினார். அந்த ஸ்லோகங்களே 'கனகதாரா ஸ்தோத்திரம்' ஆகும்.
சங்கரரின் பிரார்த்தனைக்கு இரங்கிய மகாலக்ஷ்மி அவருக்கு தரிசனம் கொடுத்தாள். மகாலக்ஷ்மியை நமஸ்கரித்த சங்கரர், தமக்கு நெல்லிக்கனியை பிக்ஷையிட்ட பெண்மணியின் வறுமை நீங்கச் செய்யவேண்டும் என்று வேண்டினார்.
அதற்கு மகாலக்ஷ்மி, ''சங்கரா, இவர்கள் வறுமையின் பிடியில் சிக்கித் தவிப்பதற்கு பூர்வஜன்ம வினைதான் காரணம். பூர்வ ஜன்மத்தில் இந்தப் பெண் குசேலனின் மனைவியாக இருந்தவள். இவளுடைய கணவன் குசேலன் கண்ணனின் அருளால் அளவற்ற செல்வத்தைப் பெற்று வந்தான். ஆனால், செல்வம் தந்த செருக்கில் இவர்கள் இருவருமே அதை முறையான வழிகளில் பயன்படுத்தவில்லை. மேலும் கண்ணனின் அருளால் பெற்ற செல்வத்தில் ஒரு சிறிதும் தான தர்ம காரியங்களுக்குப் பயன்படுத்தவில்லை. அதன் பயனாகவே இந்தப் பிறவியில் இவர்கள் வறுமையை அனுபவிக்க நேர்ந்தது. இதில் என்னால் ஆவது ஒன்றுமில்லை'' என்றாள்.
உடனே சங்கரர், ''தேவி, தாங்கள் சொல்வது உண்மையாகத்தான் இருக்கும். அதை நான் மறுப்பதற்கு இல்லை. ஆனால், எப்போது தங்களின் கடைக்கண் பார்வை இந்தப் பெண்ணின்மீது பட்டுவிட்டதோ, அப்போதே அவர்களின் வினைப்பயன்கள் தீர்ந்துவிட்டதே. இனி நீ அவர்களின் வறுமை நீங்க அருள்புரிவதில் தடை என்ன இருக்கிறது?'' என்று கேட்டார்.
சங்கரரின் சமத்காரமான பேச்சில் மகிழ்ந்த மகாலக்ஷ்மி அந்த வீட்டில் தங்க நெல்லிக்கனிகளாகப் பொழிந்தாள்.
ஆக, இந்த நிகழ்ச்சியின் மூலம் நமக்குக் கிடைக்கக்கூடிய செல்வங்கள் அனைத்துமே இறைவனின் அருளால்தான் என்பதை உணர்ந்து, பெற்ற செல்வத்தை முறைப்படி பயன்படுத்தி, தான தர்மங்கள் செய்தால், எப்பிறவியிலும் வறுமை நம்மை வாட்டாது.
வறுமை நிலையில் இருப்பவர்கள் தினசரியோ அல்லது வெள்ளிக்கிழமைகளிலோ ஆதிசங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால், வறுமை நீங்கி செல்வம் செழிக்கும் என்பது ஐதீகம்.
thank you
பதிலளிநீக்கு