நவராத்திரி — புண்ணியம் தரும் கதை எளிமையான ஸ்லோகங்கள் & தமிழ் துதிகள்
அன்பார்ந்த ஆன்மீக நண்பர்களுக்கு என் இனிய வணக்கங்கள்.நவராத்திரியை மகிழ்ச்சியுடன் கொண்டாட என் வாழ்த்துக்கள். நவராத்தியைப் பற்றி நான் சொல்வதைவிட எனது குருவான மகாபெரியவா சொல்வது மிக சிறந்தது என நினைக்கிறேன்.அந்த
அடிப்படையில்தான் இந்த பதிவை போடுகிறேன்.
அடிப்படையில்தான் இந்த பதிவை போடுகிறேன்.
காஞ்சி மகாபெரியவர், ஒரு நவராத்திரி சமயத்தில் பக்தர்கள்முன்னிலையில் ஆற்றிய அருளுரை இதோ
உலகில் தீமை அழிந்து நன்மை பெருகிட நவராத்திரி கொண்டாடப்படுகிறது. ஆண்களுக்கு சிவராத்திரி போன்று, பெண்களுக்கு நவராத்திரி முக்கியம். குடும்பத்தில் மகிழ்ச்சிபெருகவும், தீர்க்க சுமங்கலியாய் வாழவும் சுமங்கலிகள் இந்த ஒன்பது நாட்களிலும் அம்பி கையை பூஜிக்க வேண்டும். முதல்மூன்று நாட்கள் துர்க்கையை வழிபட மனதில் தைரியம் வளரும். அடுத்த மூன்று நாட்கள் அம்பிகையை லட்சுமியாக வழிபட செல்வச் செழிப்பு உண்டாகும். அடுத்த மூன்றுநாட்கள் சரஸ்வதியாக, தேவியை பூஜிக்க கல்வி வளர்ச்சி மேம்படும். ஞானம் கைகூடும்.
தினமும் காலையில் சர்க்கரைப்பொங்கல், உளுந்தவடையும், மாலையில் சுண்டல், பால் பாயசமும் நைவேத்யம் செய்யவேண்டும். பத்தாவது நாள் விஜயதசமியாககொண்டாடவேண்டும். இந்நாட்களில் சவுந்தர்ய லஹரி, லட்சுமி, துர்கா அஷ்டோத்ரம், மகிஷாசுர மர்த்தினி ஸ்தோத்திரம், தேவி பாகவதம் போன்றவற்றை பாடலாம். நவராத்திரியின்போது சுமங்கலிகள் நூல் புடவை அணிவதுசிறப்பு.கன்னி பூஜை: முதல்நாள், ஒரு கன்னிக்கும்
(பெண் குழந்தை), ஒரு சுமங்கலிக்கும் பூஜை செய்ய வேண்டும். அந்த குழந்தைக்கு பாவாடை, சட்டை, மஞ்சள், குங்குமம்,வளையல், கண்ணாடி, சீப்பு, பூ
ஆகியவற்றை வழங்கி மகிழ்விக்க வேண்டும். இதே போல், இரண்டாம் நாள் இருகன்னிகளும், மூன்றாம் நாள் மூன்று கன்னிகளும் எனஒவ்வொரு நாளும் ஒரு குழந்தையை
அதிகப்படுத்தி,ஒன்பதாம் நாள் ஒன்பது கன்னிகளுக்கு பூஜை செய்யவேண்டும். சுமங்கலியைப் பொறுத்தவரை, தினமும் ஒருவரே போதுமானது.
கொலு விதிமுறை: நவராத்திரி பூஜை செய்பவர்கள் மனத்தூய்மை, ஒழுக்கத்துடன் இருப்பது அவசியம். அம்பிகை கொலு வீற்றிருக்கும் இடம் எப்போதும் தூய்மையோடும், கோலம் இட்டு அழகுடனும் இருப்பது மிக அவசியம். பூக்களால் அம்பிகையை தினமும் அலங்காரம் செய்யவேண்டும். கொலு
வைத்தவர்கள் துக்க நிகழ்ச்சிக்குப்போகக்கூடாது.
தேவி உபாசகர்களை வீட்டிற்கு அழைத்து மரியாதை செய்ய வேண்டும். நவராத்திரியின் போது, வீட்டில் சண்டை சச்சரவு செய்வதோ,
வீண் பொழுதுபோக்கு, கேளிக்கைகளில் ஈடுபடுவதோ
கூடாது.
காஞ்சிப்பெரியவரின்
இந்த அறிவுரைகளைப் பின்பற்றி நவராத்திரியைக் கொண்டாடுங்கள். வாழ்வில் எல்லா நன்மையும் பெற்றுமகிழ்வீர்கள்.
நவராத்திரி வழிபாட்டின் மகிமையை உணர்த்தும் கதை
காட்டில் இருந்த ஒரு குடிசையில், ஒரு பெண்ணின் மடியில்தலைவைத்து ஒருவர் படுத்துக் கிடந்தார்.கடும்நோயாளியான அவரும் அந்தப் பெண்ணும் கிழிசலானஆடைகளை அணிந்திருந்தார்கள். பெண்ணின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடி, அவள் புடைவையை நனைத்தது. அப்போது குடிசை வாயிலில் யாரோ அழைக்கும் ஓசை கேட்டு, கணவர் தலையை மெதுவாக கீழே வைத்துவிட்டு அந்தப் பெண் வாசலுக்குப் போனாள் அங்கே…
ஆங்கிரஸ முனிவர் நின்றுகொண்டிருந்தார். வந்த பெண்அவரை வணங்கி எழுந்தாள். ஆங்கிரஸர் அவளுக்கு ஆசிகூற“அம்மா! யார் நீ? உன்னைப் பார்த்தால் அரச குடும்பத்தைச்சேர்ந்தவளைப் போல் தெரிகிறது. அப்படி இருந்தால், ஏன்இந்தக் காட்டில் வந்து இருக்கிறாய்? உண்மையைச் சொல்.” எனக்கேட்டார்.
கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்ட
பெண் பதில் சொல்லத் தொடங்கினாள். “உத்தம ரிஷியே! நீங்கள்சொன்னது உண்மைதான். நான்
அரசியாக இருந்தவள். என்கணவர் உள்ளே நோய்வாய்ப்பட்டுக் கிடக்கிறார். தாயாதிகள் பொறாமை காரணமாகப்
போரிட்டு, எங்களை இங்கே விரட்டிவிட்டார்கள். எங்களுக்குப்
பழையபடியே ராஜ்ஜியம் கிடைக்க வேண்டும். நல்ல பிள்ளையும் பிறக்க வேண்டும். இதற்கு வழிகாட்டுங்கள்.” என வேண்டினாள்.

அவளின் சோகக் கதையைக் கேட்டு, ஆங்கிரஸ முனிவரே
கண்ணீர் சிந்தினார். “அம்மா! அரசியே! கவலைப்படாதே.எப்படிப்பட்ட துயரமாக இருந்தாலும் அதற்கு ஒரு முடிவுஉண்டு. வழியும் உண்டு. பக்கத்தில் தான் பஞ்சவடிஇருக்கிறது. அங்குபோய் அங்கே எழுந்தருளியிருக்கும்அம்பிகையைப் பூஜைசெய். உனக்கு ராஜ்ஜியமும் கிடைக்கும். புத்திரனும் பிறப்பான்.” என்றார்.

அவர் வார்த்தைகளை அப்படியே ஏற்ற அரசி,கணவருடன்
பஞ்சவடியை அடைந்தாள். ஆங்கிரஸ முனிவர் தானே
முன்னின்று அவர்களுக்கு நவராத்திரி பூஜையைச் செய்து
வைத்தார். முறைப்படி பூஜையைச் செய்த அரசியையும்
அரசனையும் அழைத்துக் கொண்டு திரும்பிய ஆங்கிரஸர்,
அவர்களைத் தன் ஆசிரமத்திலேயே தங்க வைத்தார். அரசர்நோயிலிருந்து மீண்டார். அம்பிகையின் அருளால், அரச
தம்பதிக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்து, சூரியப் பிரதாபன்
எனப்பெயர் வைத்தார்கள்.

அந்தக் குழந்தைக்கு ஆங்கிரஸ முனிவரே அனைத்துக்கலைகளையும் கற்றுத் தந்தார். முனிவர் சொல்லிக்கொடுத்த
அனைத்தையும் முழுமூச்சுடன் கற்றுத் தேர்ச்சி பெற்ற சூரியப் பிரதாபன் இளமையின் வாசலைத்தொட்டான்.
அனைத்தையும் முழுமூச்சுடன் கற்றுத் தேர்ச்சி பெற்ற சூரியப் பிரதாபன் இளமையின் வாசலைத்தொட்டான்.
பிறகென்ன? வாலிபன் ஆன பிறகு பெற்றோரின் வாட்டத்தைத் தீர்க்க முயல வேண்டாமா? சூரியப் பிரதாபன்ஆங்கிரஸ முனிவரை வணங்கி, அன்னை-தந்தையின் அனுமதிபெற்று, பகைவர்கள் மீது உரிமைப்போர் தொடுத்தான்.
பகைவர்கள் தோற்று ஓடினார்கள். சூரியப்பிரதாபன் ஆசிரமம் திரும்பி ஆங்கிரஸ முனிவரை வணங்கி நடந்ததை விவரித்து மகிழ்ந்தான். பெற்றோருடன் நாடு திரும்பி அரியணைஏறினான்.
துயரப் புயலிலேயே சிக்கித் தவித்த அரசியும் அரசனும்
ஆனந்தக் கடலில் மூழ்கினார்கள். வேண்டுதல் நிறைவேறிவிட்டதே என்பதற்காக அரசியும் அரசனும் தாங்கள் செய்துவந்த நவராத்திரி பூஜையை நிறுத்தவில்லை. தொடர்ந்துசெய்து, அம்பிகையின் திருவடிகளிலே ஐக்கியமானார்கள். நலமெல்லாம் அருளும் நவராத்திரி நாயகி நம்மையும் காக்க
வேண்டுவோம்.

நவராத்திரி தோன்றிய கதை
ஒரு முறை தேவர்களுக்கு பெரிய அளவில் துன்பங்கள்கொடுத்து வந்த மகிஷாசுரன் என்ற அரக்கனை கொல்லசக்திவாய்ந்த தெய்வத்தை உருவாக்க சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெரும் தேவர்களும் முடிவு செய்தனர். மூன்று கடவுள்களின் வாயில் இருந்தும் வெளிப்பட்டது ஒருஅற்புதமான பெண் உருவம். அதற்கு 10 கைகள்,ஆக்ரோஷமான முகம் கொண்டதாக இருந்தது. அந்த பெண்தெய்வம்தான் துர்க்கை. சிவபெருமானின் துணைவிபார்வதிதேவியின் ஒரு வடிவம். அந்த துர்க்கையிடம்அனைத்து கடவுளர்களும் தங்களின் விருப்பமானஆயுதங்களையும், கவசங்களையும் அளித்தனர்.
துர்க்காதேவி உலகையே அச்சுறுத்தி வந்த மகிஷாசுரனைவீழ்த்தியதுதான் நவராத்திரி மற்றும் விஜயதசமி பண்டிகை. மைசூர் சாமுண்டீஸ்வரி மலையில் மகிஷாசுரனை துர்க்கைஅழிப்பதுபோன்ற பண்டையகால சிற்பம் இன்றும்காணப்படுகிறது. துர்காதேவி, லட்சுமி, சரஸ்வதி எனவெவ்வேறு வடிவங்களில் போற்றப்பட்டு பக்தர்களால்வணங்கப்படுகிறார். மகாபாரதத்தில் 12 ஆண்டுகள் காட்டில்திரிந்த பாண்டவர்கள் மாறுவேடத்தில் ஒரு ஆண்டை கழிக்கதங்கள் ஆயுதங்களை படையலிட்டு தங்களின்அடையாளத்தை அறிவித்தனர். அந்த நாள்தான் விஜயதசமி.
=====================================================
கொலு அமைக்கும் முறையும் நன்மையும்
நவராத்திரி என்றால் கொலுதான் முக்கிய அம்சம் பெறுகிறது. கொலு வைப்பதற்கு சாமி பொம்மைகள் அவசியம் தேவை. குறிப்பாக பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகியோ ரின்பொம்மைகள் கண்டிப்பாக இருக்க வேண்டும். முழுமுதற்கடவுளான விநாயகர் பொம்மை இடம் பெறுவதும் சிறப்பு.
அது மட்டுமின்றி பல்வேறு பொம்மைகளையும் கொலுவில்வைத்து அழகு படுத்தலாம். கடந்த வருடம் வாங்கிய
பொம்மைகள் இதற்கு பயன்படுத்தலாம். மேலும் புதிய
பொம்மைகளை வாங்கி வைக்கலாம். சிலர் ஆண்டுக்கு ஒருபுது பொம்மையை வாங்கி வைப்பார்கள். வீட்டில்வைக்கப்படும் கொலு பல்வேறு அடுக்குகளாக இருக்கும்.
பொம்மைகள் இதற்கு பயன்படுத்தலாம். மேலும் புதிய
பொம்மைகளை வாங்கி வைக்கலாம். சிலர் ஆண்டுக்கு ஒருபுது பொம்மையை வாங்கி வைப்பார்கள். வீட்டில்வைக்கப்படும் கொலு பல்வேறு அடுக்குகளாக இருக்கும்.
ஒற்றைப்படை எண்ணில் அந்த கொலு படி அமைக்கவேண்டும். சிலர் ஆண்டுக்கு 2 படி வீதம் கூட்டிக்கொண்டே போவார்கள் . கொலுவில் வைக்க பல்வேறு அம்சத்தை விளக்கும் வகையில் பொம்மைககள் வைப்பார்கள்.விவசாயத்தின் வளர்ச்சியே நாட்டின் முன்னேற்றம். எனவே சிலர் வயல் வெளிகள் போன்ற பொம்மைகள் அமைத்து விவசாயிகளுக்கு நன்றி செலுத்துவார்கள்.
கொலு வைப்பவர்கள் அதற்கான ஏற்பாடுகளை இன்றே செய்ய வேண்டும். குறிப்பாக கொலு வைக்கும் அறையை வெள்ளை அடித்து தூய்மையாக்க வேண்டும். நல்ல நேரம் பார்த்து கொலு அமைக்க வேண்டும். அல்லது சூரியஅஸ்தமனம் ஆன பின் இரவில் கொலு வைக்கலாம்.
கொலு வைக்கும் முன்னர் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வழிபட்டு வருவது சிறப்பு. நவராத்திரி கொண்டாடும்
நாட்களில் இரவில் பூஜை நடத்த வேண்டும். அப்போது
சுமங்கலி பெண்களை அழைத்து அவர்களுக்கு வெற்றிலை, பாக்கு, பழம், குங்குமம் கொடுத்து அனுப்ப வேண்டும்.
நாட்களில் இரவில் பூஜை நடத்த வேண்டும். அப்போது
சுமங்கலி பெண்களை அழைத்து அவர்களுக்கு வெற்றிலை, பாக்கு, பழம், குங்குமம் கொடுத்து அனுப்ப வேண்டும்.
வசதி படைத்தவர்கள் பரிசு பொருளும் கொடுக்கலாம். பரிசுபொருளில் குங்கும சிமிழ் இடம் பெறுவது நல்லது. கடைசிநாள் ஆயுத பூஜை அன்று பூஜையை சிறப்பாக நடத்தலாம்.
மறுநாள் விஜயதசமி. கொலு வைப்பவர்கள் அதையும்கொண்டாட வேண்டும்.
மறுநாள் விஜயதசமி. கொலு வைப்பவர்கள் அதையும்கொண்டாட வேண்டும்.
அதன் பின்தான் கொலுவை கலைக்க வேண்டும். விஜயதசமிஅன்று நாம் முக்கிய முடிவுகளை எடுக்கலாம். மேலும் புதியதொழில் ஆரம்பிக்கலாம். குழந்தைகளை பள்ளியில்சேர்க்கலாம். புதிய கலை பயில்வோர், இந்த நாளில்தொடங்கலாம். வீட்டில் கொலு வைப்பதால்முப்பெருந்தேவியரின் அருள் கிடைக்கும்.
குறிப்பாக செல்வம், அறிவு, தைரியம் போன்றவை வந்துசேரும். திருமணமான பெண்கள் இந்த பூஜையைநடத்தினால்
மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். குடும்பம்சிறப்படையும். திருமணமாகாத பெண்கள் இந்த பூஜையை
நடத்தினால் அவர்களுக்கு விரைவில் திருமணம்கை
கூடுவதோடு நல்ல வரனாகவும் கிடைக்கும்.
மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். குடும்பம்சிறப்படையும். திருமணமாகாத பெண்கள் இந்த பூஜையை
நடத்தினால் அவர்களுக்கு விரைவில் திருமணம்கை
கூடுவதோடு நல்ல வரனாகவும் கிடைக்கும்.
தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் எளிமையான நவராத்திரி
ஸ்லோகங்கள்
ஸ்லோகங்கள்
நவராத்திரி நேரத்தில் அஷ்டோத்திரம், சகஸ்ரநாமம் எனச்சொல்ல நேரமில்லாதவர்கள் இந்த சிறிய நாமாவளிகளைச்சொல்லலாம். மூன்று தேவியருக்கும் தனித்தனியாக உள்ளஇந்த பதினெட்டு நாமாவளிகளும் மிகுந்த சக்தி வாய்ந்தவை.
துர்க்கா தேவி
ஓம் துர்க்காயை நம
ஓம் மகா காள்யை நம
ஓம் மங்களாயை நம
ஓம் அம்பிகாயை நம
ஓம் ஈஸ்வர்யை நம
ஓம் சிவாயை நம
ஓம் க்ஷமாயை நம
ஓம் கௌமார்யை நம
ஓம் உமாயை நம
ஓம் மகாகௌர்யை நம
ஓம் வைஷ்ணவ்யை நம
ஓம் தயாயை நம
ஓம் ஸ்கந்த மாத்ரே நம
ஓம் ஜகன் மாத்ரே நம
ஓம் மகிஷ மர்தின்யை நம
ஓம் சிம்ஹ வாஹின்யை நம
ஓம் மாகேஸ்வர்யை நம
ஓம் திரிபுவனேஸ்வர்யை நம
ஓம் மகா காள்யை நம
ஓம் மங்களாயை நம
ஓம் அம்பிகாயை நம
ஓம் ஈஸ்வர்யை நம
ஓம் சிவாயை நம
ஓம் க்ஷமாயை நம
ஓம் கௌமார்யை நம
ஓம் உமாயை நம
ஓம் மகாகௌர்யை நம
ஓம் வைஷ்ணவ்யை நம
ஓம் தயாயை நம
ஓம் ஸ்கந்த மாத்ரே நம
ஓம் ஜகன் மாத்ரே நம
ஓம் மகிஷ மர்தின்யை நம
ஓம் சிம்ஹ வாஹின்யை நம
ஓம் மாகேஸ்வர்யை நம
ஓம் திரிபுவனேஸ்வர்யை நம
லெட்சுமி ஸ்ரீதேவி
ஓம் மகாலக்ஷ?ம்யை நம
ஓம் வரலெக்ஷ?ம்யை நம
ஓம் இந்த்ராயை நம
ஓம் சந்த்ரவதனாயை நம
ஓம் சுந்தர்யை நம
ஓம் சுபாயை நம
ஓம் ரமாயை நம
ஓம் ப்ரபாயை நம
ஓம் பத்மாயை நம
ஓம் பத்மப்ரியாயை நம
ஓம் பத்மநாபப் ப்ரியாயை நம
ஓம் சர்வ மங்களாயை நம
ஓம் பீதாம்பரதாரிண்யை நம
ஓம் அம்ருதாயை நம
ஓம் ஹரிண்யை நம
ஓம் ஹேமமாலின்யை நம
ஓம் சுபப்ரதாயை நம
ஓம் நாராயணப் பிரியாயை நம
ஓம் வரலெக்ஷ?ம்யை நம
ஓம் இந்த்ராயை நம
ஓம் சந்த்ரவதனாயை நம
ஓம் சுந்தர்யை நம
ஓம் சுபாயை நம
ஓம் ரமாயை நம
ஓம் ப்ரபாயை நம
ஓம் பத்மாயை நம
ஓம் பத்மப்ரியாயை நம
ஓம் பத்மநாபப் ப்ரியாயை நம
ஓம் சர்வ மங்களாயை நம
ஓம் பீதாம்பரதாரிண்யை நம
ஓம் அம்ருதாயை நம
ஓம் ஹரிண்யை நம
ஓம் ஹேமமாலின்யை நம
ஓம் சுபப்ரதாயை நம
ஓம் நாராயணப் பிரியாயை நம
சரஸ்வதி தேவி
ஓம் சரஸ்வத்யை நம
ஓம் சாவித்ர்யை நம
ஓம் சாஸ்த்ர ரூபிண்யை நம
ஓம் ஸ்வேதா நநாயை நம
ஓம் ஸுரவந்திதாயை நம
ஓம் வரப்ரதாயை நம
ஓம் வாக்தேவ்யை நம
ஓம் விமலாயை நம
ஓம் வித்யாயை நம
ஓம் ஹம்ஸ வாகனாயை நம
ஓம் மகா பலாயை நம
ஓம் புஸ்தகப்ருதே நம
ஓம் பாஷா ரூபிண்யை நம
ஓம் அக்ஷர ரூபிண்யை நம
ஓம் கலாதராயை நம
ஓம் சித்ரகந்தாயை நம
ஓம் பாரத்யை நம
ஓம் ஞானமுத்ராயை நம
ஓம் சாவித்ர்யை நம
ஓம் சாஸ்த்ர ரூபிண்யை நம
ஓம் ஸ்வேதா நநாயை நம
ஓம் ஸுரவந்திதாயை நம
ஓம் வரப்ரதாயை நம
ஓம் வாக்தேவ்யை நம
ஓம் விமலாயை நம
ஓம் வித்யாயை நம
ஓம் ஹம்ஸ வாகனாயை நம
ஓம் மகா பலாயை நம
ஓம் புஸ்தகப்ருதே நம
ஓம் பாஷா ரூபிண்யை நம
ஓம் அக்ஷர ரூபிண்யை நம
ஓம் கலாதராயை நம
ஓம் சித்ரகந்தாயை நம
ஓம் பாரத்யை நம
ஓம் ஞானமுத்ராயை நம
தமிழில்
அம்பாள்
காஞ்சி காமாட்சி மதுரை மீனாட்சி
காசி விசாலாட்சி கருணாம்பிகையே!தருணம் இதுவே தயை புரிவாயம்மா!பொன் பொருள் எல்லாம்
வழங்கி எம்மை வாழ்த்திடுவாயம்மா!ஏன் என்று கேட்டு என் பசி தீர்ப்பாய்
என் அன்னை நீயே அம்மா!மங்களம் வழங்கிடும் மகாசக்தியே!மங்கலத் தாயே நீ வருவாயே!என்னுயிர் தேவியே! எங்கும் நிறைந்தவளே!எங்கள் குலவிளக்கே! நீ வருவாயே!பயிர்களில் உள்ள பசுமையில்
கண்டேன் பரமேஸ்வரி உனையே!சரண் உனை அடைந்தேன்
சங்கரி தாயே, சக்தி தேவி நீயே!அரண் எனக் காப்பாய்
அருகினில் வருவாய் அகிலாண்டேஸ்வரியே!

லட்சுமி
செல்வத் திருமகளே! மோகனவல்லியே!எல்லாரும் கொண்டாடும் வேதவல்லியே!எண் கரங்களில் சங்கு சக்கரம்
வில்லும் அம்பும் தாமரை
மின்னும் கரங்களில் நிறைகுடம்
தளிர்த் தாம்பூலம் அணி சியாமளையே!வரத முத்திரை காட்டியே
பொருள் வழங்கும் அன்னையே!சிரத்தினில் மணி மகுடம்
தாங்கிடும் சிந்தாமணியே!பல வரம் வழங்கிடும் ரமாமணியே!வரதராஜ சிகாமணியே!தாயே! தனலட்சுமியே!சகல வளமும் தந்திடுவாய்

சரஸ்வதி
கலைவாணி நின் கருணை தேன்மழையே
விளையாடும் என் நாவில் செந்தமிழே
அலங்கார தேவதையே வனிதாமணி
இசைக்கலை யாவும் தந்தருள்வாய் கலைமாமணி!மரகத வளைக்கரங்கள் மாணிக்க வீணை தாங்கும்
அருள் ஞானக்கரம் ஒன்றில் ஜெபமாலை விளங்கும்
ஸ்ருதியோடு லயபாவ ஸ்வரராக ஞானம்
சரஸ்வதி மாதா உன் வீணையில் எழும் நாதம்!வீணையில் எழும் நாதம் தேவி உன் சுப்ரபாதம்
வேணுவில் வரும் நாதம் வாணி உன் சக்ரபாதம்
வானகம் வையகம் உன் புகழ் பாடும்

வேண்டினேன் உனைப் பாட தருவாய் சங்கீதம்
நவராத்திரி கொலு கொண்டாடுபவர்கள் வீட்டில் அவரவர் வழக்கப்படி சிறப்பாக கொண்டாடலாம்.துர்கா,லட்சுமி,சரஸ்வதி மூன்று முப்பெரும் தேவியாரை இந்த 9நாள்கள் கொண்டாடி எல்லா அருளும் கிடைக்க வேண்டுவோம்.கொலு வைப்பவர்கள் விஜய தசமியையும் சேர்த்து 10 நாட்களும் கொண்டாடி மகிழ்வர்.நம் சொந்த பந்தங்கள்,நண்பர்களை வீடடிற்கு அழைத்து தாம்பூலம் கொடுப்பது சிறப்பு. உங்களுக்கு தெரிந்த ஆன்பீக விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
உங்கள் அன்பு தோழி
ஈஸ்வரி சரவணன்