செவ்வாய், 9 ஏப்ரல், 2019

கனகதாரா ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்தால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன?

கனகதாரா ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்தால்

கிடைக்கும் பலன்கள் என்னென்ன?

இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றித்தான்
உங்களுக்குத்  தெரியுமா?
கனகதாரா ஸ்தோத்திரம் உருவான கதைதான் உங்களுக்குத் தெரியுமா?
இந்த மூன்று கேள்விகளையும் ஒருநாள் என்னிடம் கேட்டார் நண்பர்.

கண்ணன் குசேலர்

நான் பதில் தெரியாமல் திகைத்தபோது, அந்த நண்பரே, ''நான் கேட்ட மூன்று கேள்விகளுக்கும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய சம்பவங்களின் மூலமாக உங்களுக்கு விடை கிடைத்துவிடும்'' என்றவர் தொடர்ந்து அந்தச் சம்பவங்களை விளக்கினார்.

துவாரகையில் கண்ணன் அரசாண்ட காலம். 


ஒருநாள் கண்ணனைக் காண அவருடைய பால்ய சிநேகிதன் குசேலர் துவாரகைக்கு வந்தார்.
கண்ணனும் குசேலனும் சாந்தீபனி முனிவரின் ஆசிரமத்தில் ஒன்றாகக் கல்வி பயின்றவர்கள். குருகுல வாசம் முடிந்ததும் இருவரும் பிரிந்தனர். 
கண்ணன் துவாரகையின் அரசராக செல்வச் செழிப்புடன் இருந்தார். ஆனால், அவருடைய தோழன் குசேலரோ வறுமையின் பிடியில் சிக்கித் தவித்தார். 

வறுமைத் துன்பம் நீங்க வழி தெரியாமல் தடுமாறிய குசேலரிடம் அவருடைய மனைவி, 'நீங்கள் உங்கள் நண்பரும் துவாரகையின் அரசருமான கண்ணனை சென்று பார்த்தால், அவர் நம் வறுமைத் துன்பம் தீர வழி செய்வாரே'' என்று கூறினாள். ஆனால், நண்பனிடம் சென்று உதவி கேட்க குசேலருக்குத் தயக்கம். 








  


கடைசியில் வேறு வழி இல்லாமல், மனைவி கூறியபடியே துவாரகைக்குச் செல்ல முடிவெடுத்தார் குசேலர். ஆனால், பால்ய சிநேகிதனைப் பார்க்கப் போகும்போது ஏதேனும் கொண்டு செல்லவேண்டுமே. எதைக் கொண்டு செல்வது என்று குசேலர் யோசித்துக் கொண்டிருந்தபோது, அவருடைய மனைவி, ''உங்கள் சிநேகிதருக்கு மிகவும் பிடித்த அவல் கொஞ்சம் இருக்கிறது. அதை கொண்டு சென்று உங்கள் சிநேகிதருக்குக் கொடுங்கள்'' என்று கூறி, கொஞ்சம் அவலை எடுத்துக் கொடுத்தாள்.

அவரும் தன் கந்தல் உடையின் ஒரு முனையில் அவலை முடிந்துகொண்டு நடைப் பயணமாக துவாரகைக்கு சென்றார்.
துவாரகை அரண்மனை வாயிலில் இருந்த காவலர்கள் குசேலரின் வறுமை நிலையையும் அவருடைய கந்தல் உடையையும் பார்த்து, அவரை உள்ளே விட மறுத்தனர். 

குசேலர் மிகவும் வற்புறுத்தவே வேறு வழி இல்லாமல் காவலர்கள் உள்ளே சென்று கண்ணனை வணங்கி, குசேலரின் வருகையைத் தெரிவித்தனர்.

பால்ய சிநேகிதன் குசேலர் வந்திருக்கிறார் என்ற தகவலைக் கேட்டதுதான் தாமதம், பரபரப்பாக எழுந்த கண்ணன், காவலர்களுக்கு முன்பாகச் சென்று குசேலரை கட்டித் தழுவி வரவேற்றார். அவரை உள்ளே அழைத்துச் சென்று ருக்மிணியுடன் சேர்ந்து பாதபூஜை செய்து, விருந்தளித்து உபசரித்தார்.

உபசாரங்கள் முடிந்ததும் கண்ணனும் குசேலரும் ஓய்வாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அருகில் ருக்மிணி தேவியும் இருந்தார். 
''குசேலா, என்னைக் காண இவ்வளவு தொலைவு வந்த நீ, எனக்கு எதுவும் கொண்டு வரவில்லையா?'' என்று கேட்டார்.
செல்வச் செழிப்புடன் இருக்கும் கண்ணனுக்கு அவலை எப்படித் தருவது என்று குசேலருக்குத் தயக்கம். ஆனால் கண்ணன் மேலும் மேலும் கேட்கவே, குசேலர் தான் கொண்டு வந்த அவலை தயக்கத்துடன் கண்ணனிடம் நீட்டினார்.

கண்ணன் ஒரு பிடி எடுத்து தன் வாயில் போட்டுக்கொண்டார். அவ்வளவில், குசேலரின் வீட்டில் அனைத்து செல்வங்களும் குவிந்துவிட்டன. இரண்டாவது பிடி அவலை எடுத்து வாயில் போட்டுக்கொண்டார். உடனே குசேலருக்கு மறுமைக்கான பலன்கள் கிடைத்துவிட்டன.

மூன்றாவது பிடியை கண்ணன் தன் வாயில் போட்டுக்கொள்ளப் போன நேரம், ருக்மிணி அதைத் தடுத்தாள். அவளுக்குள் ஒரு தயக்கம். காரணம், கண்ணன் வாமனனாக வந்தபோது ஓரடியால் விண்ணையும், மறு அடியால் மண்ணையும் அளந்துமுடித்த நிலையில், மூன்றாவது அடிக்கு மகாபலியையே ஆட்கொண்டுவிட்டானே, அதேபோல் மூன்றாவது பிடி அவலை உண்டு கண்ணன் எங்கே குசேலருக்கு ஆட்பட்டு விடுவானோ என்பதுதான்.

ருக்மிணி தடுத்ததற்கான காரணம் பற்றி கண்ணன் கேட்டபோது, ''சுவாமி, தங்களுக்கு அளிக்கப்படும் எதுவும் மகா பிரசாதமாக ஆகிவிடுகிறது. உங்களுடைய தூய பக்தன் அன்புடன் கொண்டு வந்த அவல் மொத்தத்தையும் தாங்களே உண்டுவிட்டால் எப்படி? பிரசாதமாக எனக்கும் கொஞ்சம் தரக்கூடாதா? என்றுதான் தடுத்தேன்'' என்றார். கண்ணன் மீதம் இருந்த அவலை ருக்மிணிக்குத் தந்தார். 
இந்தச் சம்பவம்தான், பகவானுக்கு நாம் படைக்கும் நைவேத்தியம் பிரசாதமாக நமக்குக் கிடைப்பதன் பின்னணியில் அமைந்திருக்கிறது.
சரி-,
பெற்ற செல்வத்தை எப்படிப் பயன்படுத்தவேண்டும் தெரியுமா?
அதற்கு முன்பு கனகதாரா ஸ்தோத்திரம் தோன்றியதன் பின்னணியில் அமைந்த நிகழ்ச்சியைப் பார்த்தால், செல்வத்தை எப்படிப் பயன்படுத்தவேண்டும் என்ற கேள்விக்கான விடையும் நமக்குக் கிடைத்துவிடும்.

கயிலை நாயகனின் அம்சமாக காலடியில் அவதரித்து, அனைத்து ஜீவன்களிலும் இருக்கும் பரம்பொருள் ஒன்றே என்னும் அத்வைத தத்துவத்தை போதித்தவர் ஜகத்குரு ஆதிசங்கரர். அவர் சந்நியாசம் மேற்கொள்வதற்கு முன்பாக, தினமும் சில வீடுகளில் பிக்ஷைக்குச் செல்வது வழக்கம்.
ஆதி சங்கரர்
ஒருநாள் ஆதிசங்கரர் ஒரு பிராமணரின் வீட்டுக்குச் சென்று பிக்ஷை கேட்டார். அந்த பிராமணரோ வறுமையின் பிடியில் சிக்கித் தவிப்பவர். ஆதிசங்கரர் அந்த வீட்டுக்குச் சென்றபோது பிராமணர் வெளியில் சென்றிருந்தார். வீட்டில் அவருடைய மனைவி மட்டும் இருந்தாள். வாசலில் வந்து பிக்ஷை கேட்ட பாலக சங்கரனைப் பார்த்தபோது, சாட்சாத் சிவபெருமானே பாலகன் வடிவில் வந்து பிக்ஷை கேட்பது போல் தோன்றியது. பால்வடியும் முகத்துடன் நின்றிருந்த சங்கரனுக்கு பிக்ஷையிட எதுவும் இல்லையே என்ற தவிப்புடன் அவள் வீடு முழுவதும் தேடிப் பார்த்தாள். அவளுடைய கண்களில் ஒரு தட்டில் உலர்ந்த நெல்லிக்கனி இருப்பது தென்பட்டது. 
பிக்ஷையிடத் தகுதியில்லாத பொருளாக இருந்தாலும், அன்பின் மிகுதியால் அந்த நெல்லிக்கனியை எடுத்து வந்து பாலக சங்கரனின் தட்டில் போட்டாள். தன்னுடைய நிலையை நினைத்து வேதனையில் துடித்தாள். 

அந்தப் பெண்மணியின் அன்பில் மகிழ்ந்த சங்கரர், அந்தப் பெண்மணியின் வறுமை தீரவேண்டி, மகாலக்ஷ்மியை பிரார்த்தித்து ஸ்லோகங்களைப் பாடினார். அந்த ஸ்லோகங்களே 'கனகதாரா ஸ்தோத்திரம்' ஆகும்.

சங்கரரின் பிரார்த்தனைக்கு இரங்கிய மகாலக்ஷ்மி அவருக்கு தரிசனம் கொடுத்தாள். மகாலக்ஷ்மியை நமஸ்கரித்த சங்கரர், தமக்கு நெல்லிக்கனியை பிக்ஷையிட்ட பெண்மணியின் வறுமை நீங்கச் செய்யவேண்டும் என்று வேண்டினார்.

அதற்கு மகாலக்ஷ்மி, ''சங்கரா, இவர்கள் வறுமையின் பிடியில் சிக்கித் தவிப்பதற்கு பூர்வஜன்ம வினைதான் காரணம். பூர்வ ஜன்மத்தில் இந்தப் பெண் குசேலனின் மனைவியாக இருந்தவள். இவளுடைய கணவன் குசேலன் கண்ணனின் அருளால் அளவற்ற செல்வத்தைப் பெற்று வந்தான். ஆனால், செல்வம் தந்த செருக்கில் இவர்கள் இருவருமே அதை முறையான வழிகளில் பயன்படுத்தவில்லை. மேலும் கண்ணனின் அருளால் பெற்ற செல்வத்தில் ஒரு சிறிதும் தான தர்ம காரியங்களுக்குப் பயன்படுத்தவில்லை. அதன் பயனாகவே இந்தப் பிறவியில் இவர்கள் வறுமையை அனுபவிக்க நேர்ந்தது. இதில் என்னால் ஆவது ஒன்றுமில்லை'' என்றாள்.
கஜலக்‌ஷ்மி

உடனே சங்கரர், ''தேவி, தாங்கள் சொல்வது உண்மையாகத்தான் இருக்கும். அதை நான் மறுப்பதற்கு இல்லை. ஆனால், எப்போது தங்களின் கடைக்கண் பார்வை இந்தப் பெண்ணின்மீது பட்டுவிட்டதோ, அப்போதே அவர்களின் வினைப்பயன்கள் தீர்ந்துவிட்டதே. இனி நீ அவர்களின் வறுமை நீங்க அருள்புரிவதில் தடை என்ன இருக்கிறது?'' என்று கேட்டார்.

சங்கரரின் சமத்காரமான பேச்சில் மகிழ்ந்த மகாலக்ஷ்மி அந்த வீட்டில் தங்க நெல்லிக்கனிகளாகப் பொழிந்தாள்.
ஆக, இந்த நிகழ்ச்சியின் மூலம் நமக்குக் கிடைக்கக்கூடிய செல்வங்கள் அனைத்துமே இறைவனின் அருளால்தான் என்பதை உணர்ந்து, பெற்ற செல்வத்தை முறைப்படி பயன்படுத்தி, தான தர்மங்கள் செய்தால், எப்பிறவியிலும் வறுமை நம்மை வாட்டாது.




வறுமை நிலையில் இருப்பவர்கள் தினசரியோ அல்லது வெள்ளிக்கிழமைகளிலோ ஆதிசங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால், வறுமை நீங்கி செல்வம் செழிக்கும் என்பது ஐதீகம்.



திங்கள், 1 ஏப்ரல், 2019

கற்சிற்பம் கடவுளாவது எப்படி?

தொடர்புடைய படம்கற்சிற்பம் கடவுளாவது எப்படி?


*பிரதிஷ்டைக்குப் பின் கற்சிற்பம் கடவுளாவது எப்படி?*

ஆகம_சாஸ்திரத்தின்_அற்புதம் :
🌻 கருங்கல் ஒன்று சிற்பமாவது சாதாரண விஷயமல்ல. கல்லை தேர்ந்தெடுப்பதில் தொடங்கி, கற் சிற்பம் உருவாவது வரை ஏகப்பட்ட சாஸ்திரங்களை முன்னோர்கள் உருவாக்கி வைத்துள்ளார்கள். சிலைக்கே 
*பிரதிஷ்டைக்குப் பின் கற்சிற்பம் கடவுளாவது எப்படி?*
ஏகப்பட்ட விதிகள் என்றால், வழிபடக்கூடிய மூலவராக உருவாகும் கற் சிற்பம் வடித்தவுடன் அப்படியே கொண்டு போய் பிரதிஷ்டை செய்து விட முடியாது. அறிவியலும் ஆன்மிகமும் பின்னிப்பிணைந்த பல வழிமுறைகளை கடைப்பிடித்து சிலைக்கு கடவுள் கடாட்சத்தை ஏற்றுகிறார்கள்.
கல்_ஒன்று_கடவுளாக_மாறும்_வழிமுறையைதான்_இங்கு_காணவிருக்கிறோம்.
சிலைகளை ஸ்தாபிக்கும் அந்த தெய்வீக வழிமுறைகளைப் பற்றி கீர்த்திவர்மன் ஸ்தபதி அவர்கள் கூறும்போது "சிற்ப சாஸ்திரம், ஆகம விதிகளின்படி உருவாகும் கடவுள் சிலைகள் முதலில் சுத்தம் செய்யப்பட்டு, ஒரு நல்ல நாளில் ஜலவாசத்தில் வைக்கப்படுகிறது.
1. ஜலவாசம் :
அதாவது 3 புண்ணிய நதிகளின் நீரையும், முக்கிய தீர்த்தங்களின் நீரையும், கடவுள் சிலை எந்த தலத்தில் வைக்கப்பட போகிறதோ அந்த தீர்த்தத்தையும் சேர்த்து, புதிதாக உருவாக்கப்பட்ட சிலையை ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் அமிழ்த்தி வைக்க வேண்டும். ஜலவாசத்தில் இருக்கும் சிலை குளிர்ந்து உறுதியாக உருவாகும்.
அறிவியல் படி ஜலவாசத்தில்_48_நாட்கள் இருக்கும் சிலையில் ஏதேனும் ஓட்டைகள், மெல்லிய பிளவுகள் இருந்தால் நீர் அதனுள் நுழைந்து விடும். நுழையும் நீர் குமிழிகளை வெளியே விடும். இதனால் அந்த சிலை பின்னமான சிலை என்றும், அது வழிபடத்தக்கது அல்ல என்றும் கண்டுபிடித்து விடலாம். இதனால் குறைபட்ட சிலையை வணங்கும் குற்றம் தடுக்கப்படுகிறது.
👉குறைவுபட்ட சிலையை பிரதிஷ்டை செய்வது என்பது அந்த ஊருக்கும், மக்களுக்கும் பெரும் கேட்டை உருவாக்கி விடும். அதை ஆரம்ப நிலையிலேயே தடுத்து விடும் வழிமுறை தான் ஜலவாசம்.👈
2.  தான்ய_வாசம் :
48 நாள்கள் நீரில் ஊறிய சிலையை எடுத்து அடுத்ததாக தான்ய வாசத்தில் வைக்கிறார்கள். அதாவது சிலை_மூழ்கும்_அளவுக்கு_நவ_தானியங்களை_கொட்டி_வைக்கிறார்கள். இதுவே #தான்ய_வாசம். இதுவும் 48 நாட்கள் தான். நவ தானியங்களோடு நவ ரத்தினங்கள், பொன், வெள்ளி மற்றும் செப்பு காசுகள் யாவும் சேர்த்தே இந்த வாசம் நடத்தப்படுகிறது. ஏன் நவரத்தினங்கள், பொற்காசுகள் என்றால் மன்னராட்சியின் போது உருவாக்கப்பட்ட சிலைகள் மொத்தம் ஆறு வாசத்தில் இருக்க வைக்கப்பட்டதாம்.
3.  ரத்ன_வாசம் :
ஜலவாசம், தான்ய வாசம், பின்னர் நவரத்தினங்களில் மூழ்க வைக்கும் ரத்ன வாசம்.
4. தன_வாசம் :
பின்னர் சிலைகளை #பொற்காசுகளில்_மூழ்க_வைப்பர்_இது_தன_வாசம்.
5. வஸ்திர_வாசம் :
பின்னர் வஸ்திர வாசம், அதில் பட்டாடைகளில் _அந்த_கடவுள்_சிலை_வாசம்_செய்யும்.
6. சயன_வாசம் :
இறுதியாக சயன வாசத்தில் கடவுள் சிலை வைக்கப்படும். அதாவது #ஹம்சதூளிகா_மஞ்சம் எனப்படும் அன்னத்தின்_சிறகுகளால்_ஆன_படுக்கையில்_மான்_தோல்_விரித்து_அதன்_மீது_கடவுள்_சிலை_வைக்கப்பட்டு_பாதுகாக்கப்படும்.
👉 இந்த ஆறு வாசமும் 48 நாட்களாக மொத்தம் 288 நாட்கள் வைக்கப்படும். இப்போது ரத்தினங்கள், பொற்காசுகள், புலித்தோல் எல்லாம் சாத்தியமில்லை என்பதால் ஜலவாசம், தான்ய வாசத்தோடு முடித்துக்கொள்ளப்படுகிறது. எனினும் தான்ய வாசத்தில் நவதானியத்தோடு பொற்காசுகளும், நவரத்தினமும் இயன்ற அளவு சேர்க்கப்படுகிறது.
சரி... ஏன் இந்த தான்ய வாசம் என்று தானே கேட்கிறீர்கள். நீரில் ஊறி ஏதாவது ஓட்டை, விரிசல் இருந்தால் காட்டும் ஜலவாசம் தாண்டியும் ஏதேனும் குற்றம் குறை சிலையில் இருந்தால் அதை தான்ய வாசம் சுட்டிக்காட்டி விடும். நவதானியத்தில் இருந்து வெளியாகும் வெவ்வேறு விதமான வெப்பம் சிலையை தாக்கும்.
48 நாட்கள் இந்த வெப்பத்தில் இருக்கும் சிலையில் ஏதேனும் வலிமையற்ற பகுதிகள் இருந்தால் அவை உடைந்து விடும். தேரை போன்ற பாதிப்பு கொண்ட சிலை என்றால் இந்த வாசத்தில் உடைந்து சிலையின் குற்றத்தை காட்டிக்கொடுத்து விடும்.
7. அதாவது ஜலவாசம், தான்ய வாசத்தில் சிலைகளின் குற்றம் குறைகள் தெரிந்து விடும். அதைப்போல தான் ரத்தின_வாசத்தில்_நவக்கிரகங்களின்_அம்சமான_நவரத்தினங்களின்_குணங்களை_சிலைகள்_பெரும்.
அதுபோலவே தன, #வஸ்திர, #சயன வாசத்தில் இருக்கும் #சிலைகள்_தெய்வ_அதிர்வினை_பெற்று விளங்கும்.
8.   6 மண்டல வாசமும் முடிந்து தயாராகும்
தெய்வசிலைகளின்_கண்கள், பிரதிஷ்டை செய்யப்போகும் இரண்டு நாளுக்கு முன்னர் தான் திறக்கப்படும்.
9. அந்த சிலைகள் மூலிகைச் சத்தினை பெறுகிறது. புஷ்பாதி வாசத்துக்கு பிறகு
கண்களை_திறக்கும்_நிகழ்வுக்கு_முன்பாக_அந்த_தெய்வ_சிலை_சயனாதி_வாசத்தில்_வைக்கப்படுகிறது. 

நல்ல மஞ்சத்தில், தலையணை உள்ளிட்ட வசதிகளோடு கிழக்கே_பார்த்து கடவுள் சிலையை வைத்து விடுகிறார்கள். இந்த வாசத்தில் சிலையின் கிடைமட்ட வடிவம் சோதிக்கப்படுகிறது. இத்தனைக்குப் பிறகுதான் கண் திறக்கும் புனித நிகழ்ச்சி நடக்கிறது.
தகுந்த பூஜைக்கு பிறகு தலைமை ஸ்தபதியால் #தங்க_ஊசி_கொண்டு_கண்ணில்_மெல்லியகீறலால்_கருவிழி_திறக்கப்படுகிறது.

👉 அதன்பிறகே அந்த தெய்வசிலைக்கு முழுமையான அழகு வருகிறது. பின்னர் கும்பாபிஷகத்தின் போது தொடர்ந்து நடந்த யாகசாலை பூஜையின் போது வைக்கப்பட்ட புனித நீர், காப்பு கயிறு போன்ற பல்வேறு புனிதப்பொருட்களால் ஸ்வாமிக்கு தெய்வீக தன்மை ஊட்டப்படுகிறது.
10.  ஸ்பரிசவாதி என்னும் இந்த கடைசி வாசத்தில் சுவாமியின்
நவ  துவாரங்களுக்கான மந்திரம் ஓதப்பட்டு மின்காந்த சக்தி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அந்த சிலைக்கு அளிக்கப்பட்டு முழுமையான கடவுளாக மாற்றி அமைக்கப்படுகிறது. இந்த காரியத்தை கருவறையில் பிராதன ஆச்சாரியார் செய்து வைப்பார்.

⏩ கல்லில் இருந்து வடிக்கப்பட்ட சிலை இவ்வாறு பல்வேறு அறிவியல், ஆன்மிக வழிமுறைகளின்படி தான் அருள்மிக்க கடவுளாக மாறுகிறது" .
🌻 கல்லை வடித்து பொதுவில் வைத்தால் அது சிலை.
அதுவே இத்தனை இத்தனை புனித வழிகளால் மேம்படுத்தப்பட்டால் தான் அது நாம் வணங்கும் கடவுளாக மாறுகிறது.
மனிதனும் அப்படித்தான், பல்வேறு பக்குவங்களை அடைந்தால் தான் அவனும் வணங்கத்தக்கவனாக மாறுவான் என்பதை தான் இந்த வழிமுறைகள் காட்டுகின்றன. 

வாழ்வை வளமாக்கும் விநாயகர் வழிபாடு

வாழ்வை வளமாக்கும் விநாயகர் வழிபாடுதொடர்புடைய படம்
எந்த ஒரு செயலைத் தொடங்கினாலும், பிள்ளையாரை வணங்கியபின் தொடங்கினால் அந்த செயலில் நல்ல வெற்றி கிடைக்கும் என்பது அனுபவரீதியான, திடமான நம்பிக்கை.

பிள்ளையார் வழிபாடு மிகவும் எளிமையானது.

கல், மண், மரம், செம்பு முதலியவற்றால் இறைவனின் திருவுருவங்களைச் செய்ய வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன.
ஆனால், மண், பசுஞ்சாணம், மஞ்சள், மரக்கல், கருங்கல், பளிங்குக்கல், தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள், முத்து, பவளம் போன்ற ரத்தினங்கள், தந்தம், வெள்ளெருக்கு வேர், அத்திமரம், பசு வெண்ணெய், அரைத்த சந்தனம், வெண்ணீறு, சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றால் விநாயகர் வடிவத்தை அமைக்கலாம்.
  நமது தேவைக்கேற்றப்படி பல விதமான பொருட்களால் ஆவாஹனம் செய்து வழிபட்டு, அதற்கான பலன்களை பெற்றுக்கொள்ளலாம்.

மஞ்சள் பிள்ளையார் வழிபாட்டு பலன்
மஞ்சளில் பிள்ளையார் (மஞ்சள் பிள்ளையார்) பிடித்து வழிபட்டால், சகல சௌபாகியங்களும் கிடைக்கும்.

குங்கும பிள்ளையார் வழிபாட்டு பலன்
குங்குமத்தில் பிள்ளையார் (குங்கும பிள்ளையார்) பிடித்து வழிபட்டால் செவ்வாய் தோஷம் நீங்கும்.

புற்று மண் பிள்ளையார் வழிபாட்டு பலன்புற்று மண்ணில் பிள்ளையார் (புற்று மண் பிள்ளையார்) பிடித்து வழிபட்டால் விவசாயம் நன்கு செழிப்படையும், நோய்கள் நீங்கும்.

வெல்ல பிள்ளையார் வழிபாட்டு பலன்
வெல்லத்தில் பிள்ளையார் (வெல்ல பிள்ளையார்) பிடித்து வழிபாடு செய்தால் உடலில் ஏற்படும் கட்டிகள் குணமாகும்.

கடல் உப்பு பிள்ளையார் வழிபாட்டு பலன்
கடல் உப்பில் பிள்ளையார் (கடல் உப்பு பிள்ளையார்) பிடித்து வழிபாடு செய்தால் எதிரிகள் தொல்லை நீங்கும்.

வெள்ளெருக்கு பிள்ளையார் வழிபாட்டு பலன்
வெள்ளெருக்கில் பிள்ளையார் (வெள்ளெருக்கு பிள்ளையார்) பிடித்து வழிபாடு செய்தால் பில்லி, சூனியம் விலகி, வாழ்வில் வளமும் நலமும் சேரும்.

விபூதி பிள்ளையார் வழிபாட்டு பலன்
விபூதியில் பிள்ளையார் (விபூதி பிள்ளையார்) பிடித்து வழிபாடு செய்தால் நோய்கள் நீங்கும்.

சக்கரை பிள்ளையார் வழிபாட்டு பலன்
சக்கரையில் பிள்ளையார் (சக்கரை பிள்ளையார், சீனி பிள்ளையார்) பிடித்து வழிபாடு செய்தால் சக்கரை நோய் நீங்கும்.

பசுமாட்டு சாண பிள்ளையார் வழிபாட்டு பலன்
பசுமாட்டு சாணத்தில் பிள்ளையார் (பசுமாட்டு சாண பிள்ளையார்) பிடித்து வழிபாடு செய்தால் சகல தோஷங்களும் விலகி குடும்பம் ஒற்றுமையாக சந்தோஷமாக வாழ்க்கை அமையும். வியாபாரம் விருத்தியாகும்.

சந்தன பிள்ளையார் வழிபாட்டு பலன்
சந்தனத்தில் பிள்ளையார் (சந்தன பிள்ளையார்) பிடித்து வழிபாடு செய்தால் புத்திர பாக்கியம் உண்டாகும்.

வாழைப்பழ பிள்ளையார் வழிபாட்டு பலன்
வாழைப்பழத்தில் பிள்ளையார் (வாழைப்பழ பிள்ளையார்) பிடித்து வழிபாடு செய்தால் குடும்பம் விருத்தியாகும்.

வெண்ணை பிள்ளையார் வழிபாட்டு பலன்
வெண்ணையில் பிள்ளையார் (வெண்ணை பிள்ளையார் ) பிடித்து வழிபாடு செய்தால் வியாபாரத்தில் ஏற்படும் கடன் மற்றும் அனைத்து கடன்களும் நீங்கி வளம் பெருகும்