வியாழன், 9 ஆகஸ்ட், 2018

திருச்செந்தூரில் உள்ள 24 தீர்த்த வழிபாடு முறைகள்

தொடர்புடைய படம்

திருச்செந்தூரில் உள்ள 24 தீர்த்த வழிபாடு முறைகள்




திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலையொட்டி பக்தர்கள் குறை தீர்க்கும் 24 தீர்த்தங்கள் உள்ளன. காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துக்களும் இங்கு தீர்த்தமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதில் தற்போது கந்த புஷ்கரணி தீர்த்தம் எனப்படும் நாழி கிணற்றில் மட்டுமே பக்தர்கள் நீராடி வருகிறார்கள். கடற்கரையில் அமைந்துள்ள சில தீர்த்த கிணறுகள் மணல் மூடி தூர்ந்து விட்டன. திருச்செந்தூரில் உள்ள 24 தீர்த்தங்கள் பெயர் விவரம் வருமாறு:-:

1. முகாரம்ப தீர்த்தம் – இதில் மூழ்குவோர் கந்தக் கடவுளின் கருணை அமுதத்தைப்பருகுவர்.

2. தெய்வானை தீர்த்தம் – இந்த தீர்த்தத்தில் மூழ்குவோர் ஆடை அணிகலன், போஜனம், தாம்பூலம், பரிமளம், பட்டு, பூ அமளி என்கின்ற இன்பத்தைப் பெறுவர்.

3. வள்ளி தீர்த்தம் – இந்தத் தீர்த்தம் ஒருமையுள்ளத்துடன் பிரணவ சொரூபமாய் பிரகாசிக்கின்ற கந்தப்பெருமானின் திருவடித்தாமரையைத் தியானிக்கும் ஞானத்தைக் கொடுக்கும்.

4. லட்சுமி தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர் வட திசைக்கு அதிபரான குபேரனும் அடைவதற்குரிய செல்வங்களைப் பெறுவர்.

5. சித்தர் தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோருக்கு காமம், வெகுளி, மயக்கம் என்னும் முக்குற்றங்களும் நீங்கி முக்திக்குத் தடையாகிய உடல், உலக பகைகளை விலக்கி முக்தி வழியை நாடச் செய்யும்.

6. திக்கு பாலகர் தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர் கங்கை, யமுனை, காவிரி முதலிய தீர்த்தங்களை கொடுக்கும் பலனைப் பெறுவர்.

7. காயத்ரீ தீர்த்தம் – இந்தத் தீர்தத்தத்தில் மூழ்குவோர் அநேக வேள்விகளைச் செய்தவர் அடைகின்ற பலன்களைப் பெறுவர்.

8. சாவித்ரி தீர்த்தம் – இந்தந் தீர்த்தத்தில் மூழ்குவோர்க்குப் பிரமாதி தேவர்களாலும் காண்பதற்கு அரிய உமாதேவியின் பொன்னடிகளைப் பூஜித்த பலனைப் கொடுக்கும்.

9. சரஸ்வதி தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர்க்கு சகர ஆகம புராண இதிகாசங்களை அறியத் தகுந்த அறிவைக் கொடுக்கும்.

10. அயிராவத தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர் சந்திர பதாகை, பன்னாவை முதலிய நதிகளில் நீராடியோர் பலனைப் பெறுவர்.

11. வயிரவ தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் நீராடியோர் சரஸ்வதி, சோனை முதலிய நதிகளில் மூழ்கியவர் அடையும் பலனை அடைவர்.

12. துர்க்கை தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர் இம்மையிலே அடையும் துன்பத்தைப் போக்கி நன்மையைப் பெறுவர்.

13. ஞானதீர்த்தம் – இந்தத் தீர்த்தம் இறைவனைப் பரவுவோருக்கும் பரவுவதற்கு நினைத்தோர்க்கும் நன்மையைக் கொடுத்தருளும்.

14. சத்திய தீர்த்தம் – இந்தத் தீர்த்தமானது களவு, கள்ளுண்டல், கொலை, பொய், என்கின்ற ஐந்துடன், அகங்காரம், உலோபம், காமம், பகை, போஜனப் பிரியம், சாய்தல், சோம்பல், முதலான ஏழு துன்பங்களையும் போக்கும். இன்னும், தூலம், சூக்குமம், அதி சூக்குமம் என்று சொல்கின்ற பாதகம், அதிபாகம், மகா பாதகம் ஆகிய மூன்றினின்றும் நீக்கித்தனது சித்தத்தை நன்னெறியில் நிற்கச் செய்யும்.

15. தரும தீர்த்தம் – இந்தத் தீர்த்தமானதுது தீவினையாகிய வேரைக்களைந்து தேவாமிர்தமாகிய மங்கள கரத்தைக் கொடுத்தருளும் வல்லமை படைத்தது.

16. முனிவர் தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர் ஜகத்ரட்சகனைக்கண்ட பலனைப் பெறுவர்.

17. தேவர் தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோருக்கு காமம், குரோதம் லோபம் மோகம் மாச்சரியம் என்னும் ஆறு குற்றங்களை நீக்கி ஞான அமுதத்தை நல்கும்.

18. பாவநாச தீர்த்தம் – இத்தீர்த்தம் குற்றமில்லாத முனிவர்களால் சபிக்கப்பட்ட சாபங்களை விலக்கி அனைத்துப் புண்ணியார்த் தங்களையும் அளிக்கவல்லது.

19. கந்தப்புட்கரணி தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர் சந்திரசேகர சடாதரனுடைய திருவடியை முடிமிசைச் சூடும் மேன்மையைப் பெறுவர்.

20. கங்கா தீர்த்தம் – இத்தீர்த்தம் முக்திக்கு ஏதுவாய் பெருமானைத் தரிசித்துப் போற்றுவார் ஜெனனமாகிய பிறவிக் கடலைக் கடக்கும் தெப்பம் போன்றிருக்கும்.

21. சேது தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர்க்குச் சகல பாதகத்தினின்றும் நீக்கி நன்மையைக் கொடுத்தருளவல்லது.

22. கந்தமாதன தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர்க்குப் பாவங்களைப் போக்கி பரிசுத்தத்தைத் தர வல்லது.

23. மாதுரு தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர்க்கு அன்னையைப் போன்று ஆசீர்வதித்து அதிலும் பன்மடங்கு அதிகமாக பலனைக் கொடுக்கும்.

24. தென் புலத்தார் தீர்த்தம் – இதில் ஒரு தரம் மூழ்கி எள்ளுத் தண்ணீரும் இறத்தவர்களுக்கு இம்மை மறுமையும் சிறந்து விளங்க செந்திலாண்டவன் திருவருட்கரந்து வாழும் பதத்தைத் கொடுத்தருளுவார்.

கோவிலுக்குத் தெற்கே 200 கெஜ தூரத்தில் நாழிக் கிணறு உள்ளது. பெரிய கிணற்றுக்குள்ளே இது ஒரு சிறு கிணறு, ஒரு சதுர அடி பரப்பும் ஏழு அடி ஆழமும் உள்ள இந்தத் தீர்த்தம் உவர்ப்பு அற்ற நன்னீராகக் காட்சி தருகின்றது. இதற்குத் கந்தபுஷ்கரணி என்றும் பெயர் வழங்குகிறது. இந்தக் கந்தபுஷ்கரணியில் முழுகுவோர் சகல நலன்களையும் பெறுவார்கள்

அரவானின் கதை

அரவானின் கதை 

god aravaan க்கான பட முடிவு
அர்ச்சுனனுக்கும்– உலுபியான நாகக் கன்னிக்கும் பிறந்தவன்தான் அரவான். பிறப்பிலேயே 32 லட்சணங்கள் கொண்டவன். எதிர் ரோமம் உடையவன். பாரதப் போரில் வெல்வது எப்படி? என்று யோசித்த துரியோதனன், ஜோதிடத்தில் வல்லவனான சகாதேவனிடம் ஆலோசனை கேட்டான். 

‘அரவானைப் பலியிட்டால் போரில் வெற்றி பெறலாம்’ என்று சகாதேவன் சகாயம் கூறினான். துரியோதனன் அரவானிடம் சென்றான். தனது பெரிய தந்தையை வரவேற்றான் அரவான். சகுனியின் ஆலோசனைப்படி வந்திருந்த துரியோதனன், ‘நாங்கள் போரில் வெற்றிபெற வருகின்ற அமாவாசை அன்று நீ எங்களுக்கு நரபலியாகி உதவ வேண்டும்’ என்று அரவானிடம் கேட்டான். 

அதற்கு அரவானும் சரியென்று ஒப்புக்கொண்டான். மேலும் ஒரு நிபந்தனையும் விதித்தான். அதாவது, ‘அமாவாசை வரை என் மேனி பின்னமாகாமல் இருந்தால், கண்டிப்பாக வருகிறேன்’ என்று உறுதி கூற மகிழ்வோடு திரும்பினான் துரியோதனன். அரவான், துரியோதனனுக்கு வாக்கு கொடுத்துவிட்டதை கண்ணன் அறிந்து கொண்டார். 

எனவே அமாவாசைக்கு முன்தினமாகிய சதுர்த்தசி அன்றே, அமாவாசை வரட்டும் என்று கண்ணன் கூற, அவ்வாறே அமாவாசை ஏற்பட்டது. இதற்கிடையில் அரவான் தங்களுக்காக நரபலி ஆக வேண்டும் என்று பாண்டவர்கள் வந்து கேட்டனர். ‘துரியோதனன் வந்து கேட்டதால், அவருக்காக நரபலியாக சம்மதம் கூறினேன். 

ஆனால் அமாவாசை வந்த பின்பும் அவர்களைக் காணவில்லை. எனவே உங்களுக்காக நரபலியாக சம்மதிக்கிறேன்’ என்று கூறினான் அரவான். மேலும் கண்ணனிடம் ஒரு வரத்தையும் கேட்டான் அரவான். அதாவது, ‘என்னைப் பலியிட்டாலும் என் தலைக்கு உயிர் இருக்க வேண்டும். 

அத்துடன் சாகும் முன்பாக ஒரு பெண்ணை, நான் திருமணம் முடிக்க வேண்டும்’ என்றான். கண்ணனும், ‘அப்படியே ஆகட்டும்’ என்றார். இதையடுத்து நடந்த போர்க்களத்தில் அரவான் பலியானான். அவனது உடல் மட்டும் அழிய, தலை உயிர் பெற்றது. பாரதப் போரில் பாண்டவர்கள் வென்றார்கள். இதனால் அரவானின் தலை மட்டும் திரவுபதி ஆலயங்களில் தவறாமல் இருக்கும். 

புதன், 8 ஆகஸ்ட், 2018

நெய் தீபம் ஏற்றுவதால் உண்டாகும் பலன்கள்

நெய் தீபம் ஏற்றுவதால் உண்டாகும் பலன்கள் இதோ!

நெய் தீபம் ஏற்றுவதால் உண்டாகும் பலன்கள் 

இறைவனின் அருளை விரைவாக பெறுவதற்கு உதவுவது நாம் ஏற்றும் தீபங்கள்தான். அதுவும் திருக்கோவில்களில் தீபம் ஏற்றுவது மிகச்சக்தி வாய்ந்த பரிகாரம் ஆகும்.
அதிகாலை,நண்பகல் ,அந்தி பொழுதில் திருக்கோவில்களில் நெய் தீபம் ஏற்றுவது அதிக பலனை கொடுக்கும்.
இதில் பல சூட்சும ரகசியங்கள் அடங்கி உள்ளன. கோவில்களில் இந்த மூன்று வேளைகளில் ஏற்றப்படும் தீபம் உடனுக்குடன் துன்ப நிவர்த்தியை தரும்.
மிகக் கடுமையான பிரச்சனைகளுக்கு நல்ல சுத்தமான நெய்யை,இறைவனின் கருவறையில் சுடர்விட்டு பிராகசிக்கும் தூங்கா விளக்கில் ஊற்றி வந்தால் போதும்.
இவ்வாறு நெய் தீபம் ஏற்றுவது உடலில் இருந்து பிரிய போகும் ஒரு ஜீவனின் நேரத்தையே தள்ளிப் போடும் அளவிற்கு சக்தி வாய்ந்தது ஆகும்.
பல ஆயிரம் செலவு செய்து பரிகாரங்கள் பண்ணுவதை விட,திருக்கோவில்களில் ஒரு நெய் தீபம் ஏற்றுவது பலமடங்கு சிறந்தது.
லக்ஷ்மிக்கு உகந்தது நெய் தீபம்.நெய் தீபம் ஏற்றி வீட்டில் வழிபட்டால் லட்சுமி நம் இல்லம் தேடி விரைவில் வருவாள்.
குலதெய்வம் நம் வீட்டிற்குவர சுத்தமான நெய் மற்றும் விளக்கெண்ணை கலந்து தீபம் ஏற்றி வழிபட வேண்டும் என சாஸ்திரங்கள் கூறுகின்றது.
.
நெய் தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்
குடும்பத்தில் தாங்க முடியாத கஷ்டங்கள் ஏற்படும் போதும் உடனடியாக அருகிலுள்ள ஆலயங்களில் நெய் தீபம் ஏற்றி வைப்பது அந்த விநாடியே கஷ்டங்கள் குறைவதற்கு மகரிஷிகள் கூறிய ரகசிய பரிகாரமாகும்.
நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் சகலவித சந்தோஷம் இல்லத்தில் நிலைத்து இருக்கும்.கிரகதோஷங்கள் விலகி சுகம் பெறலாம்.வருமானம் அதிகரிக்கும்.
சக்கரத்தாழ்வார் சன்னதியில் நெய் தீபம் ஏற்றி தினமும் 12 முறை சுற்றி 48 நாட்கள் வழிபட தொழில்,வழக்கு சாதகமாகும்.21 செவ்வாய்க்கிழமை நெய்தீபம் ஏற்றிவர பில்லி சூன்யம் விலகும்.
இரண்டு சர்ப்பங்கள் இணைந்தது போல உள்ள நாகராஜ சிலைக்கு வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி முதல் 12.00 மணிக்கு ராகு காலத்தில் அபிசேகம் செய்து மஞ்சள் குங்குமம் வைத்து செவ்வரளி பூக்கள் சாற்றி நெய்தீபம் ஏற்றி தம்பதியினர் பெயருக்கு அர்ச்சனை செய்தால் தம்பதியினர் ஒற்றுமையுடன் அன்னியோன்யமாக வாழ்வார்கள்.
பித்ரு தோசம் உள்ளவர்கள் தொடர்ந்து அமாவாசைக்காலங்களில் நெய்தீபம் ஏற்றி பெருமாளை சேவிக்க பித்ரு தோசம் விலகும்.
வெள்ளிக்கிழமை நவக்கிரக சுக்கிரனுக்கு அகல் விளக்கில் கற்கண்டு போட்டு நெய்தீபம் எற்றி வழிபட கணவன் மனைவி கருத்துவேறுபாடு நீங்கும்.
வியாழக்கிழமைகளில் ஒரு வேளை உபவாசமும் மாலையில் திருக்கோவிலிலுள்ள தட்சணாமூர்த்திக்கு நெய் தீபமும் தொடர்ந்து ஏற்றிவர விரதம் ஏற்ற 192 நாட்களில் கருத்தரிப்பு ஏற்படும்.
மாதவிடாய் சமயத்தில் இந்த விரதத்தை அனுஷ்டிக்காமல் வேறு யார் மூலமாவது நெய் தீபம் ஏற்றி வர வேண்டும். நம்பிக்கை அவசியம்.
திங்கள் கிழமை காலை 6.00 மணிக்குமேல் 7.00 மணிக்குள் நந்திக்கு ஜோடி அகல் விளக்கில் நெய் தீபம் ஏற்றி வர குடும்பத்தில் அமைதி பிறக்கும்.
நெய் தீபம் ஏற்றும் போது நினைத்தது கைகூடும்.செல்வவிருத்தி உண்டாகும்.கோவில்களில் துர்க்கைக்கு ஏற்றும் தீபமானது நம்மை பார்த்து இருக்க வேண்டும்.
பொதுவாக தீபம் வடக்கு திசை நோக்கி இருப்பது நல்ல பலனைத் தரும்.வடக்கு திசை நோக்கி தீபம் ஏற்றுவதால் செல்வமும்,மங்களமும் வீட்டில் பெருகும்.
திருமகள் ,முருகனுக்கு நெய் தீபம் ஏற்ற வேண்டும்.








வீடு தேடிவரும் மகாலட்சுமி


வீடு தேடிவரும் மகாலட்சுமி

வீடு தேடிவரும் மகாலட்சுமி

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2018

தேவி சக்திக்கு அபிஷேகமும் அதன் பலன்களும்!

பார்வதி தேவி க்கான பட முடிவுதேவி சக்திக்கு அபிஷேகமும் அதன் பலன்களும்!

1. வில்வ இலைகளால் தேவியைப் பூஜிப்பவர்கள் இம்மையிலும் மறுமையிலும் சந்தோஷமாக இருப்பார்கள்.
2. கற்பூரம், கஸ்தூரி, அகில், குங்குமப்பூ ஆகியவற்றுடன் சந்தனம் கலந்து சக்திக்கு அபிஷேகம் செய்தால், பல பிறவிகளில் செய்த பாவம் தொலையும்.
3. ஸ்ரீலட்சுமிதேவிக்கும், ஸ்ரீசரஸ்வதி தேவிக்கும் மாம்பழச் சாறு கொண்டு அபிஷேகம் செய்தால், நித்தியத்துவம் கிடைக்கும்; அழியா புகழ் பெறலாம் என்கின்றன ஞானநூல்கள்.
4. ரத்தின ஆபரணங்களைச் சமர்ப்பித்து தேவியை ஆராதிப்பவன் குபேரன் ஆவான். பூக்களால் தேவியை பூஜிப்பவருக்கு கயிலாய வாசம் கிடைக்கும்.

தேவி சக்திக்கு அபிஷேகமும் அதன் பலன்களும்!
நினைத்தது நிறைவேறும்...!
அம்பாளுக்கு ரோஜா மாலை சமர்ப்பித்து வழிபடுவதால், நினைத்தகாரியம் உடனே நிறைவேறும்.
அதேபோல், அம்மனுக்கு வேப்பிலை மாலை அணிவித்து வழிபட்டால், நீண்டநாள் குணம் ஆகாமல் வாட்டும் பிணிகள், வெகுசீக்கிரம் அகலும்.
சகல செல்வங்களும் ஸித்திக்கும்...!
சிவாலயத்தில் ஏழு வகை தானங்கள் செய்வது சிறப்பு.
அதாவது
1. எலுமிச்சை,
2. வெல்லம்,
3. அவல்,
4. மாதுளை,
5. நெல்,
6. தேங்காய்,
7. பசும்பால்..
இந்த ஏழு வகைப் பொருட்களை, சிவாலயத்தில் தானம் அளிப்பதால் சகல செல்வங்களும் கிடைக்கும்.
கல்வி கலைகளில் சிறக்க...!
குழந்தைகள் நன்றாகப் படிக்க, பெருமாள் கோயில்களில் அஸ்த நட்சத்திரத்தன்று துளசி மாலை சாற்றி வழிபடவேண்டும்.
அதேபோன்று, சரஸ்வதிதேவிக்கு புனர்பூச நட்சத்திர நாளில் அர்ச்சனை ஆராதனை செய்வதாலும் கல்வியில் சிறந்து விளங்கலாம்.
சர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த ஸாதகே சரண்யே த்ரயம்பிகே தேவி நாராயணி
நமோஸ்துதே.

பார்வதி தேவி வழிபாட்டு விரதங்கள்


சிறப்பு படம்

பார்வதி தேவி வழிபாட்டு விரதங்கள்

பார்வதி தேவியை வழிபடத்தக்க விரத நாள்கள் மூன்று. அவை வருமாறு:

வெள்ளிக்கிழமை விரதம்: சித்திரை மாதம், வளர்பிறை, முதல் வெள்ளிக்கிழமையன்று தொடங்கி, வாரந்தோறும் பார்வதி தேவியரைக் குறித்து மேற்கொள்ளும் விரதம் இது. விரதத்தின்போது பகலில் ஒரு பொழுது உண்ணலாம்.

ஆடிப்பூர வழிபாடு :

ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கும் போது சுக்கிரனின் நட்சத்திரமான பூரம் நட்சத்திரம் வரும் நாள் Ôஆடிப்பூரம்Õ என்று அழைக்கப்படுகிறது. அன்றைய தினம் கோவில்களில் உற்சவம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இந்த பூரத்திற்கு சில நாட்களுக்கு முன்பு பச்சைப் பயிறைத் தண்ணீரில் நனைத்து முளைவிட வைப்பார்கள்.

ஆடிப்பூரம் தினத்தன்று அது நன்றாக முளைவிட்டிருக்கும். அதை பெண்கள் தலையில் சுமந்து கோவிலுக்குச் சென்று அம்பிகைக்கு நைவேத்தியமாக வைப்பார்கள். பின்னர் அதை அவர்கள் பிரசாதமாகச் சாப்பிடுவார்கள். குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் இவ்வாறு முளைப்பாரி எடுத்து நைவேத்தியம் செய்து வணங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

துளசி வழிபாடு :

துளசி இருக்கும் இடத்தில் லட்சுமி வசிப்பாள். விஷ்ணு அருள் கிடைக்கும். வீட்டின் மேற்குப் பகுதியில் சூரிய உதயத்தைப் பார்த்த நிலையில் துளசி செடியை தொட்டியில் வைத்து வழிபட வேண்டும். துளசி மாடத்திற்கு தினமும் நீர் ஊற்றி, கோலமிட்டு வழிபட்டு வந்தால் நல்லது. துளசி மாலையை விஷ்ணுவுக்கும் அணிவித்தால் சகல பாக்கியங்களும் கிடைக்கும்.

ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி அல்லது கார்த்திகை மாதம் வளர்பிறை திவாதசி அன்று பிருந்தாவன துளசி பூஜை செய்ய வேண்டும். புஷ்பங்களால் அர்ச்சிப்பது விசேஷம்.

பாவை நோன்பு :

ஸ்ரீஆண்டாள் பாடி அருளிய திருப்பாவையும் ஸ்ரீமாணிக்கவாசக சுவாமிகள் பாடி அருளிய திருவெம்பாவையும் மார்கழி நோன்பை அடிப்படையாகக் கொண்டவை ஆகும். 

‘மாதங்களில் நான் மார்கழி ஆவேன்’ எனக் கண்ணபிரான் கீதையில் அருளினார். வைணவர்களும் சைவர்களும் ஒருங்கே கொண்டாடும் மாதம் இது. வைகுண்ட ஏகாதசியும் ஆருத்ரா தரிசனமும் இம்மாதத்தில் தான் வருகின்றன. இம்மாதத்தில் அதிகாலையில் செய்யக் கூடிய பூஜையானது, ஒரு வருடத்தில் பூஜை செய்த பலனைத் தரும்.


வியாழன், 2 ஆகஸ்ட், 2018

ஆடிப்பெருக்கு வழிபாட்டு முறைகள்

ஆடிப்பெருக்கு வழிபாட்டு முறைகள்

பெருக்கு என்றால் பெருகுவது என்று அர்த்தம். ஆடி மாதத்தில்தான் தென்மேற்குப் பருவ மழை வலுவடைந்து காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும். அப்படி ஆடியில் காவிரி பெருக்கெடுத்து வருவதைத்தான் மக்கள் ஆடிப்பெருக்கு என்று கொண்டாடுகிறார்கள். காவிரி பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீட்டு எல்லையான ஒகேனக்கல்லில் நுழையும்போது தொடங்கி, காவிரி சமுத்திர ராஜனைக் கலக்கும் பூம்புகார் வரையிலும் இருக்கிற மக்களால் கொண்டாடப்படும் பெருந்திருவிழா இந்த ஆடிப்பெருக்கு. தங்களை வாழவைக்கும், வளப்படுத்தும் காவிரியை அதன் கரையோரப் பகுதிகளில் இருக்கும் மக்கள் சிறப்பிப்பதற்காகத் துவங்கப்பட்ட இந்த விழா இன்று ஒட்டுமொத்த தமிழகம் முழுவதிலும் எல்லாத் தரப்பு மக்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
ஆடிப்பெருக்கு விழாவின்போது என்ன நடக்கும்?


ஆடி மாதம் பதினெட்டாம் நாள் ஆற்றங்கரையோரம் முழுவதும் உற்சாகக் கோலாகலம்தான். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என்று எல்லோருக்கும் கொண்டாட்டம்தான் என்றாலும் குறிப்பாக இதைப் பெண்கள் திருவிழாவாகவே நடத்துவதைக் காண முடியும். காலையில் எழுந்து குளித்து முடித்து பூ, மஞ்சள், குங்குமம், வளையல், காதோலை கருகமணி, அரிசி, வெல்லம் என்று மங்கலப் பொருட்களோடு தன் வயதொத்தவர்களோடு கிளம்புவார்கள் பெண்கள். சிறு தேர் உருட்டும் சிறுமிகள், சில்லிக்கோடு அடிக்கும் இளம் பெண்கள், தற்போதுதான் திருமணமாகியிருக்கும் குமருகள், திருமணமான இளம் மற்றும் நடுத்தர வயதுப் பெண்கள், வயோதிகப் பெண்கள் என்று எல்லாப் பருவத்தினரும் ஆற்றங்கரைக்குப் போகக் கிளம்புவதில் இருந்தே கொண்டாட்டம் ஆரம்பித்துவிடும். 
ஆடி பெருக்கு வரலாறு க்கான பட முடிவு

ஆற்றங்கரைக்குப் போவதற்கு முன் கலப்பு சாதம் செய்ய அதிகாலை நான்கு மணியில் இருந்தே வேலை தொடங்கிவிடும். ‘‘கொஞ்சம் எலுமிச்சை பழத்தை பிழிஞ்சு கொடுங்களேன், தேங்காயை துருவி கொடுங்களேன்’’ என்ற குரல்கள் ஒலித்துக்கொண்டிருக்கும். எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, சர்க்கரைப் பொங்கல் என்று எல்லாம் செய்து முடித்து அவற்றை ஆற்றுக்கு எடுத்துப் போக பாத்திரத்தில் அடைத்துவைப்பார்கள். அதன் பிறகு காலை சிற்றுண்டி தயார் செய்து முடிப்பார்கள். அதன் பிறகு ஆற்றுக்குக் கிளம்பும் வைபவம் தொடங்கும்.
பெண்கள் செம்பில் மஞ்சளை வைத்து எடுத்துக்கொண்டு தன் பிள்ளைகள், ஓரகத்தி, அவர்களின் பிள்ளைகள், நாத்தனார், பக்கத்து வீட்டுத் தோழி என்று பட்டாளத்தோடு தேர் அசைவதுபோல தெருவைக் கடப்பார்கள். சிறு பிள்ளைகள் பனைச் சக்கரத்தால் செய்யப்பட்ட சிறிய சப்பரத்தை இழுத்துக்கொண்டு முன்னே போவார்கள். எல்லோருமாக ஆற்றை அடைந்ததும் ஒவ்வொரு பெண்ணும் தனக்கான ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து அந்த இடத்தை சாணம் போட்டு மெழுகி சுத்தப்படுத்து அதில் வாழை இலை விரித்துவைத்து வெற்றிலை வைத்து அதில் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைப்பார்கள். அதற்கு பூப்போட்டு இலையில் மஞ்சள், குங்குமம், தாலிச்சரடு, காதோலை, கருகமணி, வளையல், பூ, அரிசி, வாழைப்பழம், வெல்லம், பேரிக்காய், ஜாக்கெட் துணி ஆகியவற்றை வைத்து அதற்கு தேங்காய் உடைத்து சூடம் காட்டி வணங்குவார்கள். பிறகு அவை எல்லாவற்றையும் ஒரு வாழைப் பட்டையில் வைத்து ஆற்றில் மிதக்க விடுவார்கள். அந்த விளக்கு எரிந்துகொண்டே மற்ற பொருட்களோடு மிதந்து செல்வது காவிரியின் உயிர்ப்பை உலகத்துக்கு உணர்த்துவதாக இருக்கும்.
வயதில் மூத்த பெண்கள் நூல் கயிற்றில் மஞ்சள் தடவி ஆண்களுக்குக் கைகளிலும், பெண்களுக்குக் கழுத்திலும் கட்டிவிடுவார்கள். பெரியவர்களின் காலில் விழுந்து ஆசி வாங்குவதும் நடக்கும். பிறகு கொண்டு வந்திருக்கும் பதினெட்டு வகையான பதார்த்தங்களையும், கலப்பு சாதத்தையும் எல்லோருமாக உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு ஆற அமர வீடு திரும்புவார்கள். காவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கச் செய்யப்படும் இந்த விழா ஒரு வகையில் குடும்ப, சமூக விழாவாக நடக்கும்.
ஆனால் கடந்த பல வருடங்களாகக் காவிரியில் தண்ணீர் இல்லாததால் ஆடிப்பெருக்கு அத்தனை உற்சாகமாகக் கொண்டாடப்படுவதில்லை. ஆடிப்பெருக்கு என்பது மற்றுமொரு பண்டிகைக் காலம். காலையில் எழுந்ததும் இறைச்சிக் கடைகளை நோக்கிக் குவிகிறார்கள் மக்கள். தேவைக்குத் தகுந்தபடி இறைச்சி வாங்கி மதிய சாப்பாட்டைக் கொண்டாடிப் பண்டிகையை முடித்துக்கொள்கிறார்கள். வழக்கமாக ஒரு வாரத்தில் விற்கும் தொகை அன்று ஒரு நாளில் மட்டும் விற்கிறது என்கிறார்கள் டாஸ்மாக் வட்டாரத்தில்.

வீட்டிலேயே கொண்டாடலாம்..!

காவிரியின் கரையோரம் உள்ளவர்கள்தான் ஆடிப்பெருக்கு கொண்டாடுவார்கள்; நாம் என்ன செய்வது என்று யாரும் கவலைபட வேண்டாம். நம் வீட்டிலேயே ஆடிப்பெருக்கை அற்புதமாகக் கொண்டாடலாம் என்கிறார் ஆச்சாள்புரம் சம்பந்த சிவாச்சாரியார். எப்படிக் கொண்டாட வேண்டும் என்பதையும் அவர் விளக்குகிறார்: “ஒரு செம்பில் அரைத்த மஞ்சளைப் போட்டு நிறைகுடத்திலிருந்து அந்தச் செம்பில் நீர் எடுத்துக்கொள்ள வேண்டும். மஞ்சள், நீரில் கலந்திருக்கும். பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து அதன் முன் செம்பை வைத்துத் தண்ணிரில் பூக்களைப் போட வேண்டும். கங்கை, காவிரி, யமுனை, நர்மதை ஆகிய புண்ணிய நதிகளை மனதில் நினைத்து, ‘எங்கள் மூதாதையர் உங்களைப் புனிதமாகக் கருதி வழிபட்டதுபோல் நாங்களும் வழிபடுகிறோம். அவர்களுக்கு அருள் செய்ததுபோல எங்களுக்கும் அருள் செய்யுங்கள்’ என்று மனதார வேண்டிக் கற்பூர ஆரத்தி காட்டுங்கள். காவிரியையும், தாமிரபரணியையும் நமக்களித்த அகத்தியரை மனதார நினைத்து வழிபட வேண்டும். பூஜை முடிந்ததும் செம்பிலுள்ள நீரைத் தோட்டத்தில் இருக்கும் செடிகொடிகளுக்கு ஊற்றிவிட வேண்டும். சர்க்கரைப் பொங்கல் செய்து படைத்தால் ஆடிப்பெருக்கு விழா நிறைவாகும்” என்கிறார் சம்பந்த சிவாச்சாரியார்.






ஆடிப்பெருக்கு விழாவின்போது என்ன நடக்கும்?ஆடி மாதம் பதினெட்டாம் நாள் ஆற்றங்கரையோரம் முழுவதும் உற்சாகக் கோலாகலம்தான். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என்று எல்லோருக்கும் கொண்டாட்டம்தான் என்றாலும் குறிப்பாக இதைப் பெண்கள் திருவிழாவாகவே நடத்துவதைக் காண முடியும். காலையில் எழுந்து குளித்து முடித்து பூ, மஞ்சள், குங்குமம், வளையல், காதோலை கருகமணி, அரிசி, வெல்லம் என்று மங்கலப் பொருட்களோடு தன் வயதொத்தவர்களோடு கிளம்புவார்கள் பெண்கள். சிறு தேர் உருட்டும் சிறுமிகள், சில்லிக்கோடு அடிக்கும் இளம் பெண்கள், தற்போதுதான் திருமணமாகியிருக்கும் குமருகள், திருமணமான இளம் மற்றும் நடுத்தர வயதுப் பெண்கள், வயோதிகப் பெண்கள் என்று எல்லாப் பருவத்தினரும் ஆற்றங்கரைக்குப் போகக் கிளம்புவதில் இருந்தே கொண்டாட்டம் ஆரம்பித்துவிடும்.