ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2017

ஸ்ரீ மஹாலட்சுமி அஸ்டோத்திரம்

ஸ்ரீ மஹாலட்சுமி அஸ்டோத்திரம்

1. ஓம் ஸ்ரீ பார்வதி சரஸ்வதி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
2. ஓம் ஸ்ரீ விஷ்ணு ப்ரியே மஹாமாயே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
3. ஓம் ஸ்ரீ கமலே விமலேதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
4. ஓம் ஸ்ரீ காருண்ய நிலையேதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
5. ஓம் ஸ்ரீ தாரித்திர துக்க சமனி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
6. ஓம் ஸ்ரீ ஸ்ரீதேவி நித்ய கல்யாணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
7. ஓம் ஸ்ரீ சமுத்திரா தனயே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
8. ஓம் ஸ்ரீ ராஜலக்ஷ்மி, ராஜ்யலக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
9. ஓம் ஸ்ரீ வீர லக்ஷ்மி, விஸ்வ லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
10. ஓம் ஸ்ரீ மோக மந்த்ரீ மந்த்ர ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
11. ஓம் ஸ்ரீ மஹிசாசுர சம்கர்த்தீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
12. ஓம் ஸ்ரீ மதுகைடப நித்ராவே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
13. ஓம் ஸ்ரீ சங்கு சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
14. ஓம் ஸ்ரீ வைகுண்ட ஹிருதய வாசே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
15. ஓம் ஸ்ரீ பக்ஷ்சேந்திர வாகனே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
16. ஓம் ஸ்ரீ தான்ய ரூபே, தான்ய லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
17. ஓம் ஸ்ரீ ஸ்வர்ண ரூபே ஸ்வர்ண லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
18. ஓம் ஸ்ரீ வித்ய ரூபே வித்த லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
19. ஓம் ஸ்ரீ ஹரிப்ரியே வேத ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
20. ஓம் ஸ்ரீ பல ரூபே பல ஹாத்திரீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
21. ஓம் ஸ்ரீ நிஷ் குல்லே நிர்மலே நித்ரே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
22. ஓம் ஸ்ரீ ரத்ன ரூபே ரத்ன லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
23. ஓம் ஸ்ரீ சீதரூபே சீதா லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
24. ஓம் ஸ்ரீ வேத ரூபியே நாத ரூபியே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
25. ஓம் ஸ்ரீ பிராண ரூபே பிராண மூர்த்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
26. ஓம் ஸ்ரீ பிராணமானந்த மகஸ்த்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
27. ஓம் ஸ்ரீ பிரம்ம ரூபியே பிரம்ம தாத்ரீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
28. ஓம் ஸ்ரீ ஜாத வேத சொரூபிணியே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
29. ஓம் ஸ்ரீ ஆதார ஹர்ஸ நிலையே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
30. ஓம் ஸ்ரீ ஸூஸ்மாந்த்ரா சுசிலாந்தஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
31. ஓம் ஸ்ரீ யோகானந்த பிரதாயின்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
32. ஓம் ஸ்ரீ செளந்தரியே ரூபிணி தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
33. ஓம் ஸ்ரீ சித்த லக்ஷ்மி சித்த ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
34. ஓம் ஸ்ரீ சர்வ சந்தோஷ சத் ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
35. ஓம் ஸ்ரீ துசிதே புசிதே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
36. ஓம் ஸ்ரீ ராஜ ராஜார்த்திய பதயே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
37. ஓம் ஸ்ரீ சார சொரூபே திவ் யாக்னி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
38. ஓம் ஸ்ரீ தாரித்திர திவ்ய சுத்தாக்கினி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
39. ஓம் ஸ்ரீ வேத குஹே சுபே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
40. ஓம் ஸ்ரீ தர்மார்த்த காம ரூபிணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
41. ஓம் ஸ்ரீ மோட்ச சாம்ராஜ்ய நிலையே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
42. ஓம் ஸ்ரீ சர்வகமே சர்வ ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
43. ஓம் ஸ்ரீ மோகினி மோக ரூபிணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
44. ஓம் ஸ்ரீ பஞ்ச பூதாந்திரஸ்த்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
45. ஓம் ஸ்ரீ நாராயண ப்யதமே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
46. ஓம் ஸ்ரீ காருணி கார்ய ரூபிணியே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
47. ஓம் ஸ்ரீ ஆனந்த சர்ப்ப சயனி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
48. ஓம் ஸ்ரீ லோகைக ஜனனீ வந்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
49. ஓம் ஸ்ரீ சம்பு ரூபே சம்பு முத்ரே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
50. ஓம் ஸ்ரீ ப்ரம்ம ரூபே ப்ரம்ம முத்ரே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
51. ஓம் ஸ்ரீ விஷ்ணு ரூபே விஷ்ணு மாயே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
52. ஓம் ஸ்ரீ ஆக்ஞ்யா சக்ராப்த்ய நிலையே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
53. ஓம் ஸ்ரீ ஆகார ரேக சக்ராம்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
54. ஓம் ஸ்ரீ ஹிருதய பூஜ தீபாத்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
55. ஓம் ஸ்ரீ ஆதார மூல நிலையே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
56. ஓம் ஸ்ரீ ப்ரம்ம கிரந்தி பிரகாசாக்னி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
57. ஓம் ஸ்ரீ குண்டலினி சயனா நந்தி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
58. ஓம் ஸ்ரீ ஜீவாத்மா ரூபிணி மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
59. ஓம் ஸ்ரீ ஸ்தூல சூசும பிரகாஸ் சித்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
60. ஓம் ஸ்ரீ ப்ரம்மாண்ட பாண்ட ஜனனீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
61. ஓம் ஸ்ரீ அஸ்வத்தா ப்ரஷ சந்துஷ்டே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
62. ஓம் ஸ்ரீ காரிண்ய பூர்ணே ஸ்ரீதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
63. ஓம் ஸ்ரீ மூர்த்தித்தியே சொருபிணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
64. ஓம் ஸ்ரீ பானு மண்டல மத்யஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
65. ஓம் ஸ்ரீ சூர்ய ப்ரகாச ரூபிணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
66. ஓம் ஸ்ரீ சந்திர மண்டல மத்யஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
67. ஓம் ஸ்ரீ வஹி மண்டல மத்யஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
68. ஓம் ஸ்ரீ பீதாம்பர தர தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
69. ஓம் ஸ்ரீ திவ்ய ஆபரண சோபாடே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
70. ஓம் ஸ்ரீ ப்ராமண ஆராதனா தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
71. ஓம் ஸ்ரீ நரசிம்ஹக்ரவா சிந்தோ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
72. ஓம் ஸ்ரீ வரதே மங்களே மன்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
73. ஓம் ஸ்ரீ பட் மாடவி நிலையே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
74. ஓம் ஸ்ரீ வியாசாதி திவ்ய சம்பூஜே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
75. ஓம் ஸ்ரீ ஜெய லக்ஷ்மி சித்த லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
76. ஓம் ஸ்ரீ ராஜ்ய முத்ரே விஷ்ணு முத்ரே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
77. ஓம் ஸ்ரீ சர்வார்த்த சாதகி நித்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
78. ஓம் ஸ்ரீ ஹனுமன் பக்தி சந்துஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
79. ஓம் ஸ்ரீ மகநீ கீத நாதஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
80. ஓம் ஸ்ரீ ரதி ரூபே ரம்ய ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
81. ஓம் ஸ்ரீ காமத்மி காம ஜனனீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
82. ஓம் ஸ்ரீ சுதா பூர்ணே சுதா ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
83. ஓம் ஸ்ரீ இந்திர வன்யே தேவ லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
84. ஓம் ஸ்ரீ அஷ்ட ஐஸ்வர்ய சொரூபிணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
85. ஓம் ஸ்ரீ தர்ம ராஜ சொரூபிணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
86. ஓம் ஸ்ரீ ரட்சோவர புரி லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
87. ஓம் ஸ்ரீ ரத்னாகர ப்ரபாகரமே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
88. ஓம் ஸ்ரீ மருது புர மஹானந்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
89. ஓம் ஸ்ரீ குபேர லக்ஷ்மி மாதாங்கினி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
90. ஓம் ஸ்ரீ ஈசான லக்ஷ்மி சர்வேசி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
91. ஓம் ஸ்ரீ ப்ரம்ம பீடே மஹா பீடே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
92. ஓம் ஸ்ரீ மாயா பீடஸ்திதே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
93. ஓம் ஸ்ரீ சக்ர வாசினி கன்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
94. ஓம் ஸ்ரீ அஷ்ட பைரவ சம்பூஜே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
95. ஓம் ஸ்ரீ அஸ்திதானந்த பூரி நாதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
96. ஓம் ஸ்ரீ சித்த லட்சுமி மஹா வித்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
97. ஓம் ஸ்ரீ புத்தீந்திராதி நிலையே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
98. ஓம் ஸ்ரீ லோக தாரித்ர சமனீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
99. ஓம் ஸ்ரீ மிருத்யூ சந்தாப நாசினி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
100. ஓம் ஸ்ரீ பதி ப்ரியே பதி விரதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

101. ஓம் ஸ்ரீ சதுர் புஜே கோமாளங்கி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

102. ஓம் ஸ்ரீ பட்ச ரூபே முக்தி தாத்நீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
103. ஓம் ஸ்ரீ ஜனா நந்த மயே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
104. ஓம் ஸ்ரீ பக்தி ப்ரியே பக்தி கமே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
105. ஓம் ஸ்ரீ ஸ்தோத்ரப்ரியே ரமே ராமே மஹாலக்ஷ்மி
நமோஸ்துதே
106. ஓம் ஸ்ரீ ராம நாம ப்ரிய தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

107. ஓம் ஸ்ரீ கங்காப்ரியே சுத்த ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
108. ஓம் ஸ்ரீ விஷ்வ பர்த்தி விஷ்வ மூர்த்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
109. ஓம் ஸ்ரீ க்ருஷ்ணப்ரியே க்ருஷ்ணரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
110. ஓம் ஸ்ரீ கீத ரூபியே ராக மூர்த்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
111. ஓம் ஸ்ரீ சாவித்ரீ பூத சாவித்ரீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
112. ஓம் ஸ்ரீ காயத்ரீ ப்ரம்ம காயத்ரீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
113. ஓம் ஸ்ரீ ப்ரம்மே சரஸ்வதி தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
114. ஓம் ஸ்ரீ சுகாலினி சுத்தாக்னி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
115. ஓம் ஸ்ரீ வீணாதர ஸ்தோத்ர ஹமே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
116. ஓம் ஸ்ரீ அஃஞாதரி ப்ருக்ஞானே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
117. ஓம் ஸ்ரீ வேதாந்த வன சாராங்கி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
118. ஓம் ஸ்ரீ நாதாந்த ரஷ புயஸ்ஸே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
119. ஓம் ஸ்ரீ திவ்ய சக்தி மஹாசக்தி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
120. ஓம் ஸ்ரீ ந்ருத்த புரியே நிருத்த லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
121. ஓம் ஸ்ரீ சதுர் சஷ்டி கலா ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
122. ஓம் ஸ்ரீ திவ்ய சுந்தாகரங்கினி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
123. ஓம் ஸ்ரீ முக்திதே முக்தி தேகஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
124. ஓம் ஸ்ரீ யக்ஞ சாரார்த்த சுத்தாக்னீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
125. ஓம் ஸ்ரீ அஷ்ட லஷ்மியே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
126. ஓம் ஸ்ரீ ஸர்வ மங்கள சம்பூர்ணே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
127. ஓம் ஸ்ரீ ஸர்வ மங்கள மந்த்ர புஷ்பம் ஸமர்ப்பயாமி.

                                                                                                            குபேர முத்திரை

                                                                                                            வாழ்க்கையில் நினைத்த காரியங்களில் வெற்றி பெற குபேர முத்திரை.

                                                                                                            குபேர முத்திரை



                                                                                                            வாழ்க்கையில் நினைத்த காரியங்களில் வெற்றி பெற
                                                                                                            பெரு விரல் நுனியுடன் சுட்டுவிரல், நடுவிரல் நுனிகளை இணைப்பதே குபேர முத்திரை ஆகும். அதிகமாய் அழுத்தம் தராது.விரல்களை சற்று தளர்வாக பிடித்தல் வேண்டும்.பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வரை இந்த முத்திரையை செய்யலாம்.

                                                                                                            இந்த முத்திரையானது நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூத சக்திகளை ஒருங்கிணைத்து நினைத்த காரியத்தை சித்தியாக்கும் சக்தியாக மாற்றமடையும். இதன் மூலம் வாழ்வு வளமாகும் என்பதால் இதனை குபேர முத்திரை என்று அழைக்கிறார்.

                                                                                                            அனைத்து செல்வங்களுக்கும் அதிபதியாகக் கருதபடுபவர் குபேரன். குபேர முத்திரையை செய்வதன் மூலம் விரும்பிய வளங்களைப் பெறலாம். எனவேதான் இந்த முத்திரையை குபேர முத்திரை என்று அழைக்கிறார்கள்.

                                                                                                            செய்முறை:

                                                                                                            பெருவிரல்,சுட்டுவிரல்,நடுவிரல் ஆகிய மூன்று விரல்களின் நுனிகளும் ஒன்றாகத் தொடும்படி இணையுங்கள். பிற இரண்டு விரல்களும் மடித்து உள்ளங்கையைத் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும்.இரண்டு கைகளிலும் ஒரே நேரத்தில் செய்யவும்.இந்த முத்திரையைச் செய்யும்முன் நீங்கள் எதைபெற விரும்புகிறீர்களோ அதைக் குறித்து தீவிரமாக மனதில் சிந்தனை செய்யுங்கள்.சில நிமிடங்களுக்குப் பின் இந்த முத்திரையைச் செய்தபடியே அந்தச் சிந்தனையைத் பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் செய்வது மிகச் சிறந்த பலங்களைத் தரும். முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் அமர்ந்தபடியே கூட இந்த முத்திரையை செய்யலாம்.அமரும் முறையை விட இந்த முத்திரையைப் பொறுத்தவரை நாம் விரும்புவது எதுவோ அது குறித்த ஒரு முகமான தீவிரமான சிந்தனையே மிக முக்கியமாகும்.

                                                                                                            எவ்வளவு நேரம்?

                                                                                                            *குறைந்தபட்சம் பத்து நிமிடங்கள் என ஒரு நாளில் மூன்று முதல் நான்கு தடவைகள் வரை செய்யலாம்.

                                                                                                            *ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 45 நிமிடங்கள் வரை செய்யலாம்,அதற்கு மேல் வேண்டாம்.

                                                                                                            *ஆல்பா மைண்ட் கண்ட்ரோல் முறையில் சிறு சிறு விஷயங்களை அடைய (உதாரணமாக ஒரு துணி வாங்கச் செல்கையில் விரும்பிய நிறத்தில் துணி அமைய, டிரெயின் டிக்கெட் ரிசர்வ் செய்யச் செல்லும் போது டிக்கெட் கிடைக்க என சிறு சிறு அன்றாடத் தேவைகளுக்கும்)இந்த முத்திரையைப் பயன் படுத்தலாம் இவற்றுக்காச் குபேர முத்திரையை ஒரு சில நிமிடங்கள் செய்தாலே போதுமானது.

                                                                                                            எப்படி வேலை செய்கிறது?

                                                                                                            பெருவிரல், சுட்டு விரல், நடுவிரல் ஆகிய மூன்று விரல்களையும் இணைக்கும் போது கீழ்காணும் நிகழ்வுகள் நடை பெறுகிறது.

                                                                                                            *நெறுப்பு, காற்று, ஆகாயம் ஆகிய மூன்று பஞ்சபூதங்கள் தூண்டப்படுகின்றன.

                                                                                                            *மனிபூரகச் சக்கரம், அனாஹதம், விஷுதி, ஆகிய சக்கரங்கள் தூண்டப்படுகிண்றன.

                                                                                                            *செவ்வாய்,குரு(வியாழன்), சனி, ஆகிய கிரகங்களின் சக்திகள் அதிக அளவில் உடலினுள் கிரகிக்கப்படுகின்றன.

                                                                                                            *இந்த மூன்று விரல்களோடு இணைக்கப் பட்டுள்ள சக்தி ஓட்டப் பாதைகள் தூன்டப்படுகின்றன.
                                                                                                            இத்தனையும் நிகழும் போது, நமது ஆழ்மனம்(Sub consious mind) விழித்தெழுகிறது. நாம் எதை வேண்டுமென தீவிரமாகச் சிந்திக்கிறோமோ அந்த எண்ணம் நம் ஆழ் மனதில் ஆழமாகப் பதிகிறது.
                                                                                                            உதாரணமாக நீங்கள் ஒரு புதிய தொழிலைத் துவங்கும் போது இந்தத் தொழில் வெற்றி பெற வேண்டும் என்று ஒரு முகமாக தீவிரமாகச் சிந்தித்தபடி குபேர முத்திரையைச் செய்யும்போது அந்தச் சிந்தனை உங்கள் ஆழ்மனதில் பதிந்துவிடுகிறது.

                                                                                                            ஆழ்மனதில் ஒரு சிந்தனையை விதைத்து விட்டால் அதைச் செயலாக்கும் வழிமுறைகளை உங்களது உள்ளுணர்வு உங்களுக்குக் காட்டிக் கொண்டேயிருக்கும்.நாம் உறங்கும் போதும் கூட ஆழ்மனது உறங்குவதுயில்லை.அதில் விதைக்கப்பட்ட சிந்தனையைச் செயலாக்குவது எப்படி என திட்டங்களைத் தீட்டிக் கொண்டேயிருக்கும்.

                                                                                                            ஹிப்னாடிசம்,மெஸ்மரிசம், போன்ற கலைகளும் இதையே செய்கின்றன, நமது புற மனதை (Consious Mind) ஹிப்னாடிசம் மூலம் தூங்க வைத்து ஆழ்மனதில் எண்ணங்களை விதைப்பதே ஹிப்னாடிசத்தின் அடிப்படை.

                                                                                                            குபேர முத்திரையில் எந்தவிதமான மந்திரமும் கிடையாது. நமது எண்ணங்களை ,விருப்பங்களை நமது ஆழ்மனதில் பதிய வைக்கும் ஒரு தந்திர வழியே (Tantra)இந்தக் குபேர முத்திரை!

                                                                                                            பலன்கள்.

                                                                                                            *நினைத்த காரியங்களில் வெற்றி பெறலாம்.

                                                                                                            *வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளலாம்.

                                                                                                            புதன், 2 ஆகஸ்ட், 2017

                                                                                                            ஆடிப்பெருக்கு வழிபாட்டு முறைகள்

                                                                                                            ஆடிப்பெருக்கு வழிபாட்டு முறைகள்



                                                                                                            பெருக்கு என்றால் பெருகுவது என்று அர்த்தம். ஆடி மாதத்தில்தான் தென்மேற்குப் பருவ மழை வலுவடைந்து காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும். அப்படி ஆடியில் காவிரி பெருக்கெடுத்து வருவதைத்தான் மக்கள் ஆடிப்பெருக்கு என்று கொண்டாடுகிறார்கள். காவிரி பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீட்டு எல்லையான ஒகேனக்கல்லில் நுழையும்போது தொடங்கி, காவிரி சமுத்திர ராஜனைக் கலக்கும் பூம்புகார் வரையிலும் இருக்கிற மக்களால் கொண்டாடப்படும் பெருந்திருவிழா இந்த ஆடிப்பெருக்கு. தங்களை வாழவைக்கும், வளப்படுத்தும் காவிரியை அதன் கரையோரப் பகுதிகளில் இருக்கும் மக்கள் சிறப்பிப்பதற்காகத் துவங்கப்பட்ட இந்த விழா இன்று ஒட்டுமொத்த தமிழகம் முழுவதிலும் எல்லாத் தரப்பு மக்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
                                                                                                            ஆடிப்பெருக்கு விழாவின்போது என்ன நடக்கும்?
                                                                                                            ஆடி மாதம் பதினெட்டாம் நாள் ஆற்றங்கரையோரம் முழுவதும் உற்சாகக் கோலாகலம்தான். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என்று எல்லோருக்கும் கொண்டாட்டம்தான் என்றாலும் குறிப்பாக இதைப் பெண்கள் திருவிழாவாகவே நடத்துவதைக் காண முடியும். காலையில் எழுந்து குளித்து முடித்து பூ, மஞ்சள், குங்குமம், வளையல், காதோலை கருகமணி, அரிசி, வெல்லம் என்று மங்கலப் பொருட்களோடு தன் வயதொத்தவர்களோடு கிளம்புவார்கள் பெண்கள். சிறு தேர் உருட்டும் சிறுமிகள், சில்லிக்கோடு அடிக்கும் இளம் பெண்கள், தற்போதுதான் திருமணமாகியிருக்கும் குமருகள், திருமணமான இளம் மற்றும் நடுத்தர வயதுப் பெண்கள், வயோதிகப் பெண்கள் என்று எல்லாப் பருவத்தினரும் ஆற்றங்கரைக்குப் போகக் கிளம்புவதில் இருந்தே கொண்டாட்டம் ஆரம்பித்துவிடும்.
                                                                                                            ஆற்றங்கரைக்குப் போவதற்கு முன் கலப்பு சாதம் செய்ய அதிகாலை நான்கு மணியில் இருந்தே வேலை தொடங்கிவிடும். ‘‘கொஞ்சம் எலுமிச்சை பழத்தை பிழிஞ்சு கொடுங்களேன், தேங்காயை துருவி கொடுங்களேன்’’ என்ற குரல்கள் ஒலித்துக்கொண்டிருக்கும். எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, சர்க்கரைப் பொங்கல் என்று எல்லாம் செய்து முடித்து அவற்றை ஆற்றுக்கு எடுத்துப் போக பாத்திரத்தில் அடைத்துவைப்பார்கள். அதன் பிறகு காலை சிற்றுண்டி தயார் செய்து முடிப்பார்கள். அதன் பிறகு ஆற்றுக்குக் கிளம்பும் வைபவம் தொடங்கும்.
                                                                                                            பெண்கள் செம்பில் மஞ்சளை வைத்து எடுத்துக்கொண்டு தன் பிள்ளைகள், ஓரகத்தி, அவர்களின் பிள்ளைகள், நாத்தனார், பக்கத்து வீட்டுத் தோழி என்று பட்டாளத்தோடு தேர் அசைவதுபோல தெருவைக் கடப்பார்கள். சிறு பிள்ளைகள் பனைச் சக்கரத்தால் செய்யப்பட்ட சிறிய சப்பரத்தை இழுத்துக்கொண்டு முன்னே போவார்கள். எல்லோருமாக ஆற்றை அடைந்ததும் ஒவ்வொரு பெண்ணும் தனக்கான ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து அந்த இடத்தை சாணம் போட்டு மெழுகி சுத்தப்படுத்து அதில் வாழை இலை விரித்துவைத்து வெற்றிலை வைத்து அதில் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைப்பார்கள். அதற்கு பூப்போட்டு இலையில் மஞ்சள், குங்குமம், தாலிச்சரடு, காதோலை, கருகமணி, வளையல், பூ, அரிசி, வாழைப்பழம், வெல்லம், பேரிக்காய், ஜாக்கெட் துணி ஆகியவற்றை வைத்து அதற்கு தேங்காய் உடைத்து சூடம் காட்டி வணங்குவார்கள். பிறகு அவை எல்லாவற்றையும் ஒரு வாழைப் பட்டையில் வைத்து ஆற்றில் மிதக்க விடுவார்கள். அந்த விளக்கு எரிந்துகொண்டே மற்ற பொருட்களோடு மிதந்து செல்வது காவிரியின் உயிர்ப்பை உலகத்துக்கு உணர்த்துவதாக இருக்கும்.
                                                                                                            வயதில் மூத்த பெண்கள் நூல் கயிற்றில் மஞ்சள் தடவி ஆண்களுக்குக் கைகளிலும், பெண்களுக்குக் கழுத்திலும் கட்டிவிடுவார்கள். பெரியவர்களின் காலில் விழுந்து ஆசி வாங்குவதும் நடக்கும். பிறகு கொண்டு வந்திருக்கும் பதினெட்டு வகையான பதார்த்தங்களையும், கலப்பு சாதத்தையும் எல்லோருமாக உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு ஆற அமர வீடு திரும்புவார்கள். காவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கச் செய்யப்படும் இந்த விழா ஒரு வகையில் குடும்ப, சமூக விழாவாக நடக்கும்.
                                                                                                            வீட்டிலேயே கொண்டாடலாம்..!
                                                                                                            காவிரியின் கரையோரம் உள்ளவர்கள்தான் ஆடிப்பெருக்கு கொண்டாடுவார்கள்; நாம் என்ன செய்வது என்று யாரும் கவலைபட வேண்டாம். நம் வீட்டிலேயே ஆடிப்பெருக்கை அற்புதமாகக் கொண்டாடலாம் என்கிறார் ஆச்சாள்புரம் சம்பந்த சிவாச்சாரியார். எப்படிக் கொண்டாட வேண்டும் என்பதையும் அவர் விளக்குகிறார்: “ஒரு செம்பில் அரைத்த மஞ்சளைப் போட்டு நிறைகுடத்திலிருந்து அந்தச் செம்பில் நீர் எடுத்துக்கொள்ள வேண்டும். மஞ்சள், நீரில் கலந்திருக்கும். பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து அதன் முன் செம்பை வைத்துத் தண்ணிரில் பூக்களைப் போட வேண்டும். கங்கை, காவிரி, யமுனை, நர்மதை ஆகிய புண்ணிய நதிகளை மனதில் நினைத்து, ‘எங்கள் மூதாதையர் உங்களைப் புனிதமாகக் கருதி வழிபட்டதுபோல் நாங்களும் வழிபடுகிறோம். அவர்களுக்கு அருள் செய்ததுபோல எங்களுக்கும் அருள் செய்யுங்கள்’ என்று மனதார வேண்டிக் கற்பூர ஆரத்தி காட்டுங்கள். காவிரியையும், தாமிரபரணியையும் நமக்களித்த அகத்தியரை மனதார நினைத்து வழிபட வேண்டும். பூஜை முடிந்ததும் செம்பிலுள்ள நீரைத் தோட்டத்தில் இருக்கும் செடிகொடிகளுக்கு ஊற்றிவிட வேண்டும். சர்க்கரைப் பொங்கல் செய்து படைத்தால் ஆடிப்பெருக்கு விழா நிறைவாகும்” என்கிறார் சம்பந்த சிவாச்சாரியார்
                                                                                                            .

                                                                                                            செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

                                                                                                            நரசிம்ம ஜெயந்தி

                                                                                                             நரசிம்ம ஜெயந்தி


                                                                                                            நரசிம்மர் பாரதம் முழுதும் வணங்கப்பட்டாலும், தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில் தான், அவருக்குத் தனிக்கோவிலும், சிறப்பு வழிபாடும் அதிகம். வைகாசி மாதம் வளர்பிறை சதுர்தசியன்று சூரியன் மறையும் நொடியில் (பகலுமின்றி, இரவுமின்றி) மாலை சந்திப்பொழுதில் நரசிம்மரை வழிபடுவதே நரசிம்ம ஜெயந்தியாகும்.

                                                                                                            இவ்விரதத்தை அனுஷ்டித்ததாலேயே, கயவனாக இருந்த சுவேதன், மறுபிறவியில், பிரகலாதனாகப் பிறந்து, பெருமாள் அருள் பெற்றதாக, விஷ்ணுவே கூறியிருக்கிறார்.இறைவனை வழிபட எந்நேரமும் உகந்ததே என்றாலும், நம் வசதி கருதி, சில நல்-நிகழ்வுகளோடு தொடர்புடைய நாட்களில் அல்லது நேரத்திலாவது வழிபட வேண்டும் என்பதற்காகவே சதுர்த்தியில்/ சஷ்டியில்செவ்வாய்/வெள்ளியில்; காலை அல்லது மாலையில் என்று வெவ்வேறு சமயத்தில் வெவ்வேறு தெய்வங்களை வழிபடுவது மரபாக உள்ளது.

                                                                                                            அன்றாட நரசிம்மர் வழிபாட்டில், பிரதோஷ வேளை (சூரியன் மறைவுக்கு முன் 1.30 மணியும், பின் 1.30 மணியும்) ஆக மொத்தம் (மாலை 4.30 முதல் 7 .30 வரை 3 மணி) நேரம் சிறப்பு. அதுவும், சதுர்தசி நாளில் சிறப்பு. சித்திரை மாத வளர்பிறை அக்ஷய திருதியை வழிபாடும் சிறப்பு.
                                                                                                            நரசிம்மர் விஷ்ணுவே என்பதால், பொதுவாக, விஷ்ணு வழிபாட்டில் பயன்படுத்தும், மலர்கள், வஸ்திரம், நைவேத்யம் ஆகியவற்றை உபயோகிக்கலாம். எனினும் செவ்வரளி போன்ற சிகப்பு வண்ண மலர்களும், சர்க்கரைப் பொங்கல், பானகம் போன்ற இனிப்புகளும் சிறப்பு. ஹோமத்திற்கு தேன் கலந்த மல்லிகை மலர்கள் உகந்தது.
                                                                                                            குளுமைப் பொருளான சந்தனத்திலும் செஞ்சந்தனமும், சந்தனாதி தைலக்காப்பும் சிறப்பு. அவரவருக்கு ஏற்றபடி 1,3,6,8,10,19,32,62 அக்ஷர நரசிம்ம மந்திரத்தை ஜபிக்கலாம்; துதிகளைக் கூறிடலாம்.

                                                                                                            ஸ்ரீ நரசிம்ம ப்ரபத்தி:

                                                                                                            முற்பிறவிகளில் பித்ருக்களைப் பூஜை செய்யாமல் இருந்திருப்பது, தெய்வத்தையும் திருக்கோயில்களையும் நிந்திப்பது, ஒற்றுமையாக இருந்த குடும்பத்தை கோள் சொல்லிப் பிரிப்பது, வாயில்லா ஜீவன்க ளைத் துன்புறுத்துவது போன்ற பாவங்களினால்தான் இத்தகைய துன்பங்கள் மறுபிறவிகளில் ஏற்படுவதாக பாரதத் திருநாட்டை ஆண்ட போஜன் என்ற மன்னன், தனது நீதிநூலில் கூறியுள்ளார்.

                                                                                                            தினமும் காலையில் நீராடியபின்பு, கீழ்கண்ட ஸ்ரீ நரசிம்ம ப்ரபத்தி என்ற ஸ்லோகத்தை 48 தடவை சொல்லி, ஸ்ரீ லட்சுமி நரசிம்மரின் படத்தை வைத்து பூஜித்து வரவும். இந்த அதி அற்புத, மகத்தான சக்திவாய்ந்த ஸ்லோகம் உலகப் பிரசக்தி பெற்ற ஸ்ரீமத் அகோபில மடத்தின் 44 வது பட்டம் அழகிய சிங்கரும் திருவரங்கத்தின் கோபுரத்தை நிர்மாணித்தவருமான ஸ்ரீ முக்கூர் ஸ்வாமிகள் அருளிய சக்தி மிகுந்த ஸ்லோகமாகும் இது,
                                                                                                            உங்கள் துன்பத்தையும் துயரத்தையும் போக்குவதற்கு இதைவிட சிறந்த பரிகாரம் கிடையாது.இந்த ஸ்லோகத்தை சொல்லி ஸ்ரீ லட்சுமி நரசிம்மரைப் பூஜித்து பிறகு, காய்ச்சிய பசும்பால் அல்லது வெல்லப் பானகம் நைவேத்தியம் செய்து நீங்களும், உங்கள் குடும்பத்திலுள்ள மற்றவர்களும் அதைப் பிரசாதமாகச் சாப்பிட்டு வரவும். கைமேல் பலனளிக்கும் மகத்தான வீர்யம் வாய்ந்த புண்ணிய ஸ்லோகம் இது.
                                                                                                            ஸ்ரீ நரசிம்ம ப்ரபத்தி
                                                                                                            --------------------------------
                                                                                                            1. மாதா ந்ருஸிம்ஹ: பிதா ந்ருஸிம்ஹ:
                                                                                                            2. ப்ராதா ந்ருஸிம்ஹ: ஸகா ந்ருஸிம்ஹ:
                                                                                                            3. வித்யா ந்ருஸிம்ஹ: த்ரவிணம் ந்ருஸிம்ஹ:
                                                                                                            4. ஸ்வாமி ந்ருஸிம்ஹ: ஸகலம் ந்ருஸிம்ஹ:
                                                                                                            5. இதோ ந்ருஸிம்ஹ: பரதோ ந்ருஸிம்ஹ:
                                                                                                            6. யதோ யதோ யாஹி: ததோ ந்ருஸிம்ஹ:
                                                                                                            7. ந்ருஸிம்ஹ தேவாத் பரோ நகஸ்சித்:
                                                                                                            8. தஸ்மான் ந்ருஸிம்ஹ சரணம் ப்ரபத்யோ:
                                                                                                            தமிழாக்கம்
                                                                                                            ----------------
                                                                                                            1. நரசிம்மனே தாய்; நரசிம்மனே தந்தை
                                                                                                            2. சகோதரனும் நரசிம்மனே; தோழனும் நரசிம்மனே
                                                                                                            3. அறிவும் நரசிம்மனே; செல்வமும் நரசிம்மனே
                                                                                                            4. எஜமானனும் நரசிம்மனே; எல்லாமும் நரசிம்மனே
                                                                                                            5. இந்த லோகம் முழுவதிலும் நரசிம்மனே; பரலோகத்திலும் நரசிம்மனே
                                                                                                            6. எங்கெங்கு செல்கிறாயோ அங்கெல்லாம் நரசிம்மனே
                                                                                                            7. நரசிம்மனைக் காட்டிலும் உயர்ந்தவர் ஒருவரும் இல்லை.
                                                                                                            8. அதனால் நரசிம்மனே! உம்மை சரணடைகிறேன்

                                                                                                            வீட்டில் தெய்வசக்தி அதிகரித்து – பிரச்சினைகள் விலகிட – நாம் அவசியம் செய்ய வேண்டியவைகள்!

                                                                                                            வீட்டில் தெய்வசக்தி அதிகரித்து – பிரச்சினைகள் விலகிட – நாம் அவசியம் செய்ய வேண்டியவைகள்!

                                                                                                            வீட்டில் தெய்வசக்தி அதிகரித்து… பிரச்சினைகள் விலகிட…, நாம் அவசியம் செய்ய வேண்டியவைகள்! 
                                                                                                            இந்த பூவுலகில் பிறந்த ஒவ்வொரு ஜீவராசிக்கும் வெவ்வேறு விதமான 
                                                                                                            பிரச்சினைகள் இருந்து கொண்டே இருக்கின்றன. அதிலும் மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் சந்திக்கும் பிரச்சனைகள் வித்தியாசமானவை! ஒருவருக்கு பணம் இல்லையே என்ற பிரச்சனை மற்றொருவருக்கு பணம் இருக்கிறதே என்ற பிரச்சனை 
                                                                                                            பொதுவாக வாழ்க்கையில் பிரச்சினைகள் வரலாம். ஆனால் பிரச்சினையே வாழ்க்கையாக ஆகிவிடக்கூடாது. குடும்பத்தில் ஏற்படும் பல பிரச்சினைகளையும் எதிர் கொள்ள பரிகாரம் உள்ளது.
                                                                                                            பிரச்சினைகள், தோஷங்கள் தீர எளிய வழிபாட்டு பரிகாரங்கள்
                                                                                                            தினமும் மாலைநேரம் வீட்டில் விளக்குஏற்றி வழிபாடு செய்யலாம். பசுநெய் அல்லது நல்லெண்ணெய்தீபம் ஏற்றலாம். கோலம் போட்ட இடத்தின்மீது விளக்கு வைக்க வேண்டும். புள்ளிக்கோலத்திற்கு உறவுகளை இணைக்கும் ஆற்றல் உண்டு. வீட்டை வாரம் ஒரு முறையேனும் சுத்தம் செய்து, சாம்பிராணிப் புகை போடுதல் உத்தமம்.
                                                                                                            தெய்வப் படங்களை திசை பார்த்து வைத்து வழிபட வேண்டும். கற்பக விநாயகர் படத்தை வடக்குப் பார்த்து வைத்தால் யோகம். குரு பகவான் படத்தை, நம்மைப் பார்க்கும் விதம் வைத்து வழிபட வேண்டும்.

                                                                                                            பூரண கும்பத்தின் முகத்தில் அதிகாலையில் விழித்தல் நல்லது. லட்சுமி கடாட்சம் உருவாகும். மயில் இறகு, சங்கு போன்றவற்றை வீட்டில் வைத் தல், தெய்வீக மூலிகைகள் துளசி, திருநீற்றுப் பச்சை, வில்வம் வைத்தல், நடையில் சங்கு பதித்தல், நிலைக்கண்ணாடியை வீட்டின் முகப்பில் வைப்பது போன்றவை திருஷ்டி தோஷம் போக்கும்.
                                                                                                            இவ்வாறு செய்வதால் பிரச்சினை தீருமா? என்று நினைக்கக் கூடாது. வீட்டில் தெய்வ சக்தி அதிகரித்தால் பிரச்சினைகள் விலகி ஓடும்.

                                                                                                            துர்க்கை அம்மன் வழிபாட்டு முறைகள்

                                                                                                            துர்க்கை அம்மன் வழிபாட்டு முறைகள்



                                                                                                            1. அஷ்டமி தினத்தில் துர்க்கைக்கு அரளி, ரோஜா, செந்தாமரை, செம்பருத்தி போன்ற சிவப்பு புஷ்பங்கள் கொண்டு அர்ச்சனை செய்யலாம். சிவப்பு வஸ்திரம் அம்பாளுக்கு அணிவிக்கலாம்.


                                                                                                            2. துர்க்கைக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி சண்டிகைதேவி சகஸ்ர நாமம் கொண்டு தான் அர்ச்சனை செய்ய வேண்டும். 

                                                                                                            3. துர்க்கையின் அற்புதத்தை விளக்கும் துர்கா சப்தசதி என்ற 700 ஸ்லோகங்கள் படிப்பது நல்ல மனநிலையை ஏற்படுத்தும்.

                                                                                                            4. பிறவி வந்து விட்டால் கஷ்டங்கள் துன்பங்கள் அதிகம். அந்த துக்கத்தைப் போக்குபவளே துர்காதேவி.

                                                                                                            5. கோர்ட்டு விவகாரங்கள் வெற்றி பெறவும், சிறை வாசத்திலிருந்து விடுபடவும் துர்காதேவியை சரண் புகுந்தால் வேண்டும். 

                                                                                                            6. மிகச் சிறிய விஷயத்திலிருந்து, பெரிய பதவி அடைய முயற்சிக்கும் விஷயம் வரை, நினைத்தது நடக்க வேண்டுமானால் துர்காதேவியை பிரார்த்திக்க வேண்டும்.

                                                                                                            7. பரசுராமருக்கு அமரத்வம் அளித்தவள் துர்காதேவி.

                                                                                                            8. துர்க்கையின் உபாஸனை மனத்தெளிவை தரும்.

                                                                                                            9. துர்க்கையை அர்ச்சிப்பவர்களுக்கு பயம், மனத்தளர்ச்சி, சோகம் ஏற்படுவதில்லை.

                                                                                                            10. ஸ்ரீ துர்கையின் வாகனம் சிம்மம். இவளுடைய கொடி ``மயில்தோகை''.

                                                                                                            11. ஸ்ரீ துர்க்காவை பூஜை செய்தவன் நிச்சயமாக மோட்சத்தையும் அடைவான்.

                                                                                                            12. ஒரு வருஷம் துர்க்கையை பூஜித்தால் முக்தி அவன் கைவசமாகும்.

                                                                                                            13. தாமரை இலையில் தண்ணீர் போல துர்க்கா அர்ச்சனை செய்பவனிடத்தில் பாதகங்கள் எல்லாம் தங்குவதில்லை.

                                                                                                            14. தூங்கும் போதும் நின்ற போதும், நடக்கும் போதும் கூட தேவி துர்க்கையை வணங்குபவனுக்கு சம்சார பந்தம் ஏற்படுவதில்லை.

                                                                                                            15. ஸ்ரீ துர்கா தேவிக்கு மிகப்பிடித்த புஷ்பம் நீலோத்பலம். இது எல்லா புஷ்பங்களையும் விட நூறு மடங்கு உயர்ந்தது.

                                                                                                            16. துர்க்கையின் முன் புல்லாங்குழல் வாத்யம் வாசிக்கக் கூடாது.

                                                                                                            17. துர்க்கையை ஒன்பது துர்க்கைகளாக ஒன்பது பெயரிட்டுக் கூறுகின்றது மந்திர சாஸ்திரம். 1. குமாரி, 2. த்ரிமூர்த்தி, 3. கல்யாணி, 4. ரோஹிணி, 5. காளிகா, 6. சண்டிகை, 7. சாம்பவி, 8. துர்கா, 9. சுபத்ரா.

                                                                                                            18. சுவாஸினி பூஜையிலும் 1. சைலபுத்ரி, 2. ப்ரம்ஹசாரிணி, 3. சந்த்ரகண்டா, 4. கூஷ்மாண்டா, 5. மகாகௌரி, 6. காத்யாயனி, 7. காளராத்ரி, 8. மகாகௌரி, 9. சித்திதார்ரி என்ற ஒன்பது துர்க்கைகள் இடம் பெறுகின்றனர்.

                                                                                                            19. துர்க்கை என்ற பெயரையும் சதாக்சி என்ற பெயரையும் எவர் கூறுகின்றனரோ அவர் மாயையினின்று விடுபடுவர்.

                                                                                                            20. துர்க்கை என்ற சொல்லில் `த்', `உ', `ர்', `க்', `ஆ' என்ற ஐந்து அட்சரங்கள் உள்ளன. `த்' என்றால் அசுரர்களை அழிப்பவள். `உ' என்றால் விக்னத்தை (இடையூறை) அகற்றுபவள். `ர்' என்றால் ரோகத்தை விரட்டுபவள். `க்' என்றால் பாபத்தை நலியச் செய்பவள். `ஆ' என்றால் பயம் சத்ரு இவற்றை அழிப்பவள் என்பது பொருளாகும்.