ஞாயிறு, 6 டிசம்பர், 2015

ஸ்ரீ கற்குவேல் அய்யனார்

ஹலோ பிரண்ட்ஸ் வணக்கம் .இன்னிக்கு என் அப்பா வீட்டு குலதெய்வமான ஸ்ரீ கற்கு வேல் அய்யனார்  சுவாமியைப் பற்றி சொல்லலாம் என்று  இருக்கேன் .


குல தெய்வம் நம் குலத்தை காக்கும் .நாம் எத்தனையோ சுவாமிகளை வணங்கினாலும் ,குல தெய்வங்களை வணங்காவிட்டால் ,பயன் ஒன்றும் இல்லை .ஒவ்வொருவருக்கும் குல தெய்வம் வேறாக இருக்கும் .

குல தெய்வம் என்பது நம் முன்னோர்கள் வழி  வழியாக வணங்கி  வந்த  தெய்வமாகும் .


வருடத்திற்கு ஒரு முறையாவது குல தெய்வ வழிபாடு செய்தல் வேண்டும் .நம் கோரிக்கைகளை கேட்டு நம் இன்னல்களை களைந்து ,நம்மை மேலும்  மேலும் வழிநடத்தி செல்பவர் நம் குலசாமி தான் .
ஆதனால் தான் பிறந்த குழந்தைகளுக்கு   முதலில் முடி இறக்குவது குலதெய்வ சாமிக்குதான்.ஸ்ரீ கற்குவேல் அய்யனார் கோவில் எங்கு உள்ளது ?அவர் மகிமை என்ன? என்று பார்ப்போம் .இந்த பதிவை எழுதுவது நான் செய்த பாக்கியம் என எண்ணுகிறேன் .








ஸ்ரீ கற்குவேல் அய்யனார்   கோவில் தூத்துக்குடி மாவட்டம் ,திருச்செந்தூரிலிருந்து , 13 கிலோ மீட்டரில் உள்ளது காயா மொழி எனும் ஊர் .அங்கிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் குதிரைமொழி எனும் கிராமத்தில் உள்ளது தேரிக் குடியிருப்பு .இங்குதான் ஸ்ரீ கற்குவேல்  அய்யனார் பூரணம் ,பொற்கலை தேவியருடன் கோவில் கொண்டுள்ளார் .இங்கு கார்த்திகை மாதம் முழுவதும் மிகச் சிறப்பாக வழிபாடுகள் இருக்கும் .இங்குள்ள மண் செந்நிறத்தில் இருக்கும் .

இயற்கை வளம் மிகுந்த செம்மண் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன் கற்குவா என்னும் மரம் வளர்ந்திருந்தது .அந்த மரத்தில் தோன்றிய அய்யனார்  பல அற்புதங்களை நிகழ்த்தியதால் கற்குவா அய்யன் என்றழைக்கப்பட்டார் .காலப் போக்கில் கற்கு வேலப்பன்,கருக்குவாலை அய்யன் என்றழைக்கப்பட்டு  தற்போது கற்குவேல் அய்யனார் என அழைக்கப்படுகிறார்.

முன்னொரு காலத்தில் இந்த பகுதியில் வாழ்ந்த மக்களிடம் திருடர்கள் களவாடி சென்றனர் .அவர்கள் துன்பங்களை தீர்க்க வேண்டி அய்யனாரிடம் முறையிட்டனர் .அளவு கடந்து போன கள்வர்களின் அட்டூழியத்தை அழிக்க தானே சென்று கொள்ளையர்களை விரட்டி பிடித்து தண்டனை கொடுத்தாராம் அய்யனார் .



இன்றும்  கார்த்திகை மாத கடைசி நாளில் இந்த நிகழ்ச்சியை நினைவுப்படுத்தும் படியாக ,கள்ளர் வெட்டு திருவிழா நடைபெறுகிறது.இதைக் காண காட்டருவி போல் மக்கள் வருகிறார்கள் .
கள்ளர் வெட்டு நிகழ்ச்சியில் , பூசாரி இளநீர்  காய்களை வெட்டியவுடன் ,அந்த தண்ணீர் விழுந்த செம்மண் மண்ணை எடுக்கிறார்கள் பக்தர்கள் .அந்த கைப்பிடி மண்ணை பிரசாதமாக எண்ணி தங்கள் பூஜையறையில் வைத்து பூஜிக்கிறார்கள் .இதனால் குடும்பத்திலுள்ள பல பிரச்சனைகள் மறைந்து ,அமைதி ,மகிழ்ச்சி நிலவுவதாக நம்பிக்கை .


அந்த மண்ணை வியாபாரிகள் கல்லாப் பெட்டியில் வைத்து கொண்டால் வியாபாரம் செழிக்கும் .தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டியதை அருள்பவர் ஸ்ரீ கற்குவேல்  அய்யனார் .



நன்றி வணக்கம்

உங்கள் அன்பு தோழி
ஈஸ்வரி

















செவ்வாய், 1 டிசம்பர், 2015

கிழமை விரதமும்,அதன் பலன்களும்

கிழமை விரதமும்,அதன் பலன்களும்                   



என் அன்பு தோழிகளே ,


வணக்கம் .என்னுடைய முந்தின பதிவில் ,விசேஷ நாட்களில் விரதங்கள் இருந்தால்  என்ன பலன் கிடைக்கும் என்று எழுதியிருந்தேன் . இன்னைக்கு எந்த கிழமைகளில் விரதம் இருந்தால்  என்ன பலன் ?என்பதைப்  பற்றி  பார்ப்போம் .


விரதம்

விரதம் என்றாலே சாப்பிடாமல் இருந்து கடவுளை வணங்குவது என்று நிறைய பேர் நினைப்பது உண்டு .நம் எண்ணங்களை ஒரு கட்டுப்பாடுடன் வைத்து ,மனதை சந்தோஷமாக வைப்பதே விரதம் ஆகும்.ஜீரண  உறுப்புகளுக்கு ஓய்வு கொடுத்து ,உடலை புதுப்பிப்பதே விரதத்தின் நோக்கமாகும்.


சிற்றுண்டிகளை  சாப்பிட்டு விரதம் இருப்பதை விட ,பால் ,பழம் மட்டும் அருந்தி விரதம் இருக்கலாம் விரதத்தை எல்லா மதத்தினரும் கடைபிடிக்கிறார்கள் .அது மனதை உறுதியாக வைக்க உதவுகிறது

அசைவ உணவை தவிர்த்து ,சைவ உணவு உண்பது ,நீர் ,பால் ,பழம் ,ஜுஸ் இவற்றில் ஏதாவது ஒன்றை அருந்தி விரதம் இருக்கலாம் .ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விரதத்தை கடைப்பிடிக்கிறார்கள் .எந்த முறையை பின்பற்றினாலும் ,பலன் கிடைப்பது நிச்சயம் .

ஞாயிற்று கிழமை விரதம் இருந்தால் தீராத நோய் அகலும்.


திங்கள் கிழமை விரதம் இருந்தால் கணவனின் பரிபூரண அன்பை பெறலாம் .

செவ்வாய் கிழமை விரதம் இருந்தால் கணவன் மனைவி தகராறு நீங்கி ஒற்றுமையுடன் வாழலாம்  .


புதன் கிழமை விரதம் இருந்தால் நோய்கள் தீரும் .

வியாழன் கிழமை விரதம் இருந்தால் புத்திர பாக்கியம் கிட்டும்.


வெள்ளி கிழமை விரதம் இருந்தால் கணவன் நீண்ட ஆயுளுடன்  வாழ்வர் .

சனி கிழமை விரதம் இருந்தால் செல்வம் பெருகும்.




நாமும் விரதமிருந்து , அனைத்து நலன்களும் பெற ஆண்டவனை பிராத்திப்போம் .

நன்றி .வணக்கம்