செவ்வாய், 29 மே, 2018

குடும்பத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் நீங்கச் செய்யும் பரிகாரம்

வார பரிகாரம் க்கான பட முடிவு
குடும்பத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் நீங்கச் செய்யும் பரிகாரம் 
சில குடும்பங்களில் எப்போதும் பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும்.தேவையில்லா விஷயங்களுக்கு கூட சண்டை வரும்.எவ்வளவு செல்வம் இருந்தாலும் குடும்பத்தில் நிம்மதி,மகிழ்ச்சி இருக்காது.

குடும்ப தோஷம் இருந்தாலும் இதுபோன்ற பிரச்சனைகள் இருக்கும். இதுக்கு ஒரு எளிய பரிகாரம். நெல், அட்சதை,விரலி மஞ்சள், ஒரு ரூபாய் காசு, வெத்தலை பாக்கு, அதோட, உங்க குடும்பத்தில் காலமான மூதாதையர்களோட பெயரை (உங்க ஞாபகத்துல உள்ள வரை) ஒரு வெள்ளைத்தாளில் எழுதிக்கொள்ளுங்கள்.. அனைத்தையும் ஒரு சுத்தமான வெள்ளைத் துணியில் கட்டி, பூஜை அறையில் வைத்து அதுக்கு தினமும் ஊதுபத்தி, சாம்பிராணி காட்டி, மனசார உங்கள் முன்னோர்களையும்,குலதெய்வத்தையும் வணங்கி வாருங்கள் . கூடிய சீக்கிரம் உங்க குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் படிப்படியாக தீர்ந்து சந்தோஷம் பெருகும், அமைதி ஏற்படும்.

கோவில் மூடியிருக்கும் போது கடவுளை தரிசிக்கலாமா?


கோவில் மூடியிருக்கும் போது கடவுளை தரிசிக்கலாமா? க்கான பட முடிவு



கடவுளை வணங்கும் முறையில் பல சாஸ்திர சம்ரதாயங்கள் உண்டு. அதை பற்றிய சில ஆன்மீக தகவல்களை தெரிந்துக் கொள்ளுங்கள்.
மகாலட்சுமி அமர்ந்த நிலையில் உள்ளபடம். விக்கிரகம் ஆகியவற்றையே வீட்டில் வைக்க வேண்டும்.
வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே குளிர்ந்து விடுவதுதான் நல்லது. நாம் அணைக்கக் கூடாது.
திருக்கோவிலின் பிரதான வாசல் வழியேதான் கோயிலுக்குள் செல்ல வேண்டும்.
அர்ச்சனைப் பொருட்களை இடது கையால் எடுத்துச் செல்லக் கூடாது.
கோவிலிலிருந்து வீட்டிற்கு வந்ததும் சிறிது நேரம் கழித்துக் கை,கால்கள் கழுவலாம். குளிக்கக் கூடாது.தொடர்புடைய படம்
எலுமிச்சம் பழத் தீபம் விளக்கைக் கோயிலில் மட்டுமே ஏற்ற வேண்டும். வீடுகளில் ஏற்றக் கூடாது.
சுவாமிக்கு எடுக்கும் ஆரத்தியில் சுண்ணாம்பு சேர்க்கக் கூடாது. அதுவே மனிதர்களுக்கு எடுக்கும் போது சுண்ணாம்பு சேர்க்கலாம்.
சனி பகவானுக்கு வீட்டில் எள் விளக்கு ஏற்றக் கூடாது. நல்ல காரியங்கள் பற்றிப் பேசும் போது, எள் அல்லது எண்ணெய் பற்றிப் பேசக் கூடாது.
இறைவன் சன்னிதி போன்ற தெய்வீக அலை உள்ள இடத்தில் யோசித்தால் நல்ல முடிவு கிடைக்கும்.
திருப்பதி, திருத்தணி, பழநி, திருச்செந்தூர் போன்ற கோவில் ஸ்தலத்திற்குச் சென்றால் அங்கிருந்து நேராக அவரவர் வீட்டிற்கு செல்ல வேண்டும்.
ருத்ராட்சம் அணிவோர் இறுதிச் சடங்குகளுக்குச் செல்லும் பொழுது அதைக் கழற்றி வைத்து விட்டுத் செல்ல வேண்டும்.
கோயில் மூடியிருக்கும் போதும், திருமஞ்சன பூஜையின் போதும், திரையிட்டிருக்கும் போதும் கடவுளை வழிபடக் கூடாது.
குங்குமத்தை வலது கை மோதிர விரலில் இட்டுக் கொள்வதே நல்லது. விக்கிரகத்திற்கு தீபாராதனை நடக்கும்போது கண்களை மூடிக்கொண்டு வணங்கக் கூடாது.பெண்கள் மாதவிலக்கின்போது எக்காரணம் கொண்டும் பூ வைத்துக் கொள்ளக் கூடாது.
செவ்வாய் கிழமை, புதன் கிழமை ,வெள்ளிக்கிழமை குத்து விளக்கைத் துலக்கி கழுவக் கூடாது.
இறந்த முன்னோர்களின் படங்களை சாமி படங்களுடன் வைத்து வணங்குதல் கூடாது. தனியாக வீட்டில் வேறொரு இடத்தில் வைக்க வேண்டும்.


வாழைப்பழம் சாப்பிட்ட பின் மோர் சாப்பிடக் கூடாது. பூஜை அறையில் தெய்வங்களை வடக்குப் பார்த்து வைக்கக் கூடாது. 


பசுக்களோடு மற்றும் ராதையுடன் கூடிய புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைத்துக் கொள்ளலாம்.
கர்ப்பிணிப் பெண்களோ அல்லது அவர்களின் கணவரோ சிதறு தேங்காய் உடைக்கக் கூடாது.









தீர்க_சுமங்கலி_பவா …!என்றால் என்ன?

தீர்க_சுமங்கலி_பவா க்கான பட முடிவு

“தீர்க சுமங்கலி பவா ” என்ற ஆசிக்கு மனைவி கணவனிடம் 5 மாங்கல்யம் பெற வேண்டும் என்று அர்த்தம்.
திருமணத்தில் ஒன்று,
60 வயது ஷஷ்டியப்த பூர்த்தியில் ஒன்று,
70 வயது பீமரத சாந்தியில் ஒன்று,
80 வயது சதாபிஷேகத்தில் ஒன்று,
96 வயது கனகாபிஷேகத்தில் ஒன்று
இவைகள்_பற்றி_ஒரு_சிறு_விளக்கம் ;
ஷஷ்டியப்த பூர்த்தி, பீம ரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் போன்ற சடங்குகளை நடத்திக்கொள்வது என்பது எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை.
பெரும் பாக்கியமும் பூர்வ புண்ணியமும் செய்தவர்களுக்கே இந்த மணவிழா காணும் பாக்கியம் அமைகிறது.
இது போன்ற வைபவங்கள் பொதுவாக ஆயுள் விருத்தியைப் பிரதானமாகக் கொண்டே அமைகின்றன.
சகல தேவர்களையும் மகிழ்விக்கும் பொருட்டு அன்றைக்கே வேத பாராயணங்களும், ஹோமங்களும் நடைபெறுகின்றன.
உறவு முறைகள் கூடி நின்று குதூகலப்படும் போது, ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியரின் மனம்மகிழும்.
நமக்கென்று இத்தனை சொந்தங்களா என்கிற சந்தோஷம் அவர்களின் மனதில் பரவசத்தை ஏற்படுத்தும்.
uy;




பூமி 360 பாகைகளாகவும் அந்த 360 பாகைகளும் 12 ராசி வீடுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.
இந்த 360 பாகைகளையும் கடந்துசென்று ஒரு வட்டப் பாதையை பூர்த்தி செய்வதற்கு சூரியனுக்கு ஓர் ஆண்டும்,
செவ்வாய்க்கு ஒன்றரை ஆண்டும், சந்திரனுக்கு ஒரு மாதமும்,
புதனுக்கு ஒரு வருடமும்,
வியாழனுக்கு 12 வருடங்களும்,
வெள்ளிக்கு ஒரு வருடமும்,
சனி பகவானுக்கு 30 வருடங்களும், ராகுவுக்கு ஒன்றரை வருடங்களும், கேதுவுக்கு ஒன்றரை வருடங்களும், ஆகின்றன.
';lh
இந்த சுழற்சியின் அடிப்படையில் ஒருவர் ஜனித்து, அறுபது வருடங்கள் நிறைவடைந்த தினத்துக்கு அடுத்த தினம்,
அவர் பிறந்த நாளன்று இருந்த கிரக அமைப்புகளும் வருடம், மாதம் போன்றவையும் மாறாமல் அப்படியே அமைந்திருக்கும்.
மிகவும் புனித தினமான அன்றுதான், சம்பந்தபட்டவருக்கு ஷஷ்டியப்த பூர்த்தி வைபவம் மிகவும் ஆச்சாரமான முறையில் தெய்வாம்சத்துடன் நிகழ வேண்டும்.
ஷஷ்டியப்த பூர்த்தி தினத்தன்று வேத பண்டிதர்களின் முன்னிலையில் நிகழ்த்தப்படும்.
பூஜையின் போது 84 கலசங்களில் தூய நீரை நிரப்பி மந்திரங்களை உச்சரித்து ஹோமங்கள் நடைபெறும்.
அங்கே உச்சரிக்கப்படும் வேத மந்திரங்களின் சத்தம் மூலம் கலசத்தில் உள்ள நீர் தெய்வீக சக்தி பெற்று, புனிதம் அடைகிறது.
பின்னர், அந்தக் கலசங்களில் உள்ள நீரைக் கொண்டு ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியினருக்கு அபிஷேகம் நடைபெறும்.
அபிஷேகத்துக்குப் பயன்படும் இந்த 84 கலசங்கள் எதைக் குறிக்கின்றன?
தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபது என்பதை நாம் அறிவோம்.
இந்த அறுபது ஆண்டுகளுக்கான தேவதைகளையும், இந்த தேவதைகளின் அதிபதிகளாகிய…
அக்னி,
சூரியன்,
சந்திரன்,
வாயு,
வருணன்,
அஷ்ட திக் பாலகர்கள் பாலாம்பிகை,
அமிர்த கடேஸ்வரர்,
நவநாயகர்கள்..
சேர்த்து குறிப்பதற்காகத்தான் 84 கலசங்கள் என்பது ஐதீகம்.
பிரபவ முதல் விஷு வரையான 15 ஆண்டுகளுக்கு அக்னி பகவானும்,
சித்ரபானு முதல் துன்முகி வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சூரிய பகவானும்,
ஹேவிளம்பி முதல் விரோதிகிருது வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சந்திர பகவானும்,
பரிதாபி முதல் அட்சய வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு வாயு பகவானும், அதிபதிகள் ஆவார்கள்.
தன்னுடைய 60-வது வயதில் ஐம்புலன்களால் வரும் ஆசையை வென்ற மனிதன் 60 வயதில் இருந்துதான், தனது என்ற பற்றையும் துறக்க முயல வேண்டும்.
தன்னுடைய மகன், மகள், சொந்த பந்தம் என்ற கண்ணோட்டம் மறைந்து உற்றார் உறவினர் அனைவரும் தன் மக்களே….
எல்லோரும் ஒரு குலமே என்கிற எண்ணம் 70 வயது நிறைவில் பூர்த்தி ஆக வேண்டும்.
தான், தனது என்ற நிலை மறந்து அனைவரையும் ஒன்றாகக் காணும் நிலை பெற்றவர்களே 70-வது நிறைவில் பீஷ்ம ரத சாந்தியைக் கொண்டாடும் தகுதியைப் பெறுகிறார்கள்.
uyo
காமத்தை முற்றிலும் துறந்த நிலையே பீஷ்ம ரத சாந்திக்கான அடிப்படை தகுதியாகும்.
70-வது வயதில் இருந்து ஒவ்வொரு மனிதனும் தன்னைச் சுற்றி உள்ள எல்லா உயிர்களிலும் இறைவனைக் காண முயல வேண்டும்.
ஒவ்வொரு உயிரிலும் உறையும் இறைவனுடன் உரையாடப் பழகிக் கொள்ள வேண்டும்.
அவனுக்கு ஜாதி, மதம், இன பேதம் எதுவும் இல்லை.
இப்படி அனைத்திலும் இறைவனை, அனைத்தையும் இறைவனாகக் காணும் நிலையை ஒரு மனிதன் 80 வயதில் பெறும் போதுதான்,
சதாபிஷேகம் (ஸஹஸ்ர சந்திர தர்ஸன சாந்தி – ஆயிரம் பிறை கண்டவன்) காணும் தகுதியை அவன் அடைகிறார். அப்போது சதாபிஷேகம் செய்துகொள்ள வேண்டும்
இறையோடு இரண்டரக் கலந்து இறை சிந்தனை கொண்ட தம்பதிகளுக்கு
96 வயதில் கனகாபிஷேகம் செய்து இந்த ஜென்மாவின் ஐந்தாவது மாங்கல்யம் பூட்டி தீர்க்க சுமங்கலி பவா ஆசிக்கு உரியதாக அமைகிறது.

பெண்கள் அணியும் தாலியின் மகிமை – ஒன்பது இழைத் தத்துவம்

பெண்கள் அணியும் தாலியின் மகிமை – ஒன்பது இழைத் தத்துவம்தொடர்புடைய படம்

இந்துக்களுக்கு மஞ்சள் நிறம் புனிதமான நிறம் என்பதால் அந்தத் திருமணப் பரிசும் மஞ்சள் நிறத்தில் தரப்பட்டது என்று விளக்குகிறார்கள், தமிழர் திருமணங்களில் ஆரம்பத்தில் தாலி இருந்ததாக, இலக்கியங்களில் குறிப்பிடப்படவில்லை.
சங்க காலத்தின்போது நடந்த திருமணங்களில் புதுமணல் பரப்பி, விளக்கு ஏற்றி, வயதில் மூத்தபெண்கள், மணப்பெண்ணை நீராட்டி வாழ்த்தி
அவள் விரும்பியவனுடன் அவளை ஒப்படைத்தனர்.
நாளடைவில் “”தாலம்” என்ற பெயர்தான் தாலியாகமாறியிருக்கிறது.பதினோராம்நூற்றாண்டில்தான் திருமணச் சின்னம்என்ற ரீதியில் தாலி என்ற பெயர் உபயோகப்படுத்தப்பட்டது என்கிறது உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்வெளியிட்டிருக்கும் “”தமிழர் திருமணம்” என்கிற புத்தகம்.மாங்கல்யச் சரடானது ஒன்பது இழைகளைக் கொண்டது.
 

ஒவ்வொரு இழைகளும் ஒவ்வொரு நற்குணங்களைக் குறிக்கிறது.
1.தெய்வீகக் குணம்,
2.தூய்மைக் குணம்,
3.மேன்மை,தொண்டு,
4.தன்னடக்கம்,
5.ஆற்றல்,
6.விவேகம்,
7.உண்மை,
8.உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்ளுதல்.
9.மேன்மை
இத்தனைக் குணங்களும் ஒரு பெண்ணிடம் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒன்பது இழைகள் கொண்ட திருமாங்கல்யச்சரடு அணியப்படுகிறது.
திருமணம் என்பது ஓர் உன்னதமான நாள் ஆகும். இல்வாழ்வில் இணையும் மணமக்களை ஆல் போல் தழைத்து! அருகு போல் வேரூன்றி! மூங்கில் போல் சுற்றம் சூழ வாழ்வீர்கள் என பெரியோர்கள் வாழ்த்த நடைபெறும் திருமணத்தை ஒரு பொன் நாள் ஆக அமைத்து கொள்வது ஒவ்வொருவரின் கடமை ஆகும்.

திங்கள், 28 மே, 2018

காமாட்சி விளக்கை வீட்டில் ஏற்றி வைப்பதால் என்ன நன்மை ஏற்படும்?



காமாட்சி விளக்கை வீட்டில் ஏற்றி வைப்பதால் என்ன நன்மை ஏற்படும்?


ஞாயிறு, 27 மே, 2018

திருமண வரம் அருளும் வைகாசி திருநாள் விரதம்



திருமண வரம் அருளும் வைகாசி திருநாள் விரதம்


சாய் பாபா நம்மிடம் விரும்பிப் பெறும் காணிக்கை எது தெரியுமா?

சாய் பாபா நம்மிடம் விரும்பிப் பெறும் காணிக்கை எது தெரியுமா? 


னம், மதம், மொழி ஆகிய வேறுபாடுகளைக் கடந்தவர் சாய் பாபா. ஆழ்ந்த நம்பிக்கை, பொறுமை இவை இரண்டை மட்டுமே தன் பக்தர்களிடமிருந்து காணிக்கையாகப் பெறுபவர். 
சாய் பாபா
நேரம், காலம் என்று எதுவும் கிடையாது அவருக்கு. தன் பக்தர்கள் மனதார அவரை நினைத்தாலே போதும், அவர்களைத் தேடி ஓடிவருவார்.
பின்வரும் சம்பவம் அந்தப் பேருண்மையை நமக்கு உணர்த்துகிறது.
ஷீரடிக்கு நானூறு மைல் தொலைவில் வாழ்ந்தவர் திருமதி சாந்தா என்னும் பெண்மணி. இவர் ஒவ்வொரு வியாழக்கிழமையும் பாபாவுக்கு விரதமிருந்து, நைவேத்தியம் செய்து அவரின் திருவுருவப் படத்துக்குப் படைத்து பூஜை செய்வது வழக்கம்.
ஒருநாள் வியாழக்கிழமை...
அன்று விடுமுறை என்பதால், அவளின் மகன் பாபு வீட்டில் இருந்தான். தன் தாய் பலவிதமான பலகாரங்களைச் செய்வதைக் கண்டு, அவளிடம், ''அம்மா! இன்று நம் வீட்டுக்கு விருந்தினர் யாராவது வரவிருக்கிறார்களா? ஏன் இத்தனை விதமான இனிப்புகளும் பட்சணங்களும் செய்கிறீர்கள்?'' என்று கேட்டான்.
அவனுக்கு பதில் அளிக்கும்விதமாக சாய் பாபாவின் புகைப்படத்தைக் காட்டி, "இவர் ஷீரடியில் வசிக்கிறார். இவருக்கு நைவேத்தியம் செய்வதற்காகவே அதிரசம், பாயசம் முதலியவற்றைச் செய்துவைத்திருக்கிறேன்" என்றாள்.
இதைக் கேட்ட பாபு ஆச்சர்யத்துடன், ``அம்மா! படத்துக்கு முன்னாடி வைத்தால், இவர் எப்படி சாப்பிடுவார்?’’ என்று கேள்வி எழுப்பினான். மேலும், ``ஷீரடி ரொம்பத் தொலைவில் உள்ளது. அங்கிருந்து அவரால் எப்படி வர முடியும்?’’ என்றான்.
தன் பூஜை வேளைகளில் மும்முரமாக இருந்த சாந்தா அவனைச் சமாதானப்படுத்தும்விதமாக, "சரியாகப் பன்னிரண்டு மணிக்கு பாபா நம் வீட்டிற்கு வருவார். நீ பொறுமையாக இரு. நிச்சயம் அவர் வருவார்" என்றாள். 
அப்போது விளக்கில் எண்ணெய் இல்லாததைக் கவனித்தவள், தன் மகனிடம், ''கதவைச் சாத்தி தாழ்ப்பாள் போட்டுக்கொள். நான் கடைக்குப் போய் எண்ணெய் வாங்கிக்கொண்டு சீக்கிரம் வந்துவிடுகிறேன்'' என்று கூறிவிட்டுக் கடைக்குச் சென்றாள்.
சாய் பாபா
பாபுவின் கண்கள் வாசலை நோக்கியே இருந்தது. படத்தில் இருக்கும் சாய் பாபாவை நேரில் காண அவன் மனம் விரும்பியது. அவன் மணி பன்னிரண்டு ஆவதற்காகக் காத்திருந்தான்.
அதே நேரம் - 
ஷீரடியில் மதிய ஆரத்தி முடிந்து அனைவரும் பாபாவிடம் கற்கண்டு பிரசாதத்தைப் பெற்றுக்கொண்டிருந்தனர்.
ஆனால், கற்கண்டை விட மிகவும் சுவையானது அவரின் அருளுரை. கல்கண்டின் இனிமையைப்போலவே அவர் பேசத் தொடங்கினார்.
"உங்களுக்கு எந்த வகையிலும் உறவில்லாத ஒருவர், ஆறறிவு உள்ள மனிதராக இருக்கட்டும், பிராணிகள், விலங்குகள் எது வேண்டுமானாலும் இருக்கட்டும். அவர்களை அன்புடன் நடத்துங்கள். உங்களை நாடி வருவோரை அன்புடன் வரவேற்று, உபசரியுங்கள். அவர்களிடத்தில் வெறுப்பினைக் காட்டாதீர்கள். அவர்கள் வேண்டியதை உங்களால் கொடுக்க இயன்றால் அளியுங்கள். இல்லையேல் அமைதியாயிருங்கள். அதை விடுத்து அவர்கள் மேல் கோபம் கொள்ளாதீர்கள்.
உங்களைச் சுற்றி இருப்பவர்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். உலகமே தலைகீழாக மாறட்டும். ஆனால், நீங்கள் உங்களுடைய நல்ல குணத்தை மாற்றாதீர்கள். கடவுள் ஒருவரே நமக்கு மேலானவர். அவரின் செயல்கள் அனைத்தும் நம் அறிவுக்கு அப்பாற்பட்டது. நம்முடைய ஆசைகளைப் பூர்த்தி செய்பவர் அவரே. அவரின் அருளாசியினால் மட்டுமே நாம் உயர்ந்த லட்சியங்களை அடைய முடியும்" என்று கூறினார்.
இத்தகைய சிறப்பான அமுதமொழிகளை பாபா கூறி முடித்ததும், பக்தர்கள் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.
அந்தத் தருணத்தில் பாபுவின் வாசல் கதவு தட்டும் சத்தம் கேட்டது. யாரென்று பார்ப்பதற்கு கதவைத் திறந்தான் பாபு. வெளியே வெள்ளை உடையும், தலையில் தலைப்பாகையும் அணிந்து சாயிநாதர் நின்றிருந்தார்!
சாய் பாபா
கடையிலிருந்து தன் தாய் திரும்பி வந்ததும், ''அம்மா, நீ சொன்னதுபோல் பாபா நம் வீட்டுக்கு வந்தார். அதுவும் சரியாக பன்னிரண்டு மணிக்கு வந்து கதவைத் தட்டினார்.  திறந்து பார்த்தால் பாபா நின்றுகொண்டிருந்தார். 'நீ என்னை நினைத்து அழைத்தால், நான் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் வந்துவிடுவேன்' என்று கூறி, ஆசீர்வதித்துவிட்டுச் சென்றார்'' என்று கூறினான்.
பாபாவின் லீலைகள் அந்தத் தாய்க்கு நன்றாகத் தெரியும் என்பதால், மகன் கூறியதைக் கேட்டு மெய்சிலிர்த்துப் போனவளாக, பாபாவின் திருவுருவப் படத்துக்கு நமஸ்காரம் செய்தாள்.
தன் பக்தர்கள் எவ்வளவு தொலைவில் இருந்தாலும், எந்த வயதினராக இருந்தாலும் உண்மையான நம்பிக்கையுடனும், பக்தியுடனும் தன்னை அழைத்தால் ஏதோவொரு ரூபத்தில் சென்று சாயிநாதர் அவர்களுக்கு நிச்சயம் அருள் புரிவார். இந்த நிகழ்ச்சியை விவரிக்கும்
இன்னொரு சம்பவம்...
பாபாவின் மீது பக்தி அதிகம் கொண்ட ஒரு பெண், தினமும் தான் சமைத்த உணவினை பாபாவுக்கு நைவேத்தியமாக வைத்துவிட்டு, அதன் பிறகே அனைவருக்கும் பரிமாறுவது வழக்கம். 
ஒரு நாள் ஏதோ ஒரு காரணத்தால், பாபாவிற்கு அன்றாடம் செய்யும் நைவேத்தியத்தைச் செய்ய இயலவில்லை. அதைப் பற்றி அவள் யோசித்து மனம் வருந்திக்கொண்டிருக்கும்போது, அவள் வீட்டின் வாசலில் ஒரு நாய் நிற்பதைக் கண்டாள். அதற்கு அளிப்பதற்காக திண்பண்டம் எடுக்க வீட்டிற்குள் விரைந்தாள். 
ஆனால், அவள் திரும்பி வருவதற்குள் அந்த நாய் சிறிது தொலைவு சென்றுவிட்டது. அந்தப் பெண் ஏமாற்றத்துடன் பின்வருமாறு வேண்டலானாள், 'சாயிநாதா! தாங்கள்தான் அந்த நாயின் வடிவில் என்னிடம் உணவு பெற வந்தீர்கள் என்று எண்ணி மிகவும் மகிழ்ச்சி கொண்டேன். நான் நினைத்தது உண்மையானால் அந்த நாய் இங்கு வந்து நான் கொடுக்கும் திண்பண்டத்தை உண்ண வேண்டும்' என்று வேண்டினாள்.
அதிசயிக்கும் விதமாக தொலைவில் இருந்த நாய் ஓடி வந்து, அவள் வைத்த தின்பண்டத்தைச் சாப்பிட்டது.