ஞாயிறு, 16 செப்டம்பர், 2018

திருக்கருகாவூர் கர்ப்பரக்ஷாம்பிகை 108 போற்றி



    see my channel Tamilnattu samayal .please subscribe and support my channel.baby with parvathi image க்கான பட முடிவுதிருக்கருகாவூர் கர்ப்பரக்ஷாம்பிகை 108 போற்றி
    குழந்தையை பெற்றெடுத்த பின்பு தான் எல்லா பெண்களும் தாங்கள் இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக உணர்கின்றனர். பழங்காலத்தில் அமைதியான வாழ்க்கை, நல்ல சத்தான உணவுகளை உண்ட நம் நாட்டு பெண்கள் ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுத்தனர். ஆனால் இக்காலங்களில் பெண்கள் பலருக்கு குழந்தை பிறக்காத நிலை ஏற்படுகிறது. அதிலும் சில பெண்களுக்கு உடல் நல குறைபாடுகளாலும், எதிர்பாராத நிகழ்வுகளாலும் கருச்சிதைவு உண்டாகிறது. இப்படிப்பட்டவர்கள் வழிபட வேண்டிய ஸ்ரீ கர்பரக்ஷாம்பிகை போற்றி மந்திரம் இது.
    amman
    திருக்கருகாவூர் கர்ப்பரக்ஷாம்பிகை 108 போற்றி
    1. ஓம் கருகாக்கும் நாயகியே போற்றி
    2. ஓம் கர்ப்ப ரக்ஷாம்பிகையே போற்றி
    3. ஓம் கருகாவூர் தேவியே போற்றி
    4. ஓம் கஷ்டங்கள் தீர்ப்பாய் போற்றி
    5. ஓம் ஈஸ்வரனின் இதயக்கனியே போற்றி
    6. ஓம் கருகாவூர் எந்தையின் கண்மணியே போற்றி
    7. ஓம் முல்லைவனநாதரின் சுந்தரியே போற்றி
    8. ஓம் மூவுலகும் காக்கும் அன்னையே போற்றி
    9. ஓம் மைந்தன் வேண்ட வரம் தருவாய் போற்றி
    10. ஓம் மாதர் மனம் மகிழ்ச் செய்வாய் போற்றி
    11. ஓம் எங்கும் தீராத குறை தீர்ப்பவளே போற்றி
    12. ஓம் எங்களை என்றும் காப்பவளே போற்றி
    13. ஓம் பிள்ளைக் கலி தீர்க்கும்பேரொளியே போற்றி
    14. ஓம் பிறவிப் பயன் தந்து அருள்வாய் போற்றி
    15. ஓம் பிண்டமாய் இருக்கும் கருவளர்ப்பாய் போற்றி
    16. ஓம் பிரம்மனின் படைப்புக்கு உயிர் தருவாய் போற்றி
    17. ஓம் முல்லைவனத்தில் அரசாள்வாய் போற்றி
    18. ஓம் நித்திருவர் தொழுத நித்திலமே போற்றி
    19. ஓம் நற்றவத்திற்கு அருளும் நாயகியே போற்றி
    20. ஓம் நாடிவரும் பக்தர் துயர்களைவாய் போற்றி
    21. ஓம் சர்வ வல்லமை பெற்ற ஈஸ்வரியே போற்றி
    22. ஓம் சர்வேஸ்வரனின் சரிபாதியே போற்றி
    23. ஓம் சங்கடங்கள் தீர்க்கும் சங்கரியே போற்றி
    24. ஓம் சார்ந்து நிற்போரை ரஷிப்பாய் போற்றி
    25. ஓம் பெண்கள் கருவறையை காப்பவளே போற்றி
    26. ஓம் பிரியமுடன் எங்களை வாழ்த்துவாய் போற்றி
    27. ஓம் பாதியில் கலையாத கரு தந்தாய் போற்றி
    28. ஓம் பாரினில் மகிழ்வான் வாழ்வளிப்பாய் போற்றி
    29. ஓம் நெய்யாலே படிமெழுக நீ மகிழ்வாய் போற்றி
    30. ஓம் மெய்யான பக்திக்கு உருகிடுவாய் போற்றி
    31. ஓம் தூய்மையுடன் வணங்குவோர் துயர்துடைப்பாய் போற்றி
    32. ஓம் வாய்மையுடன் வரம் தந்து வளம் தருவாய் போற்றி
    33. ஓம் வேதிகைக்கு அருள் சுரந்த அன்னையே போற்றி
    34. ஓம் வேண்டுபவர் அருகினில் வந்திடுவாய் போற்றி
    35. ஓம் வனிதையரின் வாழ்விற்கு வரமாளாய் போற்றி
    36. ஓம் வாழ்நாளில் வழிகாட்டும் வடிவழகே போற்றி
    37. ஓம் கலைந்த கர்ப்பம் உருவாக்கி உயிர் கொடுத்தாய் போற்றி
    38. ஓம் காமதேனு அழைத்து தாய்ப்பால் தந்தாய் போற்றி
    39. ஓம் தம்பதியாய் வருவோர்க்கு தஞ்சமளிப்பாய் போற்றி
    40. ஓம் தாயே உன் அருள் என்றும் தர வேண்டும் போற்றி
    41. ஓம் வலக்கரத்தால் அபயமளிக்கும் வனிதாமணியே போற்றி
    42. ஓம் இடக்கரத்தால் கர்ப்பத்தைக் காத்து நிற்ப்பாய் போற்றி
    43. ஓம் பத்ம பீடத்தில் அமர்ந்திருக்கும் பார்வதியே போற்றி
    44. ஓம் பிரசவத்தில் துணையிருக்கும் பெரிய நாயகியே போற்றி
    45. ஓம் கருகாமல் கருகாக்கும் கண்மணியே போற்றி
    46. ஓம் கர்ப்புரியில் வசிக்கும் கற்பகமே போற்றி
    47. ஓம் அகில உலகம் காக்கும் லோகநாயகியே போற்றி
    48. ஓம் அன்னை என்ற அருள் தந்து துயர்தீர்ப்பாய் போற்றி
    49. ஓம் மாதவிவநேச்வரரின் மாதரசியே போற்றி
    50. ஓம் முல்லைக் கொடி இடையே வந்த மெல்லியனே போற்றி
    51. ஓம் ஈஸ்வரனின் இதயத்தில் வீற்றிருப்பாய் போற்றி
    52. ஓம் ஈரேழு லோகத்தையும் என்றும் காப்பாய் போற்றி
    53. ஓம் கடம்பவன சுந்தரியே கற்புக்கரசியே போற்றி
    54. ஓம் காலம் பூராவும் கர்ப்பை காப்பவளே போற்றி
    55. ஓம் கல்லாக நின்று கருணைபொழிவாய் போற்றி
    56. ஓம் கதிரொளியே கனகமே கண்மணியே போற்றி
    57. ஓம் மலடி என்ற பெயர் நீக்கும் மங்களமே போற்றி
    58. ஓம் மங்கையர்க்கு அருகிலிருக்கும் மந்திரமே போற்றி
    59. ஓம் மருத்துவர்க்கும் சக்தி தரும் மாதவியே போற்றி
    60. ஓம் மறுமையிலும் உடனிருந்தும் மகிழ்விப்பாய் போற்றி
    61. ஓம் அசையும் கருவை அலுங்காமல் காப்பாய் போற்றி
    62. ஓம் அகிலத்தின் இயக்கத்தில் ஆனந்திப்பாய் போற்றி
    63. ஓம் அம்மா என்றுன்னை ஆராதிப்பேன் போற்றி
    64. ஓம் அம்மாவாய் என்னை ஆக்கினாய் போற்றி
    65. ஓம் மகேஸ்வரி உலகையே ஆள்கிறாய் போற்றி
    66. ஓம் மங்கலங்கள் பல தரும் மாதாவே போற்றி
    67. ஓம் ஸ்ரீ சக்ர வாசினி ஸ்திரீ தனமே போற்றி
    68. ஓம் சத்ரு பயம் நீங்க சரண்டைந்தேன் போற்றி
    69. ஓம் பிள்ளையில்லா தவிப்புக்கு பிரசாதமளிப்பாய் போற்றி
    70. ஓம் பிரபஞ்சத்தில் பெண்களை காப்பவளே போற்றி
    71. ஓம் பகவானின் ப்ரீதியே பரதேவதையே போற்றி
    72. ஓம் லிரத்யனாமாய் என்னுடன் இருப்பவளே போற்றி
    73. ஓம் உற்சாகமாய் தோன்றும் கர்ப்பம் காப்பாய் போற்றி
    74. ஓம் ஓழுங்காய் என் பிள்ளை பிறக்கச் செய்வாய் போற்றி
    75. ஓம் உன்னையன்றி யாருமில்லை சரணடைந்தேன் போற்றி
    76. ஓம் ஊரார் மெச்ச நான் வாழ வாழ்த்துவாய் போற்றி
    77. ஓம் காந்த கண்ணழகி முத்துப்போல் பல்லழகியே போற்றி
    78. ஓம் மின்னும் மூக்கழகி புன் முறுவற் சிரிப்பழகி போற்றி
    79. ஓம் சொர்ணமும், வைரமும் மின்ன ஜொலிக்கும் அழகியே போற்றி
    80. ஓம் ஒய்யார வடிவழகி அருள் மணக்கும் பேரழகியே போற்றி
    81. ஓம் துக்கங்கள் தீர்க்கும் துணையே போற்றி
    82. ஓம் துன்பமில்லாத வாழ்வருளும் தேவியே போற்றி
    83. ஓம் சங்கடம் தீர்க்கும் சங்கரியே போற்றி
    84. ஓம் சலனமில்லா வாழ்வருளும் சாம்பவியே போற்றி
    85. ஓம் மழலைச் செல்வம் தர மனமிரங்குவாய் போற்றி
    86. ஓம் மாதர்க்கு நீ என்றும் அரணாவாய் போற்றி
    87. ஓம் கதியென்று நம்பினவருக்கு கருணைசெய்வாய் போற்றி
    88. ஓம் கண்டவுடன் கஷ்டம் தீர்க்கும் கெளரியே போற்றி
    89. ஓம் நெஞ்சிற் கவலைகள் நீக்குவாய் போற்றி
    90. ஓம் செஞ்சுடர் குங்குமம் தரித்தாய் போற்றி
    91. ஓம் அஞ்சுமென் மனத்துக்கு ஆறுதலே போற்றி
    92. ஓம் தஞ்சம் நீயே தாமரையே போற்றி
    93. ஓம் சக்தியின் வடிவமே போற்றி
    94. ஓம் பக்தியுடன் தொழுவோரின் பரதேவி போற்றி
    95. ஓம் நித்தமுன் அருள்வேண்டி நமஸ்கரித்தேன் போற்றி
    96. ஓம் நீயிருக்க பூவுலகில் பயமில்லை போற்றி
    97. ஓம் மனமெல்லாம் நீ நிறைந்தாய் மகேஸ்வரி போற்றி
    98. ஓம் மங்கள வாழ்வுதந்து மகிழ்விப்பாய் போற்றி
    99. ஓம் மங்கையரின் கர்ப்பை காக்கின்றாய் போற்றி
    100. ஓம் கருகாவூர் அரசியே கருணாரசமே போற்றி
    101. ஓம் தலைமுறை தழைக்கச் செய்யும் தாயே போற்றி
    102. ஓம் குலம் வாழ மகருளும் மாதே போற்றி
    103. ஓம் சகலரும் உன் சக்தி சார்ந்தோம் போற்றி
    104. ஓம் சோர்வு நீங்க உன் பாதம் சரணடைந்தோம் போற்றி
    105. ஓம் ஜயம் வேண்டும் ஜயம் வேண்டும் போற்றி
    106. ஓம் ஜகத்தினில் எங்கள் சக்தி ஓங்க வேண்டும் போற்றி
    107. ஓம் ஜீவனை ஜனிக்க வைக்கும் ஜகன்மாதா போற்றி
    108. ஓம் ஜயமங்களம் ஜயமங்களம் ஜனனியே போற்றி

    அனுமன் வழிபாட்டில் வெற்றிலை மாலையின் சிறப்புகள்….!


    அனுமன் வழிபாட்டில் வெற்றிலை மாலையின் சிறப்புகள்….! க்கான பட முடிவுஅனுமன் வழிபாட்டில் வெற்றிலை மாலையின் சிறப்புகள்….!

    விஷ்ணு அலங்கார பிரியர்.சிவபெருமான் அபிஷேகப் பிரியர்.அனுமனோ ஸ்தோத்திரப் பிரியர்."ஸ்ரீராம ஜெய ராமா,ஜெய ஜெய ராமா"என்ற ஸ்தோத்திரம் எங்கெல்லாம் ஒலிக்கிறதோ  அங்கெல்லாம் பிரசன்னமாகின்றவர்.

    தினம் இதனை 21 முறை உச்சரிக்க அனுமனின் ஆசி பரிபூரணமாய் கிடைத்திடும்.

    அனுமன் வழிபாடு எப்போதுமே காரிய ஸித்திக்குத் துணை நிற்கவல்லது என்று போற்றுகிறார்கள் பெரியோர். எந்தவொரு குழப்பமோ பயமோ இருந்தாலும் ஆஞ்சநேய பகவானைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, ஆத்மார்த்தமாக அவர் மேல் பக்தி செலுத்தினால், அந்தப் பக்தியால் நம்மிடம் உள்ள பயத்தைப் போக்கி  அருள்வார் அனுமன் என்பது ஐதீகம்.
    ஆஞ்சநேயருக்கு துளசிமாலை, வெற்றிலை மாலை, வடை மாலை சாத்தி வழிபடுவர். இதில் வெற்றிலை மாலை சாத்தினால் வெற்றி கிடைக்கும் என்பது  ஐதீகம். இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளுங்கள். ராவணனோடு யுத்தம் செய்த ராமர் முடிவில் வெற்றி பெற்றார். இச்செய்தியை அசோகவனத்தில்  இருக்கும் சீதைக்குத் தெரிவிக்க புறப்பட்டார் ஆஞ்சநேயர். அந்தச்செய்தி சீதையின் காதில் தேனாகப் பாய்ந்தது. மகிழ்ச்சிப் பெருக்கில் அவருக்கு பரிசளிக்க  விரும்பினாள். அவள் அமர்ந்திருந்த இடத்தில் வெற்றிலைக் கொடி படர்ந்திருப்பதைக் கண்டாள்.
    அந்த கொடியைப் பறித்து விட்டு, ‘நல்ல செய்தி சொல்லவந்த  உனக்கு இந்த வெற்றிலை மாலையைப் பரிசாக அளிக்கிறேன்’ ஏற்றுக் கொள் என்றாள். அன்னையின் கையால் கிடைத்த மாலையை ஏற்றுக்கொண்ட ஆஞ்சநேயர் மகிழ்ந்தார். இதன் அடிப்படையில் பக்தர்கள், தங்கள் செயல்களில் வெற்றி பெற வெற்றிலை மாலை சாத்தும் வழக்கம் உள்ளது.

    வலம்புரிச் சங்கை பூஜிப்பது எப்படி?

    லம்புரிச் சங்கை பூஜிப்பது எப்படி?valampuri sangu க்கான பட முடிவு

    லம்புரிச் சங்கு பூஜிக்கப்பட்டு வரும் இல்லங்களில், பிரம்மஹத்தி முதலான அனைத்துவகை தோஷங்களும் அகன்றுவிடும். ‘சங்க மத்யே ஸ்திதம் தோயம் ப்ராமிதம் சங்கரோபரி  அங்க லக்ஷ்ணம் மனுஷ்யானாம் ப்ரம்ம ஹத்யாதிகம் தஹேத்’ என்பது வேதவாக்கு. வீடு கட்டுபவர்கள் கைப்பிடி அளவுள்ள வலம்புரிச் சங்கை நிலை வாசலில் வைத்து, வாஸ்து விதிப்படி சங்குப் பதிப்பு முறை செய்துவிட்டால், அந்த வீடு மூன்று தலைமுறைக்கு செல்வச் செழிப்போடு குபேர சம்பத்துடன் விளங்கும் என்பது நம்பிக்கை.
    ஆலயங்களிலும் கும்பாபிஷேகம் நடைபெறும்போது, யாக சாலைகளில் எண்வகை மங்களப் பொருட்களில் ஒன்றாக வலம்புரிச் சங்கும் ஸ்தாபிக்கப்பட்டு பூஜிக்கப்படுகிறது. அதேபோன்று, கார்த்திகை மாத சோமவார (திங்கட்கிழமை) அபிஷேக காலங்களில் 108 சங்குகளுக்கு நடுவில் வலம்புரிச் சங்கு ஒன்றை வைத்து, சிவபெருமானாக வர்ணிக்கப்பட்டு பூஜிக்கப்படும்.அபிஷேக ஆராதனைகள் செய்த பிறகு, சங்கு தீர்த்தத்தை நம் மீது தெளிப்பார்கள். சங்கு நீர் உடலில் பட்டாலே அனைத்து துர்சக்திகளும் நம்மை விட்டு விலகும் என்கிறது சாஸ்திரம்.
    புராணங்களில் வலம்புரிச் சங்கு
    அமிர்தம் வேண்டி தேவ-அசுரர்கள் பாற்கடலைக் கடைந்தபோது வெளிவந்த 16 வகை தெய்விகப் பொருட்களில் வலம்புரிச்சங்கும் ஒன்று. அதை இடக்கையில் ஏந்தியபடி தோன்றிய மகாலட்சுமியை, திருமால் தமது வலக் கையில் பிடித்துக்கொண்டார் என்கின்றன புராணங்கள்.
    ஸ்ரீகிருஷ்ணபரமாத்மா வைத்திருந்த சங்குக்கு பாஞ்சஜன்யம் என்று பெயர். குருகுல வாசம் முடிந்ததும் குருநாதர் சாந்தீபனி முனிவரிடம், ”குருதட்சணையாக என்ன வேண்டும்?” எனக் கேட்டார் கிருஷ்ண பரமாத்மா. அவரும் அவர் மனைவியும், தங்கள் ஒரே மகனை
    பஞ்சஜனன் எனும் அசுரன் கடத்தி கடலுக்குள் வைத்திருப்பதாகவும், அவனை மீட்டுத் தரும்படியும் வேண்டினார்கள். கிருஷ்ணரும் அந்த அசுரனுடன் போரிட்டு குருவின் மகனை மீட்டு வந்தார். அந்த அசுரன் எரிந்து சாம்பலாகி ஒன்று திரண்டு சங்கு வடிவமானதால், அதற்கு ‘பாஞ்ச ஜன்யம்’ என்று பெயர்.
    கண்ணனைப் போன்று பாண்டவர்கள் ஐவருமே ஒவ்வொரு வகையான சங்கை கொண்டிருந்தனர்: தருமர்- அனந்த விஜயம்; அர்ஜுனன்- தேவதத்தம்; பீமன்- மகாசங்கம்; நகுலன்- சுகோஷம்; சகாதேவன்- மணிபுஷ்பகம்.
    கடலில் உருவாகும் சங்குகளில் பல வகை உண்டு. மணி சங்கு, துவரி சங்கு, பாருத சங்கு, வைபவ சங்கு, பார் சங்கு, துயிலா சங்கு, வெண் சங்கு, பூமா சங்கு, திரிசங்கு ஆகியவற்றில் வலம்புரியாகக் கிடைக்கும் சங்குகளுக்கு சக்தி அதிகம் என்கின்றன ஆகமசாஸ்திரங்கள்
    திருப்பதி பெருமாள் மணிசங்கு கொண்டிருக்கிறார். இவரைப் போன்றே திருவனந்தபுரம் ஸ்ரீஅனந்தபத்மநாப ஸ்வாமி பாருத சங்கும், திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் வைபவ சங்கும், திருக்கண்ணபுரம் ஸ்ரீசௌரிராஜ பெருமாள் துயிலா சங்கும் கொண்டு திகழ்கிறார்கள்.
    பூஜிப்பது எப்படி?
    வியாழக்கிழமை மாலையில் 5 முதல் 8 மணிவரையிலான குபேர காலம், வெள்ளிக்கிழமை காலை வேளை, பௌர்ணமி, திருவோணம் மற்றும் பூர நட்சத்திர நாட்களில் இந்த பூஜையைத் துவங்கி 32, 48, 54 அல்லது 63 நாட்கள் என்ற எண்ணிக்கையில் செய்து முடிக்கலாம்.
    விபூதியால் தேய்த்து சங்கை சுத்தம் செய்ய வேண்டும். அதன் மேற்பாகம் குறைந்தது 8 சந்தனப் பொட்டுகள் வைக்கவேண்டும்.   பின்னர், வாசனைத் திரவியங்களான ஏலக்காய், ஜாதிக்காய், கிராம்பு, பச்சைக் கற்பூரம், குங்குமப் பூ, துளசி, மஞ்சள் தூள் சிறிதளவு கலந்த நீரை சங்கினுள் இட்டு, மலர்களால் அலங்கரியுங்கள். அடுத்து ஷட்கோண கோலத்தின் மையத்தில் சிவப்புத் துணி விரித்து அதன் மீது சங்கை வைக்கவேண்டும். எதிரில் ஹ்ரீம் கோலம் போட்டு சுபம், லாபம் என்று எழுதிவைக்க வேண்டும்.
    முதலில் சந்தனத்தால் பிள்ளையார் பிடித்துவைத்து, ‘ஓம் ஸ்ரீம் கம் கணபதயே நம:’ ‘ஸ்ரீ குருப்யோ நம:’ என்று 3 முறை சொல்லி மலரிட்டு வணங்கியும், ‘சங்க பூஜாம் கரிஷ்யே’ எனச் சொல்லி வழிபடவும் வேண்டும்.
    அடுத்ததாக…
    * ‘மம குபேர நிதி தர்சனார்த்தம்’
    * ‘ஓம் பாஞ்சஜன்யாய வித்மஹே பவமானாய தீமஹி
      தந்நோ சங்க ப்ரசோதயாத்’
    * ‘குபேர லக்ஷ்மி ரூபாய சங்காய ஸ்வாகதம்… ஸ்வாகதம்…ஸ்வாகதம்…
    என்று மூன்றுமுறை சொல்லி நீர்விட வேண்டும்.
    அடுத்த நிலை, எல்லோரும் அறிய வேண்டிய ஒன்று. அதாவது வலம்புரிச் சங்கை ஆகம முறைப்படி வர்ணித்து அதில் அமரச் செய்வதற்கு ஏதுவாக, 16 கலைகளையும் ஆவாஹனம் செய்து வழிபட வேண்டும். அதற்குப் பிறகு சங்கை பூஜிக்கவேண்டும்.
    ஓம் அம்ருதா கலாய நம:
    ஓம் சந்த்ரிகா கலாய நம:
    ஓம் மானதா கலாய நம:
    ஓம் காந்தி கலாய நம:
    ஓம் பூஷா கலாய நம :
    ஓம் ஜயோத்ஸ்னா கலாய நம:
    ஓம் துஷ்டி கலாய நம:
    ஓம் ஸ்ரீகலாய நம:
    ஓம் புஷ்டி கலாய நம:
    ஓம் ப்ரீதி ரங்கதா கலாய நம:
    ஓம் ரதி கலாய நம:
    ஓம் பூர்ணா கலாய நம:
    ஓம் த்ருதி கலாய நம:
    ஓம் பூர்ண முகா கலாய நம:
    ஓம் சசி ஸ்ரீ கலாய நம:
    ஓம் காமதாயினீ கலாய நம:
    அடுத்ததாக நவநிதிகளை அழைத்து அர்ச்சிக்கவேண்டும். ‘ஓம் பத்ம நிதயே நம:’ எனத்துவங்கி சங்கம், மகரம், சுகச்சபம், முகுந்தம், குந்தாக்யம், நீலம், மகரம், வரம் என்று ஒன்பது நிதிகளையும் (முன்னும் பின்னுமாக ஓம் – நம சேர்த்து) போற்றி வழிபட்டு…
    ஓம் நவநிதிதேவதாயை நம; சகலாராதனை சுவர்ச்சிதம்,
    ஓம் யக்ஷேஸ்வர ரூபாய மகாசங்காய நம; சகல ஆராதனம் பூஜயேத்
    என்று வணங்கவேண்டும். பிறகு குபேரனை தியானித்து, அவரது முக்கியமான 16 நாமாக்களால் அர்ச்சிக்க வேண்டும்.
    ஓம் க்லீம் குபேராய நம:
    ஓம் க்லீம் நித்யேஸ்வராய நம:
    ஓம் க்லீம் ஸ்ரீபதயே நம:
    ஓம் க்லீம் நித்யானந்தாய நம:
    ஓம் க்லீம் பூர்ணாய நம:
    ஓம் க்லீம் தனலக்ஷ்மி வாசாய நம:
    ஓம் க்லீம் அஸ்வாரூபாய நம:
    ஓம் க்லீம் சுகாஸ்ரயாய நம;
    ஓம் க்லீம் நரவாகனாய நம:
    ஓம் க்லீ ம் மிகதெஸ்வர்ய ரூபாய நம;
    ஓம் க்லீம் சதா புஷ்பக வாகனாய நம:
    ஓம் க்லீம் சர்வக் ஞாய நம;
    ஓம் க்லீம் சீல பூஜகாய நம:
    ஓம் க்லீம் யக்ஷ£ய நம:
    ஓம் க்லீம் கட்காறதாய நம:
    ஓம் க்லீம் சீல பூஜ காய நம:
    ஓம் க்லீம் ராஜயோக வராய நம:
    ஓம் ஸ்ரீம் க்லீம் பாஞ்ச ஜன்ய ரூபாய நம:
    குபேர அர்ச்சனை முடிந்தபிறகு, அவல் பாயசம், கற்கண்டு பால் வைத்து, தூப-தீப நிவேதனம் செய்யவும். தொடர்ந்து வெள்ளை மற்றும் சிவப்பு நிற மலர்களை எடுத்துக்கொண்டு, தரையில் மண்டியிட்டபடி…
    ”ஓம் வடதிசை வல்லவா போற்றி,
    ஓம் நவநிதி தேவனே போற்றி
    ஓம் செல்வத்தின் உருவமே போற்றி,
    ஓம் கடலினில் பிறந்தாய் போற்றி,
    ஓம் பரந்தாமன் கரமே போற்றி,
    ஓம் வெண்ணிறத்து மேனியே போற்றி,
    ஓம் திருமகள் நட்பே போற்றி,
    ஓம் ஐஸ்வர்ய இருப்பிடமே போற்றி,
    ஓம் ஆனந்த வடிவினனே போற்றி,
    ஓம் குபேரனின் இல்லமே போற்றி,
    ஓம் தோஷங்கள் விரட்டுவோய் போற்றி,
    ஓம் ஈஸ்வரன் விருப்பமே போற்றி,
    ஓம் ஏற்றம் தருவோய் போற்றி,
    ஓம் எளிமையின் சொல்லே போற்றி,
    ஓம் நாதத்தைக் கொண்டவா போற்றி,
    ஓம் நலமே தருவாய் போற்றி
    என்று மலர்களைச் சமர்ப்பித்து போற்றி கூறி முடித்ததும் கற்பூர ஆரத்தி செய்ய வேண்டும். நிறைவாக,
    * ஓம் விஷ்ணுப்ரியாய வித்மஹே வேத நாதாய தீமஹி
    தந்நோ: ஸங்க ப்ரசோதயாத்
    * சங்கு ரூப லக்ஷ்மி குபேர நாராயண ஸ்வாமினே நம:
    * கற்பூர நீராஜன தீபம் தரிசயாமி என்று ஆர்த்தி செய்து பிரசாதம் எடுத்துக்கொண்டு சங்கு தீர்த்தத்தை வீட்டின் எல்லா பாகங்களிலும் தெளிக்கவேண்டும்.
    – வழிபடுவோம்
    சங்கு பூஜையால் ஏற்படும் நன்மைகள்
    வலம்புரிச் சங்கு வீட்டில் இருந்தால் தோஷங்கள், துர்சக்திகள் நெருங்காமல் வீடு பாதுகாப்பாக இருக்கும்; மற்றவர்கள் பொறாமை யால் வைக்கும் ஏவல்கள் நம்மை நெருங்காமல் விலகிவிடும் என்பது நம்பிக்கை.
    நீண்ட ஆண்டுகளாக செவ்வாய் தோஷம் காரணமாக திருமணம் தடைப்பட்டு வருந்தும் பெண்கள், 8 செவ்வாய்க்கிழமைகள் வலம்புரிச் சங்கில் பால் வைத்து, அங்காரகனுக்கு செவ்வரளி மலர்களால் 108 நாமாவளி அர்ச்சனை செய்தால், கைமேல் பலன் கிடைக்கும். பிறந்த குழந்தைகள் தொடர்ந்து அழுதுகொண்டிருந்தால் சுத்தமான பாலை சங்கில் ஊற்றிவைத்து, விநாயகரை வணங்கி ஒரு மணி நேரம் கழித்துக் கொடுத்தால் பலன் கிடைக்கும்.
    கடன் தொல்லையிலிருந்து மீண்டு வர 16 சங்கு வடிவங்களைக் கோலமாகப் போட்டு, பௌர்ணமி இரவில் குங்குமத்தால் அர்ச்சனை செய்து, குளிகை காலத்தில் கடன் கொடுத்த வரை சந்தித்து சிறிதளவு பணத்தைத் திரும்பக் கொடுத்தால், விரைவிலேயே முழுக்கடனும் அடைபடும்.
    சொந்தமான பழைய வீடு எவருக்கும் பயன் படாமல், விற்கவும் முடியாமல் பாழடைந்து கிடந்தால்… வாஸ்து பகவான் விழித்திருக்கும் நாளில், நடுவீட்டில் பிரம்ம ஸ்தானத்தில் வலம்புரிச் சங்கை வைத்து, அதில் வாஸ்து பகவானை எழுந்தருளச் செய்து, மஞ்சள், துளசி இட்ட நீரை வைத்து பூஜிக்கவேண்டும். பிறகு சங்கு தீர்த்தத்தை வேப்பிலையின் உதவியோடு வீடு முழுவதும் தெளிக்கலாம். அத்துடன், செப்பு நாணயம் ஒன்றை மஞ்சள் துணியில் முடிந்து, ஈசான்ய பாகத்தில் கட்டிவிட்டால், விரைவில் அந்த வீட்டை விற்கவோ புதுப்பிக்கவோ நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றிபெறும்.
    குழந்தைப் பேறு இல்லாத பெண்கள் வலம்புரிச் சங்கில் பால், குங்குமப்பூ இட்டு சந்தான கணபதியை வரித்து, பூஜை செய்து, 48 தினங்களுக்கு கணவருடன் சேர்ந்து அருந்திவந்தால் பலன் கிடைக்கும்.
    ஆலயங்களில் நடைபெறும் சங்காபிஷேக வைபவத்தில் கலந்துகொண்டு வழிபட தோஷங்கள் விலகும்; செல்வம் சேரும்.
    ஒருவர் தமது நட்சத்திர அதிதேவதையையும், லட்சுமிகுபேரனையும் யோக எண் மற்றும் (சிறிய) பட உருவில் வலம்புரிச் சங்கில் வைத்து, சில காசுகளும் போட்டு வைத்து தினமும் வழிபட, அபரிமிதமான செல்வச் சேர்க்கை உண்டாகும்.

    செவ்வாய், 11 செப்டம்பர், 2018

    விநாயகருக்கு செய்யும் பலன் தரும் அபிஷேகங்கள்

    விநாயகருக்கு செய்யும் பலன் தரும் அபிஷேகங்கள்

    subscibe my  channel Tamilnattu samayal  and  support  me 


    அன்பார்ந்த தோழிகள் அனைவருக்கும் என் இனிய காலை வணக்கங்கள்.உங்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.விநாயகர் சதுர்த்தி வர இருப்பதால் அவருக்கு அபிஷேகம் செய்தால் விநாயகர் நமக்கு வேண்டுவன எல்லாம் தருவார்.நீங்களும் உங்களால் முடிந்த அபிஷேகங்களை செய்து பலன் பெறுங்கள்.


    விநாயகருக்கு செய்யும் பலன் தரும் அபிஷேகங்கள்

    வெள்ளி, 7 செப்டம்பர், 2018

    ஹனுமனை வீட்டில் வைத்து வணங்கலாமா ?

    Image result for hanuman

    ஹனுமனை வீட்டில் வைத்து வணங்கலாமா ?


    குறிப்பிட்ட ஆஞ்சநேயர் வடிவங்களை நாம் வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம். சிலர் ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து வழிபாடு செய்யக்கூடாது என்று சொல்வதுண்டு. ஏனெனில் பிரம்மச்சாரியான ஆஞ்சநேயரை வழிபாடு செய்பவரும் திருமணம் ஆகாமல் பிரம்மச்சாரியாகவே இருந்து விடுவார் என்ற மூடநம்பிக்கை பரவி இருப்பதே இதற்கு காரணம் ஆகும். ஆனால் உண்மையில் அனுமன் ராமபிரானின் பக்தன் மட்டுமல்லாமல் ராமனின் உற்ற நண்பரும் ஆவார். சிவபெருமானின் அம்சமான ஆஞ்சநேயர் ஒரு பிரம்மச்சாரி மட்டுமல்ல ஒரு சிரஞ்சீவியும் ஆவார். பிரிந்து கிடந்த ராமன் மற்றும் சீதையை மீண்டும் ஒன்று சேர்த்தவர் வாயு புத்திரனான ஆஞ்சநேயரே ஆவார்.  


    இந்திரஜித்தின் நாகாஸ்திரத்தினால் உயிருக்கு போராடிய லட்சுமணனை சஞ்சீவி மூலிகையை கொண்டு வந்து உயிர்ப்பித்தவரும் ஆஞ்சநேயரே.  தமது நண்பன் சுக்ரீவனுக்கும் நல்வழி காட்டியவர் ஆஞ்சநேயரே. நம் வீடுகளில் இருக்க வேண்டிய மூர்த்திகளில் ஆஞ்சநேயரும் ஒருவர்.  பஞ்சமுக ஆஞ்சநேயரே வீட்டில் வைத்து வழிபாடு செய்யத்தக்கவர். ஆஞ்சநேயரின் வடிவங்களில் சஞ்சீவிராய ஆஞ்சநேயரே மிகவும் வலிமை மிக்கவர். இத்தகைய ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து வணங்கும் போது கட்டாயம் ராமபிரானின் படம் இருக்க வேண்டும். 




    வழிபாடு செய்யும் காலத்தில் ராம நாமத்தினை நாம் சொல்ல வேண்டும்.  நமது அனைத்து விதமான கோரிக்கைகளையும் அவரிடம் வைத்து வணங்க வேண்டும். கோரிக்கைகள் ஏதுமில்லாமல் ஆஞ்சநேயரை வழிபாடு செய்யக்கூடாது. அவ்வாறு கோரிக்கை இல்லாமல் செய்யும் வழிபாட்டால் வழிபாடு செய்பவர் ஆஞ்சநேயர் போல் பிரம்மச்சாரியாகவே இருந்து விட வாய்ப்புண்டு. எனவே அனுமனிடம் திருமணத்தடை நீக்குமாறு வேண்டுவது உத்தமம். ஆஞ்சநேயரிடம் வைக்கும் கோரிக்கைகள் அனைத்தும் கண்டிப்பாக நிறைவேறும். ராமனை துதிக்கும் மக்களின் துதியை கேட்பதற்காகவே ஆஞ்சநேயர் சிரஞ்சீவியாக வாழ்ந்து மக்களின் விருப்பங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.

    புதன், 5 செப்டம்பர், 2018

    நெல்லையில் பதினாறு ‘ஷோடச விநாயகர்’

     பதினாறு ‘ஷோடச விநாயகர்’ 

    நெல்லையில்  பதினாறு ‘ஷோடச விநாயகர்’ 
    நெல்லைச் சீமையில் நவதிருப்பதிகள் எனப் போற்றப்படும் வைணவ திருத்தலங்களில் முதல் திருப்பதியாகத் திகழ்வது ஸ்ரீவைகுண்டம். பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படும் இந்தத் திருத்தலம், தூத்துக்குடியில் இருந்து சுமார் 35 கி.மீ தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து சுமார் 28 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. 

    இங்கு கோயில்கொண்டிருக்கும் வைகுண்ட நாதனின் திருவருளாலும்... அவரின் திருக்கோயிலுக்கு இடப்புறத்தில் நூறு மீட்டர் தூரத்தில் ஒரே கோயிலில் குடியிருக்கும் பதினாறு கணபதியரின் அருட்கடாட்சத்தாலும் சிறப்புற்றுத் திகழ்கிறது, இந்த ஊர்.   பதினாறு கணபதியர் ஆலயத்தை ‘ஷோடச விநாயகர் ஆலயம்’ என்று அழைக்கிறார்கள் ஊர்மக்கள்.

    17-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஞானச் செல்வராம் குமரகுருபரர் பிறந்தது இவ்வூரில் தான். அவர், தமது ஐந்து வயது வரையிலும் வாய் பேசாமல் இருக்கவே, அவருடைய பெற்றோரான சண்முக சிகாமணிக் கவிராயரும், சிவகாமசுந்தரி அம்பாளும் மிகவும் வருந்தினர். தங்கள் பிள்ளையை திருச்செந்தூருக்கு அழைத்துச் சென்று, அங்கே முருகப்பெருமானின் ஆலயத்திலேயே தங்கி விரதம் இருந்து, மகனுக்குப் பேசும் சக்தியை அருளும்படி முருகப்பெருமானிடம் வேண்டிக்கொண்டனர்.

    அவர்களின் வேண்டுதல் விரைவில் பலித்தது. செந்தூர் முருகனின் திருவருளால் பேசத் துவங்கிய குமரகுருபரர், முருகப்பெருமான் குறித்த பாடல்களை மடை திறந்த வெள்ளம் போல பாடினாராம். இதுவே பின்னாளில் ‘கந்தர் கலிவெண்பா’வாக தொகுக்கப்பட்டது. இதுமட்டுமின்றி ‘மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்’, `சகலகலாவல்லி மாலை’ முதலான பல ஞானநூல்களை அருளிய குமரகுருபரர், வடக்கே காசியம்பதிக்கும் சென்றார். அங்கே மடம் ஒன்றை நிறுவினார். பிறகு, கும்பகோணம் அருகிலுள்ள திருப்பனந்தாளில் கிளை மடம் ஒன்றையும் நிறுவினார். காசி மடத்தில் அவர், பதினாறு அம்சமுள்ள ‘ஷோடச விநாயகர்’ சிலைகளைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தாராம்.

    காசியில் இருப்பதைப் போலவே, குமரகுருபரரின் பிறந்த ஊரான ஸ்ரீவைகுண்டத்திலும் ஷோடச விநாயகர்கள் அருள வேண்டும் என்று எண்ணம் கொண்ட, ‘திருப்பனந்தாள்’ காசி மடத்தின் அன்றைய ஆதீனம் அருள்நந்தி தம்பிரான் ஸ்வாமிகள், இந்த ஊரிலும் ஷோடச விநாயகர் சிலைகளைப் பிரதிஷ்டை செய்தார்.
    சுமார் 100 ஆண்டுகள் பழைமையான இந்தக் கோயில், கடந்த பிப்ரவரி மாதம் தான் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. ஷோடச என்றால் பதினாறு என்று பொருள். அதற்கேற்ப, இங்கே பதினாறு பேறுகளையும் அருளும் நாயகர்களாகத் திகழ்கிறார்கள் ஷோடச கணபதியர்.

    ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பதினாறு விநாயக விக்கிரகங்களும் வட்ட வடிவமாக சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ளன. அந்த மூர்த்திகளின் திருநாமங்கள்: பால கணபதி, தருண கணபதி, பக்தி கணபதி, வீர கணபதி, சக்தி கணபதி, திக்விஜய கணபதி, சித்தி கணபதி, உச்சிஷ்ட கணபதி, விக்னராஜ கணபதி, ஷிப்ர கணபதி, ஹேரம்ப கணபதி, லக்ஷ்மி கணபதி, மகா கணபதி, விஜய கணபதி, நிருத்த கணபதி மற்றும் ஊர்த்துவ கணபதி. 

    விநாயகருக்கு உகந்த திருநாட்களில் இந்தக் கோயிலுக்கு வந்து  ஒவ்வொரு விநாயகரின் திருப்பெயரையும் உச்சரித்து, போற்றி கூறி வழிபட்டால், துன்பங்கள் விலகும்; இன்பங்கள் யாவும் கைகூடும்.
    இந்தக் கோயிலில் விநாயக சதுர்த்திதான் முக்கிய விழாவாகும். அன்று, பதினாறு விநாயகர் களுக்கும் பதினாறு வகை அபிஷேகங்களும், பதினாறு வகை நைவேத்தியங்களும் படைக்கப் படும். ஒவ்வொரு கணபதியும் ஒவ்வொரு வகை பலனைக் கொடுத்தாலும், கல்வியில் சிறக்கவும், காரியத்தடை நீங்கவும், விரைவில் வேலை கிடைக்கவும், திருமணத்தடை நீங்கவும் இந்த ஷோடச விநாயகர்களை வழிபட்டுச் செல்கிறார்கள், பக்தர்கள்.
    அமாவாசை நாள் முதல் பெளர்ணமி நாள் வரை 16 நாட்கள் தொடர்ந்து இக்கோயிலுக்கு வந்து, தினம் ஒரு விநாயகருக்கு (வரிசைப்படி) அருகம்புல் மாலை சாற்றி, தினம் ஒரு நெய் தீபம் ஏற்றி, விநாயகருக்கான ‘ஷோடச ஸ்லோகம்’ சொல்லி பதினாறு முறை சுற்றி வந்தால், நினைத்தது நிறைவேறுமாம். இந்த 16 நாட்களும் 16 வள்ளல்களாக காட்சியளிப்பார்களாம், இந்த ஷோடச விநாயகர்கள். நினைத்த காரியம் நிறைவேறியதும் புதன், சனி அல்லது பெளர்ணமி நாட்களில் இங்கு வந்து பதினாறு விநாயகர்களுக்கும் பதினாறு வகை அபிஷேகம் செய்து, வெள்ளை வஸ்திரம், அருகம்புல் மாலை சாற்றி, பசு நெய் ஊற்றி 16 தீபங்கள் ஏற்றி, 16 மோதகங்கள் மற்றும் சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட வேண்டும்.
    நெல்லைச் சீமைக்குச் செல்லும் அன்பர்கள், மறவாமல் ஸ்ரீவைகுண்டத்துக்கும் சென்று இந்த ஷோடச கணபதியரை வழிபட்டு வாருங்கள்; பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ அருள்புரிவார்கள்.

    செவ்வாய், 4 செப்டம்பர், 2018

    வீட்டில் தீபம் ஏற்றுகையில் இந்த மந்திரத்தை கூறினால் அதிஷ்டம் நிச்சயம்

    வீட்டில் தீபம் ஏற்றுகையில் இந்த மந்திரத்தை கூறினால் அதிஷ்டம் நிச்சயம்


    நமது வீடுகளில் பொதுவாக காலையில் எழுந்து தீபம் ஏற்றி இறைவனை வணங்குவது வழக்கம். அதே போல மாலையிலும் தீபம் ஏற்றி இறைவனை வழிபடுவது வழக்கம். நாம் காலையில் தீபம் ஏற்றுகையில் கீழே உள்ள மந்திரம் அதை கூறினான் அது நம்முடைய வழிபாட்டிற்கு மேலும் சிறப்பு சேர்க்கும். இதன் மூலம் நாம் செய்யும் காரியங்கள் அனைத்திலும் நமக்கு வெற்றி கிடைக்க வழிபிறக்கும், அதிஷ்டம் உண்டாகும்.
    தீப மந்திரம்:
    ஸோயம் பாஸ்கர வித்யஸ்த
    கிரணோத்கர பாஸ்வா
    தீப: ஜ்யோதிர் நமஸ்துப்யம்
    சுப்ரபாதம் குருஷ்வமே.
    பொருள்:
    இவ்வுலக மக்களை காத்து, அவர்களுக்கு நல்லறிவை வழங்கக்கூடிய கதிர்களை இவ்வுலகம் முழுக்க பரப்பும் தீபமே. என்னுடைய இந்த நாள் சிறப்பாக இருக்கு உங்களது அருளை வேண்டுகிறேன்.
    தீபம் ஏற்றிய பிறகு இந்த மந்திரத்தை 9 முறை கூறுவது நல்லது. அதே போல இந்த மந்திரத்தை தினமும் கூறி வந்தால் நமது வாழ்வில் பல அறிய மாற்றங்கள் நிகழும். அதை நம்மால் மிக எளிதில் உணர முடியும். நமக்கு சாதகமாக பல விடயங்கள் நடப்பதை நாமே கண்கூடாக பார்க்கலாம். இந்த மந்திரத்தின் சக்தியானது ஒரு நாள் முழுவதும் நமக்கு வெற்றியை தேடி தரும். ஆனால் இதெல்லாம் ஒரு நாள் ஜபிப்பதால் நடந்துவிடாது. குறைந்தது ஒரு மண்டலமாவது இந்த மந்திரத்தை தொடர்ந்து ஜபித்து வந்தால் அதன் பலனை உணரலாம்.

    வேலவனின் வேறு பெயர்களும் அதன் விளக்கமும்!

    வேலவனின் வேறு பெயர்களும் அதன் விளக்கமும்!

    1. ஆறுமுகம்: ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம் என்ற ஐந்துடன் அதோமுகமும் சேர்ந்து ஆறுமுகமானது.
    2. குகன்: குறிஞ்சி நிலத் தெய்வம், மலைக் குகைகளில் கோயில் கொண்டதால் குகன்.
    3. குமரன்: மிக உயர்ந்தவன், இளமையை எப்போதும் உடைவன், பிரம்மச்சாரி ஆனவன்.
    4. முருகன்: முருகு அழகு என்று பொருள், எனவே முருகன் ஒப்புமையற்ற பேரழகன்.
    5. குருபரன் : கு - அஞ்ஞான இருள், ரு - நீக்குபவர், ஆன்மாக்களின் அறியாமை இருளை அகற்றுபவன் குரு சிவனுக்கும், அகத்தியருக்கும், அருணகிரிக்கும் குருவாய் நின்று பிரணவத்தை உபதேசிப்பவன் குருநாதன்.
    6. காங்கேயன்: கங்கையின் மைந்தன்.
    7. கார்த்திகேயன்: கார்த்திகைப் பெண்களால் வளர்ந்தவன்.
    8. கந்தன் : கந்து - யானை கட்டும் தறி. கந்தன் ஆன்மாக்களுக்குப் பற்றுக் கோடாய் இருப்பவன். பகைவர் வலிமையை அழிப்பவன் ஸ்கந்தன். தோள் வலிமை மிக்கவன். ஆறு திருமேனியும் ஒன்றானவன்.
    9. கடம்பன் : கடம்ப மலர் மாலை அணிந்தவன்.
    10. சரவணபவன் : சரம் - நாணல், வனம் - காடு, பவன் - தோன்றியவன், நாணல் மிக்க தண்ணீர் உடைய காட்டில் தோன்றியவன்.
    11. ஸ்வாமி: ஸ்வம் - சொத்து, எல்லா உலகங்களையும், எல்லா உயிர்களையும் சொத்தாக உடையவன். சுவாமி என்ற பெயர் முருகனுக்கு மட்டுமே உரியது. சுவாமி உள்ள மலை சுவாமி மலை.
    12. சுரேஷன் : தேவர் தலைவன் சுரேசன்.
    13. செவ்வேள் : செந்நிறமுடையவன், ஞானச் செம்மை உடையவன்.
    14. சேந்தன் : செந்தழல் பிழம்பாய் இருப்பவன்.
    15. சேயோன் : சேய் - குழந்தை, குழந்தை வடிவானவன்.
    16. விசாகன் : விசாக நட்சத்திரத்தில் ஒளியாய் உதித்தவன்.
    17. வேலவன், வேலன் : வெல்லும் வேல் உடையவன். அறிவாக, ஞான வடிவாக விளங்கும் வேல், கூர்மை, அகலம், ஆழம் என்னும் மூன்றும் உடையது.
    18. முத்தையன்: பிறப்பிலேயே முத்து ஒளியுடையது. மற்ற மணிகள் பட்டை தீட்டினால் தான் ஒளிரும். எனவே இயல்பாகவே ஒளிர்பவன் முத்தையன்.
    19. சோமாஸ்கந்தன் : ச - உமா - ஸ்கந்தன்: சிவன் உமை முருகன்; சத்து - சிவம், சித்து - உமை, ஆனந்தம் - கந்தன், முருகன் ஆனந்த வடிவானவன்.
    20. சுப்ரமணியன் : சு - மேலான, பிரம்மம் -பெரிய பொருளிலிருந்து, நியம் தோன்றி ஒளிர்வது. மேலான பெரிய பிரம்மத்தில் இருந்து தோன்றி ஒளிர்பவன்.
    21. வள்ளற்பெருமான் : முருகன், மண்ணுலகில் அவதரித்த வள்ளி இச்சா சக்தி மூலம் இக நலன்களையும், விண்ணுலக மங்கை தெய்வானை கிரியா சக்தி மூலம் பரலோக நலன்களையும், வேலின் மூலம் ஞானசக்தியையும் ஆகிய மும்மை நலன்களையும், முக்தி நலன்களையும் வழங்குகிறார்கள்.
    22. ஆறுபடை வீடுடையோன்: மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆறாதாரங்களை ஆறுபடை வீடுகளாய் உடையவன்.
    23. மயில்வாகனன் : மயில் - ஆணவம், யானை -கன்மம், ஆடு - மாயை இந்த மூன்றையும் அடக்கி வாகனமாய் கொண்டவன்.
    24. தமிழ் என்றால் முருகன். முருகன் என்றால் தமிழ். இரண்டையும் பிரிக்க முடியாத அளவிற்கு இணைந்தே இருக்கும். உதாரணமாக 12 உயிரெழுத்து என்பது முருகனின் 12 தோள்களை குறிக்கும். 18 மெய்யெழுத்து என்பது முருகனின் 18 கண்கள் (முருகன் சிவனது நெற்றிப் பொறியிலிருந்து தோன்றியவர் என்பதால், இவரது ஒவ்வொரு முகத்திலும் இவருக்கும் நெற்றிக்கண் உண்டு) 6 இன எழுத்து என்பது 6 முகங்களை குறிக்கும். ஃ என்ற ஆயுத எழுத்து வேலை குறிக்கும்.இந்த வேலை வணங்குவதையே வேலையாக கொண்டால் வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்.
    பாம்பன் சுவாமிகள் விளக்கம்
    ஓம் சரவண பவ - பரமாத்ம வடிவம் சித்திக்கும்.
    ஐம் சரவணபவ - வாக்கு வன்மை சித்திக்கும்.
    சௌசரவணபவ - உடல் வன்மை சிறக்கும்.
    க்லீம் சரவணபவ - உலகம் தன் வயமாகும்.
    ஸ்ரீம் சரவணபவ - செல்வம் சிறக்கும்.

    ஞாயிறு, 2 செப்டம்பர், 2018

    வீட்டில் சுவாமிக்கு ஆரத்தி காட்டுகையில் கூற வேண்டிய மந்திரம்



    வீட்டில் சுவாமிக்கு ஆரத்தி காட்டுகையில் கூற வேண்டிய மந்திரம்


    aarathi
    நாம் தினமும் இறைவனை வழிபட்ட பின்பே பல வேலைகளை தொடங்குகிறோம். அப்படி வழிபடுகையில் இறைவனுக்கு வீட்டில் கற்பூர ஆரத்தி எடுப்பதை நாம் வழக்கமாக வைத்துள்ளோம். அப்படி ஆரத்தி எடுக்கையில் நாம் இறைவனுக்கான ஆரத்தி மந்திரம் அதை ஜபிப்பது நமது வேண்டுதலுக்கு மேலும் பலம் சேர்க்கும். அந்த வகையில் தினமும் ஆரத்தி எடுக்கையில் நாம் கூற வேண்டிய ஆரத்தி மந்திரம் இதோ.
    பஞ்ச கற்பூர ஆரத்தி மந்திரம்:
    ஓம் ராஜாதிராஜாய பிரசஹ்ய சாஹினே
    நமோவயம் வைஸ்ரவனாய குர்மஹே
    ஸமேகமான் காம காமாய மஹ்யம் !
    காமேஸ்வரோ வைஸ்ரவனோத தாது !
    குபேராய வைஸ்ரவனாய மகாராஜய நம:
    பொது பொருள்:
    அரசனுக்கெல்லாம் அரசனான இறைவனே, அனைத்திலும் வெற்றியை தரும் சக்தி கொண்டவனே, பக்தர்கள் கேட்பதை கொடுக்கும் வல்லமை உடையவரே, குபேர மகாராஜனே உங்களை போற்றுகிறேன்.
    மேலே உள்ள பஞ்ச கற்பூர ஆரத்தி மந்திரத்தை நாம் கூறுவதன் பயனாக நமது வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் .நாம் குபேர சம்பத்துகளுடம் நமது வீட்டில் பல காலம் வாழ இறைவன் அருள்புரிவார். இந்த ஆரத்தி மந்திரத்தை முடிந்தவரை தினமும் ஜபிப்பது நல்லது.